Sunday, December 12, 2010

ஒரு தாயின் மரண சாசனம்

புதிதாக படிக்கத் தொடங்குபவர்கள் இதை சொடுக்கி படித்து விட்டு தொடர்ந்தால் நலமே விழைவு.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி


பிரிந்து போன மகளுக்கு இறந்து போன அம்மா எழுதியது.

நம் இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியை நிரப்பக்கூடியதாய் இந்த கடிதம் இருக்குமென்று நம்பி இதை எழுதத் தொடங்குகின்றேன். 

என்னுடைய விருப்பமில்லாமல் பதினைந்து வயது இடைவெளியை எவரும் பொருட்படுத்தாமல் திருமணம் என்ற அலங்கோலம் நடந்த போது முதல் முறையாக இறந்தேன். ஆண்மையற்ற ஓழுக்கமற்ற கணவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு இரவுமே செத்துக் கொண்டுருந்தேன். உடலால் மட்டுமே வாழ்ந்த என் வாழ்க்கையில் உன் வருகையும் நீ என்னை புரிந்து கொண்ட பிறகு தான் உண்மையிலேயே வாழத் தொடங்கினேன்.  

ஆனால் இதைபடிக்கும் போது இந்த உடல் கூட நெருப்பில் கலந்து சாம்பலாய் மாறிப் போயிருக்கும். ஆனால் நீ சுவாசிக்கும் காற்றில் கலந்து உன்னையே கவனித்துக் கொண்டுருக்கும் உன் அம்மாவை இதை படித்து முடித்த பிறகாவது புரிந்து கொள்ள முயற்சிப்பாயா மகளே?

இன்னும் சில மணி நேரத்திலோ அல்லது சில நாட்களிலோ நான் இருக்கப் போவதில்லை. என்னுடைய நோயின் தாக்கம் எனக்கான விடுதலையை தெளிவாக புரியவைத்திருக்கிறது. என்னுடைய உயிர்ப்பறவை இந்தக் கூட்டிலிருந்து சிறகடிக்கப் போகின்றது.  

நீ என்னருகே இல்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. எவரையும் சார்ந்து வாழாமல் என் உதவி இல்லாமலேயே நீ சென்ற உயரம் என்பது என்னால் நம்ப முடியவில்லை. உச்சியில் இருக்கும் உன்னை உச்சி முகர்ந்து முத்தமிட ஆசை. இந்த அம்மாவின் வார்த்தைகளை படித்து முடித்த பிறகாவது என்னை நினைத்து பார்ப்பாயா மகளே?

இந்த கடிதம் ஏதோவொரு சமயத்தில் உன் கைகளில் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏராளமான கேள்விகளை சுமந்து கொண்டுருக்கும் உனக்கு என்னுடைய இந்த வார்த்தைகள் சில புரிதல்களை உருவாக்கக்கூடும். இது நான் சேர்த்த சொத்துக்களை இட்டு நிரப்பிய வார்த்தைகள் அடங்கிய உயில் சாசனம் அல்ல. 

ஆனால் என் கருவில் சுமந்து உயிர் மூச்சில் வைத்துப் பார்த்த உன்னை இழந்து விட்டேனோ என்ற ஆதங்கத்தில் அவசரமாய் எழுதுகின்றேன்,  அவசரமாய் என்னை விட்டு நீ பிரிந்தாலும் நான் எதிர்பார்த்ததை விட ஏராளமான ஆச்சரியத்தை எனக்கு தந்துள்ளாய். நான் உன் அப்பாவை முழுமையாக புரிந்து கொண்ட தருணத்தில் கணவன் என்ற மனிதனை எதிர்க்காதே முற்றிலும் புறக்கணித்து விடு என்று வாழத் தொடங்கினேன். 

நான் வாழ்ந்த வாழ்க்கையை போலவே நீயும் அதையே கடைபிடித்து என்னை கலங்க வைத்து விட்டாயே மகளே?

உன் அப்பாவுக்கும் எனக்கும் நடந்த பாதி விசயங்களை உன் பார்வைக்கு படாமல் மறைத்து வைத்தேன்.  காரணம் பசுமரத்தாணி போல பதிந்து விட்டால் உன் பார்வையும் வாழ்க்கையும் மாறிவிடுமோ என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்தேன். நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்கள் தான் ஏராளமான தாக்கத்தை உருவாக்கும். 

உன் எதிர்கால வாழ்க்கையை முன்னிட்டு தான் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டேன்.  பலமுறை நீ என்னிடம் கேட்ட வெளியேறிவிடலாமென்ற நோக்கத்தையும் இதனால் தான் புறக்கணித்தேன்.   இன்றைய உலகம் விஞ்ஞான சமூக மாற்றத்தில் மனித இனம் பெருமையாக வளர்ந்திருந்தாலும் அடிப்படை மனித குணாதிசியங்கள் மாறவில்லை, மிருகங்களை விட கேவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் ஆணாதிக்க உலகில் ஒரு பெண்ணால் அத்தனை சீக்கீரம் வெளியே வந்து விட முடியாது. ஒரு பெண்ணின் எல்லைகள் என்பது ஒரு வட்டத்திற்குள் தான் இருக்கும் என்பது போன்ற பல விசயங்களை நான் எப்படி புரியவைத்தாலும் உன்னால் புரிந்து கொள்ள முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை மகளே?

ஆனால் உன் அப்பா அறுபது வயது கிழவனுக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னை தாரை வார்க்க நினைத்த போது தான் எனக்குள் இருந்த அத்தனை தயக்கத்தையும் உடைத்துக் கொண்டு உன்னையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்குள் நுழைந்தேன். நம் இருவரையும் இனிதே வரவேற்ற திருப்பூர் நீ என்னை விட்டு பிரிந்து போவதற்கும் காரணமாக இருந்து விட்டதடி மகளே?

திருப்பூர் ரயில் நிலையத்தில் நம்மை நோக்கி வந்த காவல்துறையினர் கையில் சிக்கினால் விசாரனையில் தொடங்கி விபரமாக கையாண்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் கதர்ச்சட்டை ஆசாமியிடம் வலிய சென்று பேசினேன். அவர் சட்டை மட்டும் தான் கதராக இருந்தது. உள்ளே இருந்த இதயம் காமுகனாக இருந்தது. உன்னை அமர வைத்து விட்டு அவர் அறைக்குச் சென்ற போது அவர் போட்ட ஒப்பந்தத்தை நீ கேட்டால் துவண்டு விடுவாய் என்று மறைத்தேன். 

அடுத்த மூன்று மாதத்தில் நான் வேலை தேடிச் சென்ற நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால் பார்த்த வேலைகளோடு நான் எதிர்பார்க்காத வேலைகளும் செய்ய வேண்டியதாக இருந்தது. அவர்கள் மேல் தவறில்லை. என்னைக் காத்துக் கொள்ள வெளியேறிய போதும் கல்வி அறிவு இல்லாமல் தகுதியான வேலைகளில் அமர முடியாது என்பதை புரிந்து கொண்டேன். பல பெண்களின் வாழ்க்கையும் ஒவ்வொரு இடத்திலும் அலங்கோலமாகத்தான் இருக்கிறது மகளே?

சிலர் விருப்பம் இல்லாத போது கூட நிர்ப்பந்தம் மூலம் மாற்றப்படுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் பலருக்கும் வேறு வழியில்லாமல் இதிலும் ஒரு விதமான சகிப்புத்தன்மையை கடைபிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இயல்பாக வாழும் பெண்களும் பலரும் இருக்கிறார்கள். ஆனால் நான் பார்த்தவரைக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மன உளைச்சல் வேறு வழியே வந்து தாக்கிக் கொண்டே தான் இருக்கிறது.  மொத்தத்தில் தொழில் நகரங்களில் ஒவ்வொரு பெண்ணுமே நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 

அழகு கவர்ச்சி போன்ற சொல்லுக்கு தகுதியான பெண்களின் உண்மையான திறமைகள் சமூகத்தில் இரண்டாம் பட்சமாகி விடுகின்றது என்பதை அப்போது தான் முழுமையாக புரிந்து கொண்டேன். 

ஜாதி,மதம், நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடு பார்க்காத ஒரு சொல் இந்த பாலூணர்வு உணர்ச்சிகள் தான். பருவநிலை பொறுத்து புணர்ந்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடும் மிருகத்தையும் மனித இனத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை. வெவ்வேறு ஆசைகளுக்கு அடிபணிந்து அலங்கோல வாழ்க்கை வாழும் பெண்கள் ஒரு பக்கம். 

வெறியை மனதில் வைத்துக் கொண்டு வெளிவேஷம் போடும் ஆண்கள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் வாழும் எண்ணிக்கை சொற்பானது. 

என் அழகும், இளமையும் உன் அப்பாவுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது.  ஆனால் என்னுடைய தொழில் வாழ்க்கை போராட்டத்தில் அதுவே என்னை பலவிதங்களிலும் படாய் படுத்தி எடுத்தது.  பல காமாந்த ஆண்களிடம் தப்பி வந்த எனக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது.  வேறுவழியே தெரியாமல் மீண்டும் அந்த கதர்ச்சட்டையிடம் தான் அடைக்கலம் தேடிப் போனேன் மகளே?

நான் எதிர்பார்த்ததை விட என்னை நன்றாகவே வைத்துக் கொண்டார். உன் அப்பா எனக்கு பிரச்சனையாக இருந்ததைப் போல அவர் குடும்ப வாழ்க்கையில் தொடக்கம் முதலே அவர் மனைவியே அவருக்கு எதிரியாக இருந்து தொலைக்க அவரும் ஏதோவொன்றை தேடிக் கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். எங்களுக்குள் உருவான தொடர்பில் உன்னுடைய அடிப்படைத் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. அதுவே உன் சிறகுகளை பலப்படுத்த உதவியது.  நீ அவருடன் சேர்த்து என்னை நம் வீட்டில் வைத்துப் பார்த்த போது கூட நான் வெட்கப்படவில்லை. 

நீ எந்த நோக்கத்தில் எங்களைப் பார்த்து இருப்பாய் என்பதைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை. தியாகம் என்ற வார்த்தையை இந்த இடத்தில் நான் எழுதிவைத்தால் நீ சிரித்து விடுவாய்.  ஒழுக்கம் தவறிய பாதையில் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த வார்த்தைக் கொண்டு எழுதி வைத்தாலும் படிப்பவர்களின் பார்வையில் நான் ஏளனமாகத்தான் தெரிவேன். ஆனால் என் நோக்கமென்பது உன்னைச் சுற்றியே இருந்ததால் என் எல்லையை தீர்மானித்துக் கொண்டு அவரையே சார்ந்திருக்கத் தொடங்கினேன். சரி தவறு என்ற வார்த்தைகளோ, விவாதம் செய்யவோ எனக்கு விருப்பமில்லை. உன் அப்பா என்ற ஆண் தொடங்கி வைத்த பயணம். ஆனால் மற்றொரு ஆண் மூலம் அது முடிவடைந்ததாக கருதுகின்றேன். எல்லோருமே இந்த பாதையை தேர்ந்தெடுக்கலாமா என்ற கேட்பாய்? அவரவர் சூழ்நிலை? அவரவர் அனுபவம்? அதற்கான பலன்களையும் அவர்களே தான் அனுபவிக்க வேண்டும். மற்றொரு பெண்ணின் சாபமா? அல்லது என்னுடைய விதி முடிய வேண்டிய நேரமா தெரியவில்லை. அதையும் நான் உணர்ந்து கொண்டேன். 

ஆனால் இந்த உலகில் நமக்கு முன்னால் வாழ்ந்த பலரின் தியாகத்தால் தான் நீயும் நானும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறோம் என்பதை நீ உணர்வாயா மகளே?  

அம்மா நேர்மையாக வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும்? என்பது நீ யோசிப்பது புரிகின்றது.  வேறொன்றும் நடந்திருக்காது. நீயும் என்னைப் போலவே ஏதோவொரு நிறுவனத்தில் அடிமட்ட ஊழியராக உள்நுழைந்து உன்னை நீ நிரூபித்துக் காட்டுவதற்குள் உன்னையே இழந்துருக்கக்கூடும்.  நான் பார்த்த தொழில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு பெண்படும் பாடுகளை வைத்தே இந்த முடிவுக்கு வந்தேன்.  எந்த வகையில் பார்த்தாலும் பெண்களுக்கு கல்வி தான் முதல் ஆயுதம்.  அதற்குப் பிறகு தான் மற்றது எல்லாமே என்பதை புரிந்து கொண்டேன்.  அதனால் தான் நான் உன்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டு உன் பாதையைக் காட்டி ஒதுங்கிக் கொண்டேன்.  நீ என்னைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி யோசித்தே மன உளைச்சல் அடைந்தால் உன் இலக்கை நீ எப்படி அடைவாய் மகளே?

பேசாத வார்த்தைகளும், மௌனமும் உருவாக்கும் சக்தி என்பதை ஒரு பெண் புரிந்து கொண்டால் எப்படி மாறுவாள் என்னைப் போலவே நீயும் உதாரணமாய் தெரிகின்றாய்.  ஆனால் அவற்றை நேர்மறை எண்ணமாக மாற்றிக் கொண்ட நீ எனக்கு மகள் அல்ல.  என தாய் போலவே மாறி என்னை தவிக்க வைத்து விட்டாய் மகளே?

உன்னுடைய பார்வையில் நான் ஆசை நாயகியோ அல்லது வாழ்க்கையின் அசிங்க நாயகியோ எதுவாகயிருந்தாலும் நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து அமைதியாக இப்போது உன்னிடமிருந்து நான் விடைபெறுகின்றேன். என்னுடைய இலக்கென்பது நான் பட்ட துன்பங்கள் உன்னை வந்து சேரக்கூடாது. உன் வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் தான் விட்டுப் போன உன் கல்வியில் உன்னை கவனம் வைக்கச் சொன்னேன். ஆனால் படிக்கும் கல்வி மட்டும் ஒழுக்கத்தை தந்து விடாது. வளர்ப்பு, சூழ்நிலை என்ற பல காரணிகள் உண்டு. இதற்கு மேலாக சுய சிந்தனைகள் கூர்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை நான் புரியவைக்க வாய்ப்பு கொடுக்காமலேயே நீயே சுயம்புவாய் மாறி இன்று உயரத்தில் இருப்பதை நினைத்து பெருமையாய் இருக்கு மகளே?

என்னுடைய அசிங்க பக்கங்களை உன்னிடம் காட்டாமல் அமைதி காத்தேன். உனக்குள் இருக்கும் கோபங்கள் நியாயமானது தான். ஆனால் எல்லா நியாயங்களுக்குப் பின்னாலும் ஒரு சிறிய அளவு அநியாயமும் கலந்து தான் இருக்கும் மகளே? உள்ளூர் பார்வையில் நான் உணர்ந்த வாழ்க்கையில் நான் எழுதும் இந்த எழுத்துக்கள் உலகப் பார்வையை பார்த்துக் கொண்டுருக்கும் உனக்கு புரிவதில் சிரமம் இருக்காது., சரி தானே மகளே?

நேர்மை, உண்மை, சத்தியம், ஒழுக்கம் போன்ற பல வார்த்தைகள் இன்று வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் காரணங்கள். அவசர உலகில் ஆறுதல் சொல்லக்கூட கூலி கேட்கும் உலகில் நான் அடைக்கல்ம் புகுந்த கதர்ச்சட்டை என்னை கண்ணியமாகவே வைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உருவான குடும்ப, தொழில் வாழ்க்கை சூறாவளியை பொருட்படுத்தாமல் என்னை கவனமாக பாதுகாத்தார். 

என்னை விட உன் வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.  அவையெல்லாம் நீ அறியாதது. ஆனால் இந்த அன்பு தான் அவருக்கு இறுதியில் வினையாக மாறியது. வாகன விபத்தில் மாட்டிய அவரை "செத்து தொலையட்டும்" என்று புறக்கணித்த அவர் மனைவியை விட நான் பெருமைபடக்கூடியவள் தான். தகவல் கிடைத்த நான் அவசரமாய் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது தான் எங்களின் விதியின் விளையாட்டு நேரமும் அங்கிருந்து தான் தொடங்கியது. அவசர உதவிக்காக நுழைந்த அவருக்கு சுத்தம் செய்யாத ஊசியை அவசரமாய் குத்தி இலவசமாய் எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லியை வழங்கியவர்களை என்ன சொல்வாய்?

அவருடைய ஆள் அம்பு சேனைகள், பணபலம் என்று பின்னால் வந்து நின்றாலும் அவர் அறியாமல் எனக்குக் கொடுத்த அந்த உயிர்க் கொல்லியை சுமந்தபடி வாழும் சூழ்நிலையில் மாறிப் போனேன். அவர் சில மாதங்களுக்கு முன் உலகை விட்டு சென்று விட்டார்.  இதே இப்போது நானும் அவர் சென்ற காலடி தடத்தை நோக்கி சென்று கொண்டுருக்கின்றேன் மகளே?

நான் இதுவரைக்கும் உனக்கு அறிவுரை என்று எதுவுமே சொன்னதில்லை. நீயும் அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கியதும் இல்லை.  நீ சென்று கொண்டுருக்கும் உயரங்களை பலர் மூலம் நான் கேட்டறிந்து என் துயரங்களை மறந்த நாட்கள் பல உண்டு. உன்னுடைய ஒழுக்கமும், அயராத உழைப்பும் பணத்தைக் கொடுத்தது. நீ பெற்ற வசதிகளை அனுபவிக்கும் பொருட்டு நான் உன்னைத் தேடி வரவில்லை. என் நோய் குறித்து உன்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவே வந்தேன். ஆனால் உன்னுடைய புறக்கணிப்பை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டு திருமபி வந்தேன். உனக்கு வாழ்த்த வார்த்தைகளை தேட வேண்டிய அவஸ்யமில்லாமல் உன் ஆளுமையைப் பார்த்து அதிசயமாய் திரும்பி வந்தேன். உன்னை சுமந்த இந்த வயிற்றுக்கு வாலிப சந்தோஷத்தை தந்தது மகளே?

இறைவன் உன்னோடு இருந்து உன்னை காக்க வேண்டும் என்று வாழ்த்த மாட்டேன். கட உள் என்பது உள்ளே தான் இருப்பது.  நீ அதை உணர்ந்ததோடு உன்னையும் அறிந்து உலகத்தையும் புரிந்து நீ வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. 

நீ அடுத்த ஜென்மத்தில் எனக்கு அம்மாவாக வர வேண்டும் மகளே? உன் வயிற்றில் நான் பிறக்க வேண்டும் தாயே?

இதற்கு மேல் எழுத என்னால் எழுத முடியவில்லை.  எழுதாத வார்த்தைகள் ஆயிரம் பக்கத்தில் சொல்ல வேண்டியதற்கு சமமடி மகளே. 

விடைபெறுகின்றேன்.

உன் அம்மா. (இந்த உறவை இன்னமும் மனதில் வைத்திருப்பாய் தானே?)

ரயில் வெளிச்சத்தில் படித்து முடித்து விட்டு அந்த காகிதத்தை அவரிடம் கொடுத்தேன்.  

இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. திருப்பூர் ரயில் நிலையம் மூன்று மொழிகளில் எங்கள் இருவரையும் வரவேற்றது.  அவருக்கான வாகனம் வந்து நின்றது.  என் வாகனத்தை நோக்கி நகர்ந்த போது என் பெயர் சொல்லி அழைத்தார். 

அடுத்த அரைமணி நேரம் ஆள் அரவமற்ற அந்த ரயில் நிலைய முகப்பில் வேறு சில விசயங்களையும் பேசினார்.  நான் வீட்டுக்கு என்னுடைய வாகனத்தில் வந்து கொண்டுருந்த போது அவர் என்னிடம் பேசிய விசயங்களை நினைத்துப் பார்த்தேன்...........

"ஆண் என்பவன் எல்லா இடங்களிலும் அவனுக்கு பிடித்த சூழ்நிலை அமைந்திருந்தால் தன் பாரத்தை இறக்கி வைத்து விடுவான்.  அறிமுகம் இல்லாதவர், அச்சப்படக்கூடியவர் என்பதைப் பற்றி பிறகு தான் யோசிப்பான். ஆனால் பெண் என்பவள் அத்தனை சீக்கிரம் எந்த இடத்திலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்கள் குறித்த அச்சமும் சமூகம் குறித்த பயமும் இன்னும் பல காரணங்களால் தன்னை அத்தனை சீக்கிரம் வெளியே காட்டிக் கொள்வதில்லை". 


"ஆனால் பெண் என்பவளை எந்தவிதமாக பார்த்தாலும் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணுமே அன்புக்கு ஏங்குபவளாகத்தான் இருக்கிறாள். தன்னை புரிந்து கொள்ள எவராவது கிடைக்க மாட்டார்களா? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.  தன்னை குறுக்கிக் கொண்டு வாழும் ஆணோ பெண்ணோ ஏதோவொரு சமயத்தில் மொத்தமாக தன்னைப் பற்றி எவரிடமோ கொட்டிவிடுவதுண்டு."  

"ஆனால் எனக்கு அதற்கான சந்தர்ப்பந்தங்கள் அமைந்ததுமில்லை. உருவாக்க விடுவதுமில்லை.  நீங்கள் ரயிலில் ஏறி அமர்ந்ததும் உங்கள் மனைவியிடம் குழந்தைகளிடம் பேசிய வார்த்தைகளை உங்களை அறியாமல் கவனித்த போது என் மனோரீதியான கவனம் உங்கள் மேல் விழுந்தது. " 

"நான் சார்ந்திருக்கும் பல நிறுவனங்கள் என்னை பல விதங்களிலும் கண்காணித்து இருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் என்னை இட்டு நிரப்பி விடுவதுண்டு."  

"எந்த நிறுவனத்தில் நுழைந்தாலும் என் உள்ளாடை முதல் தெரியும் இடுப்பு வரைக்கும் அளவெடுக்கும் வரைக்கும் ஆண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன்.  

நீங்கள் நல்லவரா? என்று எனக்குத் தெரியாது.  ஆனால் முயற்சித்துக் கொண்டுருப்பது மட்டும் புரிகின்றது." 

"அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது.  பல நிறுவனங்களில் நான் பார்க்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்விக்கான கட்டண வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டுருக்கின்றேன்.  காரணம் ஆண்கள் என்பவர்களுக்கு எந்த சூழ்நிலையும் சாதகமாக அமையும் அல்லது உருவாக்கிக் கொள்ளலாம். " 

"ஆனால் பெண்களுக்கு சற்று கடினம் தான். இது இந்தியா மட்டுமல்ல.  நான் பார்த்த வெளிநாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. பெண்கள் எழுதலாம், ஆடலாம், பாடலாம், படிக்கலாம்.  பிடிக்காத கணவன் என்றால் வெளியேறி தனக்கான வாழ்க்கையை வாழலாம். ஆனால் எத்தனை லாம் போட்டாலும் அவர்களின் முழுமை என்பது ஏதோவொரு வகையில் ஆண்களைச் சார்ந்து தான் இருக்கிறது. " 


"ஒரு பெண்ணின் தனிப்பட்ட சாதனைகள் என்பது குறைவு. உலகை புரட்டிப் போட்ட புரட்சியாளர்கள் முதல் உலகை அச்சுறுத்தும் விஞ்ஞானம் வரைக்கும் அத்தனையும் இந்த உலகத்திற்கு தந்தவர்கள் ஆண்கள் தான். தன்னை உணர்ந்து தனிமையில் சாதித்த பெண்கள் வரிசையில் ரேடியம் கண்டுபிடித்த பெண்மணியைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவில் வரவில்லை. "

"எழுத்தாளராக, விஞ்ஞானியாக, அதிகாரியாக, அரசில் உயர்பதவியிலும் கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு பினனாலும் முன்னாலும் ஒரு ஆண் பார்வை இருந்து கொண்டேதான் இருக்கிறது. உடல் வலிமை மட்டுமல்ல உள்ளத்தின் வலிமையும் என் பார்வையில் ஆண்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் நான் அறிவேன்.  இவ்வளவு அறிவீலிகளா? என்பதையும் பல இடங்களிலும் பார்த்து இருக்கின்றேன். "

"ஒரு ஆண் தன்னை எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.  அதற்கான வாய்ப்புகளையும் அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.  ஆனால் பெண்கள்? 

ஒவ்வொரு பெண்ணுமே தன்க்கு பிடித்த சூழ்நிலை, தான் விரும்பும் குணாதிசியம் உள்ள கணவன் காதலன் என்று ஆசைகளால் அவஸ்த்தைப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். அமைதியைக் கையாண்டு கவிழ்த்து விடும் ஆண்களைப் போலவே அத்தனையும் இழந்தாலும் திருந்தாத பெண்களையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்."

"நான் சந்திக்கும் நபர்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்த்து பழகுவதில்லை.  ஆனால் சூழ்நிலையை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை வைத்து தான் அவர்களை மதிப்பீடு செய்கின்றேன்."   

மரணத்தினால் பாவங்கள் அழியும் அந்த
மரணத்தினால் பல சாபங்கள் தீரும்...  

நாகமணியின் அம்மா குறித்து யோசித்த போது நான் சமீபத்தில் கோவை மின் மயானத்தில் கேட்ட பாடல் என் நினைவுக்கு வந்தது.  யோசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்த போது தூங்கிக் கொண்டுருந்த என் குழந்தைகளின் மேல் பார்வையை ஓட விட்டேன்.  சில எண்ணங்களும் ஒரு சில வைராக்கியமும் எனக்குள் உருவானதை என்னால் உணர முடிந்தது.




முற்றும்

112 comments:

ஜோதிஜி said...

03.07.2009 முதல் 12.12.2010 ஏறக்குறைய 18 மாதங்கள் இந்த வலையுலகத்தில் நுழைந்து இந்த 260 தலைப்புடன நிறைவடைகிறது.

அடுத்து என்ன எழுதப் போகின்றேன் என்று நான் தீர்மானிப்பதில்லை. அன்றைய சூழ்நிலையில் படித்த, பார்த்த, கேட்ட செய்திகள் தான் தீர்மானிக்கிறது.

விமர்சனம் கொடுக்காமல் படிப்பவர்கள் திடீர் என்று உள்ளே வந்து ஒவ்வொரு தடவையும் ஏதோவொரு ஆளுயர மாலையை போட்டு விட்டு ஓடிவிடுகிறார்கள்.

ஆனால் இன்னமும் நான் இந்த எழுத்துலகில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய (துளசி கோபால் சிரிப்பது புரிகின்றது?) இருக்கிறது.

அதுவும் நான் எழுதியுள்ள புத்தகம் டாலர் நகரம் என்ற புத்தகத்தில் பெற்ற அனுபவங்கள் கொடுத்த தாக்கம் என்பது என் வாழ்வில் மறக்க முடியாது.

இதன் காரணமாகவே இந்த புத்தகம் மார்ச் மாதத்தில் வெளிவரும் என்று நம்புகின்றேன்.

அதன் பிறகே அடுத்த புத்தகமான தமிழீழம் பிரபாகரன் கதையா? என்ற நீண்ட நெடிய ஈழ வரலாறு (ஏறக்குறைய 600 பக்கங்கள் வரக்கூடியது) வரும் வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் எழுத்து வாழ்க்கையில் பாலர் பள்ளியில் இருப்பதை புரிந்து கொண்டேன்.

அனுபவம், அரசியல், சமூகம், வரலாறு கொஞ்சம் கவிதை (ஹேமா திட்டக்கூடாது (?) )போன்ற நான்கு துறைகளில் அதிகம் எழுதிய எனக்கு இந்த கதைக்கான எழுத்து என்பது இதுவே முதல் முறை.

நான் சந்தித்த மூன்று பெண்களின் வெவ்வேறு குணாதிசியங்களைப்பற்றி எழுத வேண்டுமென்று தோன்றிய எழுத்துக்கள் எதிர்பாரதவிதமாக தொடர்கதை போலவே அமைந்து விட்டதென்பது நான் திட்டமிட்டதல்ல.

விமர்சனம் கொடுத்த நண்பர்கள் உருவாக்கிய தாக்கமிது.

வேலை காலி இருக்கு என்ற தலைப்பில் திருப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு பின்னால் உள்ள விசயங்களைப் பற்றி எழுதிய போது முதன் முறையாக விமர்சனம் கொடுத்த வினோத் (அதிஷா) நீங்கள் ஏன் கதை எழுதக் கூடாது? என்றார்.

நமக்கு அந்த தகுதியில்லை என்பதாக பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடி சிரித்துக் கொண்டு நழுவி விட்டேன். ராஜாராமன் (விந்தை மனிதன்) உங்களுக்கு எழுத தகுதியிருக்கிறது (?) என்ற போது கூட கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டேன்.

ஆனால் மின் அஞ்சல் மூலம் கேட்டவர்களும் (சுய சொரிதல் வேண்டாம்), படித்துக் கொண்டுருந்தவர்களின் எதிர்பார்ப்புகளும், பெண்கள் கூட்டம் மொத்தமாக கொடுத்த ஆதரவும், இதற்கிடையே இரண்டு பேர்கள் என்னை வழிநடத்திய (செய்த எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டி லெப்ட் அண்ட் ரைட் வாங்கியவர்கள) விதமும் ஆச்சரியமாக உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் உள்ள தனசேகர், முதல் பக்கத்தில் உள்ள தாராபுரத்தான் அய்யா முதல் வெவ்வேறு வயதில் உள்ளவர்கள் பெற்ற தாக்கத்தை நான் உணர்ந்தாலும் உள்ளூர் நண்பர் சாமிநாதன் அடுத்த பதிவை உங்கள் ட்ராப்டில் உள்ளதை எனக்கு அனுப்பி வையுங்கள் என்றபோது தான் கொஞ்சம் பயம் வந்தது. பாராட்ட யோசிப்பவர் பாராட்டினால் பயம் வருவது இயல்பு தானே?

மற்றபடி எப்போதும் போல தொடர்பில் உள்ள அத்தனை இதயங்களுக்கும் நன்றி. கல்யாணம் கட்டி வைங்க என்று சொன்ன தெகா திட்டப் போகிறார்?

பலரும் கேட்ட இது உண்மைச் சம்பவமா? இது எப்படி சாத்தியம்? போன்ற கேள்விகள் அப்படியே ஒரு ஓரமாக இருக்கட்டுமே?

இதுவொரு களம். ஒரு ரயில். ஒரு ஆண். ஒரு பெண், உரையாடல் அத்துடன் கொஞ்சம் புரிந்துணர்வு, பெரும்பாலும் உண்மைகள், கொஞ்சம் கற்பனை போன்றவற்றை கோர்த்து என் எழுத்துப் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட முயற்சியாக கருதிக் கொண்டு உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை எழுதி வையுங்கள்.

ராசா சொன்னது போல கதவை திறந்து வைத்து விட்டேன்.

காற்று மட்டும் வரவேண்டியதில்லை. சூறாவளி வந்தாலும் சம்மதமே?

எஸ்.கே said...

//"நான் சந்திக்கும் நபர்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்த்து பழகுவதில்லை. ஆனால் சூழ்நிலையை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை வைத்து தான் அவர்களை மதிப்பீடு செய்கின்றேன்." //
மிகவும் உண்மை! அந்த மதிப்பீடுகள்தான் நமக்கும் அவர்களுக்கும் இடையேயான உறவின் பலத்தை நிர்ணயிக்கின்றது!

எஸ்.கே said...

தங்கள் எழுத்துக்கள் என்றுமே உணர்வை தாங்கி வரும் என்பதில் ஐயமில்லை. தங்கள் எழுத்துக்களின் மீதான மாற்றுக் கருத்து சிலருக்கு ஏற்படலாம். ஆனால் அந்த மாற்றுக் கருத்தை உருவாக்குவது உங்கள் எழுத்துக்களின் வலிமைதான்!
//இன்னமும் நான் இந்த எழுத்துலகில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. //
வாழ்க்கையே ஒரு பாடசாலைதான்! வாழ்நாள் முழுவதும் நாம் கற்று கொண்டுதான் இருக்கிறோம்!
மாலைகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை! சிறப்பான இடத்தில் மட்டுமே கிடைக்கின்றது!

எஸ்.கே said...

தங்கள் எழுத்துக்களுக்கு விமர்சனம் அளிக்கும் அளவு எனக்கு அறிவும் அனுபவமும் கிடையாது. ஆனால் என்றென்றும் தங்கள் எழுத்தை ரசிக்கும் ஒரு வாசகனாக சொல்கிறேன்
தங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கட்டும்!

ரிஷபன்Meena said...

எழுத்தைப் பொறுத்த வரையில் நல்ல ஆளுமையான நடை இருக்கிறது. கதை சொல்லும் திறனும் இருக்கிறது. உணர்ச்சிகளை வார்த்தைகளால் வாசகனுக்கு கடத்தி விடவும் முடிகிறது.

ஆனால் சீரியல் பெண்ணுக்கு வருவது போன்ற வலிய தினிக்கப்படுகிற சோகம் அல்லது பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மிகையாகத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.சில இடங்களில் நாடகத்தன்மை மேலிடுகிறது.

எழுத்தில் கிடைக்கும் அனுபவத்தினால் இக்குறைகளை வரும் நாட்களில் எளிதில் சரி செய்வீர்கள் என நினைக்கிறேன்.

பின்குறிப்பு: பரவலாக வாசித்த அனுபவத்திலேயே என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். எனக்கு கதை, கட்டுரைகளை அவ்வளவு நேர்த்தியாய எழுதத் தெரியாது.

தனசேகர் said...

கொஞ்சம் எதிர்பார்த்தது போன்ற முடிவானாலும், கதையாய் முடிக்காமல் கடிதமாய் முடித்திருக்கிறீர்கள். கடிதமாக இருந்தாலும் கதையும் , கருத்தும் ( சமுதாயத்தின் நிலமை பற்றி அம்மாவின் எண்ணங்கள் ) கலந்து விறுவிறுப்பாக இருக்கிறது.

/நான் சந்தித்த மூன்று பெண்களின் வெவ்வேறு குணாதிசியங்களைப்பற்றி எழுத வேண்டுமென்று தோன்றிய எழுத்துக்கள் எதிர்பாரதவிதமாக தொடர்கதை போலவே அமைந்து விட்டதென்பது நான் திட்டமிட்டதல்ல./

எதிர்பார்த்ததைப் போலவே :) . கற்பனையிலும் நிதர்சனங்கள் கலந்தவையே நமக்குள் சுய சிந்தனைகளை வளர்த்து வெளிஉலகத்தின் மீதுள்ள நம் பார்வையை மாற்றுகிறது. பண்பாடு , கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டிற்கும் சம உரிமை , நவீனத்துவம் , முன்னேற்றம் , உலகமயமாக்கல் என்ற புதிய சூழலுக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய நூலின் வித்தியாசம் அறியாமல் சிக்கித் தவிக்கும் நமக்கு நிறையப் புரிதல்கள் தேவைப்படுகிறது.

நான் ஒன்னுமே செய்யவில்லை :). வெட்டியாய் பொட்டியில் ஃபேஸ்புக்கில் கழிக்கும் நேரத்தில், உருப்படியாய் உங்கள் பதிவையும் புக்மார்க்கில் வைத்து கதையின் அடுத்த பாகத்திற்கு எதிர்பார்த்திருந்ததைத் தவிர.

18 மாதத்தில் 260 பதிவுகள் !! ஆஹா அருமை. அனைத்துப் பதிவிகளையும் படிக்க வேண்டும். வழக்கம்போல் தொழில் கற்ற ஒரே ஒரு கலையாம் ‍ பதிவு முகவரியை காபி பேஸ்ட் செய்து மக்களுக்கு பரப்ப வேண்டும் !

புத்தகம் சிறப்பாக வர வாழ்த்துக்கள் ! என்னைப்போன்ற பலர் திருப்பூரின் அருகில் இருந்து , தொழில் செய்து வென்ற , தோற்றவர்களின் அனுபவங்கள் , தொழில் நடத்துபவர்களின் பேரத்தில் உள்ள‌ பைசாக்களின் மதிப்புகள் , அதே துணியை மேற்குலகக் கடைகளில் சீனா , கம்போடியா , ஹாய்ட்டி, பங்கலதேஷ் , பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் தயாரிப்புகளுக்கு இடையே இந்தியத் தயாரிப்புகளின் தரம் , திருப்பூருக்கும் , கரூருக்கும் (வீட்டு உபயோகத் துணிகள்) உள்ள அடக்கத்திற்கும் , விற்கும் விலைக்கும் இருக்கும் வானுயர லாபத்திற்கும் கணக்குப் போட்டுப் பார்த்து வாய்மேல் விரல் வைத்து ஆச்சரியம் கலந்து, நொந்தாலும், இதற்கான முழுப் புரிதலும் கிடைக்காமலே இருக்கிறோம். உங்கள் புத்தகம் இந்தப் புரிதல்களை பலருக்கு வழக்கும் என்று நம்புகிறேன் !

தனசேகர் said...

கொஞ்சம் எதிர்பார்த்தது போன்ற முடிவானாலும், கதையாய் முடிக்காமல் கடிதமாய் முடித்திருக்கிறீர்கள். கடிதமாக இருந்தாலும் கதையும் , கருத்தும் ( சமுதாயத்தின் நிலமை பற்றி அம்மாவின் எண்ணங்கள் ) கலந்து விறுவிறுப்பாக இருக்கிறது.

/நான் சந்தித்த மூன்று பெண்களின் வெவ்வேறு குணாதிசியங்களைப்பற்றி எழுத வேண்டுமென்று தோன்றிய எழுத்துக்கள் எதிர்பாரதவிதமாக தொடர்கதை போலவே அமைந்து விட்டதென்பது நான் திட்டமிட்டதல்ல./

எதிர்பார்த்ததைப் போலவே :) . கற்பனையிலும் நிதர்சனங்கள் கலந்தவையே நமக்குள் சுய சிந்தனைகளை வளர்த்து வெளிஉலகத்தின் மீதுள்ள நம் பார்வையை மாற்றுகிறது. பண்பாடு , கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டிற்கும் சம உரிமை , நவீனத்துவம் , முன்னேற்றம் , உலகமயமாக்கல் என்ற புதிய சூழலுக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய நூலின் வித்தியாசம் அறியாமல் சிக்கித் தவிக்கும் நமக்கு நிறையப் புரிதல்கள் தேவைப்படுகிறது.

நான் ஒன்னுமே செய்யவில்லை :). வெட்டியாய் பொட்டியில் ஃபேஸ்புக்கில் கழிக்கும் நேரத்தில், உருப்படியாய் உங்கள் பதிவையும் புக்மார்க்கில் வைத்து கதையின் அடுத்த பாகத்திற்கு எதிர்பார்த்திருந்ததைத் தவிர.

18 மாதத்தில் 260 பதிவுகள் !! ஆஹா அருமை. அனைத்துப் பதிவிகளையும் படிக்க வேண்டும். வழக்கம்போல் தொழில் கற்ற ஒரே ஒரு கலையாம் ‍ பதிவு முகவரியை காபி பேஸ்ட் செய்து மக்களுக்கு பரப்ப வேண்டும் !

புத்தகம் சிறப்பாக வர வாழ்த்துக்கள் ! என்னைப்போன்ற பலர் திருப்பூரின் அருகில் இருந்து , தொழில் செய்து வென்ற , தோற்றவர்களின் அனுபவங்கள் , தொழில் நடத்துபவர்களின் பேரத்தில் உள்ள‌ பைசாக்களின் மதிப்புகள் , அதே துணியை மேற்குலகக் கடைகளில் சீனா , கம்போடியா , ஹாய்ட்டி, பங்கலதேஷ் , பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் தயாரிப்புகளுக்கு இடையே இந்தியத் தயாரிப்புகளின் தரம் , திருப்பூருக்கும் , கரூருக்கும் (வீட்டு உபயோகத் துணிகள்) உள்ள அடக்கத்திற்கும் , விற்கும் விலைக்கும் இருக்கும் வானுயர லாபத்திற்கும் கணக்குப் போட்டுப் பார்த்து வாய்மேல் விரல் வைத்து ஆச்சரியம் கலந்து, நொந்தாலும், இதற்கான முழுப் புரிதலும் கிடைக்காமலே இருக்கிறோம். உங்கள் புத்தகம் இந்தப் புரிதல்களை பலருக்கு வழக்கும் என்று நம்புகிறேன் !

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்களது இடைச் செருகல்கள் இல்லாமல், கேட்டதை இன்னும் அப்படியே தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. இப்போ எது அந்தப் பெண் சொன்னது, எது நீங்களாக அந்தப் பெண் சொன்னதா எழுதினது என்று குழப்பமாக இருக்கிறது :)

எது ஒழுக்கம் நேர்மை என்பதில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள்.. அந்த அம்மா என்ன ஒழுக்கம் கெட்டுப் போனார் என்பது புரியவில்லை.. கணவனை விட்டு விலகி வந்து இன்னொரு ஆளுடன் வாழ்ந்ததாலா? அந்த ஆணாவது தம் மனைவியை ஏமாற்றினார்.. இந்த அம்மா யாரை ஏமாற்றினார்?

அப்படி வாழ்ந்திருக்காவிட்டால் அவருக்கு எச் ஐ வி வந்திருக்காது, இன்னும் பல ஆண்டுகள் ஜீவித்திருப்பார் என்று நீதி ஏதும் நீங்கள் சொல்ல விரும்பியிருக்கிறீர்களா?

முதல் பதிவில் பாலியல் தொழிலாளி என்று ஆரம்பித்து வைத்தீர்கள் என்று நினைக்கிறேன்.. முடிவில் அப்படி ஏதும் சொல்லவில்லையே?

தொழில் முன்னேற்றத்தில் மகளின் உறுதி மிகவும் பாராட்டத்தக்கது.. இனியாவது அவர் தன் தாயினைப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

// தன்னை உணர்ந்து தனிமையில் சாதித்த பெண்கள் வரிசையில் ரேடியம் கண்டுபிடித்த பெண்மணியைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவில் வரவில்லை. //

தனிமையில் சாதித்த பெண்மணி என்பது புரியவில்லை.. அவரும் கணவரும் ஓரளவுக்காவது இணைந்து தான் ஆராய்ச்சி செய்தார்கள்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//என் நோய் குறித்து உன்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவே வந்தேன்.//

இதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் புரியவில்லை.. தான் சுமந்த நோயினால் தன் மகளுக்கு அவர் என்ன பாதகம் செய்தார் மன்னிப்பு கேட்பதற்கு? ஒரு வேளை, தன் மகளுக்குப் போதித்தபடி தானே நடந்து கொள்ளவில்லை என்பதாலா?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஆனால் எத்தனை லாம் போட்டாலும் அவர்களின் முழுமை என்பது ஏதோவொரு வகையில் ஆண்களைச் சார்ந்து தான் இருக்கிறது. //

பெண்ணியவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. :)

அமெரிக்கப் பெண்ணொருவர் (பெண்ணியவாதி அல்ல), என்னால் ஒரு ஆணின் ஆதிக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாது.. நான் ஆண் இல்லாமலே வாழ விரும்புகிறேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்..

சங்கரியின் செய்திகள்.. said...

பகிர்விற்கு நன்றி சார்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மிருகங்களை விட கேவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் ஆணாதிக்க உலகில் ஒரு பெண்ணால் அத்தனை சீக்கீரம் வெளியே வந்து விட முடியாது.//


ஓரளவு நிஜம்.. ஆனால் எதிலும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும்..

சாவுக்கே துணியாத நிலை..


அப்படி ஒரு நிலைமைக்கு ஒரு பெண் வந்துவிட்டாளானால் , அவளை படைத்த இறைவனே வந்து தடுத்தாலும் முடியாது..

ஆக ஆணால் பெண்ணின் வளர்ச்சியை / முடிவுகளை தடுக்கலாம் என்பது ஒரு பச்சாதாப சமாதானமே...

நான் பார்த்து வளர்ந்த என் அன்னை அவர்கள் தோழிகள் எல்லாருமே அந்த காலத்திலேயே ஆண்களை சார்ந்திருக்கவில்லை... அவர்கள் செய்த காரியங்கள் ஆண் கூட செய்ய யோசிக்கக்கூடியதே..

-------

சரி இப்ப கதைக்கு :

அவர் கதர் சட்டைக்காரருடன் போனதோ எய்ட்ஸ் வந்ததோ தப்பேயில்லை.. ஆக மன்னிப்பு தேவையில்லை.....


மற்றொரு முக்கியமான விஷயம் ,

//அவசர உதவிக்காக நுழைந்த அவருக்கு சுத்தம் செய்யாத ஊசியை அவசரமாய் குத்தி இலவசமாய் எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லியை வழங்கியவர்களை என்ன சொல்வாய்?//


ஊசி மூலம் இந்த நோய் பரவாது...

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒரு பெண் தவறாக போகும்வரை மட்டுமே அவளை குத்தி குதறி எடுக்கும் இச்சமூகம்.. எப்ப அவள் பாலியல் தொழிலாளி ஆகிவிடுகிறாளோ அதற்கு பின் அவளைக்கண்டு பயப்படும் அவளை திட்டிய அதே சமூகம்..

ஏன் இந்த மாற்றம் என புரிகிறதா?..:)

இதே தான் பெண் கல்வி மூலமோ வேறு எந்த திறமை மூலமோ மேலே வந்துவிட்டால் அவளை பற்றி விமர்சிப்பதை குறைத்துக்கொள்ளும்..

நடிகையர் எந்தளவு விமர்சிக்கப்படுகிறார்களோ அந்தளவு அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..

ஏன்.?

அவர்கள் எதையும் தாங்கும் இதயம் பெற்றுவிடுகின்றனர்..அரசியலிலும் நுழைந்து மிளிர்கின்றனர்..

ஆக மறைமுகமாக பெண்ணின் சக்தி வெளிப்பட ஆணாதிக்க சமூகமே உதவுகின்றது..

( இங்கே ஆணாதிக்கம் என்பது பெண்களிடமும் உண்டு.. )

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஊசி மூலம் இந்த நோய் பரவாது...//

பரவும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆனால் பெண் என்பவளை எந்தவிதமாக பார்த்தாலும் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணுமே அன்புக்கு ஏங்குபவளாகத்தான் இருக்கிறாள். தன்னை புரிந்து கொள்ள எவராவது கிடைக்க மாட்டார்களா? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.//

நிஜமாய் இருக்கலாம்.

ஆனால் இதுவும் சில காலம் மட்டுமே..

பின்பு புரிந்துகொள்வாள் , யாரிடம் சொல்லியும் பிரயோசனமில்லை.. தன்னிடமே தேவையான எல்லா சக்தியும் இருப்பதையும், தன்னை விட எளியவருக்கு அளிக்கும் ஆறுதலில் அவள் துணிவடைகிறாள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னுடைய அசிங்க பக்கங்களை உன்னிடம் காட்டாமல் அமைதி காத்தேன். உனக்குள் இருக்கும் கோபங்கள் நியாயமானது தான்.//

இது தவறான பார்வை.. இதில்தான் ஆணாதிக்க பார்வை ஒழிந்திருப்பதாக எண்ணுகிறேன்..

இத்தகைய சிந்தனை சமூகம் வகுத்தது...

சரி தவறு என்பதை விட நன்மை தீமை.. கண்டுகொள்வதே சிறப்பு..

அந்த வகையில் மகளுக்கான நன்மை செய்ய , உயிர் வாழ இதுவே கடைசி வழியாக அவருக்கு தெரிந்திருக்கலாம்..

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு

எண்ணங்கள் 13189034291840215795 said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஊசி மூலம் இந்த நோய் பரவாது...//

பரவும்..
//

இங்கே பஆடித்து பாருங்கள்.. அக்கிருமி 20 நிமிடமே உயிரோடிருக்கும்.. அதுவும் ரத்தம் ஏற்றினால் மட்டுமே ..



http://kasadara.blogspot.com/2008/04/7.html

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆனால் 20 நிமிடத்துக்குள் , சரியாக சுத்திகரிக்கப்படாத, அல்லது முந்தைய ரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஊசியால் பரவ வாய்ப்புண்டு என சொல்லியிருக்கு..

-----------------------------------------

"பச்சை குத்திக்கறதால கூட ஹெச்.ஐ.வி. வருமாடா" ?

'ஊசி மருந்துக்குச் சொன்ன அதே பதில்தான் இதுக்கும்! உச்சிமுனைகளால் பச்சை குத்திக் கொண்டால், அப்படிப்பட்ட ஊசி இந்த நோய் இருந்த எவருக்காவது உபயோகப்படப்பட்டிருந்தால், ஹெச்.ஐ.வி. பரவ வாய்ப்பு இருக்கிறது. இதில் கவனமாயிருந்தால், பயப்படத் தேவையில்லை!'


http://kasadara.blogspot.com/2008/04/6.html

எண்ணங்கள் 13189034291840215795 said...

//அவசர உதவிக்காக நுழைந்த அவருக்கு சுத்தம் செய்யாத ஊசியை அவசரமாய் குத்தி இலவசமாய் எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லியை வழங்கியவர்களை என்ன சொல்வாய்?//

இதை திட்டமிட்டு செய்வதாய் தவறாக புரிந்துகொண்டேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஆனால் 20 நிமிடத்துக்குள் , சரியாக சுத்திகரிக்கப்படாத, அல்லது முந்தைய ரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஊசியால் பரவ வாய்ப்புண்டு என சொல்லியிருக்கு.. //

அதைத் தான் சொன்னேன்.. ஊசி மூலமாகப் பரவ வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு, ஆனால் இதர பரவும் முறைகளை விட ரிஸ்க் குறைவு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

அதைத் தான் சொன்னேன்.. ஊசி மூலமாகப் பரவ வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு, ஆனால் இதர பரவும் முறைகளை விட ரிஸ்க் குறைவு.. //

சரியே.

துளசி கோபால் said...

//என் எழுத்துப் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட முயற்சியாக கருதிக் கொண்டு உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை எழுதி வையுங்கள்.//

எழுத்துப்பயிற்சி....well said.

இனிய பாராட்டுகள்.
சில பல வரிகள் அருமையா வந்துருக்கு!

Chitra said...

இறுதி பகுதி, சற்றே நீண்டு இருந்தாலும் வாசித்து முடித்ததும் - சிந்திக்கவும் நெகிழவும் வைத்து விட்டீர்கள். பல விஷயங்களை பற்றி யோசிக்க வைத்து இருக்கீங்க. சூப்பர்!

உமர் | Umar said...

A detour from Monday morning chores. Thank you.

---

உண்மைச் சம்பவம் என்றே நினைத்துக் கொண்டு படித்ததில் சில இடங்களில், சினிமாத்தனமான சம்பவங்கள் இடம்பெற்றபோது சற்று குழப்பமாகத்தான் இருந்தது. சில விஷயங்கள் கற்பனை, சில நிஜங்கள் என்று தெளிவுபடுத்தியதும் சரிதான் என்று தோன்றிற்று.

ஒரு படைப்பு, வாசிப்பாளனிடம்/பார்வையாளனிடம் எந்தளவிற்கு vicarious feel இனைத் தோற்றுவிக்கின்றதோ அந்த அளவிற்கு வெற்றி பெற்றதாகக் கருதலாம் என்பது எனது எண்ணம். இந்தக் கதையில் எனக்கு vicarious feel ஏற்பட்டதாகவே நான் உணர்கின்றேன்.

ஒருவரது பாரத்தை இறக்கி வைப்பதற்கு உதவிய நல்லுள்ளத்திற்கு நன்றி.

இதற்கு மேலும் எழுத்து நடையைப் பற்றி பேசவும் வேண்டுமா என்ன? :-)

Unknown said...

தொடரின் முதல் பகுதியில் இருந்த அறிமுகம் , நன்று..இரண்டாம் பகுதியில் 8 பாராக்களில் இருந்த உங்களின் பார்வையை தனி பதிவாக இட்டு இருக்கலாம். இந்த பதிவில் நேராக தொடருக்குள் சென்றது நன்றாக இருந்தது.

//நீங்கள் நல்லவரா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் முயற்சித்துக் கொண்டுருப்பது மட்டும் புரிகின்றது." //

தலையை திருப்பாமல் தனக்கு பின்னால் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ளும் திறன் , பறவைகளுக்கு , அதற்கு அடுத்தபடியாக பெண்களுக்கும் இருக்கிறது.

தற்காப்புக்கு இது மிகவும் உதவி புரிகின்றது. இருந்தாலும் சில சமயங்களின் இருவரும் வேட்டையட படுவதை விதி என்று தான் சொல்ல முடியும்.

தன்னருகில் இப்பவர் எப்படிபட்டவர், என்ன நோக்கத்துடன் இருக்கிறர் என்பதை பெண் உணர முடியும். அனைவருக்கும் இது சாத்தியமே. ஆயினும் இத்திறனை பெண்கள் அதிகம் பயன் படுத்துகின்றனர். இதுவும் தற்ககாப்புக்கு பயன்படுகிறது.


எனவே நல்லவரா என் தெரியாது என வார்த்தைகளில் கூறினாலும் , தன் பாதுகாப்புக்கு பங்கம் எற்படாது என்று உணர்ந்தாலே அவர் உஙகளிடம் பேசுகிறார்.

தன் தாயை புறக்கணித்தது சரியான செயல் அல்ல என்பது என் பார்வை. த்ன் நிலை உயரும் போது தாயையும், மனம் எற்றுக்கொண்டால் புதிய தந்தையையும் தன்னுடன் வைத்து பராமரித்து இருந்தால் சொல்லவியலாத மன நிம்மதி வாழ்நாள் முழுமைக்கும் அப்பெண்ணுக்கு கிட்டி இருக்கும். தன் கணவன் சரியில்லை என்றால வேறு ஆணை துணையாக தெரிந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கும் உள்ளது,

ஆனால் பெண் அப்படி செய்தால் பல ஆண்கள் வீட்டில் ஒரு மனைவி வெளியில் வேறு ஒரு துணைவி என இருக்க முடியாது. எனவே என்ன நடந்தாலும் கணவனுடன் இருப்பது தான் ஒழுக்கம் என கற்பித்து உள்ளர்கள். இந்த ஆணதிக்க பார்வை இப்பெணணுள்ளும், இவரின் தாயின்னுள்ளும் ஆழமாக இருப்பது தான் இவர் தாயை புறக்கணிக்கவும் , தாய் திரும்ப திரும்ப மன்னிப்பு கேடகவும் காரணம்.

Unknown said...

// தன்னை உணர்ந்து தனிமையில் சாதித்த பெண்கள் வரிசையில் ரேடியம் கண்டுபிடித்த பெண்மணியைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவில் வரவில்லை. //
பெண்களின் கண்டுபிடிப்புகள் பல உள்ளன,ஆனால் அவற்றிக்கு விளம்பரம் கிடைக்கவில்லை அவ்வளவே.

//"எந்த நிறுவனத்தில் நுழைந்தாலும் என் உள்ளாடை முதல் தெரியும் இடுப்பு வரைக்கும் அளவெடுக்கும் வரைக்கும் ஆண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன். //

பொருளாதார ரிதியில் அபபெண் பெரு வெற்றி பெற்றலும், முழுவாழ்கை என வரும்போது வெற்றிபெற்றார் என கருத என்னால் இயலாது. தாய் & தந்தை, குறைந்த பட்சம் தாயேனும் அருகில் இருந்து இப்பெண்ணுக்கு ஒரு குடும்பத்தை எற்படுத்தி இருந்தால் தேவையில்லாத பார்வை கேள்வி அனைத்தையும் தவிர்த்து இருக்கலாம்.

ஆனால் முடிவு எடுப்பதில் அவசரமும், ஆராயாமையும் , தான் எடுத்த முடிவு தவறு எனபது புரிந்தாலும் அதை மாற்றிகொள்ள் மறுப்பதும் சிறிய விஷ்யங்களுக்கு பெரிய அளவில் வளர்பதுவும் பெண்களின் இயல்பு தான். தன் பிரச்சன்னைகளை மற்றவரிடம் பேசுவதை கவுரவ குறைவாக பலர் நினைக்கின்றனர். இது பொதுவில் சரி, ஆனால் உண்மையான அக்கறை இருப்பவரிடம் பேசினால் நல்ல ஆலோசனை பெறலாம்.

பெண்களுக்கு ஆண்களால் மட்டுமல்ல பெண்களுக்கு பெண்க்ளாலும் ஆபத்து உண்டு. இது போல் ஆண்களுக்கு பெண்க்ளாலும் ஆபத்து உண்டு.

ஆனால் இது போன்ற பதட்டமான உறவு ஆண்களுகிடையில் பெறும்பாலும் இருப்பது இல்லை.எனவே தனியாக இருக்கும் பெண்ணுக்கு இத்தகைய ஆலோசனைகள் கிடைப்பது அரிதுதான்.

Unknown said...

//பருவநிலை பொறுத்து புணர்ந்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடும் மிருகத்தையும் மனித இனத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை. வெவ்வேறு ஆசைகளுக்கு அடிபணிந்து அலங்கோல வாழ்க்கை வாழும் பெண்கள் ஒரு பக்கம். //

பெண்ணுக்கு ஆண் துணை தேவை, ஆணுக்கு பெண் துணை தேவை, இதை இயற்கை/கடவுள் உணர்ந்தே மனித ஆண் பெண் பிறப்பு விகிததை 50:50 ஆக வைத்து உள்ளார்.

காமம் என்பது மிருகங்களுக்கு சந்தியை பெருக்கும் வழி அவ்வளவே. எனவே குட்டி வளர சரியான காலத்தில் மட்டும் காமத்தில் ஈடுபடும் ,இது மாபெரும் படைப்பளியான இறைவனின் /இயற்கையில் கைவண்ணம். .

ஆனால் மனிதனின் காமம் தியான நோக்கில் தன்னை அறிதல், இறைவனில் கலத்தல் என்ற நோக்கிலானது. எனவே பருவ கால கட்டுபாடு எதையும் கடவுள் வைக்கவைல்லை.எனவேதான் விலங்குகளில் இப்படி 50:50 என்ற ஆண் பெண் விகிதம் இருப்பது இல்லை. மனித இனத்தின் வரமும் , சாபமும் இதுதான். "மனிதன் சுதந்திரமாக வாழும்படி சபிக்கபட்டுளளான்.

பார்க: http://kavithai07.blogspot.com/2010/12/blog-post.html

எழுத படிக்க, பேச, சமுதாயத்தில் சுமூகமாக இயங்க என்ன எல்லாவற்றிற்கும் குழந்தைகளை பழக்குகிறோம், ஆனால் காமத்தை பற்றி சரியான புரிதலை அவர்களுக்கு கொடுத்தாலன்றி , ஆரோக்கியமான நிம்மதியான சமுதாயத்தை உருவக்க முடியாது.

நாம் வளர் இளம் பருவத்தில் இத்தகைய புரிதல் பெற இல்லதவர்கள் பின்னளில் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றாலும் தனிப்பட்ட வாழ்கையில் தோல்வியடய இதுவும் காரணமாகிறது, பழங்காலத்தில் இத்தகைய கல்வி இருந்தது என்பதற்கு பல ஆதரங்களை காட்டலம்...

// /ஆனால் எத்தனை லாம் போட்டாலும் அவர்களின் முழுமை என்பது ஏதோவொரு வகையில் ஆண்களைச் சார்ந்து தான் இருக்கிறது. //

பெண்ணியவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. :)

அமெரிக்கப் பெண்ணொருவர் (பெண்ணியவாதி அல்ல), என்னால் ஒரு ஆணின் ஆதிக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாது.. நான் ஆண் இல்லாமலே வாழ விரும்புகிறேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்..//
இயற்கையை எதிர்த்து இவவாறு செய்யப்டும் முயற்சிகள் எல்லம் தற்கொலைக்கு சமம். அவ்வாறு செய்யாலாம் ஆனால் பின்னொருநாள் நம் வாழ்கை திரும்பி பார்க்கும்போது வறட்டு கொள்கைகாக வாழ்கையை பலியிட்டோம் எனபது புரியும் ஆனால் அப்போது எதுவும் செய்ய முடியாது. மேலும் எல்லாவற்றையும் பெற்று அனுபவிப்பர்களை பார்த்தால் நம்மையும் அறியாமல் வரும் பொறாமை அவர்களுக்கும், நமக்கும் திமை தான் செய்யும்.





----------------
ஜோதிஜி, பதில் இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் அப்படி எழுதினால் அதுவே ஒரு நீள் பதிவாகிவடும்போல...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
http://thavaru.blogspot.com/ said...

பெண்கள் ,குழந்தைகள்,கொஞ்சம் சுதந்திரம் என்று தொடங்கி பெண்கள் பற்றிய தங்களுடைய அனுபவம் தாங்கள் படித்தது கேட்டதை வைத்து ஏதோ ஒன்றை சொல்லவருகின்றீர்கள் என நினைத்து தங்களுடைய பதிவுகளை கவனமாய் பின்தொடர கடைசியில் கதையில் முடித்தது ஏமாற்றம் அன்பின் ஜோதிஜி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//இயற்கையை எதிர்த்து இவவாறு செய்யப்டும் முயற்சிகள் எல்லம் தற்கொலைக்கு சமம்.//

மன்னிக்கணும்.. இயற்கையே அவங்களை அப்படித் தான் படைச்சிருக்குன்னு நினைக்கறேன்.. ஆண் சார்பில்லாமல் வாழ அவரால் முடிகிறது.. சந்தோஷமாக இருக்கிறார்.. ஆணோடு வாழ்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் தற்கொலை செய்து இருந்திருப்பார்.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிங்க.. அவருடையது வறட்டுக் கொள்கையல்ல.. அவருக்கு குழந்தையும் உண்டு..

இளங்கோ said...

வைராக்கியம் தானே ஒரு மனிதனை மேலே கொண்டு செல்கிறது.

//மரணத்தினால் பாவங்கள் அழியும் அந்த
மரணத்தினால் பல சாபங்கள் தீரும்... //

நானும் பல முறை கேட்டிருக்கிறேன், கண்களில் நீர் கொட்ட வைக்கும் பாடல்.

Ravichandran Somu said...

பெரும்பாலும் திருப்பூர்,சமுதாய பிரச்சினைகள் பற்றிய பதிவுகளை படித்து வந்த தங்கள் தளத்தில் இந்த தொடர் மூலம் ஒரு வித்யாச அனுபவம். ஒரு சில வரிகள் அற்புதம்...அட்டகாசம்! ஒரு தேர்ந்த இலக்கியவாதியின் நடை. வாழ்த்துகள்!

குறை என்று சொன்னால்... உங்கள் தொடரில் படித்துக்கொண்டு வரும்போது அவ்வப்போது சற்று தடம் புரண்டு தாங்கள் சொல்லும் சில கருத்துகள்... இது படிக்கும் போது தொடரின் சுவாரசியத்திற்கு தடை போடுகிறது. எ.கா - இரண்டாம் பகுதி ஆரம்ப பத்திகள்.

//அதுவும் நான் எழுதியுள்ள புத்தகம் டாலர் நகரம் என்ற புத்தகத்தில் பெற்ற அனுபவங்கள் கொடுத்த தாக்கம் என்பது என் வாழ்வில் மறக்க முடியாது.

இதன் காரணமாகவே இந்த புத்தகம் மார்ச் மாதத்தில் வெளிவரும் என்று நம்புகின்றேன்.

அதன் பிறகே அடுத்த புத்தகமான தமிழீழம் பிரபாகரன் கதையா? என்ற நீண்ட நெடிய ஈழ வரலாறு (ஏறக்குறைய 600 பக்கங்கள் வரக்கூடியது) வரும் வாய்ப்புள்ளது.//

இரண்டு புத்தகத்திற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள். தங்களை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் எனக்கு!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ஜோதிஜி said...

ரவி என் நண்பேண்டா.........

உண்மையிலேயே நீங்க சொன்ன பிறகு தான் அந்த பகுதியைப் பார்த்தேன். புத்தகத்தின் போது தொடக்கத்தில் உள்ள பகுதியை இணைத்துக் கோர்த்த போது வெட்டி சிதைத்து சிதைத்து சின்னாபின்னாமாகியும் அதைப் போலவே இதிலும் வந்துள்ளது என்பதை புரிந்துகொண்டேன்.

இலக்கியவாதியின் நடையா? வேண்டாம் ரவி... அழுதுடுவேன்.

ஜோதிஜி said...

இளங்கோ நீங்க கோவை என்பதால் இந்த இடத்தில் அதிகம் கேட்டுருக்கக்கூடும். பொதுவாக சாவு குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அதுவொரு விடுதலை என்பதாக கருதிக் கொள்வதுண்டு. கலந்து கொண்ட அந்த நிகழ்வில் கூட மற்ற விசயங்களை, கலந்து கொண்ட பெரிய மனித மனங்களை கவனமாக கவனித்துக் கொண்டே வந்தேன்.

ஆனால் பிணம் அந்த நடைமேடையில் வைத்து உள்ள சென்ற போது ஒலித்த பாடல் வரிகளைக் கேட்டு....... நானும் சாராசரி மனிதன் என்பதை என் கண்ணீர் உணர்த்தி விட்டது.

இரண்டு நாட்கள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஜோதிஜி said...

எல் போர்டு

நான் நம்பவே மாட்டேன். என்ன போடு போட்டு இருக்கீங்க. கண்ட்டெய்னர் ஓட்டும் ட்ரைவர் லாவகம் போல..... அடேங்கப்பா.... ஒவ்வொரு வரிகளையும் கவனமாக கவனித்து உள் வாங்கிய விதம் ஆச்சரியம். நல்ல வேளை கதவை திறந்து வைத்தது நல்லதாக போய் விட்டது. இல்லாவிட்டால் சாந்தியுடன் நடத்திய ஆரோக்கிய விவாதம் கிடைக்காமல் போயிருக்கும்.

நீங்களும் நம்முடைய ஜோதியில் ஐக்கியமான பெண் என்பதை உங்கள் முகப்பு பார்த்து என்பதை வைத்து உணர்ந்து கொண்டேன்.

பாலியல் தொழிலாளி என்பவள் நிரந்தரமாக அதையே தொழிலாக செய்பவர் மட்டும் தானா? பதிவில் சில இடங்களில் லாவகமான முறையில் தாண்டி வந்துள்ளேன். ஏற்கனவே 18+ வலைபதிவுகளில் கணஜோராக ஓடிக் கொண்டுருக்க நாமும் அதையே ஏன் விலாவாரியாக விவரிக்க வேண்டாம் என்ற நோக்கத்தில். அத்ந லாவகத்தை யோகேஷ் திறமையாக கண்டு பிடித்தார். அப்புறம் ரேடியம் கண்டு பிடித்த பெண்மணி குறித்த விசயத்தில் நிச்சயம் நீங்கள் சொன்னபடி தனிமை என்ற வார்த்தையை எழுதாமல் இருந்திருக்கலாம் என்று என்னை யோசிக்க வைத்தமைக்கு நன்றி. அப்புறம் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு முக்கிய காரணம் இறப்பின் தொடக்கப் பாதையில் இருக்கும் தாய் தன்னைப் பற்றி புரிய வைக்க எடுத்த முயற்சியாக பார்க்கலாமே? சமூகம் சொல்லும் தவறான பாதையின் விளைவு மகளை பாதிக்க விட்டுப் போன தொடர்புக்கு நாமே காரணம் என்ற குற்ற உணர்ச்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஜோதிஜி said...

தவறு உங்கள் கூற்று உண்மை தான். சிறுவயதில் நாம் எழுதப் பழகிய நாலுவரி கோடு போட்ட நோட்புக் போல இதை எடுத்துக் கொள்ளுங்கள். காரணம் நான் பழகிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். காரணம் ஈழம் என்பது அதன் குறித்த புரிதல்களை மொத்த வரலாற்றில் உள்ள எதிர்மறை நியாயங்களை சரியான முறையில் உலகத்திற்கு முடிந்து வரைக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதில் அதி தீவிர எண்ணத்துடன் இருக்கின்றேன். என்னுடைய எழுத்துலக பல தவறுகள் இது போன்ற சூழ்நிலையில் தான் நான் புரிந்து கொள்ள முடியும்........ முடிந்தது.

விடாமல் ஓடி வந்தமைக்கு நன்றி நண்பா.

ஜோதிஜி said...

வினோத் இரண்டு எழுத்தில் ஒவ்வொரு பதிவுக்கும் பதில் கொடுத்து விட்டு இந்த அளவிற்கு போட்டு தாக்குவீங்கன்னு நினைக்கவே இல்லை. உங்கள் எழுத்துக்ளை விமர்சிக்க நான் இன்னமும் என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது மட்டும்.......

இயற்கையை எதிர்த்து இவவாறு செய்யப்டும் முயற்சிகள் எல்லம் தற்கொலைக்கு சமம். அவ்வாறு செய்யாலாம் ஆனால் பின்னொருநாள் நம் வாழ்கை திரும்பி பார்க்கும்போது வறட்டு கொள்கைகாக வாழ்கையை பலியிட்டோம் எனபது புரியும் ஆனால் அப்போது எதுவும் செய்ய முடியாது.

நான் சந்தித்த இன்று வரையிலும் தொடர்பில் உள்ள போர்ச்சுகல் பெண்மணி இதன் உதாரணமாக இருக்கிறார். கழிவிரக்கம், சுயபச்சாதாபம் போன்றவற்றின் மறு உருவம். அவர் சிறுவயதில் எடுத்த பல தவறான முடிவுகளால் 80 வயது அம்மாவை நம்பி அவர் சம்பாத்தியத்தை நம்பி இன்று வரை தத்தியாக வாழ்ந்து கொண்டுருக்கிறார். அவரைப் பற்றி ஒரு பதிவே எழுதலாம்.

ஜோதிஜி said...

கும்மி ராசா உங்கள் பெயர் என்ன தங்கம்?

நீங்க ரொம்ப எதார்த்தமாக நம்ம அப்துல்லா அண்ணன் போல மனதை திறந்துருக்கீங்க. எனக்கே சற்று குழப்பாகமாகவே இருந்தது. நம்மால் ஒரு தாக்கத்தை உருவாக்க முடியுமா? என்று.

போட்ட மாலையை உங்களுக்கே போட்டு விடுகின்றேன். முடிந்தால் கடை திறந்து ஜெயிக்க காத்திருக்கும் அருண் என்ற தொழில் அதிபருக்கு போட்டு விடுங்கள்.

உங்கள் விமர்சனத்தைப் பார்த்து இன்னமும் என்னை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகின்றேன். நன்றிங்க.

ஜோதிஜி said...

சாந்தி உங்கள் எழுத்துக்களும், பல தளங்களில் நீங்கள் கொடுக்கும் பின்னோட்டங்களும் குறிப்பாக உங்கள் தைரியமும் நான் அறிந்ததே.......

நிறைய விசயங்களைப் நான் ஆதாரப்பூர்வமாக இங்க எடுத்து வைக்க முடியும். என் பார்வையில் பெண்கள் என்பவர்கள் இன்னமும் தன்னை உணராதவர்கள் என்பதாகத் தான் கருதுகின்றேன்.

நீங்கள் சொன்ன நடிகை என்ற விசயத்தில் நான் இன்னமும் சிறுவயது முதல் இன்று வரைக்கும் ஆச்சரியமாய் பார்க்கும் ஒரே நடிகை விஜயசாந்தி மட்டுமே. காரணம் அவர் அமிஞ்சிக்கரை சாந்தியாக இருந்த வாழ்க்கை முதல் இன்று தெலுங்கானா பகுதியில் ஒரு அரசியல் தலைவியாக இருக்கும் வரைக்கும் அவரின் பழைய அழுக்குகளை நான் நினைத்துப் பார்ப்பதில்லை. அவரை ஒரு உண்மையான தைரியமான பெண்ணாகத்தான் பார்க்கின்றேன். ஆனால் எத்தனை பேர்களை இப்படிச் சுட்டிக் காட்ட முடியும்.

தமிழ்நாட்டில் கொஞ்சம் சொல்ற அளவிற்கு ஷீலா ராணி சுங்கத், பிரேமானாந்தாவுக்கு தண்டனை கொடுத்த நீதித்துறை பானுமதி, காவல்துறை அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், டெல்லி முதலமைச்சர் பெண்மணி, அருந்ததி ராய், தஸ்லீமா நஸ்ரின் இன்னமும் யோசிப்பில் வராத ஆனால் இரண்டு கை விரல்களுக்கு அடங்கிப் போய்விடுகின்ற பல பெண்கள் தான் எனக்குத் தெரிகிறார்கள்.

நீங்கள் தொடர்ந்து வந்தமைக்கு நன்றி. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா என்ற வரிக்கு என் பார்வையில் குறைவான பெண்கள் தான் தெரிகின்றார்கள். பாதி பேர்களுக்கு சுய பாதுகாப்பு முக்கியம். மீதிப் பேர்களுக்கு சமூகம் குறித்து பயம்.

ஜோதிஜி said...

சித்ரா புரிந்து கொண்டமைக்கு என் வாழ்த்துகள் .

துளசி கோபால்

சில பல வரிகள் அருமையா வந்துருக்கு. டேய் கணேசா டீச்சர் 35 மார்க்கில் ஜஸ்ட் பாஸ் போட்டு அடுத்த வகுப்பு அனுப்பியிருக்காங்க. பார்த்து இனிமேலாவது சுதாரிப்பா கத்துக்கடா .......

ஜோதிஜி said...

சங்கரி செந்தில் என்ன எப்ப பார்த்தாலும் ஏமாத்திக்கிட்டேயிருக்கீங்க............

ரிஷபன் மீனா நீங்கள் ஆண் என்று போட்டுருந்தாலும் சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது. என்ன இப்படி சொல்றீங்க. வலையுலக விமர்சனத்தை படித்துப் பாருங்க. எத்தனை பேர்களால் ஆளுமையான விமர்சனத்தை உங்களைப் போல் தைரியமாக நினைத்த விசயத்தை கொடுக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க.....

எழுதுவதை விட விமர்சிப்பது கடினம். அதில் உங்களுக்கு என் பார்வையில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்.

ஜோதிஜி said...

எஸ் கே தொடர்ந்து என் பின்னால் வந்தமைக்கு முதலில் நன்றி. உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஹாலிவுட் பாலாவுக்குத் தான் நன்றியை முழுமையாகச் சொல்ல வேண்டும். உங்கள் சூழ்நிலையில் நான் இருந்தால் இந்த அளவிற்கு யோசிப்பேனா என்பது குறித்துக் கூட என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. என் பார்வையில் நீங்க ஆயிரத்தில் ஒருவன். அம்பானி என்ன சொல்றாரு?

vinthaimanithan said...

ஜோதிஜி! வாழ்த்துக்கள் முதலில்... நல்ல கதைசொல்லி ஆனதற்கும், பின்னூட்ட மட்டுறுத்தலை நீக்கியதற்கும்.

ஆச்சர்யம் கலந்த வரவேற்பு... 'சீரியல் அழுகைத் தமிழ்த்தாய்மார்'த்தனமான உச்சுக்கொட்டல்கள் இல்லாமல் ஆரோக்கியமான விவாதங்களுடன் கூடிய பின்னூட்டங்களுக்கு... குறிப்பாக சகோதரர் ரிஷபனுக்கும் சகோதரி எல் போர்ட் பி சீரியஸ் (சந்தனா என்று நினைக்கிறேன் சரியா?) அவர்களுக்கும். நான் சொல்ல வேண்டும் என நினைத்ததை இருவருமே சொல்லி விட்டார்கள்.

ஒரு கதைசொல்லியாகப் பரிணமித்துவரும் அதேநேரத்தில் சில இடங்களில் தடுமாறி இருக்கிறீர்கள். ( இந்த இடத்தில் ரிஷபனின் பின்குறிப்பு வரிகள் எனக்கும் பொருந்தும்) நாயகி தன் தாயாரை அறிமுகப் படுத்தும் போது 'பாலியல் தொழிலாளி' என்ற முன்னுரையுடன் துவங்குகிறாள். கதையில் அவள் ஒரு பாலியல் தொழிலாளியாக எங்குமே இருக்கவில்லை... ஒருவேளை தாலிகட்டாமல் இன்னொருவரின் விருப்பத்திற்கிணங்கி அவரோடு வாழ்தல் பாலியல் தொழில் என்று எண்ணி விட்டீர்களா? I'm sorry jothiji.

அந்தத் தாய் மன்னிப்புக் கேட்க வேண்டிய இடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. தனக்கான நியாயங்களுக்கு உட்பட்டு சமூகத்தின் அடிப்படை அறங்களைச் சிதைக்காத வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் எவரும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.

Anyhow, வாழ்த்துக்கள் ஜி! இன்னும் நிறைய கதைகளை உயிர்ப்போடு படைப்பீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன்...

ராஜாராமன்.

vinthaimanithan said...

ஒரு சிறிய சம்பவம் ஞாபகம் வருகிறது. இந்திராகந்தியைப் பேட்டி எடுத்த ஒரு நிருபர்(பெண்) பேட்டியைக் கட்டுரையாக எழுதும்போது " அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த அதே நேரம் மேஜையில் பொருட்களை சரி செய்வது, மேஜை விரிப்பை சுருக்கம் நீக்கி நீவி வைப்பது போன்ற சிறு வேலைகளைச் செய்தபடியே இருந்தார். நாட்டின் தலைவியாய் இருந்தாலும் மிகச்சிறந்த இல்லத்தரசியாகவும் அவர் தன் கடமைகளைச் செய்துகொண்டே இருக்கிறார்" என்பதாக எழுதி இருந்தார். "நீ சாதிக்கிறாயோ இல்லையோ, முதலில் நல்ல குடும்பத்தலைவியாக இரு" என்பது பெண்ணுக்குச் சமூகம் விதிக்கும் முதல் கட்டுப்பாடு.

யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. என் வாழ்க்கையின் நன்மைதீமைகள் என் கையில் என்று நின்ற அந்த அம்மாவின் பாத்திரம் மன்னிப்புக் கேட்கும் அளவு குற்ற உணர்வை அடைவது சமூகம் தன் கடுங்கோட்பாடுகளின் ஊடே அடைந்த வெற்றி என்பதாகவே தோன்றுகிறது. அதே சமயம் சமூகத்தின் அடிப்படை இயங்கியல் விதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மனம் போன போக்கில் வாழும் பிறவிகளும் நினைவில் வந்து தொலைக்கின்றது. ஹ்ஹ்ம்ம்ம்... யதார்த்தம்...

Seiko said...

கதையின் எழுத்து நடை அருமை. வாழ்த்துக்கள் ஜோதிஜி.
ஐந்தாம் பகுதியில் நாகமணி கையில் எடுத்த கடிதம், கடைசிப்பகுதியில் உங்கள் கையில்...
மறுபடியும் எது லைவ், எது ஃப்ளாஷ்பேக் தெரியவில்லை. புதிய உத்தி!?
முக்கியமான ஒரு விசயம்... கடைசியில் அந்த அம்மாவின் கடிதத்திற்குப்பிறகு, நாகமணி அம்மாவைப்பற்றி என்ன நினைத்தார்?

ஹேமா said...

ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சூழல் மாற சந்தர்ப்பங்களே நிறைவான பங்கை வகிக்கின்றன.அவள் தப்பான வாழ்க்கைக்கு வரம் கேட்டு வந்தவளல்ல.அல்லது பரம்பரைத் தொழிலை வளர்க்க நினைப்பவளுமல்ல.
புரிந்துகொள்வதுதான் சிரமம் !

தாராபுரத்தான் said...

வரிக்குவரி வாழ்க்கை அனுபவங்கள்.ஏஅப்பா..நன்றிங்க என்னையும் நினைவுபடுத்தியமைக்கு.

தனசேகர் said...

கொஞ்சம் எதிர்பார்த்தது போன்ற முடிவானாலும், கதையாய் முடிக்காமல் கடிதமாய் முடித்திருக்கிறீர்கள். கடிதமாக இருந்தாலும் கதையும் , கருத்தும் ( சமுதாயத்தின் நிலமை பற்றி அம்மாவின் எண்ணங்கள் ) கலந்து விறுவிறுப்பாக இருக்கிறது.

/நான் சந்தித்த மூன்று பெண்களின் வெவ்வேறு குணாதிசியங்களைப்பற்றி எழுத வேண்டுமென்று தோன்றிய எழுத்துக்கள் எதிர்பாரதவிதமாக தொடர்கதை போலவே அமைந்து விட்டதென்பது நான் திட்டமிட்டதல்ல./

எதிர்பார்த்ததைப் போலவே :) . கற்பனையிலும் நிதர்சனங்கள் கலந்தவையே நமக்குள் சுய சிந்தனைகளை வளர்த்து வெளிஉலகத்தின் மீதுள்ள நம் பார்வையை மாற்றுகிறது. பண்பாடு , கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டிற்கும் சம உரிமை , நவீனத்துவம் , முன்னேற்றம் , உலகமயமாக்கல் என்ற புதிய சூழலுக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய நூலின் வித்தியாசம் அறியாமல் சிக்கித் தவிக்கும் நமக்கு நிறையப் புரிதல்கள் தேவைப்படுகிறது.

நான் ஒன்னுமே செய்யவில்லை :). வெட்டியாய் பொட்டியில் ஃபேஸ்புக்கில் கழிக்கும் நேரத்தில், உருப்படியாய் உங்கள் பதிவையும் புக்மார்க்கில் வைத்து கதையின் அடுத்த பாகத்திற்கு எதிர்பார்த்திருந்ததைத் தவிர.

18 மாதத்தில் 260 பதிவுகள் !! ஆஹா அருமை. அனைத்துப் பதிவிகளையும் படிக்க வேண்டும். வழக்கம்போல் தொழில் கற்ற ஒரே ஒரு கலையாம் ‍ பதிவு முகவரியை காபி பேஸ்ட் செய்து மக்களுக்கு பரப்ப வேண்டும் :)!

புத்தகம் சிறப்பாக வர வாழ்த்துக்கள் ! என்னைப்போன்ற பலர் திருப்பூரின் அருகில் இருந்து , தொழில் செய்து வென்ற , தோற்றவர்களின் அனுபவங்கள் , தொழில் நடத்துபவர்களின் பேரத்தில் உள்ள‌ பைசாக்களின் மதிப்புகள் , அதே துணியை மேற்குலகக் கடைகளில் சீனா , கம்போடியா , ஹாய்ட்டி, பங்கலதேஷ் , பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் தயாரிப்புகளுக்கு இடையே இந்தியத் தயாரிப்புகளின் தரம் , திருப்பூருக்கும் , கரூருக்கும் (வீட்டு உபயோகத் துணிகள்) உள்ள அடக்கத்திற்கும் , விற்கும் விலைக்கும் இருக்கும் வானுயர லாபத்திற்கும் கணக்குப் போட்டுப் பார்த்து வாய்மேல் விரல் வைத்து ஆச்சரியம் கலந்து, நொந்தாலும், இதற்கான முழுப் புரிதலும் கிடைக்காமலே இருக்கிறோம். உங்கள் புத்தகம் இந்தப் புரிதல்களை பலருக்கு வழக்கும் என்று நம்புகிறேன் !

தனசேகர்

தனசேகர் said...

கொஞ்சம் எதிர்பார்த்தது போன்ற முடிவானாலும், கதையாய் முடிக்காமல் கடிதமாய் முடித்திருக்கிறீர்கள். கடிதமாக இருந்தாலும் கதையும் , கருத்தும் ( சமுதாயத்தின் நிலமை பற்றி அம்மாவின் எண்ணங்கள் ) கலந்து விறுவிறுப்பாக இருக்கிறது.

/நான் சந்தித்த மூன்று பெண்களின் வெவ்வேறு குணாதிசியங்களைப்பற்றி எழுத வேண்டுமென்று தோன்றிய எழுத்துக்கள் எதிர்பாரதவிதமாக தொடர்கதை போலவே அமைந்து விட்டதென்பது நான் திட்டமிட்டதல்ல./

எதிர்பார்த்ததைப் போலவே :) . கற்பனையிலும் நிதர்சனங்கள் கலந்தவையே நமக்குள் சுய சிந்தனைகளை வளர்த்து வெளிஉலகத்தின் மீதுள்ள நம் பார்வையை மாற்றுகிறது. பண்பாடு , கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டிற்கும் சம உரிமை , நவீனத்துவம் , முன்னேற்றம் , உலகமயமாக்கல் என்ற புதிய சூழலுக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய நூலின் வித்தியாசம் அறியாமல் சிக்கித் தவிக்கும் நமக்கு நிறையப் புரிதல்கள் தேவைப்படுகிறது.

நான் ஒன்னுமே செய்யவில்லை :). வெட்டியாய் பொட்டியில் ஃபேஸ்புக்கில் கழிக்கும் நேரத்தில், உருப்படியாய் உங்கள் பதிவையும் புக்மார்க்கில் வைத்து கதையின் அடுத்த பாகத்திற்கு எதிர்பார்த்திருந்ததைத் தவிர.

18 மாதத்தில் 260 பதிவுகள் !! ஆஹா அருமை. அனைத்துப் பதிவிகளையும் படிக்க வேண்டும். வழக்கம்போல் தொழில் கற்ற ஒரே ஒரு கலையாம் ‍ பதிவு முகவரியை காபி பேஸ்ட் செய்து மக்களுக்கு பரப்ப வேண்டும் :)!

புத்தகம் சிறப்பாக வர வாழ்த்துக்கள் ! என்னைப்போன்ற பலர் திருப்பூரின் அருகில் இருந்து , தொழில் செய்து வென்ற , தோற்றவர்களின் அனுபவங்கள் , தொழில் நடத்துபவர்களின் பேரத்தில் உள்ள‌ பைசாக்களின் மதிப்புகள் , அதே துணியை மேற்குலகக் கடைகளில் சீனா , கம்போடியா , ஹாய்ட்டி, பங்கலதேஷ் , பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் தயாரிப்புகளுக்கு இடையே இந்தியத் தயாரிப்புகளின் தரம் , திருப்பூருக்கும் , கரூருக்கும் (வீட்டு உபயோகத் துணிகள்) உள்ள அடக்கத்திற்கும் , விற்கும் விலைக்கும் இருக்கும் வானுயர லாபத்திற்கும் கணக்குப் போட்டுப் பார்த்து வாய்மேல் விரல் வைத்து ஆச்சரியம் கலந்து, நொந்தாலும், இதற்கான முழுப் புரிதலும் கிடைக்காமலே இருக்கிறோம். உங்கள் புத்தகம் இந்தப் புரிதல்களை பலருக்கு வழக்கும் என்று நம்புகிறேன் !

தனசேகர்

ஜோதிஜி said...

தனசேகர் விமர்சனம் தராமல் படிக்கும் பல பேர்களின் வார்த்தைகள் அவர்களின் அக்கறை, மற்றும் ஆளுமையான பார்வைகளை உங்களின் இந்தவிமர்சனத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக நான் மனிதல் வைத்திருந்த விசயத்தை தெளிவாக புரிந்து கொண்டமைக்கு நன்றி. கதை கொஞ்சம் செய்திகள் பலப்பல. நன்றி நண்பா.

நானும் புத்தகம் எந்த விதமான பாதிப்பை அல்லது புரிதல்களை உருவாக்கும் என்ற ஆர்வத்துடன் தான் எதிர்பார்த்து காத்துருக்கின்றேன். நன்றி தனசேகர்.

ஜோதிஜி said...

நன்றி ஹேமா.

நிறைய சந்தர்ப்பங்கள் குறிப்பாக பெண்களுக்கு அமைகின்றது. இது தான் உண்மையும் கூட. சில தினங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு வயதான தாய் (கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்பவர். கணவன் கழிப்பறையைச் சுத்தம் செய்பவர்)
சந்தித்தேன். அவர்கள் இருவரின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் கடைபிடித்துக் கொண்டுருக்கும் ஒழுக்க வாழ்க்கையையும் சீக்கீரம் எழுதுவேன். அவர்கள் ஒரு முன் உதாரணம்.

ஜோதிஜி said...

நாகமணி அம்மா குறித்த தவறான பார்வையை விட்டு வெளியே வந்து விட்டார் சிகோ. அம்மாவின் சூழ்நிலையை புரிந்து கொண்டார். தன்னுடைய சூழ்நிலையில் அம்மாவின் அருகே இல்லாத நிலை குறித்து அவருக்குள் ஏராளமான சுயபச்சாதாபம் கழிவிரக்கம் வருத்தங்கள் நிறைய இருந்தது. ஆனால் அம்மா மூலம் உணர்ந்த நல்ல கெட்ட விசயங்களை தன்னுடைய வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களாக மாற்றிக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். குறிப்பாக சமூகம் குறித்த புரிந்துண்ரவை குழப்பம் இல்லாமல் தனக்குள் வைத்து உள்ளார்.

பலரும் மின் அஞ்சல் மூலமாக இந்த விமர்சனத்தின் மூலமாக வலுக்கட்டாயமாக திணித்த ஒரு நெடுந்தொடர் சோக அபத்தம் இருப்பதாக சொல்லியுள்ளார்கள். மொத்தமாக படித்த போது எனக்கும் அது போன்று தான் தெரிகின்றது. குறிப்பாக இநத கடிதம் அந்த உணர்வை பலருக்கும் மேலோங்கி இருக்கச் செய்துள்ளது. கும்மி சொன்னது போல ஒரு விதமான உணர்வுகளை ஒவ்வொருவருக்கும் உருவாக்க சில செயற்கையான காட்சிகள் உதவும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
எதையும் வலிய நான் திணிக்கவில்லை. இயல்பாகவே அமைந்து விட்டது.

ஜோதிஜி said...

தாரபுரத்தான் அய்யா

உங்கள் மொத்த வாழ்க்கை அனுபவங்களை ஒப்பிடும் போது நான் குறிப்பிட்டது பெரிய விசயம் அல்ல. உங்கள் அனுபவ வாழ்க்கை வருடங்கள் மட்டும் தான் என் வயது. நன்றிங்க.

ஜோதிஜி said...

விந்தை மனித ராசா

நானும் ரிஷபன் மீனா, அவங்க சந்தனாவா (?)

இருவருமே கதிகலக்க வைத்து விட்டார்கள்.

பாலியல் தொழிலாளி என்ற ஒரு வார்த்தையை வைத்து ஒவ்வொருவரும் பின்னி பெடல் அடித்து நொறுக்குவது புரிகின்றது. ஒவ்வொன்றையும் விஸ்தாரமாக விளக்க பாதை சற்று மாறும். வார்த்தைகளும் படிப்பவர்களுக்கு சற்று எரிச்சலைத்தரும் என்பதால் அதை வெறும் வார்த்தையாக மட்டும் எழுதி வைத்தேன். இதில் சொல்லாத சொல்லமுடியாத விசயங்கள் நிறைய உண்டு.

இந்திரா காந்தி குறித்து நான் இது போன்ற பல விசயங்களை படித்து உள்ளேன். இதனால் தான் அவர் பெயரை மூத்த பெண்ணுக்கு வைத்தேன்.

Thekkikattan|தெகா said...

ஜி, நீங்க இந்தப் பதிவை ஏற்றிய பத்தாவது நிமிடத்திற்குள்ளரே நான் படித்து விட்டேன்.

மக்களுக்கு வழி விட்டு நின்றேன். அது போலவே இங்கே பல விசயங்களை எடுத்து முன் வைத்திருக்கிறார்கள். சரியான மக்களை வாசகராக கொண்டிருக்கிறீர்...

எழுத்து நடைக்கு என்னய்யா குறைச்சல்! அது பாட்டுக்கு ஓடுது. நாம பேசுவோம்... :)

உமர் | Umar said...

//கும்மி ராசா உங்கள் பெயர் என்ன தங்கம்?//

அவ்வளவு சீக்கிரம் சொல்லிருவோமா? ஹிஹி.

(மின்னஞ்சல் அனுப்பினேன். பார்த்தீர்களா?)

Unknown said...

மிக நல்ல பதிவு, படித்து முடித்தும் மனதில் தங்குகிறது காட்சியாய், அவருடைய அம்மாவின் மனதினையும், அவரின் மன வேதனையும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது, சகோதரி எங்கிருந்தாலும் நன்றாக மனநிம்மதியுடன் வாழட்டும், அவரின் தாயாரின் ஆசிர்வாதத்தோடு, நீங்கள் எப்பொழுதாவது சந்திக்க நேர்ந்தல் கூறுங்கள் என்னுடைய வாழ்த்தையும், நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இணையவெளியில என் பேரு சந்தனா.. புனைப் பெயர்.. ஏதாவது பேரு வச்சுக்கோங்கன்னு சொன்னதால இப்பிடி ஒரு பேரு (அதுக்கும் அர்த்தம் இருக்குதுல்ல?)

Thomas Ruban said...

காக்கி சட்டைகளுக்கு,கதர்ச்சட்டை ஆசாமிகளே பரவாயில்லை என்று கூறுகிறீர்களா?


பல கேள்விகளுக்கு, நண்பர்களின் பின்னுட்டம் மூலமாக சந்தேகம் தீர்ந்துவிட்டது.

பதிவில் படங்களை தேர்ந்துயேடுக்க தான் ரொம்ப மெனக்கெடுவீர்கள் என நினைக்கிறேன்.ஆனால் சில படங்களின் அர்த்தம் தான் இந்த மரமண்டைக்கு புரியவில்லை. நன்றி சார்.

Thomas Ruban said...

உங்கள் புத்தகங்கள் அனைத்தும் சிறப்பாக வர வாழ்த்துக்கள் நன்றி.

ஜோதிஜி said...

ரூபன் படத்தை சேர்த்து விமர்சிக்க ஒரு ஆள் நம்மிடம் உண்டு. அது ரதி மகா விமர்சகி. அவர் வந்தவுடன் உங்களக்கு பாடம் எடுக்கச் சொல்கின்றேன். இன்னும் படங்களை எளிமைப்படுத்த முயற்சிக்கின்றேன். தொடர்வாசிப்பு நன்றி நண்பா.

சந்தனா புதுப்பெயரோ புனைப்பெயரோ உண்மைப்பெயரோ பெரும்பாலான பெண்கள் வலைதளத்தில் தங்களை மறைத்துக் கொள்வதில் குறியாய் இருக்கிறார்கள். காரணம் என்னவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்குத் தெரிந்து அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரே பெயர் துளசி கோபால் மட்டுமே. இது பாராட்டுரை அல்ல. தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஒரே பாதை ஒரே நோக்கம். இப்பச் சொல்லுங்க பெண்கள் எதை எதையெல்லாம் கண்டு பயப்பட வேண்டியிருக்கிறது?

ஜோதிஜி said...

இரவு வானம் உங்கள் தாக்கம் புரிகின்றது. தொடர்ந்து வந்தமைக்கு நன்றிங்க.

கும்மி தங்கம் என்ற தல இப்பத்தான் உள்ளே வந்தேன். பார்ப்பதற்கு முன்பே பேச்சா? ஆகா பேஷ் பேஷ்????

ஜோதிஜி said...

தெகா

இந்த டிகால்டி வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கா மரியாதையா உருப்படியான திட்டோ அல்லது மனதில் நினைத்த ஏதோ ஒன்றை இன்று இரவுக்குள் விமர்சனத்தை எழுதி வைக்கவில்லையென்றால் நீச்சல் அடித்தே அங்கு வந்து (விசா பிரச்சனை) அடிப்பேன். ஆமாம்...... சொல்லிட்டேன்.

Bibiliobibuli said...

ஜோதிஜி,

திருப்பூர் என்ற தொழில் நகரில் வேலைக்குப்போகும் பெண்களின் நிலையை அவர்களின் கல்வி அளவை கொண்டு வாழ்கை நிலையை அளந்து சொல்ல முனைந்திருக்கிறீர்கள். பெண்களுக்கு கல்வியின் முக்கியத்தை சொன்ன விதம் நன்று. எழுத்தில் நிறையவே முன்னேற்றம் தெரிகிறது. அம்மா மகளுக்கு எழுதிய கடிதம் தான் கொஞ்சம் கட்டுரை போல் இருந்தது. அதை கொஞ்சம் சாதரணமாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

வாழ்த்துக்கள் ஜோதிஜி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நான் பெயரைச் சொல்ல விரும்பாமல் இருப்பது பெண் என்பதால் அல்ல.. :) பெயர், என்னைப் பொறுத்தவரை, ஒரு முக்கியமான அடையாளம்.. பெயரைச் சொல்லி உரையாடும் அளவுக்கு இணையவெளி பாதுகாப்பானதல்ல என்று கருதுவதால்..

ஜோதிஜி said...

ரதி

இது ரதியின் விமர்சனம் அல்ல. அப்புறம் எதுக்கு வாழ்த்துக்கள். கனடாவுக்கு இன்று கொரியரில் அனுப்பி வைத்து விட்டேன். சுற்றி சுற்றி திருப்பூருக்குள் இருக்கும் பெண்கள் வைத்து என்றே தொடக்கம் முதல் பெடல் எடுத்துக் கொண்டுருக்கீங்க. அதுக்கு பேசாம இது ஆணாதிக்க பார்வை என்றே சொல்லியிருக்கலாம். ம்ம்ம்...... வருவோம்ல ஒரு நாள் . கனடா தமிழ் பெண்கள் எந்த அளவிற்கு வளர்ந்திருக்காங்கன்னு பார்க்க...........????

ஐயோ நானும் பீ சீரியஸ்.

இணையவெளி பாதுகாப்பானது அல்ல என்பதும் உண்மைதான். கோவித்துக் கொள்ளாதீர்கள் . பார்த்தவுடன் சிரித்துவிட்டேன். உங்கள் பார்வையில் பெணகளுக்கு எந்த இடம் தான் இந்த உலகத்தில் பாதுகாப்பானது?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆணோ பெண்ணோ.. எங்கும் ஏதாவது விஷயத்தில் பாதுகாப்பு குறைவு இருக்கும.. அமேசான் காட்டுக்குப் போனாலும் அங்கு மிருகங்கள் இருக்கும்.. :))

எனக்கு இயல்பாகவே பயம் ஜாஸ்தி.. :)) அது பெண்ணாக இருப்பதால் தான் என்று நீங்க நினைக்கறீங்க போல.. :))) எனக்குத் தெரிந்து பல பெண்கள் சொந்தப் பெயருடன் இங்கு இருக்கிறார்கள்..

ஜோதிஜி said...

என்னம்மா சமாளிக்கீறீங்க. என்னடா கலாய்க்றேன்னு அடிக்க வந்துவிடாதீங்க. உண்மை என்பதை உண்மையாகத்தான் இருக்கும். ஏற்கனவே திருப்பூர் நிறுவன காணொளி குறித்து பதிவு ஏற்றிய போது இதே கருத்தை ஹாலிவுட் பாலா சொல்லயிருந்தார். பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்று. அப்போது துளசி கோபாலுக்கு ஆதரவாகத்தான் நானும் பாலாவை கலாய்த்தேன். ஆனால்?

உங்களுக்கு மட்டுமா பயம் ஜாஸ்தி. கல்லூரிப்பருவத்தில் என் தோழன் அப்பா (போலீஸ்காரர்) என்னைத் தேடி வீட்டுக்கு வந்தால் வீட்டில் இருக்கும் அக்கா அம்மா பதறிக்கொண்டு வருவார்கள். ஒரு தடவை என்றால் பரவாயில்லை. வாரத்தில் என்னைத்தேடி மகன் குறித்து தெரிந்து கொள்ள வர வீட்டில் ஒரே அக்கப்போர்.

கடைசியில் நானே அண்ணே நீங்க வீட்டு வராதீங்க. அதுவும் இந்த உடையுடன் வராதீங்க என்றதும் தான் அவர்கள் பயமே போனது. அமேசான உதாரணத்தை விட கடைசியாக போட்ட குறியை ரசித்தேன்.

Bibiliobibuli said...

என்னோட வாயை கிளர்றதுன்னே முடிவெடுத்திட்டீங்களா, ஜோதிஜி. உங்களை நான் ஆணாதிக்கவாதி என்று சொல்லவில்லை. ஒருசாராரின் (பெண்களின்) நிலைக்கு அவர்களே காரணம் தான், மறுக்கவில்லை. பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை சீரழிய, அல்லது அவர்கள் சமூகத்தில் சிறுமைப்படுத்தப்பட காரணம், ஆண்கள், ஆண்கள், ஆண்களே!! அது திருப்பூர் என்றாலும் சரி Toronto, Canada என்றாலும் சரி. என்ன, கனடாவில் திருமணத்தின் பின் பெண்களை யாரும் இலகுவில் ஏமாற்றிவிட்டு ஒடமுடியாதபடி சட்டங்கள் வலுவாக இயற்றப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில், இந்தியாவில் அல்லது வளர்ந்துவரும் நாடுகளில் அப்படி சமூக, பொருளாதார ஆதரவுகள் அரச திட்டங்களில் உள்ளதா? பெண்களுக்கு பிரச்சனைகள் எங்கும் ஒரேமாதிரித்தான் இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு எப்படி முகம் கொடுக்கிறார்கள், சமாளிக்கிறார்கள் என்பதில் தான் வேறுபடுகிறார்கள். அதில் தான் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுகிறார்.

வேலைத்தளத்தில் இருக்கிறேன். மிகுதி பிறகு தொடரும்.
.

Thekkikattan|தெகா said...

ஒழுங்கா மரியாதையா உருப்படியான திட்டோ அல்லது மனதில் நினைத்த ஏதோ ஒன்றை இன்று இரவுக்குள் விமர்சனத்தை எழுதி வைக்கவில்லையென்றால் நீச்சல் அடித்தே அங்கு வந்து (விசா பிரச்சனை) அடிப்பேன்.//

அட அட என்ன பவ்யமா கேக்குறாருப்போய். நான் என்ன சொல்லுவதற்கு இங்க அடிச்செல்லாம் கட்டுப்படியாகுமா நமக்கு. இருந்தாலும் எல்போர்ட் பி சீரியஸ், ரிஷபன், விந்தை மனிதன் போன்றவர்கள் எங்கே பிடித்து நிறுத்தி சில கேள்விகளை கேக்கணுமோ கேட்டுட்டாங்க. நிற்க!

//இயற்கையை எதிர்த்து இவவாறு செய்யப்டும் முயற்சிகள் எல்லம் தற்கொலைக்கு சமம். அவ்வாறு செய்யாலாம் ஆனால் பின்னொருநாள் நம் வாழ்கை திரும்பி பார்க்கும்போது வறட்டு கொள்கைகாக வாழ்கையை பலியிட்டோம் எனபது புரியும் ஆனால் அப்போது எதுவும் செய்ய முடியாது.//

இதனை முழுமையாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேணும். தனக்கு எது உகந்தது என்று நீண்ட நெடிய பயணத்திற்கு பின்னான தெளிவான சிந்தனையைக் கொண்டவர்கள் எடுத்த முடிவில் இப்படி இடையில் கிடந்து மறுதலிக்கும் பிசினெஸ் எல்லாம் இருக்காது.

அவர்களின் இலக்கு மிகவும் தீர்க்கமானது. அதனை நோக்கிய ஓட்டத்தில் ஓடித் தேய்பவர்களின் பரிச்சியமும் எனக்கு உண்டு. நான் வேண்டுமானால் இந்த தினசரி உறவு சார்ந்த சிக்கல் bullsh**tsகளை எடுத்துச் சென்று அவர்களிடம் நிற்கும் பொழுது அவர்கள் சாட்சிட் நிலையில் ஒரு சாத்குரு ரேஞ்சிற்கே ‘அப்படியே’இருக்கிறார்கள். இங்கே நாம் இரண்டான் கெட்டான்களை பற்றி பேசவில்லை.

சோ, நமது பார்வையில் அவர்கள் ஏங்குகிறார்களோ, தவற விட்டுட்டு தவிக்கிறார்களோ என்று எண்ணலாம். ஆனால், அவர்கள் உலகத்தில் எப்படியாக அகவுலகு இயங்குகிறது என்று நமக்குத் தெரியாது.

...தொடரும் 2

ஜோதிஜி said...

நமது மகளிர் அணி தலைவியும், மாநில இளைஞரணிச் செயலாளர் அவர்களும் தாமதமாக வந்தாலும் புயலை கிளப்ப ஆரம்பித்து இருப்பதால் கூட்டத்தினரே பெய்து கொண்டுருக்கும் மழையை பொருட்படுத்தாமல் அமைதி காக்கும்படி காந்தி நகர் வட்டத்தின் சார்பாக உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

மழையை பொருட்படுத்தாமல் அமைதி காக்கும்படி காந்தி நகர் வட்டத்தின் சார்பாக உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்//

:))) வழ வழன்னு போசுவோம்னு இப்படி கிண்டல் அடிச்சிருக்காருய்யா இவரூஊஊ இருக்கட்டும், இருக்கட்டும் ...

Thekkikattan|தெகா said...

....தொடர்ச்சி...

//நாயகி தன் தாயாரை அறிமுகப் படுத்தும் போது 'பாலியல் தொழிலாளி' என்ற முன்னுரையுடன் துவங்குகிறாள். கதையில் அவள் ஒரு பாலியல் தொழிலாளியாக எங்குமே இருக்கவில்லை... //

ஆமா எனக்கும் அப்படியே தோணிச்சு. எந்த அடிப்படையில அப்படி ஓர் அறிமுகம் கொடுத்தீங்க? திருப்பூர் போன்ற தொழில் அடிப்படை நகரங்களில் அங்கு வந்து சேரும் பெண்களுக்கான அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியதே! போதுமான அளவிற்கு கல்வியறிவோ, குடும்ப பொருளாதார பலமோ இல்லாது நசிந்து வந்து சேரும் பெண்களுக்கு எது போன்ற பாதுக்காப்பை இந்த சட்டமும், நமது வளர்ப்பு முறையிம் நம்மிடையே அமைந்து அது போன்ற பெண்களை பாவிக்கச் செய்கிறது என்று யோசிக்க வேண்டும்.

அதன் அடிப்படையிலேயே நாகமணியின் அம்மாவிற்கும் வேலைக்கு போகுமிடமெல்லாம் அழுத்தம் அமைந்து போய் விடுகிறது. எங்கு சென்றாலும் அதே அழுத்தம் வரும் பொழுது ஒருவர் கையில் பாதுகாப்பாக இருப்பதற்கேனும் அடைக்கலம் புகுகிறார். அவரை எப்படி பாலியல் தொழிலாளி என்று அறிமுகப்படுத்துவீர்கள்...

எது எப்படியோ ஜி, கதை நல்லா சொல்லுறீங்க. ரதி அவர்கள் சொன்ன மாதிரி சில இடங்களில் உரைநடையின் வாசம் வந்தது, அதனை ஏற்கெனவே சொன்னேன்னு நினைக்கிறேன்.

நோ மோர் கொஸ்டின்ஸ் யுவர் ஹானர் :D

ஜோதிஜி said...

தெளிவான சிந்தனையைக் கொண்டவர்கள் எடுத்த முடிவில்

தெகா தங்க ராசா ஒரு நாலைந்து உதாரண புருஷிகளை காட்டுங்களேன் பார்க்கலாம்???????????????

Thekkikattan|தெகா said...

நம்ம வீட்டிலேயே இருக்கலாமே!!

எனக்குத் தெரிஞ்சு என் பாட்டிகளில் மூன்று பேர்...

என் நண்பிகளில் இரண்டு பேர்...

தனக்குரிய முடிவுகளை தானே எடுத்துக் கொள்ளும் நிலையிலிருந்தாலும், இதுதான் தனக்குச் சரின்னு அதில தடம் மாறாம இருந்தார்கள், இருக்கிறார்கள்... :)

எல்லாம் வாழும் சமூதாயத்தை பொருத்தும் அதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதுவும் உதவி பண்ணணும்ல... தொடர்ந்த தேவையில்லாத அழுத்தங்களை கொடுத்து வேதனை ஏத்தாமல். :)

சிவகுமாரன் said...

நீண்ட தொடராயிருந்தாலும் நெகிழ்வாக இருந்தது.

Bibiliobibuli said...

ஜோதிஜி,

இப்பவும் சொல்கிறேன், இது பெண்கள் பற்றிய உங்கள் புரிதல், நீங்கள் பார்த்த/சந்தித்தவர்களின் அனுவபவம். இந்த அனுபவங்களையும் கருத்துக்களையும் மட்டுமே உள்வாங்கி இதையெல்லாம் பெண்கள் பற்றிய பொதுக்கருத்துகளாக கொள்ளமுடியாது.

தெளிவான சிந்தனை கொண்ட உதாரண புருஷிகளை ஏன் எப்போதும் வீடு தாண்டியே தேடிக்கொண்டிருக்கிறீர்கள்!!

அப்புறமா, உங்கள் படங்கள் சொல்லும் கருத்துகள். ஒன்று, பெண்கள் எப்போதும் தான் "பெண்" என்ற அடையாளத்தை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள் என்பது; பெண்கள் ஏதோவொரு வகையில் ஆணைகளைச் சார்ந்து தான் இருக்கிறார்கள் என்று ஆதிகால மனிதர்களின் படங்களைப் போட்டு காமெடி பண்ணுவது; உடல்வலிமை பெரும்பாலும் ஆண்களிடம் தான் இருக்கிறது, சரி அப்படியே வைத்துக்கொள்வோம்; பெண்களின் மனவலிமையை எந்த அளவுகோல் கொண்டு அளந்து ஆண், பெண் இரண்டு பேரையும் வட்டம், சதுரத்துக்குள் அடைத்து ஆணுக்குள் பெண் அடக்கம் என்று சொல்கிறீர்கள் என்றெல்லாம் நான் கேட்கமாட்டேன். :))))

ஜோதிஜி, மொத்தத்தில் நீங்கள் நல்லதோர் கதை சொல்லி. கதைசொல்லியின் எல்லாக்கருத்துக்களோடும் என்னால் உடன்படமுடியவில்லை. வரிக்கு வரி, கருத்துக்கு கருத்து மோதிக்கொண்டிருக்க முடியாது என்று விலகிப்போனேன், அவ்வளவு தான்.

துளசி கோபால் said...

சபாஷ் ரதி!

இனிய பாராட்டுகள்.

ஜோதிஜி said...

வேலைப்பளூவின் காரணமாக தினந்தோறும் இந்த நேரத்தில் மின் அஞ்சல் பக்கம் வர முடிகின்றது. டிசம்பர் முடியும் வரைக்கும் இதே நிலைமை தான்.
ரதி உங்கள் விமர்சனத்தை படித்துக் கொண்டுருந்த அந்த நொடியில் துளசி கோபால் விமர்சனமும் வந்த போது கூட்டணி தர்மத்தை புரிந்து கொண்டேன். சில விசயங்களை வேறு வழியே இல்லாமல் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். இதில் நாகமணி என்றொரு பெண் பற்றி எழுதினேனே தவிர அந்த குணாதிசியத்தை கோர்க்க உதவியவர் வேறொரு பெண். அவரைப்பற்றி எழுத வேண்டும் என்று தான் தொடங்கினேன். ஆனால் பாதை மாறிவிட்டது.

அவரும் திருப்பூரில் தான் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். காலை முதல் மாலை வரைக்கும் இணையத் தொடர்பில் இருப்பவர். ஆனால் இது போன்ற வலைதளம் அறிமுகம் இல்லாமல் (18 மாதங்களுக்கு முன் நான் இருந்ததைப் போல) இருப்பவர். ஒரே ஒரு முறை சந்தித்தேன். நீண்ட நேரம் பேசினேன். மேலோட்டமாக வலைதளம் குறித்து பேசிவிட்டு என்னைப் பற்றி காட்டிக் கொள்ளாமல் முடிந்தால் படித்துவிட்டு சொல்லுங்கள் என்று வந்துவிட்டேன். அதன் பிறகு பலமுறை பேசிய போது முழுக்க தொழில் சார்ந்த பேச்சுக்கள் மட்டுமே.

ஜோதிஜி said...

நேற்று அவருக்கு என்ன தோன்றியதோ நான் அலுவலக கலந்துரையாடலில் மிக நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த போது அழைத்தார். அவர் மேல் உள்ள மரியாதையின் காரணமாக வெளியே வந்து பேசத் தொடங்க அப்போது தான் தோன்றியது. அவர் வேறொரு (திருப்பூருக்கு வெளியே உள்ள நிறுவனத்தில் தொழில் காரணமாக) இடத்தில் நான்கு ஐந்து மணி நேரம் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்க வாய்ப்பு இருப்பதை பேசிய சொல்ல இந்த தலைப்பை படித்து விட்டுச் சொல்லுங்கள் என்றேன். என்னுடைய பார்வையில் பெண் என்கிற ரீதியில் நூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் கொடுப்பேன். கணவர் அமெரிக்காவில் இவரும் அமெரிக்கா வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு இங்கே குழந்தைகளின் படிப்பு மற்றவர்கள் கிண்டலடிக்கும் கலாச்சாரம் போன்ற பல விசயங்களுக்காக இங்கே இருக்கிறார்.

ஜோதிஜி said...

அவர் பொதுவாக பத்திரிக்கைகள் கூட படிப்பது இல்லை. பெண்கள் குறித்து எனக்குள் இருக்கும் வினோதமான கலவையான குணாதிசியங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒழுக்கம், மேன்மை, தீர்க்கமான பார்வை, சக மனிதரை புரிந்து கொள்ளுதல், தன் நிறுவன செயல்பாடுகள் திருப்தியளிக்காத போதும் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருத்தல், குழந்தைகளுக்கு வழிகாட்டி, மொத்தமான சமூக புரிந்துணர்வு போன்ற பல விசயங்கள் கொண்டவர். என்ன சொல்லப்போகிறார்? என்ன சொல்வார் என்று அடுத்த வேலைகளில் கூட கவனம் செலுத்த முடியாமல் காத்துக் கொண்டுருந்தேன். எழுபது சதவிகிதம் ஏற்புடையது தான் என்பதாகச் சொன்னார். நான் தான் உங்கள் இருவரின் பார்வையிலும் உள்ளூர் பார்வை பார்த்துக் கொண்டுருப்பவன். அவர் என்னை ஒப்பிடும் போது உலகப் பார்வை பார்த்தவர், பார்த்துக் கொண்டுருப்பவர்? ஏன் ஏன் ஏன்?

ஜோதிஜி said...

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி பொறுப்பில் இருக்கும் பெண்மணியைப் பற்றி பேசுவோம்? பொதுவாக ஆண்கள் என்பவர்கள்................... இந்த இடத்தில் எத்தனை வார்த்தைகள் வேண்டுமானாலும் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் உங்களைப் போல மறுக்காமல் அது அத்தனை கேவலமான வார்த்தைகளாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். நானும் பார்க்கின்றேன்.... பார்த்துக் கொண்டுருக்கின்றேன்......... பார்ப்பேன்.......

ஆனால் இந்த பெண்மணிக்கு என்ன குறைச்சல்?
ஏன் இப்படி வாழ்க்கை? ஏன் இத்தனை தெளிவற்ற கொள்கை? என்ன நோக்கம்? எங்கே செல்லும் இவரின் எதிர்கால வாழ்க்கை? அரசியல் என்பது பெண்களுக்கு லாயக்கு இல்லாத ஒன்று என்று சொல்லிக் கொண்டுருக்கிறார்களே லாலூ முலாயம் போன்றவர்கள். அதை உண்மையாகவே இவர் நிரூபித்துக் கொண்டு தானே இருக்கிறார்.

ஜோதிஜி said...

நான் படித்த கேட்ட பார்த்துக் கொண்டுருந்த இந்திய உள்ளாட்சி நிர்வாகத்தில் இடம் பிடித்த பெரும்பாலான பெண்கள் என்ன சாதித்தார்கள்?

சற்று நேரத்திற்கு முன் நண்பர் ஒருவர் காவல் துறையில் உள்ள (பெண் அதிகாரி) சம்மந்தம் இல்லாமல் மாட்டிக் கொண்ட போது நானும் செல்ல வேண்டியிருக்க அங்கே அந்த பெண் அதிகாரி நடவடிக்கைகள், அவர் உச்சரித்த வார்த்தைகளும், எதிர்பார்த்த பணமும் .............

அடேங்கப்பா............

ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்ற வார்த்தைகள் அத்தனையும் பொய் என்றே கருதினேன். உலகில் இரண்டே ஜாதி தான். அதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. திருடக்காத்துருப்பவர்கள்.... வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பவர்கள்.......

திரும்பவும் சொல்கின்றேன்... நான் பார்த்தவரையில் பழகியவரையில் கேட்டவரையில் உண்மையான பெண்கள் என்பவர்கள் தங்களை புரிந்து கொண்டவர்கள் அத்தனை பேர்களும் படிப்பறிவு இல்லாத அன்றாடங்காய்ச்சியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் பெண்கள் மட்டுமே. அவர்களிடம் தான் ஆளுமையும், அதிசியமான திறமைகளும் இருக்கிறது.

ஜோதிஜி said...

பெண்கள் எப்போதும் தான் "பெண்" என்ற அடையாளத்தை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள்

பெண்களின் மனவலிமையை எந்த அளவுகோல் கொண்டு அளந்து ஆண், பெண் இரண்டு பேரையும் வட்டம், சதுரத்துக்குள் அடைத்து ஆணுக்குள் பெண் அடக்கம் என்று சொல்கிறீர்கள்

இதை படிக்கும் துளசி கோபாலுக்குத் வேறு சில விசயங்களும் தெரியும். கலைஞர் அரிசி சாப்பிட்டு வளர்ந்த போதும் திருந்தாத ஜென்மங்கள் ஒரு நிர்வாகத்தையே சீர்குலைக்கும் வல்லமை உடையவர்கள் எனபதையும் அவர் அறிவார்கள்.

ரதி சோனியா ஒரு பெண் தானே? அவரின் வலிமையை வட்டம் சதுரம் போன்றவற்றில் அடைக்கவிரும்பவில்லை. ஈழ விசயத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார்.

தொடர்ந்தால் தொடருவேன்?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இதுக்கு மட்டும் சொல்லிப்போட்டு ஓடிப் போயிடறேன்..

//ரதி சோனியா ஒரு பெண் தானே? அவரின் வலிமையை வட்டம் சதுரம் போன்றவற்றில் அடைக்கவிரும்பவில்லை. ஈழ விசயத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார்.//

ராஜீவ் காந்தி ஒரு ஆண் தானே? ஈழ விசயத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார்? :)

நீங்க "உண்மையான பெண்கள்" என்பவர்களிடம் என்ன குணங்களை கண்டீர்கள் என்று சொல்லுங்கள்.. உலகப் பார்வையில் பதில்களை யாராவது வழங்குவார்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

எக்கூஸ்மி.. மே ஐ கம் இன்...

( நேரம் இல்லையே ..னு பார்க்கிறேன்.. ஊருக்கு கிளம்புவதால்..)

ஜோதிஜி said...

இதென்ன கொடுமையாயிருக்கு. அதான் கதவை திறந்தே வச்சாச்சுல்ல. தைரியமா உள்ளே வரலாம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆனால் இந்த பெண்மணிக்கு என்ன குறைச்சல்?
ஏன் இப்படி வாழ்க்கை? ஏன் இத்தனை தெளிவற்ற கொள்கை? என்ன நோக்கம்? எங்கே செல்லும் இவரின் எதிர்கால வாழ்க்கை? அரசியல் என்பது பெண்களுக்கு லாயக்கு இல்லாத ஒன்று என்று சொல்லிக் கொண்டுருக்கிறார்களே லாலூ முலாயம் போன்றவர்கள். அதை உண்மையாகவே இவர் நிரூபித்துக் கொண்டு தானே இருக்கிறார். //

One size doesn't fit all

இவர் மேல் காதல் கொள்ளாத ஆண்களுண்டா?.. புகழின் உச்சிக்கு போனவர்களின் வாழ்க்கையே பல விஷயங்களில் திசை திரும்ப வாய்ப்புண்டு பலரால்...

இவர் எதிர்கால வாழ்க்கை பற்றி நாமென்ன முடிவு செய்வது நண்பரே..?

மேலும் அரசியல் என்பது தனிப்பட்ட ஒருவர் கொள்கை மட்டுமல்ல.. இதுவே சோனியாவுக்கும்..

ஜோதிஜி said...

ராஜீவ் காந்தி ஒரு ஆண் தானே? ஈழ விசயத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார்? :)


ராஜீவ் காந்தி விசயத்தில் பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். மொத்தத்தில் ராஜீவ் காந்தி என்னுடைய பார்வையில் அரசியல் கண்க்கு மற்றும் அதன் புதிர்களை போடத் தெரியாதவர். பலரும் சண்டைக்கு வருவார்கள். அதிகாரிகள் செய்ய தவறுகள் ஒவ்வொன்றும் கடைசியில் இவர் தலையில் வந்தது. உடனே இங்கே சண்டைக்கு வருவார்கள்? பிரதமர் பதவி என்றால் பொறுப்பு அவர் தானே என்று?

சோனியா அப்படி அல்ல? பல விசயங்கள் கண்க்குகள் நோக்கங்கள் இன்னும் பல உண்டு. முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டுருந்தவர்கள் பின்னால் போய் நின்ற போது என்னன்ன விபரீத விளைவுகள் இழப்புகள் உருவாகும் எனறு அவருக்கு நன்றாகவே தெரியும்.

ராஜீவ் காந்தி செய்தது தவறு தான். இழப்பு பத்து சதிவிகிதம். சோனியா மகா தவறு. இழப்பு குறித்து கணக்கு எடுக்க முடியாது. காரணம் ஆட்களே இருந்தால் தானே கணக்கை எடுக்க முடியும் (?)

ஜோதிஜி said...

ஜெ குறித்து நீங்க சொல்வது ஏற்பபுடையது அல்ல. சில விசயங்களை நாகரிகம் கருதி இது போன்ற இடத்தில் எழுத முடியவில்லை. சோனியா குறித்து நீங்க சொல்வது பாதி உண்மை . மீதி? காரணங்கள் உண்டு. கணக்குள் முடிக்கப்படவேண்டும். சிந்திய சிந்தாத கண்ணீருக்கு காரணம் வேண்டும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சற்று நேரத்திற்கு முன் நண்பர் ஒருவர் காவல் துறையில் உள்ள (பெண் அதிகாரி) சம்மந்தம் இல்லாமல் மாட்டிக் கொண்ட போது நானும் செல்ல வேண்டியிருக்க அங்கே அந்த பெண் அதிகாரி நடவடிக்கைகள், அவர் உச்சரித்த வார்த்தைகளும், எதிர்பார்த்த பணமும் .............//


ஜோதிஜி , முக்கியமாக ஒன்றை புரிந்துகொள்ளணும் நாம்...ஆணாதிக்கம் என்பது ஆணிடம் மட்டுமில்லை .. பெண்ணிடமும்..

அதே போல ரவுடியிஸமும் பொதுவானதே..

ஒரு சோற்று பதம் இங்கே பொருந்தாது...

ஒவ்வொரு பெண்ணும் சூழல் பொருத்தே முடிவெடுக்கிறாள்.. ஒருவருக்கு தவறானது மற்றொருவருக்கு மிக சரியானது..

வரதட்சணை சட்டத்தை வைத்து அநியாயமாய் மிரட்டும் பெண்களுண்டு...

அவதிப்படும் அப்பாவி ஆண்களுண்டு..

ஆனால் எப்ப ஒரு பெண் சாதிக்கணும்னு நினைத்து முடிவெடுத்துவிட்டாளோ அப்போது அவளை எதுவும் எந்த ஆணும் தடுத்து நிறுத்த முடியாது...

நான் ஏற்கனவே சொன்னதுபோல சாவுக்கும் அஞ்சாதவள்... அடக்கி வைத்த அத்தனை சக்தியையும் பயன்படுத்தி வெற்றியடைவாள்..

மியான்மார் ஆங்சான் சூ கி பற்றி தெரியும்தானே?.. எத்தனை மிரட்டல், வீட்டு சிறைவாசங்களை சமாளித்தார் கலங்காமல்..?

அடுத்து அருந்ததி ராய்..

ஐரோம் சர்மிளா?

யார் கொடுத்த தெம்பு?..

எங்கே இருந்து வந்தது இவர்களின் நீண்ட நாள் அயராத போராட்டங்கள்..?

ஜோதிஜி said...

பீ சீரியஸ் என்று அடித்துக் கொண்டுருந்த போது நான் நினைத்த சொல்ல வந்த கருத்துக்களில் 60 சதவிகிதம் தந்து விட்ட சாந்தி வாழ்க. ஊர் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி தெ.கா சார்..

முற்போக்கு சிந்தனையாளர் பிளாக் ஒண்ணு ஆரம்பிச்சு கும்மிடலாமா?..

:))


அன்பின் ஜோதிஜி ,

நிஜமா சொல்லப்போனா ,

எங்க பாட்டிக்கு இருந்த தைரியம் எங்கம்மாவுக்கு இல்லை..

எங்கம்மாவுக்கு இருந்த துணிவில் 10% கூட எனக்கில்லை...

ஆனா என்னையே தைரியம்னு சொல்றீங்க.. அப்ப எங்க பாட்டியை பார்த்தா?..

அக்காலத்திலேயே மிக தெளிவாக இருந்தார்கள் பாட்டி.. தாத்தா இலங்கை, பர்மா என வியாபரா நிமித்தம் வெளியே செல்லும்போது , வயல் தோட்டம் , 10 பிள்ளைகள் , வேலையாட்கள் , காம்பவுண்ட் குடித்தனக்கள் , வாடகை என அனைத்தையும் தனி ஆளாய் ( + கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் :) திட்ட ) சமாளித்தவர்... இத்தனைக்கும் பாட்டி பள்ளிக்கூடமே போகாதவர்.. யார் சொல்லித்தந்த துணிவு ?..

எங்கம்மா வின் தோழிகள் பலரைப்பார்த்து வியந்து நிற்பேன்.. ஆண் துணையில்லாமல் ( அனேகமா வெளிநாட்டில் வேலை ) பல காரியங்களை தனியா நடத்துவார்கள்...

ஆக துணிந்தவருக்கு ஒரு பயத்தில் /மரியாதையில் உதவ பலரும் தாமே வந்திடுவார்கள்.. ஆணை சார்ந்து இருக்க வேண்டியதெல்லாம் பயம் கொண்டவர்கள் மட்டுமே..

பெண்ணுக்கு இடையூறு பிரச்னை வரும்வரை அவள் சக்தி அவளுக்கே தெரியாது.. வந்தபிந்தான் அவள் போராட்ட குணம் நிஜமாகவே வெளிவரும்..

பல நாடுகளில் ராணுவத்தில் பெண்கள் அற்புதமாக செயல்படுகிறார்கள்.. ஏன் ஈழ போராளிகளுண்டே..

ஜோதிஜி said...

தெகா சரியா அடி வாங்கப் போறீங்க?

நாம நேற்று ஒரு மணி நேரம் பேசிய அத்தனை விசயங்களும் சாந்திக்கு எப்படி தெரிந்தது. குறிப்பா ஈழ பெண் போராளிகள் வரைக்கும்.

தெளிவு சாந்தி. என் வணக்கம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

:)

ஆஹா.. Great minds think alike இதுதானோ?..

உங்களைப்போன்றவரின் எழுத்துகளே என் படிப்பினை ..

நன்றி ஜோதிஜி...


பெட்டி அடுக்க போறேனுங்...

வணக்கமும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒரு விஷயம் சொல்ல மறந்தேன்..

ஒரு கதையில் நாயகி " தவறான வழியில் " சம்பாதித்தாள் என வேணுமென்றே எழுதினேன்..

உடனே எல்லாருக்கும் என்ன எண்ணம் வந்தது.. பாலியல் தொழில் மட்டுமே.. ( இது நிதர்சனம் நம் சமூகத்தில் )..

ஆண் தவறான வழியென்றால் பல எண்ணம் வரும்.. ஆனா பெண் என்றால் ஒரே வழிதான்..

இதே ஆங்கிலத்தில் " She earned in wrong way " னு எழுதினா, பலவற்றை ( கடத்தல் , கலப்படம், போதை, லஞ்சம் இத்யாதி ) எண்ணுவார்கள்..


ஆக நம் சமூக பார்வை பெண் மேல் மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கு..

இந்த "கடத்தல் , கலப்படம், போதை, லஞ்சம் இத்யாதி விட பாலியல் தொழிலே மிக கேவலமாக பார்க்கப்படுகிறது..

ஏன்.?.

ஏனெனில் இது குடும்ப அமைப்பையே சீரளிப்பதாய் நினைக்கிறோம்..

ஆனால் வெளிநாடுகளில் பசி எடுத்தவன் உணவு விடுதிக்கு போவது போல போகிறான்.. அவன் வேலை முடிந்ததும் நீச்சல் உடை பெண் அருகிருந்தாலும் ஏறெடுத்து பார்த்து ஜொள்ளுவதில்லை..


இது குறித்து நிறைய பேசலாம்..பின்பு..

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி

பெண்பற்றிய பலவிசயங்களை பின்னூட்டங்கள் தெரிவித்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு கல்வி முக்கியம். ஆக்கும் அதே நேரத்தில் தான் சீரழிந்து கெடவும் முக்கிய காரணியாக உள்ளது. பாதி ஆக்கம் என்றால் பாதி அழிவு.

நிகழ்வுகளை புரிந்து அவற்றை அனுசரித்து சொந்த வாழ்க்கையோ குடு்ம்ப வாழ்க்கையோ வாழ்க்கையின் இடர்களே தெரியாது வாழ்பவர்களும் உண்டு.அதே நேரத்தில் அகந்தையினால் ஆடி குறுகிய மனபான்மையினால் குடும்பத்தையும் தன்னையும் சீரழித்து கொண்டவர்களும் உண்டு.

படித்தவர்களோ படிக்காதவர்களோ அவர்களுக்கு பெற்றோர்கள் அல்லது முன்வாழ்ந்தவர்களின் வழிநடத்துதலில் ஓர் பிரச்சனையை அணுகும் விதம் ஆண்களாயிருந்தாலும் சரி பெண்களாயிருந்தாலும் சரி.

அவர்களாய் முட்டி மோதி கற்றுகொள்ளும் போது பல கசப்பு அனுபவங்கள் ஏற்படதான் செய்யும். அப்பொழுது யாரோ ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தமுடியும். அதையும் அவர் அவர்களுடைய சூழல்களே நிர்மாணம் செய்கிறது.

ஆணின் வெற்றிக்கு பெண்கள் காரணம் என்றால் அதே பெண்ணின் வெற்றிக்கு ஆண்களும் காரணமாய் இருந்ததுண்டு.

பயணமும் எண்ணங்களுக்கு வாழ்த்துகள்.
ஆரோக்கியமான கருத்து பகிர்வுகள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆணின் வெற்றிக்கு பெண்கள் காரணம் என்றால் அதே பெண்ணின் வெற்றிக்கு ஆண்களும் காரணமாய் இருந்ததுண்டு.//

மிக சரியாக சொன்னீர்கள்..

//பயணமும் எண்ணங்களுக்கு வாழ்த்துகள்.
ஆரோக்கியமான கருத்து பகிர்வுகள்.//

மிக்க நன்றி தவறு..

இதற்கான களம் நல்லபடியாக அமைத்து தந்த ஜோதிஜிக்கும் மற்ற அனைத்து நட்புகளுக்கும் நன்றி..

இதுபோல பல நல்ல கருத்தாடல்கள் அரோக்கியமாக வளரணும் பதிவுலகில்..

Unknown said...

yapppa ... emma periya discussion

ரோஸ்விக் said...

அப்புச்சி நான் பதிவை படிச்சு முடிச்சுட்டேன்... பின்னூட்டங்களைப் படிச்சு முடிக்க இன்னும் ஒரு வாரம் ஆகும் போல. போயிட்டு அடுத்தவாரம் பேசுறேன்.

ரோஸ்விக் said...

நல்ல எழுத்து நடை உங்களுக்கு வருது. ஆங்காங்கே இந்த கட்டுரைக்கு நடுவில வருகிற (திணிக்கப்பட்டிருக்கிற) உங்களின் (நல்ல) கொள்கைகளும், கருத்துக்களும் கொஞ்சம் இடரலாகத்தான் இருக்கிறது.

ரோஸ்விக் said...

பெண் - அதிகமாக அன்புசெய்யப்படவேண்டிய, புரிந்துகொள்ளப்படவேண்டிய, ரசிக்கப்படவேண்டிய, ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய, அளக்கப்படவேண்டிய, விவாதம் செய்யப்படவேண்டிய, விபரம் அறியப்படவேண்டிய, விசாலம் தெரிந்துகொள்ளப்படவேண்டிய, ஆராதிக்கப்படவேண்டிய, கொஞ்சப்படவேண்டிய, மீறப்படவேண்டிய, .... போங்க சாமி எனக்கு இப்போ நிறைய வேலை இருக்கு.

ஜோதிஜி said...

வினோத் ஏற்கனவே நானே உண்மைத்தமிழன் சிரிப்பு போலிஸ் தளத்தில் உள்ளே நுழைந்தால் பின்னூட்டத்தில் இடம் பிடிக்க ஸ்கோரல் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அந்தக்கூத்து இங்கே? ம்ம்ம்....... காலம் கெட்டு கிடக்கு.

ரோசு ராசா எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன். என்ன நம்மூரு தங்கத்த காணலையேன்னு. அப்புச்சியா? இங்கு மூணு பேரு படுத்திற பாட்டு ஆ பூச்சியாகி வாயில்லா பூச்சியாக மாறிப் போனேன். ஏற்கனவே துளசி கோபால் சொன்ன மாதிரி அடங்காதவரை அடங்க வந்த (மூன்று) சூலாயுதம்.

ஆனால் கடைசியில போட்ட போடு அடேங்கப்பா? என்ன வீட்டுக்காரம்மா ஊருக்கு போகப்போறதால மூளை ரொம்ப வேல செய்யுதோ?

மீண்டும் நன்றி சாந்தி.

பீ சிரியஸ் அல்லது சந்தனா........ ரோஸ்விக் உங்களுக்கு தகுந்தமாதிரி விமர்சனம் கொடுத்துருக்காரு................?????

சிவகுமரன் உங்கள் முதல் வருகைக்கு விமர்சனத்திறகு நன்றி நண்பா....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அவரு எனக்கு கொடுக்கல.. உங்களுக்கு கொடுத்திருக்காருன்னு தான் நான் நினைக்கறேன் :)

நான் பெண்ணியவாதி அல்ல.. சிலபல பெண்களை வெறுத்தே தள்ளியிருக்கிறேன்.. நான் ஒருவரது பாலை வைத்து அவரை அளக்க விரும்புவதில்லை.. இருவருக்குமான வித்தியாசங்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் செயல் ரீதியாகவும் உண்டு.. Men are from Mars.. Women are from Venus :)) சின்ன உதாரணம் - பெண்களுக்கு spatial orientation ஆண்களை விடக் குறைவு என்று படித்திருக்கிறேன்.. முந்தைய காலங்களில் இருவருக்குமான குடும்பப் பணிகள் வேறு வேறு என்பதால் இப்படி ஆகியிருக்கலாம்.. ஆயினும், சில தவறுகளுக்கு பெண் பால் தான் காரணம் என்ற பின்னூட்டத்தை ஏற்க முடியல..

நான் கேள்விப்பட்ட ஒரு பெண் (எனது முந்தைய அலுவலகத்தில் பணிபுரிபவர்.. நான் அவரைச் சந்தித்ததில்லை.. என் உடன் பணிபுரியும் இன்னொருவர், தான் நேரில் பார்த்ததைச் சொன்னார்) - இரு கைகளும் இல்லை கால்களும் இல்லை.. பிறப்பால் ஊனம்.. தனது தாடையைக் கொண்டு எல்லோரும் செல்லும் வீதியில் கார் ஓட்டுகிறார்.. அவருக்கென சற்று பிரத்தியேகமான கார்.. அவ்வளவே.. இந்த உறுதிக்கு பெண் பால் தான் காரணம் என்றும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.. :) இவர் ஆணாக இருந்திருந்தாலும் இப்படி உருவாகியிருக்கலாம்..

ஜோதிஜி said...

பெண்களுக்குண்டான உறுதியை நீங்கள் செர்ல்லவே தேவையில்லை. காலை எட்டு முதல் நடுஇரவு வரை வேலை செய்து விட்டு ( நின்றுகொண்டே செக்கிங் என்ற பிரிவில்) மறுநாள் காலை அதே எட்டு மணிக்கு உள்ளே வரும் பெண்களை பார்த்த போது பயந்து போன காலமெல்லாம் உண்டு.

ஊரில் இரவு ஏழு என்றவுடன் கொட்டாவி விடும் பெண்களை மட்டுமே பார்த்த காரணத்தால்.

சாந்தி சொன்ன மாதிரி சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. ஆனால் ஆண்களுக்கு சூழ்நிலை சாதகமாகயிருந்தாலும் நிறையபேர்கள் கோட்டை விட்டு விடுபவர்களைத்தான் நான்அதிகம் பார்த்திருக்கின்றேன். மேலும் உருவாகும் கெட்ட பழக்கங்கள்... இத்யாதி இத்யாதி.

ஆனால் பெண் என்பவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் சர் சர் என்று பயணமும் அவர்களின் எண்ணங்களும் மேலே மேலே போய்க் கொண்டேயிருக்கும்.

இந்த இடத்தில் பூச்சி தலைவீவீவீ (?) யை நினைவில் வைத்துப் பாருங்கள். தொடக்கத்தில் ஜானகி அம்மாவை தோற்கடித்து மேலே வந்த விதம் சின்னத்தை கைப்பற்றிய விதம்... இத்யாதி....

என்னவொன்று தன்னை உணர்ந்தவளாக இருப்பாளா? என்பது தான் நான் எழுப்பும் வினா?

இந்த இடத்திலும் மேலே உள்ள பூச்சியை வைத்துக் கொள்ளலாம் (?)))))

ஆண் கெட்டழிந்தால் அந்த தலைமுறை மட்டுமே அழியும். ஆனால் பெண் தப்பான நபராக இருந்தால் அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் பிரச்சனை. இதை மேம்போக்காக எழுதவில்லை. ரதி சொல்வது போல் என் பார்வை என்பதும் அல்ல. எத்தனையோ பெண்களின் தியாகம் தான் இன்றைய உலகத்தில் பீற்றிக் கொண்டு திரியும் பல ஆண்களின் வாழ்க்கை.

Bibiliobibuli said...

///எத்தனையோ பெண்களின் தியாகம் தான் இன்றைய உலகத்தில் பீற்றிக் கொண்டு திரியும் பல ஆண்களின் வாழ்க்கை.//

ஒ!!!! இப்போ நாங்க தியாகிகள் ஆகிட்டமா!!!! :)))) இருக்கட்டும், இருக்கட்டும்.

தியாகம் என்பது ஒருவர், இங்கே பெண் முழு மனதுடனும், புரிதலுடனும் தன் குழந்தைகளுக்காக, குடும்பத்துக்காக செய்வது என்றே கொண்டாலும், அது யாராவது கொடுக்கும் "தியாகி" என்ற பட்டத்துக்காக அல்ல என்பது என் கருத்து. யாராவது குடும்பத்துக்காக தியாகம் செய்த, செய்கிற ஆண்கள் என்னை கோபித்துக்கொள்ள வேண்டாம்.

பெண்கள் தியாகிகளாக மாறவோ அல்லது மாற்றப்படவோ வேண்டாம். ஆண்கள் பீற்றிக்கொண்டு திரியவும் வேண்டாம். அவரவர்குரிய கடமையை செய்வோம், பலனை எதிர்பார்க்காமலே. குடும்பம் என்ற அமைப்பில் புரிந்துணர்வு தான் முக்கியம். இந்த தியாக செம்மல்கள் யார் என்கிற போட்டியல்ல.

ஓர் ஆண் பீற்றிக்கொண்டு திரிய வேண்டும் என்பதற்காக நான் ஓர் பெண்ணாக எந்த தியாகமும் செய்ய தயாராயில்லை. :)))

ஜோதிஜி said...
This comment has been removed by the author.
Anonymous said...

Ji,
Congrats for your writings.
Nama pothu kalila nadaipayirchi nu solvom. aana athu payirchi illai, Udal aarogiyam membada nam merkollum oru excercise avvolve. Athe pola ungala eztuhu pairchi illai. Excellant writings.
Vazthukkukul sir. Pinottangalum enakku neriaya vizayangalai unarthiayahthu. nandri.
Karunakaran, Chennai

ஜோதிஜி said...

Thanks Karunakaran,