Wednesday, November 04, 2009

துளசிதளம்

தமிழனத்தின் முன்னோர்களும், அரசாண்டவர்களும், ஆளுமை செய்தவர்களும் என அத்தனை பேர்களும் ஆண்டவன் விசயத்தில் " குறையேதுமில்லை மறைமூர்த்தி கண்ணா"  என்று தான் வாழ்ந்து இருக்கின்றனர்.

அத்தனை மன்னர்களும், தமிழினமும் " இறையே" என்ற ஒரு குறிசொல்லில் மொத்தத்தையும் மறந்தனர்.

ஏன்?    தன்னையே உணர தயங்கினர்.

புனிதம்,புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளில் புதிராகத் தான் வாழ்ந்து போய் இருக்கின்றனர்.   அடுத்தவரிடம் "அன்பு செலுத்தி" தன்னை நிலைநாட்டுவதற்கு பதில் " எல்லாம் சிவமயம்" என்பதற்குள் முடித்து விட்டனர்.  முடிந்தும் போயினர்.  இறை நம்பிக்கைகளுக்கும், தங்களுடைய அடிப்படை கடமைகளுக்கும் என்ன வித்யாசங்கள் என்று தெரியாமலேயே ஆண்டவர்களும் வாழ்ந்தனர்.  ஆட்சியில் வாழ்ந்த மக்களும் வாழ்ந்தனர்.

வாழ்ந்தவர்களுக்கு " ஆண்டவனே.........." என்று கடைசி வரையிலும் கதியாய் இருந்தார்கள்.  வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்கதிக்கு அழைத்துக்கொண்டு சென்ற போதிலும் எவருக்கும் மாற்றம் தேவையாய் இல்லை.  முன்னேற்றம் என்பது விதிப்பலனுக்குள் என்று பார்த்துக்கொண்டவர்களுக்கும் பெரிதான ஆசைகளும் இல்லை.
வாழ்ந்தவர்கள் நெஞ்சில் சுமந்த லட்சியங்கள் இல்லாமல் பின் தொடர்ந்து வந்த வழிதோன்றல்களையும் அவ்வாறே பாதை காட்டி மறைந்தனர்.

காரணம் தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது இன்று நேற்று வந்தது அல்ல.  அன்றே தொடங்கியது.  ஆனால் இன்று வரையிலும் விடாமல் தொட்டு தொடர்ந்து கொண்டு வந்து கொண்டு இருப்பது?

தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாமரன், பாதிக்கப்பட்டவன், அறிவாளி, அறிவற்றவன் என்ற எந்த வித்யாசங்களும் இல்லை.  மன்னர் முதல் கடவுள் வரைக்கும்.

உயர்வு நவிற்ச்சி அணி என்றாலும், வஞ்சப்புகழ்ச்சி அணி என்றாலும் அணி அணியாக கழுத்தில் தொங்கும் மணியாக பாதுகாத்துக் கொண்டு பயணித்துக்கொண்டுருப்பவன் தமிழன்.  அந்த தாழ்வு மனப்பான்மையே தன்னை தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை வாழ்த்தி வரவேற்பது.

இன்று?

" உங்கள் பாதம் பட்டதால் இந்த மாவட்டமே புனிதமாகி விட்டது."
"வாழ்த்த வயதில்லை.  உங்களை வணங்குகிறோம்.  "

அன்று "ஆண்டவா காப்பாற்று " என்பது கூட குற்றம்.

" நான் புழுவினினும் சிறியேன்.  தொண்டர் அடிப்பொடியேன்"

"ஒரு பூனையானது பாற்கடலில் உள்ள பாலை நக்கிப் பருகுவதற்கு முயல்வது போல நான் ராமபிரானின் கதையை எழுதுகிறேன்."

அவையடக்கம் என்ற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது என்பது அன்றைய கம்பன் முதல் இன்றைய வம்பன்கள் வரைக்கும்.

"வாருங்கள் ஓபாமா உணவருந்தலாம்" என்று எளிதாக அழைத்து விட முடியும்.  முதல் மந்திரிகளை இவ்வாறு அழைத்தால் அழைத்தவர்களுக்கு உடனடியாக அக்குபஞ்சர் சிகிக்சை கிடைத்துவிடும்.

" மன்னா இது உன்னுடைய உழைப்பின் வெற்றி.  இதற்கு மூலகாரணமே உன்னுடைய திட்டங்களும் முன்னேற்பாடுகளும் உழைப்புமே.  இதற்கு ஏன் ஆண்டவனிடம் போய் நிற்கிறாய்.  வாருங்கள் அடுத்த கடமைக்கு உழைக்க தயாராய் ஆவோம்"

"ஐயகோ.  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.  இது இறைவன் அளித்த பிச்சை"

" அப்படியென்றால் புயல்,வெள்ளம்,மழை தாக்கி வீடு இழந்து நாட்டில் நிர்கதியாய் இருப்பது?"

" விதிப்பயன்.   மாறும்.  மாற்றம் அடையும் வரை பொறுத்து வாழ்வதே சிறப்பு."

உரையாடல்களின் மூலம் அன்றும் இன்றும் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?

இப்போது புரியுமே?

நிர்மூலமாய் இருப்பவர்களின் வினைப்பயன் என்பதால் தானே அதிகாரம் எழுதியவர்கள் கூட அதிசயமாய் பார்த்துக்கொண்டுருப்பது.

காலத்தை விஞ்ஞானம் மாற்றி உள்ளது.  ஆனால் மனத்தை மாற்ற எந்த கருவியும் கண்டு பிடிக்காத ஒரே குறையினால் தான் இன்னமும் குறைத்துக்கொண்டுருக்கிறோம்.

நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் வசதியான சூழ்நிலையில் வாழ்வாதார பிரச்சனைகளை வெறும் செய்திகளாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இத்தனையிலும் ஒரு ஆச்சரியம்.

தமிழினம் தம்மைப்பற்றிய உணராத பெருமைகளை, அன்று வாழ்ந்த மன்னர்கள் உணர முடியாத நிதர்சனங்கள் இங்கே உள்ளே வந்தவர்கள் உணர்ந்தது மட்டும் அல்லாமல் உள்வாங்கியதை வெளிப்படுத்திய விதம் மொத்தத்தில் ஆச்சரியமாய் இருக்கிறது.

" தமிழரின் மூதாதையரான திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள்.  உலகில் மிகப் பழைமையான உயர்ந்த நாகரிகமான சிந்து சமமெளி நாகரிகத்திற்கு இவர்கள் சொந்தக்காரர்கள்"

சிந்துவெளி அகழ்வராய்ச்சி மூலம் வெளிப்படுத்திய ஸ்பானீஸ்காரரான  ஹீராஸ் அடிகளார்.  இன்று தமிழ் பெயர் நாகரிகம் இல்லை என்று ரோஷணா, ரோஷன் என்று பிள்ளைகளுக்கு பெயர் வைக்கின்றோம்.  அவரின் பெயரை பார்த்தீர்களா?

" திருக்குறளை லத்தீன் மொழியில் உரைநடையாக மாற்றி வெளியிட்டவர் " இத்தாலியராக உள்ளே வந்த பெஸ்கி.  ஆனால் இவருடைய மற்றொரு பெயர் உங்களுக்கு எளிதாக தெரியும்.  ஆமாம்.  வீரமாமுனிவர்.

" திருவாசகம் படித்து அதில் உருகிப்போய் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தமிழ் பக்தி இலக்கியத்தை மேலை நாடுகளுக்கு பரப்பியவர்"

ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர்.  இவர் இறக்கும் போது கூட தனது கல்லறையின் மேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதி வைக்கச் சொன்னவர்.

இவையெல்லாம் ஒரு கனாக் காலம் என்று கேள்வி குறியையோ, அல்லது கேலிக்குறியையோ உங்களுக்குள் உருவாக்கும்.  சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதரைப்பற்றி, " உண்மையான மகான் " பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
                                                                                       வீரமாமுனிவர்
அடுக்கு மொழி, சிலேடை மொழி, சிருங்கார மொழி, தேன் மொழி, பேதி மொழி என்று அத்தனை நடையிலும் பேசிப்பேசி ஆட்சிக்கட்டிலை பிடித்த எந்த தமிழ் தலைவர்களும் செய்யாத சிறப்பை இவர் செய்தவர்.

ஆமாம் தமிழ் மொழியை தனது நாட்டு மொழியாக, தேசிய மொழியாக, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக, சிறப்பு கொடுத்த மனிதர்.

ஆனால் தமிழர் அல்ல.  சீனர்.

ஆமாம் ஐயா லீ குவான் யூ.
சிங்கப்பூர் என்ற நாட்டை தான் ஆட்சியில் இருந்த 50 ஆண்டுகளில் அடுத்த நூற்றாண்டுக்கு தகுந்தது போல் நகர்த்தி காட்டியவர்.  உண்மையான செயல் வீரர்.  இன உணர்வை தூண்டி என்றும் " இளிச்சவாய்தனமான மானம் இல்லாதவனாக வாழ் நீ "  என்றவர்களுக்கு மத்தியில் அறிவை உந்து சக்தியாய் ஆளுமை என்பது உனது அடக்கமும் உழைப்பும் முக்கியம் என்பதை உணர்த்திக் காட்டியவர்.  பிரிவினை என்பது எதையும் வளர்த்து விடாது என்பது நிதர்சனமான கொள்கையினால் மக்களுக்கு உணர்த்திக் காட்டியவர்.

இப்போது புரியுமே?  புனிதம் என்றவர்களுக்கும், எதுவுமே புதிர் அல்ல என்று சொன்னவர்களுக்கும் உள்ள வித்யாசங்கள்.

"தமிழுக்கு அமுதென்று பெயர்"

ஆனால் அதிகமாக குடித்து வாழ்ந்தவர்கள் மயங்கி கிடந்தாலும் இங்கு வந்தவர்கள் மற்றும் தமிழ்ர்கள் அல்லாதவர்கள் பருகிய ஒரு துளி பல விசயங்களை உலகிற்கு உணர்த்த உதவியாய் இருந்து இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கை என்பதும், தனிப்பட்ட நம்பிக்கைகள் என்பது அவரவர்களின் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொள்வது.  அதுவே ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மை உணர வைத்துக்கொண்டுருப்பதும்.
ஜி.யூ.போப்
உங்கள் அறிவின் மூலம், உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பார்த்து உங்கள் சிந்தனையில் வெறி வந்து விடக்கூடாது.

கிடைக்கும் அத்தனையும் நம்மை நாசகார செயல்களில் இறக்கி விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட உருவகம் அது.

காரணம் எல்லையில்லா அறிவென்பது உங்கள் ஆளுமைக்குள் இல்லாவிட்டால் எங்கு போய் நிறுத்தும் என்பதற்கு இன்று பூமியை பல நூறு அடிகள் போய் ஊடுருவித் தாக்கும் ரசாயன குண்டுகள் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட மனித இனம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?

ஓலமாய் முடிந்து போனவர்களின் வாழ்க்கை எதை உணர்த்துகிறது?

ஆனால் வெறும் நம்பிக்கைகளை, அதுவே வாழ்க்கையாய், சாப்பாடு போல் உண்டு கொழுத்து அழிந்து போனவர்கள் பின்பற்றியவர்கள் மட்டும்.

ஆனால் சொல்லிக் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள், அவர்கள் மட்டும் தெளிவாக வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள்.

தொடர்ந்தவர்களின் வாழ்க்கை மட்டும் அன்றும் இன்றும் என்றும் வாழ்க்கை நிர்மூலமாகிக்கொண்டுருக்கிறது.

தமிழனின் வாழ்வியலில் "அது ஒரு கனாக் காலம்" முதல் இன்றைய "கதி கலங்கிக் கொண்டுருக்கும் காலம்"  வரையிலும் உள்ள சிந்தனை தொடர் ஓட்டம் இது.

சிறப்பு என்றால் "ஓட்டுப் பட்டையின் " மூலம் மூலத்தை தமிழனின் முகவரி ஆக்குவோம்.

வெறுப்பு என்றால் "விமர்சனம்" :மூலம் ?.

15 comments:

ஜோதிஜி said...

உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்

Unknown said...

நன்றாக ஆரம்பித்த கட்டுரையை தெளிவாக சொல்லி முடிவுக் கருத்தை வெளிப்படையாகக் கூறாதும் மழுப்பலானதாகவும் அமைத்த விதம் வருத்தம் தருகிறது. கடமை, தன்னம்பிக்கை, கட்டுப்பாடு மூன்றும் தனி வாழ்விலும் பொதுவாழ்விலும் போற்றிச் செயல்பட வேண்டிய நிலையை, தேவையை, வலியுறித்தி அமைத்தால் சிறப்பாக இருக்கும். மாற்றி அமைக்க வேண்டுகிறேன்.
அன்புடன் ராதாகிருஷ்ணன் நவம்பர் 4, 2009

geethappriyan said...

அருமை ஜோதிஜி,
காலையில் இதை படித்தவுடன் எனக்கு சிரிப்புடன் கூடிய சிந்தனை வரத்தவறவில்லை.
எளிய நடையில் மிக ஆழமான கருத்துக்கள்.
படிக்கும் எவரையும் புடம் போடும்.
அதில் ஒவ்வொரு பத்தியிலும் இருந்த நகைச்சுவையை எண்ணி எண்ணி சிரித்தேன்.

"வாருங்கள் ஓபாமா உணவருந்தலாம்" என்று எளிதாக அழைத்து விட முடியும். முதல் மந்திரிகளை இவ்வாறு அழைத்தால் அழைத்தவர்களுக்கு உடனடியாக அக்குபஞ்சர் சிகிக்சை கிடைத்துவிடும்.//

சொந்தக்காரர்கள்"

//சிந்துவெளி அகழ்வராய்ச்சி மூலம் வெளிப்படுத்திய ஸ்பானீஸ்காரரான ஹீராஸ் அடிகளார். இன்று தமிழ் பெயர் நாகரிகம் இல்லை என்று ரோஷணா, ரோஷன் என்று பிள்ளைகளுக்கு பெயர் வைக்கின்றோம். அவரின் பெயரை பார்த்தீர்களா?//

ஈழம் வரை இந்த பாதிப்பு உள்ளது கண்டு வருந்தினேன்.

தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க இப்போதே குழந்தைகளுக்கு பயிற்றுவைக்க வேண்டும்.

இடையிடையே மேதைகளையும் மீண்டும் அறிந்தோம். நல்ல பதிவு
ஓட்டுக்கள் போட்டாச்சு.

ஜோதிஜி said...

வணக்கம் நீங்கள் இந்த இடுகை வரையிலும் என்னை தொடர்ந்து கொண்டுருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதன் கருத்து தவறாக இருந்த காரணம் என்றாலும் நீங்கள் விமர்சிக்க காரணமாய் இருந்ததற்கு மீண்டும் எனக்கு மகிழ்ச்சி தான்.

கடமை என்பதன் மூலம் அன்றாட கடமைகளை சரிவர செய்து கொண்டுருக்கும் பாமரன், உழைப்பாலும் முன்னேற முடியவில்லை. அவன் வணங்கும் நம்பும் தெய்வத்தாலும் முன்னேற்ற முடிய முடியவில்லை. காரணம் என்ன?

தன்னம்பிக்கை என்பதன் மூலம். திருப்பூரில் மட்டும் நான் பார்த்த வரையிலும் படிப்பாலும், உழைப்பாலும், திறமையாலும் எத்தனையோ இளைஞர்களை பார்த்து வந்து இருக்கின்றேன். எம்.பி.ஏ முடித்து விட்டு தொடக்க சம்பளமான 1500 முதல் 2000 க்கு வரிசை கட்டி நேர்முக தேர்வுககு நின்று கொண்டுருப்பது எதனால்?

நான் வாழ்ந்த காரைக்குடிக்கு இன்று சென்றாலும் எனக்கே ஒரு புதிய உலகமாகத்தான் தெரிகிறது. இங்குள்ள விலைகள் முதல் அங்குள்ள பழக்கம் வரைக்கும். பாம்பு கொத்திய நச்சு உடம்பு முழுக்க பரவி பரவி ஒரு அளவிற்கு மேல் உடம்புக்கு அந்த நச்சே எதிர்ப்பு சக்தி உருவாக்கி விடுவதைப் போல சமூக வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தனையும் பெற்ற பிறகு இப்படி ஒரு வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா? என்ற சுயபச்சாதாபம் உருவாக்குகிறது.

எத்தனை தன்னம்பிக்கை என்றாலும் அத்தனைக்குப்பிறகும் சமூகம் முழுக்க கண்களுக்குத் தெரியாத நம்பிக்கை இழக்கச் செய்யும் நிகழ்வுகள் தான் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டுருக்கிறது? தவறு இருந்தால் தெரிவிக்கவும்.

நூறு கோடி சொத்து வைத்துருக்கும் அத்தனை செட்டியார்களை எனக்குத் தெரியும். ஆனால் இன்னமும் ஒரு ரூபாய் கூட வீணாக செலவழிக்காமல் தன்னுடைய கடமை மட்டும் கருத்தில் கொண்டு வாழும் எத்தனையோ பெரியவர்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் இதுவே இன்றை சமூகத்திற்கு கஞ்சத்தனம் என்று தோன்றுகிறது.

வணிக ரீதியான ஊடகத்தில் இரண்டு விதமாக பரபரப்பு அல்லது புகழ்ச்சி என்ற விதத்தில் இல்லாமல் இது என் கருத்து? இதில் உள்ளவை மூலம் யோசித்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு? என்பதாகத்தான் நான் கருத்துக்களை உருவாக்கம் கொடுத்து அமைக்கின்றேன்.

திணித்தல் என்பது ஒரு அளவிற்கு மேல் திகட்டி விடும்.

கைபிடித்து கூட்டிக்கொண்டு செல்வதை விட கையை விட்டுவிட்டு நடப்பதை பார்த்துக்கொண்டு தேவையானவைகளை தகுந்த சமயத்தில் சொல்லிக்கொடுப்பது தனிமனிதனுக்கும் மட்டுமல்ல, அவனுடைய வழித்தோன்றலுக்கும் உதவியாய் இருக்கும் என்பது என்னுடைய வாழ்க்கை உணர்த்திய அனுபவம்.

உங்கள் மரியாதைக்கும், தொடர்தலுக்கும், மனப்பூர்வமான கருத்துக்கும் என் வணக்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

அது ஒரு கனாக் காலம் said...

நான் திரு ராதா கிருஷ்ணனை வழி மொழிகிறேன் ... சொல்ல வருவதை , நேராக சொல்லி " போட்டு தாக்கு " ... அவ்வளவு தான் ... அதோட பின் விளைவு ???!!!!! நீங்க தான் சாமாளிக்கணும் .

ஜோதிஜி said...

"யாரையும் நேரிடையாக தாக்க வேண்டியது இல்லை"
"கோபத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்"
என்ற வழிகாட்டல் நினைவுக்கு வரும் போதே "போட்டுத்தாக்கு" என்ற அளவிற்கு நான் வளர்ந்ததுள்ளதும் புரியவைக்கின்றது. இனிமேல் பின் முன் விளைவுகள் என்ன நம் வாழ்வில் வந்து விடப் போகின்றது சுந்தர்? வருவதற்கு தான் என்ன இருக்கிறது???!!!!!!

Muniappan Pakkangal said...

Nice.

vasu balaji said...

உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் ஜோதிஜி. கருத்து பகிர்வு பகிர்வாகவே இருக்க வேண்டும்.நல்ல அலசல் மீண்டும்.

geethappriyan said...

இந்தத் தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்க இருப்பது:-
ஜோதிஜி தேவியர் இல்லம். (திருப்பூரில் இருந்து புறப்பட்ட இந்த தேசிய கீதம், இவரின் நுட்பமான வார்த்தை பிரயோகங்கள் நமக்கு புதிய வாசிப்பனுபவத்தை தரும்)

அருமை ஜோதிஜி,
தொந்தரவிற்கு மன்னிக்க வேண்டும் ஓய்வு நேரத்தில் இதை ஒரு கை பார்க்க வேண்டுகிறேன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள், தரமான ஆழமான சிந்தனைகள். நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

அருமை!அருமை!

தன்னம்பிக்கை ஓன்றே இனி தமிழனின் மொழியாக இருக்கட்டும்.

Thenammai Lakshmanan said...

ஜோதிஜி

அருமை

எல்லாவற்றிலும் அருமை இதுதான்

//"வாருங்கள் ஓபாமா உணவருந்தலாம்" என்று எளிதாக அழைத்து விட முடியும். முதல் மந்திரிகளை இவ்வாறு அழைத்தால் அழைத்தவர்களுக்கு உடனடியாக அக்குபஞ்சர் சிகிக்சை கிடைத்துவிடும்//

பின்னோக்கி said...

என் மகனுக்கு நான் வடமொழி பெயரை வைத்துள்ளேன். அதனால் இந்த கட்டுரை எனக்கும் ஒரு அறிவுரை.

ஜோதிஜி said...

இந்த இடுகையின் கருத்துக்கள் சற்று சலசலப்பை உருவாக்கினாலும் நான் சொல்ல விரும்புவது?

படைப்பவனுக்கு ஒரு பார்வை. படிப்பவர்க்கு பல பார்வை.

வாழ்ந்தவன் வாழ்க்கையில் இருந்து தான் எடுத்து எழுத முடியும்.

பொருத்தம் இல்லை என்றால் வாழ்க்கை உணர்த்தியது அதிகம் வருத்தம் தான் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு தனி மனித வாழ்வியலும் அவர்களின் மனசாட்சி இதை உணர்த்தும். உறுத்தும்.

பங்கெடுத்த, விமர்சித்த, முன் எடுத்துச் சென்ற , வாசித்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி.

" ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே " இது உலகத்தை அன்பு மயமாக்க சொல்லப்பட்ட அன்பு மொழி.

" ஆதலினால் நீங்கள் எங்கள் விருப்பங்களையும் உணர்ந்து ஆட்சி நடத்துங்கள் " இது இன்று வரையிலும் இலங்கையில் ஆட்சியில் அதிகாரத்தில் ஆளுமை செய்து கொண்டுருக்கும் புத்த பிக்குகளின் புனித மொழி,

" புத்த விகார் " இன்று " யுத்த விகாரமாகி" விட்டது.

ஆசையை அடக்கு என்பவரின் வார்த்தைகள் இன்று அடக்கு அல்லது அழி என்பதில் வந்து முடிந்து உள்ளது.

எந்த நாடும் தொடர்ந்து வணிக வல்லரசாகவோ, உலகத்தின் நாட்டாமையாகவோ இருந்தது இல்லை.

எந்த நாட்டின் அடிப்படை மனித மீறல்களையும் முழுமையாக தொடர்ச்சியாக மறைத்து விட முடிவதில்லை.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் கடைசி கட்ட யுத்தம் உணர்த்திய புண்கள் ரணமாக மாறிய இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஒரே கேள்வி தான் ஒவ்வொரு ஆட்சியாளர்களின் மனதிலும் ஒலித்துக்கொண்டுருக்கிறது.

" மனிதம் இன்னும் இருக்கிறதா?"

கடவுள் ஏன் கல் ஆனான்? என்ற கேள்விக்கு 68 பக்க அறிக்கைகள் உணர்த்துமா? அவதாரம் எடுத்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகுமா?

நம்பிக்கை தான் வாழ்க்கை. மாற்றம் என்றுமே மாறாதது.

துளசி கோபால் said...

பதிவுக்கும் தலைப்புக்கும் உள்ள தொடர்பை புரிஞ்சுக்க முடியலையே:(

இன்றுதான் இந்த இடுகை கண்ணில் பட்டது!