Friday, August 27, 2021

மெல்லக் கொல்லும் விஷம்

கடந்த சில தினங்களில் அனைவரும் உற்றுக் கவனித்து சாபமிடும் அளவுக்குச் செயல்பட்ட மதன் ரவிச்சந்திரனின் முதல் காணொளி எனக்கு எவ்வித வருத்தத்தையும் உருவாக்கவில்லை.  திராவிட அரசியல் குஞ்சுகளின் பலாக்கிரமத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போலப் பார்த்தது தான்.  


ஆனால் இதில் மாட்டிக் கொண்டவர் கடந்த பல ஆண்டுகளாக செய்த அதிகார தரகர் தனம் பலருக்கும் எரிச்சலை உருவாக்கிய காரணத்தால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காத்திருந்தார்கள். இப்போது வெளிப் படுத்திக் கொள்ளாமல் உள்ளூர மகிழ்ந்து உள்ளனர்.

இனி பாஜக அபிமானிகள் பியூஸ் கோயல் அவர்களையும், நிர்மலா சீதாராமன் அவர்களையும் இயல்பாகப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். அதற்கு டோக்கன் போட ஆள் யாருமில்லை என்பது பலருக்கும் மகிழ்ச்சியான செய்தி தானே?

ஆனால் இரண்டாவது காணொளியில் குறிப்பாக அண்ணாமலையைத் தான் குறிவைத்தோம் என்று சொல்லாமல் அந்தத் தம்பி பேசுவதைப் பார்க்கின்ற போது தான் இதனை எழுதவே தோன்றியது.  

செறிவூட்டப்பட்ட அணுகுண்டு என்பது தான் அரசியல் என்ற துறை என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.  

புகழ், அதிகாரம், பதவி இந்த மூன்று வேறு எந்தத் துறையிலும் கிடைக்க வாய்ப்பில்லை. திரை பிரபல்யங்களும் ஏன் அரசியலைக் குறிவைத்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதற்கு இது தான் முக்கியக் காரணம். உள்ளே இருப்பவர்கள், தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். 

அவனுக்குக் கொஞ்சம் இவனுக்குக் கொஞ்சம் என்று மாறி மாறி பயணிக்க கற்று இருக்க வேண்டும். எந்த புத்திசாலித்தனமும் இங்கே வேலை செய்யாது.  உங்கள் கொள்கைகள், சித்தாந்தங்கள் எதுவும் வேகாது. சூழலைப் புரிந்து கொண்டு, பழகும் மனிதர்களை உணர்ந்து நீங்கள் எப்படிச் செயல்பட கற்றுக் கொள்கின்றீர்களோ அதன் பொருட்டே உங்கள் வளர்ச்சி?  

வாயை மூடி கௌபீனத்தை இறுக்கிக் கட்டியிருக்க வேண்டும் என்ற அறிவுரை சொல்கின்றார்கள். இது அனைவருக்கும் பொருந்தாது.  

மாவட்டச் செயலாளர்கள் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள தங்கள் மனைவியைத் தலைவருக்குத் தாரை வார்த்த புனித பூமியிது. அவையெல்லாம் எழுதப்படாத அநீதியின் பக்க வரலாறு. இன்னும் பத்தாண்டுகள் கழித்து அதிகார நிலை மாறும் பலரும் எழுத முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

காரணம் மதன் செய்வது பத்திரிக்கையாளர் பணி அல்ல.  இது தற்போது பத்திரிக்கையில் நடந்து கொண்டிருக்கும் தரகுப்பணியில் ஓர் அங்கம். டெல்லி முதல் சென்னை வரைக்கும் நீங்கள் பெருமை படக்கூடிய பெரிய பத்திரிக்கையாளர்கள் பல கோடி ரூபாய்களை எவ்வித முதலீடுகளும் இல்லாமல் இப்படியான வழிகளில் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.  மன்மோகன் ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலம் பத்திரிக்கையாளர்களுக்குப் பொற்காலமாக இருந்தது.

காலம் தோறும் அதிகாரத்திற்கு வரும் கட்சிகளின் பெயர்கள் மாறும். காட்சிகள் மாறும்.  பத்திரிக்கையாளர்களின் பெயர்கள், பத்திரிக்கைகளின் பெயர்களும் மாறும்.  ஆனால் வசூலிக்கப்படும் தொகை மட்டும் அதிகமாகிக் கொண்டேயிருக்கும்.  நீங்களும் நானும் நம்பும் எத்தனையோ மக்கள் நலத்திட்டங்கள் எந்த இரவில் எந்த மதுக்கூடத்தில் உருவானது என்று உங்களுக்கும் தெரியாது? எனக்கும் தெரியாது?

அப்படிப்பட்ட பல பத்திரிக்கையாளர்களை மட்டுமே பார்த்து வந்த தம்பி தான் மதன்.  காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்த தம்பியை நான் கவனித்து வந்துள்ளேன். வரலாறு, பூகோளம் எதுவும் தெரியாது. எல்லாவற்றிலும் அவசரம்.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணி.  பார்க்கும் மனிதர்களைப் பார்க்கும் பார்வையில் ஒருவித அலட்சியம். தன்னை அதீத புத்திசாலியாக நம்பிக்கொண்ட ஆணவம்.  குறுகிய கால அறுவடையில் ஆர்வம் என்று எல்லாமே சேர்த்து இன்று நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால் கூட இனி இந்த தம்பியை அனுமதிப்பார்களா? என்பது சந்தேகமே?

மதன் லட்சியமென்பது லட்சமா? கோடியா? தமிழக உளவுத்துறையின் பங்கு என்ன?எத்தனை பெரிய வியாதிகள் இதற்குப் பின்னால் உள்ளனர் போன்ற அனைத்தும்  இனி தெரியவரும்.  இதைப் பற்றிப் பேசும் போது மற்றொரு விசயத்தையும் இங்கே பேசியாக வேண்டும்.  

பத்திரிக்கையுலகத்தில் உள்ள எழுத்துப் பணி போல அதில் பணிபுரியும் எழுத்தாளர்கள் பங்களிப்பு பற்றியும் நான் இங்கே பேச விரும்புகிறேன். கடந்த பல நாட்களாக ஒரு நண்பருடன் இது குறித்து சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறேன். அவருக்குத் திரும்பத் திரும்ப ஒன்றை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றேன்.

கடந்த ஐம்பது வருடங்களில் தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய அக்கிரமம் என்னவெனில் தகுதியில்லாத அத்தனை பேர்களையும் நாம் வரலாற்று நாயகர்களாக பார்க்கும் அளவுக்குத் திரிபு வேலைகள் நடந்துள்ளது. எனவே நீங்கள் தகுதியில்லாத தரகு வேலை பார்ப்பவர்களைப் பாராட்டாதீர்கள் என்று சொல்லிக் கொண்டு வருகிறேன்.

அக்கிரமம், அநியாயம், அயோக்கியத்தனம், அப்பட்டமான விபச்சாரம் என்று வெளிப்படையாகத் தெரிந்தும் தான் கற்றுக் கொண்ட எழுத்து மூலம் பாலியல் தொழிலாளி போல சம்பாதிப்பவர்களை என்ன சொல்வது?  

சிறுபான்மை ஆதரவு தளத்தில் நாம் இணையத்தில் செயல்பட்டால் தான் நம் எழுத்து விற்பனையாகும் என்பதற்காகவே சீண்டிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்யலாம்? 

தியாகங்களைக் கொச்சைப்படுத்தி எழுதுவதும், அநியாயங்களைப் போராட்ட வீரர்களாக மலின நடையில் கூசாமல் எழுதுவதுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈனப்பிறவிகளைப் பார்க்கும் போது அவர்களை மற்றொரு மதன் போலவே நான் பார்க்கின்றேன்.  

சமூகம் என்ற பெரிய சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் ஒவ்வொரு விதமான துறைகளாக பிணைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு கண்ணியும் முக்கியம்.  மொத்தச் சமூகமும் ஆரோக்கியமாக இருக்க அவரவர் நேர்மை இங்கே பேசு பொருளாகப் பார்க்கப்படும்.  ஆனால் எனக்குப் பணம் தான் முக்கியம்.  வேறு எதுவும் முக்கியமல்ல என்பது போன்ற இணைய விபச்சார எழுத்தாளர்களை விட மதன் செய்தது பாராவாயில்லை என்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது.

கொரோனாவும் உள்ளூர் மற்றும் உலக அரசியலும் - பகுதி 2

மதன் செய்தது உடனடியாக வெளிவந்துள்ளது. விபரச்சார எழுத்தாளர்கள் மெல்லக் கொல்லும் விஷம் போலத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்கள்.

கவனமாக இருங்கள்.


2 comments:

மாறன் said...

2014 ஆம் ஆண்டு நாடு எங்கும் மோடி அலை வீசியது. அந்த அலையின் தாக்கத்தில் தமிழ் நாட்டில் வெற்றி பெற்றவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.

மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து உழைத்து வெற்றி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன்அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கியது பாஜக.

தேர்தலில் நிற்காமல், மக்களை சந்திக்காமல், எந்த ஒரு உழைப்பும் போடாமல் நேராக மந்திரி ஆனார் திருமதி. நிர்மலா சீத்தராமன். என்ன தகுதி இவருக்கு, பொன்னார் அவர்களுக்கு இல்லை என்பது இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம், மக்கள் பொன்னாரை தேர்வு செய்தால், பாஜக நிர்மலா சீத்தராமனை தான் நம் தலையில் திணிப்பார்கள். அது தான் உண்மை.

ஜோதிஜி said...

பொன்னார் நேரடி அரசியலுக்கு தேவையில்லை. அவர் அந்த அளவுக்கு தகுதியான நபர் இல்லை. அதாவது தற்போதைய சூழலில் அவரின் தன்மை இப்போதைய அரசியலுக்கு பொருந்திப் போகக்கூடியது அல்ல. அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை வைத்து தமிழகத்தில்மிகப் பெரிய செயல்கள் செய்து இருக்க முடியும். இன்னும் பத்தாண்டுகள் இருந்தாலும் அவர் செய்ய மாட்டார். முடியாது.