Thursday, January 13, 2011

சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை

தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் மூன்று மன்னர்களுக்கு பிரதான இடமுண்டு. மூவேந்தர்களான சேர, சோழ,பாண்டியர்கள் என்றும் இதைத்தான்  சங்ககாலம் என்கிறார்கள். தமிழகத்தின் நீண்ட வரலாற்றில் இரு காலங்களைப் பொற்காலம் என்று கூறப்படுகின்றது. ஒன்று சங்ககாலம் (கிபி 200 வரை) மற்றொன்று சோழர் காலம் (கிபி 900 முதல் 1200 வரை) இந்த காலத்தில் தான் தமிழன் எவருக்கும் அடிமைப்படாமல் சுய ஆட்சி அதிகாரம் பெற்றுருந்தான். 

                                பாண்டிய மன்னர்களின் கதை சொல்லும் படமிது
பாடப்புத்தகங்களிலும், இவர்களை வைத்து எழுதப்பட்ட கதைகளிலும் சிறப்பான துதிகளுக்கும் எவ்வித குறைவும் இருக்காது. சரிதானே?  இவர்கள் வாழ்ந்த மாடமாளிகைகள், அலங்கரிக்கப்பட்ட விதம், இவர்களின் ஆட்சி பரிபாலணங்கள் போன்ற அத்தனையும் ஏறக்குறைய ஒரு சார்ப்புத் தனமானவையே. அப்போது வாழ்ந்த மக்களின் அடிப்படை வாழ்வியல் சோகங்களையை எந்த வரலாற்று ஆசிரியர்களும் அதிகம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. 

காரணம் தொடக்க கால தமிழர்களைப் பற்றி அவர்கள் வாழ்ந்த வரலாற்றுப் பக்கங்களை எழுதியவர் எவரும் மேலைநாட்டினர் போல வரலாற்று ஆசிரியர்கள் அல்ல. இந்த சமயத்தில் அது போன்ற அவலங்களை லேசாக பார்த்து விடலாம். 

புறநானூறு பாடல் 150,160

ஒரு புலவனின் மனைவி.  குழந்தைக்கு பால் கொடுக்கும் மார்பகங்கள் சதைப்பற்றில்லாமல் தொங்கி உலர்ந்து காணப்படுகிறது.. பானையில் சோறில்லை. அழும் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கின்றாள், 

இது போன்ற பல பாடல்கள் அந்த காலத்தில் வாழ்ந்த அடிப்படை மக்களின் அவல நிலையை பிரதிபலிப்பதாக இருக்கின்றது. 

மன்னர்கள் படையெடுத்தார்கள், வெற்றி கொண்டார்கள். மானம் பெரிதென வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்தார்களா? 

பழங்கால சங்கப்பாடல்களில் அரிதாக ஔவையார் பாடிய ஒரு பாடல் உண்டு. 
மூவேந்தர்கள் ஒற்றுமையாக ஒரு விழாவில் கலந்து கொண்டதை (புறநானூறு 367) வாயார வாழ்த்தி பாடுகிறார்.

காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர், சோழன் திருமாவளவனும், பாண்டியன் பெருவழுதியும் ஒன்றாக சேர்ந்து வந்த போது இவ்வாறு பாடுகிறார்.

"இதுபோல உங்கள் ஒற்றுமை நீடித்து இருந்தால் உலகமே உங்கள் கைப்படும் " என்கிறார். (புறம் 56) 

தமிழக மன்னர்கள் போர்க்களத்திற்கு வெளியே புரிந்துணர்வோடு ஒன்று சேர்ந்து இருந்தது மிகக்குறைவே. இதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சி கிபி இரண்டாம் நூற்றாண்டில் இறுதியில் முடிந்து போய் அடுத்து 300 ஆண்டுகள் களப்பிரர் ஆள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த சோழப் பேரரசுக்குள் உருவான குடும்பச் சண்டைகளும், மூவரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாக அடுத்தவர்கள் உள்ளே வர காரணமாக இருந்தவர்களும் நம் அற்புத தமிழ் மன்னர்களே?  

இதைப் போலவே சங்ககால புலவர்கள் பாடிய பாடல்களில் உள்ள தற்புகழ்ச்சி, உயர்வுநவிழ்ச்சி அணிகள் போன்றவற்றை படிக்கும் போது கேட்பவர்களுக்கே கூசுமளவிற்கு இருக்கும். இன்றைய அரசியல் வரைக்கும் இப்படித்தானே இருக்கிறது.  ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடுவோம். இதில் பின்னால் வரப்போகும் ஆங்கிலேர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் வாழ்ந்த பெருங்கவிஞர் இராமச்சந்திரக் கவிராயர் எழுதியுள்ள கவிதையை படித்த போது இந்த பழம்பெரும் புலவர்கள் சங்ககாலத்தில் மன்னர்களை உயர்த்தி எப்படி பாடல்கள் பாடியிருப்பார்கள் என்பதை உத்தேசமாக நினைத்துப் பார்கக முடிகின்றது.

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறிய மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்.
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன். சூம்பல் தோளை
வழங்கா தகையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்
யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே.

நாம் இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கக்கூடிய இராஜராஜசோழன் ஆட்சியை விட இந்த பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தை புராதன சிறப்பு மிக்கது என்கிறார்கள்.  அதிலும் கடைச்சங்க பாண்டியர்கள், இடைச்சங்க பாண்டியர்கள், இது போக பிற்கால பாண்டியர்கள் என்று வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைந்துள்ளனர்.  நாம் மொத்தமாக உள்ளே புகுந்து வெளியே வர வேண்டுமென்றால் நாமே நமக்கு சங்கூதிக் கொள்வது போல் ஆகிவிடும்.

மானவர்மன்.

இந்த பாண்டிய மன்னன் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் முற்றிலும் புதிய பாதையை நோக்கி நகரத்தொடங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு தங்களின் எழுச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பக்கங்களை எழுதத் தொடங்கினர். பாண்டிய மன்னர்களின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக பல்லவர்களுடனும் மோதி தங்களின் ஆளுமையை பெருக்கிக் கொள்ளத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர மன்னனை வெற்றி கொண்ட பிறகே பாண்டிய மன்னர்களின் பொற்காலம் தொடங்கியது. 

ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் அரிகேசரி மற்றும் ராஜசிம்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் உள்ளேயிருந்த பல குறுநிலமன்னர்களின் செட்டைகளை அடக்கி ஒடுக்கி தாங்களை வலிமையாக்கிக் கொண்டனர். ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தான் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் (815 முதல் 862) பல்லவ பேரரசுடன் மோதிய போது மற்றொரு ஆச்சரியமும் உருவானது.  அருகேயிருந்த ஈழத்தில் தமிழ்நாட்டு அரசியல் வேர்விடத் தொடங்கியது. எல்லாவகையிலும் எழுச்சி பெற்ற பாண்டியப் பேரரசு முதல் முறையாக ஈழத்தில் படையெடுத்துச் செல்ல அங்கேயிருந்த ஸேன மன்னன் (833 முதல் 853) துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடிக்க அநுராதபுரத்தில் கிடைத்த செல்வமும் வெற்றியுமாக தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான்.  இதுவே தான் இராஜராஜ சோழன் காலம் வரைக்கும் நடந்தேறி வந்துள்ளது.  செல்லும் இடங்களில் தங்களின் கொடியை பறக்கவிட வேண்டியது.  முடிந்தால் சார்பாளர்களை நியமிக்க வேண்டியது.  முடிந்தது கதை. 

மன்னர்களைப் பொறுத்தவரையிலும் இதுவொரு மற்றொரு மணிமகுடம்.  

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு முடிவுக்கு வர எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெற்ற காரணங்களில் ஒன்று உண்டு.  ?ஈழத்துக்கு போர் எடுத்து சென்று வென்றது.  பாண்டிய மன்னர்களின் போர் உக்கிரத்தை தாங்க முடியாமல் தப்பிச் சென்ற மன்னனை கண்டு காணாமல்  தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தது. தங்களிடம் தோற்றவன் நெஞ்சம் முழுக்க வஞ்சகத்துடன் இருப்பானே என்பதை மறந்து போக இதுவே இவர்களின் குடும்பத்தில் குளறுபடி உருவாவது வரைக்கும் வந்து நின்றது.. 

முறைப்படியான போரில் வெற்றி கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த ஈழத்திலிருந்த மன்னன் இரண்டு காரியங்கள் செய்தான்.  ஒன்று பல்லவ அரசுடன் இணைந்து பாண்டியப் பேரரசை எதிர்த்தது.  இது முறைப்படியான போர்.  முதுகுக்குப் பின்னால் இருந்து செய்த மற்றொரு காரியமும் ஒன்று உண்டு. இந்த தந்திரக்கார கூட்டணிப் படையினர் பாண்டிய மன்னனின் மகனாகிய வரகுணபாண்டியனை சுதியேத்தி அப்பாவுடன் மோத வைத்தது. அப்பாவுடன் மோதி தோற்ற மகன் ஈழத்துக்கு சென்றான்.  இது போதாதா?   அடுத்த திட்டம் உருவானது.

ஈழத்து ஸேன மன்னன் படைகள் (853 முதல் 857) பாண்டிய நாட்டின் தென் பகுதியான மதுரையை நோக்கி முன்னேறின. வடக்கில் வந்த பல்லவர் படைகள் சுற்றி வளைக்க முடிவுக்கு வந்தது. போரில் வீரம் ஜெயிக்குமா? விவேகம் ஜெயிக்குமா?  ஜெயித்தது விவேகமே?

சிங்கள மன்னன் படை மகன் ஸ்ரீ வரகுண பாண்டியனைப் புதிய பாண்டிய மன்னனாக (862) முடிசூட்டி அழகு பார்த்தது.  அப்பா புதைத்த மண் காய்வதற்குள் மகன் அரசாட்சியில் அமர்ந்த காட்சியை காணும் போது 21 ஆம் நூற்றாண்டு வரைக்கும் சமகால அரசியலும் இப்படித்தானே இருக்கிறது.

திருப்புறம்பியத்துப் போர்.

பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கு நடந்த போர். இந்த போரின் மூலம் தான் பல்லவர்களின் ஆட்சியும், பாண்டியர்களும் வலுவிழக்கக் காரணமாக இருந்தது. கொல்லைப்புற வாசல் வழியாக வந்த பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனை தோற்கடிக்கப்பட்டான்.  போரில் பல்லவ மன்னன் அபராஜிதன் வெற்றிபெற்றுருந்தாலும் இந்த போர் தான் சோழர்கள் தங்களது பாதையை உருவாக்கிக் கொள்ள காரணமாகயிருந்தது.  இந்த போரில் பல்லவர்களுக்கு உதவிய முதலாம் ஆதித்த சோழன் சும்மாயிருப்பாரா? ஆதித்த சோழன் பல்லவர்களுக்கு தண்ணீர்காட்டி அவர்களை தோற்கடித்து தொண்டை மண்டலத்தை சோழ மண்டலமாக மாற்றினான்.  இவனுக்குப் பிறகு வந்த (907) முதலாம் பராந்தகச் சோழன் நான்கு புறமும் உள்ள எதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவன்.  தெற்கில் பாண்டியர், சேரர், வடக்கில் ராஷ்டிகூடர்.  இத்துடன் மற்றொரு புண்ணியவான் ஈழத்தில் உள்ள சிங்கள மன்னன்.  ஆனால் ஆச்சரியம் இத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக் கொண்டுருந்ததை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஆனால் இன்று பெருமையாய் நாம் பேசிக் கொண்டுருக்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜகேசரி அருமொழிவர்மன் சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர்.  ஆனால் இவர் ஆட்சிப் பொறுப்பு (985) வருவதற்குள் இவருக்கு முன்னால் வலிமையற்று இருந்தவர்கள் உருவாக்கிய கரடுமுரடான பாதைகள், குடும்ப குழப்பங்கள், மர்மமான இறப்பு, குடும்ப அரசியலால் உருவான சூழ்ச்சிகள் போன்றவை அனைத்தும் சரித்திரம் முழுக்க இருக்கிறது.

கடந்த ஆறு நூற்றாண்டுகளாக இருட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருந்த சோழர்கள்  ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறையூர் பகுதியிலிருந்த தங்களது எழுச்சிப் பயணத்தை தொடங்கினர்.  இங்கு ஆதிக்கம் பெற்ற விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி இந்த நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் விதையை ஊன்றினான். 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் என்றும் பழைய மன்னர்களைப் பற்றியும் நாம் பாடப்புத்தகத்தில் படித்து வந்துருப்போம். பாண்டிய மன்னர்களை பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டுப் போகலாம்,

ஆனால் இந்த பாண்டிய சாம்ராஜ்யங்களுக்கு உள்ளே போகப் போக புதைபொருள் ஆராய்ச்சியாளர்களே சோர்ந்து போகும் அளவிற்கு வண்டி வண்டியாக விசயங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. சோழர்களுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாண்டிய மன்னர்கள் (கிபி 1200 முதல் 1300 வரை) வீழ்ச்சியடைய முக்கிய காரணம் குடும்பச் சண்டைகளே முக்கியமாக உள்ளது.  இதுவே தமிழகத்தில் அந்நிய படையெடுப்பாளர்களை பாக்கு வெத்திலை வைத்து வரவேற்காத குறையாக உள்ளே அழைத்து வந்தது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் இன்று வரையிலும் தமிழன் என்றால் ஒற்றுமை என்பது காததூரம் என்பது போலத்தான் இருக்கிறது.  அப்புறமெங்க இன உணர்வு, மானம், மரியாதை மற்ற விசயங்கள் எல்லாம்?

பதினைந்தாம் நூற்றாண்டின் போது இந்த பாண்டிய மன்னர்கள் நம்முடைய இராமநாதபுரம் மாவட்டம் என்றொரு பகுதியை எப்படி ஆண்டுருப்பார்கள்?

24 comments:

 1. தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், கடவுள் கொள்கை என அனைத்திலும் பண்பட்டவர்கள். நாகரீகத்தை தன்னகத்தே கொண்டவர்கள்.

  இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியது. இதற்கு உலக அரங்கில் நிச்சயமாக ஒரு தனிநாடு அங்கீகாரம் தேவை.

  இது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை.

  http://tamilmalarnews.blogspot.com/2011/01/blog-post_1633.html

  ReplyDelete
 2. வரலாற்று விசயங்களை பாடப்புத்தகங்களில் பொத்தாம் பொதுவாகவே படித்துள்ளோம். அறியப்படாத விசயங்கள் பல உள்ளன! அறியப்பட்டவைகளிலும் பல பாதுகாக்கப்படாமலேயே உள்ளன!

  ReplyDelete
 3. சரியான அலசல். எனக்குத் தெரிந்து இராமநாதபுரம் சேதுபதிகள் மதுரை அரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாகததான் ஆண்டு வந்துள்ளனர்.

  ReplyDelete
 4. தலைப்புதான் நெஞ்சை நெருடுகிறது...உள்ளமையாய் இருந்தாலும்!

  ReplyDelete
 5. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் இன்று வரையிலும் தமிழன் என்றால் ஒற்றுமை என்பது காததூரம் என்பது போலத்தான் இருக்கிறது. அப்புறமெங்க இன உணர்வு, மானம், மரியாதை மற்ற விசயங்கள் எல்லாம்?


  ......யோசிக்கிறேன்....

  ReplyDelete
 6. வாசிச்சு சொன்ன விஷயத்தை அறிஞ்சதைவிட தலைப்பையும் சாமி கும்பிடுற ஹிட்லரையும் ரசிச்சேன்.எங்க காணோம் அவரோட சிவப்புச் சால்வை.ஜோதிஜி எடுத்திருந்தா குடுத்திடுங்க !

  ReplyDelete
 7. நிறைய விபரங்களை தொகுத்து கொடுத்திருக்கீங்க. இப்படி மட்டும் வரலாறு சொல்லிக் கொடுத்தா அந்த வகுப்பு எப்படா வரும்னு கதை கேக்கா பசங்க ரெடியா இருக்கா மாட்டாங்க.

  ஆமா, கடைசி புகைப்படத்தில இருக்கவனுக்கும் அந்த கடவுளோட அருளாசி தேவைப்படுதே - வேண்டுதல் என்னவா இருக்கும், அந்த வேண்டுதலை நிறைவேத்தி வைச்சா அது என்ன மாதிரியான கடவுளப்போய்...

  ReplyDelete
 8. உண்மைதான் தெகா. இன்று புதிதாக வந்துள்ள தங்கராசு பதிவையும் பாருங்க. அவரும் மண் மதிக்கும் மணக்கும் விசயங்களைத்தான் எழுதிக் கொண்டுருக்கிறார். சில தலைப்புகள் தாமதமாகத்தான் சேரும். ஈழ தொடரிலும் தாமதமாகத்தான் போய் சேர்ந்தது. பழமைபேசி கூட இப்படித்தான் மறைமுகமாகச்சொல்லியுள்ளார்.

  ReplyDelete
 9. பொறுங்கோ ஜோதிஜி, இரண்டு முறை தான் முழுதா வாசிச்சேன். இன்னும் மூன்று தரம் படிச்சாத்தான் தமிழ் மன்னர்களின் வரலாறு புரிந்து விமர்சனம் போடமுடியும். படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 10. தமிழக வரலாற்றுத் தகவல்களிலும் கலக்குறிங்க. பாராட்டுகள்

  ReplyDelete
 11. மிக எளிமையாக இருக்கிறது. பல புத்தகங்களை புரட்டி தெரிந்து கொள்ள வேண்டியதை ஒரு இடுகையில் அறிய முடிகிறது.

  ReplyDelete
 12. எளிமையாக விளக்கியுள்ளீர்கள். வரலாறு படிப்பதில் ஒரு தனி சுவாரசியம் தான்.

  ReplyDelete
 13. பதிவின் விசயத்தை விட படம் தான் பாதிக்கிறது. தெகா கேட்டதை போல என்ன வேண்டுதலுக்காக அங்கே நிற்கிறார் தெரியவில்லை.

  வரலாற்று செய்திகளில் நமக்கிருந்த தொடர்புகள் விலகி தூரமாய் நிற்பதால் உள்வாங்கி கொள்வதில் சிரமங்கள் உண்டாகிறது.

  பின்புலத்தில் உங்களுடைய உழைப்பு நன்றாகவே தெரிகிறது அன்பின் ஜோதிஜி வாழ்த்துகள் வணங்குகிறேன்.

  ReplyDelete
 14. மிகவும் ஆராய்ச்சி செய்து செய்திகளை அளித்திருக்கும் விதம் அருமை.ராமச்சந்திரக் கவிராயரின் கவிதை இன்றைய ’சுக்ரீவன்’ களுக்கும்பொருந்தும்!
  பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. நல்ல பதிவு. சிந்திக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. என்ன தலைவா திடீர்னு சரித்திரக் கதைகள் பக்கம் திரும்பியாச்சு, இலங்கை புத்தக வேலை முடிந்ததா? சரித்திர இடுகையில் கடைசி படத்தைப் பார்த்தால் ராஜபட்சே சாமி கும்புடறமாதிரி படமா இருக்கேன்னு பார்த்தேன் - எவ்வாறிருப்பினும் தொடும் விசயத்தை ஆழமாய் எழுதும் தன்மைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. தெகா கமெண்டுக்கு ஒரு Like.

  ReplyDelete
 18. நல்ல துவக்கம். தொடருங்கள் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 19. ஆண்ட கதையை தோண்டி எழுதுறதுக்கும் ஒரு பொறுப்பு வேணும். அது உங்ககிட்ட இருக்கு. நல்லாத் தோண்டுங்க. :-)

  ReplyDelete
 20. இரண்டாவது தடவையும் படித்துவிட்டேன்.

  ReplyDelete
 21. தமிழ்மணம் விருதுகள் 2010-இல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. 16 மார்ச் 2019 அன்று காமரசவல்லி கார்க்கோடேஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவில் நீங்கள் தந்த இந்த இணைப்பைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். ஓர் அரிய ஆய்வுக்கட்டுரையாக அமைந்துள்ளது. நீங்கள் கூறுகின்ற பல கருத்துகளை ஏற்கிறேன். பல செய்திகளை அறியத்தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.