Monday, November 16, 2009

கண்டங்களும் கடக்கும் தூரம் தான்

"எண்ணங்கள் தான் வாழ்க்கை"

இந்த கருத்தை பகுத்தறிவாளர்களும், நம்பிக்கையாளர்களும்,சிந்தனையாளர்களும் ஒரு சேர மறுப்பேதும் சொல்லாமல் முன் மொழிவார்கள்.

குலம், இனம், ஜாதி இவற்றால் மனிதர்களின் எண்ணங்கள் உருவாகிறது என்பதில் தொடங்கி இன்றைய அத்தனை நவீன விஞ்ஞானமும் இதைத் தான் இறுதியாக உறுதி மொழி போல் சமூகத்திற்கு வழி மொழிகிறது.

உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும், தலைவர்களுக்கும், முன்னோர்களைப்பற்றி நிறை குறைகளுடன் வரலாற்றுக் காவியங்கள் படைக்கப்பட்டு நம்மிடம் இன்று வந்து இருந்தாலும் இலங்கை தோற்றம் முதல் இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை தலைவர்களுடைய வழிமுறைகள் வரைக்கும், அவர்களின் வாழ்க்கை முறைகள் அவர்களின் "எண்ணங்கள்" மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

அவலத்தை மட்டுமே எங்களால் தரமுடியும்? என்ற அத்தனை வழித்தோன்றலுக்கும் மத்தியில் எப்படி அஹிம்சை கொள்கைகள் எடுபடும்? எப்படி அவர்களால் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்?

அப்படி ஒன்று உள்ளே இருந்தால் தானே?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டமாக பிரிந்து நிற்காத காலமாக இருந்த இந்த பூமிப்பந்தில், தகடுகள் நகர்த்திய நகர்வில் உருவானது தான் இந்திய, ஆஸ்திரேலியா,ஆப்பிரிக்கா,தென் அமெரிக்க நிலத்தகடுகள்.

இந்தியாவுடன் இலங்கை, மாலத்தீவு,லட்சத்தீவு,போன்ற தீவுகள்.

அப்போது கூட இந்த இலங்கை இந்தியாவில் இருந்து நீந்தி கடக்கும் தூரமாகத்தான் இருந்தது.  ஆனால் சிங்கள இனம் தொடக்கம் பெறுவதாக கூறப்பட்ட காலம் முதலே மிருக குணத்துடன் வாழ்ந்தவர்கள்.  காலப்போக்கில் தனக்கும் பகுத்தறிவு வந்து விட்டதாக நம்பியவர்கள், இவர்கள் தான் எதிர்காலத்தில் ஒரு இனத்தை தூர் வாருவது போல் துடைத்து ஒழிப்பார்கள் என்று இந்தியாவில் உருவாகியிருந்த எந்த ஞானியகள் கூட உணரந்து இருப்பார்களா என்பது தெரியவில்லை.

உள்ளே இயல்பாகவே உருவாகும் உருவாகி இருக்கும் எண்ணங்களை எத்தனை தூரம் தான் மாற்ற முடியும்? இந்த எண்ணங்கள் எத்தனை உருவது குறித்து உங்களுக்குள் எத்தனை விவாதம் இருந்தாலும் இந்த வரலாற்று சிங்கள தலைவர்களின் கடந்த, நடந்த, நடந்து கொண்டுருக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் மரபு வழியும் ஒரு காரணமோ என்று நிணைக்கத் தோன்ற வேண்டியிருக்கிறது.

நல்லவர்கள் வளர்க்கும் குழந்தைகள் நாசகார செயல்களில் ஈடுபடுவதும், தீயவர்களின் குழந்தைகள் நாடே போற்றும் நல்ல செயல்களில் ஈடுபட்டு புகழ் அடைவதும் இன்று வரையிலும் நாம் அணைவரும் பார்த்துக்கொண்டு இருப்பது தானே?

சந்தர்ப்பங்கள் சிலரை மாற்றுகிறது.
எண்ணங்கள்  சிலரை வழி நடத்துகிறது.
ஆனால் சிங்களர்களின் வாழ்வில் மொத்தமாய் எல்லாமே அதிசியமாய், ஆச்சரியமாய், ஆற்றாமையைத் தான் உருவாக்குகிறது.

ஆனால் அத்தனையிலும் விதிவிலக்காக தொடக்கம் முதல் சிங்களர்களின்  வாழ்வியல் பாடங்கள் நமக்கு பல விசயங்களையும்,  இந்த சமூகத்திற்கு உணர்த்துகிறது.  இவர்கள் தான் சிங்கம் புணர்ந்து உருவானவர்கள்.

திகைப்படையாதீர்கள்.  சிங்களர்களின் புனித நூலாக மதிக்கப்படும் தீபவம்சம், மகாவம்சம் தெளிவாக இதைப்பற்றி உணர்த்துகிறது.

உங்கள் வாயில் உள்ள எச்சிலை வீண் அடிக்க எனக்கு விருப்பமில்லை.

சிங்கள வம்சம் உருவான கதையே இப்படி இருக்கும் போது வல்லூறு போல் சதையை ருசி பார்த்த, இறந்தும் புணர்ந்த வக்கிரத்தைப் பார்த்தும் இவர்களை மனிதர்கள் என்பீர்களா?  மனித குணம் படைத்த சிங்கம் என்பீர்களா?

சிங்கம் கூட தனது இரை கிடைத்து பசி அடங்கியதும் அமைதியாகி விடும். அடுத்த இரை எதிரே வந்து நின்றாலும் அமைதியாகத் தான் இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கூற்று.

விஜயன் என்ற கப்பல் நீண்ட நாட்களாக இலங்கையில் இருந்தது.  இந்த விஜயன் என்ற மன்னரில் இருந்து தான் இவர்கள் வம்சம் தொடங்கியதாக நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.  சிங்களர்களின் சிங்கம் பொறித்த தேசிய கொடியும் உணர்த்தும் செய்தியும் இவை தான்.


கி.மு 5ம் நூற்றாண்டில் லாலா (வங்காளத்திற்கும் ஓரிஸாவிற்கும் இடைப்பட்ட) வில் வாழ்ந்த சிங்கபாகுவால் நாடு கடத்தப்பட்ட அவருடைய மகன் விஜயன், தன்னுடைய நண்பர்களுடன் மரக்கலங்கள் மூலம் இலங்கையை சென்று அடைந்தான்.  இவன் மூலம் வந்தவர்கள் தான் சிங்கள இன மக்கள்.

விஜயன் இலங்கையில் இறங்கிய போது வாழ்ந்த மக்கள் யக்சர்கள், நாகர்கள். ஆனால் சென்று இறங்கியதும் விஜயன் செய்த முக்கிய காரணம் யக்சர்களின் இளவரசியான குவேனியுடன் வலுக்கட்டாய உறவு வைத்து அவள் மூலமாக அங்கு தன்னை மன்னராக பிரகடனம் செய்ய வைத்தது.

மன்னராக ஆனதும் மனைவியை துரத்தி விட்டதும், மக்கள் விருப்பத்தின் படி தென் மதுரையை அப்போது ஆண்டு கொண்டுருந்த பாண்டு என்ற மன்னர் மகளை மணந்து அமைதியாக 38 வருடங்கள் ஆட்சி புரிந்தான்.  வயதான காலத்தின் இறுதியில் பதவிக்கு ஆசைப்பட்ட அமைச்சர்களை மீறி தனது சகோதரன் (இந்தியாவிலுள்ள கலிங்க நகர்) தனது சகோதரன் மகனை இலங்கை வரவழைத்து (பாண்டுவஸ்தேவா) ஒப்படைத்து சிங்களர்களின் முதல் வம்ச வரலாறு தொடங்குகிறது.


காரணம் முதல் மனைவியை துரத்திய போதே பிறந்து இருந்த இரண்டு குழந்தைகளையும் ராணி வெளியே அழைத்துச் சென்றுவிட்டாள். (இரண்டாவது மனைவி குழந்தைகள் குறித்து குறிப்பேதுமில்லை.)

கிமு 2ம் நூற்றாண்டில் பவுத்தம் உள்ளே நுழைந்து,. பாலி,சமஸ்கிருதம், தமிழ் மூன்றும் கலவையாய் சிங்கள மொழி உருவாகி வரி வடிவமாக மாற்றம் அடைந்த ஆண்டு கிபி 12ம் நூற்றாண்டு.

ஆனால் விஜயனுக்கு முன் தமிழ் மக்கள் அங்கு வாழ்ந்த வரலாற்று சான்றுகள் உண்டு.  கற்பனை அல்ல.  சிங்களர்களின் புனித நூலான மகா வம்சம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் போல இலங்கையில் திருக்கேஸ்தீவரம், முன்னேஸ்வரம், நடலேஸ்வரம் போன்ற ஈஸவர திருக்கோயில்கள் இருந்ததாக கூறுகிறது. கிடைத்த சமஸ்கிருத ஒன்றிரண்டு கல்வெட்டுகள் மூலம் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆளுமை செய்த எந்த விசயங்களும்  தொல்லை நோக்கில் உருவாக்கி இருந்ததால் மிகப் பெரிய ஆதாரங்கள் காணவில்லை.  ஏற்கனவே சொன்னது போல்

 ”போயாச்சு. வென்றாச்சு. சரி கிளம்புங்கப்பா".

கிமு 2ம் நூற்றாண்டில் (கிமு 161 / 117) மொத்தம் 44 ஆண்டுகள் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்பதையும் மகாவம்சம் தெளிவாக எடுத்துரைக்கிறது.  2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடைசி சங்கப் பாடல்களில் ஈழத்துப் புலவர் ஈழத்துப் பூததேவனாரின் பல பாடல்களில் நிறைய சான்றுகள் உள்ளது.

எல்லாளின் இறுதி காலத்தில் தான் துத்தகாமினி என்ற 25 வயது சிங்கள மன்னன் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றினாலும் மொத்த தமிழ் பரப்புகளை கைப்பற்ற முடியவில்லை.

போர்த்துகீசியர்கள் உள்ளே வந்த (கிபி 1505) வந்து ஆளுமைபடுத்திய வரைக்கும் உள்ளே மாறி மாறி தமிழ் மன்னர்களும் சிங்கள மன்னர்களும் ஆண்டு வந்தாலும் சில குறிப்புகள் மட்டும்.

கிமு 48 முதல் 44 வரைக்கும் ஆண்ட விதவை ராணி அனுலாவின் முக்கிய பொழுது போக்கு உறவு கொள்வதும் முடிந்த வந்த ஆடவர்களை விசம் கொடுத்து கொல்வதும்.

கிபி 459ல் ஆண்டு தத்துசேனா என்பவரின் மாமா மகாசேனா என்பவர் தான் சிங்கள புனித நூலான மகாவம்சம் எழுதியது.  இவர் எழுதிய இந்த நூல் முன்னால் படைக்கப்பட்டு இருந்த தீபவம்சத்தை அடிப்படையாக வைத்து.

1017 ஆம் ஆண்டு சோழர்களான முதலாம் ராசராச சோழனும் அவரது மகன்  ராஜேந்திர சோழனும் மொத்த இலங்கையை தென் இந்தியாவின் கட்டுப்பாட்டில் 37 ஆண்டுகள் வைத்து இருந்தனர். பிடிக்கப்பட்ட ஐந்தாம் ஐந்தாம் மகிந்தா சிறையிலேயே இறந்து போனார்.

கிபி 1055 ஆண்டு முதலாம் விஜயபாகு சிங்களர்களை திரட்டி கைப்பற்றி அனுராதபுரத்திற்கு பதிலாக பொலனருவா என்ற புதிய தலைநகர் உருவாக்கி  ஆண்டார்.

இவரின் வழித்தோன்றல்கள் சிங்கள -பாண்டிய- கலிங்க வம்சமாக திருமண உறவுகள் மூலம், கலந்து அடித்து படிக்கும் போதே கலக்கி விட்டனர். கலங்கிய குட்டையில் வந்த கலப்பினர்கள்.

தொடக்கம் முதல் இன்றைய, பல சிங்கள தலைவர்கள் என அத்தனையும் இந்திய ரத்தமும், தமிழன் ரத்தமும் இணைப்பில் வந்த கலப்பின மக்கள். இன்று வரையிலும் உள்ள பல தலைவர்களின் பூர்வாசிரம வாழ்க்கையையே புடம் போட்டு தாத்தா பாட்டன் வரைக்கு நாம் பந்தியில் படைத்து விட முடியும்?  ஆனால் இடுகையின் தன்னை மாறி விடும்.  மேலும் மேலும் உணர்ச்சி தமிழர்களை வளர்ப்பதாகவே இருந்து தொலைத்து விடும்.

இந்தியாவுடன் பகைமை நட்பும், தமிழர்களை தவிக்க விட்ட வெஞ்சினமும் முழுமையாக நீங்கள் உள்ளே போனால் உங்களுக்கு ஏராள காரண காரியங்கள் புரியும்.  நல்ல மனிதர்களின் எண்ணங்களுக்கும் நாதாரி பிறப்பில் உருவான சிந்தனைகளுக்கும் உள்ள விளக்கங்கள் அது.

சிங்கம் என்ற சிங்களர்கள்,  கலப்பினத்தில் பாதியான தமிழ்வம்சம் பெற்ற புத்திரர்கள்.   இவர்களே உண்மைத்தமிழர்களை பரதேசியாக மாற்றம் அடைய வைத்தவர்கள்.

மொத்த வம்சமே இவ்வாறு தொடர்ந்து வந்த காரணம் ஒன்றினால் மட்டும் தானோ கலங்கடித்தவர்களை கண்டு வீரம் இல்லாமல் கண்ணீர் விட்டு கதறி கண்டவர்களை துணைக்கு அழைத்தார்களோ?

தமிழன் என்பவனுக்கு கண்டங்களும் கடக்கும் தூரம் தான் என்று அன்று நிரூபித்து சோழ பாண்டிய வம்சத்தின் மன்னர்களின் தொடக்க கால புலிக்கொடி அன்று மொத்த இலங்கையிலும் பறந்தது சிறந்தது இருந்தது.  2000 ஆண்டுகள் கழித்தும் கூட இன்றைய கால கட்டத்தில் கூட அந்த புலிக்கொடி மீண்டும் பறக்க முயற்சிக்கின்றது.

ஆனால் வீரம் இல்லாமல் இன்று வரைக்கும் தந்திர சிங்கள (?) தலைவர்கள் எந்திரமாய் வாழ்பவர்களோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் விஞ்ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த தமிழனின் வீரத்தையும் வியந்து பார்த்த தீரமும் புரிகிறது.

12 comments:

ஹேமா said...

சரித்திரங்கள் என்ன சொன்னாலும் சிங்களவன் சம்பவங்களை சொல்லி சால்வை போடுகிறானே !

இனி ஏணிப்படியின் ஆரம்பப் படியில் கால்வைத்து....எங்கள் ஆயுள் அடுத்தவன் மண்ணில்தானா !

ஜோதிஜி said...

புத்தகங்களோடு புரண்டபடி
குண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.

அலுவலக அறைக்குள்
பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.

ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை.

அறியா நண்பனிடம்
தீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.

வாழ்வு என்னமோ
என்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை.

எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!

ஜோதிஜி said...

முதல் விமர்சனம் அளித்த ஹேமா அவர்களின் கவிதை வரிகள் இது.

உணர்வு, உணர்ச்சிகள் என்று மாற்றம் பெறும் "போடுகிறானே" என்று மட்டும் தான் வார்த்தையாய் வரும்.

கவலைவேண்டாம். வலியுடன் இருந்தவர், இருப்பவர்களின் வாழ்வின் அந்த ஆதாரத்தை இந்தியாவில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள இந்த நல்ல மரியாதையை ஏற்றுக்கொள்கிறேன்.

ரோஸ்விக் said...

தமிழ் இனமும், வரலாறும் மீண்டு(ம்) எழுச்சி பெரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது...

அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

இனி ஏணிப்படியின் ஆரம்பப் படியில் கால்வைத்து....எங்கள் ஆயுள் அடுத்தவன் மண்ணில்தானா வலி நிறைந்த வார்த்தைகள்- ஹேமா சொன்னவை. வரலாறும், அனுபவங்களும் மனிதர்களுக்கு இரண்டை சொல்கின்றன. எப்படி வாழ வேண்டும். எப்படி வாழ கூடாது என்று. நாம் நமக்கு தேவையான விஷயங்களை எடுத்து கொள்வதில்லை. ஞாபகங்கள் நல்ல விஷயங்களுக்கு ஆனவை. ஆனால் நாம் இரண்டாம் நூற்றாண்டில் நடந்தவைக்காக இந்த நூற்றாண்டில் பழிவாங்குகிறோம். ஆனால் அவர்களுக்கு தெரியாது- இந்த நூற்றாண்டில் அடி வாங்கியவன் இன்னொரு நூற்றாண்டில் அடி கொடுப்பான் என்று. எண்ணங்கள் தான் வாழ்க்கை. மிகச்சரி. ஆனால் அந்த எண்ணங்கள் எப்படி பட்டவை என்பது தான் கேள்வி.

கலகலப்ரியா said...

நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை..!

vasu balaji said...

தொடருங்கள்.

ஜோதிஜி said...

tamiluthayam

நன்றி நண்பரே. இது வரைக்கும் நாகரிக வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் ஒளிந்து கொண்ட பெயருடன் ஒரே ஒருவர் மட்டும் உன்னதமாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார்.

அது ஒரு வகையில் அவருக்கு அந்த நிமிட ஆத்ம திருப்தியை கொடுத்து இருக்கும். ஆனால் இப்போது கொடுத்து இருக்கும் .

இது போன்ற விமர்சனத்திற்காகவே மட்டும் உங்களுக்கு எந்த வகையில் கைமாறு செய்ய முடியும்.

எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது?

இதை உணர்ந்தவர்கள் சரித்திரம் படித்த திருப்தி வரும். அதில் அதிக உண்மைகள் இருக்கும். கூட எதிர்ப்புகளும் இருக்கும். எழுதுபவன் நம்பிக்கை இழந்தால் நம்பகத்தன்மை இழந்து நாறத்தன்மைகள் தான் அதிகம் எழுத்தில் இருக்கும். எல்லாம் தமிழ்நாட்டில் உருவாக்கிய எத்தனையோ புத்தகங்கள் போல இதுவும் கடந்து போகும்.

இந்த நூற்றாண்டில் வாங்கிக்கொண்டுருக்கும் அடி அத்தனையும் உங்கள் தொடக்கத்தில் கருவாக்கம் பெற்று, தொடர்ந்த ஆண்டுகளில் உருவாக்கம் பெற்று, தொடர்ந்து அதையே முன் எடுத்து வந்த தலைவர்களால் இந்த நூற்றாண்டில் அதன் இறுதி வடிவம் உங்கள் முன்னால் நிற்கிறது ஐயா.

அடி வாங்கியவன் இன்னொரு நூற்றாண்டில் அடி கொடுப்பான் என்று.

ஆமாம். சரியானதே. ஆனால் யார் யார் என்று என்பது தான் இன்று உங்கள் முன்னால் என் முன்னால் இருக்கும் கேள்வி. எதிர்காலத்தில் சிங்களர்கள் உங்களுக்கு எதிரியாக இருக்கப்போவது இல்லை. இலங்கையை தொடக்கத்தில் ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டு எடுக்க அத்தனை சிங்கள தலைவர்களும் தமிழ் தலைவர்களை சார்ந்து இருந்தார்கள். உண்மை. காரியம் ஆனதும் கழட்டியும் சாதுர்யாகமாகவும் தந்திரமாகவும் செயல்பட்டார்கள்.

அதே போல் அடுத்த 20 ஆண்டுகளில் உருவாகப்போகும் " தமிழர்கள் விரும்பும் சுதந்திரத்தின்" போது இதே அத்தனை சிங்களர்களும் தமிழனிடம் வந்து நின்று "சினம் கொள்ள வேண்டாம். சீனத்திடம் இருந்து நம் நாட்டை மீட்டு எடுப்போம்" என்று வந்து நிற்கிறார்களா? இல்லையா என்பதை பார்க்க நீங்களும் நானும் இல்லாவிட்டால் கூட இந்த தேவியர் இல்லம் திருப்பூர் இடுகை இருக்கும்.

ஒரு வேளை நம்முடைய வழித்தோன்றல்களுக்கு வலியை மறந்து வழி காட்டக்கூடியதாக?

காரணம் வீரம் என்பது உலகத்தில் தமிழனிடம் மட்டும் தான் இருக்கிறது. அதே சமயத்தில் விவேகம் குறைந்த இனமும் தமிழினம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போது தெரியும் மா சே துங் சீனமா இல்லை இது வெறும் வெஞ்சினமா? என்று.

geethappriyan said...

அருமை ஜோதிஜி,
மிக அருமையான பதிவு, சிங்களனின் அசிங்கமான முகத்திரை கிழியட்டும்.
ஏணி உவமை அருமை
ஓட்டுக்கள் போட்டாச்சு.

ஜோதிஜி said...

நன்றி கார்த்திகேயன், கலாப்ரியா, பாலாஜி ஐயா.

velji said...

தகவல்கள் நிரம்பிய கட்டுரை.

நன்றி.

Thenammai Lakshmanan said...

//சிங்கம் கூட தனது இரை கிடைத்து பசி அடங்கியதும் அமைதியாகி விடும். அடுத்த இரை எதிரே வந்து நின்றாலும் அமைதியாகத் தான் இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கூற்று.//

உண்மைதான் ஜோதிஜி

உங்கள் படைப்புகள் மிக அருமையாக உண்மைகளின் வெளிப்பாடாக உள்ளது