Thursday, September 12, 2013

சொல்ல மறந்த கதைகள் (12.09.2013)

ஆடாத காலும் ஆடும்

வாழ்ந்த ஊரில் கோவில் திருவிழாவில் பறை இசைத்து சாமியை அழைத்து வரும் பழக்கம் இருந்தது.  தேர் இழுத்துக் கொண்டு செல்லும் போது முன்னால் இரண்டு பக்கமும் கொம்பு ஊதிக்கொண்டு செல்வார்கள்.  இன்று அனைத்தும் மாறி விட்டது.

இந்த இரண்டு இசையும் தந்த உணர்வுகள் இன்று வரையிலும் எந்த இசையிலும் நான் பெற்றதில்லை.  மனதை வருடுவதும், கற்பனைகளை கிளறுவதுமான இன்றைய இசைகளைப் போலில்லாமல் தமிழர்களின் ஆதிகால இசைக் கருவிகள் அனைத்தும் சோர்ந்து போய் கிடந்தாலும் உடனடியாக நம் நாடி நரம்புகளில் உற்சாக உணர்ச்சிகளை தரக்கூடியதாக இருக்கும். 

சென்ற வருடம் சென்னையில் நண்பருடன் சென்று கொண்டிருந்த போது புரசைவாக்கம் அருகே ஒரு சாவு ஊர்வலம் வந்தது.

பிண ஊர்வத்திற்கு முன்னால் அடித்துக் கொண்டு வந்த அந்த பறை இசை தந்த தாக்கத்தினால்  அந்த இடத்திலே ஆட வேண்டும் என்று உணர்வை எனக்குத் தந்த போதிலும் நண்பர் என்னை அடக்கி வைத்து வண்டியில் மீண்டும் ஏற வைத்து விட்டார். வண்டியை நிறுத்தச் சொல்லி தூர நின்று வேடிக்கைப் பார்த்தாலும் காலின் ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை.

இன்று வரையிலும் இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை.  காணொளி காட்சிகளில் முழுமையான பறை இசை, கொம்பு ஊதுதல், தப்பாட்டம், கரகாட்டம் போன்றவற்றை தேடிக் கொண்டே இருந்தாலும் விரும்பிய அளவுக்கு சரியான காட்சிகள் கிடைத்தபாடில்லை.  சமீபத்தில் ஆட்டம் போட வைத்த காணொளி காட்சி இது. 



இது நம்ம வீட்டுக் கல்யாணம்.

பிரபல்யங்களின் திருமண நினைவுகளை விஜய் தொலைக்காட்சியில் சில சமயம் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். பலரின் நிகழ்ச்சிகளையும் பார்த்துள்ளேன். அவர்களின் பேச்சுக்களை விட அது போன்ற நிகழ்ச்சிகளில் நடக்கும் சுவராசியமான சம்பவங்களை கவனிக்கும் போது எழுதுவதற்கு நிறைய உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஆச்சி மசாலா நிறுவன உரிமையாளரின் கடைசி மகன் தனது திருமண நினைவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் கொடுமையாக தங்களின் தேனிலவுக்காக சென்ற ஆடம்பர கப்பல் வரைக்கும் காட்டி பேசிக் கொண்டிருந்த போது எங்கே போய் முட்டிக் கொள்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பிரபல்யம் மற்றும் பணமும் செல்வாக்கு இருப்பவர்களுக்கு சமூகத்தில் அந்தரங்கம் என்பதே இல்லை என்பதற்கு மாறி வரும் நவீன தொழில் நுட்பங்கள் பல பாடங்கள் கற்றுக் கொடுத்த போதிலும் ஒவ்வொருவரையும் புகழ் மயக்கம் எந்த அளவுக்கு பாடாய் படுத்துகின்றது என்பதைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது.

கடந்த 8ந் தேதி நடந்த சீமான் அவர்களின் திருமணம், அது குறித்த காணொளி, உண்மைத்தமிழன் பதிவு என்று அனைத்தையும் பார்த்த சமயத்தில் பல தரப்பட்ட விமர்சனங்களும், பல படு பயங்கர புத்திசாலிகளின் நிலைத் தகவல்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. 

சீமான் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும், இருந்தவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் ஒரு சில கள நிலவர்ங்களைப் பற்றி தெரியும். நண்பர்கள் என்னிடம் சொன்ன அவர் வீட்டில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் சாப்பாட்டுச் சமாச்சாரத்தைப் பற்றி பேச்சாளர் நெல்லை கண்ணன் மகன் இயக்குநர் சுகா தனது பதிவில் எழுதியுள்ளார்.

சீமான் திருமணம் குறித்து அவரின் திருமண காணொளி காட்சிகளை பல இடங்களில் பார்த்த போது "பிரபல்யங்களை வைத்து ஓட்டும் கற்பனைக் காட்சிகளுக்கு இடையே உங்களின் விளம்பர சம்பாத்தியத்தை நிறுத்தி விடாதீர்கள்" என்று கமல்ஹாசன் சொன்னது தான் என் நினைவில் வந்தது. சீமானின் திருமண நிகழ்ச்சியை ராஜ்டிவி முழுமையாக கொடுத்துள்ளார்கள் . 

இந்த காணொளியை எனக்கு அனுப்பிய மும்பை வருண் ரெங்கநாயகி கணேசன் அவர்களுக்கு நன்றி




சென்னையில் ஒரு நாள்

சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கே இருந்த அகநாழிகை பொன் வாசுதேவன் அப்படி நில்லுங்க. ஒரு படம் எடுத்து விடலாம் என்று சொல்லி திடீரென்று நண்பரிடம் தனது கைபேசியை கொடுத்து எடுக்கச் சொன்ன படம் இது. 

படத்தில் சுரேகா சுந்தர், பட்டிக்காட்டான் ஜெய்,  அகநாழிகை பொன் வாசுதேவன், ராஜசுந்தரராஜன், ஷங்கர், அரவிந்தன்


இனி அனைவருக்கும் சேர்ந்து விடும்.

4தமிழ் மீடியா வெளியிட்டுள்ள எனது முதல் படைப்பான டாலர் நகரம் புத்தகத்தை விகடன் குழுமம் சந்தைப்படுத்த வாங்கியுள்ளார்கள். 

இயக்குநர்,நடிகர் ரா.பார்த்திபன் அவர்களின் கிறுக்கல்கள் என்ற புத்தகத்திற்குப் பிறகு 4தமிழ்மீடியா படைப்பாய்வகம் மூலம் வெளிவந்துள்ள டாலர் நகரம் புத்தகத்தை வாங்கி உள்ளனர்.  தாங்கள் வெளியீடும் படைப்பிற்குப் பிறகு மற்ற குறிப்பிட்ட புத்தகங்களையும் தங்கள் குழுமத்தின் மூலம் வாங்கத் தொடங்கி உள்ளனர்.  

விகடன் குழுமத்தின் தொடர்பில் தமிழ்நாடு முழுக்க உள்ள அறுநூறுக்கும் மேற்பட்ட புத்தக கடைகள் மூலம் பல புத்தகங்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கின்றார்கள்.


சில சமயம் பயன் உள்ளதாக இருக்கின்றது.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கவனித்து வரும் முக நூல் மற்றும் அதில் வரும் நிலைத்தகவல்கள் தரும் பாதிப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.  திருக்குறள் தகவல் இது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-9310 

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உண்மைகள் உறங்காது.

நாம் நினைத்தபடியே ஒருவர் பேசியுள்ளார் என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.  சாதி சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலும்,தங்களுக்கான ஆதாயத்திற்காகவும் மட்டும் இந்த சாதியை வேகமாக முன்னெடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றார்கள். 

கட்டணம் ஏதும் வாங்காமல் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, தனக்கென்று எந்த சொத்தும் சேர்த்துக் கொள்ளாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சட்டத்தின் மூலம் போராடிக் கொண்டிருப்பவரின் பேட்டி காணொளிக் காட்சி இது.

13 comments:

எம்.ஞானசேகரன் said...

திருக்குறள் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை!

எம்.ஞானசேகரன் said...

புதிய முகப்பும் அருமை! எப்படி என்று சொல்லித் தாருங்களேன்!

Unknown said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

காணொளிகள் அருமை...

திருக்குறள் குறித்த தொகுப்பு சூப்பர்...

போட்டோவில் நிற்கும் உங்கள் பெயரை சேர்க்கவில்லை....

அருமை அண்ணா....

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்றி --- நல்ல பதிவு -- அண்ணன் சீமான் திருமணம்

வருண் ரெங்கநாயகி கணேசன் https://www.facebook.com/varuneelam#

Unknown said...

1330*7=9310 சொற்கள் ! எப்படி 14000 ? விளக்கம் கொடுத்தால் நன்று .குற்றம்/குறை என்று எண்ணவில்லை ,தெரிந்து கொள்ளவே விருப்பம்

ஜோதிஜி said...

பிழையை திருத்தி விட்டேன். தங்கள் அக்கறைக்கு நன்றி.

Ranjani Narayanan said...

ஒரே பதிவில் பல விஷயங்கள். ரொம்பவும் பிடித்தது திருக்குறள் பற்றிய தொகுப்பு. பறை பற்றிய காணொளியும், வழக்கறிஞர் திரு பொ. இரத்தினம் (ஆச்சரியமான மனிதர்!) பற்றிய காணொளியும் நல்ல விஷயங்களைச் சொல்லுகின்றன. 'மை லார்ட்' பற்றிய விளக்கம் சுவாரஸ்யம். பின்னால் பேசுபவர் தமிழை கடித்துக் கடித்துத் துப்புகிறாரே!

ஜோதிஜி said...

திருப்பூரில் உள்ள நண்பர் வீடு சுரேஷ் குமார் உருவாக்கித்தந்தது. நமக்கு இதெல்லாம் பூஜ்யம்.

ஜோதிஜி said...

இது போன்ற ஆச்சரியமான மனிதர்கள் தான் அமைதியாக தங்கள் கடமையைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்களால் தான் பலரும் தங்கள் இயல்பான வாழ்க்கையை இன்னமும் வாழ முடிகின்றது.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி