பக்கா கிரிமினல் பயங்கர கிரிமினல் - வித்தியாசம் என்ன?
முத்துக்குமரன் கமிட்டி உருவாக்கிய முழுமையாக விசயங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் சமச்சீர்க் கல்வி என்பது இன்றைக்கு மெட்ரிகுலேசன் சிபிஎஸ்சி முதலாளிகளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்திருக்க வாய்ப்புண்டு. கஞ்சித்தண்ணீர் மாதிரி அதனை நீர்த்துப் போகச் செய்து அலங்கோலமாக்கி செயல்வடிவத்திற்குக் கொண்டு வந்த வரலாற்றுச் சாதனைகளை விபரம் புரிந்த தமிழ்ப் பிள்ளைகள் அறிந்திருக்கக்கூடும்.
ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ள 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உரியது என்பது இன்னும் சில வருடங்களில் ஊழல் மிகுந்ததாக மாறக்கூடிய அத்தனை அம்சங்களையும் இதற்கு உள்ளே வைத்துள்ளார்கள்.
அரசு பள்ளிக்கூடம் சாதா தோசை. அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஸ்பெஷல் தோசை. ஆனால் தனியார் பள்ளிக்கூடம் ரோஸ்ட். இப்படித்தான் நம் மக்கள் கருதுகின்றார்கள்.
7.5 விசயத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களைக் கழட்டிவிட்டனர். அதற்குப் பதிலாகத் தனியார்ப் பள்ளிகளில் அரசு நிதி மூலமாகப் படித்த (Right to Education Act) மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்து இருந்தாலும் இது போன்ற மறை பொருள் சமாச்சாரங்கள் உள்ளே பொதிந்துள்ளது.
ஊடகங்கள் இந்த இடம் வரும் போது நைஸாக மடை மாற்றி வேறு பக்கம் வண்டியைத் திருப்புகின்றார்கள்.
இவர்கள் யோக்கியவான்கள் என்றால் ஒன்று முதல் 12 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களுக்கு மட்டும் என்று ஒற்றை வாக்கியத்தில் இதனைக் கொண்டு வந்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும்.
இந்த வருடம் தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 40 சதவிகிதம் இருக்கை மட்டுமே நிரம்பி உள்ளது. மற்ற கல்லூரிகள் எல்லாம் காத்தாடுது. ஒருவரும் திரும்பிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை. விளம்பரங்கள் செய்து கல்வி முதலாளிகள் காசை இழந்தது தான் மிச்சம்.
இன்னும் சில வருடங்களில் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படும் இருக்கைகளில் உள்ள ஊழல் தான் ஊடகங்களுக்குத் தலைப்பு மற்றும் விவாதமாக மாறும். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனாலும் இந்த வருடம் அரசு வழங்கிய 7.5 இடஒதுக்கீடு வாயிலாக மருத்துவர்களாக உள்ளே நுழைந்த அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுக்க எடப்பாடியாரை தங்கள் தெய்வமாக வணங்குவார்கள்.
மேலும் அரசு கல்லூரிக்கட்டணம் வரைக்கும் கட்டியுள்ள சூழலில் அனைத்து நல்ல கிரகங்களும் ஒரே சமயத்தில் பார்த்து வீபரித ராஜயோகத்தை வழங்கியுள்ளது. பத்து வருடங்கள் இது தொடர்ந்தால் போதும். 4000 மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைப்பார்கள்.
3 comments:
// 7.5 இடஒதுக்கீடு // எனக்கென்னமோ 7.5 என்பது 7.3 என்றே ஆகலாம்...!
அது வந்து அது வந்து...
ஒரு கணக்கியல் அண்ணே...
இந்த ஆண்டு இதுவொரு முக்கியமான சாதனை.
மிகவும் எளிமையாக எல்லோர்க்கும் புரியும் படி அழகாக எழுதி இருக்கீங்க.. உதாரணம் பாதி உறக்கத்தில் எழுப்பி கேட்டாலும் மறக்காமல் சொல்லி விடுவேன்.. நன்றி..
Post a Comment