Saturday, January 08, 2011

மாமன்னன் இராஜராஜனின் இன்றைய எதார்த்த நிலை?

ஒரு பக்கம் அரைப்பக்கம் தொடங்கி இன்று குறுந்செய்தி வரைக்கும் சகல துறைகளிலும் விளம்பரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக திரைப்பட, அரசியல், ஆன்மீக பிரபலங்களின் விளம்பர மோகம் நாம் அறிந்ததே. சமகாலத்தில் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களை இஷ்டம் போல் உருவகப்படுத்திக் கொண்டு ஆட்டம் காட்டிக் கொண்டுருக்கிறார்கள். 

ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் கலாச்சாரத்தின் பொக்கிஷமாக விளங்கிக் கொண்டுருக்கும்.  தஞ்சை பெரியகோவிலைப் பற்றி ஏதேவொரு வகையில் நீங்கள் கொஞ்சமாவது கேட்டுருக்கக்கூடும்.  அல்லது தஞ்சாவூர் சென்று பார்த்துருக்கக்கூடும்.  ஈழம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்ட போது ஆங்கிலேயர்களுக்கு முன் இந்த தீவு எப்படி இருந்தது என்று பல புத்தகங்கள் வாயிலாக படித்துக் கொண்டு வந்த போது பிரமிப்புக்கு மேலே வேறொரு வார்த்தைகள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பது போல நம் தமிழ் மன்னர்களின் வீரம் எனக்கு வியப்பூட்டியது.  காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுக் காவியங்களைப் படைத்த மன்னனின் இன்றைய நிலை?

ஆனால் தமிழர்களின் சரித்திரத்தில் பெருமை மிக்க ஒரு மன்னனை நாம் எந்த அளவிற்கு பெருமைபடுத்தியிருக்கிறோம் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.  இதை பார்த்து முடித்து முடிக்கும் போது இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களின் இறவா புகழ் குறித்த அறியாமையை தயவு செய்து உங்கள் எண்ணத்தில் இருந்து சற்று ஒதுக்கி வைத்துவிடுங்கள். காரணம் தீர்மானிக்கப்பட்ட காலம் கொடுக்கும் தண்டனை மிகக் கோரமானது.  ஆனால் அதுவரைக்கும் நாம் இருப்போமா என்பது தெரியாது?45 comments:

 1. ஆச்சரியம் நண்பா

  ReplyDelete
 2. வருத்தமளிக்கிறது நம் அறியாமையையும், அலட்சியப் போக்கையும் நினைத்தால் :(

  ReplyDelete
 3. இந்த அளவுக்காவது சமாதி மிஞ்சியதே என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள். அந்த ராஜராஜனை கொச்சைபடுத்தவும், குற்றம் கண்டுபிடிக்கவும் இன்று ஒரு குழு முனைந்துள்ளது என்பதுவும் ஒரு உண்மை.

  ReplyDelete
 4. ஏதோ ஒன்றை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் எழுத்தின் ஈர்ப்பு என்று நினைக்கிறேன். நீங்கள் பதிவு செய்தால்
  எனக்கு விரைவில் தெரிந்துவிடும் படி செய்து வைத்திருக்கிறேன் எனது கணினியில்.

  ReplyDelete
 5. தமிழ்மணம் இப்படித்தான் சிலநேரங்களில் தொல்லைக்கொடுக்கிறது.

  ReplyDelete
 6. எப்படி இருந்தாலும் அது ஒரு வரலாற்றுச் சின்னம். அதை காப்பாற்றுவது நம் கடமையல்லவா!

  ReplyDelete
 7. என்ன ஏதாவது மந்திரம் வச்சுருக்கீங்களா? நான் இங்கே பட்டை அடம்பிடிக்கிறதே என்று நினைக்க அதுவே உங்கள் விமர்சனமா வருதே? வாய்ப்பு இருந்தால் இணைத்து விடுங்க.

  ReplyDelete
 8. தமிழ் உதயம் சொன்னதுப்போல் இந்தளவுக்காவது உள்ளதே என்று ஆச்சர்யப்பட்டுத்தான் கொள்ளவேண்டும். இப்போதைய தலைவர்களின் சமாதிகளை பராமரிக்கும் செலவில் பாதி செலவிட்டாலே இனி வரும் காலங்களிலாவது இருப்பதை காப்பாற்றலாம்.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாப்பதில் தமிழர்களுக்கு இருக்கும் ஆர்வமும் அக்கறையும் பிரமிக்கத் தக்கது :))))

  மற்றபடி ராஜராஜன் ஆட்சிமையைப் பற்றி இருக்கும் மாயைகள் கட்டவிழ்க்கப்பட்டு பலகாலம் ஆகின்றது.

  ReplyDelete
 12. ஜோதிஜி, இந்த தகவல் எனக்கு மிகவும் புதிது :(

  இது போன்ற வரலாற்று நினைவிடங்கள் தொல்பொருள்த் துறையால் செவ்வனே பாதுகாக்கப்பட்டு நூற்றாண்டுகளாக கையிறக்கம் செய்யப்பட வேண்டிய ஆபூர்வங்கள். அதனின்று தவறி இவ்வாறாக பழமைவாய்ந்த தொன்மங்கள் காலத்தோடு அழிவது, நமது அறியாமையின் விலைகளில் ஒன்று.

  நினைக்கவே மிக்க வருத்தமாக இருக்கிறது!!

  ReplyDelete
 13. தமிழினத்தின் பெருமை மிகு அடையாளங்களை நாம் மீட்டே ஆக வேண்டும். ராஜ ராஜ சோழனை பார்ப்பன ஆதரவாளர் என சிலர் எதிர்ப்பதெல்லாம் அதனை அழிப்பதற்க்காததான்.

  ReplyDelete
 14. @ஜோதிஜி
  இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது நண்பர்கள் குழு இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தது. அவர்கள் சொன்ன செய்தி கண்ணில் ரத்தம் வர வைத்தது. முடிந்தால் அவர்கள் எழுதிய அனுபவத்தை தேடி எடுத்துப் போடுகிறேன்.

  ReplyDelete
 15. "Those Who Forget History Are Doomed to Repeat It"

  வரலாற்றை மறந்தவனுக்கு/மறக்க செய்தவனுக்கு காலம் அவ்விதமே பதில் சொல்லும். இதை தவிர வேற வார்த்தைகள் இல்லை என்னிடம்...

  ReplyDelete
 16. எனக்கிருந்த கவலையை உங்கள் பதில் சொல்லிவிட்டது தமிழ் உதயம்.

  ராஜராஜனின் பரம்பரையில் வந்தவர்கள் இப்போ எங்கிருக்கிறார்கள்?

  ReplyDelete
 17. நமது வரலாற்றை நாம் சரியாக அறிந்துகொள்ளவேண்டும் .

  ReplyDelete
 18. வெட்கப்படவேண்டிய செயல் ....
  பதிவில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 19. //ராஜ ராஜ சோழனை பார்ப்பன ஆதரவாளர் என சிலர் எதிர்ப்பதெல்லாம் அதனை அழிப்பதற்க்காததான்.// இதுபற்றி விவாதிக்க நீங்கள் தயாரா 'யோவ்' ?

  ReplyDelete
 20. //ராஜராஜனின் பரம்பரையில் வந்தவர்கள் இப்போ எங்கிருக்கிறார்கள்?//

  யோசிக்கவேண்டிய கேள்வி !!! பத்துக்கும் மேற்பட்ட மனைவியர்... இன்னும் ஏராளமான அந்தப்புர நாயகியர்.. அவர்களின் வாரிசுகள்! லோகமாதேவி என்ற பட்டத்தரசியின் மூத்த வாரிசான ராஜேந்திரன் மட்டுமே பட்டத்து இளவரசன்...ஏனையோர் என்ன ஆனார்கள்?

  ராஜேந்திரனில் இருந்து மூன்று அல்லது நான்காவது தலைமுறையில் ஆண்வாரிசு இல்லாமல் போனதால் பெண்கொடுத்திருந்த வேங்கிச்சோழர்கள் (தெலுங்கச் சோழர்கள் எனவும் கூறுவர்) வகையறாவில் இருந்து ஒரு ஆண்குழந்தையைத் தத்தெடுத்து முடிசூட்ட... அப்போதிலிருந்தே தெலுங்கச் சோழர்களின் ஆட்சி முதலாம் குலோத்துங்கச்சோழனில் இருந்து துவக்கம்.

  நீங்கள் எந்த வாரிசு வழித் தோன்றலைக் கேட்கிறீர்கள் அக்கா?

  ReplyDelete
 21. தொப்பி....... ஏன் இது போன்ற பெயரை தேர்ந்தெடுக்க காரணம். உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி. கனாக்காதலன் நாம் எதிர் தான் அக்கறை செலுத்தியுள்ளோம். நம்ம மக்கள் இருக்கிற தமிழ்மொழியையும் பேசவிடமாட்டங்க போல. நம்மவர்களுக்கு எல்லாமே அரசியல். ஆனால் முக்கிய இடத்துக்கு நம்மாளுங்க வரவும் மாட்டாங்க. மற்றொரு நாட்டில் இருந்து தான் நம்மை ஆள அனுமதிப்போம்.

  ReplyDelete
 22. தெகா திருப்பூரில் பூண்டி என்றொரு பகுதியில் ஆயிரம் வருடத்திற்குப்பிறகு கலை அம்சம் மிக்க ஒரு கோவில் இருக்கு. சமீப காலமாகத்தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் பட்டு கொஞ்சம் உயிரோடு இருக்கு. மொக்கராசா சரியா சொல்லியிருக்காரு.

  ReplyDelete
 23. எஸ்கே நம்மாளுங்க கடமை எல்லாம் வாய்ச்சொல்லில் வீரரடி. அம்புட்டுத்தான். வேறென்ன எழுத முடியும்.

  எல்கே நீங்க அவஸ்யம் இது போன்ற விசயங்களை எழுத வேண்டும். இந்த தொடருக்கு புத்தகம் படிக்க முடியாத சூழ்நிலையில் இணையத்தில் ஒவ்வொன்றாக தேடிக் கொண்டு வந்த போது இந்த பொக்கிஷம் கிடைத்தது. ஏராளமான ஆச்சரியமான தகவல்கள் எவர் எவரோ அந்தந்த காலகட்டத்தில் எழுதி வைத்தது இன்று எனக்கு உபயோகமாக இருக்கிறது.

  ReplyDelete
 24. ரதி சென்னையில் உள்ள என் நண்பன் மனிதர்கள் ஆசைப்படும் புகழ், பதவி, பணம் குறித்து ஒரு முறை சொன்ன வாசகத்தை உங்கள் பதில் மூலம் யோசித்துப் பார்க்கின்றேன்.

  ராஜாராமன்

  முடிந்தவரைக்கும் ரதிக்கு அல்லது யோவ் என்ற நண்பருக்கு நீங்க கொடுக்கும் பதில் பலருக்கும் உபயோகமாக இருக்கும் போல.

  ReplyDelete
 25. ராசா தமிழ்உதயம் சொல்லியுள்ள விமர்சனத்திற்கு உன் பதிலை எதிர்பாக்கின்றேன்.

  ReplyDelete
 26. இந்த நிலை கண்டால் மனசு வலிக்கிறது. ஒரு வரலாற்றுச் சின்னத்தை காக்க வேண்டியது நம் கடமை என்பதை ஏனோ நாம் அறிவதில்லை.

  ReplyDelete
 27. வருந்துவதை தவிர வேறு வழியில்லை.அரசாங்கம் தான் என்று சுட்டுவிரல் காட்டி சொல்லுவதை விட அந்த இடத்தில் வாழ்பவர்கள் விழிப்புணர்வு பெற்றால் அல்லது அந்த இடத்து இளைஞர்கள் மண்ணின் மகத்துவம் அறிந்து முயன்றாலே அதை செம்மைப்படுத்திவிடலாம்.

  ReplyDelete
 28. அண்ணே என் பாட்டனை நினைவு படுத்தியமைக்கு நன்றி ...

  ReplyDelete
 29. நண்பர் தமிழ் உதயம்,
  ராஜராஜனைக் குறைசொல்லவும், கொச்சைப் படுத்தவும் அலைகிறார்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்வது நன்றாக இல்லையே! ராஜராஜன் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகக்கோயில்களில் சமஸ்கிருதம் உச்சஸ்தானத்தைப் பிடித்தது என்பது வரலாறு. பிராமணர்களுக்கு இறையிலி நிலங்கள் அதிகம் கொடுக்கப்பட்டதும், வேளாளர் உழைப்பில் விளைந்தவற்றை பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்ததனால் விவசாயிகள் அதிருப்தியுற்று இருந்ததும் கல்வெட்டுச் சமாச்சாரங்கள். இன்றளவும் தஞ்சை பூமியில் மங்கலம் என்று முடியும் ஊர்களெல்லாம் பார்ப்பனர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர்கள்.( அடியக்கமங்கலம், கீரமங்கலம், கிளாமங்கலம், நீடாமங்கலம்)

  ReplyDelete
 30. ராசா

  இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, வரி வசூலிக்க என்று உருவாக்கப்பட்ட நடை முறை விசயங்களை நேற்று தான் படித்துக் கொண்டுருந்தேன். இது போக ஒரு கோல் போன்ற அமைப்பை வைத்துக் கொண்டு நிலங்களை அளந்து வரி வசூலிக்கும் முறையும் பார்த்து அசந்து போய்விட்டேன்.

  ReplyDelete
 31. செந்தில் இந்த பாட்டனைப் பற்றி முழுமையாக எழுத ஆசை. ராஜராஜன் வணங்கிய காளிகோவில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு அருகே இன்னமும் இருக்கிற விபரம் உங்களுக்குத் தெரியுமா?

  தவறு

  மக்களுக்கு விழிப்புணர்வா? இதை செப்பனிட்டு அவர்களுக்கு கிடைப்பது என்ன? சே. குமார் சொன்ன மாதிரி இந்த காணொளியை முழுமையாக பார்த்து முடித்த போது மனம் கனத்துவிட்டது.

  ReplyDelete
 32. //இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, வரி வசூலிக்க என்று உருவாக்கப்பட்ட நடை முறை விசயங்களை நேற்று தான் படித்துக் கொண்டுருந்தேன்.//

  என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!! இந்த காணொளியை பார்த்திட்டு அதிர்ச்சியாகிப் போயி, மேலும் தேட ஆரம்பிக்கும் பொழுது ‘வினவு’ பதிவு கண்ணில பட்டுச்சு. அதில ‘களப்பிரர்’கள் பத்தியும், அவர்களின் ஆட்சி காலத்தை பற்றியும் ஆஹா, ஓஹோன்னு ரொம்ப நம்புற மாதிரி சொல்லிட்டே வந்தாங்க. அப்போ இராசராச சோழன் மீது எழுப்பபட்டிருந்த பிம்பங்கள் விழ ஆரம்பிச்ச மாதிரி ஒரு உணர்வு எனக்கு.

  மூலத்தை தேடி படிக்காமல் இப்படி நம்புவது சரியல்லன்னு, நினைச்சிட்டே வந்தா அங்கே பின்னூட்டத்தில் ‘காட்சி’ தளத்தோட இணைப்பு இருந்துச்சு... "இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு - ம.செந்தமிழன்" அங்கே பகுதி 1ல இருந்து 8பகுதியா இருக்கு.

  நிறைய ஆராய்ச்சி புத்தகங்களின் பின்னணியோட இருக்கு அந்தப் பதிவுகள். அவசியம் வாசிச்சுப் பாருங்க. இன்னும் வாசிக்கலன்னா. இப்போ தமிழ் டீச்சர் எனக்கு தமிழ் இலக்கிய வரலாறு அப்படிங்கிற பாட நூல் ஒன்றை கொடுத்திட்டார். இதில இருக்கு எல்லாம்னு, ஆரபிக்கணும் படிக்க.

  அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கு களப்பிரர் ஆட்சிகாலம் ‘சங்கம் மருவிய காலம்,’ ஒரு இருண்ட காலம் என்று. அப்படியே வினவு தளத்தில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராக உள்ளது... ஏன் திரிச்சு, திரிச்சு வரலாறு எழுதப்பட்டுக் கொண்டே வருகிறது?

  ReplyDelete
 33. //இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, வரி வசூலிக்க என்று உருவாக்கப்பட்ட நடை முறை விசயங்களை நேற்று தான் படித்துக் கொண்டுருந்தேன்.//

  என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!! இந்த காணொளியை பார்த்திட்டு அதிர்ச்சியாகிப் போயி, மேலும் தேட ஆரம்பிக்கும் பொழுது ‘வினவு’ பதிவு கண்ணில பட்டுச்சு. அதில ‘களப்பிரர்’கள் பத்தியும், அவர்களின் ஆட்சி காலத்தை பற்றியும் ஆஹா, ஓஹோன்னு ரொம்ப நம்புற மாதிரி சொல்லிட்டே வந்தாங்க. அப்போ இராசராச சோழன் மீது எழுப்பபட்டிருந்த பிம்பங்கள் விழ ஆரம்பிச்ச மாதிரி ஒரு உணர்வு எனக்கு.

  மூலத்தை தேடி படிக்காமல் இப்படி நம்புவது சரியல்லன்னு, நினைச்சிட்டே வந்தா அங்கே பின்னூட்டத்தில் ‘காட்சி’ தளத்தோட இணைப்பு இருந்துச்சு... "இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு - ம.செந்தமிழன்" அங்கே பகுதி 1ல இருந்து 8பகுதியா இருக்கு.

  ...இன்னும் ஒன்னு வருது, பெரிசா போச்சப்பா... ;-)

  ReplyDelete
 34. நிறைய ஆராய்ச்சி புத்தகங்களின் பின்னணியோட இருக்கு அந்தப் பதிவுகள். அவசியம் வாசிச்சுப் பாருங்க. இன்னும் வாசிக்கலன்னா. இப்போ தமிழ் டீச்சர் எனக்கு தமிழ் இலக்கிய வரலாறு அப்படிங்கிற பாட நூல் ஒன்றை கொடுத்திட்டார். இதில இருக்கு எல்லாம்னு, ஆரபிக்கணும் படிக்க.

  அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கு களப்பிரர் ஆட்சிகாலம் ‘சங்கம் மருவிய காலம்,’ ஒரு இருண்ட காலம் என்று. அப்படியே வினவு தளத்தில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராக உள்ளது... ஏன் திரிச்சு, திரிச்சு வரலாறு எழுதப்பட்டுக் கொண்டே வருகிறது?

  ReplyDelete
 35. நன்றி தெகா

  அப்புறம் வீட்ல இருக்ற டீச்சர மறந்தே போயிட்டேன். அப்பாடா எப்டியோ பஞ்சாயத்து ஆலமரம் சொம்பு இல்லாம தமிழ் இலக்கிய சொற்போர் ஆரம்பிக்க நானும் ஒரு காரணமா?

  என்ன கொடும மாதவா?

  ஏற்கனவே தேனம்மை கருவேலமரத்தை ஞாபகப்படுத்திவிட்டு சென்று விட ஊர்ல இருக்கறி பீக்காடு (தெரியும்தானே) ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்துக் கொண்டே வந்தேன். இப்ப நீங்க வேற.

  இணையத்தில் கிடைக்காதது எதுவுமே இல்லை என்கிற அளவிற்கு கொட்டி கிடக்குது.

  நம்மாளுங்க தான இடுப்பு தொடை இத்தோட நிப்பாட்டி அத விட்டு நகர விரும்புறதேயில்லையே?

  ReplyDelete
 36. ராஜராஜன் சமாதி பற்றி மேலும் சில பதிவுகள்.

  http://pirathipalippu.blogspot.com/2010/04/blog-post.html

  http://heilderfuhrer.blogspot.com/2008/11/blog-post.html

  .

  ReplyDelete
 37. கும்மியாருக்கு தூங்கப் போவதற்கு முன்பு என் முத்தத்தை பரிசாக தந்து விட்டு செல்கின்றேன்.

  ReplyDelete
 38. //இதுபற்றி விவாதிக்க நீங்கள் தயாரா 'யோவ்' ?//

  விவாதத்திற்கு அழைத்தமைக்கு நன்றி! விந்தை மனிதன், எனக்கும் கீழத்தஞ்சைதான்
  தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த தமிழன்
  cpim கட்சியில் மாணவர் அரங்கத்தில் மாவட்ட தலைவராக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நானும் உங்களைப் போல்தான் பேசுவேன்.பிறகு ஈழத்தமிழருக்கு ஆதரவாக கட்சிக்குள் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக வெளியேற்றபட்டேன்.தற்போது எந்த இயக்கத்திலும் நான் உறுப்பினர் இல்லை பிரச்சனைகளை பொறுத்து பங்கெடுக்கிறேன்.

  அக்கட்டுரையை வெளியிட்ட வினவு- வின் ஆதரவாளன்தான் நான் ஆனால் அக்கட்டுரை முற்றிலும் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.அவர்களை குறை சொல்ல விரும்பாததால்தான் நான் வினவின் பெயரை குறிப்பிடவில்லை.மேலும், விவாதிக்காமல் கருத்தை மட்டும் பதிவு செய்தேன்.இல்லையென்றால் வினவினை வழக்கமாக எதிர்ப்பவர்களுக்கு அது பயன்பட்டுவிடலாம்.

  சிகப்பு கண்ணாடிப்போட்டுப் பார்த்தால் தொழிலாளர் பிரச்சனைகள் தெளிவாகத்தெரியும் ஆனால் தமிழன் பிரச்னையை கொஞ்சம் சொந்த கண் கொண்டு பார்த்தால்தான் புரியும்.

  எனக்கு டைப்பிங் தெரியாது அதனால் mail id தருகிறேன் நேரம் கிடைக்கும் போது நேரிலேயே சந்திப்போம். இல்லையென்றால் என் blog-ல் விரைவில் என் கருத்தை எழுதுகிறேன்.என்னை வினவின் HRPC சென்னை உறுப்பினர்களும் அறிவர் என் கருத்தினை அவர்களிடமும் விவாதித்திருக்கிறேன்.

  நீங்கள் தமிழராக இருந்தால் என் அனுதாபங்கள்!
  இல்லையென்றால் என் கண்டனங்கள்!

  yowmails@gmail.com

  விமர்சித்து பிரபலம் அடையும் எண்ணம் இல்லாததாலும் இங்கே விவாதத்தை தவிர்க்கிறேன்.

  ReplyDelete
 39. குமரி கண்டம்: -ஹரிஹரன்

  இந்த லிங்க் -ல் வினவு கட்டுரைக்கு ஒருவர் சில பதில்களை எழுதியுள்ளார்.

  "நான் இங்கு கூறியது அனைத்தும் இராஜராஜானை காப்பாற்றுவதற்காக அல்ல, ராஜராஜனும் தவறுகள் செய்துள்ளார் மறுக்க முடியாது. ஆனால் வரலாற்றை அவர் தேவைக்கு ஏற்றார்போல் வளைப்பது தான் இன்றைய பிரச்சனை. வரலாற்றின் மறுபக்கமும் வெளியில் தெரியவேண்டும் என்பதே எனது நோக்கம்'

  http://kumarikantam.blogspot.com/2011/01/blog-post_09.html

  காட்சி:-ம.செந்தமிழன்

  "கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
  இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். அவர்களிலும் இராசேந்திரச் சோழருக்குப் பிந்தைய சோழர் குடும்பத்தில் தெலுங்கர் கலப்பு மிகுந்தது. ஆகவே, பிராமணச் சார்பு உருவானது."

  http://kaattchi.blogspot.com/2011/01/blog-post_05.html

  ReplyDelete
 40. அன்பின் ஜோதிஜி அந்த காணொளி பின்னனி இசைதான் வருதத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

  ”மக்களுக்கு விழிப்புணர்வா? இதை செப்பனிட்டு அவர்களுக்கு கிடைப்பது என்ன? ”

  அவர் அவர்களுக்கு பிரச்சனை வந்தவுடன் விழிப்புணர்வு தானாய் வந்துவிடுகிறது. மகத்துவத்தை அறிந்தால் மட்டுமே லாபம் நோக்காது செயல்படமுடியும். இப்பொழுது உள்ள வேக வாழ்க்கையில் எந்தளவுக்கு சாத்தியகூறு ? என்று எண்ணம் எழவே செய்கிறது.

  ReplyDelete
 41. தவறு

  சற்று விரிவாகவே பேசலாம். இதை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப் போகும் பதிவில் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன். இரண்டு தண்டவாளங்களில் பயணிக்கும் நம் இருவரின் சிந்தனை என்ற ரயில்.

  ReplyDelete
 42. யோவ்

  உங்கள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் இந்த பின்னோட்டத்தை தொடர்ந்து வரும் பலருக்கும் உபயோகமாக இருக்கக்கூடும். தெகா, கும்மி, விந்தைமனிதன் வரிசையில் நீங்களும் இணைத்துள்ளமைக்கு நன்றி.

  ReplyDelete
 43. மொகலாயர்களைப் போல பெரிய சமாதிகளை அமைக்காமல் விட்டது 1000 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு பெரிய தவறு என்று தெரிகிறது :(

  ReplyDelete
 44. இது உண்மையிலேயே ராஜ ராஜ சோழனின் சமாதியாகக் கூட இருக்கலாம், ஆனால் மேல்மட்டத்திலுள்ள தமிழரல்லாத, anti Tamil அதிகாரிகளால் ராஜ ராஜ சோழன் சமாதி சம்பந்தமான தடயங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன அல்லது அதை உறுதிப்படுத்த மறுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும் . தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டு திரிக்க, கொச்சைப்படுத்த, ஊடகபலம் வாய்ந்த, உயர்மட்ட செல்வாக்குள்ள தமிழரல்லாதோர் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர்.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.