Thursday, March 19, 2020

1000

2009 ஜூலை  2020 மார்ச்
10 வருடங்கள் 8 மாதங்கள்
1000 பதிவுகள்

10 வருடங்கள் - கற்றதும் பெற்றதும்


முன் கூட்டிய எச்சரிக்கை 

இது பத்து வருடக் கதை. மிக நீண்ட பதிவு. உங்களால் பத்து நிமிடங்களில் வாசிக்க முடியாது. ஆனால் உங்களை விருப்பத்துடன் வாசிக்க வைக்க முயன்றுள்ளேன்.

முன் தகவல் அறிக்கை

(இணையத்தில் தொடர்ந்து செயல்படுவதும், விட்டு விலகியிருப்பதும், வேடிக்கை மட்டும் பார்ப்பது என் வாடிக்கையாக இருப்பதால் அடுத்த முப்பது நாட்கள் எனக்கு வேடிக்கை நாட்கள். வீட்டில் "பெண்கள் நலக் கூட்டணி"க்கு அடுத்த அறுபது நாட்கள் கொண்டாட்ட நாட்கள்.  வீட்டுச் சபாநாயகரும் அப்பாடா என்று காலையில் தாமதமாக எழும் நாட்கள். இருதயம் பலகீனமானவர்கள், மதப்பற்று உள்ளவர்கள், அதி தீவிர கட்சி விசுவாசிகள், மோடி எதிர்ப்பாளர்கள் வாசிப்பதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது)

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நீண்ட பதிவு)

1000 குறித்து?

மதுரைத் தமிழன், கிருஷ்ணமூர்த்தி, கிரி போன்றவர்கள் பல மடங்கு கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். துளசி டீச்சர் 2000 கடந்து சென்று இருக்க வாய்ப்புண்டு. நான் அவவ்ப்போது வனவாசம் சென்று விடுவதுண்டு. கடந்த பத்தாண்டுகளில் திரட்டி உலகம், திரட்டிகள் இல்லாத உலகம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் போன்ற தலைமுறைகளைக் கடந்து இன்னமும் எழுத வாய்ப்பு அமைந்துள்ளது. வீட்டுச் சபாநாயகரும், பெண்கள் நலக் கூட்டணியினரும் என்னை  அனுமதித்து உள்ளனர் என்று அர்த்தம். என் ஆர்வம் இன்னமும் மாறாமல் அப்படியே உள்ளது.

ஏன் எழுதுகிறேன்?

கணினி முன்னால் அமர்ந்திருக்க வேண்டிய பணியின் காரணமாகவும், தமிழ் தட்டெழுத்து நல்ல பயிற்சி இருப்பதாலும். 

எழுதும் காரணம்?

சமூக வலைதளங்களில், அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளில், வார இதழ்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் ஏதோவொன்று உத்வேகத்தை உருவாக்கும்.  ஒரு வார்த்தை அல்லது வாசகம் கிடைக்கும். எண்ணங்கள் சிந்தனையில் தத்தளிக்கும். முழுமையாக எழுதி விட முடிகின்றது..

எழுதாமல் இருந்தால்?

ஒன்றும் ஆகாது. பொழுது வெட்டியாய் நகரும். வாசித்த, பார்த்த விசயங்கள் எனக்குள்ளே இருக்கும். மன உளைச்சல் உருவாகும். எழுதுவதால் இரவில் படுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட முடிகின்றது.


Friday, March 13, 2020

எதற்காகவும் பயப்படாதீர்கள்



மற்றவர்களின் மீது பழி சொல்லாமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள் .

வாழ்க்கை என்பது முழுவதுமாக நீங்கள் அதை எந்தக் கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளதே நடப்பதற்கெல்லாம் மற்றவர்கள் மட்டும் பொறுப்பாக மாட்டார்கள் உங்கள் பங்கும் அதில் உள்ளது என்பதனை உணருங்கள்

மற்றவருடன் பேசும்போது அதிகமாய் கூர்ந்து கவனிப்பதின் அருமையை உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஆச்சர்யமாய் உணர்வீர்கள். அது உங்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூடத்தான்

உங்கள் கோட்பாடுகளுக்கும் மற்றும் வாழ்க்கை முறைக்கும் சேர்ந்து வராத நபர்களிடம் பழக நேர்ந்தாலும் அவர்களுடைய உறவை வெட்டிக்கொள்ள வேண்டாம் ஏனெனில் அவர்களும் நமக்கு ஒருநாள் வேண்டும் தான் .இந்த உலகம் வேடிக்கையானது மட்டுமல்ல சிறியதும் கூட .

சமூக நீதி

இது நடந்தது 21 வருடங்களுக்கு மேல் இருக்கும். துல்லியமாகச் சொல்லப் போனால் பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டு மிகப் பெரிய கலவரம் ஒரிசா மாநிலம் (1999 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர்) முழுக்க நிகழ்ந்தது.

அப்போது தற்போதைய ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் (பெரும்பாலும் பழங்குடியினர்) வாழ்ந்த குடும்பங்கள் கொத்து கொத்தாக இடம் பெயர்ந்தனர். குறிப்பாக அங்குள்ள ஒவ்வொரு சர்ச் ம் அடைக்கலம் கொடுத்தது. பாதுகாப்பு வழங்கியது.