ஊரில் நடக்கு விசேடங்களில் கலந்து கொள்ளும் போது உள்ளே நுழைந்ததும் முக்கியமான நபர்களிடம் முகத்தைக் காட்டி விட்டு சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்று விடுவதுண்டு. என்னைத் தேடிக் கொண்டு வருபவர்களிடம் எப்போதும் அம்மையார் சமையல்கட்டு எங்கே இருக்கோ? அங்கே போய்ப் பாருங்கள்? என்பார்.
காரணம் உள்ளே நடக்கும் விவாதங்கள், வாக்குவாதங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், விட முடியாத கொள்கை கொண்டவர்கள், மாற விரும்பாத மனிதர்கள், இன்னமும் 1947 க்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எவரையும் புண்படுத்த வேண்டிய அவசியமிருக்காது.
ஆனால் இந்த முறை வரவேற்பு மேஜையின் முன்பே கட்டாயப்படுத்தி அமர வைத்து விட்டார்கள். தட்டில் இருந்த பாதிக் கல்கண்டு, பழங்கள், காணாமல் போவதைப் பார்த்து மகள் நீங்க உள்ளே போயிடுங்க. இந்தப் பக்கமே வராதீங்க என்று புகைப்படம் எடுத்து என்னை அனுப்பி வைத்து விட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்கள் சமையில் கலக்கோ கலக்கு என்று தூள் கிளம்புகின்றார்கள்.
அறந்தாங்கி தாண்டி கீரமங்கலம் பட்டுக்கோட்டை வரைக்கும் மட்டன் சாப்பாட்டுக்கு சொத்தே எழுதி வைத்து விடலாம் போலிருக்கும். அதே போலப் பேரையூர், நச்சாந்துபட்டி பக்கம் சின்னவெங்காயம் முருங்கைக்காய் போட்டு பொங்கலுக்குச் சம்பார் வைத்திருந்தார்கள். யார் என்று கேட்டு சமையல் கட்டுப் பக்கம் சென்றேன். சமையல் செய்பவர்கள் அனைவரும் 25 வயதுக்குள் இருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. யார் சம்பார் வைத்தது என்று கேட்டு அவருக்குக் கைகுலுக்கி நூறு ரூபாய் தாளை வைத்துக் கொள் என்றேன்.
மிரண்டு போய்விட்டான்.
உங்க வார்த்தையே போதும் அண்ணே என்றான்.
•••••••••••••••••••••••••••
2009 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் முதல் முறையாக வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதத் தொடங்கினேன். என் எழுத்துப் பயணத்திற்கு 10 வது ஆண்டு தொடங்குகின்றது. 800 பதிவுகளை கடந்து வந்துள்ளேன்.
முதல் பதிவில் விமர்சனம் செய்த சுந்தர் நேற்று வரைக்கும் என் எழுத்தை படித்துக் கொண்டிருக்கின்றார் என்பதே எனக்குப் பெருமையாக உள்ளது. இருவரும் கருத்து ரீதியாக எதிரெதிர் துருவமாக இருந்தாலும் கூட. நன்றி சுந்தர்ராமன்.
மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நூலுக்கான வாசகர்களும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுக்கான வாசிப்பாளர்களும் அறிமுகம் ஆகி உள்ளனர்.
எழுதத் தொங்கியது முதல் இன்று வரைக்கும் யார் யாரோ வந்தார்கள்.... சென்றார்கள். நெருங்கிய தொடர்பிலும் இருக்கின்றார்கள். முதல் பதிவு முதல் இன்று வரையிலும் வாசிக்கும் நண்பர்களும் உள்ளனர்.
விமர்சனப் பெட்டியை இன்று வரையிலும் பூட்டி வைத்தது இல்லை.
சமூகத்தைப் பாதிக்கும் மனிதர்களின் உண்மையான குணங்களை எப்போதும் விமர்சிக்க தவறியதே இல்லை.
ஊருக்கு ஒவ்வொருமுறையும் செல்லும் போது நான் சந்திக்கும் உறவினர்களின் ஆரோக்கியம் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது, என்னுடன் பணிபுரிபவர்கள், உடன் பழகும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பார்க்கும் போதும் நான் இன்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வாழ்வதற்கும் காரணம் என் எழுத்துப் பயணம் மட்டுமே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. மனதில் உளைச்சல் இல்லாத போது உடலெங்கும் ஆரோக்கியம் நீடிக்கும் என்பது நான் கண்ட உண்மையாகும்.
இன்று வரையிலும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பர் இராஜராஜன் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
தொடர்பில் தொடர்ந்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

(முற்றும்)
நாட்டு நடப்பு மற்ற பதிவுகள்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய அவல நிலை
நீட் என்பது உருவாக்கிய வணிக கொள்ளை
தமிழக கல்வியில் உருவான பாடத்திட்ட மாற்றங்கள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வானளாவிய அதிகாரங்கள்
ப.சிதம்பரம் என்றொரு அதிபுத்திசாலி
காலா திரைப்பட விமர்சனம்
தந்தை பெரியார் என்றும் தேவைப்படுவார்?
வைகோ உணர்ச்சிமயமானவர்
ரஜினி என்ற ஆபத்து
தமிழகம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் போர்
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்
சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் புத்தக விமர்சனம்
நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா
திமுக அதிமுக அடிப்படை வித்தியாசங்கள்
பிஎஸ்என்எல் அழிக்கப்பட்ட வரலாறு