Tuesday, July 31, 2018

நாட்டு நடப்பு - ஆரோக்கிய குறிப்புகள் - 16

ஊரில் நடக்கு விசேடங்களில் கலந்து கொள்ளும் போது உள்ளே நுழைந்ததும் முக்கியமான நபர்களிடம் முகத்தைக் காட்டி விட்டு சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்று விடுவதுண்டு. என்னைத் தேடிக் கொண்டு வருபவர்களிடம் எப்போதும் அம்மையார் சமையல்கட்டு எங்கே இருக்கோ? அங்கே போய்ப் பாருங்கள்? என்பார். 

காரணம் உள்ளே நடக்கும் விவாதங்கள், வாக்குவாதங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், விட முடியாத கொள்கை கொண்டவர்கள், மாற விரும்பாத மனிதர்கள், இன்னமும் 1947 க்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எவரையும் புண்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. 

ஆனால் இந்த முறை வரவேற்பு மேஜையின் முன்பே கட்டாயப்படுத்தி அமர வைத்து விட்டார்கள். தட்டில் இருந்த பாதிக் கல்கண்டு, பழங்கள், காணாமல் போவதைப் பார்த்து மகள் நீங்க உள்ளே போயிடுங்க. இந்தப் பக்கமே வராதீங்க என்று புகைப்படம் எடுத்து என்னை அனுப்பி வைத்து விட்டார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்கள் சமையில் கலக்கோ கலக்கு என்று தூள் கிளம்புகின்றார்கள். 

அறந்தாங்கி தாண்டி கீரமங்கலம் பட்டுக்கோட்டை வரைக்கும் மட்டன் சாப்பாட்டுக்கு சொத்தே எழுதி வைத்து விடலாம் போலிருக்கும். அதே போலப் பேரையூர், நச்சாந்துபட்டி பக்கம் சின்னவெங்காயம் முருங்கைக்காய் போட்டு பொங்கலுக்குச் சம்பார் வைத்திருந்தார்கள். யார் என்று கேட்டு சமையல் கட்டுப் பக்கம் சென்றேன். சமையல் செய்பவர்கள் அனைவரும் 25 வயதுக்குள் இருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. யார் சம்பார் வைத்தது என்று கேட்டு அவருக்குக் கைகுலுக்கி நூறு ரூபாய் தாளை வைத்துக் கொள் என்றேன். 

மிரண்டு போய்விட்டான். 

உங்க வார்த்தையே போதும் அண்ணே என்றான்.

•••••••••••••••••••••••••••

2009 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் முதல் முறையாக வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதத் தொடங்கினேன். என் எழுத்துப் பயணத்திற்கு 10 வது ஆண்டு தொடங்குகின்றது. 800 பதிவுகளை கடந்து வந்துள்ளேன்.  

முதல் பதிவில் விமர்சனம் செய்த சுந்தர் நேற்று வரைக்கும் என் எழுத்தை படித்துக் கொண்டிருக்கின்றார் என்பதே எனக்குப் பெருமையாக உள்ளது.  இருவரும் கருத்து ரீதியாக எதிரெதிர் துருவமாக இருந்தாலும் கூட. நன்றி சுந்தர்ராமன்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நூலுக்கான வாசகர்களும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுக்கான வாசிப்பாளர்களும் அறிமுகம் ஆகி உள்ளனர்.  

எழுதத் தொங்கியது முதல் இன்று வரைக்கும் யார் யாரோ வந்தார்கள்.... சென்றார்கள். நெருங்கிய தொடர்பிலும் இருக்கின்றார்கள். முதல் பதிவு முதல் இன்று வரையிலும் வாசிக்கும் நண்பர்களும் உள்ளனர். 

விமர்சனப் பெட்டியை இன்று வரையிலும் பூட்டி வைத்தது இல்லை.

சமூகத்தைப் பாதிக்கும் மனிதர்களின் உண்மையான குணங்களை எப்போதும் விமர்சிக்க தவறியதே இல்லை. 

ஊருக்கு ஒவ்வொருமுறையும் செல்லும் போது நான் சந்திக்கும் உறவினர்களின் ஆரோக்கியம் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது, என்னுடன் பணிபுரிபவர்கள், உடன் பழகும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பார்க்கும் போதும் நான் இன்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வாழ்வதற்கும் காரணம் என் எழுத்துப் பயணம் மட்டுமே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. மனதில் உளைச்சல் இல்லாத போது உடலெங்கும் ஆரோக்கியம் நீடிக்கும் என்பது நான் கண்ட உண்மையாகும்.

இன்று வரையிலும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பர் இராஜராஜன் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தொடர்பில் தொடர்ந்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


(முற்றும்)

நாட்டு நடப்பு மற்ற பதிவுகள்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய அவல நிலை

நீட் என்பது உருவாக்கிய வணிக கொள்ளை

தமிழக கல்வியில் உருவான பாடத்திட்ட மாற்றங்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வானளாவிய அதிகாரங்கள்

ப.சிதம்பரம் என்றொரு அதிபுத்திசாலி

காலா திரைப்பட விமர்சனம்

தந்தை பெரியார் என்றும் தேவைப்படுவார்?

வைகோ உணர்ச்சிமயமானவர்

ரஜினி என்ற ஆபத்து

தமிழகம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் போர்

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்

சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் புத்தக விமர்சனம்

நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா

திமுக அதிமுக அடிப்படை வித்தியாசங்கள்

பிஎஸ்என்எல் அழிக்கப்பட்ட வரலாறு

21 comments:

Amudhavan said...

தமிழ்நாட்டு விருந்துகள் இன்னமும் மாறாமல் களைகட்டிக்கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி. பெங்களூரில் 98 சதவிகித சாப்பாடுகள் வெறும் வியாபாரமாகிவிட்டன. இப்போதெல்லாம் திருமண விருந்து என்றாலேயே வீட்டில் சமைத்து வைத்துவிட்டுத்தான் கிளம்பணும் என்ற நிலைமை வந்துகொண்டே இருக்கிறது....

Avargal Unmaigal said...


போட்டோவை பார்த்தது என்னடா மாலை ஏதும் போடாமல் புதுசா ஒரு சாமிஜி உருவாகி இருக்கிறாரோ என்பது போல இருந்தது

Avargal Unmaigal said...

நான் பதிவு எழுதுவதற்கு முன்பு இணையத்தில் தேடி படிக்கும் தளம் உங்களதும் டோண்டு அவர்களின் தளமும்தான் அப்ப எல்லாம் தமிழ் மணம் பற்றி தெரியாது அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறேன் சில சம்யங்களில் பதிவை பார்த்ததும் மிகப் பெரிய பதிவாக இருக்கிறதே அப்புறம் வந்து படிப்போம் என்று ஒடிவிடுவேன் பல சமயங்களில் படித்தும் கருத்து சொல்லாமல் சென்றுவிடுவேன் காரணம் பதிவுகள் பெரியதாக இருப்பதால் அதில் பல நல்ல கருத்துகளும் இருப்பதால் மொத்த மாக அருமை என்று சொல்லவும் முடியாது அதே நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் பாராட்டி சென்றுவிட முடியாதுஉங்கள் பதிவுகளை படிக்கும் முதலில் உங்களை இலங்கைதமிழர் என்று நினைத்து இருந்தேன்

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா
தொடர்ந்து தொடரட்டும் தங்களின் எழுத்துப் பயணம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இணையத்தை சிறப்பானமுறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கும் மிக்ச் சிலரில் நீங்களும் ஒருவர். நான் இணையம் வந்த நாளில் இருந்து பெரும்பாலான உஙகள் பதிவுகளை படித்திருக்கிறேன்.சமீபத்திய பதிவுகளயும் விரைவில் படித்து விடுவேன் எல்லோரும் எத்தனையோ மனிதர்களை பல்வேறு சூழல்களில் சந்திக்க்கிறோம். ஆனால் நீங்கள் அவர்களின் விருப்பங்கள் அக வெளிப்பாடுகள் மன்ப்பான்மைகளை ச்முதாய சூழலைச் சார்ந்து அலசுகிறீர்கள். உங்கள் எழுத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். மேலும் சிறக்க வாழ்த்துகள்.

எம்.ஞானசேகரன் said...
This comment has been removed by the author.
எம்.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல துறை சார்ந்த பதிவுகளில் நீங்கள் எழுதுவதை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். எளிய நடை, உங்களின் எழுத்தோடு எங்களை அழைத்துச்செல்லும் பாணி, யதார்த்தம் என்பன போன்ற சிறப்பான கூறுகளை உங்கள் பதிவுகளில் பார்க்கிறேன். சாதனை தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அது ஒரு கனாக் காலம் said...

Sir , all the very best sir . I am with you as always ......

Rathnavel Natarajan said...

அருமை. வாழ்த்துகள்

ஜோதிஜி said...

சாம்பார் லேசாக ஊற்றி ஒரு வாய் வைத்தால் போதும் மற்றவை எப்படி இருக்கும்? என்று யூகித்து விடுவேன். நாகரிகமாக மோர் ரசம் என்று முடித்துக் கொள்வதுண்டு.

ஜோதிஜி said...

உண்மையிலேயே அப்படி ஒரு தொழில் இருந்தால் இப்போதைய சூழலில் நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

ஜோதிஜி said...

பலரும் அப்படித்தான் தொடக்கத்தில் நினைத்து இருந்தோம் என்று சொல்லி உள்ளார். சிலர் பெண் என்று நினைத்து நூல் விட்டதும் உண்டு.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி. இணையம் கையாள்வதும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் மிக முக்கியம். தனியாக பெரிய பதிவு போல எழுதலாம். பல நண்பர்கள் எங்களால் உள்ளே நுழைந்தால் வெளியே வர முடியவில்லை என்று நகர்ந்து சென்று விட்டார்கள். இதுவொரு இளைப்பாறல். உணர்ந்தவர்களுக்கு வரம். இல்லாவிட்டால் இதுவே பெரிய சாபம்.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு நன்றி ஞானசேகரன்.

ஜோதிஜி said...

மிக்க நன்றிங்க.

ஜோதிஜி said...

நன்றி சுந்தர்.

ஜோதிஜி said...

நன்றி

கிரி said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி :-) பத்தாண்டுகள் என்பதும் அதைவிட முக்கியமாக சமூகத்தளங்கள் பிரபலமான காலத்தில் Blog ல் எழுத்தை தொடர்வதும் எழுத்தின் மீது காதல் இல்லையென்றால் சாத்தியமில்லை.

மேலும் பல சிறப்பான கட்டுரைகளை அனுபவங்களை எழுத வாழ்த்துகள்

ஜோதிஜி said...

என்னை விட நீங்க தான் ஒரு கர்மயோகி போல எழுதிக் கொண்டே வர்றீங்க. ஆனால் எனக்கு ஒரு விசயம் தாக்கத்தை உருவாக்கி உள்ளே நமநம வென்று உள்ளே ஒரு மாற்றத்தை உருவாக்கினால் மட்டுமே எழுதுகிறேன். உங்கள் தளமும் உங்களின் எளிமையும் வலைதளத்தில் நான் இதுவரையிலும் வேறெங்கும் பார்த்தது இல்லை.