Monday, December 07, 2020

வணிக சூத்திரங்கள் 3

இந்திய தொழில் சமூகத்திற்குள் நாம் நுழைவதற்கு முன்பு உலகத்தை ஒரு முறை வலம் வந்து விடுவோம்.  காரணம் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் இங்கே மாற்றங்களை உருவாக்கக் கூடிய மனிதர்கள் அரிதாகவே இருந்தார்கள். காரணம் வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் வெளியே தெரியாமல் இருந்தார்கள். அதனையும் மீறி அவர்களுடன் ஒத்துழைத்து நம் இந்திய தொழில் சமூகத்தில் 1839 ல் ஜாம்ஷெட்ஜி (Jamsetji Nusserwanji Tata) உருவாக்கிய பாதை ரத்தன் டாடா என்ற ரத்த உறவைக் கடந்து இன்று நம் தமிழ் மகன் நடராஜன் சந்திரசேகரன் வரைக்கும் மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைப் பயண சுகமான அனுபவத்தை உருவாக்கியுள்ளது.




1760 முதல் 1820 வரைக்கும் நடந்த மாற்றங்கள் அனைத்தும் உலக தொழில் புரட்சிக்கான அடித்தளம்.  அதுவே 1840 என்பது செய்முறைக்கான செயல்பாடுகளையும் விரைவு படுத்தக் காரணமாக இருந்தது. இதன் தொடர்ச்சி தான் ஜாம்ஷெட்ஜி யின் வளர்ச்சியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொழில்துறை புரட்சி கிரேட் பிரிட்டனில் தொடங்கியது, மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பல பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவை. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டன் உலகின் முன்னணி வணிக நாடாக இருந்தது, வட அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள காலனிகளுடன் உலகளாவிய வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டுப்படுத்தியது, மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் சில அரசியல் செல்வாக்குடன், கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகள் மூலம். வர்த்தக வளர்ச்சியும் வணிகத்தின் எழுச்சியும் தொழில்துறை புரட்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

தொழில்துறை புரட்சி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையை உருவாக்கியது. அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சமும் ஏதோவொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தத் தொடங்கியது. தொழில்துறை புரட்சியின் முக்கிய தாக்கம் என்னவென்றால், பொது மக்களின் வாழ்க்கைத் தரம் வரலாற்றில் முதல்முறையாகத் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.

விரைவான தொழில் மயமாக்கல் முதலில் பிரிட்டனில் தொடங்கியது, இயந்திரமயமாக்கப்பட்ட நூற்பு தொடங்கி 1780 களில், நீராவி சக்தி மற்றும் இரும்பு உற்பத்தியில் அதிக வளர்ச்சி விகிதங்கள் 1800 க்குப் பிறகு நிகழ்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிரேட் பிரிட்டனிலிருந்து கண்டம் கடந்து சென்றது.  ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இயந்திரமயமாக்கப்பட்ட ஜவுளி உற்பத்தி பரவியது, பெல்ஜியத்தில் ஜவுளி, இரும்பு மற்றும் நிலக்கரி போன்ற முக்கிய மையங்கள் உருவாகின.

1840 கள் மற்றும் 1850 களில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட மின் தந்தி போன்ற புதிய கண்டுபிடிப்புகள், இன்ஜின்கள், நீராவிப் படகுகள் மற்றும் நீராவிக் கப்பல்கள், குண்டு வெடிப்பு, இரும்பு உருகுதல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் இந்த காலத்தின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டன. வளர்ச்சி. 1870 க்குப் பிறகு விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது, இது இரண்டாவது தொழில்துறை புரட்சி. 

1770 கள் முதல் 1830 கள் வரையிலான காலகட்டத்தில் பொதுவாக இங்கிலாந்தில் காணப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பத்தின் விரைவான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி  அதன் மூலம் மாறிய சமூக மாற்றம் அனைத்தும்  19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும் வந்து நின்றன. சுருக்கமாகச் சொல்லப் போனால் அப்போது அவர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். நாம் காலில் செருப்பில்லாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

பொருளாதாரச் சீர்திருத்தத்தின் மூலம் அனைத்து முக்கிய தொழில் மயமான நாடுகளும் வசதிகளை, வாய்ப்புகளை, வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தனர். உலகம் முழுக்க அவர்கள் கையில் இருந்தது. கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். கட்டளையிட்டார்கள். சுரண்டினார்கள். கொள்கை என்றார்கள். அன்று நாம் உணவுக்கே அல்லாடிக் கொண்டிருந்தோம். இந்தச் சூழலை வைத்து தான் நாம் டாடா குழுமத்தின் தொடக்க காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் புரியும் எப்பேர்ப்பட்ட சாதனையின் உச்சமது என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

டாடா குழுமம் என்பது இந்திய தொழில் நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருந்தாலும் அது இங்குள்ள சமூகத்தை முழுமையாக மாற்றியதா? என்றால் இல்லை என்றே சொல்வேன். உலோகம் முதல் உப்பு வரை, தொழில் நுட்பம் முதல் தொலை தூர சேவை வரைக்கும் காலமாற்றத்திற்கேற்ப ஒவ்வொன்றையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த நிறுவனங்கள் உருவாக்கிய துணை நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என் அனைத்தும் இந்தியாவின் முகத்தை மாற்றியது என்பது எந்த அளவுக்கு உண்மையோ விரைவான குடிமை சமூக வளர்ச்சியை உருவாக்கவில்லை என்றே கருதுகிறேன். அவருக்குப் பின்னால் அவரைப் பார்த்து வளர்ந்த இன்று பெருமை மிக்க அம்பானி குழுமம் முதல் பல நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வரைக்கும் இந்தியாவின் முகத்தை மாற்றினார்கள். 

ஆனால் இவர்களின் தொழில் பார்வை குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தது. லாபம், வளர்ச்சி, நட்டம் என்ற மூன்று வார்த்தைக்குள் இங்குள்ள நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டது. அதற்கு மேலாக இங்குள்ள அரசியல் அவர்களை நகர விடாமல் பாடாய்ப் படுத்தியது. நுகத்தடி மாட்டப்பட்ட மாடுகள் போல அரசின் கொள்கை முடிவுக்குள் உழன்று கொண்டேயிருந்தார்கள். கூடவே நுகர்வோருக்குத் தேவையானதைக் கொடுத்தார்கள். தேவைப்பட்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அரசு உதவியோடு, உதவி இல்லாமல் தாங்கள் எடுத்து வைத்த அடிகளை விரைவாக்கினார்கள். வளர்ந்தார்கள். பலரையும் வாழ வைத்தார்கள். ஆனால் இவர்கள் அனைவரின் எல்லைகளும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தது.  தொழில் நுட்பம் ஓர் இடத்திலிருந்து பெறப்பட்டது. மனித உழைப்பு இங்கிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. பட்டினியுடன் வாழ்ந்து பழகிய சமூகத்திற்கு உணவளிப்பது தான் இந்தியாவின் முக்கியக் கடமையாக இருந்தது. வேலி தாண்ட முடியாத வெள்ளாடுகள் போலத்தான் நம் இந்திய தொழில் சமூகம் மொத்தமாகவே செயல்பட்டது.

காரணம் அவர்கள் உருவாக்கிக் கொண்ட பாதையின் தன்மையிது. அரசு உருவாக்கியிருந்த கொள்கையின் நோக்கமிது. சின்ன வட்டம். ஆனாலும் சிறப்பாகவே செயல்பட்டார்கள். 

இந்த இடத்தில் தான் உலகை உட்கார்ந்த இடத்திலிருந்து அளந்து பார்த்த ஒருவரல்ல இருவர் உருவாகின்றார்கள்.  

பில்கேட்ஸ் உருவாக்கிய மாற்றம் ஒவ்வொரு தொழிலுக்குள்ளும் ஊடுருவியது. உழைப்பை மிச்சப்படுத்தியது. நேரத்தைச் சுருக்கியது. மொத்த உலகத்தையும் ஒரே நேர் கோட்டில் கொண்டு வந்து நிறுத்தியது. எல்லா நாடுகளிலும் கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. கற்றுக் கொண்டால் தப்பில்லை என்பது மாறி இனி கற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று ஒவ்வொருவரையும் புரட்டிப் போட்டது.

ஆனால் நாம் பார்க்கப் போகும் இரட்டையர்கள் உருவாக்கிய மாற்றங்கள் கேட்ஸ் என்ற மனிதரை நீ சொன்னது போதும்?  இனி நாங்கள் உலகத்திற்குப் பாடம் நடத்துகின்றோம். கொஞ்ச நாள் கேட்டுக்கு வெளியே நில் என்று துரத்தினார்கள்.

உலகை மட்டுமா அளந்தார்கள்? உங்களையும் என்னையும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வார்த்தைகளில் உள்ள குரு என்ற பெயரைத் தூக்கி விட்டு அவர்கள் நிறுவனப் பெயரை அல்லவா இன்று உச்சரிக்கும் நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.

அவர்கள் யார்?



ஊர் காதல் | Native Love 

50 வயது காதல் தரும் அவமானங்கள் |

6 comments:

Mohamed Yasin said...

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.. இந்தியாவின் கடந்த 150 ஆண்டுகளின் தொழில் துறை வரலாற்றை மிக சுருக்கமாக, நேர்த்தியாக கூறியுள்ளீர்.. ஜாம்ஷெட்ஜி சாரின் ஆரம்ப நிலை 150 ஆண்டுகளுக்கு எவ்வாறு இருந்து இருக்கும் என ஒரு நிமிடம் யோசித்து பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.. வ.உ.சி அய்யா ஒரு படி மேலே போய் எஸ்.எஸ். காலியோ கப்பலை வாங்கி ஆங்கிலேயருக்கு எதிராக பயணத்தை மேற்கொண்டது.. எப்பா!!! என்ன துணிச்சல்!!! தன் முதல் பயணத்தை மேற்கொள்ளும் போது என்ன மனநிலையில் அவர் இருந்து இருப்பார்..

(சுருக்கமாகச் சொல்லப் போனால் அப்போது அவர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். நாம் காலில் செருப்பில்லாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.) தெளிவான, எளியமையான விளக்கம்..

ஜோதிஜி said...

மகிழ்ச்சி நன்றி யாசின்

மெய்ப்பொருள் said...

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டது . அதனை
தொடர்ந்து அங்குள்ள ஆலைகள் உலகு முழுவதுமே
கொடி கட்டி பறந்தன என்றேல்லாம் நாம் இது வரை
படித்து வந்திருக்கிறோம் .

தொழிற்புரட்சி ஏன் அந்த காலத்தில் ஏற்பட்டது
என்ற கேள்வியை கேட்பதில்லை .
தொழில் துவங்க என்ன வேண்டும் ? பணம் !
அது எங்கிருந்து வந்தது ?

இந்தியாவை கொள்ளையடிச்சு வந்தது .
முதலில் வெள்ளைக்காரர் இந்தியாவில் இருந்து
துணி வாங்கி கொண்டிருந்தார்கள் .
இந்திய தொழில்களை அழித்து அங்கு மில்கள் ஏற்பட்டன .


ஜோதிஜி said...

தமிழ்நாட்டிலும் கொள்ளையடித்து கோடி கோடியாக பலரும் பினாமி மூலம் வைத்துள்ளார்கள். ஆனால் இங்கே பொதுவான வளர்ச்சி உருவாகவில்லையே? தனி மனித வளர்ச்சி, அவர்கள் குடும்பம், அவர்களைச் சார்ந்தவர்களின் வளர்ச்சியைத் தானே தமிழ்நாட்டின் வளர்ச்சி என்கிறோம். எந்த புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகவில்லையே? எத்தனை எத்தனை கல்லூரிகள். கடந்த 25 வருடங்களில் என்ன இங்கே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது? என்ன தான் கற்றுக் கொண்டார்கள்? கற்றுக் கொடுத்தார்கள்? பணம் எல்லோரிடமும் தான் உள்ளது. எப்படி அதனை பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் அதற்குள் விசயம் உள்ளது மெய்ப்பொருள் காண்பதறிவு.

திண்டுக்கல் தனபாலன் said...

எதிர்ப்படை எவ்வளவோ முயன்றும் தென் பகுதியை எதிர்த்து போரிட்டு வெல்ல முடியவில்லை; இரவு வந்தது...

தென் பகுதியில் சமையலுக்காக பல இடங்களில் வெளிச்சம் (தீ) கண்டதை உணர்ந்த எதிர்ப்படையின் தலைவன், வெற்றி நாளை என உறுதி செய்தான்...

வாய்மை உண்மை - இதற்கு நடுவில் காண்பதே (இருப்பதே) மெய்ப்பொருள் அறிவு...

அறம் இன்பம் நடுவில் பொருள் வர வேண்டும்...

நன்றி...

ஜோதிஜி said...

அருமை