Sunday, November 28, 2010

கதை சொல்லும் நேரமிது

நாகரிக வாழ்க்கை தோன்றியிராத ஆதிவாசிகளுக்கு உரையாடல்கள் தேவையில்லாமல் இருந்தது. அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க அவர்கள் எழுப்பிக் கொண்டுருந்த சப்தங்களே போதுமானதாக இருந்துருக்கக்கூடும்..  ஓஓஓஓஓ........ ஆஆஆ....... போன்ற சப்தங்களே அவர்களின் வாழ்க்கை முழுக்க பரவியிருந்தது. இந்த சப்தங்களே அவர்களின் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான உரையாடல்களை ஒழுங்கு படுத்தியிருந்தது. 

தாங்கள் வாழ்ந்த குகை போன்ற அமைப்பில் இருந்த பெண்களுக்கு வேட்டைக்குச் சென்ற தங்களுடைய தலைவன் திரும்பி வரும் வரைக்கும் எவருடன் பேசியிருப்பார்கள்? ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்த அந்த பேரமைதி அவர்களுக்கு எதை கற்றுக் கொடுத்துருக்கும்?

உரையாடல் கலை நாகரிகத்தை விரைவுபடுத்தியிருக்கிறது என்ற உண்மையைப் போலவே அவஸ்யமற்ற உரையாடல் இரு நாடுகளை பகையாளியாகவும் மாற்றி விடுகின்றது என்பதும் உண்மை தானே? 

சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்? 

கடி எழுத்துக்களை சொந்தம் கொண்டாடும் மனிதர்கள் விரும்பும் நொடி நேர புகழ் வரைக்கும் தறி கெட்டு தனக்காக கூட்டத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படித்தான் இந்த உரையாடல் கலை இன்றைய தினத்தில் பன்முகத் தன்மையோடு வளர்ந்து கொண்டேயிருக்கிறது. பல வித அர்த்தம் கற்பித்து தரங்கெட்டும் போகத்தொடங்கி விடுகிறார்கள்..

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உரையாடல் என்பது கலை மட்டுமல்ல.  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனையை உருவாக்குவதாக இருக்கிறது.  அதுவும் எதிரெதிர் பாலினம் என்றால் கரம் சிரம் புறம் பார்க்க வேண்டியதாய் உள்ளது.  கண்கள் எங்கே கவனிக்கிறது என்பதில் தொடங்கி பேசும் கருத்துக்கள் எங்கங்கே தாவுகின்றது என்பது வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் மறைமுக கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஏறக்குறைய அவஸ்த்தை உரையாடல்களை தாண்டி தங்களுக்கான இருப்பை இருவருமே தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

பாலியல் தொழிலாளியின் மகள் என்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் என் கண்களையே பார்த்துக் கொண்டுருந்தார். எனக்கு அவர் கூறிய அந்த செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை.  நம்ப கடினமாகயிருந்தாலும் அது தான் முற்றிலும் உண்மை.  

ஒருவரின் அந்தரங்கத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல் இருக்கலாம்.  அத்தனையையும் கவனித்து பிறகு பழக வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் காட்டுக்குள் சென்று வாழ வேண்டியது.  ஆனால் என்னுடைய பார்வையில் வேறுவிதமாக தெரிந்தார்.  

ஒரு அமைப்பை உடைத்து வந்த புதிய மனுஷியாகவே தெரிந்தார்.  ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள வில்லை.  காரணம் அவர் என்னை இப்போது அதிகமாக கவனித்துக் கொண்டுருப்பது தெரிந்தது. 

அவர் நான் என்ன செல்லப் போகின்றேன் என்பதில் ஆர்வமாய் இருப்பது போல தெரிய நான் பேச்சை மாற்றுவதில் குறியாக இருந்தேன்.

"சரிங்க. அப்புறம்?" என்று பொதுவாக பேசிவைக்க அவர் முகம் மாறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பட்டென்று வெடித்தார்.

"இப்ப உங்க பார்வையில வேறுவிதமா தெரிகிறேனா? "  என்றார்.

உரையாடல் தடம் மாறிக்கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். கேட்க விருப்பமில்லையென்றாலும் பிரச்சனை.  கேட்டாலும் உச் கொட்டியே ஆக வேண்டிய அவஸ்யம்.  இதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடலாமென்று பேசத் தொடங்கினேன்.

"நாம் ரெண்டு பேரும் கடந்த இரண்டு மணி நேரமா பேசியிருப்போம. அதற்குள் உங்களின் முப்பது வருட அனுபவத்தையும் நான் எப்படி புரிந்து கொண்டுருப்பேன்னு நினைக்கிறீங்க?" 

அவர் பதில் சொல்ல எத்தனிக்க அமைதி படுத்தி விட்டு தொடர்ந்தேன்.

"ஒரு நாடு அல்லது ஒரு தலைவனின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டால் நமக்கு எத்தனையோ விசயங்கள் கிடைக்கும்.  உங்களின் சோகம், துக்கம் போன்றவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் என்ன பெரிதான பிரயோஜனம் இருக்கப் போகின்றது.  குறைந்தபட்சம் நீங்கள் சொன்னமாதிரி ரொம்ப நாளா தேடிக்கிட்டுருந்த புரிந்துணர்வு உள்ள ஆணாக நான் தெரிவதால் ஒரே மூச்சில் எல்லாவற்றையும் கொட்டிவிட பாக்குறீங்கன்னு நினைக்கின்றேன்."  

"நீங்களே உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் போய் சொல்லிப்பாருங்க. யாரும் நம்ப மாட்டாங்க.  நானே போய் ஒரு பெண் அறிமுகமான கொஞ்ச நேரத்தில் சொந்தக் கதை சோகக்கதையை பகிர்ந்துகிட்டார்ன்னு யார்க்கிட்டேயும் சொல்லமுடியுமா?  நான் சொன்னாக்கூட என் நண்பர்கள் என்ன சொல்வார்கள்.  பெண் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கடைசியில் என்ன நடந்தது என்று வேறு வித அர்த்தத்தில் கேட்டு அர்த்தபுஷ்டியாய் பார்ப்பார்கள்" என்றேன்.

அவரின் வேகம் மட்டுப்பட்டது போல் தெரிந்தது. 

சற்றுநேரம் வெளியே ஓடிக் கொண்டுருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டுருந்தார். மெல்லிய வெளிச்சத்தில் அவர் கண்களில் வடிந்து கொண்டுருந்த நீரைப் பார்த்து சற்று தர்மசங்கடமாக இருந்தது. 

காயப்படுத்தி விட்டோமோ? என்று ஆற்றாமையாக இருந்தது. மனம் முழுக்க இருந்த அவரின் ஆதங்கத்தை ஏதோவொரு வழியில் இறக்கிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். ஏராளமான அவஸ்த்தையான சிந்தனைகள் அவருக்குள் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  அவரின் கண்ணீரைக் குறித்து கேட்டாலோ அது இன்னமும் அதிகப்படுத்துவதாக மாறிவிடும். 

அழுகை என்பது எனக்குப் பிடிக்காத விசயம்.  அதுவும் பெண்கள் கண்களில் இருந்து பொல பொலவென்று வரும் கண்ணீர் எனக்கு எப்போதும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். அவருக்கு ஆறுதல் சொல்ல விரும்பாமல் இருக்கைக்கு திரும்பி வந்து பைக்குள் வைத்திருந்த திண்பண்டங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.  

"எனக்கு நொறுக்குத்தீனி பழக்கமுண்டு.  உங்களுக்குண்டா?" என்றேன்.

நான் அவரை இயல்பு நிலைக்கு மாற்று விரும்புவதை புரிந்து கொண்டு சிரித்து விட்டார். நான் நீட்டியதில் இருந்து முறுக்கை எடுத்துக் கொண்டார்.

மெதுவாக அவரை இயல்பு நிலைக்கு மாற்றி முடிந்த போது அவரின் கதை சொல்லும் நேரமும் தொடங்கியது.

"நம்முடைய முன்னோர்கள் குறித்து நமக்குள் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள் இருக்கும்.  ஆனால் எனக்கு முன்னால் என் குடும்பத்தில் இருந்த மூன்று தலைமுறைகளைப் பற்றி தெரிந்த போது வியப்பாகத்தான் இருந்தது. காரணம் எங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக தவறாமல் வந்து கொண்டுருந்த குடிப்பழக்கம்.


தாத்தாவின் அப்பாவுக்கு கள்ளு என்றால் கொள்ளைப்ப்ரியம். ஆனால் தாத்தாவிற்கு சாரயமே போதுமானதாக இருந்தது.  ஆனால் என் அப்பாவுக்கு விஸ்கியை குடித்தால் தான் பொழுதே விடியும். அந்த அளவிற்கு மொடாக்குடியராக இருந்தார்." 

"எங்களின் குலத்தொழிலே இந்த துணிகளோடு தான் இருந்தது. கைத்தறி சேலைகள் முதல் பட்டுப்புடவை வரைக்கும் தாங்களே வடிவமைப்பு செய்வது வரைக்கும் தொழில் ரீதியாக நல்ல நிலையில் தான் மூன்று தலைமுறையும் இருந்தது.  ஆனால் அப்பாவிடம் தொழில் வந்த போது உருவான தொழில் போட்டிகளிலிருந்து அவருக்கு மீண்டுவரத் தெரியவில்லை. அவருக்கு மற்றொரு பிரச்சனை. என் அம்மாவின் அழகு.  எங்கள் வீட்டுக்கு எவரும் எளிதில் வந்து விட முடியாது.  அப்பா தொழில் மேல் வைத்திருந்த கவலைகளை விட அம்மா குறித்து தனக்குள் வைத்திருந்த மாய பிம்பங்கள் தான் அதிகமாகயிருந்தது.  அதுவே எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்ற மாய வலைக்குள் அப்பாவை சிக்க வைத்துவிட்டது. என்னுடைய பள்ளி காலங்களில் ஒவ்வொரு நாளும் அம்மாவின் காயங்களைப் பார்த்தபடியே தான் சென்று கொண்டுருந்தேன்.  அதன் தாக்கம் என்னை பலவிதங்களிலும் படுத்தி எடுத்தது.  என்னுடைய ஒரே தம்பியிடம் கூட இவற்றை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவனும் ஏறக்குறைய அப்பாவின் மறு உருவமாகவே இருந்தான்." 

"பெண் என்பவள் அடுக்களைக்குள் இருப்பவள் என்ற அவர்களின் ஆணாதிக்க கருத்தை என்னால் உடைக்க முடியவில்லை. ஆனால் அம்மாவின் பார்வை வேறுவிதமாக இருந்தது.  எந்த பிரச்சனைகளையையும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்." 

"அவரின் நோக்கமெல்லாம் என்னை கல்வி ரீதியாக மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். பட்ட காலிலே படும் என்பது போல பத்தாவது வந்த சேர்ந்த போது என்னைச் சுற்றி வந்து கொண்டுருந்த பையன்களின் பேச்சும் செயல்பாடுகளும் அப்பாவை ரொம்பவே யோசிக்க வைக்க என் படிப்பையும் நிறுத்தி விட்டார்."

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். 

நான் கூர்ந்து கவனிக்கிறேனோ என்பதை கவனிப்பது புரிந்தது. எந்த வியப்புக்குறியும் எனக்குள் இல்லாததைப்பார்த்து அவரின் முகத்தில் வித்யாச ரேகைகள் தெரிந்தது.  நான் கவனித்த போதிலும் வெறுமையாக போலித்தனமாக சிரித்து வைத்தேன்.  ஆறுதல் சொல்வேன் என்று நினைத்துருப்பாரா தெரியவில்லை. ஆனால் வேறுவிதமாக புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரின் கேள்வி உணர்த்தியது.


"ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்" என்றார்

நான் பதில் சொல்ல முயற்சிப்பதற்குள் "என் அப்பா குணாதிசியத்தை தெரிந்து கொண்டு அப்புறம் உங்கள் கருத்தைச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அப்பாவைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

அது பாஸ்பரஸ் குண்டாக இருந்தது.

24 comments:

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி,

நன்றாக நகர்த்திரீங்க போன பதிவில கொஞ்சம் pause எடுத்துக்கிட்டதிற்கு காரணம் உங்களுடைய (அந்த பெண் தொடர்பான அறிமுகத்தில்) ‘எடுத்துக் கொள்ளும்’ சக்தி எப்படியாக இருந்திருக்கும்னு நிதானிச்சு பார்க்கத்தான்.... ;-)

//எனக்கு அவர் கூறிய அந்த செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை. நம்ப கடினமாகயிருந்தாலும் அது தான் முற்றிலும் உண்மை.//

ஒருவரின் அந்தரங்கத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல் இருக்கலாம். அத்தனையையும் கவனித்து பிறகு பழக வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் காட்டுக்குள் சென்று வாழ வேண்டியது. //


மேற் சொன்ன இரண்டு பத்திகளை வைச்சு எந்தளவிற்கு நீங்கள் திறந்த நிலையில் வாழ்க்கை எனும் பெரும் சமுத்திரக் கல்வியை கற்றுக் கொள்ளும் மாணக்கனாகவே இருப்பீர்கள் என்பதனை உள் வாங்க முடிகிறது.

அப்பாவின் ‘பயம்’ சார்ந்ததுதான் நம்முடைய அனைத்து பெண்கள் சார்பான primitive apes சார்ந்த அணுகுமுறைகளும் சற்றும் பண்புநிலையை எட்டாமால் effortlessஆக நகர்கிறது என்பேன். தன் தாயிற்கும், தன் சகோதரிகளுக்குமே நாம் ’காவல்’ இருந்தால்தான் அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என்ற ஆதி காலத்து வாலில்லா மனிதர்களின் புரிந்துணர்வது. காவலுக்கு என்று வரும் பொழுது அங்கே நம்முடைய வாழ்க்கையை யார் வாழ்ந்திருக்க முடியும்.

இங்கேதான் என்னுடைய அடிப்படையான கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி நாம் காவல் காத்துத்தான் அவர்களை(பெண்களை) ஒழுக்கப்படுத்த வேண்டுமெனில், அவர்களுக்கென்று விருப்பு, வெறுப்பு எதன் பொருட்டும் இருக்கிறதா இல்லையா?

மேலும் பேசுவோம்...

லெமூரியன்... said...

எனக்கும் பெண்கள் அழுவது பிடிக்காது....
ஆனால் அழுகை என்பதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் பெண்களைதான் இங்கு குறிப்பிடுகிறேன்.......
ஆனால் எல்லாரிடத்திலும் தங்களின் சொந்த வாழ்க்கை கஷ்டங்களை குறித்து பேச எந்த பெண்ணும் முன்வர மாட்டார்.........
முதர்ச் சந்திப்பில் ஒரு வித முதிர்ச்சியுடைய ஒரு ஆணிடம் இயல்பாக ஒரு பெண்ணால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இயலும் ...........
ஆறுதல் வேண்டியிருப்பார் எனில் அவர் அந்தளவிற்கு மன பக்குவமுடைய சில் மனிதர்களை சந்திக்க தவறியிருப்பார் என எண்ணுகிறேன்.........
உங்களின் பய உணர்விற்கு ஒரு அளவீடு வைத்து கொள்ள வேண்டியதுதானே நண்பா ???? திருப்பூரில் பார்த்த பெண்களைப் போலவே எல்லா பெண்களையும் பார்க்க வேண்டுமா என்ன????\
சில சகிக்க முடியா நேரங்களில் சக மனிதர்களின் ஆறுதலே பெரிய தெம்பாக மாறும்.......நீங்கள் உச் கொட்டி அனுதாபத்தை தெரிவித்திருக்க வேண்டும் என்றேன்னவில்லை நான்...
ஆனால் அவரின் போக்கிலேயே சில நல்ல வார்த்தைகள் கூறி அவரை மிதமான நிலைக்கு கொண்டுய் வந்திருக்கலாமே???
கண்டும் காணாமல் போக வேண்டும் என்ற அவசியம் என்ன????
மன்னிக்கவும்.சோம பானம் அருந்தியிருக்கிறேன்.......
அதனால் சற்று பிழையாக கட்டுரையின் அர்த்தைத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் ...விளக்கம் தேவை இல்லை தோழனே..........

ஹேமா said...

ஜோதிஜி....அடுத்தவர்கள் மனதை புரிந்துகொண்டு பக்கவமாக வாழும் பக்குவம் கற்றிருக்கிறீர்கள்.
வாழ்வில் எதையும் அசிங்கமாக அருவருப்பாக நினைக்காமல் ஏன்...எதற்கு என்று கேள்விகள் கேட்கத்தொடங்கிவிட்டால் அதைப்பற்றிய உண்மைகள் புலப்படுகையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்கவம் வந்துவிடுகிறது !

நிறையப் பேசுவதால் பிரச்சனைகள் கூடினாலும் புரிதலும் கூடும் !

தண்ணிப்போத்தலின் அடுக்குவரிசை
அழகாயிருக்கு ஜோதிஜி !

Seiko said...

குண்டு போட்டார் என்று போன பதிவில் முடித்துவிட்டு, அந்தச்செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்கிறீர்கள். குண்டு போட்டாலும் அசராத மனிதர் ஜோதிஜி?? வாழ்க.
//"இப்ப உங்க பார்வையில வேறுவிதமா தெரிகிறேனா? "// என்று கேட்பவர், முதலில் அதைச்சொல்லாமலேயே இருந்திருக்க வேண்டும். இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் (தமிழ்...?)
அவரை நீங்கள் அறிமுகப் படுத்திய பதிவிற்கும், அவருடைய கண்ணீருக்கும் பொருத்தமாக இல்லை. அதுவும் இரண்டு மணி நேரமே அறிமுகமானவரிடம், கண்ணீர் காண்பித்தால் அவர் கோழை.
அவரின் அம்மா, பாலியல் தொழிலாளி ஆனது யாரால், எதனால்?
நிற்க..., சுதந்திரத்தில் ஆரம்பித்து, நட்புக்கு மாறி, கதைக்கு வந்துவிட்டது. ஏமாற்றிவிடாதீர்கள் ஜோதிஜி.

Bibiliobibuli said...

ஏன் ஜோதிஜி இப்பிடி எலும்புக்கூடு, மண்டையோடு, விதவிதமா போத்தல் படங்கள்!! பதிவுக்கு சம்பந்தமில்லாமலிருப்பது போலுள்ளது.

கடைசியில் இருக்கிற படத்தையும் சேர்த்துப்பார்த்தா ஏதோ Harry Potter படம் போலிருக்கிறது.

ப.கந்தசாமி said...

படிக்கிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றாக செல்கிறது..

நான் சந்தித்த ஒரு பாலியல் தொழிலாளி ,

" நான் யார் என அறிமுகம் செய்தால் நீங்கள் என்னிடம் பேசவே மாட்டீர்கள் " என்றார்.

எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை என்றதும் அறிமுகம் செய்தார்.

எனக்கேதும் அதிர்ச்சியில்லை..

நாம் கடந்து செல்லும் 100 நபர்களில் 50% ஆண்கள் பாலியல் தொழிலாளியிடம் செல்லாதவராக இருக்க முடியுமா?..

மீதி 50% சினிமா நடிகை/நடிகனை மனதில் எண்ணாது இருந்திருக்க முடியுமா?..

மேலும் அவ்ருக்கு உதவி தேவையா என்ற போது , அவர் சொன்னது என்னை மிக அவமானப்படுத்தியது.

" என்னிடம் நீங்க தொடர்ந்து பேசினாலே பெரும் உதவிதான்.. என் மன குறைகளை செவி மடுத்தாலே.. "

ஆக எல்லா பிரச்னைகளையும் நாம் தீர்க்க முடியாதென்றாலும் செவி மடுப்பதே பேருதவி சிலருக்கு.. மனதில் புழுங்கிக்கொண்டிருதவற்றை நம்பிக்கையாளரிடம் பகிர்ந்த திருப்தி...

அதை தந்துள்ளீர்கள்.. அவருக்கும்..

எஸ்.கே said...

உண்மைதான் ஒருவர் அந்தரங்கத்தை பார்த்து பழக நினைத்தால் நாமும் யாரிடமும் பழக முடியாது, நம்மிடமும் யாரும் பழக மாட்டார்கள்!

vinthaimanithan said...

நல்லா போகுது! கருத்தொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

expecting next post

Thomas Ruban said...

கதை சுவாரஸ்யமாக போகிறது தொடருங்கள்....

http://rajavani.blogspot.com/ said...

நமக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டால் அல்லது பழகினால் உண்மை என்பதை நாம் அறியமுடியுமா அன்பின் ஜோதிஜி.

ஜோதிஜி said...

தெகா உரையாடலின் கிடைத்த மகிழ்ச்சியை விட காத்திருந்து படித்து உள்வாங்கிய உங்களின் அக்கறைக்கு நன்றி.

லெமூரிய்ன் வெளிப்படையாகச் சொன்ன நிலைக்கும் நிதானம் தவறாத எழுத்துக்கும் நன்றி.

ஹேமா போத்தலில் அதன் அதன் சராம்சமும் இருக்கிறது. எதை அடித்தால் எது கிடைக்கும் என்பதும் புரிந்து கொள்ளலாம். விமர்சனம் சிறப்பு.

ஜோதிஜி said...

சீகோ ரொம்பவே வியக்க வைத்துவிடுவீர்கள் போல. களம் ஒன்று. பார்வைகள் பல. அவரவர் உணர்வுகளில் தேவையானவற்றை எடுத்துக் கொள்வதே சிறப்பு.

நன்றி கந்தசாமி ஐயா.

பயணமும் எண்ணங்களும் உண்மையான பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்க தானோ?

உண்மைதானே எஸ்கே-

நன்றி மனிதா. பழனிச்சாமி ரூபன். உண்மையான வார்த்தைகள் தவறு. நாம் தான் எல்லாவற்றுக்கும் முதல் காரணம். எதிர்பாரத சம்பவங்கள் மிகக்குறைவு.

ஜோதிஜி said...

ரதி உங்கள் கோபம் புரிகின்றது.

ஒவ்வொரு சரக்குக்கும் ஒவ்வொரு விதமான இன்பம் உண்டு. அது பலருக்கும் தெரிவதில்லை. குடிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வடிவேல் இன்னோருவரின் தலையை முகர்ந்து பார்த்து விட்டு அடிப்பது போலத்தான் இந்த குடியை குடித்துக் கொண்டுருக்கிறார்கள். ரசித்த படத்தை மாட்டி வைத்தேன்.

மண்டை ஓடு சுதந்திரத்தை உடைத்து வெளியே வரும் பெண்களை சமூகம் பார்க்கும் பார்வை குறீயீடாகத் தெரிவதால் அதையும் இணைத்து வைத்தேன்.

ஏறக்குறைய ஒவ்வொரு நிகழ்வுகளும் ஹாரிபாட்டர் போலத்தான் இருக்கிறது. அது கற்பனை உலகம். இது உண்மையான ஆனால் புரிபடாத மாய உலகம்.

தகுதியானவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்.
அற்றவர்கள் முயற்சிக்க வேண்டியது தானே?

Unknown said...

ம்ம்... பெரும்பாலன பெண்கள் பாலியல் தொழிலுக்கு செல்ல குடும்பத்தினர் , மிக நெருங்கிய உறவினர் தான் காரணம் என்பது ம்றுபடியும் நிருபணம் ஆகிறது..

'பரிவை' சே.குமார் said...

நல்லா போகுது....

சுடுதண்ணி said...

//ஒவ்வொரு சரக்குக்கும் ஒவ்வொரு விதமான இன்பம் உண்டு. அது பலருக்கும் தெரிவதில்லை. //

ஒன்னே முக்கால் அடியிலே பிரபஞ்ச தத்துவத்தை புட்டு வச்சுப்பூட்டீங்க :)

Anonymous said...

//"ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்" என்றார்//

வேறென்ன? பயந்தான் :)

(ஆனால் நான் அனானியாக வந்ததற்கு பயம் காரணமல்ல.. :) )

தமிழ்த்தோட்டம் said...

கதை மிகவும் அருமையா இருக்கு

ஜோதிஜி said...

வினோத்து ஆரம்பத்துலேயிருந்து உங்க அலும்பு அளவில்லாமல் போய்க்கிட்டேயிருக்கு...........

வாங்க குமார்.....

நண்பா வேறென்ன பயம்? பெண்கள் இப்ப ஆண்களை பார்த்து பயந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறீங்களா?

ஒன்னே முக்கால் தத்துவத்த இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே. ஐய்யய்யோ ஒடச்சா சிந்திடுமே(?)

வாங்க தமிழ்தோட்டம்.

Unknown said...

எனக்குள் சில புரிதல்களை இந்த பதிவும், பின்னூட்டங்களும் ஏற்படுத்தி உள்ளன.

தாராபுரத்தான் said...

பகிர்தல்..சுகம்..ம்..சொல்லுங்க

ரோஸ்விக் said...

அவஸ்யமற்ற - அவசியமற்ற என்பது சரியாக இருக்குமோ?

உங்களின் வாழ்க்கையில் கண்ட விதவிதமான சரக்குகள் உள்ளன. பகிர்ந்துகொள்ளுங்கள். அனைத்தும் உங்கள் தலைக்கே ஏறாமல் இருக்கட்டும்.