Wednesday, December 19, 2012

ஆட்டம் காணும் அஸ்திவாரம்


குழந்தைகள் முதன் முதலாக உங்கள் உருவத்தை உள்வாங்கிக் கொண்டு சிரிக்கும் அந்த பொக்கை வாய் சிரிப்பை ரசித்து இருக்கிறீர்களா? நம் முகத்தை குழந்தையின் அருகே கொண்டு போய் காட்டி மீண்டும் நம்மை கவனிக்க தலையை நம்மை நோக்கி திரும்புமா? என்று நாம் சற்று நின்று கவனிக்கும் போது தலை திருப்ப முயற்சிக்குமே அப்பொழுது தான் அந்த குழந்தைகளின் உண்மையான தேடல் தொடங்குகின்றது.

பசித்தால் அழுகை. ஏதொவொன்று கடித்தால் அழுகை என்று அழுகை மொழியில் தனது அருமையை உணர்த்தும். குழந்தைகளின் உலகம் பெரிய பொருள் தரும் சிறிய கோட்டோவியம். 

எல்லோருமே தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை தனது வாரிசாக, தங்கள் குடும்பத்தின் அங்கீகாரத்திற்காக கருதிக் கொண்டவர்களின் மத்தியில் நான் எனது குழந்தைகள் என்னை மாற்ற வந்தவர்களாக கருதிக் கொண்டேன்.  காட்டாறு போல ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் அணை போல வந்து என்னை தடுத்து நிறுத்தியவர்கள் முதன் முதலாக பிறந்த இரட்டையர்கள்.

நான் அடிப்படையில் பெரிய பாசக்காரன் அல்ல. ஆனால் பாச மொழியின் இலக்கணத்தை நன்றாக அறிந்தவன் என்ற முறையில் அவர்களின் தேவைகளை கடமைகளை என்னால் உள்வாங்க முடிந்தது. பாசமென்பது எதிர்பார்ப்புடன் கூடியது. இயல்பை விட வெளியே நின்று யோசிப்பது. 

ஆனால் எதார்த்தத்தை ஒட்டிய கடமையில் இருந்து தொடங்கினாலே உண்மையான பாசத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். கண்டிப்பும் கனிவும் பெற்ற குழந்தைகளால் காலம் முழுக்க பிரச்சனையின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரையும் என் வாழ்வில் பார்த்திருக்கின்றேன். என்னையும் அப்படித்தான் வளர்த்தார்கள். என் குழந்தைகளையும் அப்படித்தான் வளர்க்க ஆசைப்படுகின்றேன்.

ம்ம்மா..........

குழந்தைகளின் தேவைகளை விருப்பங்களை தொடக்கத்தில் புரியவைக்கின்றது. சில மாதங்களில் அம்மா என்று மாறும் போது தான் அவர்களின் தேடல்களும் மெதுவாக தொடங்குகின்றது. அவர்களுக்கு தேவைப்படும் உணவுக்கு அப்பாற்பட்ட பல விருப்பங்கள் ஒவ்வொரு சமயத்திலும் அறிமுகமாகின்றது. குழந்தைகளின் வாழ்வில் இரண்டு முனைகள் இருக்கும்.

ஆர்வம் வெறுப்பு.
பயம் மகிழ்ச்சி

என்று ஒவ்வொன்றுமே இரண்டு பக்கமுள்ள கூர்முனை கத்தி போலவே இருக்கும்.  கையாள்வர்களின் தகுதியைப் பொறுத்தே குறிப்பிட்ட சில விசயங்களை மாற்ற முடியும் அல்லது ஓரளவுக்கு முயற்சிக்க முடியும். 

வீட்டில் இரட்டையர்கள் வளர்ந்து கொண்டிருந்த போது அவர்களுடன் செலவிழத்த அதிகபட்ச நேரம் வாரத்தில் பத்து மணி நேரம் கூட இருக்காது.அதுவரையிலும் உற்பத்தி துறை சார்ந்த விசயங்களில் உச்சத்தை எட்டிய எனக்கு மாறுதல் தேவைப்பட்டது. இரவும் பகலும் என் வாழ்வில் ஒரே பொழுது போலவே போய்க் கொண்டிருந்தது. மாதத்தில் பாதி நாட்கள் என்ன தேதி என்ன கிழமையென்றே தெரியாது. காரைக்குடி பாஷை கூட முற்றிலும் மாறி சந்திக்கும் ஒவ்வொருவரும் ஓராயிரம் மொழிகளை எனக்கு கற்றுத் தந்து கொண்டேயிருந்தனர். 

தென் மாவட்ட தொழிலாளர்கள் ஒரு பக்கம்.  மற்ற மாவட்டத்து மக்கள் வேறொரு புறமென தமிழ்நாட்டின் அத்தனை கலாச்சாரங்களும் என் வாழ்வை கலந்து கட்டி கலக்கிக் கொண்டிருந்தது.  எனக்கான தடயங்கள் எதுவுமே இல்லாமல் போய்விடுமோ என்று கூட பல சமயம் பயந்து போனதுண்டு.

பலவாறு யோசித்தபிறகு ஏற்றுமதி துறையில் உள்ள அலுவலக துறை சார்ந்து மாற முயற்சித்தேன்.  அடித்தளம் கவனமான போடப்பட்டுருந்தால் வாழ்க்கை எப்போதுமே இயல்பாகத்தானே இருக்கும்.  எளிதாக என்னால் துறை மாற முடிந்தது.  பலருக்கும் ஆச்சரியமாகவும் இருந்தது.

பெரும்பாலும் இது போன்று எவரும் முயற்சிக்க மாட்டார்கள். எண்ணங்களில் கூட முடிவெடுக்கக் மாட்டார்கள்.  காரணம் மறுபடியும் தொழில் வாழ்க்கையை பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டும். எந்த தகுதியும் இல்லாத அந்த துறை சார்ந்த ஒருவரின் கீழ் பணிபுரிந்து கீழ் மட்ட வேலையிலிருந்து தனது அனுபவங்களை தொடங்க வேண்டும். முதன் முதலாக இந்த துறையில் வந்து சேர்பவர்களைப் போல நம் வாழ்க்கையை  தொடங்க வேண்டியதாக இருக்கும். 

நமக்கு அலுவலகத்தில் கிடைக்கும் மரியாதையும் அந்த அளவுக்குத் தான் இருக்கும். ஒரு விசயத்தின் நீள அகலத்தை உணர்ந்து கொண்டு உள்ளே இறங்கியவர்கள் பின்வாங்க மாட்டார்கள்.  ராஜகீரிடத்தை எதிர்பார்த்து வருபவர்களால் தான் தானும் கற்றுக் கொள்ள முடியாமல் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கத் தெரியாமல் பதராக மாறிவிடுகின்றார்கள். 

ஆனாலும் என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து யோசித்த எனக்கு அலுவலகம் சார்ந்த துறை தேவையாக இருந்தது.

உற்பத்தித்துறை என்றால் 24 மணி நேரமும் நம்முடையது அல்ல. ஏராளமான தொழிலாளர்களுடன், அது சார்ந்த பணியாளர்களுடன் இருந்தே ஆக வேண்டும். மொத்தமும் முடியும் வரையிலும் எந்த பதவியில் இருந்தாலும் இருந்தே ஆகவேண்டும். குடும்ப வாழ்க்கை என்பது இந்த துறையில் இருப்பவர்களுக்கு சாபக்கேடு போலவே இருக்கும். ஆனால் அலுவலகம் சார்ந்த துறைகளில் ஓரளவுக்கு உயர்ந்து விட்டாலே நிர்வாகத்தை அலைபேசி பேச்சுக்களின் மூலம் மொத்தமாக நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். 

அதற்கு மேலும் அடிப்படை தொழில் அறிவு இருந்தால், அந்த அறிவு பெற்றவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தாலே நமக்கு மேலே இருப்பவர்களை அவர்கள் எதிர்பார்க்கும் விசயங்களை எந்த நேரமானாலும் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து விட முடியும். மறுநாள் காலை நிச்சயம் பஞ்சாயத்து இருக்காது.

அலுவலகம் சார்ந்த பணிக்கு உள்ளே நுழைந்த பின்பு தான் மின் அஞ்சல், இணையம், ஆங்கில மொழி ஒவ்வொன்றும் பின்னிப் பினைந்து இழுத்துக் கொண்டு நகர்த்திச் சென்றது. அலுவலகம் சார்ந்த சோம்பேறி மக்களை விட என் உடல் உழைப்பு சார்ந்த சிந்தனைகளின் காரணமாக அடுத்தடுத்த படிக்கு விரைவாக முன்னேற முடிந்தது.  

மின் அஞ்சல் என்றால் என்ன? இணையம் என்றால் என்ன? என்பதை எனக்கு முதன் முதலாக அறிமுகம் செய்தவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண். 

எனது துறையில் இருந்த அவர் ஒரு நாள் அழைத்து எனக்கு தெரியுமா? என்று கூட கேட்காமல் ஒவ்வொன்றாக ஒரு மணி நேரம் வகுப்பு போல எடுத்தார். இன்று வரையிலும் அவர் கற்றுக் கொடுத்தது தான் எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் நிர்வாகம் எனக்கென்று ஒரு இளையர் கூட்டத்தை உருவாக்கித் தர அதன் பிறகே வாழ்க்கை பயணம் சுகமானது. அதன் பிறகே குடும்பம், குழந்தைகளின் மேல் அக்கறை காட்ட முடிந்தது.

காலையில் அலுவலகத்திற்குச் செல்லும் போது இவரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். நடு இரவில் வரும் பொழுதும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். இடையில் மதியம் சாப்பிட வரும் போது ஒரளவுக்கு நமது முகத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க முடியும்.

இருவரின் நடவடிக்கையும் எதிரெதிர் துருவமாக இருந்தது. ஒருவர் நகர்ந்து கொண்டே வீடு முழுக்க இருக்கும் தண்ணீர் பானைகளை தள்ளிவிடுவதும், அதனை பிடித்து ஏற முயற்சிப்பதுமாக இருப்பார். ஒரே இடத்தில் இருக்க முடியாத அளவுக்கு அந்த சின்ன இடத்திற்குள் இருந்த தண்ணீர் குடங்கள் அனைத்தும் அவருக்கு விளையாட்டு பொருளாக இருந்தது. 

மற்றொருவர் எழ முடியாமல், படுத்தே கிடப்பார். ஆனால் எழுப்பக்கூடிய சப்தம் நான்கு வீடுகள் தாண்டியும் கேட்கும். இருவரின் வளர்ச்சியும் பத்து மாதங்கள் வித்தியாசத்தில் தான் இன்று வரையிலும் இருக்கிறது.

ஏதோதே மொழிகள்.  ஆ...ஊ...ஏ என்று பார்க்கும் நேரமெல்லாம் ஏதோவொரு பரவசத்தை அனுபவித்த உணர்வைப் போலவே சப்தம் போட்டு கத்திக் கொண்டிருப்பார்.  நமது முகத்தை முன்னால் கொண்டு போய் காட்டும் போது இன்னமும் வேகம் அதிகரிக்கும்.  ஆனால் தவழ்ந்து கொண்டிருப்பவர் நோக்கம் ஒன்றாக மட்டுமே இருக்கும்.  

எப்போது கதவை திறப்பார்கள்? எப்படி வெளியே தப்பித்து ஓடலாம் என்பதாகவே இருக்கும்.  அப்போது திருப்பூரில் தண்ணீர் பிரச்சனை என்பது சவாலாக இருந்தது. ஒருவர் வீட்டில் இருக்கும் தண்ணீர் குடமென்பது தங்கத்திற்கு சமமாக இருந்தது.  ஒவ்வொருவர் வீடு முழுக்க தண்ணீர் குடமாகவே இருக்கும்.  பல குடும்பங்களில் இந்த குடங்களுக்கிடையே தான் குடும்பமே நடத்தினர்.

தண்ணீர் வருகின்றது என்று அவசர கதியில் கதவை திறந்து விட்டு சென்று விட்டால் அடுத்த நொடியில் ஒருவர் காணாமல் போய் விடுவார்.  மாடி வீடு என்பதால் அருகே கீழே உள்ள தளத்திற்குச் செல்ல வாசலின் தொடக்கமாக இருக்கும்.  எத்தனையோ முறைகள் உருண்டு கீழே வந்து கிடந்தாலும் அந்த ஆர்வமும் விருப்பமும் குறைந்தே இல்லை. பயமறியாது குழந்தைகள் என்பதை பலமுறை ஆச்சரியப்பட்டு கவனித்திருக்கின்றேன்.

எழ முடியாமல் படுத்தே கிடப்பவரின் வாழ்க்கை எளிமையானது. தொடக்கம் முதலே உணவின் சுவையும், அளவும் அதிகப்படுத்திக் கொண்டே வந்த காரணத்தால் எப்போது பசியின் வேகம் இருந்து கொண்டேயிருக்கும். செறிக்க வேண்டுமேபடுத்த படுக்கையில் இருந்து கொண்டு காலை தரையில் அடித்து கத்திக் கொண்டுருப்பது தான் ஒரே விளையாட்டாக இருந்தது.  ஒவ்வொரு அடியும் இடி போல கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு கேட்கும். குழந்தைகளுக்கு இயற்கை உணவு அளிக்கும் சக்தியே அலாதியானது. கவனித்தவர்களுக்கு புரியும்.

பலமுறை ஆச்சரியப்பட்டு மேலே வந்து பார்த்திருக்கிறார்கள். அவளின் வேகத்தைப் பார்த்து மிரண்டுப் போய் பாதம் அடிக்கும் இடத்தில் நான் ஒரு தலையனையை வைத்து விடுவேன். ஆனால் நான்கு நாளில் தலையனையின் உள்ளே இருக்கும் பஞ்சுகள் வெளியே வந்து சிரிக்கும்.

இந்திய திருமண வாழ்வில் ஒரு சவாலான விசயம் கணவன் மனைவி இருவருக்கும் இருக்க வேண்டிய தொடக்க புரிந்துண்ரவு. கணவன் மனைவி என்ற பெயரில் தான் தொடக்கத்தில் வாழ்கின்றார்கள். அந்த உறவைத் தவிர நான் பார்த்தவரைக்கும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில்  சண்டை சச்சரவுகளுடன் தான் வாழ்கிறார்கள்.   

குழந்தைகள் பிறந்த முதல் மூன்று வருடங்களில் எங்கள் இருவரின் உழைப்புக்கு அப்பாற்பட்டு மற்றொருவர் தேவையாக இருந்தது. சுகமாகவே காலம் முழுக்க வளர்ந்தவர் என் வாழ்வில் வந்த இரட்டையரின் காரணமாக ஒவ்வொரு நாளும் தூங்க முடியாத பொழுதாகவே இருந்தது. ஒரே ஆள் இருவரையும் சமாளிப்பது என்பது முய்ற்சிகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. 

இதற்கென்று ஆட்கள் கிடைப்பது சவாலாக இருந்தாலும் ஊரில் இருந்து வருபவர்களும் இங்குள்ள தண்ணீர் பஞ்சம் பார்த்து பறந்தடித்து ஓடிவிடுவர். அலுவலகம் முடிந்து வந்ததும், விடுமுறை தினங்களிலும் தண்ணீர் சுமந்ததும் இருவரையும் கையில் சுமந்து திரிந்தது என்னை அவர்களுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டேன். .

இதுவரையிலும் நான் சந்தித்த குடும்பங்களில் நான்கில் ஒரு பங்கு தான் பரவாயில்லை என்கிற அளவில் இருக்கிறார்கள்.  பத்தில் ஒரு பங்கு தான் நண்பர்கள் போல அத்தனை விசயங்களையும் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்கள். எந்திரமயமான என் தொடக்க கால வாழ்வில் என்னை நம்பி வந்தவளும் எந்திரத்தின் ஒரு பாகமாகவே மாற வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

குழந்தைகள் என்பது திருமண வாழ்வில் சந்தோஷ அங்கீகாரம் அல்ல.  அது சமூகத்திலிருந்து வலிய திணிக்கப்படும் ஒரு செயல். இப்படித்தான் பலரும் தற்போது உணர்கின்றார்கள்.

அதிகபட்சம் இரண்டு வருடத்திற்குள் குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் பெண்களை இந்த சமூகம் பார்க்கும் பார்வை கொடூரமாகத்தான் இருக்கிறது. மேலும் இரண்டு வருடங்கள் கழியும் போது ஆண்களின் மேல் பார்வை திரும்புகின்றது. 

ஐந்து வருடங்கள் கழிதே நாங்க குழந்தை பெத்துக்க விரும்புகின்றோம் என்று சொன்னால் கூட ஏதோவொரு காரணம் என்று கதை கட்டும் வழக்கம் தான் நம் சமூகத்தில் இருக்கிறது.

நீ என்னமோ எப்படியோ இருந்துக்க. ஆனால் ஒரு குழந்தையை முதல்ல பெத்துக்கோ என்ற வார்த்தைகளை நாம் சர்வசாதாரணமாக கேட்டுருக்கலாம்.

நாம் இதனை எளிதாக நம்முடைய கலாச்சாரம் என்கிறோம்.  ஆனால் ஒரு வகையில் இந்த கலாச்சாரம் என்பதும் கருமாந்திரம் தான். மனத்திற்கு முக்கியம் கொடுக்காமல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் வாழ்க்கையை தொடக்க வேண்டியிருக்கிறது. 

ஒரு வாரத்திற்குள் வேலைக்கு செல்லாவிட்டால் உடனே ஒரு பழமொழி வந்து விழும்.

உத்தியோகம் புருஷலட்சணம்

ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள்.  இது போல பலர் வாழ்க்கையும் விரட்டலுக்கும் துரத்தலுக்கும் பயந்தே ஓட வேண்டியதாக இருக்கிறது. .

தனிப்பட்ட விருப்பங்களை அனுபவிக்க முடியாத அளவுக்கு இங்கே சார்ந்து வாழ்ந்தே ஆக வேண்டும் என்று சூழ்நிலையில் நமது வாழ்க்கை இருக்கின்றது. .

இது தான் இந்திய வாழ்க்கை முறை. 

இதில் என்னுடைய விருப்பம், என் மனைவியில் விருப்பம், எங்கள் குழந்தைகளின் விருப்பம் என்று எந்த இடத்திலும் பக்கவாட்டில் நுழைய முடியாது.  நுழைந்தாலும் ஏதோவொரு நுகத்தடி உங்கள் கழுத்தில் மாட்டியிருப்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். மந்தையில் சேராத சேர்க்க முடியாத மாடுகளை எப்படி அழைப்பார்கள் என்று தெரியும் தானே?
கணவன் மனைவி என்பது என் பார்வையில் ஒரு எந்திரமும் அதில் செலுத்தக்கூடிய மின்சாரமும் போன்றது. எந்திரம் செயல்படாத போது அது வெறுமனே இரும்பு.  மின்சாரம் பயன் இல்லாத போது அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இங்கே கணவன் மனைவியும் தொடக்கத்தில் உடலளவில் தான் சேர்கின்றார்கள். 

புரிதல் நிச்சயம் இருப்பதில்லை.  பரஸ்பரம் விருப்பங்களை விட சமூக நிர்ப்பந்தங்களே அந்த உறவை தீர்மானிக்கின்றது.

என்ன புரிந்து கொண்டோம் என்பதை இருவருக்குள்ளும் பகிரப்படுவதும் இல்லை. முயற்சிப்பதும் இல்லை. அதுவே சரியானது என்பதை பலரும் சொல்லியே இது தான் சரியான வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ள வைக்கப்படுகின்றது. அதுதான் சரியான வாழ்க்கை என்றே நம்பி வாழவும் தொடங்கி விடுகின்றார்கள். 

ஆசைகள் போனதும் அத்தனை பிரச்சனைகளும் ரவுண்டு கட்டி அடித்து துவைக்கத் தொடங்குகின்றது. இது தான் இந்தியர்களின் பலமும் பலவீனமும்.

அவர்கள் இப்படித்தானே வாழ்கிறார்கள். இவர்கள் இப்படித்தானே வாழ்ந்தார்கள் என்று சொல்லித்தான் குடும்ப வாழ்க்கை என்பதை கற்றுக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் எது உண்மையான வாழ்க்கை என்பதை எவரும் கற்றுக் கொடுப்பதில்லை.  காரணம் எவருக்கும் அது குறித்து தெரியவில்லை என்பதை விட தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருப்பதில்லை என்பது தான் உண்மை.

நாங்களும் தான் ஏழெட்டு பிள்ளகுட்டிங்க பெத்து வளர்த்துஆளாக்கினோம்.  நீ என்னடி அதிசயமா கண்ண கசக்கிட்டு வந்து நிக்குற. புருஷன் அப்படி இப்படித்தான் இருபபான்.  நீ தான் அனுசரிச்சு போகனும் என்று சொல்லி அடங்கல் தத்துவத்தை பெண்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது.

அவள் உடம்பு இறப்பதற்கு முன்பே வாழும் பொழுதே பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து தினமும் மனதளவில் இறந்து பழகு என்றே மறைமுகமாக வலியுறுத்தப்படுகின்றது.

இதையே ஆண்களில் வாழ்வில் வேறு விதமாக சொல்லப்படுகின்றது.

ஒரு பொம்பளையை அடக்க துப்பில்லாம என்னடா இங்கே வந்து புலம்புற? தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சா ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாதா?

அதாவது மாறி மாறி வன்முறையின் மூலம் தான் வாழ்க்கையை வாழ் முடியும் என்பதை நாசூக்காக வலியுறுத்தப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் தான் இங்கே பல குடும்பங்களில் குழந்தைகள் வளர்கின்றார்கள். .

அம்மா என்றால் அன்பு என்று எழுதுவம் பேசுவதும் எளிதானது. ஆனால் அந்த அன்பை உணர முடியாத, உணர்ந்து கொள்ளாத வாய்ப்பில்லாத அம்மாக்களிடம் குழந்தைகள் வளரும் போது எதை பெற முடியும்திடீரென்று எங்கோயோ வளர்ந்த மரத்தை அப்படியே தூரோடு பெயர்த்து எடுத்து வந்து வேறொரு இடத்தில் வைத்து வளர்ப்பது போன்று தான் நம்முடைய தொடக்க திருமண வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு சவாலாக இருக்கின்றது. 

மீறிப்போனால் பொறுமையா இருங்கப்பா".என்று சொல்லப்படும்.  சின்னஞ்சிறுசுன்னா இப்படித்தான் இருக்கும் என்ற ஆலோசனைகள் வேகமாக வந்து விழும்.

ஆனால் குழந்கைளின் அஸ்திவாரம் என்பது முதல் பத்து வயதிற்குள் சரியாக போடப்பட வேண்டும். 

அதிக பட்சம் முதல் பத்து வருடத்திற்குள்ளாவது கணவன் மனைவி என்ற உறவு பலப்பட்டு நல்ல புரிதல் என்ற வட்டத்திற்குள் வந்து நின்று இருக்க வேண்டும். 

காரணம் இந்த சமயத்தில் குழந்தைகளின் மனம் சார்ந்த விசயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்தியே ஆகவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். டீன் ஏஜ் என்று சொல்லப்படுகின்ற பதின்ம வயதில் வெளிப்படப் போகின்ற வண்டவாளங்களின் அடித்தளமான தண்டவாளங்கள் இங்கே இருந்து தான் தொடங்கின்றது.

கணவன் மனைவி என்ற எல்லையைத் தாண்டி பரஸ்பர கடமைகள் என்ற எண்ணம் இருவர் மனதிலும் உருவாகியிருக்க வேண்டும். கடமைக்கு அப்பாற்பட்டு தினந்தோறும் கைகுலுக்கல் போன்ற மகிழ்ச்சிகள் அவர்களை முன்னெடுத்து செலுத்த வேண்டும். அது குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருத்தல் வேண்டும்.

இல்லாவிட்டால்? .

வாழும் பொழுதே அந்த குழந்தைகளுக்கு நரகத்தை அஸ்திவாரமாக போடுகின்றார்கள் என்று அர்த்தம். வாழ்க்கை முடியும் போது குழந்தைகள் மூலம் வேறொரு நரகத்தை அனுபவிக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.

ஒரு குழந்தைக்கு பெற்றோர்களால் போடப்படும் அஸ்திவாரமென்பது அவர்களுடன் மட்டும் முடிந்து போவதல்ல. அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுவது என்பதை எத்தனை பேர்கள் உணர்ந்திருக்கிறார்கள்?

முந்தைய பகுதிகள் ஒன்று  இரண்டு  மூன்று  நான்கு 

23 comments:

ப.கந்தசாமி said...

படித்தேன்ஃ. என்ன, ஏது என்று புரிந்து கொள்ள இன்னும் ஓரிரு முறை படிக்கவேண்டும்.

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன். வகுப்பறையில் திடீர் என்று ஆசிரியர் நுழைந்து என்னப்பா படிச்சாட்டீங்களா? என்று கேட்பார். மாணவர்களும் அவர் என்ன கேட்கிறார் என்று தெரியாமலேயே சில சமயம் அமைதியாக இருப்பார்கள். அல்லது படிச்சுட்டுக்கிட்டு இருக்கோம் என்பார்கள்.

Raja said...

உண்மை. நீங்கள் கூறியவற்றை குழந்தை பிறந்த உடனேயே சிந்திக்க துவங்கி விட்டேன்.என்னளவில் நான் முடிவு செய்தது , யாரை போன்று இருக்கக்கூடதென்பது. அதை எனக்குணர்த்த எங்கள் வீட்டிலேயே ஒருவர் இருந்தார். என் தந்தை வடிவில். முடிந்த வரையில் என்தந்தையை போலில்லாமல் இருந்தாலே நான் நல்ல தகப்பனாகவும், கணவனாகவும் ஆகிவிடுவேன் :)

srinivasan said...

குழந்தை வளர்ப்பு ஒரு கலை ,அதை எல்லோரும் அழகாக செய்ய முடியாது .அவசர உலகத்தில் எதையோ தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம் .

Tamil Newspaper said...

நல்ல பல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

அப்பாதுரை said...

நிறைய கருத்துக்கள்.
தொடர் எதைப் பற்றியதென்று சற்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

பத்து வருடங்களுக்குள் க-ம உறவு முறை பலப்பட வேண்டும் - இது தலைகீழாகத் தோன்றுகிறதே? உறவு இல்லையெனில் திருமணமே கூடாது என்ற கொள்கையை நமக்கடுத்த தலைமுறை ஏற்கவேண்டும். காதல் கனிந்த திருமணங்கள் கூட பத்து வருடங்கள் தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகமே.

அப்பாதுரை said...

stunning photos!

இராஜராஜேஸ்வரி said...

அனுபவத்தின் சிந்தனைப் பகிர்வுகள் ..!!

saidaiazeez.blogspot.in said...

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

வித்தியாசமாக சிந்தித்து சிறந்த அறிவுரைகளை கூறியுள்ளீர்கள்.
ஆனால் புரிந்துகொள்ளத்தான் யாரும் தயாராக இல்லை.
நெருப்பு சுட்டபின் தான் புரிகிறது பலருக்கும்.
இங்கு trial & error மூலமே அனைத்தும் நடக்கிறது.
ஏனெனில் இங்கு ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள்.
என்னுடைய உதாரணம் உங்களுக்கு பொருந்தாது. அவ்வாரே உங்களின் உதாரணம் எனக்கும் சரிப்பட்டு வராது.

ஒரு மனிதன் சிறந்தவன் என்பதற்கு அளவுகோலாக நபிமொழி கூறுவது...
"அவன் மனைவி அவனை சிறந்தவன் என்று கூறவேண்டும்"

ஜோதிஜி said...

அஜிஸ் நீங்க நம்புவீர்களோ மாட்டீர்களோ? நீங்கள் எழுதிய நபி மொழி சொன்னதை இரண்டு நாட்களுக்கு முன் திரும்பி பாராடா 2012 என்ற பதிவில் எழுதி வைத்துள்ளேன். ஆனால் நபி இப்படி சொல்லி இருக்கின்றார் என்பதே நீங்க சொல்லித்தான் தெரியும். மிக்க நன்றி அஜீஸ்.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

பதிவு வெளியிட்டதும் அழைத்துச் சொன்ன நண்பரும் இதைத்தான் சொன்னார். கூகுள் இமேஜ் க்கு தான் உங்கள் நன்றி. எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அது என் மூலம் தரப்பட்டது.

ஜோதிஜி said...

இல்லை அப்பாதுரை. எதார்த்தம் சுடும். குழந்தைகள் பிறந்து ஒட்டுறவு இல்லாமல் வாழும் எத்தனையோ குடும்பங்களை பார்த்து விட்டேன். அவர்கள் இருவரையும் குழந்தைகள் தான் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றி தனியாக நிறைய அனுபவங்களை என்னால் எழுத முடியும். அஜிஸ் சொன்னது போல சில பார்வைகள் எல்லா இடத்திலும் பொருந்தி போக முடியாது.

ஜோதிஜி said...

உண்மை தான். இழந்த பிறகு தானே நமக்கு நமக்கு ஞானம் என்பதே வருகின்றது.

நன்றி சீனிவாசன். உங்கள் கூகுள் கூட்டலில் அத்தனையும் உருப்படியான விசயங்கள். அதற்கு ஒரு தனியான நன்றி.

ஜோதிஜி said...

உங்கள் தொடர் வாசிப்பு என்பது சுவாசிப்பு போலவே உணர்கின்றேன். இடையில் வருபவர்கள் சொல்லும் கருத்துக்களை உங்கள் கருத்துக்களோடு ஒப்பிட்டுக் கொள்வதுண்டு.

Raja said...

எவ்வகையில் ஒரு குழந்தையிடம் பழக வேண்டும்,அவர்களை எவ்வாறு கையாள வேண்டும்,அவர்களின் உலகம் எப்படி இருக்கிறது,அதனுள் நாம் எவ்வாறு நுழைவது என்பதையெல்லாம் தங்களின் கற்பனை திறன் கொண்டு கூறாமல் , தங்கள் பின் பற்றியதை கூருவதலேயே எனக்கு தங்கள் பதிவு மிக நெருக்கமாக தெரிகிறது.எனக்குள் இருந்த குழந்தையை, புற வாழ்வினால் நானே கொன்ற என்னுள் இருந்த குழந்தையை , என் குழந்தைக்காக மீண்டும் உயிர்பிக்கவே இத்தனை போராட்டம் :)

Anonymous said...

I always used to read post in news papers but now
as I am a user of web thus from now I am using net for content, thanks
to web.
Take a look at my blog post xmark adjustable dumbbells comparison

Unknown said...

நல்ல பதிவு

ஜோதிஜி said...

எனக்குள் இருந்த குழந்தையை, புற வாழ்வினால் நானே கொன்ற என்னுள் இருந்த குழந்தையை , என் குழந்தைக்காக மீண்டும் உயிர்பிக்கவே இத்தனை போராட்டம் :)

இப்போது தான் இதனை கண்டேன்.

க்ளாஸ்

Anonymous said...

//படித்தேன்ஃ. என்ன, ஏது என்று புரிந்து கொள்ள இன்னும் ஓரிரு முறை படிக்கவேண்டும்// ஆமாம்,நிதானமாக,பொறுமையாக படிக்க வேண்டியுள்ளது ஜோதிஜி சார் :))))))---செழியன்

ஜோதிஜி said...

நன்றி செழியன். வலைதளங்களில் ஐந்து நிமிடங்களுக்குள் அவசரத்தில் ஒரு கட்டுரையை படிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு நான் கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கின்றேன் என்பது எனக்கே தெரிகின்றது. ஆனால் ஒரு புத்தகம் அதை தேவை என்றால் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் வைத்திருந்து மெதுவாக படித்து உள் வாங்குவோம். தமிழ்நாட்டில் மின் வெட்டு மற்றொரு சவால். எல்லாவற்றையும் நான் புரிந்தே வைத்துள்ளேன். ஆனால் நிச்சயம் மெதுவாக விரும்புவர்கள் வந்து படிப்பார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்குள் உண்டு.

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

உங்க தளத்தைப் பார்த்தேன். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. காரணம் நமக்கும் இது போன்ற சமாச்சாரத்திற்கும் ரொம்ப தூரம். நம்ம உடம்பும் அந்த அளவுக்குத்தான். இதுக்கெல்லாம் தாங்காதுங்கோ. தளவடிவமைப்பு மிக அற்புதம்.

2007 ல் தான் எனக்கும் இந்த தமிழ் இணையம் அறிமுகமானது. அடிக்கடி வாங்க.