Saturday, June 13, 2020

பத்தாம் வகுப்பு - Corona Batch 2020

சுய ஊரடங்கு 5.0 - 72



Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் ஜுன் 30  வரை)

கொரானா குறித்து 71 பதிவுகள் எழுதி முடித்த போது ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியது.  தொடங்கி இன்றோடு 13 நாட்கள் முடியப் போகின்றது. குரல் வழிப் பதிவு என்றொரு புதிய பாதை அறிமுகம் ஆனதால் தொடர்ந்து எழுதாமல் இருந்த விசயங்களை இப்போது பதிவு செய்து விடுகின்றேன்.

இந்த வருடம் கிண்டில் போட்டியில் கலந்து கொள்ளும் போது நிச்சயம் நம் கல்வித்துறை, கல்விமுறை, ஏற்கனவே இருந்த அமைப்பு, மாறிய அமைப்பு, சாதகம், பாதகம், எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தையும் ஆவணப்படுத்தி பெரிய புத்தகமாக எழுத நினைத்து இருந்தேன்.  ஆனால் இந்த வாரம் குரல் பதிவில் ஆன் லைன் கல்வியும் ஆஃப் லைன் தமிழகக் கல்வித்துறையும் என்ற தலைப்பில் இந்த வாரத் தலைப்புச் செய்தியாகப் பேசியுள்ளேன். ஞாயிறு அல்லது திங்கள் அன்று வெளிவரும்.


Monday, June 08, 2020

அச்சு ஊடகங்களை அலற வைத்த கொரோனா Tamilnadu Head line news



கொரானாவின் நான்காவது ஊரடங்கின் போது தமிழகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அச்சு ஊடக முதலாளிகள் ஒன்று சேர்ந்து பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சில முதலாளிகள் அதில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். ஒரு நூற்றாண்டுக் காலப் பாரம்பரியம் கொண்டு மக்கள் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கும் தினசரி பத்திரிக்கைகள் முதல் வாரம் தோறும் சில லட்சம் பிரதிகள் விற்கும் வார இதழ்கள் வரைக்கும் கடந்த பத்து வாரத்தில் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து விட்டன. 

அச்சடித்த பத்திரிக்கைகளும், இதழ்களும் அச்சகத்திலேயே இருக்கும் சூழல் உருவானது. தடைகளைத் தாண்டி தமிழகம் எங்கும் வந்த போதிலும் கொரானா பயத்தால் விநியோகிப்பவர் யாருமில்லாமல் பத்திரிக்கைகள் அங்கங்கே விநியோகிக்காமல் தேங்கிப் போயின.  பல முதலாளிகள் அழாத குறையாகப் பேட்டி கொடுத்தனர்.


Friday, June 05, 2020

ஐந்தாவது கொரானா ஊரடங்கு என்பது ...........



17 நாட்கள்  என்று இயல்பாகத் தொடங்கியது. அடுத்தடுத்து தொடர்ந்து இன்று ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியுள்ளது. மூன்று அட்டைப்படங்கள் உருவாக்கியிருந்தேன். கடைசியாக 68 நாட்கள்.  அறிவிப்பைக் கேட்டவுடன் எரிச்சலுடன் சிரிப்பு வந்து விட்டது.  ஆர்வம் போய்விட்டது.  அடுத்த மாதத்திற்குப் பின்பு இது தொடருமா? இல்லையா என்பது இப்போது உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காத்திருப்போம்?