2020 மற்றும் 2021 ஆண்டுகள் இயற்கை கொரோனா என்ற ஆசான் மூலம் அனைவர் வாழ்க்கையிலும் பல பாடங்களை கற்றுக் கொடுத்தது. அது விட்ட குறை தொட்ட குறையாக 2022 வரை தொடர்கின்றது. 2023 ஆம் ஆண்டு எனக்கு நல்ல விசயங்கள் நடக்கப் போகின்றது என்பதற்காக ஆரம்ப கட்ட சமிக்ஞைகள் இப்பொழுதே தெரிகின்றது.
முழுமையடைந்த பின்பு தெரிவிக்கின்றேன்.
அது என் வாழ்நாளுக்குப் பிறகும் என் பெயர் நிலைத்து இருக்கக்கூடியதாக இருக்கும். என் எழுத்துலகில் நான் உழைத்த உழைப்பைப் பற்றிப் பேசக்கூடிய விசயமாக இருக்கும். என் எழுத்துலகில் மணி மகுடமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.
இந்த வருடம் பிப்ரவரி 6 அன்று தொடங்கினோம்.
அண்ணாமலை அவர் ஹோப் என்ற சேனலில் பேசத் தொடங்கினேன்.
ஜூன் மாதம் 26 ந் தேதி வரைக்கும் மொத்தம் 52 தலைப்புகளில் பேசி உள்ளோம். 15 லட்சம் பேர்கள் பார்வையாளர்கள். பல ஆயிரம் விமர்சனங்கள். பொருட்படுத்தக்கூடியவை சில ஆயிரங்கள்.
என்னை நீங்கள் வெறுக்கவும் விரும்பவும் இணைய உலகில் அதிகம் செய்துள்ளேன் என்றே நினைக்கின்றேன்.
AOH - நான் பேசிய தலைப்புகள் (முதல் தொகுப்பு) பிப்ரவரி / மார்ச் 2022
AOH - நான் பேசிய தலைப்புகள் (இரண்டாவது தொகுப்பு) April 2022
மொத்தம் 50 மாணவியர்கள் அரசு பள்ளிக்கூடத்தில் இலவச நீட் பயிற்சி பெரிய செலவு செய்து வழங்கிக் கொண்டு இருக்கின்றோம். வருகின்ற ஜூலை 17 நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவு வந்ததும் எத்தனை பேர்கள் மருத்துவர்களாக மாறியுள்ளனர் என்பதனை தெரிவிக்கின்றேன்.
இரண்டு திருடர்களை மீறி பாஜக என்ற கட்சி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளே நுழைய வாய்ப்பே இல்லை என்பவர்களுக்கு மட்டும் இந்த இணைப்பு உதவும்.
திருவாரூர் முதல் கடைசியில் (26 ஜூன்) சென்னை வரை மோடி அவர்களின் எட்டாண்டு கால சாதனை குறித்து திரு. அண்ணாமலை அவர்கள் மாநாடு போன்ற கூட்டத்தில் பேசிய காட்சிகளை, உரைகளை, கூட்ட வலையொளியை 2022 மாநாடு என்ற இழையில் தொகுத்துள்ளேன். ஓய்வு நேரத்தில், உடற்பயிற்சி நேரத்தில், பயண நேரத்தில் இதில் உள்ள தொடர்ச்சியை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம். விரும்பலாம். வெறுக்கலாம். யோசிக்கலாம். ஆச்சரியப்படலாம்.
நான் கடந்த ஒரு வருடமாக எழுதுவதைத் திரும்பவும் இங்கே எழுதுகிறேன். என் பேரன் பேத்திகள் பிறக்கும் நேரத்தில் இங்கே இவர்கள் இருவரும் அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள். அந்த நாள் விரைவில் நடக்கும் என்றே நம்புகிறேன்.
1 comment:
உங்கள் முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்
Post a Comment