Friday, October 16, 2020

சாதிக்கப் போகும் ஸ்வர்ணலதா - கடிதம்

நாம் சில ஆவணங்களைப் பத்திரப்படுத்த இப்போது எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் சிலவற்றைப் பொதுவெளியில் வைப்பது நல்லது. காரணம் இது எனக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல.  

இந்தக் கடிதத்திற்குப் பின்னால் ஒரு சிறிய கதை உள்ளது.

நண்பர் கிரி மூலம் அறிமுகம் ஆனவர் நண்பர் (இப்போது வளைகுடா நாட்டில் இருக்கின்றார்) 



திருமதி ரவி - கண்ணீர் அஞ்சலி

வணக்கம், இன்று தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்தைப் படிக்கும் போது (திருமதி ரவிக்காக) நீங்கள் எழுதிய பதிவைப் படித்து சில நிமிடங்கள் அலுவலகத்தில் அசைவில்லாமல் கிடந்தேன்.. இன்று என்னுடன் பணி புரிந்த நண்பன் இறந்து ஒரு வருடம் முடிந்த தினம் (சிறு வயது 32 - இயற்கை மரணம் - வெளிநாட்டில்) மருத்துவமனையில் சேர்த்து 15 நாட்கள் பின்பு மரணம்.. 38 வயதுடைய நான் அவனுடன் 8 ஆண்டுகள் மூத்த சகோதரனாக,   ஆசானாகப்  பழகி இருக்கிறேன்.. திருமண அழைப்புகளுக்குச் செல்வதை விட, அழைப்பில்லாமல் வரும் மரண வீடுகளுக்குச் செல்வது பிடித்தமான நிகழ்வு..  

நீங்கள் குறிப்பிட்டது போல் பல மரணங்களைப் பார்த்துள்ளேன் (12 வயதில் என் தந்தையின் மரணம் உட்பட, வளர்த்த தாத்தா, பாட்டி) ஆனால் என்றும் கலங்கியது இல்லை.. நெருங்கிய உறவுகள், நண்பர்கள் மரணித்த போது கூட இதுவரை அழுததில்லை.. ஆனால் அவர்களின் கடந்த கால நினைவுகள், பழகிய நாட்கள் நெஞ்சைப் பிசையும். என்னுடைய பல நடவடிக்கைகள் மனைவிக்குக் கூட ஆச்சரியத்தைக் கொடுக்கும்.. இரக்கமில்லா ஒரு மனிதனாக இருக்கிறேன் என்று.. தனி ஒருவனாக முழுச் சுதந்திரத்துடன் வளர்ந்ததால் குடும்ப பாசவலைக்குள் சிக்காதது கூடக் காரணமா என்று தெரியவில்லை.. நான் இருந்தாலும், இல்லையென்றாலும் உலகம் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.. 

எனவே யதார்த்தம் என்னவென்று நான் எப்போதும் குடும்பத்தினருக்குப் புரிய வைப்பேன். கிட்டத்திட்ட  மரணத்தைப் பொறுத்தவரை உங்களின் மனநிலை தான் என் மனநிலையும்.. ("மனிதர்கள் மற்ற உயிரினங்களை விட மகத்தானவன். அதே சமயத்தில் அவனை விட சல்லிப்பயலும் இந்த உலகில் இல்லை என்பதனை அவர்களுக்குப் புரிய வைப்பேன்" ) இந்த வரிகள் என்னைத் தீவிரமாகச் சிந்திக்க வைக்கிறது..  மீண்டும் மீண்டும் படிக்கும் போது ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகிறது... 

இதுவரை நான் படித்த, கேட்ட , பார்த்த கண்ணீர் அஞ்சலிகளிலே திருமதி ரவிக்காக நீங்கள் எழுதியதை மிகச் சிறந்ததாகப் பார்க்கிறேன்.. கண்ணீர் கண்களிலிருந்து மட்டும் வருபவை அல்ல!!! இதயத்திலிருந்து வரும் என்பதை முதல் முறை உணர்கிறேன்.. முகமறியா காற்றில் கலந்த அந்தத் தேவதைக்கு என் இதய அஞ்சலிகள்!!!

முகமது யாசின்

11/10/2020 

இந்தியச் சுதந்திரம்:- மறைக்கப்பட்ட உண்மைகள் - Hidden truth details about -India's Independence Story (இந்திய வரலாற்று ஆசிரியர்கள் எழுதாமல் விட்ட பல உண்மையான தகவல்கள்.  இந்தியா சுதந்திரம் அடைந்த நிலைக்குப் பின்னால் எத்தனை எத்தனை மறைக்கப்பட்ட உண்மைகள்)

Podcast ஜோதிஜி தொடர் பேச்சு

You Tube ஜோ பேச்சு


8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// உலகில் உள்ள நல்லவற்றையெல்லாம் தாங்கள் காணப் பெறவேண்டும் // என்று எனது விருப்பமும் அண்ணே... வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உலகில் உள்ள நல்லவற்றையெல்லாம் தாங்கள் காண வேண்டும்
தங்களால் நாங்களும் காண வேண்டும்

ஜோதிஜி said...

எதிர்காலம் என்பது யார் கையில்? நாம் நம் கடமைகளை செய்து முடித்து விடுவோம்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அன்பு மகிழ்ச்சி

கிரி said...

யாசின் கூறும் சில கருத்துகள் எப்போதுமே வியப்பை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒவ்வொரு கதை, அனுபவங்களை வைத்து இருப்பார்.

மிகச்சிறந்த மனிதர். இவரின் நண்பர் சக்தியைப் பற்றி எப்போதும் பகிர்வார்.

எனக்கே.. யாருடா இப்படியொரு ஆளு என்று நினைத்து, ஒருமுறை அவரிடம் பேசி மூவரும் சந்தித்தோம்.

ஜோதிஜி said...

என் கருத்துக்கள் பெரும்பாலும் இவர் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றது என்பது ஆச்சரியமே. என் பழைய பதிவுகளை தேடித் தேடி படித்துக் கொண்டிருக்கின்றார்.