Wednesday, August 18, 2021

திராவிட அரசியலின் மோசடி வரலாறு

35 ஆண்டுகளுக்கு முன், எங்கள் ஊரில் கடைத் தெருவில் உள்ள பொது மேடையில் தினமும் ஒரு கட்சிக் கூட்டம் நடைபெறும்.  மாலை பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் போதே கூம்பு வடிவ ஒலிபெருக்கி வாயிலாக கட்சிப் பாடல்கள் ஒலிக்கும்.  இரவு 11 மணிக்குச் சிறப்புப் பேச்சாளர் மேடை ஏறுவார்.  ஆனால் மாலை ஆறு மணி முதல் மக்கள் மேடையின் முன்னால் அமரத் தொடங்குவார்கள்.

சிறுவர்கள், பெண்கள் போன்றோர்கள் திமுக வினர் நடத்தும் கூட்டத்திற்கு வேண்டாம் என்று அங்குள்ள பெரியவர்கள் அனுப்பி விடுவார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜமாணிக்கம் அதே பாணியில் பேசி உள்ளார்.💪

ராஜமாணிக்கம் பேசிய பேச்சை (ஒரு மணி நேரம் இருபது நிமிடம்) முழுமையாக கேட்ட போது பல தடவை சப்தம் போட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தேன். 

காரணம் இதில் உள்ள உண்மைகளை அனைத்தும் எனக்குத் தெரிந்து காரணத்தால் ராஜமாணிக்கம் பட்டாசு போலவே வெடித்துத் தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தார்.  

துளி பிசிறு இல்லாமல் அனுபவம் வாய்ந்த ஆயிரம் மேடைகள் பார்த்த கட்சி பேச்சாளர் போல ராஜமாணிக்கம் பேசியது பலரையும் திகைக்க வைத்திருக்கக்கூடும். மிகவும் ரசித்தேன். அருமையான பேச்சு. 

திராவிடம் என்ற பெயரில் பொய் அரசியலை உருவாக்கியவர்கள் முதல் இன்றைய குடும்ப அரசியலாக மாற்றியவர்கள் வரைக்கும் உண்டான உண்மையான நிகழ்வுகளை அதிரடியாக பேசி புரிய வைத்துள்ளார் திரு. ராஜமாணிக்கம்.  முதல் பகுதி இது.  பண்பாட்டு கலாச்சாரத்திற்கு எதிரிகளாக இருந்தவர்கள் அரசியலில் அங்கீகாரம் பெற்றுள்ளதும், அதனை ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலாக மாற்றியதற்கும் பின்னால் எப்படி யார் செயல்பட்டார்கள் என்பதனை புரிந்து கொள்ள முழுமையாக கேட்டு  பகிர்ந்து கொள்ளுங்கள்.

(கற்றுக்கொள் களத்தில் இறங்கு)

திராவிட அரசியலின் மோசடி வரலாறு - 1

திராவிட அரசியலின் மோசடி வரலாறு - 2

No comments: