Friday, February 19, 2010

அமைதி வெடியும் ஆறுமாதமும்

மற்ற போராளிக்குழுக்கள் வலிமை இழந்ததும், விடுதலைப்புலிகள் மட்டும் மக்கள் ஆதரவு பெற்றதும் ஏன்?  என்பதை ஊன்றிக்கவனித்துப் பார்த்தால் இந்திய அமைதிப்படை உள்ளே இருந்தபோது நடந்த ஒவ்வொன்றும் நமக்கு பல விசயங்களை உணர்த்தும்.  பிரபாகரன் சர்வாதிகாரம், சந்தர்ப்பவாதம் என்ற எத்தனையோ குற்றச்சாட்டுக்களை பக்கத்தில் வைத்து பார்த்தாலும் கூட இந்திய " அமைதி படையே வெளியேறு " என்று போராடிய விடுதலைப்புலிகளுடன் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து போராடிய காட்சிகளும், வயது முதிர்ந்தோர்கள் கூட தங்களால் முடிந்த பங்களிப்பை பார்த்தோமேயானால் அவர்களைப் போல தமிழ் மக்கள் என்ற சொல்லில் தங்களை அடக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ்நாட்டில் எப்போதாவது நடக்குமா என்பது சந்தேகமே? சில நிகழ்வுகளைப் பாருங்கள்.

இந்திய இராணுவச் சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் வரிசையாகப் புறப்படுகின்றன.  நகரின் எல்லையில் ஒரு குறுகிய வளைவில் திரும்புகிறது.  சற்று தூரத்தில் ஒரு வீட்டின் முன்புறம் வாசலில் கிழவி ஒருவர் வெற்றிலையை பாக்குடன் அமைதியாக இடித்துக் கொண்டுருக்கிறார்.  முதல் இராணுவ லாரி அவரைக் கடந்து செல்கிறது. உடனே தனக்குப் பின்னால் வைத்திருந்த ஒயரை மற்றொரு ஒயருடன் சேர்த்து இணைத்து விட்டு மீண்டும் தனது வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.  பின்னால் வந்த அத்தனை லாரிகளும் பல காத தூரம் தீப்பிழம்புடன் வெடித்து சிதறுகிறது.  மொத்த வீரர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இறங்கி ஓட்டம் பிடிக்கிறார்கள்.

பெண்கள், சிறுவர்கள் இராணுவ வீரர்களை நோக்கி வருவது போல் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் நோக்கம் போல கடந்து செல்கிறார்கள்.  எப்போது தங்கள் உடம்பில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை இராணுவ வாகனத்தில் வீசினார்கள் என்று யோசிப்பதற்குள் வண்டி சிதறுகிறது.  இவர்களைப் போல மற்ற பெண்கள் வேறொரு பாதையில் போராடிக்கொண்டுருப்பதையும் பார்த்துவிடலாம்.

அன்னம்மா டேவிட், நேசம்மா வடிவேலு ஆகிய இரு தாய்மார்கள் மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை தொடங்குகிறார்கள்.  அவர்களின் கோரிக்கை " இந்திய அரசே போரை நிறுத்து.  விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கு" .

பின்னாளில் சென்னையில் வந்து இறங்கிய ஒவ்வொரு இந்திய வீரர்களும், அதிகாரிகளும் மறைக்காமல் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர்.  " நாங்கள் நினைத்து சென்றது போல் விடுதலைப்புலிகள் சாதாரணமானவர்கள் அல்ல.  அவர்களின் தீரம் வியப்புக்குரியது.  ஆச்சரியமாக அதிசியமாக இருக்கிறது " என்றார்கள்.  காரணம் அவர்கள் சந்தித்த அன்றாட ஒவ்வொரு நிகழ்வுகளும் அவர்களுக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்று தான்.  போராளிக்குழுக்கள் என்பதெல்லாம் தாண்டி, வீரம் என்பதை வீரனாக ஒவ்வொரு தனிப்பட்ட விடுதலைப்புலிகளும் தான் களமாடியது மூலம் நிரூபித்துக் காட்டினார்கள்.  இந்தியாவின் நவீன உபகரணங்கள் அத்தனையும் அவர்களின் சுதேசி சிந்தனைகள் மூலம் உருவானவைகளின் முன்னால் கண் முன்னாலே பொடிப் பொடியாக உதிர்ந்தது.  உதாரணமாக இராணுவ வாகனங்கள் கடந்து செல்லும் போது தென்னை மரத்தில் இருந்து வந்து அடிக்கும் வெடிகுண்டுகளும், சுதாரிப்பதற்குள் வாகனங்கள் முகர்ந்து பார்க்கும் கண்ணி வெடிகளுக்குள் காணாமல் போயினர்.
கண்ணிவெடி வைப்பதில் புதிய உத்திகளை கையாண்டனர் விடுதலைப்புலிகள்.  கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க இந்திய ராணுவம் உலோக சாதனங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் தாங்கள் உருவாக்கி வைத்திருந்தவைகளை நவீன உபகரணங்கள் கண்டுபிடிக்காத அளவிற்கு திரவ கண்ணி வெடிகளை பயன்படுத்துகிறார்கள்.  இதில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் அப்போது பிரான்சில் இருந்து சிறப்பு மோப்ப நாய்களை கொண்டு வந்தனர். இதிலும் தோற்றுப்போய் வீடு வீடாக உள்ளே புகுந்து விடுதலைப்புலிகளைத் தேடுகிறோம் என்று தொடங்கி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட போது இதற்கென்று தயாரிக்கப்பட்ட பெட்டிகளை வைத்து வீரர்களை வீட்டுக்கு வரவழைக்க, அந்த பெட்டியே வெடிகுண்டாக அவர்களின் உயிரைப் பறித்தது.

விடுதலைப்புலிகள் அன்று முதல் கடைசி வரைக்கும் போராட்ட களத்தில் வென்றெடுக்க முக்கிய காரணங்கள் பல என்றாலும் இந்த கண்ணிவெடி நுட்பம் தான் அவர்கள் மேல் பலருக்கும் பயம் கொள்ள வைத்தது.  அதுவே மனித வெடிகுண்டு தாக்குதல்கள் என்று தொடக்கம் பெற்ற போது ஒவ்வொருவரும் உயிர்ப்பிச்சை என்று கேட்கும் அளவிற்கு ஆனது.  பிரேமதாசாவிற்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பு இருந்தவர்கள் கூட பயந்து ஒதுங்கியதும் நடந்தது.

இவையெல்லாம் கோரம், கொடுமை என்று எத்தனை வார்த்தைகள் போட்டு நமக்கு நாமே சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் சிங்கள வெறி என்பது கொடுமையானது.  அதிலும் சிங்கள ஆட்சியாளர்களின் தூண்டப்பட்ட தமிழர் வேட்டை என்பது மொத்தத்திலும் வெட்கக் கேடானது. தந்தை செல்வா அமைதி வழியில் போராடுகின்றேன் என்ற 1949 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழரசு கட்சி உருவாகி 9 ஆண்டுகளுக்குள் 1958 ஆம் ஆண்டு வெளிப்படையாக சிங்களர்கள் உள்ளே வைத்திருந்த வன்மத்தை கட்டவிழ்த்த போது அன்று போராடிக்கொண்டுருந்தவர்களால் அதை நிறுத்தவும் தெரியவில்லை.  மக்களை காக்கவும் வழி தெரியாமல் மாண்டவர்கள் பல பேர்கள்.  தமிழினமே அன்று தான் சாவுக்குழியை நோக்கி பயணப்படத் தொடங்கியது. அன்று பிரபாகரனுக்கு நான்கு வயது.

இதனால் உருவான இயக்கம் என்பதை பிரபாகரன் தொடக்கத்தில் சொன்னபோதிலும் மிகத் தெளிவாக அவரால் உருவாக்கப்பட்டது என்ன தெரியுமா?   பயம்.  ஆமாம் பயம் ஒன்றே சிங்களர்களை பணியவைக்கும்.   பேச்சு வார்த்தைகள் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் விளையாட்டு.  அது போலத்தான் பாராளுமன்றத்திற்குள் அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே வந்த அமிர்தலிங்கத்தை காயம் பலமோ? என்று கிண்டலுடன் வரவேற்றனர்.  இது போன்ற பல செய்திகளை, நடந்த நிகழ்வுகளை கேட்டு படித்து, பார்த்து வந்த பிரபாகரன் உருவாக்கிய பயமென்னுபதும், பயந்தவர்களை மேலும் மேலும் பணியவைக்க அவரிடம் இருந்த மூர்க்கம் உதவியது.  அதுவே அவருக்கு இறுதிவரைக்கும் முகவரியாய் போய்விட்டது.

ஆனால் சிங்களர்களுக்கு என்று தொடக்கம் பெற்றதே தவிர இந்தியாவுடன் கொண்டு போய் இப்போது இதைவைத்துக்கொண்டு விளையாடலாம் என்று நினைத்தே இருக்க வாய்ப்பு இல்லை.  இவர்கள் உருவாக்கிய பாதை மொத்தமும் சிங்களர்கள் உருவாக்கிய சாவுக்குழியை விட மிக மோசமாக சாக்கடை குழியாக போய்விட அதுவரையிலும் உள்ளே தூங்கிக் கொண்டுருந்த மிருகம் வெளியே வந்தது.  பிரபாகரன் மேல் இங்குள்ள அறிவுஜீவிகள் சொல்லும் அத்தனை புறக்காரணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இலங்கையின் உள்ளே வந்த இந்திய அமைதிப்படையுடன் போராட வேண்டும் என்று சூழ்நிலைக்கு வருவதற்கு முன் ஒரு தடவை அல்ல கிடைத்த கிடைக்காத அத்தனை வாய்ப்புகளை பார்த்து முயற்சித்தவர் பிரபாகரன் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்?

நான் உங்களிடம் இனி அடங்கிப் போகிறேன் என்று பிரபாகரன் ஜெயவர்த்னேவிடம் கொடுத்த மகாண சபை நபர்களை வைத்து அன்றே இந்தியா மேலாதிக்கம் செய்து ஒரு முடிவுக்கு கொண்டு வந்துருக்க முடியும்?  அப்போதும் இந்தியாவிற்கு சட்டாம்பிள்ளைத்தனம் தான் முன்னால் வந்து நின்றது.  நான் இருக்கும் போது நீ ஏன் முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறாய்?  நீ வாழ்ந்து விடுவாயா பார்க்கலாம்? என்ற அசிங்க ஒரங்க நாடகம் அரங்கேற பல அணர்த்தங்களும் தழைத்தோங்கியது.

"புலிகளை ஒடுக்கிவிட்டோம் " என்று ஊடகத்தில் அறிக்கை கொடுத்துக்கொண்டே பல இழப்புகளையும் தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டே இருந்தனர்.  இந்தியா அப்போது தான் ரஷ்யாவில் இருந்து பி.எம்.பி 2  அதி நவீன ஆயுத வாகனத்தை இங்கு பயன்படுத்தினர்.  இதன் சிறப்பு அம்சம் இரவில்கூட தெளிவான பார்வையும், எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வசதியும், இதற்கு மேலும் ஹெலிகாப்டரில் மிக எளிதில் பொருத்தி செயல்படக்கூடிய, இதற்கப்பாலும் அணு ஆயுத போர் நடந்தாலும் பாதுகாப்பாய் பல்முணை தாக்குதல்கள் நடத்தக்கூடிய பலவித முன்னேற்பாடுகள்.    ஆனால் இது போன்ற ஐந்து ஆயுத வாகனங்களை புலிகள் தகர்த்து அழித்தனர். அழிவுகள் அதிகமான போது, இழப்புகள் இந்தியாவிற்கு தொடர்ந்து வந்து கொண்டுருந்த போது இதை வேறு விதமாக சொல்லி ஊடகத்தின் கவனத்தை திசை திருப்பினார்கள்.

" 1971 ஆம் ஆண்டு வங்க தேச போராட்டத்திற்குப் பிறகு களத்திற்குப் பிறகு இப்போது தான் நாங்கள் களத்தில் இறங்குகிறோம்.  மேலும் இதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்துள்ள, தரமில்லாத ஆயுதங்கள் தான் முக்கிய காரணம்" என்றனர்.  இதையே காரணம் காட்டி அமைதிப்படை அதிகாரிகள் கடைசி வரைக்கும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டுருந்தார்கள். 

இந்திய வீரர்களின் கோரமான நடவடிக்கைகளும், இதற்கு மேலான கற்பழிப்பு நிகழ்ச்சிகளும் பிரபாகரன் பக்கம் வேறொரு வகையில் அதிர்ஷ்ட காற்று அடிக்கத் தொடங்கியது.  பெண்கள் அதிகளவு போராளிகளாக மாற்றம் பெறத் தொடங்கினர். இதற்கு மேலும் சிறுவர், சிறுமியர் என்று தொடங்கி முதியவர்கள் வரைக்கும் உணவு, ஆயுதங்கள், செய்தித் தொடர்பு என்று எல்லாவகையிலும் உதவி புரியத் தொடங்கினர்.

ஒவ்வொரு இடத்திலும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் இறக்கும் இந்திய வீரரைப் பார்த்த மற்ற வீரர்கள் படைபட்டாளத்துடன் வந்து குவிந்து விடுகிறார்கள்.  யாழ் நகர் கடைவீதியை மொத்தமாக முற்றுகையிட்டனர்.  அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த அத்தனை மக்களையும் வெட்ட வெளியில் நிறுத்தி வெயிலில் நாள் முழுக்க நிற்க வைத்து வாட்டி எடுத்தனர்.  மொத்தமாக எதிர்ப்பு கிளம்பியதும் கையில் பட்டவர்களை அடித்து சித்ரவதை செய்துவிட்டு கலைந்து போயினர்.  விடுதலைப்புலிகளையும் பிடிக்க முடியவில்லை.  அவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும் முடியவில்லை.  பொது மக்கள் ஆதரவையும் பெற முடியவில்லை.  ஆனால் தினந்தோறும் வானொலி மட்டும் சகஜநிலைமை திரும்பிவிட்டது என்ற ஒரே பல்லவியை பரப்பிக்கொண்டேயிருந்தது.

முதல் ஆறு மாதங்களில் எதற்காக இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றதோ அதன் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதை விட அது தொடர்பாக எந்தவித முன்னேற்பாடுகளைக்கூட ஏற்பாடு விருப்பமில்லாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தான் கொண்ட கொள்கையிலேயே முன்னேறிக்கொண்டுருந்தது.  பிரபாகரன் தவறானவர்.  அவரை ஒடுக்கப்பட வேண்டியவர்.  எதிர்கால இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றவர் என்று எத்தனை கணக்குகள் தனக்குள் வைத்துக்கொண்டாலும் அதை அங்கே செயல்படுத்தி காட்டிக்கொண்டுருக்கும் விதம் தான் நாளுக்கு நாள் கோரத்தின் வாயிலில் போய் நின்று கொடுமையின் நுழைவு வாயிலை இலங்கை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது.

விடுதலைப்புலிகளை விரும்பாதவர்கள், த்ரி ஸ்டார் என்று இந்தியா வளர்க்கும் ஏனைய மற்ற போராளிக்குழுக்களை வெறுப்பவர்கள், எந்த போராட்டத்திற்கும் நாங்கள் சம்மந்தம் இல்லாதவர்கள் என்ற இது போனற திருவாளர் பொதுஜனம் ஏதோ ஒரு வகையில் அமைதிப்படையில் உள்ள வீரர்களின் அக்கிரமத்தால் பாதிக்கப்பட்டு இனி வேறு வழியே இல்லை.   இவர்களை விரட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் மக்கள் எண்ணிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே இருந்து.

திடீர் என்று யாழ் முற்றுகையிடப்பட்டது.  தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஊரடங்கு அமுல்.  இரண்டு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டு மொத்த அந்த பரப்பில் இந்த தொகைக்கு நாலில் ஒரு பங்கு இராணுவ துருப்பை கொண்டு போய் நிறுத்தினர்.  மொத்த மக்களையும் வெளியே வரச்செய்து, தாங்கள் உருவாக்கி வைத்திருந்த த்ரி ஸ்டார் ஆள்காட்டிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் அடையாளம் காண அணிவகுப்பு பேரணி நடத்தினார்,

இறுதியில் மிஞ்சியவர்கள் கொண்டு செல்லப்பட்டு " கவனிக்கப்பட்டனர்". அது உண்மையான விடுதலைப்புலிகளா? இல்லை ஆள்காட்டிகளுக்கு பிடிக்காத ஆட்களா?  எவருக்குத் தெரியும். இந்தியாவிற்கு விடுதலைப்புலிகள் ஒழித்து விட வேண்டும்.  ஆள்காட்டிகளுக்கு தனக்குத் எதிராக எவரும் உள்ளே இருந்து விடக்கூடாது.  நோக்கம் ஒன்று.  அணர்த்தங்கள் பலப்பல.

தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல.  நாளாக சிங்கள மக்களுக்கும் பெருத்த சந்தேகம் எழத் தொடங்கியது.  இவர்கள் இனி மொத்தமாக இலங்கை முழுக்க ஊடுருவி நம்மை இவர்கள் ஆளப்போகிறார்கள்?  என்று உருவான அச்சம் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது.  தமிழ்நாட்டில் உருவான விலைவாசி உயர்வும், கொண்டு போய் கொட்டிக் கொண்டுருக்கும் ராணுவ ஓதுக்கீடுகளும், சென்னையில் இருந்து கொண்டு போய்க்கொண்டுருக்கும் காய் முதல் அடிப்படை மளிகை சாமான்கள் வரைக்கும் இங்கு சராசரி பாமரன் தலையில் விழ ராஜீவ் காந்திக்கு எதிர்ப்பு என்பது இயல்பாக உருவாக ஆரம்பித்தது.  முதல் ஆறு மாதங்களில் செலவழித்தது என்று 600 கோடிகள் என்று இந்தியா கணக்கு சொன்னாலும் எவரும் நம்பத் தயாராக இல்லை.  ஆயிரம் கோடியை தாண்டியிருக்கும் என்று பரவலாக பேச்சு வலுப்பெற படையணி திருப்ப் பெற என்ற கோஷமே ஒரு வருடத்தின் இறுதியிலும், மகாணசபை தேர்தல் முஸ்தீபுகள் என்று ராஜீவ் காந்தி வேறொரு கணக்கு போய் காய் நகர்த்த தொடங்கினார். தனக்கு வசதியாக தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியும் நீட்டிக்கப்பட்டது.

"ஆப்கானிஸ்தானில் ரஷ்யா பெற்ற பாடங்கள், வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடங்கள் போல அல்ல.  இது உண்மையான அமைதியை நிலைநாட்டுவதற்கான அக்கறை"  என்று எத்தனை சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் அன்றைய பொழுது இந்தியாவிற்கு ஒரு அடி அல்ல ஒரு இன்ஞ் கூட முன்னேற்றம் இல்லை என்பது தான் சரியாக இருக்கும்.

இத்தனை அடிவாங்கிக்கொண்டுருக்கும் போது ஏன் ராஜீவ் காந்தி யோசிக்க மறந்தார்? என்பது மில்லியன் டாலர் கேள்விக்கான பதில் ஒன்றே ஒன்று தான்.  தெற்காசியாவில் தன் ஆளுமை நிலை நாட்ட வேண்டிய அவசரம், வங்கதேசம், பூடான், பாகிஸ்தான், மியன்மர் போன்ற நாடுகள் தங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்த்த வேண்டிய அவஸ்யம், இராணுவம், உளவுத்துறை கொடுத்துக் கொண்டுருக்கும் நம்பிக்கை புள்ளி விபரங்கள், இதற்கு மேலும் உள் நாட்டில் எழுந்த செல்வாக்கை மேலே கொண்டு வரக்கூடிய அவசர அவஸ்யங்கள் என்று ஒன்றுடன் ஒன்ற கோர்த்து மாலையாகி அதுவே இறுதியில் இலங்கை அப்பாவி மக்களின் பிணத்தின் மேல் போடும் சவமாலையாக மாற்றம் பெற்றது.

1983 அன்று சிங்களர்கள் உருவாக்கிய கருப்பு ஜுலை கலவரத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த தமிழ் மக்கள் போல நான்கு வருடங்களுக்குப் பிறகு மொத்த மக்களிடத்திலும் ஒரு புதிய எழுச்சி தோன்றியதும், அதுவே இந்திய அமைதிப்படைக்கு எதிராக வலுப்பெறத் தொடங்கியதும் முதல் ஆச்சரியம் என்றால், யாழ் நகர வீதியில், ஒவ்வொரு முனைக்கும் இரண்டு என்று பதுங்கு குழி மூலம் இந்திய இராணுவ துருப்புகள் காவல் காத்ததும், உள் நாட்டு மக்களையே அனுமதி சீட்டு பார்த்து அவர்களை நடமாட அனுமதிக்க வைத்ததும் அடுத்த உச்ச கட்ட சோகம்.

12 comments:

தமிழ் உதயம் said...

நேற்றைய வெற்றியை விடுங்கள்.
இன்றைய நிலையை பாருங்கள்.
நாளை குறித்த நம்பிக்கை ஏதாவது ஒரு இடத்திலாவது தெரிகிறதா.
நம்மாலும் (தாய் தமிழகத்தால்)எதுவும் செய்ய முடியவில்லை.
அதை அவர்களும் புரிந்து கொண்டார்கள்.
இப்போது அவர்கள் இறைஞ்சுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
"அடிமையாகவாவது எங்களை வாழ விடுங்கள்". வழக்கம் போல் நாம் பார்வையாளனாக நின்று வேடிக்கை பார்ப்போம்.

சுடுதண்ணி said...

விவரிக்கும் விதம் மேலும் மேலும் மெருகேறுகிறது :). இதைப் பற்றி பூரணமாக அறிய வாய்ப்பில்லாத என்னைப் போன்றொருக்கு இத்தொடர் ஒரு பொக்கிஷம். தொடரட்டும் நற்பணி..

ஜோதிஜி said...

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களை நான் நேரிடையாக பார்த்த வரைக்கும், இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை பல்வேறு விதமான புத்தகமாக படித்தவரையிலும் மொத்த வாழ்க்கையும் இங்குள்ள தமிழர்களிடத்தில் வேறுபட்டதாகத் தான் இருக்கிறது. இருக்கும். வேடிக்கை என்பது நாளை உருவாக்கும் வாய்ப்புகளை பார்ப்பதாக இருக்கும். இருக்கட்டும்?

ஜோதிஜி said...

உங்கள் எழுத்து நடையும் இதில் இருக்கிறது. நன்றி தமிழ்.

geethappriyan said...

அருமை ஜோதிஜி,
மிகவும் அருமையான பதிவு.நேரம் கிடைக்கையில் சேர்த்து வைத்து படிக்கிறேன்.அனைத்தையும்.

ஜோதிஜி said...

தேடிய அறிவு இன்று கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நலமே விழைவு.

Thenammai Lakshmanan said...

// தெற்காசியாவில் தன் ஆளுமை நிலை நாட்ட வேண்டிய அவசரம், வங்கதேசம், பூடான், பாகிஸ்தான், மியன்மர் போன்ற நாடுகள் தங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்த்த வேண்டிய அவஸ்யம், இராணுவம், உளவுத்துறை கொடுத்துக் கொண்டுருக்கும் நம்பிக்கை புள்ளி விபரங்கள், இதற்கு மேலும் உள் நாட்டில் எழுந்த செல்வாக்கை மேலே கொண்டு வரக்கூடிய அவசர அவஸ்யங்கள் //ஓ.. அமைதிப்படை இலங்கை சென்றதில் இவ்வளவு உள் கட்ட வேலைகள் இருக்கிறதோ ஜோதிஜி

thiyaa said...

அது ஒரு அழகிய கனாக்காலம் ....................

அன்புடன் நான் said...

நேற்றைய வரலாற்றில் இவ்வளவா?? மிக நன்றாக சொல்கின்றீர்கள்.... பாராட்டுக்கள்.

இன்றைக்கு அந்த மக்களின் நிலையென்ன? நாளைய நிலை எப்படியிருக்கும்?

M.Thevesh said...

வியட்நாம்மக்கள் அமெரிகக ஏகாதிபத்தியத்தை விரட்டி அடிக்கும் வீரமும் தீரமும் இருந்தாலும் அவர்களுக்கு பின்புலத்தில் சோவியத் ரஷ்யாவினதும்
சீனாவினதும் உதவிகள் இருந்திள்ளன. அதே போல் ஆப்கானிஸ்தானில் முகைதீன் போராளிகள் சோவியத்தின் படைகளுடன் போராடி வெளியேற்றிய நிகழ்விலும் பின்புலத்தில் அமெரிக்காவின் பரிபூர்ண ஆதரவு இருந்துள்ளது.
ஆனால் ஈழவிடுதலைப் போராளிகள் இந்திய கொலை காரப்படையுடன் மோதி விரட்டி அடித்தது
தங்கள் இராணுவ வலிமையிலும் பொதுமக்களின்
ஆதரவுடன் மட்டுமே என்பது கவனிக்கவேண்டியது.
அவர்களுக்கு வேறு எந்த ஒரு நாட்டினது ஆதரவோ
அல்லது பின்புலமோ இருக்கவில்லை. ஆகையால்
அவர்கள் உலகில் உள்ள மற்ற போராளி அமைப்பு
களுடன் ஒப்பிடும்போது வீரம், தீரம், விவேகம் நிறைந்த விடுதலைப்போராளிகளாகவே திகழ்ந்தார்
கள். அவர்களின் வீரம் உயர்ந்தே காணப்படுகிறது.
பல விடயங்களில் இந்தியத் தமிழரிலிருந்து ஈழத் தமிழர் வேறு பட்டே காணப்படுகிறார்கள்.பொது அறிவு, தன்மானம், வீரம், பணத்திற்குப் பல் இளிக்காத தன்மை, நாட்டுப்பற்று இவைகளில் அவர்கள் உயர்ந்தே காணப்படுகிறார்கள்.இவர்களின் குணநலன்களை அறியாமல் இந்தியத் தமிழன் போல் அடிமைமனப்பான்மையில் ஊறியவனாகவே இருப்
பான் சுலபமாக வெற்றிகொண்டு அடிமைப்படுத்தி
விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டுக்களமிறங்
கினபடியால்தான் இந்தியக் கொலைகாரப்படைகள்
பல்லாயிரம் உயிகளைப் பறி கொடுத்து
அவமானத்துடன் வாலைச்சுருட்டி கால்களுக்கிடை
யில் வைத்துக் கொண்டு நாடு திருப்பினார்கள்.
அத்துடன் பிழையான அணுகுமுறையால் தங்கள்
தலைவனையும் பலிகொடுத்தார்கள். வாழ்நாளில்
என்றைக்கும் மறக்கமுடியாத பாடத்தை இந்திய
கொலைகாரப் படை ஈழமண்ணில் பெற்றுக்கொண்
டது.

ஜோதிஜி said...

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், சிறிலங்காவின் ஜனநாயக விழுமியங்கள் மீது நம்பிக்கையற்றுப் போனநிலையில், 'தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ' என தமிழ்த்தலைவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தெரிவித்தார். அன்று சிறிலங்காவின் சிறுபாண்மையினப் பிரதிநிதி தெரிவித்த அதே கூற்றை, மூன்று தசாப்தங்களின் பின், சிறிலங்காவின் பெரும்பாண்மையினத்தின் பிரதிநிதியாக அனோமா பொன்சேகா கூறியிருப்பது, முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.
நீதி கிடைக்க வேண்டுமாயின் கடவுளிடம் மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, பொது மக்கள் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். ஜெனரல் சரத் பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன் பின்னர் உரையாற்றும் போதே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

Barari said...

pothu makkal anaivarum miratta pattaarkal athanaal veru vazi indri oththu vuzakka vendiyathaaki vittathu.matra porali kuzukkal eppadi ozikka pattaarkalo athai parththu pothu makkalum payanthaarkal enpathuthaan unmai.