Saturday, January 08, 2011

வறப்பட்டிக்காடு

"அமைச்சரே?"

"சொல்லுங்க மன்னா!"

"மாதம் மும்மாரி மழை பொழிந்ததா?"

"ஆகா... மக்கள் உங்கள் ஆட்சியில் சுபீட்சமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் மன்னா......."

மந்திரி வேடம் போட்ட ஒரு துணை நடிகர் பேசும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறதா?.

மேலே சொன்ன வசனத்தை நிச்சயம் நீங்க உங்க ஊரு கீத்து கொட்டகையில எச்சில் துப்புன மணல் மேல உட்கார்ந்து கொண்டு பார்த்து இருக்கக்கூடும்.  இல்லப்பா நான் பொறந்தது முதல் பன்னீரில் தான் கொப்புளித்து வளர்ந்தேன் என்பவர்கள் கொஞ்சம் யூ டியுப் ல் பார்த்திடுங்க. காரணம் பழைய மன்னர் காலத்து திரைப்படங்களில் பெரும்பாலும் நிச்சயம் இந்த வசனம் ஏதோவொரு இடத்தில் வந்தே தான் தீரும். பார்க்கிறவர்களும் ம்.....ம்..... அந்த காலத்துல மக்கள் எத்தனை சந்தோஷமாக இருந்துருக்காங்கன்னு பெருமூச்சு விட்டுக் கொண்டே கொட்டாவி விட்டபடி யோசித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்துடுவோம்.  

மேற்கொண்டு நமக்குள் முன்னால் வாழ்ந்தவர்களைப் பற்றி நாம் யோசித்தால் படித்த பாடப்புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும்..  மன்னர் காலங்களில் சமயம் தழைத்தோங்கியது. ஆன்மிகம் அகன்று நின்றது.  நட்டக்குத்தலா நின்றது என்று பத்து மதிப்பெண்களுக்காக படித்து இப்ப அதையும் மறந்து போயிருப்போம்.  நாம் படித்து வந்த எந்த நிகழ்வுகளையும், வரலாற்றுச் சம்பவங்களும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் தற்புகழ்ச்சி அணியில் கொண்டு போய் சேர்த்தவங்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். 

ஆனால் இப்ப யோசிச்சு பாருங்க.  இது போன்ற வசனங்கள் சொல்றபடி நம் மூதாதையர்கள் வாழ்ந்துருந்தா இன்றைக்கு இந்தியா இருக்க வேண்டிய இடம் என்ன?  நாம பெருசா மூவாயிரம் வருசம் பெருமை மிக்க பராம்பரியம்ன்னு தொடையை தட்டி தட்டி தொடைதட்டி பயில்வானாக மாறி இன்று புல்தடுக்கி பயில்வானாக மாறியிருப்போமா? பசியும் பஞ்சம் பட்னியும் பழைய தமிழகத்தில் சர்வசாதரணம்.  குறிப்பாக இந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு விசயங்கள் முக்கியமாக உண்டு. 

ஜாதிக்கலவரம் ஒரு பக்கம்.  பிழைக்க வழிதெரியாமல் வெளியேறும் கூட்டம் மறுபக்கம். 

பொட்டக்காடுகளும், வானம் பார்த்த பூமியுமாய் வாழ்ந்த வாழ்க்கையில் வெயில் கொடுத்த கருத்த தேகம் தான் ஒவ்வொருவருக்கும் மிஞ்சியது. உழைப்புக்கு அஞ்சாத மக்களைப்போலவே முணுக்கென்று வரும் கோபத்திற்கும் அணைபோட முடியாத மக்கள் இப்போது தான் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள்.


உண்மையிலேயே பழைய திரைபடங்களில் வருவதெல்லாம் வெறும் வசனத்திற்காகவே இது போல எழுதியிருப்பாங்களோன்னு யோசிக்கத் தோணுது.  இதென்ன சம்மந்தமில்லாமல் இந்த பீடிக்கைன்னு பாக்குறீங்களா?  காரணம் இன்று தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 32..  ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு கணக்கின் அடிப்படையில் மாறி மாறி உருவாகி இன்று பழைய இராமநாதபுரம் மாவட்டம் பல கூறாக பிரிக்கப்பட்டு விட்டது. 

பழைய இராமநாதபுரம் மாவட்டம் 4,089 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஏறக்குறைய 12 லட்சம் மக்கள் தொகையில் ஏறக்குறைய ஈழத்தீவின் ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரம்மாண்டமாக இருந்தது. 

1975ல் நாம் நின்று கொண்டுருக்கும் இந்த பூமிக்குப் பெயர் இராமநாதபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பிரித்து விருதுநகர், தூத்துக்குடி,சிவகங்ககை, இராமநாதபுரம் என்று தனித்தனியாக பிரித்து இதனுடைய பெரிய பரப்பளவை சிறிதாக மாற்றிவிட்டார்கள்.  இந்துவாக பிறந்த அத்தனை பேர்களின் பாவங்களை தீர்க்கும் என்று நம்பப்படும் இந்த இராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் தான் இருக்கிறது. 

ஆனால் இந்த மாவட்டத்தின் தலவரலாறு கொஞ்சம் தலையைச் சுத்த வைக்கின்றது.  விவேக் சொல்லும் வசனமான "எப்டியிருந்த நான் இப்டி ஆயிட்டேன்ங்றது" தான் ஞாபகத்திற்கு வருது.. 


இந்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல பெருமைகள் உண்டு. ஆனால் அத்தனை பெருமைகளையையும் தூக்கி சாப்பிடுற மற்றொரு பெருமையும் உண்டு.  அது தான் வறப்பட்டிக்காடு.  அரசாங்க ஊழியர்களுக்கு தண்டனை கொடுக்க இந்த மாவட்டத்திற்கு தான் தூக்கியடித்தார்கள். நாம் ஒண்ணாப்பு போறதுக்குள்ள இந்த மாவட்டத்தைப் பற்றி கொஞ்சமாவது புரிஞ்சுக்கனும். 


பதினைந்தாம் நூற்றாண்டில் திருவாடனை,பரமக்குடி,கமுதி, முதுகளத்தூர்,இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் அடங்கிய பகுதிகள் பாண்டிய மன்னர்கள் வசம் இருந்தது.  இதே பகுதிகள் மிக குறுகிய காலத்தில் (1063) ராஜேந்திர சோழன் வசமும் இருந்தது. பின்னால் வந்த நாயக்கர்கள் வசமும் (1520),  இருந்த பகுதிகள் மாறி மாறி கடைசியில் பாண்டிய மன்னர்களிடத்தில் உருவான் குடுமிபிடி சண்டைகள் சொந்த குடும்பச்சண்டைகளாக மாறத் தொடங்க அப்போது தான் இந்த பூமி கைமாறத் தொடங்கியது.

21 comments:

Thekkikattan|தெகா said...

என்னங்கானும் போடுற ஒவ்வொரு பதிவுமே ஏதோ புத்தகமா கொண்டு வர்ற ரேஞ்சிற்கே விவரணைத் தகவல்களோட மிக்க ஆராய்ச்சிக் குறிப்புகளோட இருக்கே. என்ன வெவரம் :-) ?

எப்படியோ எங்களுக்கு செம எஜுகேஷனல்... நிறைய விவரம் தெரிஞ்சிக்கலாம், தொடருங்க. நமக்கு புதுக்கோட்டைங்கிறத்தாலே பொட்டல்காடு, கொலுத்தும் வெயில்னா தோல் எப்படி தகிக்கும்னு தெரியும் சொல்லுங்க... சொல்லுங்க.

Chitra said...

ஆனால் இந்த மாவட்டத்தின் தலவரலாறு கொஞ்சம் தலையைச் சுத்த வைக்கின்றது. விவேக் சொல்லும் வசனமான "எப்டியிருந்த நான் இப்டி ஆயிட்டேன்ங்றது" தான் ஞாபகத்திற்கு வருது..


.....சீரியஸ் ஆக வாசிச்சிட்டு வந்தேன். இந்த வரிகளை வாசிக்கவும், சிரிச்சிட்டேன்.

Bibiliobibuli said...

ராமநாதபுரம் சரித்திரம் புள்ளிவிவரங்களோடு!! பிறகு நான் வகுப்புக்கு வரேல்ல அப்படீன்னு நீங்க "X" போட்டிடப்பிடாது.

தெகாவுக்கு வந்த சந்தேகம் தான் எனக்கும்.

ஆரம்பத்திலிருந்த "மாதம் மும்மாரி" வசனம் பார்த்தபோது எனக்கு, "மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கூடத்தெரியாமல் நீரெல்லாம் ஏன் மன்னாராக இருக்கிறீர்" என்று மந்திரியார் முணுமுணுப்பதுபோல் கேட்கிறது. :))

ப.கந்தசாமி said...

நாட்டுல என்னென்னவோ நடக்குது. ஒண்ணும் புரியல?

Unknown said...

சொல்லுங்க ஜி.

arasan said...

அறிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி

THOPPITHOPPI said...

நான் உங்களிடம் இந்த எழுத்து நடையை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். அருமை

எஸ்.கே said...

பல ஊருங்க இப்படித்தான் மாறிப் போச்சு!

ஆனந்தி.. said...

ரொம்ப ஆர்வமா அடுத்த பகுதியை எதிர்நோக்கிருக்கேன்...என் தாத்தா கூட சொல்வாங்க..அந்த காலத்தில் மெமோ கொடுத்தால் தண்ணி இல்லாத காட்டுக்கு அதாவது பரமக்குடி,ராம்நாடு பக்கம் தூக்கி அடிப்பாங்க அரசாங்கத்தில் னு சொல்லிருக்காங்க நான் சிறுமியை இருந்த போது...

Unknown said...

வருத்தமான உண்மைதான் தொடருங்கள் சார்

http://thavaru.blogspot.com/ said...

கோடைகாலங்களில் ராமநாதபுரத்திலிருந்து ஆடுகளை மந்தையாக மந்தையாக ஓட்டிகொண்டு தஞ்சாவூர் பக்கம் வருவார்கள். வயல்களில் உரத்திற்காக ஆட்டு மந்தைகளை தங்கவிடுவார்கள். அதற்கு பதிலாக நெல் பெற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய நேர்மையும் பேச்சும் உருவமும் அவர்களை பார்த்துகொண்டே இருக்க செய்யும்.

Thenammai Lakshmanan said...

உண்மைதான் ஜோதிஜி.. நம் மாவட்டத்தின் வறட்சிக்கு கருவேலங்களும் ஒரு காரணமாம்.. அதையும் விரிவாக எழுதுங்கள்..

Best Online Jobs said...

நல்ல பதிவு. உங்கள் வருத்தம் நன்றாக புரிகிறது

உமர் | Umar said...

பள்ளி அனுபவங்களை விட உங்கள் மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் நிறைய வரும் போல... தமிழ் விக்கிபீடியாவுக்கு நேரடி உசாத்துணை கொடுத்துரலாம். :-)

தமிழகத்திலேயே பரப்பளவில் பெரிய மாவட்டமாக திருச்சி இருந்தது என்று படித்துள்ளேன். (புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் - திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டவை.) பிரிக்கப்படுவதற்கு முன் திருச்சிக்கு ஆட்சியராக வந்த யாரும் மாவட்டம் முழுதும் சென்றது கிடையாது என்றும் படித்துள்ளேன். ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லாத இன்றைய ஆட்சியர்களைப் பற்றி பேசப்படாது.

.

ஜோதிஜி said...

கும்மியாரே நீங்க சொல்வது உண்மைதான். நானும் நாலைந்து பதிவுகள் போட்டு ஒதுங்கிவிடலாமேன்று நினைத்தேன். நம்ம விந்தைமனிதன் சூட்டைக் கிளப்பி ரூட்டைப் போட்டுக் கொடுக்க இப்ப நீங்க சரியா புடுச்சுட்டீங்க. 1974 பஞ்சம் மட்டும் சிறுவயதில் ஞாபகம் இருந்தது. ஆனால் இப்ப இணையத்தில் ஒவ்வொன்றாக தேடிப்பார்க்க அந்த விசயங்களும் சிக்கி விட்டது. ராஜராமனுக்குத்தான் நன்றி சொல்லனும்.

தாராபுரத்தான் said...

ஆவல் தொடர்கிறதுங்க.....

ஜோதிஜி said...

தெகா

வாழ்வின் இரண்டாவது பகுதி டாலர் நகரத்தில் வந்து விட்டது. முதல் பகுதியை இதில் கோர்த்து முடித்து விட்டால் போதுமானது தானே.

நன்றி சித்ரா படிப்பவர்களுக்கு சோர்வு வரக்கூடாது என்பதற்காக இது போன்ற தூவல்களை தூவ வேண்டியதாக உள்ளது.

என்ன கந்தசாமி அய்யா அதான் கருத்தை கடத்த ஒரு அற்புதமான ஆலோசனையை கொடுத்து விட்டிங்க தானே? இதைவிட வேறு என்ன நடக்கவேண்டும்(?)

சும்மாயிருங்க தொப்பி. நாமேளே நடைவண்டி பயணம். நீங்க வேற உசுப்பேத்தி விடுறீங்க.

தொடர்வாசிப்புக்கு நன்றி எஸ்கே

ஜோதிஜி said...

வினோத், அரசன், இரவு வானம், பெஸ்ட் ஆல் லைன் உங்கள் வருகைக்கு நன்றிங்க.

தேனம்மை ஒவ்வொரு பதிவிலும் வரக்கூடிய இது போன்ற விமர்சனங்கள் தான் என்னுடைய தேடலை அதிகப்படுத்துகின்றது.

நன்றி தாராபுரத்தான் அய்யா.

ஜோதிஜி said...

கும்மி நீங்க சொன்னதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கின்றேன்.

இந்தியாவை கிராமப்பகுதிகள் வரை பெரும்பாலும் வாகனத்தில் சுற்றிப் பார்த்த பெருமை குறிப்பாக எங்கள் ஊருக்கு வந்த முதல் இந்தியப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி என்கிற விதத்தில் அவர் மேல் எப்போதும் ஒரு மரியாதை உண்டு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிந்திக்க வைக்கும் கேள்விகள். மும்மாரி பொழிந்தது, செழிப்பாக வாழ்ந்தது உண்மையா என்றெல்லாம் நானும் யோசித்திருக்கிறேன். உங்கள் கேள்விகள் அனைத்தும் உண்மை தான்..

வசீகரமான எழுத்து நடை. தொடருங்கள்.

Anonymous said...

இன்னும் சற்று விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.