Wednesday, June 19, 2013

கப்பு தூக்கிய கதை

அவரை டிகே சார் என்று தான் அழைப்போம். டி.குமரேசன் என்பதை சுருக்கி பள்ளியில் அப்படித்தான் அழைத்தார்கள். +2 வில்  இரண்டு வருடமும் விலங்கியல் பாடத்தை அவர் தான் எடுத்தார். 

முரட்டு மீசை. நல்ல உயரமும் அதற்கெற்ற உடல் பருமனும் கொண்டு பார்ப்பதற்கே இன்ஸ்பெக்டர் மாதிரி இருப்பார். பள்ளிக்கு என்பீல்டு புல்லட்டில் தான் வருவார். பசங்க அத்தனை பேரும் அவரை "புல்லட் பாண்டியன்" என்று தான் அழைப்பார்கள்.

நாம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் புல்லட் சப்தத்தை கேட்டு திரும்பி நின்று "வணக்கம் சார்" என்று சொல்ல வேண்டும். சொல்லாமல் சென்று கொண்டிருந்தால்  வகுப்புக்குள் நுழைந்தவுடன் முதல் வேளையாக குறிப்பிட்ட மாணவனை அழைத்து காதைத்திருகி அந்த வகுப்பு முடிவதற்குள் கொன்னு கொலையெடுத்து விடுவார்.  

சுயமோகி என்பார்களே அதைப்போல சரியான பந்தா பார்ட்டி. 

எங்கள் வீட்டில் உள்ள அத்தனை பேர்களும் அவரிடம் தான் படித்தார்கள். அதுவும் அக்கா விலங்கியல் பாடத்தில் கல்லூரி அளவில் உயர்ந்த நிலைக்குச் சென்று பாராட்டுக்கள் வந்த போது "பாருடா, உங்கக்கா எனக்கிட்ட தான் படிச்சார்,  எப்படி பார்த்தீயா? நீ என்னத்த கிழிக்கப் போறியோ?" என்று சொல்லி முதுகை தடவிக்கொண்டே  டப் பென்று ஒரு சாத்து சாத்துவார்.  

இவரை பகைத்துக் கொள்ளவும் முடியாது.  

ரிக்கார்டு நோட் மதிப்பெண் சமாச்சாரம் என்ற பெரிய பூதம் ஒன்று இருந்தது. நமக்கு ஏற்கனவே படம் வரைவது என்றால் ததிகிங்கிணத்தோம். அக்கா தான் வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தார். 

ஆனால் டிகே சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.  காரணம் என்னோட வாய்.  எதையாவது பேசிக் கொண்டேயிருக்க அவருக்கு அதை வைத்தே என்னை கலாய்த்துக் கொண்டிருப்பது கைவந்த கலை.  

காரணம் அவர் வகுப்புக்கு வந்தால் பாடம் நடத்த மாட்டார் என்பதை விட அதைப் பற்றி அதிக அளவு கவலைப்படவும் மாட்டார்.  

"என்னடா தவளையோட குறுக்குவெட்டுத் தோற்றம் தெரியும் தானே?  டேய் கணேசா, இங்கே வா.  தவளை மாதிரி கத்திக்கிட்டே இருக்குறவன் நீ தானே,  கொஞ்சம் வந்து நடத்து" என்று போய் உட்கார்ந்து கொள்வார்.  

கதையடிப்பதைப் பற்றி நமக்குச் சொல்லியா தரவேண்டும்.  அதுவும் முன் பெஞ்சில் மூன்று கிளிகள் இருக்க நமக்கு அப்படியே கிர் என்று ஏறும். தலையில் கீரிடம் வைத்தாற் போல இருக்க வாய்க்காலில் பார்த்த தவளை முதல் கேள்வியேபடாத கடல் தவளை வரைக்கும் பொளந்து கட்ட வகுப்பு சிரிப்புடன் முடியும்.

வகுப்பு முடிகின்ற சமயத்தில் குறுக்கிட்டு "என்னடா கணேசன் சொன்னது தான்டா. வேறு எதுவும் சந்தேகம் இருக்கா" என்று கேட்டுக் கொண்டே மீசையை முறுக்கிக் கொண்டே சென்று விடுவார். 

அவரின் அத்தனை எடுபிடி வேலைகளையும் நானும் சொர்ணமும் தான் செய்வோம்.  இவனின் முழுப்பெயரி சொர்ணலிங்கம். ஆனால் எல்லா இடங்களிலும் சொர்ணம் என்று தான் பெயர் வரும். புதிதாக இந்த பெயரைக் கேட்பவர்கள் பெண்னின் பெயர் என்று ஆவலாய் கேட்ட கதையெல்லாம் உண்டு.

டிகே சாரின் அந்தரங்க வேலைகளை வேறு எவருக்கும் நாங்கள் இருவரும் கொடுக்க மாட்டோம்.  அவர் கிறிஸ்துவ குடும்பம் என்பதால் அவர் மனைவி எல்லா நாட்களிலும் கட்டாயம் அசைவம் சமைத்து எங்களிடம் கொடுத்து அனுப்புவார்.  ஒருவராக சென்றால் கேரியரை போட்டு கவிழ்த்து விடுவார்கள் என்று என்னுடன் சொர்ணத்தையும் அனுப்பி வைப்பார்.  

சுவையான சாப்பாட்டு பிரியர். 

மதியம் அவர் வகுப்பு இருந்தால் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.  காரணம் அவர் சாப்பிட்ட சாப்பாடு செறிக்க பாடத்தைத் தவிர மற்ற அத்தனை விசயங்களையும் பேசிக் கொண்டிருப்பார்.

எங்கள் வீட்டில் இருந்து இரண்டு சந்து தாண்டி அவர் வீடு இருந்தது.  அவர் இருந்த வீடு முழுக்க மரங்கள் அதிகமாக இருக்கும். ஒரு சின்ன காட்டுக்குள் வந்தது போலவே இருக்கும். அவ்வளவு பெரிய வீட்டுக்கு 150 ரூபாய் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்.  

சொர்ணம் பலே கில்லாடி.  

கேரியரை வாங்கியதும் நான் உட்கார்ந்து கெட்டியாக பிடித்துக் கொள்கின்றேன் என்று சொல்லி விடுவான்.  

தொடக்கத்தில் நான் மூச்சிறைக்க சைக்கிளை ஓட்டும் போது மேடு பள்ளத்தில் நிறுத்தாமல் ஓட்ட அவன் வண்டவாளம் அன்று தான் எனக்குத் தெரிந்தது.  கூடையில் உள்ள சின்ன கப் சமாச்சாரங்களில் உள்ள கறித்துண்டுகளை எனக்குத் தெரியாமல் எடுத்து சுவைத்துக் கொண்டு வந்ததை அன்று தான் கண்டுபிடித்தேன். 

இருவரும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம்.  

பள்ளிக்கு வரும் வழியில் ஒரு ஆச்சி வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும்.  வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய திண்னை வசதியாக இருக்க இருவரும் உட்கார்ந்த ஜாக்கிரதையாக ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து கிண்ணம் வாரியாக தனியாக எடுத்து வைத்துக் கொள்வதுண்டு.  

உள்ளே உள்ள சின்னச்சின்ன துண்டுகளை எடுத்து பங்கிட்டு எடுத்து தின்று விட்டு கை படாத ரோஜாவாக பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவதுண்டு. 

அளவுக்கு அதிகமாக உள்ள கறி சமாச்சாரத்தில் அந்த சின்ன துண்டுகளை அவரால் கண்டிபிடிக்க முடியாதது எங்களுக்கு வசதியாகவே இருந்தது.

எங்கள் கூட்டணி கடைசி வரைக்கும் உடையாமல் இருந்த காரணத்தால் அவரால் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.  

அவரை காரைக்குடியில் வைத்து சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. 

நண்பனுடன் பெரியார் சிலை அருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது எங்களை கடந்து ஒருவர் போய்க் கொண்டிருந்தார். நண்பன் காரைக்குடியில் தங்கப்பட்டறை வைத்திருப்பவன்.  அவன் என்னிடம் "அவர் யார் என்று தெரிகின்றதா?" என்று கேட்டான்.  "தெரியலையே" என்றேன்.  "அவர் தான்டா டிகே சார்" என்று சொல்ல நொந்து போய்விட்டேன் என்பதை விட பயந்து போய்விட்டேன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.  

காரணம் அவரின் தோற்றம் அப்படி இருந்தது.  

நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் அளவுக்கு மெலிந்து போயிருந்தார். அந்த முரட்டு மீசையை காணவில்லை. பள்ளியில் பார்த்த அவரின் கம்பீர உருவத்திற்கும் அப்போது பார்த்த உருவத்திற்கும் முற்றிலும் தலைகீழாக இருந்தது.  என்ன தான் வயோதிகம் என்றாலும் இந்த அளவுக்கு மாறி விடுவார்களா? என்று நண்பனிடம் கேட்ட போது "பாவம்டா சர்க்கரை நோய்" என்றான்.  

திருப்பூர் வந்தவுடன் ஒரு வாரம் முழுக்க அவர் உருவம் மனதில் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருந்தது.  மனதில் கொஞ்சம் பயமும் வந்தது.  நாம கண்டதையும் தின்று கொண்டேயிருக்கின்றோம்.  

நம் குடும்பத்தில் சிலருக்கும் இந்த நோய் உள்ளதே.  அப்பாவின் சர்க்கரை நமக்கும் வந்து விடுமோ என்று நினைத்துக் கொண்டே  சரி இனிமேல் வாயை அடக்க வேண்டும் என்று நினைத்த அன்றே கூடுதலாக கொஞ்சம் அள்ளி போட்டுக் கொண்டேன்.

அலுவலகத்திற்கு அருகே ஒரு கடை உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் "சார் சூடாக இருக்கு" என்று என்னை கேட்காமலேயே ஒவ்வொன்றிலும் இரண்டை எடுத்து கொடுத்து விடுவார்.  இளங்கன்று பயமறியாது தானே?  ஆனால்  வயிறுக்கு அது தெரியுமா?

அடுத்த இரண்டு நாளில் வெள்ளையனே வெளியேறு போராட்டமே நடக்கத் தொடங்கியது. வறண்டு போன காவேரிக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் உள்ளே உள்ள சமாச்சாரங்கள் அனைத்தும் தண்ணியாக பீச்சியடிக்கத் தொடங்கியது. 

"இனிமே வாயை அடக்குவியா?" என்று கக்கூஸில் ஒரு எதிரொலி கேட்டது.  

வீட்டில் பூசாரியிடம் கேட்டேன்.   

"வாயை கட்ட முடியாதவருக்கு வாய்க்கால் பாசனமே சிறந்தது" என்று சொல்லிவிட்டு சென்றார். 

கூடவே "இனி வண்டி நேரா வீட்டுக்குத்தானே வரும்.  இடையில் எங்கேயும் நிக்காதுதானே" என்று எரியும் கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றினார். 

பீச்சியடித்த வாய்க்கால் பாசனம் நின்றபாடில்லை.  

தொடர்ந்து உடம்பின் உள்ளேயிருந்த மற்ற பங்காளிகளையும் சேர்த்து அழைக்க ஒவ்வொன்றாக வந்து என்னப்படா சொகமா இருக்கீயா? என்று குசலம் விசாரிக்கத் தொடங்கினார்கள். 

என்னடா இஞ்சித்தேன், நெல்லித்தேன் தொடங்கி கண்டதையும் தின்று கொண்டு இருக்கின்றோமே? நமக்கா? என்று மிதப்பு வந்து அடுத்த இரண்டு நாளையும் கடத்திப் பார்த்தேன்.  உடம்புக்கும் மனசுக்கும் நடந்த வர்க்கப் போராட்டத்தில் உடம்பே ஜெயித்தது.

இனி கப்பு தூக்கும் வேலை கைக்கு உதவாது என்ற போது குடும்ப மருத்துவரிடம் சென்றேன். 

போவதற்கு முன்பு நண்பரை அழைத்து ஆலோசனை கேட்ட போது அவர் பங்குக்கு ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.  

"சார் உங்க வயசுக்கு சர்க்கரை நோய் வந்திருக்கும்" என்று சொல்ல மனதில் கிலியடித்தது போலவே இருந்தது. அப்போது தான் டிகே சார் நினைவுக்கு வந்து போனார்.  

அத்துடன் குடும்பத்தில் உறவினர்களில் எவர் எவருக்கெல்லாம் இந்த சர்க்கரை நோய் இருக்கிறது? 

இப்பொழுது எப்படி இருக்கின்றார்கள்? என்று மனம் ஆராயத் தொடங்கியது.  

இந்த சர்க்கரை நோயின் ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால் ஆங்கில மருத்துவத்தில் இதை வைத்து மாபெரும் பித்தலாட்டமே நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் சர்க்கரை நோய் என்று அடையாளம் காணப்பட்டால் அவர் குறிப்பிட்ட மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டே வர வேண்டும் என்பார்கள்.  

சாப்பாடு முதல் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் வரைக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.

நன்றாக கவனித்துப் பாருங்கள். அந்த நோயும் குணமாகாது. அவரும் நாள்பட மெலிந்து கொண்டே தான் செல்வார். கடைசியில் மண்டையை போடும் வரைக்கும் இந்த நோயுடன் தான் இறப்பார்.

ஏற்கனவே இந்தியாவில் இந்த மருந்து வியபாரமே ஒரு மாஃபியா தொழில் போலத்தான் நடந்து கொண்டிருக்கின்றது.  

பதிவுலகத்தில் யாராவது இதைப்பற்றி எழுதுவார்களா? என்று காத்துக் கொண்டிருக்கின்றேன்.

பத்து வருடமாக நான் பார்த்துக் கொண்டிருக்கும்  மருத்துவரிடம் சென்ற போது "உங்கள் டாலர் நகரம் புத்தகம் நன்றாக இருந்தது" என்று பாராட்டிக் கொண்டே "என்னாச்சு ஆறு மாததிற்கு ஒரு முறை வந்து விடுவீங்க.  ரொம்ப நாளா ஆளே காணோம்" என்றார். 

நான் இஞ்சித்தேன் சமாச்சாரத்தை சொல்லாமல் "நான் வரலைன்னா உங்களுக்கு நல்லது தானே?" என்றேன். 

"தனிப்பட்ட முறையில் சந்தோஷம்" என்று சொல்லிக் கொண்டே "உங்களுக்கு ப்ரெஷர் சரியாத்தான் இருக்கு.  சர்க்கரை இருக்கான்னு பார்த்து ரிப்போட் எடுத்து கொண்டு வாங்க" என்றார். 

பரிசோதிக்க உள்ளே சென்ற போது தான் வாழ்க்கையில் உண்மையான பயம் என்றால் என்ன? என்பதை யோசித்துப் பார்த்தேன். 

பரிசோதித்த பெண்மணி சொன்னார். 

"சார் உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் கழித்து தான் காசு பணம் சேரும் போல" என்றார். 

"நீ வேற வயித்துல புளியைக் கரைக்காதம்மா? இருக்கா இல்லையா?" என்றேன்.

"ஆமா சார் சர்க்கரை நோய் இருக்குறவங்களுக்கு தான் காசு பணம் சேருமாம்.  அதான் உங்களுக்கு இல்லையே" என்றார். 

அதென்ன சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோயா?

82 comments:

எம்.ஞானசேகரன் said...

பள்ளிக்கூட நினைவுகளில் தொடங்கி வயதான காலத்தில் நோய் நொடி வருவது வரை பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். பள்ளி நாட்கள் மிகவும் சுவாரஸ்யமான நினைவுகளாத்தான் எல்லோருக்கும் இருக்கும். எனக்கும் கூட அந்த மாதிரி நிறைய எழுத ஆசையிருக்கிறது.

சர்க்கரை நோய் பற்றி எழுத வந்து ஏதாவது தீர்வு சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆங்கில மருந்தைத்தான் விடாது தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

என்னது?! பணக்காரனா ஆவாங்களா? இதென்ன புதுக்கதை. பணக்காரனாகவும் இல்ல. பணமும் வரல. என்னமோ போங்க!

saidaiazeez.blogspot.in said...

//இளங்கன்று பயமறியாது தானே?// அது யாரு?
//கப்பு தூக்கும் வேலை கைக்கு உதவாது// ரொம்ப கஷ்டமோ?

Unknown said...

ரூ.549 மட்டும் செலுத்தி, உங்களுக்கு பிடித்த சொந்த டொமைனில் உங்கள் பிளாக் இயங்க வேண்டுமா..?

உதா. ( www.mydomain.blogspot.in ----> www.mydomain.in )

Fill up the survey and get free domain activation charge

Unknown said...

ஒருகை மருந்து; ஒருடம்ளர் வென்னீர் [சூடு அளவு ஊதிஊதி குடிக்கும்அளவு]சூடாகஊதிஊதிகுடிக்கவும்,அரைமணிநேரத்தில்சரிஆகிவிடும்.பின்தேவைப்பட்டால்மருத்துவரிடம்செல்லவும்.

வவ்வால் said...

ஜோதிஜி,

சர்க்கரை நோய்ப்பற்றிய மருத்துவ அறிவியல்ப்பதிவாக வந்திருக்க வேண்டியது அனுபவ பதிவாக ஆகிடுச்சோ?

அது என்ன எப்பப்பார்த்தாலும் யாராச்சும் எழுதுவாங்கனு பார்த்தேன் யாரும் எழுதலைனு சொல்லிக்கிட்டு, நீங்களே எழுதிட வேண்டாமா?

நிறையப்பேரு சர்க்கரை பாதிப்பு பற்றி எழுதிட்டு தான் இருக்காஙக, நீங்க கூட சுட்டியெல்லாம் கொடுத்திருக்கீங்களே , உங்க மனசுக்கு ஏற்றாப்போல நீங்க தான் எழுதிக்கனும், பிலாக்கர் இருக்கும் போது என்ன தடை?

# சர்க்கரை நோய் அல்ல அது ஒரு டெபிசின்யசி சிண்ட்ரோம், இன்சுலின் குறைப்பாட்டால் வருவது,தேவையான அளவு இன்சுலின் எடுத்துக்கொண்டால் " சிரஞ்சீவி" தான்.

வாசிம் அக்ரம்,ஹாலிவுட் நடிகை ஹால் பெர்ரி எல்லாம் இளமையில் இருந்தே சர்க்கரை பாதிப்பாளர்கள், நல்லாத்தான் இன்னும் இருக்காங்க,அதுவும், உடல் தகுதி தேவையுள்ள துறையில்.

மேலும் சர்க்கரை பாதிப்பு 21 ஆம் நூற்றாண்டின் விளைவு அல்ல ,அகத்தியர், போகர், திருமூலர் காலத்திலேயே இருந்த ஒன்றே அப்போ மேக நோய் என்றார்கள்,மேகம் பொழிவது போல பொழிஞ்சு பிழிஞ்சு தள்ளிடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு :-))

# பணக்காரர்களுக்கு அதிகம் வரும் ஏன் எனில் "சாப்பிட்ட சாப்பாடு எரிய "வைக்கும் அளவுக்கு கூட வேலை செய்வதில்லை என்பதால்.

ஒரு மனித உடலில் மெட்டபாலிசமும்,கேடபாலிசமும் சரியாக நடந்தால் எந்த நோயும்,குறைப்பாடும் வராது. விஷத்தை குடிச்சாலும் முறிஞ்சிடும் "ஸ்டீல் பாடி" ஆகிடுவாங்க :-))

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

இதோ இருபதாவது வருடத்தை நோக்கி... (NIDDM) சந்தோசமாக... (நான் தான்...)

நேரம் கிடைக்கும் போது விரைவில் பகிர்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

சல்லித்த(ன)ம் [(ள)-+ஆட்கள்உட்பட] என்று தெரிந்தவுடன் எல்லாவற்றையும் ஒதுக்கி விட வேண்டும்... தெருவுக்கு ஒரு நாள் வரமால் போகாது... திண்டுக்கல்லில் சில பல பேருக்கு சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது... வைத்து விடுவோம்...! (எனது அண்ணன் எனது வலைப்பதிவை தொடரும் போது...! பலரை பிரியாணி செய்ய...!!!)

புரிதலுக்கு நன்றி...

arul said...

thanks for sharing this important post anna

? said...

//சர்க்கரை நோய் அல்ல அது ஒரு டெபிசின்யசி சிண்ட்ரோம், இன்சுலின் குறைப்பாட்டால் வருவது,தேவையான அளவு இன்சுலின் எடுத்துக்கொண்டால் " சிரஞ்சீவி" தான்.//

வவ்வால் என்ன போலி டாக்குடரா மாறிவிட்டீர்கள்? சர்க்கரை நோய் ஒரு நோய்தான்,சின்ரோம் அல்ல. சின்ரோம் என்பதற்கு நோய்குறியீடு என்பது தமிழ் வார்த்தை. சின்ரோம் என்பது நோயின் சிம்டம்களை குறிப்பிடும் சொல். உலகின் பெரும்பாலான சர்க்கரை வியாதிஸ்தர்களுக்கு இன்சுலின் ஊசி தேவைபடுவதில்லை. அவர்கள் தேவையான அளவு இன்சுலின் உற்பத்தி செய்தும் அதை உடம்பு பயன்படுத்த இயலுவதில்லை.ஏறக்குறைய 30% நோயாளிகளுக்கு மட்டுமே வெளி இன்சுலின் தேவை இருப்பதாக அமெரிக்க ச.நோ அமைப்பு கூறுகிறது.

//மெட்டபாலிசமும்,கேடபாலிசமும் சரியாக நடந்தால் எந்த நோயும்,குறைப்பாடும் வராது.//

மெட்டபாலிசத்தில் கெட்டபாலிசமும் அடக்கம்! கெட்டபாலிசம் (சிதை மாற்றம்) + அனபாலிசம்(வளர் மாற்றம்)= மெட்டபாலிசம்(வளர்சிதை மாற்றம்). மற்றவர் பயந்துராதீங்க... வளர்சிதை மாற்றம் என்பது உயிர்வேதி பொருட்களை உடம்பு ஆக்கி (வளர்) அழிக்கும் (சிதை) செயல்.

மெட்டபாலிக் சின்ரோம் (வளர்சிதைமாற்ற நோய்குறியீடு) என்பது இதயநோய் வருவதற்கான ரிஸ்க்கை காட்டும் சின்ரோம்மை குறிக்கும். இவை சர்க்கரை வியாதி மற்றும் முற்பட்ட நிலை, அதீத உடல் எடை, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ரால். இதில் பிற எல்லாம் இருந்தால் சர்க்கரை வியாதி வர 5 மடங்கு வாய்ப்பு அதிகம். உலகில் 25% பேருக்கு இந்த நோய்குறியீடு உண்டு. இது இருந்தால் 2 மடங்கு சாகவும், 3 மடங்கு ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பு அதிகமாகும். உடம்பினை குறைத்து உடற்பயிற்சி மூலம் இதை குறைக்கலாம்.

ஆனால் பிரச்சனை என்னவெனில் இந்தியர்களுக்கு எளிதில் இன்சுலின் சாராத சர்க்கரை வியாதிக்கான (இன்சுலின் சுரப்பு வழக்கமாக இருக்கும்,ஆனால் உடம்பினால் யூஸ் பண்ண இயலாது) மரபணுக்கள் அமோகமாக இருப்பதினால் என்னதான் ஒல்லியாக மெயின்டைன் செய்தாலும் சர்க்கரை வியாதி வந்துவிடும். தற்போது இந்தியர்கள் கண்டபடி தின்பதாலும் உடலுழைப்பை குறைத்துவிட்டதாலும் மரபணு பிரச்சனையாலும் 2030-ல் 100 மில்லியன் சர்க்கரை வியாதிஸ்தர்கள் இருப்பார்களாம்.

ஜோதிஜி said...

என்ன தலைவரே நந்தவனத்தானுக்கு பதில் சொல்லுங்க. நாம் பேசுவோம்.

ஜோதிஜி said...

திருப்பூரிலா இருக்கீங்க?

ஜோதிஜி said...

நீங்க சொல்வது உண்மைதான். வெந்நீர் செரிமானத்திற்கு மிகச் சிறந்த மருந்து.

ஜோதிஜி said...

எழுதும் போது உங்கள் நினைப்பு வந்து போனது.

ஜோதிஜி said...

நாக்கு அடங்கலைன்னா கஷ்டம் தானே?

ஜோதிஜி said...

வவ்வால் பெருமகனார் பதில் தருவார் என்று நினைக்கின்றேன்.

வவ்வால் said...

நந்தவனம்,

// சின்ரோம் என்பதற்கு நோய்குறியீடு என்பது தமிழ் வார்த்தை. சின்ரோம் என்பது நோயின் சிம்டம்களை குறிப்பிடும் சொல்.//

நீர் எப்போல இருந்து போலித்தமிழறிஞர் ஆனீர் :-))

சின்ட்ரோம்- குறியீடு,

டிசீஸ் சின்ட்ரோம்- நோய்க்குறியீடு

டெபிசியன்சி சின்ட்ரோம்- குறைப்பாட்டு/பற்றாக்குறை குறியீடு

//Let us take up an example. A metabolic syndrome is not a disease. It may indicate an underlying disease like that of type 2 diabetes or a heart disease.//

//. 1. The symptom caused by a syndrome does not have an established reason behind it. In case of a disease, the cause is identified.

For the reason above, treatment of a syndrome is mainly symptomatic. In case of a disease, the underlying cause is treated.//

சர்க்கரை"நோய்க்கு" மருத்துவம் பார்ப்பதில்லை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க இன்சுலினை சப்ளிமெண்ட் செய்கிறார்கள், அதாவது "டிரீட்டிங் தி சிம்ப்டம்"எனவே "நோய்" என்பது தீர்க்கப்படுவதேயில்லை.

அதே சமயத்தில் ஒரு 'நோய்க்கு" காரணி (causal agent or pathogen)என்ன எனப்பார்த்து மருந்து கொடுக்கப்படுகிறது.

வித்தியாசம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.


http://www.differencebetween.net/science/health/difference-between-syndrome-and-disease/

நேரடியாக நோய்னு சொல்லிட முடியாதவற்றையே சின்ட்ரோம்னு சொல்கிறார்கள், சர்க்கரைப்பாதிப்பு வந்து அதன் விளைவாக ஒரு உடல் நலப்பாதிப்பு வருவதே நோய், வெறுமனே இன்சுலின் சப்ளிமெண்ட் எடுக்கும் நிலையில் இருக்கும் சர்க்கரைப்பாதிப்பு நோயல்ல.

பொதுவான மருத்துவக்காப்பீட்டில் சர்க்கரை "நோய்"க்கு கவரேஜ் கொடுக்க மாட்டார்கள், சர்க்கரை "நோய்" என தனியாக ஒரு காப்பீடு எடுக்க வேண்டும் அதுவும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை பொறுத்தே இல்லை எனில் சர்க்கரை'நோய்க்கு" மருத்துவக்காப்பீடே இல்லை, எனக்கு பாலிசி கொடுக்கலைனு கேஸ் போட்டால் கூட நிக்காது.

இப்படி மக்களை குழப்பவென்றே டிசீஸ், டிஸார்டர், டிபெக்ட், சின்ட்ரோம், மெடிகல் கண்டிஷன் என பிரிச்சு போட்டு வச்சிருக்காங்கோ.

பொதுவா சொன்னால் நோய் ,குறிப்பாக சொன்னால் சின்ட்ரோம்னு சொல்லலாம்.

பூவ பூனு சொல்லலாம், மலர்னு சொல்லலாம், அப்புறம் புய்ப்பம்னு சொல்லலாம் :-))

# //மெட்டபாலிசத்தில் கெட்டபாலிசமும் அடக்கம்! கெட்டபாலிசம் (சிதை மாற்றம்) + அனபாலிசம்(வளர் மாற்றம்)= மெட்டபாலிசம்(வளர்சிதை மாற்றம்).//

நாம எதாவது சொன்னாத்தான் அனாபாலிசம் ஆயா வச்ச பாயாசம்னு சொல்லிக்கிட்டு அனகோண்டா போல பாய வேண்டியது, மத்தவங்க என்ன பினாத்தினாலும் தரையில போட்ட தண்ணிப்பாம்பாட்டம் பம்ம வேண்டியது :-))

கெமிஸ்ட்ரி,பயோ கெமிஸ்ட்ரி படிக்கிற காலத்தில ஒழுங்கா பாடத்த கவனிக்காம, பாடம் எடுக்க வந்த லேடி புரபசரின் புரோஃபலை கவனிச்சிட்டு ,இங்க வந்து நம்மள நோண்ட வேண்டியது :-))

பி.எல்.சோனி,ஜெ.எல்.ஜெயினை எல்லாம் கூட்டி வந்து விசாரணைக்கமிஷன் வச்சாத்தான் தெளிவீர் போல இருக்கே அவ்வ்!

கேட்டப்பாலிசம் எப்பொழும் நடக்கும் (தூங்கும் போதும் கேட்டபாலிசம் நடக்கும்)அதுக்கூட அனபாலிசம் நடந்தா தான் மெட்ட பாலிசம்.

எந்த உயிரின் உடலிலும் முழுக்க அனபாலிசம் மட்டுமே நிகழும் நிலை வராது,ஆனால் அனபாலிசம் அல்மோஸ்ட் இல்லை என்ற நிலையில் கேட்டப்பாலிசம் முழுவீச்சில் நடப்பதுண்டு.

உ.ம்: கடின வேலை செய்யும் போது,உடற்ப்பயிற்சி செய்யும் போது,கேடபாலிசம் உச்சமாக இருக்கும்.

வயல் வேலை செய்பவர்கள்,மூட்டை தூக்குறவங்க எல்லாம் எந்த உடற்பயிற்சியும் செய்யாமலே சிக்ஸ் பேக்ஸ் வச்சிருக்க காரணம் கேடபாலிசம் அதிகம் நிகழும் வகையில் உடல் உழைப்பு செய்ய்கிறார்கள்.

எனவே மெட்டப்பாலிசம் நடக்கும் போது நடக்கும் கேட்டப்பாலிசம் போதாது, அதிக கேட்டபாலிசம் நடக்க வேண்டும், அதாவது உடல் உழைப்பு இருக்க வேண்டும் என சொன்னால் , ஷ்ப்பா என்னா ஒரு குறுக்கு கேள்வி.

வவ்வால் said...

ஜோதிஜி,

//வவ்வால் பெருமகனார் பதில் தருவார் என்று நினைக்கின்றேன்.//

கொஞ்சம் வெயிட் செய்தால் வவ்வால் மாமனாரே வந்து பதில் சொல்லுவாரு :-))

ரெண்டுப்பேரு முட்டிக்கிட்டால் வேடிக்கை பார்க்கலாம்னு ஒரு "நல்ல எண்ணம்?"

உங்க அப்ரோச்சும் நல்லாத்தான் இருக்கு அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க,நல்லா வருவீங்க, வருவீங்க!

தென்றல் வீசினால் தாங்கிடும் நந்தவனம் புயல் வீசினால் தாங்குமா? புயலாய் கிளம்பினேன் நந்தவனம் நொந்தவனம் ஆகிடுவாரு சொல்லிட்டேன் :-))

? said...

//டிசீஸ் சின்ட்ரோம்- நோய்க்குறியீடு- நோய்க்குறியீடு//

டிசீஸ் வேறு சின்ரோம் வேறு... அப்புறம் அதென்ன டிசீஸ் சின்ட்ரோம்? புதுப்புது வார்த்தையெல்லாம் கண்டுபிடிக்கின்றீர்?

சின்ரோம் என்றால் நோய்க்குறியீடு என்றுதான் தமிழ்நாட்டு பாடநூல் புத்தகத்தில் 12-ம் வகுப்பில் படித்தேன், நான் படித்த காலத்தில். டவுன் சின்ரோம் -டவுன் நோய்குறியீடு. இப்போது நோய்குறி தொகுப்பு என்றெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.

இன்சுலின் பெரும்பாலான ஆளுகளுக்கு போதுமான அளவில் உற்பத்தியானாலும் சர்க்கரைவியாதி வரும் என்று சொல்லியாச்சு. அப்புறம் டெபிசி
ன்ஸியை பிடிச்சு தொங்குனா எப்புடி?

//மக்களை குழப்பவென்றே டிசீஸ், டிஸார்டர், டிபெக்ட், சின்ட்ரோம், மெடிகல் கண்டிஷன் என பிரிச்சு போட்டு வச்சிருக்காங்கோ//


சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. இதெல்லாம் மருத்துவ துறை ஆசாமிகள் வியாதிகளை பிரித்து புரிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட சொற்கள். அவைகளுக்கு தெளிவான வரையீடுகள் உண்டு. ஆனால் பொது வாழ்வில் இவைகளை மக்கள் கண்டபடி எழுதி (உம்மை போல) வரும் குழப்பம்தான். குறைந்தபட்சம் மருத்துவ புத்தங்களில் என்ன சொற்கள் பயன்படுத்தபடுகிறதோ அதை மாத்திரம் உபயோகப்படுத்துவதுதான் சரியானது.

? said...

//வித்தியாசம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.//

இந்த டூபாக்கூர் மேட்டர் தெரியாமல்தான் இத்துறையில் குப்பை கொட்டுகிறோமாக்கும்.அடப்போங்கய்யா.

American Diabetes Association தெளிவாக வரையரை செய்துள்ளது. Diabetes mellitus is a group of metabolic diseases characterized by hyperglycemia resulting from defects in insulin secretion, insulin action, or both.

Diabetes mellitus is a syndrome என ஒரு மருத்துவ நிபுணர் சொன்னதாக ஒரே ஒரு லிங்கு காட்டும் பார்ப்போம். உடனே அதுக்கு ஒரு பேரா கதை எழுதக் கூடாது. அத்துறை நிபுணர் சொல்லுவது மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.

காரணி தெரிஞ்சா அது வியாதிதான். காரணி என்பது pathogen ஆக இருக்கவேண்டியது இல்லை. இன்சுலின் பிரச்சனையா?- அது சர்க்கரை வியாதி. ஆனால் டவுன் சின்ரோம்... மரபணு குறை காரணமாக வரும், ஆனால் சர்க்கரை வியாதிக்கு டெஸ்ட பண்ணுவது போல ஈஸியாக சொல்ல டையகனோஸிஸ் பண்ண முடியாது, அதை சிம்டம்கள் மூலமே அறியலாம். ஆனால் சர்க்கரை வியாதியை சிம்டம்ஸ் வைத்து எல்லா நோயாளி கிட்டயும் அறிய முடியாது. பிளட் டெஸ்ட் பண்ண வேண்டும்.

http://in.answers.yahoo.com/question/index?qid=20100412110658AAUqNCp

இங்கு ஏன் சர்க்கரை வியாதி ஸின்ரோம் அல்ல என விளக்கியிருக்கிறார்கள் படிக்கவும்.

பூவை புய்ப்பன்னு சொல்லாம் ஆனா இலைன்னு சொல்லக்கூடாது!

//நாம எதாவது சொன்னாத்தான் அனாபாலிசம் ஆயா வச்ச பாயாசம்னு சொல்லிக்கிட்டு அனகோண்டா போல பாய வேண்டியது, மத்தவங்க என்ன பினாத்தினாலும் தரையில போட்ட தண்ணிப்பாம்பாட்டம் பம்ம வேண்டியது :-))//

ஆமாம் உம்மை மாதிரி சூரியனுக்கு கீழ கிடக்குற எல்லா விடயத்துலேயும் எக்ஸ்பர்ட்டுன்னு கருத்து சொல்லிகிட்டு எவன் திரியுறான். அப்படி நீர் சொல்லும் போது ஒரு தப்பு வந்திடக்கூடாதுன்னு உம்மேல ஒரு பாசம்தான் ஓய்!

//தூங்கும் போதும் கேட்டபாலிசம் நடக்கும்//

ஆமாம் இது தெரியாமதான் இருக்கோம். கெட்டபாலிசம் நடக்குலைனா அவன் பொணம்னு அர்த்தம் வோய். மூளைக்கு தொடர்ந்து குளுக்கோஸ் வேனும். உடம்பு கெட்டபாலிசம் மூலமா சப்ளை பண்ணிகிட்டே இருக்கும் (குளுக்கோஸ் இருக்கும் உணவு சாப்பிட்ட சிறிது நேரம் தவிர, அப்ப அனபாலிசம் நடக்கும். இது போல பல பொருட்கள் தேவை இருந்துகிட்டே இருக்கும். கெட்டபாலிசம் மூலம் பொருட்களை (சர்க்கரை,புரதம்) உடைத்து 24 மணி சப்ளை நடந்துகிட்டே இருக்கும். நின்னுதுன்னா அடக்கம் பண்ணீற வேண்டியதான்.

//மெட்டப்பாலிசம் நடக்கும் போது நடக்கும் கேட்டப்பாலிசம் போதாது, அதிக கேட்டபாலிசம் நடக்க வேண்டும்//

என்ன சொன்னேன் என திரும்பி படித்துதொலையும். எப்போது கெட்டபாலிசம் நடந்தாலும், அதிக உழைப்பில் நடந்தாலும், சும்மா தூங்கும் போது நடந்தாலும் அது மெட்டபாலிசம்தான். அதென்ன மெட்டபாலிசம் நடக்கும் போது நடக்கும் கெட்டபாலிசம் போதாது?



? said...

//தென்றல் வீசினால் தாங்கிடும் நந்தவனம் புயல் வீசினால் தாங்குமா? புயலாய் கிளம்பினேன் நந்தவனம் நொந்தவனம் ஆகிடுவாரு சொல்லிட்டேன் :-))//

மேட்டர் இருக்கோ இல்லையோ ஆனா ஊடுகட்டி அடிக்கப்போற மாறி நீர் கொடுக்கற பில்டப்பு உதாரு இருக்கே... அதுல உம்மை அடிச்சிக்க பதிவுலகில் ஆளே கிடையாது ஓய்!

ஜோதிஜி said...

உங்க அப்ரோச்சும் நல்லாத்தான் இருக்கு அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க,நல்லா வருவீங்க, வருவீங்க!

பாத்தியளா வவ்வால். நந்வனம் பின்னி பெடல் எடுத்துருக்காரு. உடனே இதுக்கு தூண்டு விட்டு வேடிக்கை பார்க்கின்றேன் எம்மேல பாஞ்சுடுதீங்க.

ஆனால் உங்களுக்கு நல்ல நகைச்சுவையா எழுத வருது. ஏற்கனவே ராஜநடா பதிவில் சீமான் குறித்த பதிலும் இந்த பதிலும் படித்து முடித்து ரொம்பவே நேரமா வாய் விட்டு சிரிக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.

வவ்வால் said...

"நிபுணர்"நந்தவனத்தார் அவர்களே,

//மேட்டர் இருக்கோ இல்லையோ ஆனா ஊடுகட்டி அடிக்கப்போற மாறி நீர் கொடுக்கற பில்டப்பு உதாரு இருக்கே... அதுல உம்மை அடிச்சிக்க பதிவுலகில் ஆளே கிடையாது ஓய்!//

நீர் முடிச்ச அடியில் இருந்து அடியெடுத்து உமக்கு ஒரு அந்தாதி பாடுகிறேன் கேளும் :-))

அப்பப்போ கிடைக்கிற கேப்புல எல்லாம் நான் அதுல தான் குப்பையக்கொட்டிட்டு இருக்கேன், நான் நிபுணராக்கும்னு நீர் அடிக்கிற டமாரத்த விடவா நான் பெருசா வூடு கட்டிறப்போறேன் :-))

ஆனாலும் கடசி வரைக்கும் எதுல குப்பைய கொட்டினீர்னு சொல்ல்லவேயில்லை அவ்வ்!

மேட்டரென்றால் பருப்பொருள் ,அது இல்லா நிலை எய்தி அலையாய் வீசினால் ஆங்கே டிபிராக்ளி தத்துவம் தலையெடுக்குமாம் காண்மீன் காண்மீன், அடியேனும் மேட்டரேயில்லா அலையாய் அடிக்கும் சுனாமியாக்கும் :-))

# //சின்ரோம் என்றால் நோய்க்குறியீடு என்றுதான் தமிழ்நாட்டு பாடநூல் புத்தகத்தில் 12-ம் வகுப்பில் படித்தேன்,//

"AIDS" நோய்னு கூடத்தான் பாடப்பொஸ்வத்துல போட்டு வச்சிருப்பாங்க ஆனால் கிட்டக்கப்போய் உரசிப்பார்த்தால் சின்ட்ரோம்னு போட்டு தாக்கிடுவாங்கோ :-))

# //இன்சுலின் பெரும்பாலான ஆளுகளுக்கு போதுமான அளவில் உற்பத்தியானாலும் சர்க்கரைவியாதி வரும் என்று சொல்லியாச்சு. அப்புறம் டெபிசின்ஸியை பிடிச்சு தொங்குனா எப்புடி?//

ஆமாம் அப்படியும் ஒரு நிலை சர்க்கரைப்பாதிப்பில் இருக்கவே செய்யுது,ஆனால் அதனை "genetic disorder" ஆல் வருவது என்று சொல்லிடுறாங்கோ!

சர்க்கரை "நோய்"க்கு அப்படியே எதிரான விளைவாக "தைராய்ட்" பாதிப்பு இருக்கு, ஆனால் அதனை "ஹார்மோன் குறைப்பாடு" என்கிறார்கள். குறைப்பாடு என்றால் டிபிசியன்சி என்று மட்டும் இல்லை, டிபெக்ட் ,கூடவும் சுரக்கும்,குறையவும் சுரக்கும்.

இப்போ உங்களுக்கே ஆன்ட்ரோஜன் கம்மியாகி,எஸ்ட்ரோஜன் அதிகமாகிடுச்சுனா, நளினம் கூடி "நந்தவனத்தாண்டி ,நந்தவனத்து "AUNTY" போல ஆகிடுவீர் :-))

இந்நிலையையும் "ஹார்மோன் குறைபாடு" என்று தான் சொல்வார்கள். அதாவது தைராய்ட், ஆன்ட்ரோஜன்,எஸ்ட்ரோஜன் எல்லாம் ஹார்மோன், அதே போல இன்சுலினும் ஹார்மோன் தானே ,அது சுரப்பதில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் "விளைவு" இன்சுலின் குறைபாடு" என்றோ சின்ட்ரோம் என்றோ சொன்னால் தப்பா?


-தொடர்கிறது...

வவ்வால் said...

-தொடர்ச்சி...

#//இதெல்லாம் மருத்துவ துறை ஆசாமிகள் வியாதிகளை பிரித்து புரிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட சொற்கள். அவைகளுக்கு தெளிவான வரையீடுகள் உண்டு.//

நானும் அதான் சொல்கிறேன் ஒவ்வொன்றுக்கும் தெளிவான வரையறை இருக்கும் போது ஏன் பொத்தாம் பொதுவாக "நோய்"னே சொல்லிக்கிட்டு இருக்கனும்.

"சர்க்கரை நோய்"னு இனிக்க இனிக்க சொல்லிட்டு"பொது மருத்துவ காப்பீட்டில்" நோய்க்கு சிகிச்சை அளிக்க கிளெய்ம் செய்ய முடியாமல் வச்சிருக்கானுங்களே அதான் ஏன்னு நான் கேட்கிறேன், நீர் சொன்னாப்போல நோய்னு டாக்குடர்கள் ஒத்துக்கிட்டு "இன்சுரன்ஸ் கிளெய்ம்" செய்ய உதவலாமே? அப்படி மட்டும் நீர் செய்துவிட்டால் இந்திய இனிப்பு உடம்புக்காரங்க எல்லாம் ஒன்னு கூடி மெரினாவில் உமக்கு சிலை வைப்பாங்கோ :-))

ஆனால் அப்போ மட்டும் "its a medical condition due to imbalance in production of insulin hormone because of dysfunction of pancreas gland" அப்படினு என்னமோ சொல்லி ஜல்லி அடிச்சு அனுப்பிடுறாங்கோ :-))

#// ஒரு மருத்துவ நிபுணர் சொன்னதாக ஒரே ஒரு லிங்கு காட்டும் பார்ப்போம். உடனே அதுக்கு ஒரு பேரா கதை எழுதக் கூடாது. அத்துறை நிபுணர் சொல்லுவது மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.//

இந்த நிபுணருங்க தொல்லை தாங்க முடியலைடா சாமி :-))

ஏன் ஓய் யாஹூ ஆன்சரில் சொல்லுறவாள் எல்லாம் நிபுணருங்களா? சொல்லவேயில்லை, இதுக்கு பேசாம நானும் யாஹ்ஹு ஆன்சரில் போய் எழுதி வச்சுட்டு அதையே சுட்டியா உமக்கு காட்டியிருப்பேனே :-))

#// அதென்ன மெட்டபாலிசம் நடக்கும் போது நடக்கும் கெட்டபாலிசம் போதாது?//

//தற்போது இந்தியர்கள் கண்டபடி தின்பதாலும் உடலுழைப்பை குறைத்துவிட்டதாலும்//

ஏன் உடலுழைப்பை குறைத்து விட்டார்கள்னு கவலைப்படனும் அதான் எப்போதும் மெட்டபாலிசம் நடக்குது,அதுக்குள்ள கேடபாலிசம் நடக்குது,எனவே எல்லாமே "எரிக்கப்பட்டு"விடும் தானே?

ஒரு மணி நேரம் "ஜிம்மில் ஜம்மென உடற்பயிற்சி" செய்யும் போது நடக்கும் மெட்டபாலிசத்தில் அனாபாலிசம் எவ்வளவு நடக்கும் ,கேடபாலிசம் எவ்ளவு நடக்கும்?

கார்டியோ வாஸ்குலார் ஒர்க்கவுட்ஸ் செய்தால் ஏன் கொழுப்பு எரிக்கப்படுகிறது? அப்போ நடப்பது கேடபாலிசமா, மெட்டபாலிசமா?

உடலுழைப்பு/உடற்பயிற்சி அதிகம் செய்யனும் ,கூடுதல் கலோரி எரிக்கப்படனும் என்பதை "கேடபாலிசம்" அதிகம் நடக்கனும்னு கொஞ்சம் வித்தியாசமா சொன்னது ஒரு குத்தமாய்யா,அதுக்கு இம்புட்டு அக்கப்போறா அவ்வ்!

ஓய் நான் நிபுணராக்கும்னு சொல்லி போட்டு தாக்கினால் மிரண்டு ஓடிறுவாங்கனு உமக்கு நினைப்பு, பனங்காட்டு வவ்வால் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது(ஹி...ஹி சும்மா ஒரு பில்டப்பு), இன்னும் நாலு காட்டு காட்டுவேன்,உடனே ஜோதிஜி "பின்னூட்டத்துல சிலம்பம்" சுத்துறாங்க,, மூனு கால் முயலுனு ஆரம்பிச்சுடுவாரு :-))
-------------------------------

வவ்வால் said...

ஜோதிஜி,

# "மாண்புமி மிகு எழுத்து சித்தர்" ஜோதிக்கு ஒரு கேள்வி, நோய் என்றால் வைத்தியம் செய்தால் குணமாகனும்,சர்க்கரை நோய்க்கு என்ன வைத்தியம் அளிக்கிறார்கள்,ஏன் குணமே ஆவதில்லை?

எந்த மருத்துவரிடமாவது ,சர்க்கரை நோய்" தானே அப்புறமா ஏன் சிகிச்சை அளித்தும் குணமாவதில்லைனு கேட்டுப்பாருங்க ,ஹி..ஹி அது வந்து,என்னன்னானு இழுப்பாங்க :-))

தினம் தினம் பசிக்குது திண்ணா பசியது தீர்ந்திடுமா? வள்ளலார் கூட பசிப்பிணினு சொல்லிக்கிறார்,அப்போ அந்த பிணிக்கு மருந்தென்ன? டாக்குடரு மருந்து கொடுப்பாரா? வூட்டுக்காரம்மா ஆக்கி வச்ச சோறே போதுமே?

சாப்பிடாமலே இருந்தாலும் பரலோகப்பிராப்தி தான் அப்போ பசியும் நோய் தான் எனவே எனக்கு பசிப்பிணிக்கு "மருத்துவ காப்பீடு" கிடைக்குமா ,அப்படி ஒரு காப்பீடு மட்டும் கிடைச்சிட்டா லோகத்தில இருக்க எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடுமே :-))

தலைகீழா பொறக்கிறான்,

தலை கீழா நடக்கிறான்,

வயிறு என்றப்பள்ளத்தில் வாழ்க்கையை தொலைக்கிறான்!!!

ஞானத்தங்கமே ஞானத்தங்கமே!

----------------

#//ஆனால் உங்களுக்கு நல்ல நகைச்சுவையா எழுத வருது. //
நாம எப்பவும் நகைச்சுவை உணர்வுடன் தான் இருக்கோம் கெரகம் சிலப்பேருக்கு அது ரொம்ப லேட்டாத்தான் புரியுது :-))

ரொம்ப பழைய பதிவுகளில் போய் பார்த்தாலும் "நம்ம பிராண்ட்" நகைச்சுவைப்பின்னூட்டங்கள் காணக்கிடைக்கும்.

ஜோதிஜி said...

மாண்புமி மிகு எழுத்து சித்தர்" ஜோதிக்கு

அதென்ன ரெண்டு மி வருது. மிகுதியாக தகுதியில்லாதவர்களை பாராட்டினா இந்த பிரச்சனை தான். புரிஞ்சுதா?

எனக்கு இன்னும் உங்க பதில் திருப்தியில்லை. உண்மையிலேயே சர்க்கரை நோய் அல்லது சின்ட்ரோம் அல்லது குறியீடு இதை நிறுத்த முடியுமா? தடுக்க முடியுமா? கட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? நோயாளியை காப்பாற்ற முடியுமா?

இதுக்கு மருத்துவ துறை தீர்வு கண்டு பிடித்துள்ளதா? இல்லையா?

நந்தவனம் இவரு உச்சியிலேயே ஏறி பறந்து பறந்து ஸ்டைல் காட்டிக்கிட்டி இருக்காரு. என்னை மாதிரி கிராமத்தானுக்கு புரியமாதிரி சொல்லுங்களேன்.

அவரு சிலம்பக்காரர். எப்போதும் சிலுப்பிக்கிட்டே தான் இருபபாரு. கண்டுக்காதீங்க.

வவ்வால் said...

ஜோதிஜி,

//மிகுதியாக தகுதியில்லாதவர்களை பாராட்டினா இந்த பிரச்சனை தான். புரிஞ்சுதா?//

அடாடா என்னா ஒரு தன்னடக்கம், எழுத்து வசப்படுது, வடிவம் எடுக்குதுனு சொல்லிட்டு இப்படி ஒரு தன்னடக்கமா அவ்வ்!

நந்தவனம் தான் குறுக்குசால் ஓட்டி "வித்தைக்காட்டிட்டு" இருக்கார், உருப்படியா ஆரம்பிச்சது அடியேனே.

//இதுக்கு மருத்துவ துறை தீர்வு கண்டு பிடித்துள்ளதா? இல்லையா?//

இன்சுலின் குறைப்பாட்டால் வரும் சர்க்கரைப்பாதிப்புக்கு ஒரு தீர்வு இருக்கு, பான்கிரியாஸ் டிரான்ஸ்பிளான்டேஷன் சர்ஜரி, டிஷ்யூ கல்ச்சர் முறையில் பன்றி மூலம் செயற்கை பான்கிரியாஸ் வளர்த்து மனிதனுக்கு பொருத்தலாம்,துட்டு நிறைய இருந்தா முயற்சிக்கலாம்.

முதலிலே சொல்லலாம்னு நினைச்சு மறந்துப்போச்சு.

திண்டுக்கல் தனபாலன் said...

//தலைகீழா பொறக்கிறான்... தலை கீழா நடக்கிறான்... ///

அது யார்..? (http://www.blogger.com/profile/14541593931992042103) Protile-யில் முகத்தை காட்டும் ஐயா.. பிறகு பேசலாம்... தலைகீழா கருத்து சொல்வதில் நீர் தான் முதலிடம் (அந்த அற்ப வாழ்வில் சந்தோசம் உமக்கு ...ம்...

என்றாவது (சில பதிவில் உங்களது கருத்துரை உண்டு) முழுமையாக வாசித்தீர்களா...? தயக்கம் ஏன்...?

BEST to visit my older post : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html

விவரமாக தெரிந்து கொள்ள :-

http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html

திண்டுக்கல் தனபாலன் said...

தொல்காப்பியம் 358

மறுபடியும் வருவேன்..! ஹா.. ஹா... எனது நண்பர் தான் நீர்,,,?!!!!

? said...

//அது சுரப்பதில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் "விளைவு" இன்சுலின் குறைபாடு" என்றோ சின்ட்ரோம் என்றோ சொன்னால் தப்பா?//

தப்புதான். ஒரு வியாதியினை அதுகாட்டும் குறி மூலம் அறிந்தாலும் அது ஏற்படுவது குறித்து முழுவதும் அறியாவிடன் சின்ரோம். உதாரணமாக குரோத் ஹார்மோன் டெபிசியன்சி வந்தால் ஆளைப் பார்த்தே அவரது சிம்டம்களை பார்த்து சொல்லிவிடாலாம். அது ஸிம்ரோம். ஆனா சர்க்கரை வியாதிக்காரரின் ஸிம்டத்தை பார்த்து சொல்ல முடியாது. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

//ஏன் உடலுழைப்பை குறைத்து விட்டார்கள்னு கவலைப்படனும் அதான் எப்போதும் மெட்டபாலிசம் நடக்குது,அதுக்குள்ள கேடபாலிசம் நடக்குது,எனவே எல்லாமே "எரிக்கப்பட்டு"விடும் தானே?//

கெட்டமாலிசம் - சிதை மாற்றம் நடந்துக்கிட்டேதான் இருக்கும். ஆனா நீங்க சாப்பிடும் உணவு, உடம்பின் தேவை இவற்றுக்கு அதிகமாக உண்டால் உடம்பில் மெட்டபாலிசத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. தேவைக்கு ஏற்றாற் போல் உண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அப்படி உண்ணுவது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதினால் அதிகம் சாப்பிடுவதை எரித்து தீர்க்க வேண்டியுள்ளது.

//ஒரு மணி நேரம் "ஜிம்மில் ஜம்மென உடற்பயிற்சி" செய்யும் போது நடக்கும் மெட்டபாலிசத்தில் அனாபாலிசம் எவ்வளவு நடக்கும் ,கேடபாலிசம் எவ்ளவு நடக்கும்?// இதென்ன கேளுவி. அவரு எந்த பயிற்சி செய்கிறாரோ அதை பொருத்து நடக்கும். இதக்குன்னு சார்ட் இருக்கு எடுத்து பாரும். அந்த ஆளு இடையில தின்னான்னா அனபாலிசமும் நடக்கும். அது போக கெட்டபாலிசத்தில் எரிக்கப்படும் பொருளில் இருந்து அனபாலிசமும் தேவைனா நடக்கும். ஒருத்தர் உடற்பயிற்சி செய்ய தேவையான சக்தி குளுக்கோஸை எரிப்பதால் கிடைக்கும். அப்போது குளுக்கோஸ் எரியும் போது உருவாகும் பொருளில் இருந்து உடம்பு அமினோ அமிலத்தை உற்பத்தி செய்து அதிலிருந்து புரத உற்பத்தி செய்யும். ஆக ஆனபாலிசம் மெட்டபாலிசம் எல்லாம் ஒரு காம்பளக்ஸ் நெட்வொர்க், இரண்டுமே 24 மணிநேரமும் நடந்துகிட்டேதான் இருக்கும்.

தேவைக்கு அதிகாமாய் சாப்பிடாதே. சாப்பிடும் போது சற்றே அதிகம் சாப்பிடுவதை உடலுழைப்பு செய்து எரித்துவிடு. உடம்பில் சேமித்து வைக்காதே.அம்புட்டுதான்.

//கார்டியோ வாஸ்குலார் ஒர்க்கவுட்ஸ் செய்தால் ஏன் கொழுப்பு எரிக்கப்படுகிறது? அப்போ நடப்பது கேடபாலிசமா, மெட்டபாலிசமா?//

கார்டியோ வாஸ்குலார் ஒர்கவுட்டே என்ன எழவோ... அதிகமாக உடலுக்கு வேலை கொடுத்தால் உடம்பு முதலில் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை எரிக்க ஆரம்பிக்கும். ஆனா மூளைக்கு சப்ளை செய்ய குறைந்த பட்ச அளவு குளுக்கோஸ் இரத்தத்தில் மெயின்டைன் செய்ய வேண்டியிருப்பதால் சேமித்து வைத்திருக்கும் கிளைகோஜன்னை உடைத்து குளுக்கோஸ் உற்பத்தி ஆரம்பிக்கும். ஆனால் அதுவும் தீர்ந்துவிட்டால் மூளை குளுக்கோஸ் இல்லாமல் செத்துவிடும் என்பதினால் பிற செல்கள் கொழுப்பினை எரித்து உடலுழைப்பிற்கு தேவையான சக்தி உற்பத்தி நடக்கும். இது நல்லது...சேமித்த கொழுப்பு கரையும்.

அடுத்த கேளுவி கேடபாலிசமா, மெட்டபாலிசமா? ... இரண்டும்தான் ஓய். சுத்த தமிழனான சென்னைவாசி ஒருவனை காட்டி இவன் தமிழ்நாட்டுக்காரனா, சென்னைக்காரனா என கேட்டால் என்ன சொல்வது? மெட்டபாலிசத்தின் ஒருவகைதான் கெட்டபாலிசம். மெட்டபாலிசம் = தமிழ்நாட்டுக்காரன் கெட்டபாலிசம்= சென்னைக்காரன். எல்லா சென்னக்காரனும் தமிழநாட்டவன். ஆனால் எல்லா தமிழ்நாட்டானும் சென்னைக்காரன் இல்லை. எல்லா கெட்டபாலிசமும் (சிதை மாற்றமும்) மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்). ஆனா எல்லா மெட்டபாலிசமும் கெட்டபாலிசம் இல்லை. ஏன்னா வளர்மாற்றம்ன்னு ஒன்னு இருக்கு. இதை பலதடவை சொல்லியும் உமக்கு மண்டையில ஏற மாட்டீங்குது. இது புரியாத முட்டாள் இல்லை நீர். ஆனா நான் புடிச்ச முயலுக்கு 3 காலுன்னு மூளை சாத்தி வைச்சா இப்படித்தான் நடக்கும்

? said...

@வவ்வால்

இதுல எதுக்கு இன்சூரன்ஸ் மேட்டரை போட்டு குழப்புகிறீர். அமெரிக்காவில் நீங்க இன்சூரன்சு எடுத்த பின்னாடி சர்க்கரை வியாதி வந்தால் இன்சூரன்சுகாரன் காசு கொடுப்பான். வருகிற வரைக்கும் காத்திருந்து வந்த பிறகு எடுத்தால் கொடுக்க அவன் என்ன கேனையா? நீங்க கட்டும் பீரிமியத்தைவிட அதிக காசுதர வேண்டும். அசம்பாவிதமாக நடக்கும் போதுதான் இன்சூரன்சு. இது சர்க்கரை வியாதிக்கு மட்டுமல்ல கான்சர் போன்ற மற்ற வியாதிக்கும் பொருந்தும். இந்தியாவில் மருத்துவ இன்சூரன்சு துறை இப்போதுதான் சூடு பிடிக்கிறது. இன்சூரன்சு எடுத்த பின் வியாதி வந்தால் கேசுபோட்டு பாரும் நிச்சயம் வெற்றிதான்.

? said...

@ ஜோதிஜி

//எனக்கு இன்னும் உங்க பதில் திருப்தியில்லை. உண்மையிலேயே சர்க்கரை நோய் அல்லது சின்ட்ரோம் அல்லது குறியீடு இதை நிறுத்த முடியுமா? தடுக்க முடியுமா? கட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? நோயாளியை காப்பாற்ற முடியுமா? இதுக்கு மருத்துவ துறை தீர்வு கண்டு பிடித்துள்ளதா? இல்லையா?//

சுருக்கமாக உங்க கேள்விக்கு விடை. டிரீட்மென்ட் உண்டு ஆனால் கியூர் இல்லை. அதாவது நோயை தீர்க்க இயலாது, ஆனால் கட்டுக்குள் வைத்திருந்து ஆயுளையும் வியாதிக்கான சிம்டம் மற்றும் பக்கவிளைவினை தடுக்க முடியும். ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆராய்ச்சி போன்றவற்றின் மூலம் தீர்க்க முயற்சி நடக்கிறது... ஆனால் அதற்கு பல வருடமாகும் என நினைக்கிறேன்.

@வவ்வால்

//இன்சுலின் குறைப்பாட்டால் வரும் சர்க்கரைப்பாதிப்புக்கு ஒரு தீர்வு இருக்கு, பான்கிரியாஸ் டிரான்ஸ்பிளான்டேஷன் சர்ஜரி, டிஷ்யூ கல்ச்சர் முறையில் பன்றி மூலம் செயற்கை பான்கிரியாஸ் வளர்த்து மனிதனுக்கு பொருத்தலாம்,துட்டு நிறைய இருந்தா முயற்சிக்கலாம்.முதலிலே சொல்லலாம்னு நினைச்சு மறந்துப்//

ஹிஹி தெரியாத விடயத்தை பற்றி கருத்து சொல்லாதீங்கன்னு சொல்வது இதற்குதான். இந்த தீர்வு டைப் 1 எனப்படும் இன்சுலின் உற்பத்தி குறைபாடு கொண்ட சிறுவர்களுக்கான சர்க்கரை வியாதிக்கான சிகிச்சை. இது மற்ற எந்த சிகிச்சையும் செல்லாது என்கிற நிலையில் கடைசி முயற்சியாக செய்யப்படும். இதை செய்தால் காதுவலி போய் திருகு வலி வந்த கதையாக ஆகிவிடும்.மாற்று உறுப்பு பொருத்துவதால் நோயெதிர்ப்பு சக்தியினை குறைக்கும் மருந்தினை உட்கொள்ள வேண்டும். ஏன்னா வெளியிலிருந்து வரும் பான்கிரியாஸை நோயெதிர்ப்பு மண்டலம் தாக்கி அழிக்க பார்க்கும். இதை தடுக்க மருந்து சாப்பிட்டால் பல பிரச்சனை வந்து சேரும். எலும்பு சன்னமாகும், அதீத கொலஸ்ரால், அதீத இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு அடிக்கடி இன்பெக்சன் இப்படி. ஆக காசு இருந்தாலும் கடைசி முயற்சியாத்தான் மருத்துவர் இதை செய்வார்கள்.

ஜோதிஜி said...

மறுபடியும் வவ்வால் அவுட்டா?

ஜோதிஜி said...

நந்தவனம்

சூடாவது ஒன்னாவது. பெரிய கொள்ளை தான் இங்கே நடந்து கொண்டுருக்கு. ஏற்கனவே கலைஞர் இந்த காப்பீடு திட்டத்தை அவருக்கு சாதகமான ஒருத்தருக்கு கொடுத்தாரு. அதுவும் பாதிலியே அம்பேல். இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல. இப்பவும் இருக்கு. யாருக்கும் பலன் உள்ளதா இருக்கான்னு தெரியல. ஆனால் கலைஞர் கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டில் சின்னஅளவில் பாதிப்படைந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. நேரிடையாக பல தொழிலாளர்களின் வாழ்க்கையில் பலன் கிடைத்ததை பார்த்துள்ளேன். மற்றபடிநீங்க சொல்ற அமெரிக்கா போல இங்கே வர இன்னும் கால் நூற்றாண்டு ஆகும். உயிருக்கு பயந்து எல்ஐசி கட்டுபவர்களிடம் போய் மருத்துவ காப்பீடு பற்றி சொல்லிப்பாருங்க. மேலும் கீழும் தான் பார்ப்பாங்க. குறைவான சதவிகிதத்தில் தான் இந்தவிழிப்புணர்வு இருக்கு. அப்படியே இருக்குறவுங்க மருத்துவமனைக்குப் போனாலும் அவனுங்க கொடுக்குற டார்ச்சர் சொல்லி மாளாது. காரணம் அவங்க சொல்ற பதில்...........ஏற்கனவே அனுப்பிய பில் இன்னமும் பாஸ் ஆகல என்பது தான்.

வவ்வால் said...

"நிபுணர்" நந்தவனத்தார் அவர்களே,

இது நீங்க சொன்னது,

//கெட்டமாலிசம் - சிதை மாற்றம் நடந்துக்கிட்டேதான் இருக்கும். ஆனா நீங்க சாப்பிடும் உணவு, உடம்பின் தேவை இவற்றுக்கு அதிகமாக உண்டால் உடம்பில் மெட்டபாலிசத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. தேவைக்கு ஏற்றாற் போல் உண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அப்படி உண்ணுவது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதினால் அதிகம் சாப்பிடுவதை எரித்து தீர்க்க வேண்டியுள்ளது.//

இது நான் சொன்னது,

//உடலுழைப்பு/உடற்பயிற்சி அதிகம் செய்யனும் ,"கூடுதல் கலோரி எரிக்கப்படனும்" என்பதை "கேடபாலிசம்" அதிகம் நடக்கனும்னு கொஞ்சம் வித்தியாசமா சொன்னது ஒரு குத்தமாய்யா,அதுக்கு இம்புட்டு அக்கப்போறா அவ்வ்!//

ரெண்டுக்கும் என்னய்யா வித்தியாசம், நான் கூடுதல் கலோரி எரிக்கப்படனும் என சொன்னதை நீர் அதிகம் சாப்பிட்டதை எரிக்கனும்னு சொல்லி இருக்கீர்,

கூடுதல் கலோரி எரிக்கப்படனும் என்பதை கேடபாலிசம் அதிகம் நடக்கனும்னு கொஞ்சம் வித்தியாசமாக சரியாகவே சொல்லி இருக்கிறேன்,ஆனால் கடம் அடிச்சு பாஸ் பண்ணிட்டு அதான் சரினு நினைக்கும் நீர் மெடபாலிசத்துல கேடபாலிசம் இருக்கு எனவே எப்படி கேடபாலிசம்னு சொல்லலாம்னு குதிக்கிறீர், இது உம்ம ஈகோவை தான் காட்டுது, படிச்சதை புரிந்துக்கொள்ளும் திறன் இல்லாமல் போனால் இப்படித்தான் "அச்சடித்தாப்போலவே" எல்லாம் சொல்லனும்னு "copycat" ஆகிடுவாங்க :-))

//ஆக ஆனபாலிசம் மெட்டபாலிசம் எல்லாம் ஒரு காம்பளக்ஸ் நெட்வொர்க், இரண்டுமே 24 மணிநேரமும் நடந்துகிட்டேதான் இருக்கும்.//

ரெண்டுமே நடப்பதை நானும் இல்லைனு சொல்லவேயில்லை, எது அதிகம் நடக்கிறதோ அதுக்கேற்றார்ப்போல "உடல் அமைப்பு" உருவாகும். கடின உழைப்பாளிகளுக்கு அனபாலிசம் குறைவாக நடந்து ,கேடபாலிசம் அதிகம் நடப்பதால் உடலில் குறைவாக கொழுப்பு சேரும்.

சாப்பிட்ட உணவு(கலோரி) விட குறைவாக வேலை செய்பவர்களுக்கு கேடபாலிசம் குறைவாகவும்,அனபாலிசம் அதிகமாகவும் நடப்பதால் "கொழுப்பு" அதிகம் உடலில் சேமிக்கப்படும்.

நான் சொன்னது உமக்கு புரியாமல் இல்லை,ஆனால் நாம ஒரு "எக்ஸ்பெர்ட்" நாம சொல்லாம இவன் எப்படி சொல்லலாம்னு "ஒரு நினைப்பு" உமக்கு :-))

கிண்டில முதியோர் கல்வி படிக்கும் சிலர் "OGP" கூட இருக்குனு மிதப்பில் வானத்தை பார்த்தே நடப்பார்கள்,அவர்களை எல்லாம் "செமி"னு சொல்வோம் :-))
------------

# //கேளுவி கேடபாலிசமா, மெட்டபாலிசமா? ... இரண்டும்தான் ஓய். //

உம்மை போன்றவர்களுக்கு செக்குக்கும் சிவலிங்கதுக்கும் வித்தியாசம் தெரியாதுனு சொல்வாங்க :-))

மெடபாலிசத்துல , கேடபாலிசம்,அனாபாலிசம் எது அதிகம் நடக்கிறதோ அதை வச்சு "அனாபாலிக் சைக்கிள்",கேடபாலிக் சைக்கிள்"னு சொல்லலாம்.

வரவு எட்டணா, செலவு பத்தணா என்றால் செலவாளி, வரவு எட்டணா செலவு ஆறணா என்றால் சேமிப்பாளி, எல்லாருக்கும் வரவும் செலவும் இருக்கும்,எனவே தனித்தனியா வரவு, செலவை கணக்குப்பண்ணக்கூடாதுனு நீர் சொன்னால் ,பேசி புண்ணியமில்லை ஆள விடு சாமினு ஓடிப்போறது தான் உத்தமம் :-))
-------------

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# //ஆனால் கட்டுக்குள் வைத்திருந்து ஆயுளையும் வியாதிக்கான சிம்டம் மற்றும் பக்கவிளைவினை தடுக்க முடியும்.//

இப்போ இப்படி சொல்லுறீர்,

ஆனால் நான் இப்படி சொன்னப்போது,

////சர்க்கரை நோய் அல்ல அது ஒரு டெபிசின்யசி சிண்ட்ரோம், இன்சுலின் குறைப்பாட்டால் வருவது,தேவையான அளவு இன்சுலின் எடுத்துக்கொண்டால் " சிரஞ்சீவி" தான்.////

நீர் என்ன சொன்னீர் என்றால்,

//உலகின் பெரும்பாலான சர்க்கரை வியாதிஸ்தர்களுக்கு இன்சுலின் ஊசி தேவைபடுவதில்லை. அவர்கள் தேவையான அளவு இன்சுலின் உற்பத்தி செய்தும் அதை உடம்பு பயன்படுத்த இயலுவதில்லை.ஏறக்குறைய 30% நோயாளிகளுக்கு மட்டுமே வெளி இன்சுலின் தேவை இருப்பதாக அமெரிக்க ச.நோ அமைப்பு கூறுகிறது.//

அப்போ டிரீட்மெண்ட் இருக்கு கியூர் இல்லைனு சொன்னது 30% மக்களுக்கா, இல்லை இன்சுலின் இருந்தாலும் பயன்ப்படுத்த முடியாத 70% மக்களுக்கா தெளிவா சொல்லனும் ஓய், சும்மா முன்னுக்கு பின் முரணா சொன்னால் யார் கவனிக்கப்போறாங்க நாம தான் எக்ஸ்பெர்ட் ஆச்சேனு அடிச்சுவிடப்படாது :-))

# பான்கிரியாஸ் டிரான்ஸ்பிளாண்டேஷன் சர்ஜரி இருக்குனு தான் சொல்லி இருக்கேன் அதன் பின்விளைவுகள் இல்லைனா சொன்னேன், மேலும் இன்சுலின் பற்றாக்குறையாளர்களுக்கு என சொன்னப்பிறகு டைப்-1னு தனியா வேற சொல்லனுமா, அது என்ன சின்னப்பசங்களூக்கு அடல்ட்டுக்கும் செய்யலாம்.

கிட்னி டிரான்ஸ்பிளான்டேஷன் செய்தாலும் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும்,மருந்து சாப்பிடத்தான் செய்யனும்,தேவைனா செய்யலையா, எனவே தேவைனா செய்யக்கூடிய ஒரு மருத்துவம்னு சொல்லி இருக்கிறேன், எந்த மருத்துவ சிகிச்சையும் பக்க விளைவே இல்லாத 100 சதவீத குணமளிக்கும் சிகிச்சை அல்ல, தேவை,அவசியம் கருதியும்,பணவசதிப்பொருத்துமே சிகிச்சை மேற்க்கொள்ளப்படுகிறது.
----------------

ஜோதிஜிக்கு நான் அவுட்டானா ஒரு அல்ப சந்தோஷம் போல :-))

ஆனால் நந்தவனம் ஆடுவது போங்காட்டம் என்பதால் அவுட்டானால் அது அடியேன் பிழையே அல்ல :-))

ஆனாலும் ஒரு மொக்கை பதிவில் என்ன அறிவியல் பேச வச்சிட்டார் "நந்தவனம்" அதான் கோராமையா கீது அவ்வ்!
-----------------

வவ்வால் said...

"எக்ஸ்பெர்ட்" நந்தவனத்தார் அவர்களே,

//சுருக்கமாக உங்க கேள்விக்கு விடை. டிரீட்மென்ட் உண்டு ஆனால் கியூர் இல்லை. அதாவது நோயை தீர்க்க இயலாது, ஆனால் கட்டுக்குள் வைத்திருந்து ஆயுளையும் வியாதிக்கான சிம்டம் மற்றும் பக்கவிளைவினை தடுக்க முடியும்.//

நன்றாக சொன்னீர்கள், அடியேன் ஒரு அறிவீலியாகவே இருந்துவிட்டு போகிறேன்,இப்போ எனக்கு ஒரு டவுட்டு அதனை உங்களைப்போன்ற நிபுணர்களால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும்(ஆமாம் இவரு பெரிய முத்துராமரு ,கூந்தலில் மணம் உண்டா இல்லையானு போல டவுட்டு வந்திடுச்சுனு நினைக்கப்படாது)

எய்ட்ஸ்சுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் ஆனால் குணமாவதில்லை, அதாவது நோயை தீர்க்கவியலாது, ஆனால் தொடர்ந்து மருந்து உட்க்கொள்வதன் மூலம் ஆயுளையும், வியாதிக்கான சிம்டம் மற்றும் பக்க விளைவை தடுக்க முடியும் சரியாத்தான் சொல்றேனா?

எய்ட்ஸை முன்னரே உதாரணம் காட்டினேன்,ஆனால் அதனை கவனமாக "தாண்டி' தாண்டியா ஆட்டம் ஆடிவிட்டீர்கள் :-))

இப்போ எய்ட்ஸை சின்ரோம்னு சொல்லுறாங்க, அப்போ அதே போல இருக்க "சர்க்கரை"நோயை" என்னனு சொல்லலாம்? சின்ட்ரோம்னு சொல்லக்கூடாதா?

எய்ட்ஸ் என்பதும் "T1" செல்கள் பற்றாக்குறையாக உடலில் ஆவது தானே, மற்றபடி எய்ட்ஸ் வந்தவன் கதியில் தான் சர்க்கரை வந்தவனும் ஆயுளுக்கும் இன்சுலின், உணவுக்கட்டுப்பாடுனு வியாதி சொஸ்தம் ஆவாமலே வாழ்ந்து மடிகிறான்,

இப்படிலாம் கிண்டி கிழங்கெடுத்து கேள்விக்கேட்கிறேனேனு நீங்க கோவப்படக்கூடாது ஏன்னா நீங்க பெரியவா,எக்ஸ்பெர்ட் எனவே அடியேனின் அய்யத்தினை நீக்கினால் கோடிப்புண்ணியம் :-))

வவ்வால் said...

நந்தவனம்,

//இதுல எதுக்கு இன்சூரன்ஸ் மேட்டரை போட்டு குழப்புகிறீர்.//

மருத்துவ இன்சூரன்ஸு இருக்குல்ல அதான், இன்சூரன்ஸு காரன் தான் நோய் மாதிரி ஆனால் நோய் இல்லை என்பது போல சொல்லி கிளெய்ம் பண்ண முடியாதுன்னான்,அதுக்கு தான் ஓய் உம்மை போட்டு குடையுறேன்,அப்போ சர்க்கரை பாதிப்பு என்ன வகைனு தான் சொல்வது?

அதே போல சர்க்கரைவியாதி கவர் ஆவது போல தனியா பாலிசி இருக்குன்னும் நான் முன்னரே சொல்லிட்டேன், கம்பெனி பொறுத்து மாறும்.

இந்தியாவில சர்க்கரை இல்லாமல் இருந்து ,பின்னர் வந்தாலும் காசுக்கொடுக்க மாட்டங்க, ஒரு வேளை இன்சூரன்ஸ் கம்பெனி பொருத்து மாறலாம், நான் சொல்வது "யுனைட்டட் இந்தியா" என்ற அரசு நிறுவனம்,ஆயிரம் சாக்கு போக்கு சொல்லுறான்.அது இல்லாம 3 ஹெலத் பாலிசி வேற இருக்கு,எதுலவும் கவர் ஆகலை ,அப்போ போட்டது. இனிமே புதுசா விசாரிச்சு தான் எடுக்கணும்.

ஜோதிஜிக்கூட பின்னாடி அதான் சொல்லி இருக்காரு பாரும், காசெல்லாம் கிளெய்ம் செய்ய போனாத்தான் அவனுங்க "விதி" எல்லாம் விதியேனு நம்மை பார்த்து சிரிக்குது :-))

ஜோதிஜி said...

ஒரு மொக்கை பதிவில் என்ன அறிவியல் பேச வச்சிட்டார்

நந்தவனம் கோவித்துக் கொள்ளாதீர். எப்போதும் விஞ்ஞானிகள், தத்துவஞானிகள், கருத்துரையாளர்கள், மேன்மக்கள், ஜென்டில்மேன் போன்ற வகையாறாக்களுக்கு நீங்களும் நானும் என்ன பேசினாலும் எழுதினாலும் அது வெறுமனே மொக்கையாகத்தான் தெரியும்.

? said...

சின்ரோம் என்றால் இன்சூரன்ஸ் பணம் தரமாட்டார்களா? என்ன எழவோ? தமிழ்நாட்டில் என்ன ஒழுங்காய் நடக்கிறது, இது நடக்க? ஒபாமாவே இன்சூரன்ஸ் அழிச்சாட்டியத்தை ஒழிக்க முயற்சிக்கின்றார், ஆனால் கலைஞர் அந்த சாத்தானை இங்கு அறிமுகப்படுத்தி அதை சாதனை என்று வேறு சொல்லுகிறார்.

ஆனால் அது மருத்துவம் சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. சர்க்கரை வியாதி கிளைம் பணம் தராமல் இருப்பது வியாபார திருட்டுத்தனம். அதை இங்கு விவாதிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். டெபிசியன்ஸி சின்ரோம் வியாதி இப்படி எதுவாக இருந்தாலும் pre existing condition எனில் பணம் தருவது முறை. இல்லாவிடில் அரசாங்கம் அதை நடைமுறை படுத்தவேண்டும். முடிந்தால் இந்த இன்சூரன்ஸை ஒழித்து அரசு மருத்தவமனைகளை பலபடுத்துவது- கனடா மாதிரி சிறந்தது. அமெரிக்க மாடலை எல்லா விடத்திலும் கடைபிடிப்பது சரியல்ல. ஆனால் அதுதான் காசு குவிக்கும் மாடல் என்பதினால் நம்மாளுக அதை பிடித்து மருத்துவம் கல்வி என தொங்குகிறார்கள். ஆனால் அது இங்கு நமது பிரச்சனை அல்ல.

? said...

திருத்தம்: pre existing condition அல்ல எனில்

? said...

//வித்தியாசமா சொன்னது ஒரு குத்தமாய்யா,அதுக்கு இம்புட்டு அக்கப்போறா //

ஒருத்தனை சென்னைக்காரன் தமிழ்நாட்டுக்காரன்னு சொன்னா அது வித்தியாசா? அடக்கண்றாவியே. சென்னைக்காரன்னாலே அவன் தமிழ்நாட்டுக்காரன்தானே?

இது ஒண்ணும் பெரிய தப்பில்லை. டெக்னிக்கலாக ஒரு வார்த்தையினை உபயோகப்படுத்தினாலே போதும் என்றதற்கு நீர்தான் பொங்கிவிட்டீர், அப்புறம் என்னைக் குறை சொல்லகிறீர்.அதை சமாளிக்க நீர் பட்டபாடு இருக்கே கெட்டபாலிசமா மெட்டபாலிமா அதா இதா என படு மொக்கை போட்டீர்.

//உம்ம ஈகோவை தான் காட்டுது,//

எனக்கு ஈகோவா உமக்கு ஈகோவா என படிப்பவர்கள் முடிவு செய்வார்கள்.

//மெடபாலிசத்துல , கேடபாலிசம்,அனாபாலிசம் எது அதிகம் நடக்கிறதோ அதை வச்சு "அனாபாலிக் சைக்கிள்",கேடபாலிக் சைக்கிள்"னு சொல்லலாம்.//

அரைகுறையாக இணையத்தில் அரைகுறையாக படித்துவிட்டு வந்து பினாத்துகிறீர் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

சைக்கிள் என்பது ஒரு செயல் சுழன்று முற்றுப்பெறுவது. ரெயின் சைக்கிள் (மழை சுழற்சி) என்றால் மேகம் மழையாக பொழிந்து அந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக மீண்டும் மேகமானால் சுழற்சி முற்றுப்பெற்றது என்பர்,சரிதானே? ஆனால் அனபாலிசம் நடந்தால் சிறு மூலக்கூறிலிருந்து அதைவிட பெரிய மூலக்கூறு உற்பத்தி ஆகியபடியே இருக்கும். அதேமாதிரி கெட்டபாலிசம் பெரிய மூலக்கூறுகள் சிதைந்து சிறு மூலக்கூறு உற்பத்தி ஆகும். இது சைக்கிளாக மாறினால், அதாவது பெரிய மூலக்கூறுகள் உடைந்து சிறுமூலக்கூறாக மாறி (கெட்டபாலிசம்) அச்சிறு மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் பெரியனவாக மாற்றமுறும் சுழற்சி- இது மெட்டபாலிக் சைக்கிள் என்பார்கள் அதாவது வளர்சிதை மாற்றம்.

அனாபாலிக் சைக்கிள்",கேடபாலிக் சைக்கிள் அப்படின்னு ஒன்னு இருக்கவே முடியாது. இரண்டும் இணைந்தால்தான் சுழற்சி கிட்டும்.தனித்தனியாக அல்ல. ஆக மெட்டபாலிக் சைக்கிள் மட்டுமே உண்டு!

//பேசி புண்ணியமில்லை ஆள விடு சாமினு ஓடிப்போறது தான் உத்தமம் //

இதை எப்ப ஓய் நீர் செஞ்சிருக்கீர். உம்மைக் கண்டால்தான் அவனஅவன் துண்டக்காணோம், துணிக்காணோம்னு ஓடிவிடுறான்.

? said...

//அப்போ டிரீட்மெண்ட் இருக்கு கியூர் இல்லைனு சொன்னது 30% மக்களுக்கா, இல்லை இன்சுலின் இருந்தாலும் பயன்ப்படுத்த முடியாத 70% மக்களுக்கா தெளிவா சொல்லனும் ஓய், சும்மா முன்னுக்கு பின் முரணா சொன்னால் யார் கவனிக்கப்போறாங்க நாம தான் எக்ஸ்பெர்ட் ஆச்சேனு அடிச்சுவிடப்படாது :-))//

நீர் சொன்ன கணைய மாற்று சிகச்சை ஒருவித கியூர்தான். ஆனால் அது வேறுவித ஏழரையை இழுத்துவிட்டுவிடும். இதை டைப் 1 நோயாளிகளுக்கு மட்டும் செய்கிறார்கள். இவர்களுக்கு இன்சுலிம் சுரப்பு மட்டுமே பிரச்சனை.இவர்கள் வெளி இன்சுலின் தேவைப்படும் 30%-த்தில் 10% மட்டுமே. மீதி 20% பேருக்கு வேறு மருந்துகளுகளும் தேவை, ஏனெனில் இவர்களுக்கு இன்சுலின் சுரப்பும் குறைவு, சுரந்த இன்சுலினை பயன்படுத்தும் திறனும் குறைவு. ஆக 90% நோயாளிகளுக்கு கணைய மாற்று அறுவை சிகச்சை கியூர் அல்ல. கணையமாற்று அறுவை சிகச்சை செய்து கொண்டோருக்கும் உள்ள பிரச்சனைகளை கணக்கில் கொண்டால் சர்க்கரை வியாதிக்கு தீர்வு இல்லை எனவே கருதவேண்டியுள்ளது.

இப்போது தமிழக அரசுமருத்துவனையிலும் இதை பண்ண ஆரம்பித்துள்ளார்களாம்.ஆனால் கிட்னி பெயிலியர் ஆன நோயாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்கிறார்கள்.

//அது என்ன சின்னப்பசங்களூக்கு அடல்ட்டுக்கும் செய்யலாம்.//

உம்மை விட்டால் நல்ல இருக்கறவனையும் பிடிச்சு, 'உனக்கு சர்க்கரைவியாதி வந்தாலும் வரும் இன்னைக்கே கணைய மாற்று அறுவை சிகிச்சை பண்ணிக்கோ' என பண்ணி வைத்து விடுவீர். ஆனால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என கவனியும்
http://www.diabetes.org/living-with-diabetes/treatment-and-care/transplantation/pancreas-transplantation.html
மேலும் கலிபோர்னிய பல்கலை'யின் கணையமாற்று அறுவை சிகிச்சை துறையின் வெப்சைட்டிலிருந்து...
a lack of insulin producing beta cells causes type 1 diabetes (also known as juvenile-onset or insulin-dependent diabetes mellitus), and replacement of the beta cells through transplantation is the only current treatment that provides freedom from insulin therapy. Insulin resistance characterizes type 2 diabetes (also known as adult onset or non-insulin-dependent diabetes mellitus), and transplantation is not a widely accepted treatment option for these patients.

இந்த வகை நோயாளிகள் 10% மட்டுமே.

? said...

//இப்போ எய்ட்ஸை சின்ரோம்னு சொல்லுறாங்க, அப்போ அதே போல இருக்க "சர்க்கரை"நோயை" என்னனு சொல்லலாம்? சின்ட்ரோம்னு சொல்லக்கூடாதா?
எய்ட்ஸ் என்பதும் "T1" செல்கள் பற்றாக்குறையாக உடலில் ஆவது தானே, மற்றபடி எய்ட்ஸ் வந்தவன் கதியில் தான் சர்க்கரை வந்தவனும் ஆயுளுக்கும் இன்சுலின்,உணவுக்கட்டுப்பாடுனு வியாதி சொஸ்தம் ஆவாமலே வாழ்ந்து மடிகிறான்,இப்படிலாம் கிண்டி கிழங்கெடுத்து கேள்விக்கேட்கிறேனேனு நீங்க கோவப்படக்கூடாது ஏன்னா நீங்க பெரியவா,எக்ஸ்பெர்ட் எனவே அடியேனின் அய்யத்தினை நீக்கினால் கோடிப்புண்ணியம் :-))//

ஹிஹி இதுக்கெல்லாம் அசந்துருவமா என்ன? நீர் என்ன கேள்வி கேட்டு கிழங்கெடுத்தாலும் பரவாயில்லை கிருஷ்ணாயில் எடுத்தாலும் அசரமா பதில் சொல்லுவோமாக்கும்.

எயிட்ஸ் வர காரணம் T1 cell காரணம் அல்ல. அது T லிம்போசைட்கள். சரியாக சொல்லுவது எனில் இங்கு பற்றாக்குறை- டிபிசியன்ஸி அல்ல காரணம் depletion தான் காரணம். அதாவது செல் உற்பத்தி பிரச்சனை இல்லை. அவை அழிவுறுவதுதான் காரணம். AIDS Acquired immune deficiency syndrome- இங்கு immune deficiency அதாவது நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு.

ஆக உம்ம கருத்துப்படி ஒருத்தன் ஆயுள் முழுக்கு மருந்து சாப்பிடும் வியாதி எல்லாமே ஸின்ரோம் என அழைக்கவேண்டுமா? அப்ப ஆஸ்துமா போன்ற பல வியாதிகளுக்கு மருந்து சாப்பிட்டால் கட்டுப்படுத்தான் முடியும், குணப்படுத்த இயலாது. அதனால் இவை எல்லாவற்றையும் சின்ரோம் என மாற்றிவிடவேண்டுமா?

எயிட்ஸை ஏன் ஸின்ரோம் என அழைக்கிறார்கள்? Acquired immune deficiency syndrome. இது நோயெதிர்ப்பு குறைபாடு காரணமாக வரும் TB போன்ற பல்வேறுபட்ட வியாதிகளை குறிக்கிறது. நோயெதிரிப்பு சக்தி குறைந்த அதாவது எயிட்ஸ் வந்த ஒருவனை sterile ஆன கிருமி இல்லை இடத்தில் வைத்தால் அவனுக்கு எந்த பிரச்சனையும் வராது. அதாவது எயிட்ஸ் காரணமாக நேரடி தாக்கம் ஏதுமில்லை. ஆனால் நிஜ உலகில் கிருமி தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாவான். முக்கியமாக, HIV தாக்குதலால் எயிஸ்ட் வரலாம், வராமலும் போகலாம். எயிட்ஸ் இருப்பதை உணர HIV டெஸ்ட் பண்ணி கண்டுபிடிக்க முடியாது. நோயெதிர்ப்பு குறைபாட்டின் விளைவாக வரும் பிற வியாதிகளையும் சிம்டங்களையும் வைத்து இவ்வியாதி உணரப்படும். அதாவது ஸிம்டம் மூலமாகவே உணர முடிவதால் இது சின்ரோம்.

இங்கு இன்சுலின் பற்றாக்குறை மட்டும் காரணம் அல்லவே, உபயோபடுத்துவதும் பிரச்சனை. சர்க்கரைவியாதிக்காரனுக்கு இன்சுலின் சுரப்பு மற்றும் உபயோக பிரச்சனையினால் நேரடி விளைவினாலேயே சாவான்.ஆனால் இன்சுலின் சுரப்பு சோதனை, சர்க்கரை அளவை வைத்தே சர்க்கரை வியாதியினை கண்டறிய முடியும்.

எயிட்ஸ் என்பது மிகவும் காம்ப்ளக்ஸ் ஆன வியாதி. ஆனால் சர்க்கரை வியாதி அப்படி அல்ல. மெட்டபாலிக ஸின்ரோமை எடுத்தால் அது காம்லக்ஸான வியாதி. சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் என பல்வேறுவகைபட்ட வியாதி குழப்பங்களின் தொகுப்பு. சுருக்கமாக ஸிம்டம்களின் தொகுப்பினை வைத்து வியாதியினை வகைப்படுத்தினால் அது ஸின்ரோம்.

சர்க்கரை வியாதி ஸின்ரோம் என்று எவனும் இணைத்தில் கூட கூவுவது இல்லை என்பதே அது தவறான பதம் என்பதற்கான அறிகுறி. ஆனால் நீர் சொன்னால் அதை உலகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஓவராக தெரியவில்லையா? இந்த லட்சணத்தில் எனக்கு ஈகோவாம்!

? said...

@ஜோதிஜி
வவ்வாலிடம் கோவமெல்லாம் இல்லை. அவரு கண்டபடி பேசுவார், ஆனா நம்ம பேசினாலும் கண்டுக்கமாட்டார்.

அவரது பாணியே கருத்துடன் தனிதமனித தாக்குதலும் சுய பில்டப்பும் கலந்து கிண்டலுடன் பேசி எதிராளியை திணர அடிப்பதுதான். அவரு செய்யும் தனிமனித தாக்குதலுக்கு பயந்த பலர் ஓடிவிடுவதால் தாதா ரேஞ்சு உலா வருகிறார். அவரு ஸ்டைலு பாருங்க தாதா மாதிரியேதான் இருக்கும். திட்டலும் பில்டப்பும் கலந்து. அதை கண்டு கொள்ளாமல் அவருடன் பேசினால்தான் உண்டு.

அது போக வாத்தியார் சின்ரோம் வேறு. இவரை மாதிரியே இன்னொரு பதிவரும் உண்டு. தப்பை சொன்னால் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.உலகில் எல்லா விடயத்தை பற்றியும் எக்ஸ்பர்ட் மாதிரி பேசுவார்கள். டாக்டரிடம் போனால், எனக்கு காய்ச்சல், ஒரு பத்து அனாசின், 6 டெட்ராசைகளின், 6 பி விட்டமின் காம்லக்ஸ் எழுதி கொடுத்தீங்கன்ன சரியாப் போயிரும் என்பார்கள். உங்க துறையை பற்றி உங்க்கிட்டையே பாடமெடுப்பார்கள். உலகின் எல்லாவிடயத்திலும் எக்ஸ்பர்ட்டாக ஒருத்தன் இருக்கே முடியாது, ஒவ்வொரு துறையிலும் நிபுணர் உண்டு என ஒப்பு கொள்ளமாட்டார்கள்.

ஆனாலும் வவ்வாலை ஏன் பிடிக்கிறது என்றால் அவரது தெரிந்து கொள்ளும் ஆர்வமும், அதை பகிர்ந்து கொள்ளும் தன்மையும்தான்.நானும் இவரை மாதிரியேதான் சின்ன வயதில் இருந்தேன். மிக்சர் பொட்டலத்தில் இருக்கும் விடயத்தைக்கூட விடாமல் படித்து கிடைப்பவனிடம் எல்லாம் மொக்கை போட்டு அறிவுதிறம் காட்டிவந்தேன். இப்ப வவ்வாலை பார்த்து அவனவன் ஓடி ஒளிவது போலயே எனக்கும் நேர்ந்தது. கடும் நேரவிரயமும் எதிரிகளை சம்பாதித்ததும் தான் மிச்சம். சில நண்பர்கள் நம்மை புத்திசாலி என கருதி என்ன ஆகப்போகிறது? ஆனால் இது வேலைக்கு ஆவாது என எனது துறையில் மட்டும் அதிக கவனமும், விவாதத்தை குறைந்தும் விட்டேன். ஆனாலும் வவ்வால் எதையும் சீரியஸாக எடுப்பவர் இல்லை என்பதினால் அவருடன் மட்டும் அவ்வப்போது மொக்கைபோர் செய்வதுண்டு.

வவ்வால் said...

நந்தவனம்,

//அது போக வாத்தியார் சின்ரோம் வேறு. இவரை மாதிரியே இன்னொரு பதிவரும் உண்டு. தப்பை சொன்னால் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.உலகில் எல்லா விடயத்தை பற்றியும் எக்ஸ்பர்ட் மாதிரி பேசுவார்கள். டாக்டரிடம் போனால், எனக்கு காய்ச்சல், ஒரு பத்து அனாசின், 6 டெட்ராசைகளின், 6 பி விட்டமின் காம்லக்ஸ் எழுதி கொடுத்தீங்கன்ன சரியாப் போயிரும் என்பார்கள். உங்க துறையை பற்றி உங்க்கிட்டையே பாடமெடுப்பார்கள். உலகின் எல்லாவிடயத்திலும் எக்ஸ்பர்ட்டாக ஒருத்தன் இருக்கே முடியாது, ஒவ்வொரு துறையிலும் நிபுணர் உண்டு என ஒப்பு கொள்ளமாட்டார்கள்.//

"old school of thoughts" இல் ஊறியவர்கள் சொன்ன கருத்து என்னனு பார்க்க மாட்டார்கள் சொன்னவன் யாருனு பார்ப்பாங்க, அதை சொல்ல தகுதி இருக்கானு வேறப்பார்ப்பாங்க, அவங்களை எல்லாம் திருத்துவது ரொம்ப கடினம் :-))

இங்கே யாரும் எல்லாத்துறையிலும் எக்ஸ்பெர்ட்னு சொல்லிக்கொள்ளவில்லை ,ஆனால் சொன்னது என்னனு பார்க்காமல் நீ எக்ஸ்பெர்ட்டா எப்படி சொல்லலாம்னு மட்டையடி அடிப்பவர்களுக்கு தான் "தன்னடக்கம்" அதிகமா இருக்குதாம்.

இத்தனைக்கும் நான் எல்லாத்துறையிலும் எக்ஸ்பெர்ட் போல "பதிவு" எழுதுவதேயில்லை, அவ்வப்போது பின்னூட்டங்களில் மட்டுமே உரையாடுவது வழக்கம்ம், ஏன் எனில் ஒரு கருத்து சொல்ல பெரிய நிபுணராக இருக்க வேண்டியதேயில்லை, அப்படிப்பார்த்தால் கலைஞரை குறை சொல்ல வேண்டும் எனில் ஒரு 50 ஆண்டு கால அரசியல் அனுபவமோ, இல்லை பொலிடிகல் சயின்சில் பி.எச்டியோ வாங்கிட்டு தான் வரனும்,ஆனால் நீர் உட்பட எல்லாம் போற போக்கில் "கருத்துக்களை" சொல்வதில்லையா?

ஜோதிஜி(ஒரு உதாரணத்துக்கு தான் சொல்கிறேன்) கூட அவர் துறையல்லாதவற்றை பற்றி எல்லாம் பதிவா போடத்தான் செய்கிறார் , இன்னும் சொல்லப்போனால் ரா, சி.ஐ.ஏ பத்தியெல்லாம் அருகில் நெருங்கி சென்று பார்த்து பதிவெழுதினேன் என்கிறார் :-))

அப்போலாம் உமக்கு உளவுத்துறை எக்ஸ்பெர்ட்டா இல்லாதவங்க எப்படி இப்படிலாம் எழுதுறாங்கன்னு சந்தேகமே வராது , இங்கே நீர் மல்லுக்கட்டுவது எதற்கு என்றால் "வவ்வால்" என்ற பெயரால் தான், என்னை மடக்கிட்டதா காட்ட ரொம்பத்தான் முக்கினீர் :-))

உம்மை போலவே வரிக்கு வரிப்பிடிச்சு கேட்டால் நீர் பிதற்றியவற்ரையும் வெளிக்கொண்டுவர முடியும், சரி டிராக் மாறிடுமேனு விட்டு பிடிச்சேன் ,

எக்ஸ்பெர்ட்டான நீரே குத்து மதிப்பா தான் பேசிட்டு இருக்கீர்

//அப்போது குளுக்கோஸ் எரியும் போது உருவாகும் பொருளில் இருந்து உடம்பு அமினோ அமிலத்தை உற்பத்தி செய்து அதிலிருந்து புரத உற்பத்தி செய்யும். ஆக ஆனபாலிசம் மெட்டபாலிசம் எல்லாம் ஒரு காம்பளக்ஸ் நெட்வொர்க்,//

குளுக்கோஸ் எரியும் போது என்ன பொருள் உருவாச்சு? அதில் இருந்து அமினோ அமிலம் உருவாக்குதாமா?

ATP மட்டும் தான் உருவாகி ,அனாபாலிசத்துக்கு உதவுது, ATP தான் நீங்க சொன்ன பொருளா :-))

எனக்கு சரியாத்தெரியலை, நீர் தானே எக்ஸ்பெர்ட் விளக்கினால் கேட்டுப்பேன்!

//உலகின் பெரும்பாலான சர்க்கரை வியாதிஸ்தர்களுக்கு இன்சுலின் ஊசி தேவைபடுவதில்லை. அவர்கள் தேவையான அளவு இன்சுலின் உற்பத்தி செய்தும் அதை உடம்பு பயன்படுத்த இயலுவதில்லை.ஏறக்குறைய 30% நோயாளிகளுக்கு மட்டுமே வெளி இன்சுலின் தேவை இருப்பதாக அமெரிக்க ச.நோ அமைப்பு கூறுகிறது.//

30% நோயாளிகளுக்கு தான் இன்சுலின் சப்ளிமெண்ட் தேவைனு சொல்லிட்டு மற்றவங்களுக்கு எல்லாம் இன்சுலின் இருந்தாலும் பயன்ப்படுத்த முடியாத நோய்னு சொல்லிட்டீர் ,அப்போ 70% பேருக்கு ஜெனிடிக் குறைப்பாட்டால் இன்சுலின் பயனில்லாமல் போகுதுனு சொல்லிட்டிங்க,

அதன்படியே பார்த்தால் விக்கியில் அப்படிப்பட்ட பாதிப்பை பற்றி சொல்லுறத பாருங்க,

//Diabetes mellitus type 2 (formerly noninsulin-dependent diabetes mellitus (NIDDM) or adult-onset diabetes) is a "metabolic disorder" that is characterized by high blood glucose in the context of insulin resistance and relative insulin deficiency.[2]//
http://en.wikipedia.org/wiki/Diabetes_mellitus_type_2

ஹி...ஹி நோய்னு சொல்லாம டீசண்டா டிஸார்டர்,ரிலேடிவ் இன்சுலின் டெபிசியன்சினு சொல்லிடுறாங்க, இதப்போல சொன்னா என்னனு முடிவெடுப்பதாம்,அதான் நோய்னு நீங்களே சொல்லிட்டிங்க,அப்புறம் என்ன தெளிவா நோய்னு சொல்லிட்டு போகாம டிஸார்டர், டிபிசியன்சினு ஜல்லியடிச்சிக்கிட்டு?

உடனே விக்கிலாம் சுத்த கப்சா தப்பு தப்பா எழுதி வைப்பாங்க, எக்ஸ்பெர்ட் சொல்றத தான் கேட்கணும்னு ஆரம்பிச்சுடுவீங்க :-))

தொடரும்...

வவ்வால் said...

தொடரும்...

# // HIV தாக்குதலால் எயிஸ்ட் வரலாம், வராமலும் போகலாம். எயிட்ஸ் இருப்பதை உணர HIV டெஸ்ட் பண்ணி கண்டுபிடிக்க முடியாது. நோயெதிர்ப்பு குறைபாட்டின் விளைவாக வரும் பிற வியாதிகளையும் சிம்டங்களையும் வைத்து இவ்வியாதி உணரப்படும். அதாவது ஸிம்டம் மூலமாகவே உணர முடிவதால் இது சின்ரோம்.//

ஹி..ஹி ஜலதோஷம் பிடிச்சிருக்கானு கண்டுப்பிடிக்க தானே இந்த டெஸ்டெல்லாம் இருக்கு "elisa, western blot, indirect fluorescent antibody (IFA) test ,HIV NAAT (nucleic acid amplification testing) "

எக்ஸ்பெர்ட் ஆனா நீங்க சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும் :-))

# சைக்கிள்னு பொதுவா சொல்லிட்டேன் கேடபாலிசத்துல வர "கிரப்ஸ் சைக்கிள்" என சொல்லி இருக்கனும் போல.

அனபாலிக்,கேடப்பாலிக்னு தனியா சொல்லக்காரணமே , மெடபாலிசம் எப்பொழுதும் நடக்கும் ,ஆனால் சில வேளைகளில் அதிக அனபாலிசம், குறைவா கேட பாலிசமும், சில வேளைகளில் குறைவான அனபாலிசம்,அதிக கேடபாலிசம் நடக்கும் என்பதாலே,

இப்போ ஒருவர் மூக்கு முட்ட சாப்பிட்டு வேலையே செய்யாமல் படுத்து தூங்குறார் ,அவர் உடலிலும் மெட பாலிசம் நடக்குது, அதே சமயம் ஒருவர் சாப்பிட்டுவிட்டு நல்லா கடினமாவும் வேலை செய்யறார் அவர் உடலிலும் மெடபாலிசம் நடக்குது, முன்னவர் குண்டா இருக்கார், பின்னவர் சிக்குனு "சிக்ஸ் பேக்"இல் இருக்கார், ஆக இப்போ ரெண்டு பேருக்கும் நடந்த மெடபாலிசத்துல ஒரு வேறு பாடு இருக்கு,அதனை எப்படி குறிப்பிடுவது, சும்மா மெட்டபாலிசம் நடந்துச்சு "கலோரி" எரிச்சார்னு சொன்னா போதுமா? வேறுபாட்டினை தெளிவாக சொல்ல "கேடபாலிசம் அதிகம் நடந்தால் " கலோரி எரியும்னு சொன்னதுக்கு , இப்படி ஒரு வம்பளப்பு? இதுல வேற ஈகோவே இல்லியாம் :-))
-------------

ஜோதிஜீ,

//விஞ்ஞானிகள், தத்துவஞானிகள், கருத்துரையாளர்கள், மேன்மக்கள், ஜென்டில்மேன் போன்ற வகையாறாக்களுக்கு//

ஆமாம்ம் இந்த வகையறாக்கள் எல்லாம் யாரு உங்க உறவுங்களா :-))

மொக்கைப்பதிவுனு சொன்னதும் என்னமா பொங்குறீர் , அறிவியல் பேசாமல் அனுபவப்பதிவாக இருப்பதையே அப்படி "தமாஷா" சொன்னேன், அதுக்கே இந்த பொங்கு பொங்குறேள், கூட பக்கா வாத்தியமா நந்தவனத்த வேற கூப்பிடுறிங்க :-))
-------------------


இப்போ நான் சொன்னத போல என்னிக்காச்சும் எதாவது டாக்டர் உங்களுக்கு "சர்க்கரை பாதிப்பெல்லாம் ஒரு நோய்னே சொல்ல முடியாது, கவலைப்பட எதுவுமேயில்லைனு "சொல்லுவார் அப்போ நினைச்சுக்கோங்க,அன்னிக்கே வவ்வால் இதத்தானே சொன்னான்னு :-))

நாம எப்போவுமே கொஞ்சம் அட்வான்சா திங்க் பண்ணுவோம்ல :-))

வவ்வால் said...

விட்டுப்போச்சு,

பாடி பில்டர்ஸ், வெயிட்லிஃப்டிங் செய்றவங்க எல்லாம் பாடி மாஸ் அதிகப்படுத்த அனபாலிசம் தூண்ட "அனபாலிக் ஸ்டீராய்டு" மருந்து எடுத்துக்கிறாங்க, அதே போல ஸ்லிம் ஆக கேடபாலிசம் தூண்டவும் மருந்து(Cortisol வகை ) எடுத்துக்கிறாங்க.எனவே சும்மா மெட்டபாலிசம் நடக்குதுனு சொன்னாப்போதும் என்பதெல்லாம் "எக்ஸ்பெர்ட்டான" கருத்தல்ல :-))

? said...

வவ்வால் கருத்து சொலவது என்பது வேறு. ஒரு உண்மையை சொல்லுவது வேறு.

நீர் இணையத்தில் படித்துவிட்டு தவறாக எழுதுகிறீர்.உமக்கே முழுவதும் தெரிய கணித கோட்பாட்டினை அடுத்தவர்க்கு விளக்க முற்படுவது தவறில்லையா? மருத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் மருத்துவர் எழுவது நலம். எப்படி டீரிட்மெண்ட் தரவேண்டும் என்று எழுதுவதும் அவ்வியாதியினை விளக்க முற்படுவதும் தவறுதான். அதே நேரத்தில் நீர் எழுதிய எல்லாம் தவறு அல்ல.அதில் சில பிழைகளும் இருந்தன. அதை சுட்டிக் காட்டினேன். இதையே மருத்துவர் எழுதினால் இத்தவறு ஏற்ப்பட்டிருக்காது. ஆனால் உலகில் உள்ள அனைத்து துறையிலும் ஆளுக்காள் உடனடி மருத்தவராகி யோசனை சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். இப்படி தவறாக தகவல் போவதால் பலர் பாதிக்கப்படுதல் முறையா?

அறிவியல் உண்மை பற்றி உமது கருத்தை பதிவு செய்யுங்கள். ஆனால் உங்களையே விஞ்ஞானி/மருத்துவர் என நினைத்து சொந்த கருத்துக்களை சேர்க்காதீர் என்பது நான் சொல்ல வருவது.

நான் குத்துமதிப்பாக பேச காரணம் ரொம்ப டீப்பாக போனால் மற்றவருக்கு போர் அடிக்கூடாது என்பதாலேயே மேலோட்டமாய் உள்ள கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.

//குளுக்கோஸ் எரியும் போது என்ன பொருள் உருவாச்சு? அதில் இருந்து அமினோ அமிலம் உருவாக்குதாமா?

ATP மட்டும் தான் உருவாகி ,அனாபாலிசத்துக்கு உதவுது, ATP தான் நீங்க சொன்ன பொருளா எனக்கு சரியாத்தெரியலை, நீர் தானே எக்ஸ்பெர்ட் விளக்கினால் கேட்டுப்பேன்!:-)//

அப்படி கேளும். சொல்கிறேன்.

குளுக்கோஸ் குரூடாயில் போல, ATP என்பது பெட்ரோல் மாதிரி. ATP வளர்மாற்றத்திற்கு மட்டுமல்ல பல வேலைகளுக்கு தேவை. நாம் வேலை செய்யும் போது தசையில் எரிந்து சக்தி அளிப்பது ATP-தான், குளுக்கோஸ் எரிந்து பைருவேட் ஆக மாறும் அப்போது ATP உருவாகும். கடைசியாக கிடைக்கும் பைருவேட்டிலிருந்து அலநைன் எனும் அமேனோ அமிலம் உற்பத்தி செய்யப்படும். இந்த அலநைன்லிருந்து வேறு சில அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய முடியும் (இதிலிருந்து புரதம் உற்பத்தி ஆவும்). உடம்பில் குளுக்கோஸ் குறைந்தால் அவசர தேவைக்கு அலநைன்லிருந்து குளுக்கோஸ் உற்பத்தி ஆவும். அது குளுக்கோஸ் அலநைன் சைக்கிள் என அன்புடன் அழைக்கப்படுகிறது.

? said...



//ஹி...ஹி நோய்னு சொல்லாம டீசண்டா டிஸார்டர்,ரிலேடிவ் இன்சுலின் டெபிசியன்சினு சொல்லிடுறாங்க, இதப்போல சொன்னா என்னனு முடிவெடுப்பதாம்,அதான் நோய்னு நீங்களே சொல்லிட்டிங்க,அப்புறம் என்ன தெளிவா நோய்னு சொல்லிட்டு போகாம டிஸார்டர், டிபிசியன்சினு ஜல்லியடிச்சிக்கிட்டு?
உடனே விக்கிலாம் சுத்த கப்சா தப்பு தப்பா எழுதி வைப்பாங்க, எக்ஸ்பெர்ட் சொல்றத தான் கேட்கணும்னு ஆரம்பிச்சுடுவீங்க//

சர்க்கரை நோய் என்றால் என்ன என விளக்கம் தரவே அதை எழுதியிருக்காங்க. அவுங்க சரித்தான் எழுதியிருக்கின்றார்கள்.

டயபடீஸ் வந்தால் மெட்டபாலிசம் டிஸ்ஆர்டர் ஆகும். டிஸ்ஆர்டர் என்றால் வழக்கத்திலிருந்து உடம்பில் மாறுபட்ட இருக்கும் விடயம், ஆனால் முழுமையாக வரையறுக்கபடாத வி்டயத்தை குறிக்க உபயோகப்படுத்துவார்கள். சர்க்கரை வியாதி வந்தால் மெட்டபாசம் வழக்கத்திற்கு மாறாக நடக்கும். குளுக்கோஸ் கிடைக்காத காரணத்தால் செல்கள் மாற்று எரிபொருளை தேட வேண்டியிருப்பதால் மெட்டபாலிசம் மாறும். ஆனா என்னவென்ன மாற்றம் என முழுவதும் தெரியாது. ஆகவே இது மெட்டபாலிக் டிஸ்ஆர்டர். இன்சுலின் செயலின்மை மற்றும் குறைபாடு காரணமாக இது ஏற்படும் என்று வியாதிக்கு டெபனிசன் தருகிறார்கள்.

ஒருவியாதி டிசீஸ் என எப்போது அழைப்போம்? defined clinically verifiable pathology இருக்கும் போது மட்டுமே. டிஸ்ஆர்டர் வழக்கத்து மாறுபட்டது ஆனா வரையறை செய்ய இயலாதது உ-ம் மென்டல் டிஸ்ஆர்டர்கள். வழக்கத்து மாறான மனோநிலை. மேலும் பல வியாதிகளை டிஸ்ஆர்டர் என்ற பதத்தில் அடக்கிவிடலாம் காய்ச்சல் - வெப்பநிலை டிஸ்ஆர்டர், கான்சர் குரோத் டிஸ்ஆர்டர் இப்படி.

சர்க்கரை வியாதி குறைபாட்டு நோய் மட்டுமல்ல. குறைபாட்டின் காரணமாகவும் வேறு காரணத்தாலும் ஏற்படும். ஆகவே டிபிசியன்ஸி டிஸ்ஆர்டர்/ டிசீஸ் என அழைக்க முடியாது. ஒருவேளை நீர் சொல்லுவதை ஏற்று மருத்துவர்கள் insulin resistance காரணமாக ஏற்படுவது ஒன்று டிபிசியன்ஸி காரணமாக ஏற்படுவது வேறு என இரண்டாக பிரித்தால் ஒரு பிரிவுக்கு இன்சுலின் டிபிசியன்ஸி டிசீஸ் என அழைக்கலாம்.

மேலும் சர்க்கரை வியாதி clinically verifiable அதனால் அது disease. Not a syndrome.

இதை எல்லாம் அறிஞர்கள் வரையறுத்ததைதான் நான் சொல்லுகிறேன். இது எனது கண்டுபிடிப்பு அல்ல. மருத்தவத்துறை ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலர் தவறாக இப்பதங்களை உபயோகப்படுத்துவதையும் ஆனால் அவற்றுக்கிடையேயான தெளிவான வேறுபாட்டையும் விளக்கிய எமது கிளினிகல் கவாத்தியார் ஒருவர் எங்களை சரியான பதங்களை பயன்படுத்த வலியுறுத்துவார். இதனால்தான் இங்கு இத்தனை முக்கு முக்கி உமக்கு விளக்க முற்படுகிறேன்.

? said...



//ஹி..ஹி ஜலதோஷம் பிடிச்சிருக்கானு கண்டுப்பிடிக்க தானே இந்த டெஸ்டெல்லாம் இருக்கு "elisa, western blot, indirect fluorescent antibody (IFA) test ,HIV NAAT (nucleic acid amplification testing) "

எக்ஸ்பெர்ட் ஆனா நீங்க சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும் :-))//

இதெல்லாம் முதல்வருட மருத்துவ அல்லது மைக்ரோபாயாலஜி மாணவன் கேட்குற கேள்விகளை கேட்டுவிட்டு புத்தசாலி என நினைக்கும் உம்மை என்ன சொல்வது?

நீர் சொன்ன டெஸ்டை வைத்து ஒருவருக்கு HIV infection இருக்குதா இல்லையா என அறியலாம். இருந்தால் அவருக்கு எயிட்ஸ் வர வாய்ப்பு அதிகம் அவ்வளவுதான்! கட்டாயம் வருமா என்றால் வராது.

உமக்கு பிடித்த விக்கியிலிருந்து...The relationship between HIV and AIDS

HIV is an abbreviation for human immunodeficiency virus, which is the virus that causes AIDS (acquired immunodeficiency syndrome). While this virus is the underlying cause of AIDS, not all HIV-positive individuals have AIDS, as HIV can remain in a latent state for many years. HIV usually progresses to AIDS, defined as possessing a CD4+ lymphocyte count under 200 cells/μl or HIV infection plus co-infection with an AIDS defining opportunistic infection.

படு தெளிவாக எழுதியுள்ளார்கள். அதுவும் கடைசி லைனை கவனியும் AIDS, defined as possessing a CD4+ lymphocyte count under 200 cells/μl or HIV infection plus co-infection with an AIDS defining opportunistic infection!

இந்த HIV டெஸ்ட் எல்லாம் நெகடிவ்வாக வரும் ஒருவனுக்கு எயிட்ஸ் வரலாம் என்பது உமக்கு தெரியுமா? இதனால்தான் அது ஸின்ரோம்!

? said...

மெட்டபாலிசம் கெட்டபாலிசம் பற்றி உம்முடைய புரிதலை வைத்து இனி என்னால் மாறடிக்க முடியாது.

மெட்டபாலிசம் என சொன்னால் போதாது என்றால் கெட்டபாலிசம் என மட்டும் நீர் சொல்லியிருந்தால் போதும். சென்னைக்காரன் தமிழ்நாட்டுக்காரன் சேர்த்துதான் சொல்வேன் என்பது உமது விருப்பம்.

அனபாலிக் ஸ்டிராய்டு அது இது என இணையத்தில் படித்ததை எல்லாம் இங்கு காட்டி எதுக்கு ஸீன் போடுகிறீரோ தெரியல!

? said...

//மொக்கைப்பதிவுனு சொன்னதும் என்னமா பொங்குறீர் , அறிவியல் பேசாமல் அனுபவப்பதிவாக இருப்பதையே அப்படி "தமாஷா" சொன்னேன், அதுக்கே இந்த பொங்கு பொங்குறேள், கூட பக்கா வாத்தியமா நந்தவனத்த வேற கூப்பிடுறிங்க :-))//

ஜோதிஜி, அசந்துவிடாதீங்க. இணையத்தில் அரைகுறையா படித்துவிட்டு அறிவியல் அறிஞர் வேடம் போடுவதைவிட நமக்கு தெரிந்த அனுபவத்தை எழுதுவது எவ்வளவோ மேல். உங்க அனுபவம் சிலருக்காவது உபயோகமாக இருக்கும்.
இதில் சக்கரைவியாதி சின்ரோம் என கற்பனை வேறு. ஒரு டாக்டர் இனையத்தில் அப்படி சொன்னதாக லிங்கினை இதுவரை காட்ட முடியாமல் எப்படியெல்லாம் ஜல்லி அடிக்கறாரு பாருங்கள்.

வவ்வால் said...

"நிபுணர்" நந்தவனத்தார் அவர்களே,

//நீர் இணையத்தில் படித்துவிட்டு தவறாக எழுதுகிறீர்.உமக்கே முழுவதும் தெரிய கணித கோட்பாட்டினை அடுத்தவர்க்கு விளக்க முற்படுவது தவறில்லையா? மருத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் மருத்துவர் எழுவது நலம். எப்படி டீரிட்மெண்ட் தரவேண்டும் என்று எழுதுவதும் அவ்வியாதியினை விளக்க முற்படுவதும் தவறுதான். அதே நேரத்தில் நீர் எழுதிய எல்லாம் தவறு அல்ல.அதில் சில பிழைகளும் இருந்தன. அதை சுட்டிக் காட்டினேன். இதையே மருத்துவர் எழுதினால் இத்தவறு ஏற்ப்பட்டிருக்காது. ஆனால் உலகில் உள்ள அனைத்து துறையிலும் ஆளுக்காள் உடனடி மருத்தவராகி யோசனை சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். இப்படி தவறாக தகவல் போவதால் பலர் பாதிக்கப்படுதல் முறையா? //

நீர் தான் அந்த நாட்டுக்கு ஒரு நல்லவர்னு தெரியாம போச்சு,நாட்டை காப்பாத்த என்னமா முயற்சி செய்றீர் :-))

அவனவன் இணையத்தில அப்படியே காபி&பேஸ்ட் அடிச்சே "எக்ஸ்பெர்ட்"ஆ காட்டிக்கிட்டு இருக்கான் :-))

இந்த எழவுக்கு தான் நான் கணிதமெல்லாம் தொடுவதேயில்லை,ஆனாலும் என்னப்பார்த்து புரியாத கணிதத்தை விளக்களாமானு சொல்லுறீர் அவ்வ் :-))
(ஒரு உதாரணமா சொன்னேன்னு சொல்லுவீர் ,உம்மக்கிட்டே இனிமே எல்லாம் "குறிப்பா,தெளிவா பேசிடனும்,)

இப்போ நான் என்ன ட்ரீட்மெண்ட் பத்தி சொல்லி,அதை செய்து யாரு செத்துப்போயிடா? இப்படி ஒரு சிகிச்சை இருக்குனு தான் சொன்னேன் நல்லாப்பாரும்.

மேலும் இப்படி சொல்லலாம்னு சொன்னேன்,ஏன் எனில் இணையத்தில் பல இடத்திலும் "கொஞ்சம் இப்படியும் அப்படியுமா தான் சொல்லி வச்சிருக்காங்க.சில டாக்டருங்களே அப்படித்தான் சொல்லுறாங்க.என்னிக்காவது ஒரு டாக்டர் "சுகர் எல்லாம் ஒரு நோயே கிடையாது மிஸ்டர் நந்தவனம்,யு டோன்ட் ஒர்ரினு" உமக்கும் ஒரு நாள் ஏதேனும் டாக்டர் சொல்லுவார் அப்போ என்னை நினைத்துக்கொள்ளும் :-))

#//டயபடீஸ் வந்தால் மெட்டபாலிசம் டிஸ்ஆர்டர் ஆகும். டிஸ்ஆர்டர் என்றால் வழக்கத்திலிருந்து உடம்பில் மாறுபட்ட இருக்கும் விடயம், ஆனால் முழுமையாக வரையறுக்கபடாத வி்டயத்தை குறிக்க உபயோகப்படுத்துவார்கள். சர்க்கரை வியாதி வந்தால் மெட்டபாசம் வழக்கத்திற்கு மாறாக நடக்கும்.//

நல்லா நான் போட்டத படியும் டயபடீஸ் டைப்-2 வந்ததால் மெடபாலிக் டிஸார்டர் ஆகுதுனு போட்டில்லை, மெடபாலிக் டிசார்டர்னே தான் போட்டிருக்கான், கண்ணோ, மூளையோ கலங்கிடுச்சுனா இப்படி சொன்னதையே சொல்லிட்டு இருப்பீரா?

//Diabetes mellitus type 2 (formerly noninsulin-dependent diabetes mellitus (NIDDM) or adult-onset diabetes) is a "metabolic disorder" //

எனக்கு தெரிஞ்ச ஆங்கிலத்தின் படி அது ஒரு மெடபாலிக் டிசார்டர்னு தான் மொழியாக்கம் ஆகுது, நீர் சொன்னாப்போல டயபடிஸ் வருவதால் மெடபாலிக் டிசார்டர் ஆகுதுனு மொழியாக்கம் ஆகலை.

இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை, ஒரு வேளை நான் சொன்னதையே "டாக்டர்.வசூல் ராஜா.எம்பிபிஎஸ்" என ஒரு பேருல வந்து சொல்லி இருந்தா நீர் மண்டைய ஆட்டியிருப்பீர் :-))

# //நீர் சொன்ன டெஸ்டை வைத்து ஒருவருக்கு HIV infection இருக்குதா இல்லையா என அறியலாம். இருந்தால் அவருக்கு எயிட்ஸ் வர வாய்ப்பு அதிகம் அவ்வளவுதான்! கட்டாயம் வருமா என்றால் வராது.//

இதெல்லாம் "கிளினிகல் டெஸ்ட்" இல் பிழையா வந்தால் தப்பிக்க வைத்திருக்கும் ஓட்டைகள்,முன்னரே இப்படினு சொல்லி வச்சிடுவாங்க.

சர்க்கரை அளவு பார்க்கும் சோதனைக்கூட 100 சதவீதம் சரியா சொல்லாது அதை வச்சு சர்க்கரை நோய்னும் சொல்ல முடியாது, சில சிம்டம்கள் வச்சு தான் உறுதி ஆக்குறாங்க(அதிக தாகம்,அடிக்கடி சிறு நீர் கழித்தல்,எடை குறைதல்).

இந்தியாவில சர்க்கரை நோய்னு சொல்லி நல்லா மருந்துவியாபாரம் தான் நடக்குது. யாருக்கும் எந்த "குணமாதலும்" இல்லை. அதுக்கெல்லாம் உம்மை போன்ற நிபுணர்கள் வழிக்காட்டலாம்,ஆனால் அப்படிலாம் செய்யாமல், நீர் சொன்னது தப்பு,அதனால் "மக்கள் பாதிக்கப்பட்டிருவாங்கனு" இல்லாத பாதிப்பைப்பற்றி கவலைப்படுறேள் :-))

இதுல லோ சுகருக்கு சரியான நேரத்துல சாப்பிட்டுக்கிட்டு இருந்தாலே பாதிப்பு வராது, கொஞ்சம் மயக்கமா வரும் போது இனிப்பா எதாவது சாப்பிடுறாங்க,ஹி..ஹி இனிப்பு தான் மருந்தே, அதெல்லாம் "நோய்"னு சொல்லிடலாம்,ஏன்னா "அறிஞர்கள்" முன்னரே சொல்லிட்டாங்க,எனவே நாம அப்படியே ஆட்டுமந்தைப்பொல கேட்டுக்கணும் :-))

நாம எப்பொழுதுமே மந்தையில் சேராதா ஆடு :-))

ஜோதிஜி said...

பிரபல பதிவர் வவ்வால் சிறு குறிப்பு வரைக என்பதற்கான ஒரு பதிவு சமாச்சாரத்தையே சும்மா நச்சுன்னு கொடுத்துட்டீங்க. நீங்களும் மிக்சர் மடித்து வந்த பொட்டல காகிதத்தை படித்து நம்மை போலவே வளர்ந்தவர் தானா? வாழ்த்துகள். என்ன நீங்க கடல் தாண்டி போயீட்டிங்க. நாங்க தாண்டமுடியல. ஆனாலும் உங்கள மாதிரி ஆளுங்ககிட்டே பேச முடியற அளவுக்கு நாங்களும் வளர்ந்திட்டோம் பார்த்தீயளா?

ஜோதிஜி said...

ஆத்தாடி..................

ஒரு கப்பு மேட்டர் இப்படி சூறாவளியா மாறி விக்கிபீடியா தள இணைப்புக்கு கொடுக்க வேண்டிய ரெண்டு புத்திசாலிங்க வந்து சிலம்பம் சுத்துவாங்கன்னு கனவுல கூட நினைக்கல சாமியோவ்.

டேய் நீ கொடுத்து வச்சவனடா? (என் மைண்ட் வாஸ்ஸ்)

? said...

ஊரில் அடுத்தவன் தப்பாக எழுதினால் மாத்திரம் குறை சொல்லுவீர், கேவலப்படுத்துவீர்.தாஸ் சர்க்கரை உற்பத்தி பத்தி தவறாக எழுதியபோது அங்கு போய் பொங்கினீர். நீர் எழுதும் தப்பை சொன்னதும் எப்படியெல்லாம் சமாளிக்கிறீர்? தனக்கு வந்த இரத்தம் அடுத்தவருக்கு வந்தா தக்காளி சட்னியா? நீரும் பல விடயத்தை தப்பாகவே எழுதுகிறீர் என காட்டவே இந்த பின்னூட்டங்கள். ஆனா தாஸ் தவறாக எழுதுவதை நீர் சுட்டிக்காட்டிய உடன் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். ஆனால் நீர் வாத்தியார் சின்ரோம் பீடித்தவராக இருப்பதினால் ஒரு போதும் யார் சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டீர் என தெரிந்துதான் எழுதினேன். (வீக் எண்டில் பொழுது போகனுமே!) ஆனால் விழியுள்ளோர் பார்க்கத்தான் போகிறார்கள்! நெக்ஸ்ட் மீட் பண்ணுவம்!

வவ்வால் said...

ஜோதிஜி,

//ஒரு கப்பு மேட்டர் இப்படி சூறாவளியா மாறி விக்கிபீடியா தள இணைப்புக்கு கொடுக்க வேண்டிய ரெண்டு புத்திசாலிங்க வந்து சிலம்பம் சுத்துவாங்கன்னு கனவுல கூட நினைக்கல சாமியோவ்.
//

நந்தவனத்துக்கு மெய்யாலுமே இது ஒரு "கப்பு" மேட்டர் தான் இன்னேரம் நாச்சியப்பன் கடையில ஒரு "கப்பு" வாங்கி பேரு போட்டுக்கிட்டு இருப்பாருல்ல :-))

வடிவேல் சிலம்பம் மாஸ்டர்னு சொல்லி அலப்பரை கொடுப்பார் ஒரு படத்துல ,நிபுணத்துவம்னு நந்தவனம் அடிக்கடி சொல்லும் போது அதான் எனக்கு நியாபகம் வந்துச்சு :-))

எது எப்படியோ அடியேனுக்கும் சிலம்பம் சுற்ற ஆடுகளம் கொடுத்தமைக்கு நன்றி! கூட சேர்ந்து சிலம்பம் ஆடிய நந்தவனத்தாருக்கும் நன்றி!

ஒரு எழுத்து சித்தரே பாராட்டுறார், நீ கொடுத்து வச்சவண்டா வவ்வாலு( ஹி...ஹி இது என்னோட மைண்ட் வாய்ஸ்)

? said...

//டேய் நீ கொடுத்து வச்சவனடா? (என் மைண்ட் வாஸ்ஸ்)//

ஜோதிஜி, சத்தியமாக இல்லை. உங்களுக்கு வியாதிகள் பற்றி ஏதோனும் மேலதிக தகவல் வேண்டும் என்றால் நான்/வவ்வால் போன்ற ஆசாமிகள் எழுதுவதையும் விக்கீபீடியா போன்ற பொதுதளங்களை முழுவதும் நம்பியிராமல் Mayo clinic போன்ற தரமான மருத்துவ வெப்சைட்களுக்கு சென்று தகவல் எடுப்பது நலம். சில நாட்களுக்கு முன் என் தம்பி மருத்துவ குறிப்பு ஒன்றினை கேட்டார், நான் ஒரளவிற்கு விடயம் தெரிந்து இருந்தாலும் உறுதிப்படுத்த இன்டர்நெட் சர்ச் செய்த போது ehow, livingstrong போன்ற தளங்களில் தவறான தகவல்தான் இருந்தது.Mayo clinic-ல் சரியாக இருந்தது. ஏனெனில் அங்கு எழுதுபவர்கள் பொது மருத்துவர்கள் கூட அல்ல. அந்த வியாதிக்கான சிறப்பு மருத்தவர்கள் எழுதுகிறார்கள்.

ஆகவே மருத்தவர்கள் எழுதுவதை படிப்பது அதிலும் அமெரிக்க மருத்துவர்கள் என்பது இன்னமும் பெட்டர். ஏனெனில் இந்திய மருத்துவர்கள் நீயா நானா போன்ற இடங்களில் தவறாக பேசுவதை பார்த்திருக்கிறேன். அமெரிக்காவில் இப்படி படிக்காமல் அல்லது தெரியாமல் ஒரு மருத்துவர் உளறினால் டவுசரை கழட்டிவிடுவார்கள் என்பதினால் அங்கு இன்னமும் கவனத்துடன் பேசுவார்கள். கல்லூரியை விட்டு வெளியேறியுடன் பெரும்பாலான இந்திய மருத்துவர்கள் அப்டேட் செய்வதில்லை, அனுபவ அறிவை வைத்தே ஓட்டிவிடுகிறார்கள். ஆனால் அமெரிக்க மருத்துவரில் பெரும்பாலோனோர் ஆராய்ச்சிளராகவும் இருப்பதினால் அப்டேட்டாக இருப்பார்கள்.மேலும் குறிப்பிட்ட வியாதி குறித்தான தகவல்களுக்கு அமெரிக்க அசோசியேசன்கள், American heart association,American diabetes association, குழந்தை நலம் பற்றி அறிய American pediatric association இவற்றில் தகவல் சேகரிப்பது நலம்.

வவ்வால் said...

நந்தவனம்,

அட சைக்கிள் கேப்பிள் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டீரே!

//விழியுள்ளோர் பார்க்கத்தான் போகிறார்கள்! நெக்ஸ்ட் மீட் பண்ணுவம்!//


ஐ'ம் வெயிட்டிங்!

விழியுள்ளோர் பார்க்கட்டும் மதியுள்ளோர் நியாயம் கூறுவார்கள்!

கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இங்கு நான் சொன்னதில் எதுவுமே தவறேயல்ல ,என்ன கொஞ்சம் புதுசா சொல்லிட்டேன், அச்சடித்த புத்தகத்தில் இருந்திருக்காது,அப்படி இருக்கையில் சுட்டிக்காட்டினேன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை என நீராகவே தீர்ப்பு வழங்கிக்கொண்டால் எப்படி?

இன்சுலின் சார்பற்ற சர்க்கரை பாதிப்பை தெளிவா "அது ஒரு மெடபாலிக்" டிசார்டர்னு போட்டிருக்கும் போதும், நீர் அப்படியே உல்டாவா திரிச்சு சொல்லிட்டு இருப்பதை மீண்டும் ஒருக்கா படிச்சு பாரும்!

நீர் எந்த அளவுக்கு "மண்டை காய்ந்து போனீர்" என்பதற்கு நல்ல உதாரணம் ,அவசரத்துல லாஜிக்கே இல்லாமல் அருளிய வாக்குமூலமே சான்று,

//மெட்டபாலிசம் என சொன்னால் போதாது என்றால் கெட்டபாலிசம் என மட்டும் நீர் சொல்லியிருந்தால் போதும். சென்னைக்காரன் தமிழ்நாட்டுக்காரன் சேர்த்துதான் சொல்வேன் என்பது உமது விருப்பம்.//

சென்னைக்காரன்னு சொன்னா அவன் தமிழன்னு தெரிஞ்சிடுமா? எப்படி ஓய் :-))

மதுரைத்தமிழன்னு கூட ஒரு வலைப்பதிவர் பேரு வச்சிருக்கார், ஏன் மதுரைக்காரன்னு வச்சிக்கிட்டா நீர் சொன்னா போல "தெளிவா தமிழ்நாட்டுக்காரன்னு" தெரிஞ்சிடாதா :-))

சில நேரங்களில் சில இடங்களில் "ஒரு கூடுதல் அழுத்தம்" கொடுத்தே சொல்ல வேண்டும். அவ்வகை தான் மெடபாலிசம் ,கேடபலிசம் சொன்னது,அதற்கு தெளிவாக உதாரணங்களும் கொடுத்துவிட்டேன்.

நீர் பேசுவதில் தெரிவது என்னவெனில்" நான் நிபுணர், இதுல நெறைய குப்பைக்கொட்டிய அனுபவம் இருக்கு,அப்போ நான் சொல்றது தான் சரி, அப்ரண்டீஸ் இணையத்துல படிச்சிட்டு சொல்றதுலாம் தப்பு, என்ற ஈகோ தான் வெளிப்படுது.

மகாபாரத காலத்துல இருந்தே "அதுக்கெல்லாம் ஒரு தகுதி இருக்கானு" கேட்கும் வழக்கம் நிலவிட்டு தான் இருக்கு, இணையம் வந்தாலும் மாறாதுனு உம்ம மூலமும் தெரியுது!


நன்றி! வணக்கம், நமோஷ்கார்!

கண்னதாசன் நினைவு நாளில் உமக்காக ஒரு குஜால் பாட்டு,இன்புற்று மகிழவும்...

கண்ணதாசன் காரைக்குடி,

பேரைச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானைப்போல பாடப்போறேண்டா

கண்ணாடிக்கோப்பையில கண்ணை மூடி நீச்சலடி

ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி!!!

போதை என்பது "பாம்பு" விஷம் தான்

சேர்ந்து குடிச்சா சோஷலிசம் தான்...ச்சிலாக்ஸ்!

வவ்வால் said...

திருத்தம்.

கண்ணதாசன் பிறந்தநாளீல் என வாசிக்கவும், என்னமோ டக்குனு நினைவு நாள் தான் வருது, ஹி..ஹி நந்தவனம் இதுக்கும் ஒரு பஞ்சாயத்து வைப்பாரோ?

? said...

@வவ்வால்

நீர் அடம்புடிக்கீறீர் என தெரிந்து இந்த வீணாய்ப் போன முயற்சி...

ஒரு விடயத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்ககூடாது எனபது உமக்கு தெரியாதா? டைப் 2 மட்டுமல்ல டைப் 1 ம் மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்தான். அது தவிர வேற பல மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்கள் இருக்கு உ-ம் cystic fibrosis, hypothyroidism, Tay-Sachs disease sickle cell anemia, phenylketonuria. இந்த எல்லா வியாதிகளினாலும் மற்றும் சர்க்கரை வியாதி 1 & 2 ன் விளைவாக மெட்டபாலிசத்தில் மாறுபாடு ஏற்படும்.

டிசிஸ் என்பது ஒரு குறிப்பிட்ட வியாதியையும் அது உண்டாக்கும் நிலையையும் குறிக்கும். ஆனால் டிஸ்ஆர்டர் /மாறுபாடு என்பது பொதுவார்த்தை, இது உடம்பில் ஏற்படும் பல்வேறு மாறுபாடுகளை குறிப்பிட பயன்படுத்தலாம். மென்டல் டிஸ்ஆர்டர் எனில் பல்வேறு மனோவியாதிகளை குறிக்கும். அதேபோல மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் பல உண்டு.

Type 2 is one of the metabolic disorders. So it can be defined as a metabolic disorder. இப்ப விக்கீகாரன் எழுதியது, நான் சொன்னதும் ஒண்ணுதான் விளங்குச்சா? உமக்கு புரியல ஏனெனில் உமக்கு மேலதிக தகவல் தெரியாது. பிட்டுபிட்டா இணையத்தில் படிச்சிட்டு இங்கு பிட்டு வந்து போட்ட இப்படித்தான் இருக்கும்;)

//சென்னைக்காரன்னு சொன்னா அவன் தமிழன்னு தெரிஞ்சிடுமா? எப்படி ஓய்//

நீர் இந்தமாதிரி முடக்குவாதம் பேசுவீர்ன்னு தெரிஞ்சுதான் சென்னைக்காரன் தமிழ்நாட்டுக்காரன்னு சொன்னேன். சென்னைக்காரன் தமிழன்னு சொல்லலை. உடனே தமிழன்னா யாருன்னு புது மொக்கை ஆரம்பிப்பீர்ன்னு தெரியும்! ;)

//மதுரைத்தமிழன்னு கூட ஒரு வலைப்பதிவர் பேரு வச்சிருக்கார்//

அதுல உமக்கு என்ன பிரச்சனை?

//ஏன் மதுரைக்காரன்னு வச்சிக்கிட்டா நீர் சொன்னா போல "தெளிவா தமிழ்நாட்டுக்காரன்னு" தெரிஞ்சிடாதா :-))//

கண்டிப்பாக தெரியும், அதனாலதான் அவரு லூசுத்தானமா மதுரைக்காரன்,தமிழ்நாட்டுக்காரன் சேர்த்து வைச்சுக்கல!

//நான் நிபுணர், இதுல நெறைய குப்பைக்கொட்டிய அனுபவம் இருக்கு,அப்போ நான் சொல்றது தான் சரி, அப்ரண்டீஸ் இணையத்துல படிச்சிட்டு சொல்றதுலாம் தப்பு, என்ற ஈகோ தான் வெளிப்படுது.//

தவறு, நான் நிபுணர் என சொல்லவே இல்லை. நான் சர்க்கரை வியாதியில் குப்பை கொட்டியது சிறிது காலமே. அதுவும் ஒரு நண்பருக்கு உதவ வேண்டியே. ஆனால் அப்ரண்டீஸ் அரைகுறையாக இணையத்துல படிச்சிட்டு சொல்றது தவறு என்பது மட்டுமே என் வாதம். நீர் முற்றிலும் கற்று சரியாக சொன்னாலோ அல்லது எனக்கு தெரியாத விடயம் எனிலோ மூடிகிட்டு போயிப்பேன்.

எனக்கு விடயம் தெரியும் என நான் சொல்ல காரணமே நீர் வழக்கம் போல எனக்கும் பாடமெடுக்க முற்பட்டதால்தான். எனது ஆரம்ப பின்னூட்டத்தையும் உமது பதில் பின்னூட்டத்தையும் பாரும்!

? said...

//கண்ணதாசன் பிறந்தநாளீல் என வாசிக்கவும், என்னமோ டக்குனு நினைவு நாள் தான் வருது//

பாருங்கைய்யா இந்த அநியாயத்தை...வவ்வால் தலைகீழாய் எல்லா விடயத்தையும் பிடிச்சுகிட்டு தொங்கறா மாறி, இவரு நினைவுநாளுன்னு எழுதுவாராம்... நாம பிறந்த நாளில் ன்னு வாசிக்கனுமாம்.

வவ்வால் said...

நிபுணர் நந்தவனத்தார்,

//இப்படி மக்களை குழப்பவென்றே டிசீஸ், டிஸார்டர், டிபெக்ட், சின்ட்ரோம், மெடிகல் கண்டிஷன் என பிரிச்சு போட்டு வச்சிருக்காங்கோ.

பொதுவா சொன்னால் நோய் ,குறிப்பாக சொன்னால் சின்ட்ரோம்னு சொல்லலாம்.//

முன்னரே டைப்-1 முதல் எல்லா சர்க்கரைக்கும் ஏன் இப்படி குழப்புறாங்கனு நான் சொல்லிட்டேன்.

இப்போ டைப்-2 டிசார்டர்னு தானே இருக்குனு கேட்டதும் டைப்-1 உம் டிசார்டார் தான்னு முன்னர் நான் சொன்னதை ஆமோதிக்கும் வகையில் நீரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டீர்,

//டைப் 2 மட்டுமல்ல டைப் 1 ம் மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்தான்//

அப்புறம் என்னதுக்கு நோய்னு சொல்லனும்னு என்ற கட்டாயம், நான் சொன்னாப்போல டெபிசியன்சி சின்ட்ரோம், டிசார்டர்னு சொல்லிட்டே போகலாம்.

எனவே ஸ்ட்ரிக்ட் ஆக டீசீஸ்னு சொல்லனும்னு கட்டாயமே இல்லை, டைப்-1 & டைப்-2 எதுவானாலும் வரையறை சொல்லப்போகும் போது கவனமா டிசார்டர்னு சொல்லிடுறாங்க, அதான் ஏன்னு கேட்கிறேன்? நோய்னு தீர்க்கமா வரையறை கொடுக்க தடுப்பது என்ன?

இதுக்குள்ள பல சட்ட சிக்கல்கள் இருக்கு, மேலும் பல மருத்துவ அறிவியல் சந்தேகங்கள் இருக்கு, எனவே பொதுமக்களூக்கு நோய்னு சொல்லிட்டு "டெக்னிகலா சொல்லும் போது டிசார்டர்னு சொல்லி ஊர ஏமாத்துறாங்க உங்களை போன்ற "எக்ஸ்பெர்ட்கள்" :-))

எனவே சந்தேகத்தின் அடிப்படையில் நான் அதனை நோய்னே சொல்லத்தேவையில்லைனு சொல்கிறேன், இப்போவாச்சும் புரியுதா?

//அது தவிர வேற பல மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்கள் இருக்கு உ-ம் cystic fibrosis, hypothyroidism, Tay-Sachs disease sickle cell anemia, phenylketonuria. இந்த எல்லா வியாதிகளினாலும் மற்றும் சர்க்கரை வியாதி 1 & 2 ன் விளைவாக மெட்டபாலிசத்தில் மாறுபாடு ஏற்படும். //

ஏன் எனக்கு வேறு பல டிசார்டர்கள் இருக்குனே தெரியாதுனு எனக்கு பாடம் எடுக்கப்பார்க்கிறீர் :-))

நான் சொன்னால் இணையத்தில் படிச்சு சொல்றேன் நீர் சொன்னால் "எக்ஸ்பெர்ட் கருத்து" என்ன கொடுமைய்யா இது :-))

# //எனக்கு விடயம் தெரியும் என நான் சொல்ல காரணமே நீர் வழக்கம் போல எனக்கும் பாடமெடுக்க முற்பட்டதால்தான்.//

என் முதல் பின்னூட்டத்தினைப்பாரும், நான் எங்கே உமக்கு பாடம் எடுக்க முற்பட்டேன், நான் பாட்டுக்கு ஜோதிஜிக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன் நீராக ஓடி வந்து எனக்கு வழக்கம் போல "பாடம்" எடுக்க பார்த்தீர், அப்போ கூட உமக்கு தகுதி இருக்கானு நான் கேட்காம பதில் சொன்னேன்,அப்போவே உம்மை போல "தகுதி" பற்றி கேட்டிருக்கனும்.

அதாவது நீர் சொன்னால் "கருத்து" ,நான் சொன்னால் "பாடம்" எடுக்கிறது ,நல்லா இருக்கே நியாயம்!

எனக்கு ஒரு டவுட்டு,என்னால சிலர் பதிவ விட்டு ஓடிப்போயிட்டாகனு அவ்வப்போது சொல்லுறீர்,ஆனால் அது யாருனு எனக்கே தெரியலை, ஒரு வேளை அப்படி ஓடிப்போனதில் நீரும் ஒருவரா :-))

ஆனால் நீர் வசமா மாட்டிக்கிட்டதும் தப்பிக்க வழி தெரியாமல் "இதுல எக்ஸ்பெர்ட் "நான், உமக்கு என்ன தெரியும்னு ஆரம்பிச்சிட்டீர், எனக்கு என்ன தெரியும்,நான் என்ன படிச்சேன்னு நானா பீத்திக்கிற பழக்கம் இல்லை, ஆனால் நீர் எங்கே முதியோர் கல்வி படிச்சீரோ அந்த இடத்தின் லட்சணம் நல்லாவே தெரியும் :-))

எல்லாம் கடம் கோஷ்டிகள், புக்குல இருக்கிறத அப்படியே வாந்தி எடுத்துவிட்டு "ogpa" நிறைய வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடி குப்பை கொட்ட என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

வவ்வால் said...

தொடர்ச்சி...

# இப்போ நீர் நோய் என்பதில் இருந்து டிசார்டர் என பேச ஆரம்பித்துள்ளது ஏன், அப்படியே புடிச்ச புடியில நோய்னே சொல்லிட்டே இருக்கலாமே :-))

ஏன் எனில் நீர் பேசுவதற்கு அடிப்படையே இல்லை என உமக்கே தெரியும், கொஞ்சம் மிரட்டுனாப்போல பேசினால் ஓடிருவானு நினைச்சு பேசினீர், அசராம நிக்கவும், டிசார்டர்னு தான் சொல்லுவாங்க ஆனால்னு இழுவைப்போட ஆரம்பிச்சுட்டீர் :-))

தெளிவா டீசீஸ்னு சொன்னால் பல இடத்தில இன்சுரன்சு பணம் போயிடும், சர்க்கரை வியாதிக்கு என கூடுதல் பிரிமியம் வசூலிக்க முடியாது, எனவே சிக்கலாக சொல்லி நிறைய காசுப்புடுங்கணும், இது போன்ற வரையறைகள் எல்லாம் மேல் நாட்டில் தான் உருவாக்கப்படுகிறது காரணம் அங்கு தான் மருத்துவ இன்சூரன்சு ஆதிகாலம் தொட்டே இருக்கு, இன்சூரன்சு + மருத்துவம் என எல்லாம் கூட்டு களவாணிகள், இப்போ ஏன் இன்சூரன்சை ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தேன்னு புரிந்திருக்கும்.

in general disease சொல்லிட்டு டெக்னிக்கலா சொல்லும் போது டிசார்டர், ரிலேட்டிவ் இன்சுலின் டெபிசியன்சி அப்படி,இப்படினு ஜல்லியடிக்கிற மாய்மாலம் ஏன்?

இதுல வேற வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்க்க கூடாதுனு எனக்கு "பாடம்" எடுக்க வேண்டியது. நீர் சொன்னாப்போல எழுதிட்டு வரிக்கு வரி அர்த்தம் பார்க்கக்கூடாதுனு நீதிமன்ற வழக்குகளின் போது சொல்லிட முடியுமா?

உண்மையில இப்படியான டெபனிஷன்கள் எல்லாம் கொடுக்க காரணமே நீதிமன்ற வழக்குகள் தான், வழக்கின் போது மாட்டிக்க கூடாதுனு கவனமாக "சொற்களை" போட்டு வச்சிக்கிறாங்க, பொதுவா பேஷண்ட் வந்தால் நோய்னு சொல்லி காசு வாங்கிடுவாங்க :-))

ஆனால் நோயாகப்பட்டது குணமே ஆகாது, வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில ஒரு காட்சி வரும், அதான் காப்பாத்த முடியாதுனு சொல்லீடிங்களே அப்புறம் ஏன் ஈவினிங்குள்ள அட்மிட் ஆக சொல்றிங்க,அந்த டெஸ்ட் ,இந்த டெஸ்ட்னு சொல்லி பணம் புடுங்கவானு வசனம் வரும், அந்த வசனம் நீர் புடிச்சு தொங்கும் சர்க்கரை"நோய்" க்கும் பொருந்தும் :-))

# வெறும் ஒரு புரொஃபைல் ஐடி மட்டும் வச்சிருக்கீர் , முதலில் ஒரு பதிவ ஆரம்பிச்சு உம்ம "பாடத்தை" எல்லாம் ஆரம்பிக்கிறது, ஏன்னா நீர் தகுதி பத்திலாம் பேசிட்டு ,பதிவர்னு தகுதியே இல்லாம இருக்கிறது சரியாப்படலை :-))

இப்போ உமக்கு சுள்ளுனு ஏறுமே :-))

------------------
# //பாருங்கைய்யா இந்த அநியாயத்தை...வவ்வால் தலைகீழாய் எல்லா விடயத்தையும் பிடிச்சுகிட்டு தொங்கறா மாறி, இவரு நினைவுநாளுன்னு எழுதுவாராம்... நாம பிறந்த நாளில் ன்னு வாசிக்கனுமாம்.//

அதான் திருத்தம்னு போட்டு சொல்லியாச்சுல, வாசிக்கவும்னு சொல்வது திருத்தத்தின் மீதான வேண்டுகோள், தமிழ் ஒழுங்காப்படிச்சிருந்தால் ஏன் இப்படி இருக்கப்போறீர் :-))

//நந்தவனத்தான்June 23, 2013 at 7:56 PM
திருத்தம்: pre existing condition அல்ல எனில்//

எக்ஸ்பெர்ட் சொன்னால் மட்டும் அது திருத்தம், அவரு நேரா பார்த்தே பிழை வருமாம், ஆனால் அதை திருத்தினால் திருத்தம்னே எடுத்துக்கணும்,வவ்வால் பிழை திருத்தம் சொன்னால் " தலைகீழா தொங்கிட்டான்" என சொல்லுவாங்க, அடப்போங்கய்யா நீங்களும் உங்க நியாயமும்,எதுக்குலாம் பொங்குறதுனு விவஸ்தயே இல்லாமல் ,ஊரு நாயம் பேசிட்டு அலையறாங்கப்பா அவ்வ்!

*** said...
This comment has been removed by the author.
? said...

//இப்போ உமக்கு சுள்ளுனு ஏறுமே :-))//

என்னதிது தூங்காம மிட்நைட்டில் இம்புட்டு டைப் பண்ணிகிட்டிருக்கீர்.

சுள்ளுன்னும் ஏறாது ஒரு எழவும் ஏறாது ஒய். பின்னூட்டம் போடவே எனக்கு டைம் கிடைக்க மாட்டீங்குது. இதில ஊட்டுகாரம்மா வேற எப்பப் பார்த்தாலும் லேப்டாப்பை கட்டிகிட்டே மாறடிக்கற, ஒரு வேலையும் செய்ய மாட்டீங்கறன்னு சோத்தை கட் பண்ணுது. இத பதிவு வேற போட்டுட்டாலும்.... கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!

மற்ற ஆளுன்னா அப்படியே கிரஸ் பண்ணிட்டு போயிருப்பேன். நீர் என்பதால் ஜாலியா ஒரு விவாதம் அம்புட்டுதான். என்ஜாய்!

*** said...
This comment has been removed by the author.
? said...

/ஏன் எனில் நீர் பேசுவதற்கு அடிப்படையே இல்லை என உமக்கே தெரியும், கொஞ்சம் மிரட்டுனாப்போல பேசினால் ஓடிருவானு நினைச்சு பேசினீர், அசராம நிக்கவும், டிசார்டர்னு தான் சொல்லுவாங்க ஆனால்னு இழுவைப்போட ஆரம்பிச்சுட்டீர் :-)//

ச்சே அப்படி சத்தியம அப்படி நினைத்ததே இல்லை ஓய். நம்ம பழய விவாதம் எல்லாம் எடுத்து பாரும் நீர்தான் கடைசி கோலை போட்டிருப்பீர். அன்பே சிவம் படத்தில் மாதவன் கமலை சொல்லுற மாதிரி நீரு ஒரு "last word freak" என்பது எனக்கு தெரியும். இப்பவும் நீர் சொன்னதுதான் இந்த விவாதத்தை பொறுத்தவை பைனல் வார்த்தை(இல்லாவிட்டால் விவாதம் முடியுமா என்ன? ஜோதிஜி பின்னூட்ட பெட்டியை மூடினால்தான் உண்டு.)

வவ்வால் said...

நந்தவனம்,

//என்னதிது தூங்காம மிட்நைட்டில் இம்புட்டு டைப் பண்ணிகிட்டிருக்கீர்.//

என்னமோ புச்சா இப்போத்தான் பார்த்தாப்போல சொல்லுறீர், பெரும்பாலும் அடியேன் ஓட்டுவது மிட்நைட் மசாலா தானே, மற்ற பின்னூட்ட நேரங்களையும் கவனித்தால் தெரிந்திருக்குமே,

நேத்து வேற கண்ணதாசன் பொறந்த நாளாப்பூடுச்சா ,ஹி...ஹி கவிஞரு பொறந்த நாள நாம கொண்டாடாம வேற யாரு கொண்டாடுவாங்கன்னு கண்ணதாசன் பேர சொல்லி கொஞ்சம் கூடுதலா கண்ணாடி கோப்பையில நீச்சடைச்சுட்டு குப்புறக்கா அடிச்சு தூங்கியாச்சு,அர்த்தராத்ரியில "மூத்திரப்பை ரொம்பி இயற்கை உபாதை " கிளம்பிடுச்சு,அந்த உபாதையை முடிச்சுட்டு வந்து கட்டைய சாய்க்கிறதுக்கு முன்ன கொஞ்சம் எட்டிப்பார்த்தால் உம்ம உபாதை , இந்த கொசுத்தொல்லை தாங்கலை நாராயணானு நினைச்சுட்டு உமக்கும் ஒரு பின்னூட்டம் தட்டிவிட்டேன் , ஹி...ஹி எப்பூடி :-))

//பின்னூட்டம் போடவே எனக்கு டைம் கிடைக்க மாட்டீங்குது.//

பின்னூட்ட சேவையில பி.எச்.டி வாங்கியவராச்சே , டைம் இருக்காது தான், ஆனாலும் உம்மைப்போன்றவர்கள் இல்லைனா எனக்கும் போரடிச்சுப்புடும், நம்ம சலம்பல்களுக்கு தாக்குப்பிடிக்கும் " மேன் ஆஃப் ஸ்டீல்" நீர் தான்:-))

மற்ற ஆளுங்கன்னா நானும் லேசாத்தான் "கொக்கிப்போடுவேன்" நீர் தான் சுறாவாச்சே அதான் "வலையே" போட்டேன், எம்பூட்டு போதை ஏறினாலும் கொஞ்சம் ஊறுகாய நக்கினாத்தான் "திவ்யமா" இருக்குமாம்,நமக்கு ஏத்த மட்ட ஊறுகாய் நீர் தான் :-))
--------------------

ஜோதிஜி said...

விழியுள்ளோர் பார்க்கத்தான் போகிறார்கள்

நன்றி நந்தவனம். ஆனால் கடைசிவரையிலும் நீங்களும் வவ்வாலைப் போலவே எந்த துறையில் இருக்குறீங்க என்பதை சொல்லவே இல்லை. நீங்க கொடுத்த தளத்தை எப்போதும் போல கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து வைத்து விடுவதுண்டு. காரணம் என்னைப் போன்றவர்களுக்கு இது தேவையில்லாதது. என்னுடைய அனுபவத்தில் மனிதனுக்கு ஆங்கில மருத்துவம் தேவையில்லை என்கிற ரீதியில் கடந்த ஒரு ஆண்டுகளாக குடும்ப ரீதியாக சில பல முயற்சிகள் செய்து வெற்றிகரமாக கடந்தும் வந்து விட்டேன். இதை அப்படியே எழுதினால் சரியான மெண்டலாக இருப்பானோ என்று கூட நினைப்பார்கள்.

ஒவ்வொரு நண்பர்களும் அமெரிக்கா குறித்து அதன் உள் கட்டமைப்பு குறித்து என்னுடன் பகிர்ந்து கொள்ளும் போது சம்மந்தம் இல்லாமல் அதன் வெளிநாட்டு கொள்கை என்ற கோர முகமும் எனக்கு தெரியத்தான் வருகின்றது.

நீங்கள் அமெரிக்க மருத்துவர்களைப் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை. இங்கு என் வாசகர் என்கிற ரீதியில் அறிமுகமாகி அவர் குடும்ப விழாவிற்கு அழைத்து அவர் மருமகள் (அமெரிக்காவில் இதய நோய் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சி படிப்பில் இருப்பவர்) உரையாற்றிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவருடன் தனிப்பட்ட முறையில் பேசிய போது நீங்க சொன்னதைத்தான் சொன்னார். மற்றபடி அங்குள்ள கல்விச்சூழல், தகுதிக்கு உண்டான மரியாதை, தகுதியிருப்பவர்கள் எவர் என்ற போதிலும் அவருக்கு கிடைக்கு வாய்ப்பு போன்றவற்றை சமீபத்தில் இலங்கை தமிழர் பின்லேடன் சமாச்சாரத்தில் அவர் கண்டுபிடித்த கருவி மூலம், இது போன்ற விடயங்கள் படிக்கும் போதுமனதில் வரும் ஏக்கத்தை தவிர்க்க முடியல.

சில சமயம் பின்னூட்டங்கள் தேவையில்லை என்று நினைப்பு வரும் போதெல்லாம் இது போன்ற சிலம்பாட்ட வீரர்களை அடையாளம் காணாமல் போய் விடக்கூடிய வாய்ப்பு போய்விடும் என்பதால் கற்றுக் கொள்ள ஆர்வம் இன்னமும் இருந்து கொண்டேயிருப்பதால் மேலும் என் பதிவில் பின்னூட்டங்கள் தான் மிக சரியாக வாசிக்க விரும்புவர்களுக்கு உதவக்கூடியதாக இருப்பதாலும் அந்த எண்ணத்தை தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டேன்.

வவ்வால் குறித்து கண்டு கொள்ளாதீர்கள். நண்பர் சொன்னது போல் அவர் ஒரு கௌபாய். ஆனால் அவர் அதளகளம் ரணகளமாக இருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு சில சமயம் ஆர்வமிக்க ஒரு ஜீனியஸ் போல தெரிவதால்

பொறுத்தாள்வார் வலையுலகத்தை ஆள்வார்.

ஜோதிஜி said...

சிப்ஸ், சுண்டல், சில்லி அயிட்டங்கள் வந்தும் இன்னும் நீர் ஊறுகாய் பார்ட்டீன்னா நீர் பேட் பாய் தான்.

? said...

@வவ்வால்

//பெரும்பாலும் அடியேன் ஓட்டுவது மிட்நைட் மசாலா தானே, மற்ற பின்னூட்ட நேரங்களையும் கவனித்தால் தெரிந்திருக்குமே//

தெரிந்த விடயம்தான். இந்த மொக்கை மேட்டருக்கு இவ்வளவு கஷ்டம் தேவையா என்றுதான் கேட்டேன். சரக்கடிக்கும் போது செய்யுற வேலையா இது? கொடுமை ஓய்!

//நமக்கு ஏத்த மட்ட ஊறுகாய் நீர் தான் :-))//

சொல்றது சொன்னீர் டீசன்டான சைடிஷ் பேர சொல்லி தொலைச்சிருக்ககூடாதா? இப்ப ஜோதிஜி டாஸ்மார்க் பாருல கேவலாமாய் கேட்குறது மாறி 'ஊருகாய் பார்ட்டியா நீயி' ன்னு கேட்குறார். கூடவே என்னையும் கேவலப்படுத்திடீர்.

நீரு எஜிகேசுனல் கன்சல்டன்ஸியோட டையாபடீஸ் கன்சன்டன்ஸி ஒண்ணு ஆரம்பிக்கலாம். நேத்து யூடிபூல இந்த காமடிய பார்த்த போது நம்ம விவாத ஞாபகம்தான் வந்துச்சு. உடனே நீ ஆரம்பிக்க வேண்டியதானேங்காதீர். இங்க ஆரம்பிச்சா டவுசரை உருவீடுவானுக.இங்க வெள்ளைக்காரன்தான் மட்டும்தான் இந்த மாதிரி பண்ணுனா எஸ்கேப்பாக முடியும்.

? said...

@ஜோதிஜி
//அங்குள்ள கல்விச்சூழல், தகுதிக்கு உண்டான மரியாதை, தகுதியிருப்பவர்கள் எவர் என்ற போதிலும் அவருக்கு கிடைக்கு வாய்ப்பு போன்றவற்றை சமீபத்தில் இலங்கை தமிழர் பின்லேடன் சமாச்சாரத்தில் அவர் கண்டுபிடித்த கருவி மூலம், இது போன்ற விடயங்கள் படிக்கும் போதுமனதில் வரும் ஏக்கத்தை தவிர்க்க முடியல.//

தகுதியிருப்பவர் அனைவருக்கும் வாய்ப்பு என்பது சரியானதல்ல. இங்கு வெள்ளையன் என்றால் சிறப்பு முன்னுரிமை உண்டு. இரண்டு பேர் சமதகுதி என்றால் வெள்ளையனுக்குதான் முன்னுரிமை உண்டு. அந்த இலங்கை தமிழரை போல சாதித்த ஆளுக எக்ஸ்ரா-ஆர்டினரியான ஆட்கள். இவர்களை அமுக்க முடியாமல் விட்டு விடுவார்கள். ஆனால் இன ஒதுக்கல் ஐரோப்பாவை விட மிகவும் குறைவுதான் (அப்ப ஐரோப்பிய லட்சணம் எப்படி இருக்கும் என்று பாருங்கள்). சில நாட்களுக்கு முன்பு ஹார்வேர்ட் மருத்துவ பள்ளியில் இளைய ஆராய்ச்சியாளரான ஒருவருடன் பியரடித்தேன். எகிப்தியரான அவர் இங்கு பிறந்து வளர்ந்தவர். அவர் சொன்னார், என்னுடன் பள்ளி கல்லூரி வகுப்புகளில் நன்றாக பர்பாமன்ஸ் பண்ணுபவர்களில் குடியேறிகளின் குழந்தைகள் அதிகம்; வெள்ளைக்குழந்தைகள் குறைவு. ஆனால் தற்போது பெரும்பதவிகளில் நிலமை தலைகீழாக உள்ளது என்று. இதுதான் அமெரிக்காவின் உண்மை முகம்!
எப்படியிருப்பினும் உலகில் உள்ள திறமைசாலிகள், பணக்கார ஐரோப்பிய நாட்டிலிருந்தும் இந்தியா போன்ற ஏழை நாட்டிலிருந்தும், இங்கு வந்து குவிவதால் பலகாலம் இவர்களை அசைக்க முடியாது என்பதும் உண்மைதான்

என்னைப்பற்றி சொல்வது என்றால் உயிரியல் துறையில் இந்தியாவில் ஆராய்ச்சிபடிப்பை முடித்து விட்டு இங்கே மருத்துவ கல்லூரியில் குப்பை கொட்டும் ஒரு அள்ளக்கை ஆராய்ச்சியார் என வைத்துக்கொள்ளங்களேன்!

//வவ்வால் குறித்து கண்டு கொள்ளாதீர்கள். நண்பர் சொன்னது போல் அவர் ஒரு கௌபாய்//

வவ்வால் மீது தனி மரியாதையே உண்டு. நானே சில சமயம் நினைப்பதுண்டு.. இப்படி பலதுறைகளில் கற்று அதை போயும் போயும் பதிவு போடவும் பின்னூட்டமிடவும் பயன்படுத்தி அடுத்தவரை ஒரண்டைக்கு இழுத்து மூளையை வீணடிப்பதை விட ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னமும் பெரியாளக வந்திருப்பார் என்று!

? said...

@ஜோதிஜி

வெள்ளையரல்லாதோர் இங்கு பிறந்திருந்தாலும் அமெரிக்கராகவே கருதமாட்டார்கள் பலர். இதே கிண்டலடிக்கும் வீடியோ... http://www.youtube.com/watch?v=crAv5ttax2I

யூடிபில் பேமஸாக இருந்தது, சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். உமக்காக மீண்டும் தேடி பிடித்தேன்.

எனக்கும் பலதடவை இந்த அனுபவம் உண்டு. கான்பிரசுகளில் எங்கிருந்து வருகிறாய் கேள்விக்கு அமெரிக்க நகரத்தின் பெயரை சொன்னால் உடனே எந்த நாட்டிலிருந்து வருகிறாய் என்பார்கள். வெள்ளையனைப் பாரத்து மாத்திரம் இந்த கேள்வி வராது. வீடியோவில் சொல்லப்படுவது போல செவ்விந்தியரை தவிர அனைவரும் இங்கு குடியேறிகள்தானே?

ஜோதிஜி said...

நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி நண்பரே.

வவ்வால் said...

"மூதறிஞர்"நந்தவனத்தார்,

//வவ்வால் மீது தனி மரியாதையே உண்டு. நானே சில சமயம் நினைப்பதுண்டு.. இப்படி பலதுறைகளில் கற்று அதை போயும் போயும் பதிவு போடவும் பின்னூட்டமிடவும் பயன்படுத்தி அடுத்தவரை ஒரண்டைக்கு இழுத்து மூளையை வீணடிப்பதை விட ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னமும் பெரியாளக வந்திருப்பார் என்று!//

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! ஆனால் நாம அந்த அளவுக்கு "ஒர்த் கிடையாது".

நீங்க சொன்னாப்போல இணையத்தில ஓரு ஆர்வக்கோளாறுல படிச்சு தெரிஞ்சிக்கிறது, இணையத்தை பொழுது போக்கா நெனச்சி அஜால் குஜால் மேட்டரில் மக்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள் ,நாம கொஞ்சம் தகவல்களை படிச்சி வைக்கிறோம், ஏனெனில் நமக்கு அஜால் குஜால் எல்லாம் ஆரம்பத்திலேயே பார்த்து சலிச்சு போயாச்சு :-))

//வெள்ளையரல்லாதோர் இங்கு பிறந்திருந்தாலும் அமெரிக்கராகவே கருதமாட்டார்கள் பலர். //

இதத்தானுங்ணா,பிரிட்டிஷ் குடியுரிமை, இங்லீஷ்மேன் என வச்சு ஒருக்கா பேசினேன்,அப்போ மட்டையடியா மாத்தி சொன்னீங்க :-))

தமிழ்நாட்டுக்காரன்,தமிழன் கூட வேறனு நான் சொல்லவும் வேண்டுமா :-))
----------

//சொல்றது சொன்னீர் டீசன்டான சைடிஷ் பேர சொல்லி தொலைச்சிருக்ககூடாதா? இப்ப ஜோதிஜி டாஸ்மார்க் பாருல கேவலாமாய் கேட்குறது மாறி 'ஊருகாய் பார்ட்டியா நீயி' ன்னு கேட்குறார். கூடவே என்னையும் கேவலப்படுத்திடீர்.//

உலகத்துல "ஃபுட் பிராசசிங்" தொழில்நுட்பம்லாம் கண்டுப்பிடிக்கும் முன்னரே "ஊறுகாய்" என ஃபுட்பிராசஸ் செய்யும் வித்தையை கண்டுப்பிடிச்ச தமிழனின் அறிவை பாராட்ட வேணாம் அட்லீஸ் இகழாமலாவது இருக்கலாம்ல :-))

மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும் கூடு என மீனையும் பிராசஸ் செய்த தமிழினமே உலகில் அறிவிற்சிறந்த இனம், சுட்டக்கருவாடும், சுண்டக்கஞ்சி சோறும் தமிழனின் பெருமையை உலகுள்ள வரை சொல்லும்!!!

இந்த வீக் எண்டில் வீட்டில் வோட்கா தயாரிப்பது எப்படினு "ஒரு அறிவியல் பதிவு" போட்டு உமக்கே டெடிகேட் செய்கிறேன், இது மட்ட ஊறுகா மேல ஆணை!

? said...

//இதத்தானுங்ணா,பிரிட்டிஷ் குடியுரிமை, இங்லீஷ்மேன் என வச்சு ஒருக்கா பேசினேன்,அப்போ மட்டையடியா மாத்தி சொன்னீங்க :-))தமிழ்நாட்டுக்காரன்,தமிழன் கூட வேறனு நான் சொல்லவும் வேண்டுமா :-))//

மாற்றம் ஒண்ணுதான் மாறாதது, இது உங்களுக்கு தெரியாதா என்ன? ;)

அப்ப என்ன சொன்னேன் என உண்மையிலேயே மறந்திருச்சிருச்சு. ஆனா ஏற்கனவே ஒருவாட்டி எனக்கு தெரிந்த அமெரிக்க குடிமகனான தமிழருக்கு பிரமோசன் மறுக்கப்பட்டு வெள்ளையருக்கு வழங்கப்பட்டதை- இங்குள்ள ஒதுக்கல் பற்றி எழுதியுள்ளேன்.

இங்கு பலர் அப்படி இருக்கிறார்கள் என்றுதான் எழுதியுள்ளேன். நல்லவரும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் நான் பொதுப்படையாக ஒரு இனம் +நல்ல இனம் என்றோ கெட்ட இனம் என்றோ பொதுமைபடுத்தலை நான் எதிர்க்கிறேன். வெள்ளையரிலும் பார்ப்பனரிலும் சிங்களவரிலும் மலையாளிகலும் பல நல்லவர் இருக்கிறார்கள், தமிழரில் பல மோசமானவரும் இருக்கிறார்கள் என்பது எம்நிலை. இதைத்தான் நம் கிழவி பல வருடத்திற்கு முன்னாடியே சொல்லிவிட்டாள்...

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

அமெரிக்காவின் இன்னொரு முகத்தை ஜோதிஜி அறியத்தான் அந்த பின்னூட்டம்!

ஜோதிஜி said...

ஒரு பக்கம் அமெரிக்க ஆராய்ச்சியாளர். மறுபக்கம் மறவாத தமிழை ஆராய்ந்து கவியாக தருபவர்.

அடேங்கப்பா உங்க வீட்டுக்காரம்மா கொடுத்து வைத்தவர் தான். அப்படியே உங்க புள்ள குட்டிகளுக்கு இந்த தமிழ் மொழியை பேச எழுத கற்றுக் கொடுத்துடுங்க சாமியோவ்.

ஜோதிஜி said...

ஏன் கள்ளச்சாரயம் தயாரிப்பது எப்படிங்றத எழுத வேண்டியது தானே?

? said...

எனது பள்ளிக்கல்வி பூராவும் தமிழில்தான். ஏற்கனவே சொன்ன மாதிரி மிக்சர் பொட்டலத்தையும் விடாத ஆளு என்பதினால், இதெல்லாம் அப்போது படித்ததுதான். இப்போதைக்கு புடுங்கவேண்டிய ஆணி அதிகமென்பதால நேரப்பற்றாக்குறையில் எப்போவாவதுதான் முடிகிறது. உங்கள் ஊக்கப்படுத்துதலுக்கு நன்றிகள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி.
சர்க்கரை நோய்க்கு வில்வ பொடி தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கிறது. உடலுழைப்பு முக்கியம், வாயைக் கட்ட வேண்டும். ஒரு வேளை உணவுக்கும் அடுத்த வேளைக்கும் இடையில் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலே உடல் நலம் நன்றாக இருக்கும். மாறிவரும் உணவுப் பழக்கமே இவ்வளவு உடல் நல சீர்கேடுகளுக்கு காரணம்.
50 வயதில் இருக்க வேண்டிய உடல் பருமன் 15 வயது குழந்தைகளுக்கு இருக்கிறது. வேதனையாக இருக்கிறது.