Saturday, July 02, 2022

அண்ணாமலை - தென் இந்தியாவின் அடையாளம்

காமராஜர் அவர்களை அரசியல் தலைவராக உருவாக்கியவர் தீரர் சத்தியமூர்த்தி. (ராஜாஜிக்கு போட்டியாக)

பக்தவச்சலம் காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்டார் (கே பிளான் காரணமாக)

ராஜாஜி அவர்களை ஒரு பக்கம் காந்தி மறுபக்கம் நேரு இருவரும் கொண்டு வந்தனர்.  (காந்திக்கு சம்மந்தியும் கூட)

மூவரும் உருவாக்கப்பட்ட தலைவர்கள்.

இறந்தாலும் இன்னமும் புகழோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர் காமராஜர் மட்டுமே.  மற்றவர்கள் அரசியல் களத்தில் யாராலும் பேசப்படவில்லை.  

இது காங்கிரஸ் கட்சியின் முதல் 50 ஆண்டு கால சுருக்கமான பார்வை.




ஆனால் அண்ணாவும் எம்ஜிஆரும் இந்தப் பட்டியலில் நீங்கள் கொண்டு வர முடியாது? 

இருவரும் தங்களைத் தானே உருவாக்கிக் கொண்ட சுயம்புகள். காலம் ஒத்துழைத்தது. சூழல் சாதமாக இருந்தது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வெற்றிக் கொடியை நாட்டினார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று காமராஜர் நல்லவர் வல்லவர் என்று பாராட்டினாலும் அவர் தனக்குப் பின்னால் யாரையும் உருவாக்கவில்லை. வளர்த்துவிடவில்லை.  ஆதரிக்கவும் இல்லை. 

காங்கிரஸ் என்ற கட்சியே 1967 ல் புதைகுழிக்குள் சென்றது போல அதற்குப் பின்னால் கடந்த 55 வருடங்களில் ஒருவர் கூட தமிழக காங்கிரஸ் ல் பெயர் சொல்லும் அளவுக்கு எவரும் வரவில்லை. வளரவில்லை. 

இன்று செல்வ பெருந்தகை போல அக்மார்க் தெரு பொறுக்கியைச் சட்டமன்ற தலைவர் என்கிற நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

திமுக உதயநிதியைப் போட வேண்டிய இடத்தில் வேண்டா வெறுப்பாக அண்ணா வை போட்டே ஆக வேண்டுமே என்ற கட்டாயத்தில்  சுவரொட்டியில் அச்சிடுகின்றார்கள்.  கருணாநிதியும் இதையே செய்தார். 

அதிமுகவும் அண்ணா வை விழாக் காலங்களில் மட்டும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்டு எம்ஜிஆரைத்  தேர்தல் சமயங்களில் மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றார்கள்.

தீய சக்தி திமுகவை அழிக்க வந்த தனிமனித இராணுவம் அண்ணாமலை | #annamalai | #aoh

அதாவது மனதிற்குள் வெறுத்தாலும் இவர்களைப் பயன்படுத்திய ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை அண்ணாவும், எம்ஜிஆரும் உருவாக்கியுள்ளனர் என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.  ஆனால் இதில் கருணாநிதி வருவதில்லை.  நாங்கள் கருணாநிதி ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று அவர் மகனே சொல்வதில்லை?

கருணாநிதி சுயமி அல்ல. தொடக்கத்தில் திரைப்பட புகழ், வசனகர்த்தா, எழுத்தாளர், பேச்சாளர் போன்ற பல கித்தாப்புகள் இருந்தாலும் எம்ஜிஆர் என்ற சூரியன் முன்னால் விண்மீன் போலவே இருந்தார்.  கருணாநிதி அன்றைய காலகட்டத்தில் படித்தவர் மத்தியில் பிரகாசமான இருந்தார். (காமராஜர் பதவி விலகிய சமயத்தில் தமிழக படிப்பறிவு எண்ணிக்கை 37 சதவிகிதம். அவர் பதவிக்கு வந்த போது 10 சதவிகிதத்திற்குக் கீழ் தான் இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் கருணாநிதி எழுத்து எந்த அளவுக்கு எவருக்குப் போய்ச் சேர்ந்து இருக்கும்? என்பதனை நீங்கள் யூகித்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் எம்ஜிஆரை ரசிக்கக் கல்வியறிவு தேவையில்லை.  காசு இருந்தால் போதும். கண் பார்வை நன்றாக இருந்தால் போதும். அதனால் தான் பட்டி தொட்டியெங்கும் பரமன் போல வியாபித்து இருந்தார்)






இதன் காரணமாகவே கருணாநிதி அண்ணா மறைவுக்குப் பின் எம்ஜிஆரே போற்றி என்று இவரிடம் வந்து சரணாகதி அடைந்தார். அதாவது இன்று எடப்பாடி சசிகலாவிடம் வாங்கிய பதவி போல.

எம்ஜிஆர் தயவால் அண்ணா உருவாக்கிய கட்சியில் பலரையும் பின்னுக்குத் தள்ளி கருணாநிதி தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.  ஆனால் அதுவும் முதல் ஐந்து வருடத்தோடு போயே போச்சு.

1987க்கு பிறகு (எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ) ஆசுவாசமாக மூச்சு விடத் தொடங்கினார்.  ஜெ வருகைக்குப் பின்பு அதிலும் பெரிய கல் வந்து விழச் சாகும் போது முன்னாள் முதல்வர் என்ற நிலையில் கடைசி மூன்று வருடங்களில் உடல் இயக்கமின்றி நிலை குத்திய பார்வையோடு போய்ச் சேர்ந்தார். 

இவரும் தனக்குப் பின்னால் யாரையும் வளர்க்கவில்லை. உருவாக்கவில்லை. முன்னெடுக்கவும் இல்லை.

முதல் இடம் என்பது குறுகலான செங்குத்தான மேல் நோக்கிய சிறிய குன்று போல ஒருவர் மட்டுமே அமர முடிகின்ற இடமாகும்.  

புகழும் பணமும் அதிகம் கிடைக்கின்ற திரைப்படத்துறையில் ஒவ்வொரு அடியும்  போட்டி பொறாமை என்ற ரம்பத்தால் அறுபடும் வாழ்க்கையைக் கொண்டது என்று எடுத்துக் கொண்டீர்கள் எனில் அரசியல் என்பது முற்றிலும் வித்தியாசமானது. 

அதிகாரத்துடன் கூட புகழ்.  

நீங்கள் விரும்பினால் பணம். 

இத்துடன் உங்கள் மனநிலை பொறுத்து உங்கள் அத்தனை சபல எண்ணங்களுக்கும் வடிகால் உண்டு.

எல்லாமே உங்கள் எண்ணம் பொறுத்து மாறுபடும்.

சபலத்தை உண்டு அழிந்து போகலாம். 

மக்களை புரிந்து கொண்டு மகான் போலவும் மாறலாம்.

உங்கள் எண்ணம் தான் கடவுள்.

இந்த சூழலில் அரசியலில் ஒவ்வொரு நகர்விலும் துரோகத்தைத் தவிர நீங்கள் வேறு எதையும் பார்க்கவே முடியாது. யாரும் யாரையும் நம்புவதில்லை. நாணயமாக நடந்து கொள்வதில்லை. நம்பிக்கையுடன் இருக்கவே முடியாது என்று முடிவுக்கு வந்து விடுகின்றார்கள்.

அண்ணன் தம்பி என்றாலும் அக்கா தங்கை என்ற போதிலும் அரசியல் களத்தில் மாறாது. 

தன்னை உருவாக்கிக் கொள்ளத் தகுதியிருப்பவன் மட்டுமே காலத்தைக் கடந்து வாழக்கூடியவனாக இருக்கின்றான். வளரக்கூடியவனாகவும் மாறுகின்றான்.

என் பார்வையில் அப்படி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட சி.என். அண்ணாதுரை மற்றும் எம்ஜிஆருக்குப் பிறகு  அண்ணாமலை அவர்களைப் பார்க்கின்றேன். மிகக் குறுகிய காலத்திற்குள் தன் இருப்பை இங்கே நிலை நிறுத்திக் கொண்டு உள்ளார் என்றே கருதுகின்றேன்.

இதனைச் சுழி என்பார்கள். கர்மா என்கிறார்கள்.  கர்ப்பம் சுமந்த தாய் வணங்கிய தெய்வம் வழங்கிய கொடை என்றும் சொல்கிறார்கள். 

100 வயது வரைக்கும் வாழும் மோடி அவர்களின் தாய் கர்ப்பம் சுமந்த தருணத்தில் இப்படியொரு அதிசய மனிதனை நான் கருவாக நான் உள்ளே வளர்த்து வருகின்றேன் என்று நினைத்து இருப்பாரா?  

வளைகுடா இஸ்லாமிய மன்னர்கள் ஏன் இந்த அளவுக்கு மோடி மேல் பாசத்தைப் பொழிகின்றார்கள்.  இந்தியாவில் ஒரு கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் மோடி என்று தொடர்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பதும், அமெரிக்கா எப்போது உள்ளே நுழைய வாய்ப்பு அமையும் என்று காத்திருக்கும் இந்த சமயத்தில் மோடிக்கு உலக அரங்கில் கிடைக்கும் மரியாதை என்பது நிச்சயமாக இறையருள் தொடர்பானது என்றே நான் கருதுகிறேன்.

சர்வதேச அரசியல், நுணுக்கமான எண்ணெய் வியாபார கணக்குள் என்று எத்தனை நீங்கள் சொன்னாலும் அதற்குப் அப்பாலும் சில கணக்குளை இயற்கை உருவாக்கியிருப்பதாகவே நான் கருதுகிறேன். நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மூலம்  பலவற்றைக் கோர்த்து யோசித்துப் பாருங்களேன். 

நம் புத்திசாலித்தனம் மற்றும் திட்டமிடுதலுக்கு அப்பாற்பட்ட  எத்தனை விசயங்களை நாம் கடந்து வந்துள்ளோம். ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் அப்படித்தான் மோடி என்ற மனிதர் பிரதமர் பதவியை நோக்கி வந்ததை நான் பார்க்கின்றேன். அவருக்கு முன்னால் எத்தனை தலைகள் இருந்தது? எத்தனை மறைந்தது? விலகியது? 

ஏன்?

67 வயதுள்ள மிகப் பெரிய எத்தனை தின்றாலும் பசி அடங்காத காங்கிரஸ் என்ற மிருகத்தை வீழ்த்தி மோடி பிரதமராக வந்து அமர்ந்தது சாதாரண காரியமல்ல.  அதற்குப் பிறகு இரண்டாவது முறை வென்றது முதல் நடந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு அக்கிரம செயல்பாடுகளைக் கவனமாகக் கையாண்டு தன்னை நிலை நிறுத்திக் கொண்டது என்பது நீங்களும் நானும் நினைத்தே பார்க்க முடியாத ஒன்றாகும். 

கரணம் தப்பினால் மரணம். 

மரண வியாபாரி என்றார்கள். அவர்களே இப்போது உலகத்திற்கே படியளக்க வந்த பரமன் என்கிறார்கள். 

ஊசி முதல் கோதுமை வரை வழங்கி விஷ்வ குரு என்ற நிலைக்கு உயர்ந்தது சாதாரண விசயமாக எனக்குத் தெரியவில்லை.

முதல் ஐம்பது வருடங்கள் அதிகாரம் என்பதே தெரியாமல், புரியாமல், தன்னை தானே உணர்ந்து கொண்ட மனிதராக மோடி வளர்ந்து வந்த காலகட்டத்திற்கும் அண்ணாமலையின் ஒன்பது வருட அரசுப் பணியும், எவ்வித அரசியல் பின்புலமும் அறிவும் இல்லாமல் தமிழகத்தில் எதிர் கொண்டு இருப்பது ஒரு நபரையோ ஒரு கட்சியின் சித்தாந்தத்தையோ அல்ல. 

தான் ஒருவன் ஒரு பக்கம் நிற்க எதிர்ப்பக்கம் நிற்கும் 99 பேர்களும் உன்னை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி வாழும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள். 

கோரப் பசியில் காத்திருக்கும் விபரீத ஜந்துகள். ஊழலைத் தவிர வேறு எதுவும் அறியாத வினோத மனிதர்கள்.  தங்கள் வாழ்க்கையை வசதியைக் கொடுக்க வந்தவராக அண்ணாமலையை இவர்கள் பார்க்கின்றார்கள். அச்சப்படுகின்றார்கள். இதன் காரணமாகவே நொடிக்கு நொடி அவதூறுகளைப் பரப்பிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

தங்களை நம்பும் தமிழக மக்களின் ரத்தம் குடித்து அரசியலில் வாழும் இரண்டு கால் மிருகங்களை எதிர்த்து நிற்கும் அண்ணாமலைக்கு மோடியின் யோகத்தை விட அதிகமாக இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

அதிமுக வில் நடக்கும் பஞ்சாயத்து ஒரு பக்கம். 

திமுக வில் பயமில்லாமல் தினமும் விதம்விதமாக ரசித்து ருசித்துக் கொள்ளையடித்து பட்டியலில் ஏறிக் கொண்டிருக்கும் பட்டியல் ஒரு பக்கம்.  

இதை விட நான் முக்கியமாகக் கருதுவது.  அப்பாவி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை வைத்துக் கொண்டு ஆட்டுவிக்கும் வெவ்வேறு கோஷ்டிகள் அடுத்தடுத்து உருவாக்கும்  நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தமிழக சட்டம் ஒழுங்குக்குச் சவாலாக இருக்கப் போகின்றது என்பதனை நேற்று திருப்பூரில் நடந்த சம்பவம் மூலம் புரிந்து கொண்டேன்.  

கட்சி அரசியலை விரும்பிய தமிழினம் இனி வரும் காலங்களில் மதம் என்பது முக்கியம் என்பதாக மாறப் போகின்றது என்பதன் தொடக்கப்புள்ளி நேற்று முதல் உருவாகியுள்ளது என்பதாகவே கருதுகிறேன்.

திமுக இதனை வளர்க்க வளர்க்க அண்ணாமலை வாழ்வில் இனியெல்லாம் தீப ஒளி என்பனை இயற்கை உருவாக்கும் என்றே நினைக்கின்றேன்.

உங்களுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.  

அண்ணாமலையை நீங்கள் எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை ஒளி என்கிறீர்கள். 

நான் அவரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தென் இந்தியாவின் அடையாளம் என்றே கருதுகின்றேன்.

நல்ல தலைவர்களுக்குத் தடைகள் என்பது வளர்க்கக்கூடியது. நாம் தான் புரிந்து கொள்வதே இல்லை.

No comments: