Sunday, July 05, 2020

சிங்கங்கள் பாதையை மாற்றிக் கொள்வதில்லை

மின்னூல்களைப் படிக்கின்றார்களா? என்று நண்பர் சென்ற வாரம் அழைத்துக் கேட்டார். யூ டியூப் பிரியர்கள், ஃபேஸ்புக்கில் அரட்டை அடிப்பதை மட்டும் கொள்கையாகக் கொண்டவர்கள் வாசிப்பதை விரும்புவதே இல்லை. கட்சி, மதம், சாதி அரசியலைக் கடந்து லைக் அரசியல், ஷேர் அரசியலைக் கடந்து வரப் புரிதல் இருக்க வேண்டும். இத்துடன் ஆதரவு அளிப்பவர்களின் உளப்பாங்கைப் பகுத்தறியத் தெரிந்து இருக்க வேண்டும்.இது புரியாதவர்கள் தான் அவசரக் குழந்தைகள்.



சப்தம் கேட்டால் கூட்டம் கூடுமே? அது போன்ற பழக்கத்தில் உள்ளவர்களைப் படிக்க வைப்பது கடினம். அவர்களுக்குப் பெயர் முக்கியம். ஆதரிக்கும் கொள்கை அதனை விட முக்கியம். இவையெல்லாம் தெரியாமல் பலர் தொடக்கத்தில் சோர்ந்து விடுகின்றார்கள்.

இதற்கு மேலாக அலைபேசியில் எப்படி அமேசான் கிண்டில் செயலியை நிறுவுவது? என்பதனை அறியாமல் தடுமாறுபவர்கள் மற்றொருபுறம். ஆனால் அதற்கான வீடியோக்கள் தமிழில் அதிகம் உள்ளது. முயற்சி செய்யலாம்.

ஆனால் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் அவர்கள் பாதையை மாற்றிக் கொள்வதே இல்லை. பிரபல்யம், பிரபல்யம் இல்லாதது என்பதனைக் கடந்து சிலருக்கு மட்டுமே இவர் எழுத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் அடுத்தடுத்து உருவாகின்றது. வாசிப்புக்கான கூட்டம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் கிண்டில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே புரியும். நம்பிக்கை இழக்காதீர்கள் என்பதற்காகவே இதனை இங்கே வெளியிடுகிறேன்.

ஒவ்வொரு மாதமும் 1000 என்ற எண்ணிக்கையில் இருப்பவர்களைத் தக்க வைப்பதே உயர்ந்த அங்கீகாரமாக உள்ளது.

கிண்டில் கருவியில் நான் வியந்த சில விசயங்கள்.

மாதம் தோறும் ரூ 166 கட்டினால் நீங்கள் 1660 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வாசிக்க முடியும் என்பதனை விட எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒரு ஆதாரத்தைத் தேடும் போது கண்டத்தில் வேறொரு பக்கம் வாழ்பவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகத்தையும் அந்த நிமிடமே பெற முடியும். குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பார்த்துப் படித்து விட்டு வேறொரு புத்தகத்தையும் எடுத்துக் கொள்ள முடியும். கிண்டில் வாசிப்பு என்பது வேறொரு பக்கம் தலை திருப்ப முடியாத கண்டிப்பு ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போலவே இருக்கிறது. படிக்க வேண்டும். அல்லது மூடி வைத்து விட்டு வேறு வேலை பார்க்க வேண்டும்.

அலைபேசியில் அந்த வசதிகள் இல்லை. அலைபேசியென்பது வாசிக்க உகந்த கருவியல்ல. கவனச் சிதறலை உருவாக்க ஆயிரம் காரணங்களை உள்ளே வைத்திருக்கும் கருவியது.

படிக்கிறார்கள்? படிக்கவில்லை? என்பதனை விட நாம் இந்த கால கட்டத்தில் இது போன்ற ஒரு உருப்படியான காரியத்தில் ஈடுபட்டோம் என்ற ஆத்ம திருப்தி உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.

செல்பி சமூகத்தின் ஊர்க்கதைகள்:




12 comments:

வெங்கட் நாகராஜ் said...

கிண்டில் வாசிப்பு குறித்த இந்தப் பதிவு சிறப்பு.

வாசிப்பை நேசிப்போம். தொடரட்டும் உங்கள் மின்னூல்கள்.

KILLERGEE Devakottai said...

//நாம் இந்த கால கட்டத்தில் இது போன்ற ஒரு உருப்படியான காரியத்தில் ஈடுபட்டோம் என்ற ஆத்ம திருப்தி உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு//

ஆம் நண்பரே இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் நான் மனம் தளராமல் எழுதுகிறேன். தற்போது மின்நூலும்...

எனது மறைவுக்கு பிறகாவது எனது எழுத்தை படிக்க ஒரு கூட்டம் வரும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

தங்களது கட்டுரை பலரது உள்ளத்தை பிரதிபலித்து விட்டது - கில்லர்ஜி

ஸ்ரீராம். said...

ஆம், கிண்டில் பற்றி சரியாய் அறியாதவர்கள்தான் அதிகம் என்பதில் நானும் அடக்கம்.  ஏதோ ஒருமுறை உள்நுழைந்ததில் ஓரிரு புத்தகங்கள் மொபைலில் இறங்குவேன் என்கிறதே தவிர, கணினிக்கு வருவதில்லை.  அதற்கு மெனக்கெடவும் இப்போது நேரமில்லாமல் அலுவலகப் பணிச்சுமை.  மெ...து...வா.....ய் கணினியில் ஏற்படுத்திக்கொண்டு மெ...து....வாய்தான் இதில் நான் இறங்கவேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

// அலைபேசியென்பது வாசிக்க உகந்த கருவியல்ல... //

கண்டிப்பாக... கிண்டிலில் வாசிப்பு என்பதே வேறு...

கரந்தை ஜெயக்குமார் said...

கிண்டில் வாசிப்பு புத்தக அனுபத்தைத் தரத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு சிறிது பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றேன்
கொரோனா கால முடக்கம், வலைச்சித்தரின் அறிவுறுத்தல், என்னையும் மின்னூல் பக்கம் திருப்பிவிட்டுள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

// அதற்கான வீடியோக்கள் தமிழில் அதிகம் உள்ளது. முயற்சி செய்யலாம். //

https://packiam.wordpress.com/ ← இதில் 6000 க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் உள்ளது என்று "கல்லாதது குறளளவு" பதிவில் கொடுத்து இருந்தேன்... அவை எளிதில் புரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு....!

மேலும் இதே போல் இன்னொன்று → http://www.kaniyam.com/all-posts/

உங்களின் புத்தகம் "5 முதலாளிகளின் கதை" விமர்சனத்தின் போது, கிண்டில் பற்றி தேடலில் பல வலைத்தளங்கள் + காணொளிகள் Bookmark செய்து வைத்திருக்கிறேன்... அவற்றில் சிறந்த இரண்டு :

https://www.youtube.com/watch?v=HSGF9QLaGqA

https://tamilvarigal.com/category/blog/

ஜோதிஜி said...

நான் கத்திப் பார்த்தேன். கதறிப் பார்த்தேன்.கெஞ்சிப் பார்த்தேன். தொடர்ந்து ஒரு வருடமாக எழுதியும் பார்த்தேன். ஒருவரையும் என்னால் மாற்ற முடியவில்லை. ஆனால் சித்தர என்ன நாட்டு மருந்து கொடுத்தீர்களோ ஆளானப்பட்ட நம்ம மீசைக்கார பங்காளியைக் கூட ஜோதியில் கலக்கவிட்டு விட்டீர்கள். எம்ஜிஆருக்குப் பிறகு நீங்க கவர்ச்சி காந்தக் கண் அழகன் நீங்க தான் சித்தரே. எப்படியோ வருகின்ற கிண்டில் போட்டி களைகட்டப் போகுது. அனைவருக்கும் என் முன்கூட்டிய வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

ஹி.. ஹி.. ஹி.. பார்க்கலாம் எதுவரை கிண்டில் போகுமென்று...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உருப்படியான காரியத்தில் ஈடுபட்டோம் என்ற நிறைவு...உண்மையே.

tamilvasagan said...

கிண்டிலில் KU and KOLL மூலம் வாசகர்கள் வாசிப்பதால், எழுத்தாளர்களுக்கு ராயல்டி பணம் கிடைக்குமா. ராயல்டி உண்டு என்றால் அதை எப்படி கணக்கிடுகிறார்கள்.

ஜோதிஜி said...

எனக்கு அது குறித்து முழு விபரம் தெரியாது தமிழ்வாசகம்.

ஜோதிஜி said...

சரியான வார்த்தையிது