Thursday, June 26, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் சேர்ந்த கதை

முன்கூட்டிய தகவல் அறிக்கை மற்றும் எச்சரிக்கை. 

(நீண்ட நாளைக்குப் பிறகு மிக நீண்ட பதிவு. இதயம் பலகீனமானவர்களும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும், கணினியில் பெரிய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்தால் எனக்குக் கண்வலி வந்து விடும் என்பவர்களும் அவசியம் தவிர்த்து விடவும்).

•••••••
ற்ற நாடுகளில் எப்படியோ? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எனக்கு ஞானியாகத்தான் தெரிகின்றார்கள். முற்றும் துறந்தவர்களை ஞானி என்றழைத்தால் இவர்களையும் நீங்கள் அப்படித்தானே அழைக்க வேண்டும். குறிப்பாக வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமற்ற ஜந்து போலப் பணம் என்பதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம் என்கிற ரீதியில் வாழக்கூடியவர்கள். 

சாதாரணக் குற்றவழக்கில் சம்மந்தப்பட்டவர்களை புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போதும் கூனிக்குறுகி தங்களது முகத்தை மூடிக்கொண்டு செல்லும் மனிதர்கள் மத்தியில் இவர்கள் மட்டும் தான் மகான் போலப் புன்முறுவலோடு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்கள். அதன் மூலம் ஆதாயம் பெறவும் தயங்குவதில்லை. 

ரு தொழிற்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எனக்கு, ஒவ்வொரு நாளும் நித்தமும் கண்டம் போலத்தான் கடக்கின்றது. பலதரப்பட்ட பிரச்சனைகள், தனி மனித வக்கிரம், வன்மம், குரோதம், போட்டி, பொறாமை, அளவு கடந்த ஆசைகளுடன் வாழும் சக மனிதர்களைத் தாண்டி அவர்களைச் சமாளித்து வர வேண்டியதாக உள்ளது. 

ம்முடைய இலக்கும் அவர்களுடைய நோக்கமும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் ஏதோவொரு புள்ளியில் இணைந்து மீண்டும் பிரிந்து மீண்டும் சேர்ந்து செல்லும் போது தான் பிரச்சனையில்லாத நிர்வாகத்தை உருவாக்க முடிகின்றது. எந்த அளவுக்கு மனப்பக்குவம் இருந்தாலும் இரவு நேரத்தில் தூக்கம் வராத சமயத்தில் தொழிற்சாலைப் பிரச்சனைகள் மனதில் பூதாகரமாக வந்து போகின்றது.


து போன்ற சமயங்களில் நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. எப்படி இவர்களால் நிம்மதியாக வாழ முடிகின்றது. முடிந்த வரைக்கும் நேர்மையாகத்தான் தான் வாழ்ந்து பார்ப்போமே? என்று யோசித்து வாழும் நமக்கே இத்தனை இடைஞ்சல்கள் என்கிற போது நாள்தோறும் அடுத்தவன் காசுக்கு ஆசைப்படும் இவர்களின் மனோநிலையும், இவர்கள் வாழ்க்கையில் தினந்தோறும் சந்திக்கும் சவால்களும் எப்படி இவர்களை நிம்மதியாக உறங்க வைக்கும் என்று யோசித்துப் பார்க்கும் போது பயம் வந்து எட்டிப்பார்க்கின்றது. 

தொடர்ச்சியான இரவு வேலைகள் இருந்து குறுகிய நேரம் மட்டும் தான் தூங்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்த நாள் நம் வேலைகளில் காட்ட முடியாத ஆர்வம், போக்கிக் கொள்ள முடியாத சோர்வு, அடுத்தடுத்து உருவாகும் உடல் ரீதியான பாதிப்புகள் என்று நரக வேதனைகளை அனுபவிக்கும் போது தான் ஒரு மனிதனுக்குத் தூக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்? 

னால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் தூக்க கணக்கை எடுத்துப் பார்த்தால் அதுவொரு துக்கக் கணக்காகத்தான் இருக்கும். இடைவிடாத அவர்களின் ஒவ்வொரு பயணத்திலும் பயம் தான் பிரதானமாக இருக்கும். பணம் மட்டும் தான் கொள்கையாக இருக்கின்றது. கொள்ளைக்காரன் என்ற பெயர் வந்தபோதிலும். 

னி மனிதனுக்குக் குடும்பம் என்பது வரம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அதுவே சாபமாகப் போய்விடுகின்றது. மக்கள் மனதில் இன்று வரையிலும் நிற்கும் தலைவர்களை இப்போது நினைத்துப் பாருங்கள். ஒன்று குடும்பம் இருக்காது அல்லது குடும்பத்தைப் பத்தடி தள்ளி ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் இன்று திமுகவில் தயாளு அம்மா படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. 

ன் பதவியைத் தன் மகனுக்கே விட்டுக் கொடுக்க மனமில்லாத கலைஞரைத்தான் இன்னமும் இந்த "தமிழ்ச் சமூகத்திற்காக இத்தனை காலமும் இவர் உழைத்தார்" என்ற நம்ப வேண்டியதாக உள்ளது.

ன் திமுக இந்தத் தேர்தலில் தோற்றது? அதற்கான காரணங்கள் என்ன? என்று நண்பர் வினா எழுப்பியிருந்தார். ஏன் ஜெயிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை.

திமுகவிற்கு ஊழல் என்ற வார்த்தை புதிதல்ல. ஊழலுக்குப் பல நவீன விளக்கங்களைக் கொடுத்தவர் தான் கலைஞர். விசாரிக்கும் நீதிபதிக்கே மயக்கத்தைத் தரக்கூடிய கலையில் தேர்ச்சி பெற்றவரின் திறமை அவரின் வாரிசுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

குற்றவழக்கில் சம்மந்தப்பட்டவர் கனிமொழி. அவர் நீராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அனைத்தையும் கேட்டவர்கள் மனதில் இப்படித் தோன்றியிருக்கும்? நிச்சயம் இந்தியாவை ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுத்தவர்கள் தான் ஆள்கின்றார்களா? இல்லை அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் மூலம் இந்தியா இயங்குகின்றதா என்று.

ன்னைக் கேவலத்தின் உச்சத்திற்கே கொண்டு போனவர் தன் மகள் என்பதால் அவரைக் கலைஞரால் புறக்கணிக்க முடியவில்லை. அவரையும் தைரியமாகத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கின்றார். மாவட்டச் செயலாளர்களின் அசைக்க முடியாத ராஜ்ஜியம் ஒரு பக்கம். அவர்கள் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்தும் முஸ்தீபுகள். ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று யோசித்துப் பம்மினார்களே தவிர "நான் திமுகத் தான். என் தலைவர் கலைஞர்" என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கும் தொண்டர்களை அத்தனை பேர்களும் மறந்து விட்டார்கள்.
நன்றி (வினவு)

ஜெயலலிதா தங்கள் மேல் கேஸ் போட்டு உள்ளே வைத்து விடுவாரோ? என்று பயத்தில் பாதிப் பேர்கள். தாங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்திற்கு ஆட்சியாளர்களால் பங்கம் வந்து விடுமோ என்று மறுகிக் கொண்டிருந்தவர்கள் மீதிப்பேர்கள். பிறகெப்படி களப்பணி நடக்கும். கடைசியில் கலகலத்து விட்டது. முரட்டுப் பக்தர் தூத்துக்குடி பெரியசாமி முதல் மிரட்டும் மகன் அழகிரி வரைக்கும் உண்டான பஞ்சாயத்துகளைத் தீர்க்க வழியில்லாத கலைஞருக்கு வெற்றி எப்படிக் கிடைக்கும்.  கட்சி என்பதனை குடும்பத்தில் இருந்து தனியாக பிரிக்காத வரைக்கும் திமுக என்ற கட்சிக்கு எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை.

காங்கிரஸ் வேண்டும். கனிமொழியைக் காப்பாற்ற. ஆ. ராசா வேண்டும் தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள. "இனம் காப்போம். மொழி காப்போம். "வீற மறவனே தோள் தட்டி மார் தூக்கி என் பின்னால் வா" என்று கடிதம் எழுதும் கலைஞருக்கு இந்த முறை வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்களின் மனோநிலையை எவரும் புரியவைக்க முயற்சிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

மிழர்களின் தாய் மொழியை மறக்கடிக்க முன்மொழிந்தவர் எம்.ஜி.ஆர். அதனை வழிமொழிந்தவர் கலைஞர். இதுவே சரியென்று அச்சாரம் போட்டவர் ஜெயலலிதா. பிறகெப்படி இப்போதைய இளையர்களுக்கு மொழி குறித்துத் தெரியும்.

றவன் என்றால் என்ன? என்று இன்றைய மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 99 சதவிகித மாணவர்கள் அந்தப்படம் ரீலிஸ் ஆகலையே? என்று தான் சொல்வார்கள். ஒரு திமுக நண்பர் சொன்னது போல இயற்கை கலைஞரை அழைத்துக் கொள்ளும் போது மட்டுமே (குழப்பத்திற்குப் பிறகு) திமுக இயல்பான பாதைக்குத் திரும்பும்.

ற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு பல விதங்களில் முன்னேறியுள்ளது என்று புள்ளி விபரபுலிகள் கதையளக்கின்றார்கள். அதற்குக் காரணம் முரசொலி மாறன் கொண்டு வந்த பன்னாட்டு ஒப்பந்தங்கள். சென்னைக்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தான் காரணம் என்கிறார்கள்.

ன்று நோக்கியாவின் வண்டவாளம் வெளியே வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களும் தெருவில் நிற்கின்றார்கள். சம்பாரித்த நிறுவனம் அடுத்தவன் கையில் ஒப்படைத்துவிட்டு அம்போ சிவ சம்போ என்று சென்று விட்டார்கள். நோக்கியா சமாச்சாரம் தற்போது வெளியே வந்துள்ளது. தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் வருமோ?

ரு பன்னாட்டு நிறுவனம் உள்ளே வந்து தான் இந்தியா வளர வேண்டுமென்றால் ஆட்சியாளர்களின் பார்வைக்கோளாறு என்று அர்த்தம். அதற்கு மேலே வரக்கூடிய நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தாங்கள் பெற முடிகின்ற ஆதாயம் தான் காரணம் என்பதை எத்தனை பேர்களால் உணர்ந்து இருக்க முடியும் நம்புகின்றீர்கள்? விலைவாசி உயர்வும், சுற்றுச்சூழல் சீர்கேடும் இங்கே உருவாக முக்கியக்காரணம் இந்த நிறுவனங்களே.

ங்கே மளிகைக்கடை வைத்திருப்பவன் தலைமுறை தலைமுறையாகத் தன் தலையால் தண்ணீர் குடித்தும் அவனுக்கு எந்த அரசாங்கத்தின் ஆதரவும் கிடைத்தபாடில்லை. வங்கியிடம் கடன் கேட்டுச் சென்றால் சென்றால் கம்பால் அடித்துத் துரத்துகின்றார்கள். ஆனால் மக்களின் வரிப்பணத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றார்கள். கேட்டால் நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என்கிறார்கள்.

ந்த இடத்தில் தான் நரேந்திர மோடி தனித்தன்மையாக இருக்கின்றார். அவர் மேல் வைக்கப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மீறி தன் பாதையைத் தெளிவாக வகுத்துக் கொண்டு, தன் எதிரிகளையும் சமாளித்துக் குறுகிய காலத்தில் மேலே வந்தவர். குடும்பப் பாரம் இல்லை. இன்று வரையிலும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. நிர்வாகத் திறமையற்றவர் என்று எவரும் சொல்ல முடியாத அளவிற்கு ஏற்கனவே இருந்த முதல்வர் பதவி மூலம் தன் முத்திரையைப் பதித்தவர். 

ன்மோகன் சிங் ஆட்சியில் வந்தமர்ந்த போது அவரையும் வானாளவ புகழ்ந்தனர். ஆனால் அவரால் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் உண்டான இடைவெளியை சரியான முறையில் நிரப்பத் தெரியாத காரணத்தால் பழி ஒரு பக்கம். பாவம் ஒரு பக்கம் என்று இன்று பரிதாபமான பிரதமர் பட்டியலில் சேர்ந்து விட்டார். 

ரேந்திர மோடி சிறந்த நிர்வாகி என்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த அரசியல்வாதி. இந்திய அரசியல்வாதிகளுக்குரிய தனித்தன்மையான குணத்தை மனதில் பட்டியிலிட்டு பார்த்துக் கொள்ளவும். அத்தனை குணாதிசியங்களும் இவருக்குப் பொருந்தும். 

ன்மோகன் சிங் "முதலாளிகளால் மட்டும் இந்த நாடு வளரும்" என்று உறுதியாக நம்பினார். மோடியும் அதே தான் சொல்கின்றார். ஆனால் "நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என்றொரு வார்த்தைகளையும் சேர்த்து தான் சொல்கின்றார். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ரசியல்வாதிகளைக் குறை சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழர்களின் அரசியல் அறிவு என்பது உலகப் பிரசித்தி பெற்றது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் கூடப் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக, அதிமுக வார்டு கவுன்சிலர் தேர்தல் போலத்தான் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். வாக்காளர்களுக்கு இந்தத் தேர்தல் எதற்காக நடக்கின்றது என்பது கூடத் தெரியுமா? என்ற சந்தேகம் வந்துருக்கும்.

டந்த காலத்தில் நாம் தேர்ந்தெடுத்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், ராமராஜன், ரித்திஷ், நெப்போலியன் போன்றவர்களும், கலைஞர் மகன் அழகிரி போன்றவர்களும் அவ்வளவு பெரிய பாராளுமன்ற கட்டிடத்தில் எந்த மூலையில் பதுங்கியிருப்பார்களோ? மொழி குழப்பத்தில் விழி பிதுங்கிப் போய் நிற்கும் இவர்களால் அதிகபட்சம் கிடைத்த பேட்டா காசை வாங்கிக் கொண்டு டெல்லியை ஐந்து வருடத்திற்குள் சுற்றிப் பார்த்தது தான் மிச்சமாக இருக்கும்.

தாங்கள் பிறந்த மாவட்டத்தைப் பற்றியே முழுமையாகத் தெரியாதவர்களும், டெல்லி அரசியல் லாபியைப் பற்றிப் புரிந்து கொள்ளவே முடியாதவர்களையும் வைத்து என்ன செய்ய முடியும்? ஆட்டு மந்தை கணக்காக அனுப்பி "ஆத்துல போற தண்ணியை அள்ளிக்குடிக்க" அனுப்பி வைத்தவர்களை நம்பிக் கொண்டு தான் தமிழர்கள் தங்கள் பிரச்சனைகளை இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று இன்று வரையிலும் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சனையை டெல்லி வாலாக்களிடம் போராடி ஜெயிக்க முடியும்?

ந்தத் துறையைக் கைப்பற்றினால் நமக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்பதைத் திமுகக் கற்றுக் கொடுத்து விட்டது. இனி வாய்ப்பு கிடைக்கும் அனைவரும், டெல்லி அரசியலுக்கு ஆசைப்படுபவர்களுக்குப் பாலமாடமாகத்தானே இருக்கும்.

டித்த கணவான்கள் வாழும் சென்னையில் பதிவான ஒட்டுச் சதவிகிதத்தை எடுத்துப் பார்த்தாலே நமக்குப் பல உண்மைகள் தெரிய வரக்கூடும். ஒவ்வொரு முறையும் ஜனநாயக கடமையை ஆற்றுபவர்கள் படிக்காத பாமர மக்கள் மட்டுமே. இந்த முறை மட்டும் சற்றுக் கூடுதலாக முதல் முறையாக ஓட்டளிக்க வந்த இளையர் கூட்டம், இது தவிரக் கொலைவெறியை மனதில் தேக்கி வைத்திருந்த நடுத்தரவர்க்கமும் கூட்டணி சேர்ந்து கும்மாங்குத்து குத்தி விட்டார்கள். நோட்டா பட்டன் வைத்தவுடன் இன்னும் பலருக்கு குஷியாகி விட்டது.

வ்வொரு தேர்தல் வரும் போதும் ஒவ்வொரு அரசியல்கட்சிகளும் இரண்டு விசயங்களில் கவனமாக இருக்கின்றார்கள். மைனாரிட்டி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் ஓட்டு வங்கி. இந்த இரண்டு சமூக மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியாத எந்தக் கட்சியும் வெல்ல முடியாது என்ற மாயை இந்தத் தேர்தலில் உடைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக உ.பி தங்கத்தலைவி மாயாவதிக்கு இந்தத் தேர்தலில் தலித் மக்கள் கொடுத்த அடி எந்தக் காலத்திலும் மறக்க முடியாத ஒன்று. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு முறையும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிக் கொண்டிருந்த உ.பி மாநிலத்தில் குறிப்பிடத்தக்க தொகுதியைத் தவிரப் பெரும்பாலான முஸ்லீம் தொகுதிகள் கூடப் பா.ஜ.க விற்கே ஆதரவளித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் இப்படித்தான் நடந்துள்ளது. 

ந்தத் தேர்தலில் தான் மைனாரிட்டி சமூகம் மெஜாரிட்டி சமூகத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிசயம் நடந்துள்ளது.  இதனால் தான் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடிந்தது.  விமர்சித்த புத்திசாலிகள் மௌனியாக மாறி விட்டனர். 

ற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். தனித் தொகுதிகள் என்ற அச்சாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது தாங்கள் ஜெயித்து வந்த அந்தத் தொகுதியை தங்கள் பதவிக்காலத்திற்குள் முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்து உள்ளனரா? உங்கள் ஞாபகத்தில் வரும் தலைகளைப் பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளவும். இது நேற்று இன்றல்ல. இந்தியா சுதந்திரம் வாங்கியதிலிருந்து இப்படித்தான் இந்தச் சமூக மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வைத்தார்கள் இந்த முறை ஆப்பு? 

மிழ்நாட்டில் பா.ஜ.க பெற முடியாத வாக்கிற்கு முக்கியக் காரணம் பொருந்தாத உறுப்புகளைக் கொண்ட வினோதமான மிருகம் போல உருவான கூட்டணி. அந்தக் கூட்டணி உருவாவதற்கு முன்னால் உருவான குழப்பங்கள், பேரங்கள். கேவல அரசியலில் சாட்சியாக இருந்தவர்களுக்கு மட்டரகமான பதிலையே வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். 

ற்ற கட்சிகளை விடத் திமுக தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு உரிய அங்கீகாரத்திற்காக முன்னெடுப்புகளை எடுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தச் சமூகத்தின் அத்தனை ஓட்டுகளும் அதிமுக விற்கே விழுந்துள்ளது. 

திருப்பூரில் தேமுதிக தோற்றத்திற்கு முக்கியக் காரணம் திருப்பூர் பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட கிராமம் சார்ந்த அத்தனை இடங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் அப்படியே இரட்டை இலைக்குத்தான் போட்டுள்ளனர். அத்தனை ஓட்டுகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஓட்டுக்கள். யார் மேல் கோபம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை? 

னால் "நான் திருந்தப்போவதில்லை" என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாட்டு மக்கள் கைவிடத் தயாராக இல்லை. "நமக்கு வாய்த்த அடிமைகள் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்கள்" என்பதை அவரும் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார். காரணம் நமக்கு மாநிலத்தின் வளர்ச்சியை விட, தகுதியான முதல்வரை விட "எனக்கு பிடிக்காதவன் வந்து விடக்கூடாது" என்பதில் நம்மவர்கள் காட்டும் அக்கறை மிக அதிகம். இதன் விளைவுகள் அனைத்தும் அடுத்த ஐந்தாண்டுகளில் நம் வாரிசுகள் அனுபவிக்கப் போகின்றார்கள்.  

கூடவே நாமும் சேர்ந்து. 

(முற்றும்)



16 comments:

Amudhavan said...

தங்களின் கவலை, குமுறல், ஆதங்கம் அத்தனையும் புரிகிறது. கூடவே 'பிரம்மாண்ட ஊடகங்களின்' பரப்புரைகளை 'அப்படியே' நம்பும் நடுத்தரவர்க்கத்தினரின் மனப்பான்மை உங்களையும் ஆட்கொண்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

நீங்கள் சில கட்சிகளின் மீது -குறிப்பாக காங்கிரஸின் மீதும் திமுகவின் மீதும் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதன் அடுத்த பக்கங்களும், மற்ற கட்சிகளின் அடுத்த பக்கங்களும் சின்ன சலனத்தைக்கூட நல்ல யோசனையாளர்களிடம்கூட ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மேற்படி ஊடகங்கள் எடுத்த முன்முயற்சிகளும் ஒன்றும் சோடை போய்விடவில்லை என்பதையும் காட்டிச் செல்கிறது உங்களின் கட்டுரை நடை போட்டிருக்கும் 'பாதைப் பயணம்.'

கடைசிப் பாராவை மட்டும் அப்படியே ஒப்புக்கொள்கிறேன்.

ஜோதிஜி said...

இத்தனை சீக்கிரம் உங்களிடமிருந்து விமர்சனம் வருமென்று எதிர்பார்க்கவில்லை. நன்றி. எனக்கும் மற்ற கட்சிகளைப் பற்றி எழுத ஆசை தான். ஆனால் இரண்டு காரணங்களால் அதை எழுத வில்லை. ஒன்று தொழிற்சாலையில் பணிபுரியும் பல படித்த இளைஞர்களிடம் கூட பேசிப் பார்த்தேன். அவர்களும் திமுக அதிமுக என்ற இரண்டு வட்டத்திற்குள் நிற்கின்றார்கள். ஏறக்குறைய தமிழ்நாடு முழுக்க படித்தவர் படிக்காதவர் என்ற பாரபட்சம் இல்லாமல் இந்த விசயத்தில் எதிரி மனப்பான்மையோடு ஒவ்வொருவரும் அரசியல் களத்தை பார்க்கின்றார்கள்.

வைகோ பற்றி எனது ஆதங்கத்தை பதிவு செய்யலாம் என்று நினைத்து இருந்தேன். கவிப்ரியன் தனது ஆதங்கத்தை விமர்சனத்தில் கொடுத்து இருந்தார். அதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில். ராமதாஸ் குறித்து ஏற்கனவே பலமுறை எழுதி விட்டேன். திருமாவளவன் சமீபத்தில் ஆனந்தவிகடனில் அவரைப் பற்றி ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். படிக்கும் போது நமக்கே சங்கடமாக உள்ளது. அவரால் முடிந்தவரை முயற்சிக்கின்றார். ஆனால் பலன் கிடைத்தபாடில்லை. மக்களும் மாறத்தயாராக இல்லை என்பதைத் தான் நாசூக்காக சொல்லியிருக்கின்றார்.

மாற்று அரசியல் பாதை குறித்து பலமுறை பல பதிவுகளில் எழுதி விட்டேன். பழைய பதிவான அரசியல் அதிகாரம் பயத்தை உருவாக்கு என்ற தலைப்பை படித்துப் பாருங்க.

http://deviyar-illam.blogspot.com/2011/03/blog-post_26.html

http://deviyar-illam.blogspot.com/2012/10/blog-post_29.html

http://deviyar-illam.blogspot.com/2011/03/blog-post.html


கிரி. அனகை.. said...

முதல் பாராவும் அதாங்கோ முற்றும் துறந்த ஞானி , கடைசி பாராவும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்கள் நூறு சதம் உண்மை ..

Rathnavel Natarajan said...

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் சேர்ந்த கதை = திருஜோதிஜி அவர்களின் அருமையான அரசியல் பதிவு.
ஆழ்ந்து, விரிவாக அலசி எழுதப் பட்டது. நண்பர்கள் ஆழ்ந்து அமைதியாக படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

எம்.ஞானசேகரன் said...

ஜோதிஜி! இத்தனை நாள் காத்திருந்து கலந்து கட்டி அடித்திருக்கிறீர்கள். வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத அரசியல்வாதிகள் குறித்த வரிகள் அற்புதம். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியிலே வருவதற்கு அவர்களுக்கு யார் தைரியம் கொடுப்பது? மக்களேதானே! மக்கள் என்ன தெளிவாக இருக்கிறார்கள்? இவர்கள் ஐந்தாண்டு காலம் சுருட்டியாயிற்று, அடுத்தது அவர்களுக்கும் ஒரு ஐந்தாண்டு கொடுத்துப் பார்ப்போம் என்கிற தாராள மனப்பான்மையை எங்கு போய் சொல்லி முட்டிக் கொள்வது?
மாற்று அரசியல் என்பதே இந்திய அரசியலில் கேலிக்கூத்தாகத்தான் முடியும் போலிருக்கிறது. ஆசை பேராசையாகி பேரம் படியும்வரை மதில்மேல் பூனையாக இருந்து கடைசியில் கிளம்பிப்போய் ஓட்டு கேட்டால் மதிகெட்ட மானிடர்கள் எப்படியும் நமக்கு ஓட்டை போட்டுத்தானே ஆகவேண்டும் என்கிற தடித்தனம் எப்படி வருகிறது இந்த அரசியல்வாதிகளுக்கு? தமிழ் நாட்டில் தி.மு.க.வையும் மத்தியில் காங்கிரஸையும் மட்டுமே குடும்ப அரசியல் செய்கிறவர்களாக மக்கள் மத்தியிலே வாதத்தை வைத்த எல்லா அரசியல் அயோக்கியர்களுமே தத்தமது வாரிசுகளை சத்தமேயில்லாமல் நுழைத்துவிடுகிற அதிசயம் இங்கு மட்டுமே நடக்கும்.
ஏனென்றால் நம் மக்களின் மறதி அப்படி. நேர்மை என்பது கிலோ என்ன விலை என்கிற காலமிது? எந்தக்கட்சியில் சேர்ந்தால் எவ்வளவு சீக்கிரம் கோடீஸ்வரனாகலாம் என்கிற கனவு கட்சிக்காரனுக்கு மட்டுமல்ல கடைக்கோடி மக்களுக்கும் வந்திருக்கிறது. காசு கொடுப்பவனிடம் அண்டிப்பிழைக்க, எச்சில் சோற்றுக்கு அலையும் நாயாய் நாணயம் இல்லாத நாலாந்தர அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஓட்டைப் போட்டு அவனை சிம்மாசனத்தில் ஏற்றி அவனின் ராஜவாழ்க்கையை பார்த்து பரவசமடையும் நம் பரதேசி மக்களை நினைத்தால் அழுகைக்கு பதில் எரிச்சல்தான் வருகிறது.
ஆதாயம் எங்கோ அங்கே நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு போய்ச்சேரும் மனோநிலை இரண்டாம் மட்ட அரசியல்வாதிகளிடம் வந்து வெகு நாட்களாகிறது. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டபின் தனிகட்சி ஆரம்பித்ததும் தொடங்கியது இந்த கலாச்சாரம்.

பின்னூட்டம் மிக நீண்டதாகப் போகும் அபாயமிருக்கிறது. எனவே மீதியை எனது பதிவில் பதிக்கிறேன். சென்ற மே மாதத்தில் வைகோ குறித்த எனது பின்னூட்டத்தை //வைகோவை எப்படி நேர்மையாளர்கள் வரிசையில் சேர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. எந்த இயக்கத்திலிருந்து வெளியேறினாரோ அதே இயக்கத்தோடு கூட்டணியும், விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசியதால் இரண்டாண்டு காலம் ஜெயாவினால் சிறையில் கழித்துவிட்டு, கேவலம் சில தொகுதிகளுக்காக அதே ஜெயா கூட்டணியிலும் சேர்ந்த வைகோவும்கூட ஒரு தேர்ந்த சந்தர்ப்பவாதிதான். அதனால்தான் மரியாதை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறார்.//
இங்கே தாங்கள் நினைவு கூர்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜோதிஜி!

சேக்காளி said...

//பணம் மட்டும் தான் கொள்கையாக இருக்கின்றது//
அது எதற்காக என்பது புரியும் வரை அவர்களுக்கு தூக்கம் ஒரு வரமாக தெரியாது.
நமக்கென்ன! இருக்கவே இருக்கிறது அந்த நம்பிக்கை.
நம்மை இரட்சிக்க ஒரு ராஜகுமாரன் நிச்சயம் வருவான்.ராஜகுமார(ரி) களும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் நம்மை இரட்சிப்பதற்காக அல்ல.என்பது புரியும் வரை சில புலம்பல்களோடு ஓட்டளித்துக் கொண்டே இருப்போம்.

ஜோதிஜி said...

அற்புதமான என்னைவிட ஆதங்கத்தை கொட்டிய விமர்சனம். நன்றி. எனக்குத் தெரிந்து நீங்க மிகப் பெரிய பதிவு போல கொடுத்த விமர்சனம் இது தான் என்று நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

நன்றி சேக்காளி. நிச்சயம் தொடக்கம் ஒன்று இருந்தால் அதற்கு முடிவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அமெரிக்கா சுதந்திரம் பெற்று முதல் 100 வருடங்கள் நம் தற்போது இருந்து கொண்டிருப்பதைப் போலத்தான் இருந்ததாம். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை வைப்போம்.

ஜோதிஜி said...

தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா.

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

பெரிய பதிவுகளை உங்கள் பக்கத்தில் நிறைய முறை படித்ததால் பயப்படவில்லை! முதல் பத்தியில் ஆரம்பித்த வேகம் இறுதி வரை குறைய வில்லை! திமுக. அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் பலவீனங்களை அழகாக அலசி இருக்கிறீர்கள்! கடைசியில் சொன்னது போல நமக்கு பிடிக்காதவன் வரக்கூடாது என்று வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரையில் மாற்றங்கள் வர வாய்ப்பில்லைதான்! நல்லதொரு அலசல் பதிவு! நன்றி!

Kalyankumar said...

நமது ஆதங்கத்தை ஒவ்வொருமுறையும் கொட்டித் தீர்க்கிறோம்,சில சமாதானங்களை நாமே நியாயப் படுத்தி விடுகிறோம் 100 வருட அமெரிக்காவை போல,நமக்கான விடியல் எப்போது வரும் நினைக்கும் போது மனச் சோர்வு வருகிறது,எப்போது வருவான் இன்னொரு சே,.??

கரந்தை ஜெயக்குமார் said...

திமுக. அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் பலவீனங்களை அழகாக அலசி இருக்கிறீர்கள்!
தமிழ் நாட்டில் ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு ஓட்டக்கள்தான் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கின்றன
நல்ல அலசல் ஐயா
நன்றி

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

இதற்கும் சே தான் வர வேண்டுமா? இன்னமும் கூட இங்கே இருக்கும் நம்மவர்கள் மேல் நம்பிக்கை வரவில்லையா? தனி மனித சிந்தனையில் மாற்றம் வந்தால் போதாதா?

ஜோதிஜி said...

மிக்க மகிழ்ச்சி.