Tuesday, July 12, 2022

ஒரே கல்லில் நூறு மாங்காய்

நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களிடம் உள்ள அசாத்தியமான சக்தி என்னவெனில் அவர் முதல் 50 வருடங்களில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பயணம் செய்து கற்று வைத்துள்ள அனுபவ பாடங்களை முழுமையாக தற்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு உரமாக மாற்றி வருகின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா?




இந்தியா என்பது இன்னமும் வளர்ச்சியடைய வேண்டிய நாடு. விவசாயப் பணிகளை அதிகம் சார்ந்து வாழும் ஏழை எளிய மக்களைக் கொண்டு இருக்கும் இருக்கும் நாடு. இங்கு மிகப் பெரிய பலமே முறைசாரா தொழிலே. இவர்கள் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதில்லை. அரசாங்கம் தங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதுமானது என்பதனை எப்போது நினைப்பவர்கள்.  அப்படித்தான் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொருவரும் தனித் தனி தீவுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். யார் ஆண்டாலும் யார் வந்தாலும் இவர்களுக்கு அக்கறையில்லை. தேர்தல் என்பது தாங்கள் பார்க்க விரும்புகின்ற கோவில் திருவிழா போல. அதன் முழுமையான விசயங்கள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இல்லை.

இந்த எதார்த்தத்தை உணர்ந்து நாம் நாட்டுக்கு எது தேவையோ? அதை மட்டுமே மோடி அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

இதுவரையிலும் இங்கே ஆட்சியிலிருந்த பிரதமர்கள், மத்திய மாநில அதிகாரிகள் என மேலிருந்து கீழ் வரைக்கும் இருந்த அத்தனை நிர்வாக அமைப்பில் உள்ளவர்களும் தங்களை ஐரோப்பியனாக, அமெரிக்கனாகவே கருதிக் கொண்டு வாழ்ந்தவர்கள். அதனை தங்கள் வாழ்க்கையில், நிர்வாகத்தில் பிரதிபலித்தவர்கள். அது தான் சரியென்றும் நம்பியவர்கள்.

 உலகத்தில் மிகச் சிறந்த நிர்வாக அமைப்பு என்பது வெளிநாட்டில் உருவாக்கப்பட்டது என்பதாகத்தான் இன்று வரையிலும் நம்புகின்றார்கள்.

அதனையே  கண்களை மூடிக் கொண்டு பின்பற்றியும் வந்தார்கள். மற்றவர்களையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். வெள்ளைக்கார அடிமையாக இருப்பதில் கண்ட சுகத்தைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் கூச்சமற்று இருந்தார்கள். 

இதில் தான் மோடி கை வைத்தார்.  நேரிடையாக கை வைத்தால் பெரிய பிரளயமே உருவாகி விடும் என்பதால் ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு விதமாக ஜிமிக்கி வேலையைச் செய்து கொண்டே தான் விரும்பிய மாற்றத்தைக் கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.  

எட்டாண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள எத்தனையோ கலாவதியான சட்டதிட்டங்களை மோடி மாற்றியுள்ளார்.  ஆனால் இன்னமும் பிரிட்டன் கால நடைமுறை தான் இங்கே உள்ளது என்பதனையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.





இந்த இடத்தில் மோடி அவர்களின் சோசியல் இன்ஜினியரிங், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக மாற்றினார் என்பதனை உணர்ந்தால் வியந்து போவீர்கள்.

ஒரு சிஸ்டத்தை உருவாக்குவது. அது தன்னைத் தானே இயக்க என்ன தேவையோ? அதை உடனே அந்த திட்டத்துடன் இணைத்து விடுவது.  மேலும் மனிதர்கள் அதிகம் தேவையில்லாத அளவுக்கு அதனை நவீன தொழில் நுட்பத்துடன் இணைத்து விடுவது. 

இதனைத்தான் மோடி தொடர்ந்து செய்து வருகின்றார்.

உங்களுக்கு இன்னமும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும் என்றால் மோடி அவர்கள் இந்தியாவில் உள்ள ஆன்மீக தலங்களைக் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏராளமான புணர் நிர்மாணம் செய்து உள்ளார். 

உருவாக்கியுள்ளார். 

ஆகம விதிகளின்படி மாற்றி அமைத்துள்ளார். 

சீர்படுத்தியுள்ளார். 

எட்ட முடியாத மலைப்பிரதேசங்களுக்கு மக்கள் சென்று வழிபட பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். 

இத்துடன் இவர் இதனை முடித்து இருந்தால் நான் கண்டு கொள்ளாமல் கடந்து போய் இருப்பேன்.

ஆன்மீக தலம் என்பதனை சுற்றுலா போல மாற்றினார்.  

ரயில் நிலையத்தை உருவாக்கினார். 

பெரிய நகரங்களுடன் அதனை இணைத்தார். 

சிறுநகரங்கள் தானாகவே இணைந்தது.  

தேசிய நெடுஞ்சாலையை உருவாக்கினார்.  

அதாவது நீ வைத்துள்ள பணம் உன்னிடம் இருந்தால் அது வளர்ச்சியல்ல. 

நீ விரும்பும் வசதிகளுடன், எந்த தொகையில் எங்கு செல்ல விரும்புகின்றாயோ செல். உன் மனம் விரும்பும் சுற்றுலா அல்லது ஆன்மீக யாத்திரை எதுவாக இருந்தாலும் அனுபவி. அதற்குச் செலவு செய். 

அரசு வழியில் ரயில் போக்குவரத்து. தனியார் பேருந்து வசதிகள்.

பணம் என்பது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கை மாறிக் கொண்டேயிருக்க வேண்டும்.  சிறிய ரக கடைகள் முதல் பெரிய ரக நிறுவனங்கள் வரைக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லா விதங்களிலும் தேவையாக இருந்து கொண்டே இருக்கும் அல்லவா. 

இது தவிர சாதாரண எளிய மக்களுக்கு என்ன தேவை? தாங்கள் விரும்பிய பரமனைப் பார்த்த சந்தோஷம் கிடைக்கும் தானே? 

ஒருவர் பலருக்கும் கடத்தும் செய்திகள் மூலம் குறிப்பிட்ட பகுதி சுற்றுலா வாசிகளால் நிரம்பி வழியத் தொடங்கும்.  

சுற்றுலா வளர்ச்சியின் மூலம் தங்கள் மாநில பொருளாதாரம் மேம்படுகின்றது என்ற மகிழ்ச்சி அந்தந்த மாநில அரசுகளுக்கு.

பெட்ரோல், டீசல் தொடங்கி, ஜிஎஸ்டி வரைக்கும் மாதத்திற்கு மாதம் கணக்கு ரீதியில்  எகிறிக் கொண்டேயிருக்கும்.  கடைசியில் இந்தியாவின் பொருளாதாரம் என்கிற ரீதியில் மத்திய அரசின் சாதனை என்பதாக மகுடம் சூட்டப்படும்.

சுற்றுலா என்பது அன்றாடாங்காய்ச்சி முதல் வாயால் வடை சுடும் கைடு வரைக்கும் பலருக்கும் தினமும் வாழ்க்கை வாழ உதவுகின்றது.

இதைத்தான் மோடி அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றார். ஒரே கல்லில் நூறு மாங்காயைச் சாய்த்துக் கொண்டு இருக்கின்றார். 

காசி என்ற புனித தலத்தை இந்துக்கள் அனைவரும் செல்ல விரும்பினாலும் சில வருடங்களுக்கு முன்பு வரைக்கும் அங்குள்ள சூழல் குறித்து நினைத்து மனதிற்குள் ஒரு தயக்கம் இருந்த காரணத்தால் பயணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்த பல ஆயிரம் மக்கள் தற்போது சாரை சாரையாகச் சென்று கொண்டேயிருக்கின்றார்கள்.

காஷ்மீர் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சப்பட்டவர்கள் அசால்ட்டாக சென்று வருகின்றார்கள்.

ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி ஆலயத்தைக் குஜராத்துடன் இணைத்த காரணத்தை யோசித்துப் பாருங்கள். வந்தே பாரத் ரயில் தரும் சுக அனுபவத்தை ஒவ்வொருவரும் பக்கம் பக்கமாக எழுதுகின்றார்கள்.

அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் மனநோயாளிகள் புரிதல் இல்லாமல் தடுமாறும் முதல்வர் | #agnipath | #aoh

சுற்றுலாத் துறை வளர்ந்தால் எந்த நாடும் மிக எளிதாக உன்னதமான இடத்தைத் தொடும்.  

ஆனால் தமிழகத்தில் திமுக என்ற கட்சி வேரடி மண்ணோடு என்று அழிகின்றதோ அன்று தான் இங்கே உள்ள ஆன்மீக தலங்களுக்கு விடிவு காலம்.

இன்று பிரதமர் தன் ட்விட்டரில் எழுதியுள்ள தகவல் இது. 

படங்களைப் பாருங்கள். 

நம் மத்திய அரசின் சாதனைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

புனித நகரமான தியோகரில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலில் தரிசனம்

ஜூலை 12 ஆம் தேதி, இங்கு விமான நிலையத்தைத் திறந்து வைக்கின்றேன்.

இது பக்தர்களுக்கு பாப்தாமின் பயணத்தை எளிதாக்குவதுடன், ஜார்கண்ட் சுற்றுலாவையும் மேம்படுத்தும்.

Just before the beginning of the holy month of Shravan, one will get the good fortune of darshan and worship at Baba Baidyanath Temple in the holy city of Deoghar. On July 12, there will also be an opportunity to inaugurate the airport here. This will make the journey of Babadham easier for the devotees, as well as boost the tourism of Jharkhand.  - PM


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

3

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

வெங்கோலனின் "அடிவருடி"களுக்கு ;-

48

உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத்
தள்ளி வழக்கதனைப் பேசி – எள்ளளவும்
கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் தன்கிளையும்
எச்சமறும் என்றா வது

49

வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடி
வழக்கை அழிவழக்குச் செய்தோன் – வழக்கிழந்தோன்
சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணீரால்
எச்சமறும் என்றால் அறு