கடந்த வாரம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் பேச்சின் ஊடாக நான் புரிந்து கொண்ட விசயங்கள், இதன் மூலம் வலைபதிவில் செயல்படும் நண்பர்கள் தெரிந்து கொள்வதன் பொருட்டு இதனை இங்கே எழுதி வைக்கத் தோன்றியது.
குடும்பம், அடிப்படைக் கடமைகள் போன்றவற்றை நிறைவேற்றிய பின்பு, நிறைவேற்ற முடியாமல் இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இயல்பாகத் தோன்றுவது, எதிர்பார்ப்பது அங்கீகாரம்.
அது பலருக்கும் சொந்த வீடு ஒன்று வேண்டும் என்பதில் தொடங்கிப் பரந்து விரிந்து அவரவர் வாழ்நிலை பொறுத்து மாறுபடுகின்றது. 50 வயது கடந்து வாழ்கின்றவர்களுக்கு நம்முடைய தனிப்பட்ட திறமைகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும் காலகட்டமும் இதுவே. ஆனால் எப்படிச் செயல்படுத்துவது என்பதில் தான் குழப்பம் உருவாகின்றது. கற்றுக் கொள்ளக் காலம் கடந்து விட்டதோ? என்ற எண்ணமும் உருவாகி விடக் குழப்பமும் மனதில் உருவாகின்றது.


