Sunday, July 25, 2021

வயது 13

தேவியர் இல்லம் 12 ஆண்டுகள் முடிந்து 13 ஆம் ஆண்டில் தொடங்குகின்றது. உடன் பயணிக்கும், ஆதரிக்கும், விமர்சிக்கும் அனைவருக்கும் நன்றி.


2009 ஜூலை மாதத்தில் எழுதத் தொடங்கிய போது எத்தனை ஆண்டுகளுக்கு நம்மால் எழுத முடியும்? என்பதனைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினேன். ஆச்சரியமாக இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் என்பது தமிழ் மாதங்களில் ஆடி உடன் தொடர்புடையது. எனக்கு இந்த மூன்று மாத வார்த்தைகளும் பல விதங்களில் நெருக்கமானது.

கள்கள் பாலர் பள்ளி முடித்து முதல் வகுப்புக்குள் நுழைந்து இருந்தார்கள். இப்போது 12 ஆம் வகுப்பு முடித்து வெளியே வரும் போது சிறப்புடன் வந்து கல்லூரிப் பயணத்தைத் தொடங்க இருக்கின்றார்கள்.

லவச மின்னூல், அமேசான் கிண்டில், யூ டியூப், ஜும் கலந்துரையாடல், சொந்தக் கருத்து சார்ந்த கலந்துரையாடல், கட்சி சார்ந்த கலந்துரையாடல்கள், கூகுள் உருவாக்கியிருந்த பல்வேறு தொழில் நுட்பம் வாயிலாக நடந்த உரையாடலில் தொடங்கி அது மறைந்து, மாறி, கடந்து ஃபேஸ்புக் எழுத்து, ட்விட்டர் எழுத்து என்று 12 ஆண்டு அனுபவம் என்பது கலவையானது. 

வ்வொரு மாற்றத்தையும் புரிந்து கொண்டேன். ஏற்றுக் கொண்டுள்ளேன். பயணித்துள்ளேன். இது வரையிலும் இணையத்தில் எவ்வித சிக்கல்களும் உருவாகவில்லை. காரணம் அவர்களை அருகே நெருங்கவிடுவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பது மட்டுமே. 

நான் கடந்த 12 வருடங்களில் மாறி மாறி கடந்து வந்துள்ளேன். உண்மைகளை உரக்கச் சொல்லி உள்ளேன். அது வாசிப்பவர்களுக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பதனைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதி உள்ளேன்.

37க்கு மேற்பட்ட அமேசான் மின்னூல்கள் வெளியிட்டு உள்ளேன்.  (ஈழ வரலாறு, தமிழக அரசியல் வரலாறு, திருப்பூர் வரலாறு போன்ற அனைத்து மின் நூல்களும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்)

செப்டம்பர் 7 2020 முதல் என் தனிப்பட்ட சொந்த விருப்பத்தின் அடிப்படையில் யூ டியூப் பயணம் தொடங்கியது. இதில் 50 க்கும் மேற்பட்ட குரல் பதிவுகளை பதிவு செய்து உள்ளேன்.

ங்கர் எஃப் எம் என்ற செய்தியோடை மூலம் 50 க்கும் மேற்பட்ட குரல் பதிவுகளை பதிவு செய்துள்ளேன்.  இதில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய சுதந்திர கால நிகழ்வுகள் முக்கியமானது.

ஃபேஸ்புக் மூலம் பெருங்கூட்டத்தை, கட்சி சார்ந்த சாராத ஆதரவாளர்களை உருவாக்க முடிந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் எழுதக் கூடிய கருத்துக்களை சில லட்சம் பேர்களைச் சென்று  சேர்க்க  முடிந்துள்ளது. வாய்ப்புள்ளது.

ட்விட்டர் மூலம் அரசாங்க அதிகாரிகளிடம்  இங்கு நான் பார்க்கும் கேட்கும் பிரச்சனைகளை அவர்கள் பார்வைக்கு உடனுக்குடன் கொண்டு செல்லும் கருவியாக பயன்படுத்தி வருகிறேன்.  இத்துடன் கட்சி ஆதரவுத் தளத்தில் அதி தீவிரமாக தினமும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் என் ட்விட்டர் ஐடியை பயன்படுத்தியும் வருகின்றார்கள். 

கருத்தியல் ரீதியான எதிரிகளும், ஆதரவாளர்களும் சம அளவில் உள்ளனர். ஆனாலும் சமூகத்தின் மனசாட்சியாகவே எழுத விரும்புகிறேன். என் பார்வையை என் விருப்பத்தை என் நோக்கத்தை அப்படியே பிரதிபலிக்கின்றேன்.

இவற்றை இங்கே பதிவு செய்வதற்கு ஒரே காரணம்

என் சிந்தனைக்கு மாற்றுக் கருத்து உள்ளவர்களை மாற்ற வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை.  என் வேலை என்னவோ அதை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறேன். இடைவிடாமல் சோர்வு இல்லாமல் என் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறேன். வெட்டித்தனமான உரையாடல்கள் முதல் வீணான விவாதங்கள் வரைக்கும் எதிலும் கலந்து கொண்டதே இல்லை.

என்னை என் நேரத்தை நான் மதிக்கின்றேன்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சாதனைகள் தொடர வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

மென்மேலும் உயர வாழ்த்துகள்.

K.S.Muthubalakrishnan said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மேலும் தொடரட்டும் உங்கள் பதிவுகளும் சாதனைகளும்.

மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கிரி said...

வாழ்த்துகள் ஜோதிஜி.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் பல தகவல்களைத் தொடர்ந்து பகிர வேண்டுகிறேன்.

நிச்சயம் உங்கள் தளத்தால் பலர் பயன்பெற்று இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ந்து எழுதுவது என்பது அனைவராலும் இயலாத ஒன்று.

நான் கூறுவது சமூகத்தளங்களில் எழுதுபவர்களை அல்ல, இது போன்ற பெரிய கட்டுரைகளாக எழுதுபவர்களை.

காணொளியில் வெளியிட்டாலும் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். ஏனென்றால், என்னைப் போன்ற சிலர் இன்னும் படிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி. ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி. உங்கள் மகத்தான உதவிக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். சந்திப்போம்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி