ஒரு பக்கம் அரைப்பக்கம் தொடங்கி இன்று குறுந்செய்தி வரைக்கும் சகல துறைகளிலும் விளம்பரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக திரைப்பட, அரசியல், ஆன்மீக பிரபலங்களின் விளம்பர மோகம் நாம் அறிந்ததே. சமகாலத்தில் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களை இஷ்டம் போல் உருவகப்படுத்திக் கொண்டு ஆட்டம் காட்டிக் கொண்டுருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் கலாச்சாரத்தின் பொக்கிஷமாக விளங்கிக் கொண்டுருக்கும். தஞ்சை பெரியகோவிலைப் பற்றி ஏதேவொரு வகையில் நீங்கள் கொஞ்சமாவது கேட்டுருக்கக்கூடும். அல்லது தஞ்சாவூர் சென்று பார்த்துருக்கக்கூடும். ஈழம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்ட போது ஆங்கிலேயர்களுக்கு முன் இந்த தீவு எப்படி இருந்தது என்று பல புத்தகங்கள் வாயிலாக படித்துக் கொண்டு வந்த போது பிரமிப்புக்கு மேலே வேறொரு வார்த்தைகள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பது போல நம் தமிழ் மன்னர்களின் வீரம் எனக்கு வியப்பூட்டியது. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுக் காவியங்களைப் படைத்த மன்னனின் இன்றைய நிலை?
ஆனால் தமிழர்களின் சரித்திரத்தில் பெருமை மிக்க ஒரு மன்னனை நாம் எந்த அளவிற்கு பெருமைபடுத்தியிருக்கிறோம் என்பதை இந்த காணொளியில் பாருங்கள். இதை பார்த்து முடித்து முடிக்கும் போது இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களின் இறவா புகழ் குறித்த அறியாமையை தயவு செய்து உங்கள் எண்ணத்தில் இருந்து சற்று ஒதுக்கி வைத்துவிடுங்கள். காரணம் தீர்மானிக்கப்பட்ட காலம் கொடுக்கும் தண்டனை மிகக் கோரமானது. ஆனால் அதுவரைக்கும் நாம் இருப்போமா என்பது தெரியாது?