Tuesday, June 21, 2022

தனபாலன் விழித்துக் கொள்ளுங்கள்

நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த அறிவிப்பு எத்தனை மாறுதல்களைக் கடந்து வந்தது என்பதனை ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருக்கும்.  இது மட்டுமல்ல. பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஒவ்வொரு அறிவிப்பு மாறிக் கொண்டே இருக்கின்றது.  அமைச்சர் பதவியில் இருக்கும் நபர் வாய் இருக்கின்றது என்பதற்காக அள்ளி வீசிக் கொண்டே இருக்கின்றார்.  அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல சமூக வலைதளங்களில் உள்ள ஒரு நபர் கூட கல்வித்துறை எந்த அளவுக்குச் சீரழிக்கப்பட்டுள்ளது என்பதனை ஒரு நபர் கூட எழுதுவதில்லை. ஆனால் அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற் போல அக்னிபத் என்பது இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தின் மரூஉ என்கிறார்கள். எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள்.

1. கருணா சிறுபான்மையினரை ஆதரித்தார்.  ஓட்டு வாங்குவதற்காக உளறுவார். எழுதுவார். காரியம் முடிந்தவுடன் வெளியே நிறுத்தி வைத்து விடுவார். மீறிப் பேசினால் அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கிப் பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்து அவர்கள் வாயை மூட வைத்து விடுவார்.  எந்த மதமாற்றிகளும் அவரை அசைக்க முடியவில்லை. பிச்சை எடுப்பவர்கள் போல பின்னால் அலைந்தார்கள். அலைய வைத்தார்.   லிப்ஸ்டிக் அழகர் துரை முருகன் சுயசரிதம் எழுதினால் செய்த காரியங்களையும் பாவங்களையும் அத்தியாயம் வாரியாக எழுத வாய்ப்புண்டு.

2. இரண்டு திருடர்களும் தமிழக பள்ளிக்கல்வித்துறையை மட்டுமல்ல. உயர் கல்வித்துறையையும் காசு சம்பாதிக்க உதவும் ஒரு துறையாகத்தான் பார்த்தார்களே தவிர அது சமூகத்தை உருவாக்கக்கூடிய முக்கியமான துறையாகக் கருதவில்லை.  இன்று வரையிலும் இரண்டு துறைகளில் வந்து அமர்ந்த ஒருவன் கூட நல்லவனே இல்லை. துறை சார்ந்த அறிவு என்பதும் இல்லை. எந்த மாறுதல்களையும் உருவாக்கவே இல்லை.  மயிரிழையில் திரு. உதயச்சந்திரன் அழுகிப் போன ஆன்மா வை காப்பாற்றி நமக்குத் தந்துள்ளார்.  3. நான் சில தினங்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு அம்மையார் ஒருவர் காவாலி பயலைக் கல்வி அமைச்சராக நியமித்தால் இப்படித்தான் தமிழக கல்விச் சூழல் இருக்கும் என்று எழுதியிருந்தார்.  படித்தவுடன் சுருக் என்று நமக்குக் கோபம் வரும். என்ன பொதுவெளியில் அப்படியே கொட்டி விட்டார் என்று?  ஆனால் நடந்து கொண்டு இருப்பதைப் பார்க்கும் ஏன் இந்த ஆள் முன்பு இருந்த ரசிகர் மன்ற வேலைகளிலிருந்து இருக்கலாமே? என்று மனதிற்குள் வெறுப்பாக உள்ளது.

4. தொடர்ந்து ஓடாத படங்கள். ஆனால் அடுத்தடுத்து படங்கள் எடுக்கும் அளவுக்குப் பணம் உள்ளே இருந்து வந்து கொண்டே இருக்கின்றது. நடிக்கத் தெரியாத நடிகர். அல்லக்கை வேலைக்கு ஆட்கள்.  விசுவாச அடிமைக்குப் பலிகடா தமிழக கல்வித்துறை. இந்த லட்சணத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வேறு. சுபவீ, பெண்களை ஆராய்ச்சி செய்த அத்தனை விபரங்களும் தற்போது இணையப் பொதுவெளியில் அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணம் கிடைக்கின்றது. இவருடன் வக்ரபுத்தியும் வன்மத்தை தன் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஆபாச பட்டிமன்ற விபச்சாரன் லியோனி. பொறுக்கிகள் சூழ்ந்த கல்வித்துறையில் நீங்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? அடப் பாவிகளா? கடந்த ஒரு வருடத்தில் தமிழக மொத்த கல்வித்துறையும் தலைகீழாக மாறியுள்ளது.

5. இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை (அரசு உதவி பெறும்) பள்ளிகளுக்கு அரசு முழு மூச்சுடன் அவர்கள் விரும்பும் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றார்கள். உடனே வேலை நடக்கின்றது.

6. நான் காழ்ப்புணர்வுவோடு எழுதவில்லை. அரசுப் பள்ளிகளில் பற்றாக்குறை ஆசிரியர்களை நியமிப்பதில்லை. ஆனால் சிறுபான்மை பள்ளிகள் கேட்கும் அனைத்து விசயங்களையும் உடனே செய்து கொடுக்கின்றார்கள்.

7. டெல்லி சென்று மாதிரி பள்ளியைப் பார்த்து வந்தார்கள். அது குறித்து அதற்குப் பிறகு வாயே திறக்க வில்லை.

8. மிதி வண்டி மற்றும் மடிக்கணினி மிக மிக முக்கியமான ஒன்றாக மாணவர்களுக்கு இருந்தது. இந்த வருடம் வழங்கப்படவில்லை. தற்போது புத்தகங்கள் ஒன்று மட்டுமே வழங்கப்படுகின்றது. 

9. ஏற்கனவே மொத்தம் 24 பொருட்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்கள். பாடங்களில் நிறைய மாறுதல்களை உருவாக்கியுள்ளனர். கேட்பதற்கு நாதியில்லை.

10. அரசு பள்ளிக்கூட 11 மற்றும் 12 வகுப்பில் ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை. தற்போது தொழிற்கல்வி அதாவது நான்காவது பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்பதே இல்லை.  அங்கங்கே நிரந்தர ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.  ஒப்பந்த அடிப்படையில் இருக்கின்றார்கள்.  ஆனால் முறைப்படியான சம்பளம் வழங்காத காரணத்தால் வாரத்தில் ஒரு வகுப்பு கூட அவர்கள் வருவதில்லை.

11. பள்ளிக்கல்வித்துறை இன்று வரையிலும் யாரும் எதுவும் கேட்க முடியாத அளவுக்கு ஒரு கோட்டை போல அகழி வெட்டி பாதுகாத்து வரும் ராஜபரிபாலணம் தான் நடந்து வருகின்றது.  தற்போதைய சூழலில் ஒரு அரசு பள்ளிக்கூட மாணவருக்கு 29 000 முதல் 30 000 ரூபாய் வரைக்கும் செலவு செய்யப்பட்டாலும் நாம் எதிர்பார்த்த மகிழ்ச்சி எதுவும் இன்று வரையிலும் இல்லை. பாதிக்குப் பாதி நல்ல மணம் கொண்ட ஆசிரியர்களால் அரசு பள்ளிக்கூடம் தன் கடைசி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நகர்ந்து வருகின்றது.

12. திரு. உதயச் சந்திரன் கல்வித்துறை செயலாளராக இருந்த போது எந்த பள்ளியும் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்.  கீழே உள்ள விளம்பரத்தைப் பாருங்கள்.  இன்று அனைத்து பத்திரிக்கைகளிலும் பத்து பக்கத்திற்குத் தனியார் பள்ளிக்கூடங்களின் விளம்பரங்கள்.  தமிழக பள்ளிக்கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது?

13. தமிழகத்தில் அனைத்து தனியார் கல்லூரிகளும் தங்கள் மாணவர் சேர்க்கையை முடித்து விட்டனர்.  அதாவது மதிப்பெண்கள் வருவதிற்கு முன்பே. 

இது தான் இவர்களின் திருட்டு மாதிரி அரசு.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

என்ன எவற்றையெல்லாம் எழுதுவது என்று தெரியவில்லை... (சுருக்கமாக :-) அவ்வாறு நிகழ்வுகளை எழுதினால், ஒப்பீடு எனும் அழிவில் அடியேனும் சிக்கி விடுவேன்... (அதற்கும் 8+8=7 உண்டு...!) அவற்றை நீங்களே தொடரவும்...

உங்களின் எழுத்துகளையும்#, உரைகளையும்# அதிகம் கேட்டுள்ளேன்... (ளோம்...!) அது 50℅ நக்கீரர் வகை... மிச்சம் 50℅ எடுப்ஸ் இருந்தார்... கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவை# முற்றிலும் மாற்றம்... அதன் தரம் பிடிக்காதவற்றில் வெறுப்பில் தெரிவதை விட, தனிமனித போற்றுதலில் திகைத்துப் போகிறேன்...! (கணக்கு அப்படித்தான்...!) தாத்தா சொன்னது போல் "113. நன்றே தரினும்" குறளுக்கு எடுத்துக்காட்டாக ஆகி விட்டீர்களோ என்று சந்தேகமும் வந்தது - வருகிறது... இருக்காது என்றே நம்புகிறேன்...

உங்களின் ஒரு வருட பதிவுகள் + மேலும் எழுதப் போகிற பதிவுகள் மட்டுமே தங்களுக்கு மருந்து...

மீண்டும் நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

மேற்படி கருத்துரையில் சொன்ன 113-வது குறளைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன்... கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, இதன் விளக்கத்தை, எனது மகளிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்... "வாழ்வில் வரும் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது வேண்டாமா...?" என்று பல எண்ணங்கள்.... இதன் அடுத்த குறளில் "எச்சம்" எனும் சொல் வரும்... அதற்கு நேர் பொருள் மிச்சம் அல்லது மீதி... ஆனால் இங்கு "தனக்கு பின்னால் புகழாலும் இகலாலும் அறியப்படுவார்கள்" என்பதே சரி என்றேன்... "இப்போது 113-வது குறள் விளக்கம் புரிய ஆரம்பிக்கும்" என்றேன்... "இனி வேலைக்கு செல்லும்போது அங்கு செயலில் காட்டு" என்றும் கூறினேன்... Hard work
but Smart Work...! (குறள் விளக்கம் சொன்ன முறையிலும்)

நம்ம முனைவர் அண்ணாச்சி, ஒரே ஒரு குறளுக்கு 400 பக்கங்கள் எழுதி உள்ளதாக கூறினார்... அதை முதலில் வாங்கி மகளுக்கும் கொடுக்க வேண்டும்...

நன்றி...

ஜோதிஜி said...

நான் எழுதிய பதிவிற்கு சரியான பதிலை அளிக்கவும்.