இதனை முழுமையாகப் பார்த்து முடித்த போது வேதனையும் சிரிப்பும் கலந்தே வந்தது.
இணையம் எங்கும் பாண்டே குறித்த எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒருவரைப் பேட்டி எடுப்பதற்கு முன்பு எந்த அளவுக்கு அவரும் அவர் குழுவினரும் தயார் நிலையில் வருகின்றார்கள் என்பதனை கவனிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது.
புள்ளி விபரங்கள், குறுக்குக் கேள்விகள், அதற்குப் பதில் வந்தால் எப்படிச் சமாளிக்க வேண்டும்? எப்படித் திசை திருப்ப வேண்டும்? எப்படித் தடுமாற வைக்க வேண்டும்? போன்ற அனைத்தையும் கவனிக்கும் போது சற்று வியப்பாகவே உள்ளது.
அவர் யாருக்காகப் பரிந்து பேசுகின்றார் என்பது இங்கே முக்கியமல்ல. அவர் பரிந்து போதும் போது அதை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் பாண்டே முன்னால் உட்கார்பவர்களுக்கு இருக்குமா? என்று தெரியவில்லை.
சகல விதங்களிலும் சரியான நபர் என்று நான் எதிர்பார்த்த வைகோ கூடப் பாண்டே முன்னால் தடுமாறத்தான் செய்கின்றார். வெற்றி பெற வேண்டும். அல்லது வெற்றி பெறப் போகின்றவர்களைத் தடுமாறச் செய்ய வேண்டும்? என்ற இரண்டு கொள்கைக்குள் நிற்கும் பாண்டேவின் கொள்கை நாம் எதிர்மறையாக, நேர்மறையாக எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
நீ என்ன வேண்டுமானாலும் கேள். எப்படி வேண்டுமானாலும் குறுக்கிட்டுக் கொள். நான் சொல்ல வந்ததைச் சொல்லியே தீருவேன் என்ற பிடிவாதம் கொண்டு பாண்டே வை வெல்லப் போகின்றவர்கள் யார் என்பதனை ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
இதில் ஓரளவுக்கு வென்றவர் ஆ. ராசா மட்டுமே. அலைக்கற்றைத் தொழில் நுட்பம், அதன் பின்புலம் குறித்து ஓரளவுக்கு மேல் ஆ. ராசா வுடன் பாண்டே வால் பேச முடியவில்லை என்பதே முக்கியமாக இருந்தது.
இந்தக் காணொளியில் வைகோ தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, பாண்டே சாமர்த்தியமாகத் திசை திருப்பி விட்ட பாதிப்பில் எப்போதும் போலப் பொதுக்கூட்ட உணர்ச்சிவசப்பட்டு முடித்த நிலையில் பேசுகின்றார். இவர் எதார்த்த அரசியல்வாதி அல்ல என்பதனை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார்.
இப்போது வைகோவிற்கு 75 வயது ஆகின்றது என்று நினைக்கின்றேன். ஆனால் இன்னமும் உணர்ச்சி கடந்த நிலையில் இருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை என்பதே ஆச்சரியமாக உள்ளது.
காலம் முழுக்கத் தன்னை உள்ளே தூக்கி வைத்து விட அரச பயங்கரவாதத்திற்கு அவரே வாசல் கதவை திறந்து வைத்துள்ளார் என்பதற்கு இந்தப் பேட்டியே சாட்சி.
6 comments:
உண்மைதான்.
அவரது அபிப்பிராயமவரைகாலம் முழுதும் உள்ளே வைக்குமென்றால் அது அவருக்கு தெரிந்தௌ தயாராய்த்தான் இந்த பாண்டே எதிராளியை டிசை டிருப்ப முன்வருகிறார் ஒரு வேளை அதுடான் அவரதுபலமோ
ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி இருக்குது ``Only dead fish go with the flow``. திரு.வைகோ ஒன்றும் டெட் ஃபிஷ் அல்ல. கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தூய்மையான அரசியலுக்குச் சொந்தக்காரர் இந்த திரு.வைகோ உயிரோட்டமுடன் இருப்பதில், உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கு? பணத்துக்காக அதிகாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் அரசியல்வாதிகள் முன்பு திரு.வைகோ மாசறு பொன்னும், வலம்புரி முத்தும்தான்.
அவரது அபிப்பிராயம் அவரை காலம் முழுவதும் உள்ளே வைக்கும் என்றால் அது அவருக்குத் தெரிந்து தயாராய் தானே இருப்பார் இந்த பாண்டே எதிரியை திசை திருப்ப முன் வருகிறார் ஒரு வேளை அதுதான் அவரது பலமோ
ஓட்டரசியல் என்பது ஒரு விதமான சமரசங்களுக்கு உட்பட்டு இருக்கக்கூடியவர்களால் மட்டும் வெல்லக்கூடிய வாய்ப்பதிகம்.
கேள்வி கேட்பதும் வரும் பதிலை வைத்து குறுக்கு கேள்விகள் உருவாக்குவதும் ஒரு தனிக்கலை.
Post a Comment