Friday, November 12, 2010

பெண்fகள், குழந்தைகள் கொஞ்சம் சுதந்திரம்

" பெண்களுக்கு சம உரிமை " என்ற கருத்து குறித்து எவராவது உங்களிடம் வந்து கேட்டால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்?.

என்னால் தைரியமாகவே சொல்ல முடியும்.

 " முதலில் அவர்களுக்கு உரிமை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்.  அதன் பிறகு அவர்களின் உரிமையைப் பற்றி யோசிக்கலா மென்பேன்". இதை படிக்கும் பெண்களுக்கு கோபம் வருகின்றதா?
வாருங்கள் ஒவ்வொரு படியாக மேலே செல்வோம்.

இந்த கட்டுரை எழுத காரணமாக இருந்த கனடாவில் வாழும் ரதியே இப்போது தான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.  இதுவரைக்கும் கூர்மையான விமர்சனங்களால் ஆச்சரியப்படுத்தியவர் கொடுத்த தாக்கமே இந்த பதிவு.

நான் கடந்து வந்த பாதையில் பெண்கள் கொடுத்த தாக்கம் அதிகமானது.  முதல் இருபது வருடங்கள் என்னைச் சுற்றி ஏதோவொரு வகையில் பெண்கள் தான் அதிகமாகயிருந்தனர். அம்மா, சின்னம்மாக்கள்,, பாட்டி, அக்கா, தங்கை, என்று தொடங்கி பள்ளி, கல்லூரி வரைக்கும் பெண்களுடன் வாழ்ந்த வாழ்க்கை யென்பது இயல்பானதாகவே இருந்தது. 

கடைசியில் தட்டெழுத்துப் பயிலகத்தில் என்னை வைத்துக் கொண்டு கும்மியடித்த அக்காக்கள் வரைக்கும் இருந்தார்கள். கல்லூரியில் கூட எனக்கு முந்தைய வருடத்தில் படித்துக் கொண்டுருந்த பெண்கள் பேருந்தில் நல்ல பழக்கமாகியிருந்தார்கள். திருப்பூர் வந்து சேர்ந்த போது ஒவ்வொரு இடத்திலும் பெண்களுடன் பழக வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். எந்த இடத்திலும் நான் எல்லை மீறியதில்லை. வழிந்து கொண்டு என்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை.

பெண்களும் இயல்பானவர்களே என்று என் சிந்தனைகளும் மாறியிருந்த காரணத்தால் எந்த வித எதிர்மறை ஈர்ப்பும் உருவாகவில்லை. இந்த அடிப்படை பழக்கமே இன்றைய தொழில் வாழ்க்கையில் இழப்புகள் இல்லாமல் தாண்டி மேலேறி வர முடிந்துள்ளது. காதல், காமம் மீறி பெண்களை இயல்பாய் நேசிக்க முடிந்தது. விகல்பம் இல்லாமல் பழக முடிந்தது. 

இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரிக்க மாட்டேன்.  காரணம் நான் பார்த்தவரையிலும் பெண்களுக்கு சுதந்திரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இங்கே நான் சந்திக்கும் பெண்கள் மூன்று வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள். தகுதிக்கு மீறிய ஆசைகள், உல்லாசத்தை விரும்பு பவர்கள், அடிப்படை கடமைகளுக்கும் எதார்த்த நடைமுறைகளுக்கும் வித்யாசம் தெரியாத வர்கள்.  இப்படித்தான் இருக்கிறார்கள்.  இதில் ஏழை பணக்காரர் என்ற வித்யாசம் இல்லை. இங்குள்ள பாதிக்கு மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களில் தங்களின் கணவனின் முறையற்ற வாழ்க்கையை எந்தவொரு முதலாளிமார்களின் மனைவிகளும் கண்டு கொள்வதில்லை. காரணம் அவரும் அதே போன்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார் ஏற்கனவே போடப்பட்ட  ஒப்பந்தம் போலவே இருவருமே வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். பணம் என்ற எல்லைக்கோடு இருவரையும் பிரித்து வைத்துருக்கின்றது. அதுவே அவர்கள் சேர்ந்து வாழவும் காரணமாக இருக்கின்றது.

நான் இங்கு சந்திக்கும் ஒவ்வொரு பெண்களும் தங்களின் சுதந்திரத்தை ஒரு சிறிய வட்டத்திற்குள் முடித்துக் கொண்டு விடுகிறார்கள். கண் புருவத்தை அழகு படுத்துவது. அளவு தெரியாத உதட்டுச் சாயத்தை அப்பிக் கொள்வது, உள்ளாடைகள் தெரியும் ஆடைகளில் அக்கறை காட்டுவது. உன் குத்தமா? என் குத்தமா என்று வீட்டில் சண்டை போட தயாராய் இருப்பது. தங்களால் சாதிக்க முடியாததை தங்கள் குழந்தைகளின் மேல் திணிப்பது. தங்களை மேல்தட்டு வர்க்கமாகவே மாற்றிக் கொள்ள அவசரப்படுவது, தொலைக்காட்சி பெட்டியின் முன் தவமிருப்பது போன்ற நூறு குற்றச்சாட்டுகளை என்னால் சுமத்த முடியும்.. கிரண்பேடி, இந்திரா நூயி, அருந்ததி ராய், அர்ச்சனா ராமசுந்தரம், மாலதி போன்ற பெண்கள் யாரென்று சமகாலத்து பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்?  கிடைக்கும் பதில்?????

அரசியல் குறித்து, ஆட்சி அதிகாரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவஸ்யமில்லை என்று கருதும் பெண்கள் தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமாக இருக்கிறார்கள். அரசியலில் பங்கெடுத்த பெண்களும்கூட கைப் பொம்மையாகத்தான் இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் சின்ன வட்டத்திற்குள் உழன்று கொண்டு பெரிய ஆசைகளுக்கு ஆசைப்படுபவர்கள் தான் இன்றைய பெண்கள். இவர்களிடத்தில் உண்மையான் உழைப்புமில்லை. உருப்படியான நோக்கங்களும் இல்லை.
பெண் என்பவளுக்கு இயற்கையாக அழகுணர்ச்சிகளில் ஆர்வமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் அளவு தெரியாத அவர்களின் செயல்பாடுகள் தான் எரிச்சலை உருவாக்குகின்றது. பெண் என்பவள் அப்பாவுக்கு, கணவனுக்கு, குழந்தைகளுக்கு மிக முக்கிய மானவள். இவர்களை சார்ந்து வாழும் வாழ்க்கையில் தான் அவளின் ஒவ்வொரு ஈடுபாடும் இருக்க வேண்டும். எத்தனையோ மனிதர்களின் தியாகங்களால் தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டுருக்கும் நவீனங்கள் நம்மை வந்து அடைந்துள்ளது. அதுபோலத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழந்த ஒவ்வொரு பெண்களின் தியாகங்கள் தான் பல குடும்பங்களின் ஆதாரமான ஆணி வேர்களை பாதிப்பாகாமல் இருக்க வைத்துக்கொண்டுருக்கின்றது.

ஒவ்வொரு பெண்களின் முதிர்ச்சியற்ற சிந்தனைகள் அவரை மட்டுமல்ல அவரை சார்ந்துள்ள கணவன் குழந்தைகள் முதல் அடுத்த தலைமுறை வரைக்கும் பாதிப்பை உருவாக்குகின்றது. அப்படியென்றால் ஆண்கள் ரொம்ப யோக்கியமா? என்ற கேள்வி வருமே? ஆண் என்பவன் சமூக வாழ்க்கையில் அண்ணன், தம்பி, அப்பா, கணவன் என்று தொடங்கி குடிகாரன், காமாந்தகன், பொறுப்பற்றவன், திருடன், ஏமாற்றுக்காரன் என்று எத்தனை பாத்திரங்கள் வகித்தாலும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெண்ணின் பாதிப்பு நிச்சயம் இருக்கும்.  நாம் நடந்து வந்த பாதையில் வெறுக்கக்கூடிய அளவில் வாழ்ந்த ஆண்களின் வாழ்க்கையை அவரவர் மனத்திரையில் கொண்டு வாருங்கள்.

ஒன்று அன்புக்காக ஏங்கியவன். அல்லது கிடைக்காத போது மாறியவன்.

எப்படி வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ளுங்கள்.  எந்த இடத்திலும் ஆண் என்பவன் வெறும் ஜடம் மட்டுமே. ஆண்கள் தலைவர், அரசியல்வாதி, தொழில்திபர், பணியாளர், தொழிலாளர் என்ற எத்தனை சமூக அந்தஸ்தில் இருந்தாலும் அவனின் தொடக்கமும் முடிவும் ஏதோவொரு வகையில் இந்த பெண்களுடன் தான் இருக்கிறது, ஒவ்வொரு ஆணணும் முதன் முதலாக அம்மா என்ற பெண்ணின் கரங்கள் பட்டது முதல் மனைவி என்ற பெணணின் கைகளை தொடும் வரைக்கும் அவனின் சிந்தனைகள் ஒவ்வொன்றும் ஏதேவொரு பெண்களால் தான் மாற்றம் பெற்றுக் கொண்டே வருகின்றது.

நம்முடைய பார்வையில் ஒரு ஆண் தறுதலையாகவே அல்லது தரமான மனிதனாகவே இருந்தால் நிச்சயம் அதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் கைங்கர்யம் இருந்தே தீரும். நம்பக் கடினமாக இருக்குமே?  இது தான் உண்மை.

பெண்கள் என்றால் ஒவ்வொருவரும் அவரவர் அம்மாவிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் நான் என்னுடைய சகோதரிகளிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

என் அம்மா என்பவர் உழைக்க மட்டுமே பிறந்தவர்.  அப்பாவின் மறைவுக்குப் பிறகு தான் அவர் வெளியுலகத்தைப் பார்த்தவர். ஓய்வில்லாத வேலைகளிடையே அடுத்தடுத்து வந்து கொண்டுருக்கும் குழந்தைகளை கொஞ்சுவதற்கு கூட நேரமில்லாமல் அவர் வாழ்ந்த வாழ்க்கையென்பது நேர்த்திக்கடன் போலவே வாழ்ந்தவர். பெரிய குடும்பம்.  கூட்டுக் குடித்தனம்.  நிறைய நபர்கள்.  வேலைகளும் அதிகம்.  கல்லூரி முடிக்கும் வரையிலும் அம்மா மனம் விட்டு யாருடனும் பேசி நான் பார்த்தது இல்லை.

இன்று வரையிலும் அவர் உலகமே தனி தான்.  மூன்று நேர சாப்பாடு. முடிந்தால் தரையில் அப்படியே கால் நீட்டி சரிந்து கொள்ளும் எளிமை.  ஆடம்பரம் இல்லாத அவஸ்யத்திற்கு மேல் விரும்பாத அவரின் வாழ்க்கை இன்று வரையிலும் எனக்கு ஆச்சரியம் தான்.  காரில் சொன்று அழைத்து வந்தாலும் வரும் போது பெட்ரோல் செலவை கண்க்கை வைத்துக் கொண்டு திட்டும் அவரை நான் திருத்த முயற்சிப்பதில்லை.

சிக்கனம் தான் வாழ்க்கை என்பதை தன் வாழ்க்கை மூலம் இன்று வரையிலும் உணர்த்திக் கொண்டுருக்கிறார்.  அவரின் ஒவ்வொரு தியாகமும் இன்று எங்களை உயரத்தில் வைத்திருக்கின்றது. ஊர் முழுக்க இருக்கும் பெயரை காப்பாற்றி வைத்திருக்கின்றது.  நானே பலமுறை அம்மாவிடம் கலாய்த்திருக்கின்றேன்.

 " உன்னைப் போல நான் பெண்ணாக வாழ்ந்துருந்தால் வேறுவிதமாகத்தான் வாழ்ந்திருப்பேன் " என்று சொல்லியிருக்கின்றேன்.

ஆனால் நம்ம முடியாத அம்மாவின் சகிப்புத்தன்மை இன்றைய சூழ்நிலையில் ஒரு மிகப் பெரிய ஆலமரத்தை உருவாக்கியுள்ளது. பேத்தி பேரன்கள் என்று தொடங்கி அவர் குடும்ப வாழ்க்கையில் பெற்ற மொத்த ஆதரங்கத்தையும் மறக்கடித்துள்ளது.

நான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையில் எந்த அடிப்படை வசதிகளுக்கும் குறைவில்லை.  ஒரே ஒரு குறையைத் தவிர.  இன்று என் குழந்தைகள் வாழுகின்ற எந்த சுதந்திரத்தை நான் மட்டுமல்ல நான் பழகிய என்னுடைய எந்த நண்பர்களும் கூட பெற்றதில்லை.  நண்பர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் விதவிதமான நடைமுறைப் பழக்கம் இருந்ததே தவிர எவர் வீட்டிலும் கூடி அமர்ந்து குதுகலமாய் பேசிப் பழகி நான் பார்த்ததில்லை. அதிகப்பிரசங்கி என்று அடக்கி விடுவார்கள். இன்னும் கொஞ்சம் நாம் மீறினால் சேரக்கூடாதவன் என்ற பட்டியலில் சேர்த்து விடுவார்கள். .

சுதந்திரம் என்பது சுற்றித் திரிவதல்ல. சுகத்தை தேடி அலைவதும் அல்ல. நம்முடைய எண்ணங்களை தைரியமாக பகிரிந்து கொள்ள முடிந்தால் அதுவே பெரிய சுதந்திரம் தானே?  நான் என் அப்பாவின் முன்னால் நின்று பேசியது மிகக் குறைவு. அக்காக்கள் வழியாகவே ஒவ்வொரு செய்திகளும் கடத்தப்படும். இந்திய நாடென்பது ஜனநாயகப் பாதையில் இருந்தாலும் எத்தனை குடும்பங்களில் முழுமையான ஜனநாயகம் இருக்கின்றது? எத்தனை குழந்தைகள் முழுமையான தெளிவான சிந்தனைகளுடன் வளர முடிகின்றது. எந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முழுமையான புரிதல்களை சுட்டிக் காட்டி வளர்க்கின்றார்கள்?

கிராமத்து பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் உரையாடுவது குறைவு.  ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளின் ஒழுக்கத்தை கவனித்த அளவிற்கு அவர்களின் அறிவுக்கூர்மை எந்த அளவிற்கு வளர்கின்றது? என்பதை கவனித்துப் பாரத்து இருப்பார்களா என்பது சந்தேகமே. கிராம பள்ளி ஆசிரியர்கள் கூட மாணவர்களின் அதிகப்படியான கேள்விகளை விரும்பியதில்லை. பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரே வட்டத்திற்குள் உழன்று கொண்டுருநதே முக்கிய காரணம்.

ஆனால் இன்று அத்தனையும் உடைபட்டு விட்டது. ஒழுக்க விதிகளும் தளர்ந்து விட்டது.  இன்றைய சுதந்திரமென்பது உல்லாம் என்பதன் மறுபெயராக இருக்கிறது. ஆண்களைப் போலவே நாங்களும் சரி நிகர் சமானமே என்ற பெண்கள் கூட்டமும் பெருகி விட்டது.  படித்த பெண்களின் பொருளாதார சுதந்திரம் இன்று அடிப்படை வாழ்க்கையின் தன்மையையே மாற்றியுள்ளது. அடங்க மறுப்போம் அத்து மீறீவோம் என்று மாறியுள்ளார்கள். ஆண்களின் பிரச்சனைகளை விட இங்கு பெண்களால் உருவாகும் பிரச்சனைகள் பெரிய பஞ்சாயத்தாக முடிகின்றது.
அர்ச்சனா ராமசுந்தரம்
பெண்கள் பெற்ற பொருளாதார சுதந்திரம் என்பது இன்று பெரும் புயலாக உருவெடுத்துள்ளது. 

இது சரியா தவறா என்பதைவிட ஒவ்வொரு பெண்களும் தங்களை தகுதியான வர்களாக மாற்றிக் கொண்டுருக்கிறார்களா? அறிவு சுதந்திரத்தை மறந்து விட்டு உடுத்தும் ஆபாச உடைகளில், அலங்காரங்களின், பேசும் விதங்களில், ஒழுக்கம் மாறிய பாதைகளில் இன்று ஒவ்வொரு பெண்களும் தங்களின் பரிபூரண சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டுருக்கிறார்கள்.

விதிவிலக்குகளைத் தவிர..

முக்கியமாக இன்றைய ஊடகமென்பது பெண்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.  ஒவ்வொரு விளம்பரங்களும் பெண்களை குறிவைத்தே உருவாக்கப்படுகின்றது. அழிந்து போய்க்கொண்டுருக்கும் குடும்பங்களில் ஆண்களின் மதுப்பழக்கம் எந்த அளவிற்கு காரணமாகயிருக்கிறதோ அதே அளவிற்கு பெண்களின் ஆடம்பர சிந்தனைகளும் முக்கியமாக இருக்கிறது.  தலைமுறைகளின் தடுமாற்றம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.

எந்த கிராமத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டுக்குள் முன் அறையில் இருந்ததில்லை. படுக்கைறை காட்சிகளை லஜ்ஜையில்லாமல் குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்த்ததுமில்லை. வீட்டுக்கு வரும் எந்த வார பத்திரிக்கைகளிலும் அரை நிர்வாண படங்களும் இல்லை. பரபரப்பு செய்திகள் என்பது மிக அரிது.  எந்த தலைவராவது இறந்தால் தான் படபடப்பு செய்தியாக வரும்.  ஒவ்வொரு மாணவனின் அறிவென்பது அவன் படிக்கும் பாடப் புத்தகங்களை சார்ந்தே தீர்மானிக்கப்பட்டது. அதிலும் வாங்கி வரும் மதிப்பெண்கள் தான் சமூக அங்கீகாரமாக இருந்தது. எந்த வகையில் பார்த்தாலும் கிராமத்து மனிதர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இயல்பான வாழ்க்கையாகவே இருந்தது.
கிரண்பேடி

இந்த வாழ்க்கையில் வாழ்ந்த மாணவர்களின் வாழ்க்கை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்?  நான் எதிர்காலத்தில் என்னவாகப் போகின்றேன் என்ற கேள்வியே எவரும் கேட்டு இருப்பார்களா? என்பதே சந்தேகம் தான். இப்படி படித்த பெண் குழந்தைகள் எந்த உயரத்தை அடைந்திருக்க முடியும்? ஆனால் என் அக்காக்களுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது. அவர்கள் பள்ளி கல்லூரியில் வாங்கிய மதிப்பெண்களை விட, அதனால் அடைந்த உயரங்களை விட தனக்கு விரைவில் திருமணம் ஆகி விட வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாகயிருந்தது.

காரணம் வயது அதிகமாக தெருவில் சந்திக்கும் கேள்விகளை தவிர்க்க வேண்டும் உட்கார்ந்திருக்கும் பதவிகளில் கை நிறைய வாங்கும் சம்பளம் முக்கியமில்லை. கைபிடித்தவனுடன் வாழ்க்கை என்பதில் தான் குறியாய் இருந்தார்கள். இன்னும் உனக்கு மாப்பிள்ளை வரவில்லையா? என்ற கேள்விகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இதைத்தான் தங்களின் முக்கிய லட்சியமாக வைத்திருந்தார்கள். நான் வெளியே பழகிய மற்ற அக்காக்களின் விருப்புங்களும் இப்படித்தான் இருந்தது. திருமணம் என்பது பெண்களுக்கு ஒரு வகையில் விடுதலை. பெற்றோர்களும் பாரம் குறைவு. மற்றொரு வகையில் குடும்ப அங்கீகாரம்.

கிராமத்துப் பெண்கள் இப்படித்தான் கருதினார்கள்.  ஆனால் இன்று?

ஆனால் கடந்த மாதங்களில் நான் சந்தித்த பெண்கள் என்னை ரொம்பவே பாதிப்படையச் செய்தார்கள். இதுபோன்ற பெண்கள் குறித்த நேர்மறை எதிர்மறை எண்ணங்களால் தான் என்னுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.


பெண்ணே நீ யார்? தொடர்ந்து பேசுவோம்.......................

65 comments:

மொக்கராசா said...

மிக அருமை, தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்,city பெண்களின் சுதந்திரம் Rave Party,Pub,disco,compulsory boy friendship,மணிகணக்கில் செல் போன் அரட்டை, மட்டமான அரைகுறைஆடைகள் என்று வீணாகப்போகிறது.

Anonymous said...

அட்டகாசமா சொல்லி இருக்கீங்க..எத்தனை பேர் விதவிதமா சொல்றாங்க...ஆண்களை போல தம் அடிப்பதுதான் பெண் சுதந்திரம்னு சிலர் நினைக்கீராங்க

http://thavaru.blogspot.com/ said...

தங்களுடைய கருத்துகள் சரியான பாதையில் தொடர வாழ்த்துகள் அன்பின் ஜோதிஜி.

தமிழ் உதயம் said...

நீங்க எடுத்து வைத்துள்ள ஒவ்வொரு கருத்துகளுக்கும் (குற்றச்சாட்டுகள் என்றும் சொல்லலாம்) இங்கே கருத்துரை வழங்குவது மிக சிரமமான விஷயம். இடுகை அளவு நிளும். அதனால், இதை வைத்து, இதே சிந்தனையில், என் அனுபவ பாதிப்பை வைத்து இதற்கு பதில் சொல்லும் விதமாக, ஒரு தொடர் பதிவு போல் எழுதலாமா.

பதிவு குறித்து சுருக்கமாக ஒரு வரி. உங்கள் கருத்து சிலவற்றுக்கு ஆமாம் சரி எனலாம். சிலவற்றுக்கு இல்லை தவறு எனலாம்.

Unknown said...

உண்மைதான் அண்ணே. தங்களுக்கான சுதந்திரம் எது என்பதன் வரையறை தெரியாமல்தான் பெரும்பாலான பெண்கள் வாழ்வினை நகர்த்துகின்றனர். எங்கள் சமூகத்தில் பெண் சுதந்திரம் பற்றி பேசவே முடியாது, ஆனால் திருமணம் ஆனதும் தங்கள் அன்னையைப்போல் குடும்பம் மட்டுமே கதி என்று தம்மை மாற்றிகொண்ட எத்தனையோ அன்னையர்களை எனக்குத்தெரியும். மிகத் தெளிவாக அலசியிருக்கிறீர்கள் என வந்தனங்கள்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

என் அக்காக்களுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது. அவர்கள் பள்ளி கல்லூரியில் வாங்கிய மதிப்பெண்களை விட, அதனால் அடைந்த உயரங்களை விட தனக்கு விரைவில் திருமணம் ஆகி விட வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாகயிருந்தது.//

ஆக சூழல் தீர்மானிக்கிறது ஒருவரின் சுதந்திரத்தை..

பெண் புகைபிடிக்கிறாள் , மது அருந்துகிறாள் என்ற ஸ்டீரியோ டைப் குற்றங்களை விடுங்கள்..

வேலைக்கும் போய் , குழந்தைகளயும் , குடும்பத்தையும் கவனித்த்துக்கொள்ளும் அசாதாரண பெண்மணிகள் பலருண்டு...


// " முதலில் அவர்களுக்கு உரிமை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். அதன் பிறகு அவர்களின் உரிமையைப் பற்றி யோசிக்கலா மென்பேன்". இதை படிக்கும் பெண்களுக்கு கோபம் வருகின்றதா?//

சரியே.. சம உரிமை ஏன் கேட்கணும்..? ஒரு மனுஷிக்கு உரிமை கொடுக்க இன்னொரு மனிதன் யார்?..

கேட்டு பெறுவது சுதந்திரம் அல்ல . பிச்சை.. நம் சுதந்திரத்தை நாமே எடுக்கணும்..

Bibiliobibuli said...

அவசரமா ஓர் வேலை. வந்து படித்துவிட்டு எழுதுகிறேன்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!இடுகையின் துவக்கம் பெணகளுக்கான எதிர்மறைக் கருத்து மாதிரியிருந்தாலும்,சமுதாயத்தின் எந்த நிலையிலும் ஆணை விட பெண்ணே உயர்ந்து நிற்கிறாள்.ஆண் பணம் திரட்டும் பணியோடு நின்று விடுகிறான்.பெண் பணம் திரட்டல்,வீட்டு பராமரிப்பு,குடும்ப பராமரிப்பு என்று தன்னை குடும்பத்தோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறாள்.

நீங்கள் சொல்லும் மேக்கப்,நாகரீக மோகமெல்லாம் ஒரு காலகட்டத்திற்கான வயதுக்குட்பட்ட மோகம் மட்டுமே.

இங்கே ஒரு ஆந்திரப் பெண் பெண்கள் அழகுநிலையத்தில் பணிசெய்து கொண்டே மகனைப் கணினித்துறையில் படிக்க வைத்து லண்டன் வரை அனுப்பி வைத்து விட்டார்.நம்மூர் பெண்களின் உழைப்பு பற்றியெல்லாம் சொல்லவும் வேண்டுமா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆண் பணம் திரட்டும் பணியோடு நின்று விடுகிறான்.பெண் பணம் திரட்டல்,வீட்டு பராமரிப்பு,குடும்ப பராமரிப்பு என்று தன்னை குடும்பத்தோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறாள்.//

மிக சரி..

வேலைக்கு சென்றும் குழந்தைக்கு தாய்ப்பால் அலுவலிலேயே எடுத்து பத்திரப்படுத்தி செல்லும் தாய்மாருண்டு.. ( நானும் ) ..

இப்படி எண்ணற்றவை..

'பரிவை' சே.குமார் said...

அட்டகாசமா சொல்லி இருக்கீங்க.

ரோஸ்விக் said...

தொடர்ந்து வாசிக்கிறேன். இது சாதாரண மேட்டர் இல்ல.
:-)

ரோஸ்விக் said...

பரபரப்பு செய்தி... | படபடப்பு செய்தி - ரசித்தேன். அருமை அண்ணே!

ஹேமா said...

ஜோதிஜி....வாயைக் கிளறனும்ன்னே பதிவு போட்டமாதிரி இருக்கு.நீங்க பாத்த பொண்ணுங்களை மட்டும் வச்சுக்கிட்டு பதிவு போட்டிருக்கீங்கபோல.நீங்க சந்திச்ச பொண்ணுங்களில நாங்களும் இருக்கோம் !

நீங்க சொன்னதில் கொஞ்சம் உண்மையும் இருக்குத்தான்.பெண்களின் சுதந்திரம் எது,எதுவரை,எந்தவிஷயத்தில் என்பதைக் கணக்குப்போடாதவர்கள் மட்டுமே சுதந்திரத்தின் அர்த்தம் தெரியாமல் தந்த சுதந்திரத்தை தேவையற்றுப் பாவிப்பதும் இல்லை சுதந்திரம் தரவில்லையே என்று அரற்றுவதுமாக இருக்கிறார்கள்.

சுதந்திரம் தரவும் வேண்டாம்.வாங்கவும் வேண்டாம் எங்கள் உடல்,உள அமைப்புக்கேற்ற சுதந்திரம் எப்போதுமே எமக்குண்டு.நாங்களும் எனவே தகுதியான ஆசைகளோடு.அளவான உல்லாசத்தோடு,அடிப்படைக் கடமைகளுக்கும் எதார்த்த நடைமுறைகளுக்கும் வித்தியாசம் தெரிந்தவளாக இன்னொரு நாட்டில் தனியாக வாழ்ந்துகொண்டுதானிருக்கிறோம்.

இந்தப் பதிவு குறித்து நிறையவே வாதாடலாம்.
என்றாலும் இன்றைய இளம் சமுதாயப் பெண்களால் எல்லோருமே தலைகுனிந்து நிறகவேண்டியிருக்கிறது!

ரதி....ஜோதிஜிக்கு மிச்சம் சொல்லுங்க !

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... ஜோதிஜி! மிக நீண்ட பதிவு... பலவறாக கட்டுரை பிரயாணிக்கிறது. பல இடங்களில் ஹைலைட் செய்து நேர்மறையாகவும், எதிர் மறையாகவும் பேச இடமிருக்கிறது.

இருந்தாலும் மொத்தமாக சொல்ல வந்த கருத்து சும்மா புற சுகானுபவங்களிலேயே காலத்தை கடத்திராம constructiveவா சமூகமா மேலெழும்பச் சொல்லுறீங்க. சில இடங்களில் அம்மாவை வைச்சு சொன்னது டச்சிங்... ஆனா, பல இடங்களில் அம்மாக்கள் இப்படித்தான் இருந்து போயிருங்க. கடைசி வரைக்கும் உணருவதே இல்லை, கொஞ்சம் சுயநலமாக தனக்காகவும் வாழலாம்னு வாழ்வதை மறுத்து ஒரு தியாகியென.

ஆனா, அப்படி ஒரு விசயத்தை இந்தக் காலம் மறுக்கவே செய்கிறது. தியாகி என்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது இந்த கால கட்டத்தில்...

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமாக சமூக முன்னேற்றத்துக்கவும்,விழிப்புணர்வுக்காகவும் மட்டுமே எழுதும் குறிப்பிடத்தக்க பதிவர்களில் நீங்களும் ஒருவர்.வாழ்த்துக்கள்

Thomas Ruban said...

இது கயிற்றில் அந்தரத்தில் மிக ஜாக்கிரதையாக நடப்பதுப் போன்ற விசியம் முடிந்தவரையில் பேலன்ஸ் செய்திறிக்கிங்க வாழ்த்துக்கள் ஜோதிஜி சார்.
இங்கு கருத்தை சரியாக புரிந்துக்கொள்ளமல் விமரிசிப்பவர்களே அதிகம் இருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி சார்.

Kousalya Raj said...

/முதலில் அவர்களுக்கு உரிமை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். அதன் பிறகு அவர்களின் உரிமையைப் பற்றி யோசிக்கலா மென்பேன்".//

எங்கள் உரிமையை என்று இழந்தோம், இன்று பெறுவதற்கு...?! உரிமை என்பது எந்த காலமும் எங்களுடன் இருப்பதுதான். எங்களை விட ஆண்கள் தான் எங்களின் உரிமையை பற்றி அதிகம் கவலை படுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் சொல்லியுள்ள சில கருத்துகளுக்கு நானும் உடன்படுகிறேன் ஆனால் இவை ஒரு சில பெண்களை தான் குறிக்கும். ஆனால் வெளியே அதிகம் தெரிவது இந்த சில பெண்களை பற்றிய செய்திகள் தான். அவர்களும் குறிப்பிட்ட காலம் வரைதான் தங்களின் இயல்பை மறந்து செயல் படுவார்கள் பின் சுலபமாக தங்களை மாற்றி (திருத்தி) கொள்வார்கள். இந்த மனபக்குவம் நிச்சயமாக எல்லா பெண்களுக்கும் உண்டு.

//கிராமத்து மனிதர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இயல்பான வாழ்க்கையாகவே இருந்தது//

இருந்தது ஆனால் இப்ப இல்லை என்பதே நிதர்சனம்.

கணவன் , குழந்தைகளை கவனிப்பது, இடுப்பொடிய வேலைகள், அவசர யுகத்திற்கு ஏற்றாற்போல் அதிகரித்த பொறுப்புகளை சமாளிப்பது என்று இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு space தேவைபடுகிறது தங்களை புதுப்பித்து கொள்ள அதற்கு அவர்கள் நாடும் ஒன்று தான் தொலைக்காட்சி.

தன் மனைவி எண்ணெய் வழிய , குறைந்த பட்சம் புருவம் கூட திருத்தாமல் இருப்பதை இன்றைய ஆண்கள் விரும்புவது இல்லை. வெளி இடம் போகும் போது கூட வரும் தன் மனைவி நன்றாக அலங்கரித்து வருவதை விரும்பாத ஆண்கள் குறைவு தான்.

இன்றைய தலைமுறை பெண்களை குறித்து எனக்கும் பெரிய ஆதங்கம் உண்டு...என் பதிவுகளில் பல இடங்களில் இதன் வெளிபாடு இருக்கும்... அவர்களை நல்வழி நடத்த வேண்டிய பெரிய பொறுப்பு அவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கிறது...முக்கியமாக அந்த பெண்களின் தாயாருக்கு...! ஆனால் அவர்களே தன் பெண்ணின் குறைந்த பட்ச ஆடை அலங்காரத்தை கண்டுகொள்வதில்லை என்று எண்ணும் போது ஒரு தாயாக வருத்த படவே செய்கிறேன்.

இதைபற்றி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்..........

நடுநிலையாகவும் சில கருத்துகளை சொன்னதிற்கு நன்றி.

Prabu M said...

ஆண்கள் பெண்கள் என்று பிரித்துப் பார்ப்பதேயில்லை நான்..
மனுஷன் மனுஷி என்று போய்விட வேண்டியதுதான்....
உடலால் பல மாற்றங்கள் எனவே கண்டிப்பாக உள்ளத்தாலும் உணர்வாலும் வேறுபாடுகள் நமக்குள் இருக்கத்தான் செய்யும்... Men are from Mars and Women are from Venus எனும் புத்தகத்தைப் படித்திருக்கிறேன்... வேற்றுமைகள் இருக்கும்போது அணுசரித்துப் போவதைப் பொறுமையாக இல்லாமல் ரசனையாக செய்தல் ஆண்மைக்கு அழகு.. பெண்மைக்கு அதுவே இயல்பு....
என் கண்ணுக்கு இந்த இயந்திர உலகில் வீட்டு வேலைகளையும் அலுவலக வேலையையும் சுமக்கும் நம்ம பெண்களுக்குப் போதுமான அளவு ஸ்டாமினா இல்லை.... மாலை வேளைகளில் வாடிய மலர்களாக அவங்க வீட்டுக்குத் திரும்புவதைப் பார்த்தாலே பாவமா இருக்கும்... உதட்டுச்சாயம், உள்ளாடை தெரியுமாறு உடை... இதெல்லாம் வேற விஷயங்கள்... நானும் நிறைய பார்க்கிறேன்... கண்டுக்கிறதில்லை... எனக்கு இயல்பாகப் புரியாத அடுத்தவர்களின் மனதை யோசித்துப் புரிந்துகொள்ள முனைவதில்லை....

Prabu M said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

Freedom comes with responsibility

Bibiliobibuli said...

"நான் சுதந்திரமானவள்" என்கிற சிந்தனையின் அடிப்படையில் பிறக்கிற சுதந்திர உணர்வு உங்கள் எழுத்தின் மூலம் உருவாகாப்படும் என்று எதிர்பார்த்தேன், ஏமாந்தேன். இது தொடர் தானே? பின்னர் அது வரும் என்று நம்புகிறேன்.

எப்போதோ கேட்டது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. தலைமுறைகளை இப்படி பிரித்திருக்கிறார்கள். Traditional, Baby Boomers, Gen-X, Millennials. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இருந்த அடிப்படைகளை இந்த தலைமுறையிடம் (Millennials) எதிர்பார்த்து தோற்றுப்போனதன் பிரதிபலிப்பு உங்கள் கட்டுரையில் தெரிகிறது. இப்படி நீங்கள் மட்டுமல்ல, நிறையப்பேர் இருக்கிறார்கள். பொருளாதார மாற்றங்களுக்கேற்ப சமூகத்தில் பெண்களுக்குரிய அங்கீகாரமும் எதிர்பார்ப்புகளும் கூட மாறுகிறது. காரணம், பொருளாதார பலம் தான் தற்போதைய சமூகத்தில் பெண்களின் மதிப்பை மட்டுமல்ல இருப்பையும் தீர்மானிக்கிறது என்றால் அது மிகையில்லை. பெண்களை வெறுமனே அவர்களின் ஆடை, அலங்காரங்கள், பாவனைகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடுவது ஏற்புடையதல்ல. இந்த மேலோட்டமான மதிப்பீடுகளை கடந்த பெண்கள் பற்றிய ஆழமான சிந்தனையும் கருத்து வெளிப்பாடும் missing!!!! ஆனால், ஒரு விடயத்தைப் பாராட்ட வேண்டும். அருந்ததி ராயும் கிரண் பேடியும் மட்டும் சாதனைப் பெண்மணிகள் அல்ல ஒவ்வொரு தாயும் கூட என்கிற கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

என் அம்மா இப்படித்தான் இருந்தார். நீயும் அப்படி இருப்பாய் என்று நம்புகிறேன் என்று ஓர் கணவன் மனைவியிடம் சொல்வது போல்லுள்ளது கட்டுரை. பெண் சுதந்திரம் என்கிற வார்த்தைப்பிரயோகமே அபத்தமானது. அதை சுட்டிக்காட்டிய கெளசல்யாவுக்கு நன்றி.

ஹேமா, ஜோதிஜியை ஒரு பிடி பிடிக்கலாம். மாட்டிக்கிட்டாரில்ல!!

உங்கள் சொந்த அனுபவம், நீங்கள் சந்தித்த பெண்கள் குறித்த நேர்மறை, எதிர்மறை எண்ணங்களின் வெளிப்பாடும் தான் இந்த கட்டுரை என்றால், உங்கள் கட்டுரை நன்றாயுள்ளது, ஜோதிஜி.

Bibiliobibuli said...

பதிவுலகில் ஹேமா, கெளசல்யா, துளசிகோபால், ரதியைத்தவிர இன்னும் நிறைய பெண்பதிவர்கள் இருந்தார்கள் என்று நம்பினேன்.

லெமூரியன்... said...

:( :( :( :(
ஏன் இவ்ளோ கோபம் பொண்ணுங்க மேல???

சமன் மாறாது said...

அன்புடையீர், முதல் முறையாக இந்த வலைப்பக்கத்தில் கட்டுரை வாசித்தேன். பெண்கள் சுதந்திரம் பற்றிய குழப்பமான பதிவு.பெண்களுக்கு உரிமை பற்றித் தெரியவில்லை என்று நீங்கள் குறித்திருக்கிறீர்கள். அதுவே தான் அவர்கள் சுதந்திரமற்று இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்று. அப்படியானால் அவர்களுக்கு சுதந்திரம் வேண்டாம் என்று முடிவு செய்யக் கூடாது. அவர்களது உரிமை, சுதந்திரம் பற்றி பேசுவது இன்னும் அதிகமாக வேண்டும், அவர்களை இதில் பங்கேற்கச் செய்ய வேண்டும், இன்னும் அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். தலைகீழாகப் புரிந்து கொள்ளாமல் நேராகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் தியாகம் பற்றி பேசுவது, மயக்கம் தந்து ஏமாற்றும் சொல்லாடல் என்று தான் சொல்வேன். தியாகம் என்பது நம் உயிரை, உதிரத்தை உணர்வுப்பூர்வமாக தெரிந்தே ஒரு நோக்கத்திற்காக அர்ப்பணிப்பது, இழப்பது என்று அர்த்தம். ஆனால் பெண்களை குறிப்பிட்ட நிலையில் நாமே இருத்தி வைத்துவிட்டு அவர்கள் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வது ஏமாற்றுத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். வேண்டுமானால் நமக்காக பெண்களைத் தியாகம் செய்ய வைக்கிறோம் என்று சொல்லலாம். தியாகம் செய்வதாகச் சொல்லியே அவர்களை செயற்கையாகச் சந்தோஷப்பட வைத்து, அதே நிலையில் இருத்தி வைத்திருக்கிறோம்.
ஏற்கனவே சிலர் தெரிவித்திருப்பது போல சுதந்திரம், உரிமை என்பது கேட்டுப் பெறுவதல்ல. போராடி வெல்வது. அதை நிச்சயம் பெண்கள் சாதிப்பார்கள். சுதந்திரம் பெறுவதற்கான பாதை நேர்க்கோட்டுப் பாதையாக சுமூகமாக சுகமாக நாம் நினைக்கும்படி தான் இருக்கும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும். அது கரடுமுரடானதாக, ஏறுக்கு மாறானதாக, புரிந்தும் புரியாததுமாக பல நிலைகளைக் கடந்து தான் செல்லும். ஆகவே தற்போதைய சூழலில் சில எதிர்மறை அம்சங்கள் மிகுந்திருப்பதை மட்டுமே ஒற்றை அளவுகோலாகக் கொண்டு தீர்ப்புத் தருவது நியாயமில்லை என்று எனக்குப் படுகிறது. விவாதிக்க நிறைய இருக்கிறது. இருப்பினும் இத்துடன் நிறைவு செய்கிறேன். பின்னர் தொடரலாம். நன்றி.

ஜோதிஜி said...

செந்தில் நீங்க பாட்டுக்கு ஏன் எழுதுவதில்லை என்று பிடி பிடித்தீர்கள். இங்குள்ள வேகம் குறைந்த இணையத் தொடர்பில் இதை மாட்டுவதற்குள் தாவூ தீர்ந்து விட்டது. ரதியின் இணையத்தளத்தை இணைப்பு கொடுக்க முடியாமல் அவசர கதியில் மாட்டி விட்ட குற்ற உணர்ச்சி குறுகுறுப்பாய் இருக்கிறது.

ரதி துளசி கோபால் சொல்லியுள்ள ஒரே விமர்சனம் தான் அன்றும் இன்றும் என்றும் என் மனதில் உள்ள பெண் குறித்த புரிதல்.

ஆனால் ஹேமாவை நன்றாகத் தெரிந்த காரணத்தால் அவர் என்னுடைய பார்வையில் பாரதி கண்ட புதுமைப் பெண் தான்.

பயணமும் எண்ணங்களும் கூட தாய்ப்பால் குறித்து சொன்ன உதாரணத்திற்குப் பிறகு தான் அவர் பெண் என்று கண்டு கொண்டேன்.

பெண் பதிவர்கள் என்று சொல்லியுள்ள விசயத்திற்கு ஏற்கனவே வினவுத்தோழர்கள் அவர்களின் பாணியில் ஒரு புயலையே கிளப்பியது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது. இதுவே பதிலும் கேள்வியுமாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரதி நான் சந்தித்த பெண்கள் என்று அதை மட்டுமே எழுத வேண்டுமானால் 18+ என்று ஹிட் என்கிற ரீதியில் போய்விடும். நீங்கள் சொன்ன அடுத்து வரப் போகின்றதையும் படித்துப் பாருங்க.

ஜோதிஜி said...

லெமூரியன் இடையில் மாட்டியுள்ள அந்த இரண்டு பெண்கள் மெரீனா பீச்சில் இருந்த போது எடுத்த படம். வேறு சில விசயங்களும் உண்டு. தெகா சொன்னது போல் ஹைலைட் நமது இடுகைக்கு தேவையில்லை. அப்புறம் உங்க ரசிகத்தன்மை நான் தெரிந்தது தானே?????

ஜோதிஜி said...

இன்றைய தலைமுறை பெண்களை குறித்து எனக்கும் பெரிய ஆதங்கம் உண்டு...என் பதிவுகளில் பல இடங்களில் இதன் வெளிபாடு இருக்கும்... அவர்களை நல்வழி நடத்த வேண்டிய பெரிய பொறுப்பு அவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கிறது...முக்கியமாக அந்த பெண்களின் தாயாருக்கு...! ஆனால் அவர்களே தன் பெண்ணின் குறைந்த பட்ச ஆடை அலங்காரத்தை கண்டுகொள்வதில்லை என்று எண்ணும் போது ஒரு தாயாக வருத்த படவே செய்கிறேன்.

கௌசல்யா முதன் முறையாக இல்லத்துக்கு வந்துருக்கீங்கன்னு நினைக்கிறேன். சரிதானே?
உங்களின் இந்த விமர்சனமே என்னுடைய மொத்த ஆதங்கமும்.

ஜோதிஜி said...

மாலை வேளைகளில் வாடிய மலர்களாக அவங்க வீட்டுக்குத் திரும்புவதைப் பார்த்தாலே பாவமா இருக்கும்.

பிரபு உங்கள் முதல் வருகைக்கு நன்றி. ஏன் இரண்டு முறை கொடுத்த அத்ந விமர்சனமே இருந்து இருக்கலாமே? தவறில்லை....... உண்மைதான் பிரபு. நீங்கள் பாவப்படுறீங்க. நான் செயலாக்கத்தில் காட்டியுள்ளேன். நான் சார்ந்திருந்த நிறுவனங்களில் எந்த பெண்கள் வேலை கேட்டாலும் அவரிடம் குறைந்தபட்சம் திறமை இருந்தாலும் தொடக்கத்திலேயே தெளிவாக பேசி உள்ளே நுழைத்து விடுவேன். ஆனால் ஐம்பது சதவிகித பெண்கள் தான் நான் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்கள். மற்றவர்கள் பறவைகள் ரகம்....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நல்ல கட்டுரை ஜோதிஜி..தொடருங்கள்

ஜோதிஜி said...

தாமஸ் ரூபன் செந்தில்குமார் இருவரின் அக்கறைக்கும் நன்றி.

தெகா நீங்கள் என்னுடைய பார்வையில் மற்றொரு ராஜ நடராஜன். ரொம்ப தெளிவா இருக்கீங்க.

ராஜ நடராஜன் நீங்க சொன்னது உண்மைதான். அடுத்த பதிவில் வருவது நீங்கள் சொன்னது போல உள்ள கதை தான். அதை படித்த பிறகு பெண்கள் மேல் நான் வைத்துள்ள மரியாதை புரியக்கூடும்.

ரோஸ்விக் என்ன தல தப்பித்து போய் விட்டீங்களே?

நன்றி குமார்.

ஜோதிஜி said...

வேலைக்கும் போய் , குழந்தைகளயும் , குடும்பத்தையும் கவனித்த்துக்கொள்ளும் அசாதாரண பெண்மணிகள் பலருண்டு...

நிச்சயம். மறுக்க முடியா உண்மை. இங்கு தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இது போன்ற பெண்களுடன் தானே வாழ்ந்து கொண்டுருக்கின்றேன். அடுத்த பதிவில் உங்களுக்கு புரியும்.

தவறு உங்களின் அக்கறை புரிகின்றது. பாருங்கள் அறிமுகம் இல்லாத பெண்களே வந்து வழிமொழிந்து இருக்காங்க. முதன் முறையாக பதிவுல வாசக எண்ணங்கள் என்னை மகிழ்ச்சியடைத்த பதிவு இது.

உணர்ந்து படித்து கொடுத்த விமர்சனங்களை படித்த எனக்கு எழுதியதை விட மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. அணைவருக்கும் நன்றி.

ஜோதிஜி said...

மொக்கராசா சதிஷ்குமார் இருவரும் ஒரு விசயத்தை கெட்டியாக பிடிச்சுட்டு ஒதுங்கி போயீட்டீங்களே? நியாயமா?

தமிழ் உதயம் நீங்க எழுத வேண்டும். எப்போதும் போது இல்லாமல் இந்தமுறை கொஞ்சம்அடக்கி வாசிச்சிருக்கீங்க...... உங்க பதிவில் மீதியை பார்க்கின்றேன்.

ஜோதிஜி said...

ரதி உங்களுக்கு ஒரு செய்தி. துளசி கோபால் இப்போது சுற்றுப்பயணத்தில் இருக்காங்க..... இந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவர் கொடுத்த இந்த ஒரு விமர்சனமே மொத்த மணி மகுடம் போல இருப்பதாக எனக்குத் தெரிகின்றது.

கனடாவில் நீங்க ஸ்விஸ் ல் ஹேமா பார்க்கின்ற பெண்கள் தங்கள் கடமைகளுடன் தங்களுக்கான முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கிறாங்க. ஆனால் இங்கு இது குறைந்த சதவிகிதம் தான்.

இது என்னோட பார்வை. இந்த செய்தி உங்களுக்கும் ஹேமாவுக்கும்.

Bibiliobibuli said...

//Freedom comes with responsibility//

இது சரியான அணுகுமுறைதான். ஆனால், பின்னால் சொல்லப்பட்டதை (responsibility) மட்டும் பெண்களிடம் எதிர்பார்த்து முந்தையதை (Freedom) கேள்விக்குள்ளாக்கும் போது சமநிலை கெடுகிறது.

பெண்கள் பொறுப்பாய் இல்லாதிருந்தால் மனித இனம் என்றோ தடம் மாறிப்போயிருக்கும்.

சுதந்திரம் (Freedom), பொறுப்பு (Responsibility), சலுகை (Privilege), கடமை (Duty) இதன் அர்த்தங்களை நிச்சயம் அதன் நடைமுறை யாதார்த்தங்களோடு சொல்லிக்கொடுக்கவேண்டும். அதை அடுத்த பதிவுகளில் எதிர்பார்க்கிறேன், ஜோதிஜி.

ஜெயந்தி said...

கவுசல்யா ஹேமா மற்றும் ரதி சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.

vimalanperali said...

நிலா ரசிகன் அவர்களின் கவிதைதான் சமூக வெளிப்பாடு.
பெண்சுதந்திரம் ஆதியிலிருந்ததை விட இப்பொழுது பரவாயில்லை.அதற்கு குரல் கொடுக்க அமைப்புகள் உள்ளது.வாஸ்தவம் தெரித்த கட்டுரை,உங்க்களின் ஆவேசத்துடன்.

ஜோதிஜி said...

வாங்க விமலன். உண்மையிலேயே இப்ப கொஞ்சம் பரவாயில்லை தான். ஆனால் இன்னமும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

வாங்க ஜெயந்தி .......ஒரே வார்த்தையில் முடிச்சுட்டீங்க......

ரதி உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு இந்த வாசகத்தை கடந்து வந்துருப்பீங்கன்னு நினைக்கிறேன். இந்த வாசகம் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சில புரிதல்களை உருவாக்கும். பார்க்கலாம் புரிந்து கொள்ளமுடியுமா என்று?

நம்முடைய பார்வையில் ஒரு ஆண் தறுதலையாகவே அல்லது தரமான மனிதனாகவே இருந்தால் நிச்சயம் அதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் கைங்கர்யம் இருந்தே தீரும். நம்பக் கடினமாக இருக்குமே? இது தான் உண்மை.

ஜோதிஜி said...

மது ராஜ் முதலில் உங்களின் உணர்வுபூர்வமான பகிர்தலுக்கு நன்றிங்க.

இன்னும் அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் இணைக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் அவர்களுக்கு இந்த வரி பொருத்தமானது. அவர்களின் தனித்திறமை பத்திரிக்கையின் வாயிலாக படித்தவன் என்ற முறையில். அவரின் தனித்திறமை தனியே ஒரு பதிவே போடலாம். ஆனால் எத்தனை பேர்கள் சமூக விலங்குகளை உடைத்துக் கொண்டு வெளியே உண்மையாக வருகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி????

தலைகீழாகப் புரிந்து கொள்ளாமல் நேராகப் புரிந்து கொள்ள வேண்டும்

நான் புரிந்து கொள்ள தயாராய் இருக்கின்றேன். கடந்த பத்தாண்டுகளில் பெற்ற கல்வி வளர்ச்சியில் எத்தனை பெண்களால் இந்த சமூகத்தில் குறிப்பிட்டத்தக்க சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்??? இத்தனைக்கும் கல்வி கற்ற பெண்கள் அதிகம் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதைத்தான் துளசி கோபால் பொறுப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறார்.

நமக்காக பெண்களைத் தியாகம் செய்ய வைக்கிறோம் என்று சொல்லலாம். தியாகம் செய்வதாகச் சொல்லியே அவர்களை செயற்கையாகச் சந்தோஷப்பட வைத்து, அதே நிலையில் இருத்தி வைத்திருக்கிறோம்.

இதற்கு தனியாக பதிவில் தான் சொல்ல வேண்டும். உதாரணங்கள் மூலம் புரிய வைக்கின்றேன். அம்மா, அக்கா, மனைவி போன்ற வார்த்தைகளில் உள்ள உண்மையான பொறுப்புகளை உணர்ந்தவர்களை மட்டுமே என்னால் அந்த பெயர் சொல்லி அழைக்க முடியும். வெறுமனே இந்த அலங்கார வார்த்தைகளில் அவர்களை அழைப்பதில் உடன்பாடு இல்லாதவன் நான்.

விவாதிக்க நிறைய இருக்கிறது

இந்த உலகில் காகிதம் அழிந்து போன பின்பு கூட இந்த இணையம் இருக்கும். உங்களின் கருத்துக்கள் அடுத்த தலைமுறைக்கு உதவியாய் இருக்கும். வருக...... தருக.

நல்வாழ்த்துகள் உங்களுக்கு.

ஜோதிஜி said...

நன்றி திருநாவுக்கரசு

virutcham said...

//நம்முடைய பார்வையில் ஒரு ஆண் தறுதலையாகவே அல்லது தரமான மனிதனாகவே இருந்தால் நிச்சயம் அதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் கைங்கர்யம் இருந்தே தீரும். நம்பக் கடினமாக இருக்குமே? இது தான் உண்மை.//

உண்மை.

இருப்பது பெண் அடிமைத்தனத்தின் அறிகுறியாக பெண்ணியவாதிகள் பார்ப்பது வேதனைக்குரியது.

ஒரு அலுவலகத்தில் பொறுப்புள்ள உயர் பதவியில் இருப்பவரிடம் தான் எதிர்பார்ப்பும் அதிகம். கீழ் நிலையில் உள்ளவிர்்களிடம் அல்ல. அது போலத் தான் பெண் மீதான எதிர்பார்ப்பும். அவள் தான் குடும்பத்தின் ஆணி வேர்.

பெண்ணியம் குறித்த எனது சில பதிவுகள்

http://www.virutcham.com/2010/06/பெண்ணியம்-ரோகன்-என்னை-வெ/

முகுந்த்; Amma said...

நீங்கள் சந்தித்த பெண்களை மட்டுமே வைத்து எழுதபட்டிருக்கும் இடுகை உங்களது.

//இங்கே நான் சந்திக்கும் பெண்கள் மூன்று வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள். தகுதிக்கு மீறிய ஆசைகள், உல்லாசத்தை விரும்பு பவர்கள், //

எதனை தகுதிக்கு மீறிய ஆசைகள் என்று கூறுகிறீர்கள் புருவம் திருத்துவதையா?

எதனை உல்லாசம் என்று கூறுகிறீர்கள். தொலைகாட்சி பார்ப்பதையா?

//அடிப்படை கடமைகளுக்கும் எதார்த்த நடைமுறைகளுக்கும் வித்யாசம் தெரியாத வர்கள்//

வீட்டில் இருக்கும் எந்த பெண்ணாவது வீட்டு வேலை செய்யாமல் இருக்கிறார்களா?. அவர்களின் அடிப்படை கடமைகளை செவ்வனே செய்கிறார்கள்.
எதனை வைத்து எதார்த்த நடைமுறைகளுக்கு வித்தியாசம் தெரியாதவர்கள் என்று சொல்கிறீர்கள்.
எனக்கு வேண்டியது கிடைகாத வரையில் எந்த பெண்ணாவது வீட்டில் strike செய்கிறார்களா?

பெண்களை பற்றிய உங்களின் இத்தகைய மனப்போக்கு வருத்தம் அடைய வைக்கிறது.

உங்களின் அனுபவங்களை வைத்துக் கொண்டு அனைத்து பெண்களையும் பொதுப்படுத்த வேண்டாம்.

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி தாங்கள் எடுத்துகொண்டுள்ள கருத்துகளம் மிக ஆழமானது. பெண்கள் நிலம் அது நல்ல நிலமாக இருந்தால் அதில் வளரகூடிய செடி நன்றாகவே வளரும். அந்த வகையில் பாழ்படுகின்ற நிலத்தை பற்றிய உங்களுடைய கருத்துகளம் தான் இது.
ஆனால் நீங்கள் சொல்லகூடிய கருத்திற்கு எதிராக இருந்தாலே உங்களுக்கு கருத்துக்கு எதிராக தங்களுடைய கருத்துகளை பதிவார்கள். அதனாலயே சரியான பாதையில் சென்று சொல்லிவிடுங்கள்.

vinthaimanithan said...

ஜோதிஜி முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்... மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கின்றீர்கள்.

ஆறு மாதங்களுக்கு முன் நான் பெண்சுதந்தரம் பற்றிக் கொண்டிருந்த பார்வையில் நான் இன்று சற்றே ஊசலாடிக் கொண்டிருக்கின்றேன்.

சித்தாந்தங்களுக்கும் யதார்த்தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னை மலைக்க வைக்கின்றது.

ரதி மற்றும் ஹேமாவின் வாதங்கள் நியாயமானதே எனினும்...

நான் சென்னையின் மையப்பகுதியில் வாழ்ந்துவருபவன் மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் நெருங்கிப் பழகுபவன் என்ற முறையில் இன்று நிலவிவரும் கலாச்சாரச் சீர்கேடு என்னை நிலைகுலைய வைத்துள்ளது.

துளசியம்மா சொன்னதுபோல freedom with responsibility என்பது இன்று இல்லை என்றே சொல்வேன்.

ஆறு மாதங்களுக்குமுன் கிராமப்புறத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்த இரு இளம்பெண்கள் (மிக நல்ல பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள்) இன்று வாழும் வாழ்க்கையைக் கண்கூடாகப் பார்க்கிறேன்

vinthaimanithan said...

இன்றைய நுகர்வுக்கலாச்சாரத்தில் அனைத்தும் நுகரப்பட வேண்டியவை... "life is to enjoy" என்ற கருத்தாக்கம் இளந்தலைமுறையின் மூளையில் திணிக்கப்பட்டிருக்கின்றது... ஆண் பெண் வேறுபாடின்றி.

பெண்ணுடல் ஒரு consumer product என்று exploit செய்யப்பட்டு வரும் கலாச்சாரத்தில் நவீன தலைமுறை பெண்கள் தமது ஆகப்பெரும் சொத்தாக தம் உடலைக் கருதும் நிலை பரிதாபத்துக்குரியது.( எல்லாப் பெண்களும் அல்ல).

இந்தப் பிரச்சினையை வெறுமனே பெண் மீதான குற்றச்சாட்டாக வைப்பது கூடாது. இதனை சமூக உளவியல் பிரச்சினையாக அலசும்போது வேறுவகையான விடைகள் நமக்குக் கிடைக்கக்கூடும்

ஜோதிஜி said...

virutcham ..

பெண் தான் குடும்பத்தின் ஆணி வேர்.

இது தான் என்னுடைய அடிப்படை கருத்தும்.

முகுந்த அம்மா....... இதை படித்து சுடச்சுட உங்கள் பதிவிலும் ஒரு தனித்தலைப்பில் உங்கள் எண்ணங்களை கொண்டு வந்தமைக்கு முதலில் நன்றிங்க.


வீட்டில் இருக்கும் எந்த பெண்ணாவது வீட்டு வேலை செய்யாமல் இருக்கிறார்களா?. அவர்களின் அடிப்படை கடமைகளை செவ்வனே செய்கிறார்கள்.

இதுபோன்ற விசயங்களை முகுந்த் அம்மா துளசி கோபால், கௌசல்யா, ரதி, ஹேமா, பயணமும் எண்ணங்கள் என்ற பெயரில் உள்ள தோழி, ஜெயந்தி போன்றவர்களை வைத்து கருத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். சமூகம் என்பது அதிகப்படியான பாதிப்புகளை வைத்து ஒரு இறுதி தீர்மானத்தை நம்மால் கொண்டு வர முடியும்.

தவறு

ஹிட் என்பதற்காக பிட்டு சமாச்சாரங்களை எழுத மனமில்லை. பிரபல்யம், மார்க்கெட்டிங் யுத்தி, குழு மனப்பான்மை, போன்ற அத்தனையும் தாண்டி இது போன்ற நீண்ட பதிவுகளுக்கும், விமர்சனம் கொடுக்க யோசிக்கும் தன்மை உள்ள எழுத்துக்களுக்கும் எத்தனை பேர்கள் தைரியமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுருக்காங்க பார்த்தீங்களா?

யாரோ ஒருவர் ஒவ்வொரு சமயத்தில் தன் மனதில் தோன்றும் விசயங்களை இது போன்ற வலைபதிவுகளில் எழுதி வைக்கத்தான் வேண்டும்.

படிப்பவர்களுக்கே தெரியும்?

இது போன்ற கருத்துக்களின் தாக்கம் எதன் மூலம் உருவாகின்றது என்பதும் புரியும். தனிமனிதன் வாழும் வாழ்க்கை தரமாக இருந்தால் வரும் சிந்தனைகளும் நோக்கங்களும் சிறப்பாகவே இருக்கும். இதில் ஆண் பெண் என்ற வித்யாசமில்லை. நன்றி நண்பா.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஹிட் என்பதற்காக பிட்டு சமாச்சாரங்களை எழுத மனமில்லை. //

நன்று


பிரபல்யம், மார்க்கெட்டிங் யுத்தி, குழு மனப்பான்மை, போன்ற அத்தனையும் தாண்டி //

அவை நிலைக்காது ஜி.

dheva said...

இது தொடரா நண்பரே....!

கட்டுரையினை வாசித்து உங்கள் புரிதலை விளங்கிய அதே நேரத்தில் மிகைப்பட்ட இடங்களில் முரண்பட்டுப் போய் நிற்கிறேன்.

வட்டத்துக்குள் இருக்கிறார்கள் என்று பார்க்கும் பார்வையுமொரு வட்டத்திற்குள் இருப்பதாகப் படுகிறது. உங்களின் கோணம்...இது....

ஆரோக்கியமான தெளிதல் நோக்கிய ஒரு களம்தான்!...கட்டுரை முடியும் வரை தொடர்ந்து வந்து வாசிக்கிறேன்....பிறகு என்னிலையை பின்னூட்டமாகவோ அல்லது பதிவாகவோ இடுகிறேன்.


வாழ்த்துக்கள் ஜோதிஜி!

Bibiliobibuli said...

ஜோதிஜி,

நான் ஒரு பெண்ணாய் சுதந்திரமானவள் தான். எனக்குரிய எல்லைகளை அதன் விஸ்தீரனங்களை நானே தீர்மானிக்கிறேன். அது என்னிடமிருந்து மட்டும் வரவில்லை. என் வீடும் ஓர் காரணம். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தது. என்னுடைய நியாயமான விருப்பங்களுக்கு யார் அல்லது எது தடையாய் இருந்தாலும் அதை கடந்து நான் போவேன் என்பது அவர்களுக்கும் தெரியும். அப்படி நான் போவேனேயானால் என் வாழ்வில் ஏற்படும் சந்தோசத்திற்கு மட்டுமல்ல இழப்புகள், கஷ்டங்கள் வந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வீட்டை தேடி ஓடாத அளவிற்கு என்னை நான் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மிக உறுதியாய் இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்.

இன்னோர் விடயம் கனடாவில் என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு எனக்கு முந்தைய தலைமுறை ஓர் முடிவை எடுத்தது. என் தலைமுறையை சேர்ந்த என்னுடைய cousins சொன்னது, "இது அவளின் வாழ்க்கை. அவளை முடிவெடுக்க விடுங்கள். நீ என்ன முடிவெடுத்தாலும் உனக்கு நாங்கள் துணையாய் இருப்பம்" என்பதுதான். உண்மையிலேயே அது எனக்கு இமாலய தைரியத்தை கொடுத்தது. இப்படி ஓர் வீடு பெண்ணுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் இன்னும் உறுதியோடு சாதிப்பார்கள்.

ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள பெண்கள் நிறையப்பேர் சிந்தனை சுதந்திரம் கொண்டவர்களாய் இருப்பார்கள். ஆனால், அவர்களின் "வீடு" எவ்வளவு தூரம் ஓர் பெண்ணை அவள் சுதந்திர சிந்தனைகளை அனுமதிக்கவோ அல்லது அதன் வழி செயற்படவோ அனுமதிக்கிறது!!

ஜோதிஜி said...

நான் சென்னையின் மையப்பகுதியில் வாழ்ந்துவருபவன் மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் நெருங்கிப் பழகுபவன் என்ற முறையில் இன்று நிலவிவரும் கலாச்சாரச் சீர்கேடு என்னை நிலைகுலைய வைத்துள்ளது.

தங்க ராசா நீ கொடுத்துள்ள இந்த விசயம் ரதிக்கு... வழிமொழிகின்றேன். எங்கெங்கு காணிணும் இன்பத்தை தங்களின் சுதந்திரத்தின் மூலம் கண்டு கொண்டுருக்கும் பெண்கள் பெற்ற சுதந்திரம்.

வாங்க தேவா. இருவரும் இன்று தான் ஒரே புள்ளியில் வந்து நின்று இருக்கிறோம். நீண்ட நாட்கள் இருவருமே படித்துக் கொண்டுருந்த போதிலும். நன்றி.

ஜோதிஜி said...

பயணமும் எண்ணங்களும் மீண்டும் நன்றிங்க.


ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள பெண்கள் நிறையப்பேர் சிந்தனை சுதந்திரம் கொண்டவர்களாய் இருப்பார்கள். ஆனால், அவர்களின் "வீடு" எவ்வளவு தூரம் ஓர் பெண்ணை அவள் சுதந்திர சிந்தனைகளை அனுமதிக்கவோ அல்லது அதன் வழி செயற்படவோ அனுமதிக்கிறது!!

ரதி இது குறித்து அடுத்த பதிவை படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். உங்கள் புரிந்துண்ரவுக்கு நன்றி.

Bibiliobibuli said...

//ராசா நீ கொடுத்துள்ள இந்த விசயம் ரதிக்கு... வழிமொழிகின்றேன்.//

என்ன ரெண்டு பெரும் சேர்ந்து என்னைய கலாய்க்கிறீங்களா? :)


//இதனை சமூக உளவியல் பிரச்சினையாக அலசும்போது வேறுவகையான விடைகள் நமக்குக் கிடைக்கக்கூடும்//

இதையே தான் நான்,

//பெண்களை வெறுமனே அவர்களின் ஆடை, அலங்காரங்கள், பாவனைகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடுவது ஏற்புடையதல்ல. இந்த மேலோட்டமான மதிப்பீடுகளை கடந்த பெண்கள் பற்றிய ஆழமான சிந்தனையும் கருத்து வெளிப்பாடும் missing!!!! //

இப்படிச் சொன்னேன்.

இன்று நாங்கள் எல்லோருமே பணம் தின்னிப் பிணங்களாய் ஆனபின் அதில் பெண்களை மட்டும் தனியே பிரித்து பார்த்துப்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?? பெண்களுக்கென்று எங்கள் சமூகம் கண்டுபிடித்த "Social Norms" ஐ இன்று அவர்கள் மீறிக் கொண்டிறுக்கிறார்கள் என்ற "உண்மையான ஆதங்கமும் வெற்றுக்கூச்ச்சலும்" சேர்ந்தே ஒலிக்கிறது. சரி, இதை சமுதாயப் பிறழ்தல்கள் (Social Deviance) என்றே வைத்துக்கொண்டாலும் அதற்கு பெண்கள் என்ற ஜென்மங்கள் மட்டும் காரணமா?

//இது குறித்து அடுத்த பதிவை படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். //

ஆவலுடன் காத்திருக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

ஹேமா said...

இரண்டு நாளா பதிவின் பக்கங்கள் வரல.
நல்லாத்தான் ஜோதிஜி முழிக்கிறார் !

தாராபுரத்தான் said...

தேன் கூட்டில் கையை வைத்த மாதிரி தெரியுதுங்க..

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... ஜோதிஜி, அடுத்தப் பதிவ எதிர்பார்த்து நிறைய பேரு வெயிட்டீஸ் போல :))

என்னயப் பொருத்த மட்டிலும் இந்த நவீன மாற்றமெல்லாம் ஒரு சமச்சீருக்கு வரும் எட்டிய ஒரு சாரார் அதன் சாதாக பாதங்களை அறிந்து வெளிக்கிடும் பொழுது.

எண்ணி பயம்/பீதி கொள்ளத் தேவையில்லை என்பது, என்னோட கருத்து! பொறுப்பு இரு பாலாருக்குமே உண்டு/தேவை! புறவயமாக ரொம்ப நாட்கள் எல்லாம் சிந்திக்கும் எவரும் முக்கியத்துவம் கொடுத்து அலைந்து கொண்டிருக்க மாட்டார்கள்...

ஜோதிஜி said...

ரொம்ப நாட்கள் எல்லாம் சிந்திக்கும் எவரும் முக்கியத்துவம் கொடுத்து அலைந்து கொண்டிருக்க மாட்டார்கள்..

தலைவரே இது தான் அடுத்த பதிவின் கருவே. அதெப்படி அமெரிக்கா வரைக்கும் நான் நினைத்துக் கொண்டுருப்பது வந்து சேர்ந்தது. கெட்டி மட்டுமல்ல நீங்க சுட்டியும் கூட.

தாராபுரத்தான் ஐயா வாங்க. நீங்க சொன்னது உண்மை தான். கூட்டுக்குள் இருப்பது புழுவா இல்லை தேனான்னு பார்த்து தானே ஆகனும்.

ஹேமா முழிக்கிறேனா? அட........ ஒரு மாதிரி நீங்களும் ரதியும் ரவுண்டு கட்டி நிக்கிற மாதிரியில்ல இருக்கு. முழிப்பில் இருந்து எழுந்தால் தான் விழிப்பு. சரிதானே?

ரதி நீங்க கடைசியாக கொடுத்த விமர்சனத்திற்கு இங்க நான் சந்தித்த பல வெளிநாட்டு பெண்மணிகளைத்தான் உதாரணமா எடுத்துக்கொள்ள முடியும். ஆழமான கருத்தா கொண்டு வந்து கொட்டுறீங்க. பதில் சொன்னா பெரிய பின்னூட்டமா போயிடும். ஒவ்வொரு விசயத்தையும் நுணுக்கமா அடுத்த பதிவுகளில் கோர்த்துப் பார்க்க முயற்சிக்கின்றேன்.

THOPPITHOPPI said...

நீங்கள் புதியவர்களை வரவேற்று பின்னூட்டம் போடும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நன்றி

Unknown said...

தண்ணி அடிப்பவர்களை விட அதை அடிக்க வைப்பவர்களே ........
இங்கு கிங் ஆக இருப்பதை விட கிங் மேக்கராக இருப்பது அழகு என்று யாரோ சொன்னதாக ஞாபகம்.

ஜோதிஜி said...

தொப்பி விக்கி ரெண்டு பேரும் ப்ரொபைல் படங்களே பல கதைகள் சொல்கிறது. தொப்பி உங்கள் எழுத்துக்கள் உண்மையிலேயே ரொம்பவே என்னை கவர்கின்றது. குறிப்பா உங்க நகைச்சுவை உணர்வு. அற்புதம்.

விக்கி உங்களின் காந்தி குறித்த விமர்சனம் பார்த்து அதிசயத்து உள்ளே வந்தேன். வருகைக்கு நன்றிங்க.

கோவி.கண்ணன் said...

முழுவதும் நன்றாக இருக்கிறது. பெண்களுக்கான விளக்கம் / இலக்கணம் என்பதாக அன்றைய ஆசிரியைகளை மட்டும் தான் நினைக்க முடிகிறது.

Thenammai Lakshmanan said...

ஜோதிஜி ரொம்ப யோசிக்க வைத்த பதிவு..

விமர்சனங்களில் கூட மிக ஆரோக்யம் இருக்கு..

தமிழ் உதயம்.. தேவா ., துளசி கோபாலை வழிமொழிகிறேன்..

நிறைய இடங்களில் உண்மை இருக்கிறது.. சில இடங்களில் நீங்கள் ஒரு வட்டத்துக்குள் இருக்கிறீர்களோ என தோன்றுகிறது..

எதையும் பேசித் தீர்த்துவிட முடியும் என்றா நினைக்கிறீர்கள்.. அதுவும் இல்லாமல் அதீதமாய் இல்லாத எந்தச் செயலும்.. அவரவரின் தனிப்பட்ட வாழ்வு.. அவர்கள் துயரம்.. கடந்து வந்த பாதை.. நாம் நியாயத் தராசில் ஏற்ற ஜட்ஜ் இல்லை..

ப.கந்தசாமி said...

ஆஜர்.

Unknown said...

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே, இதுதான் என்னுடைய கருத்தும், நானும் திருப்பூரை சேர்ந்தவன் என்பதால், உங்களுடைய கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது, நானும் பெரும்பான்மையான கருத்துக்களை வழிமொழிகிறேன்.

Thoduvanam said...

மிக நல்ல தேர்ந்து தெளியவேண்டிய விவாதம் ..

Seiko said...

//...என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரிக்க மாட்டேன்.//
//இதுபோன்ற பெண்கள் குறித்த நேர்மறை எதிர்மறை எண்ணங்களால் தான் என்னுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.//

ஆதரிக்காமல், சொல்லிக்கொடுப்பதென்ன?

கண் புருவத்தை அழகு படுத்துவதை கூட சுதந்திரமாக சொல்லும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்!

பவுடர், எண்ணெய் போலத்தானே உதட்டுச்சாயமும்.

//ஒன்று அன்புக்காக ஏங்கியவன். அல்லது கிடைக்காத போது மாறியவன். //

"ள்" என்ன செய்ய வேண்டும்?

அம்மாவுக்கு சுதந்திரம் இருந்திருக்கவில்லை. அக்காக்களுக்கு சுதந்திரம் இருந்திருக்கவில்லை. என்ன செய்ய முடிந்தது?

பொருளாதார சுதந்திரமின்மையே காரணம்.
பொருளீட்டினாலும், வீட்டிற்கு வந்து அவர்களே வேலை செய்ய வேண்டிய சூழல். யார் காரணம்?

ஊர் கூடி தேர் இழுக்கலாம்.

Seiko said...

//...என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரிக்க மாட்டேன்.//
//இதுபோன்ற பெண்கள் குறித்த நேர்மறை எதிர்மறை எண்ணங்களால் தான் என்னுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.//

ஆதரிக்காமல், சொல்லிக்கொடுப்பதென்ன?

கண் புருவத்தை அழகு படுத்துவதை கூட சுதந்திரமாக சொல்லும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்!

பவுடர், எண்ணெய் போலத்தானே உதட்டுச்சாயமும்.

//ஒன்று அன்புக்காக ஏங்கியவன். அல்லது கிடைக்காத போது மாறியவன். //

"ள்" என்ன செய்ய வேண்டும்?

அம்மாவுக்கு சுதந்திரம் இருந்திருக்கவில்லை. அக்காக்களுக்கு சுதந்திரம் இருந்திருக்கவில்லை. என்ன செய்ய முடிந்தது?

பொருளாதார சுதந்திரமின்மையே காரணம்.
பொருளீட்டினாலும், வீட்டிற்கு வந்து அவர்களே வேலை செய்ய வேண்டிய சூழல். யார் காரணம்?

ஊர் கூடி தேர் இழுக்கலாம்.