Showing posts with label மே 17 இயக்கம். Show all posts
Showing posts with label மே 17 இயக்கம். Show all posts

Tuesday, August 14, 2012

டெசோ - வாணவேடிக்கையும் வயதான நடிகரும்

டெசோ என்ற வாணவேடிக்கை விளையாட்டை தடைகள் பல கடந்து கலைஞர் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார்.

திரைப்பட விமர்சனத்தினைப் போலவே மனம் போன போக்கில் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட, கலைஞர் எப்போதும் போல தோல்விகளுடன், விமர்சனங்களுடன் வாழ பழகிவிட்ட காரணத்தினால் அவரை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.  எப்போதும் போல கலைஞருக்குப் பினனால் அமர்ந்து குறிப்பெழுதும் சண்முகநாதன் குறித்து வைத்திருப்பதை ஒரு வேளை கலைஞர் நெஞசுக்கு நீதிக்காக தயார் செய்து கொண்டிருக்கக்கூடும்.  

ஆனால் எனக்கு மட்டும் இந்த கலைஞர் திரைக்கதை தயாரிப்பில் வெளிவந்த டெசோ என்ற வாணவேடிக்கை வைபோகத்தில் சில விசயங்களுக்குப் பினனால் உள்ள உண்மைகள் என்னவாக இருக்கும் தினந்தோறும் ஊடகத்தினை, செய்திதாள்களை பார்த்து குறிப்பெழுத தயாராக இருந்தேன்.

ஆனால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற இருபக்க விசயங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன.  அப்போது தான் ப. சிதம்பரம் என்ற கதாநாயகன் கலைஞரை சந்திக்க மாலையில் கலைஞரிடமிருந்து அந்த அறிக்கையும் வந்தது.  அதாவது வாழ்வுரிமை மாநாடு என்பதாக திடீர் பல்டி அறிக்கை வந்தது. மனதிற்குள் அப்பொழுதே மணியடித்தது.  இதற்குப் பின்னால் மத்திய அரசாங்க்த்தின் ஏதோவொரு விளையாட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேனே தவிர உண்மையான நிலவரங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. 

இதில் உள்ள (May 17 Sivanthan CEPA) இயக்கம் சார்பாக திருமுருகன் பேசிய காணொளியைப் பார்த்த பிறகு தான் நான் சந்தேகப்பட்டது சரிதான் என்பதாக முடிவுக்கு வந்தேன்.

வெறுமனே ஈழம், ஈழத்தமிழர்கள், அவர்களின் அவலங்கள், இந்தியா ஒதுக்கிய நிதியில் இதுவரை கட்டிய 50 வீடுகள், தமிழர்கள் வாழுமிடங்களில் சிங்கள மயமாக்கம் என்பது போன்ற பல செய்திகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டே வந்தாலும் இதற்குப் பினனால் உள்ள உண்மையான நிலவரம் தான் என்ன? ஏன் இந்தியா இலங்கை விசயத்தில் இந்த கள்ள மௌனம் சாதிக்கின்றது?  எந்த ஊடகமும் இதன் உண்மையான நிலவரத்தினை இதுவரை எடுத்துச் சொல்லவே இல்லை என்று தான் முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது. 

ஒரு வகையில் பார்க்கப் போனால் கலைஞரும் பகடைக்காய் தான்.  

ஆட்டுவிப்பவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்?. 

இவரும் தன் பங்குக்கு மத்திய அரசின் ஆதரவு இந்த சமயத்தில் இல்லாவிட்டால் தன் குடும்ப கதி அதோகதி என்பதாக ஆடு ராமா ஆடு என்பதாக வயதான காலத்தில் நடிகர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் எழுதப் போகும் நெஞ்சுக்கு நீதியில் இந்த ஈழ அநீதி குறித்து எழுதுவாரா என்று தெரியவில்லை.?


Sunday, August 14, 2011

ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மையிலேயே யாருக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?


எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

வணக்கம். 

உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. 


தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

தமிழர்களின் இந்த இக்கட்டான வரலாற்று சூழலில் தனது அரசியல், சமூக போராட்ட கட்டமைப்புகளை பிஞ்சு நிலையில் பெற்று இருக்கும் தமிழர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் இந்த அடக்குமுறைகள், கொலைகள்  நம்மை எவ்வாறு கையறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை நாம் கவனிக்க முடியும். இந்த முறையில் இன்று தமிழக அரசியல் போரளிகளின் மீது  கடும் தாக்கத்தையும் துயரத்தையும் ஏற்பட்டுத்தி இருப்பது தோழர்.பேரறிவாளன், தோழர்.முருகன், தோழர்.சாந்தன் திணிக்கப்பட்டு இருக்கும் மரணதண்டனை.  கொலை செய்யப்பட்டவர் முன்னால்  பிரதமர் என்கிற ஒரே காரனத்திற்காக  நீதியை மறுத்து இருக்கிறது 


இந்த அரசு. சோடிக்கப்பட்ட இந்த வழக்கில்  முதலில் தூக்கில் இடப்படுவதற்காக கைது செய்யப்பட்டவர்களில்   13பேர்  ஈழத்தமிழர்களாகவும் 13 பேர் இந்திய-தமிழகத் தமிழ்ழர்களாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டது அரசு.பிறகு  தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட  4 பேரில் இருவர் தமிழகத் தமிழர்களாகவும், 2 பேர் தமிழீழத்தமிழர்களாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது.  செய்யாத குற்றத்திற்காகவும், நிரூபனம் ஆகாத குற்றச்சாட்டு ஒன்றிற்காகவும் இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் மத்திய அரசால்  உயிர் பறிக்கபட இருக்கிறது. 

எந்த ஒரு அடிப்படை சட்ட வழிமுறையும் பின்பற்றப்படாமல் மெளனமாக்கப்பட்ட இந்த  அப்பாவிகள், கதவிடுக்கில் சத்தமில்லாமல் பலியிடப்படும் சுவர் பல்லிகளாய், பலியிடப்பட காத்து இருக்கிறார்கள். எந்தவித கவனமும் இல்லாமல் விபத்தாய் இந்த படுகொலை நடக்கப் போகிறது. ஆனால் இது விபத்து அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்ட நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எந்தவித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில்  தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள். 

தமிழர்கள் எந்த ஒரு சமத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசைதமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். ஆசியாவிலேயே யூத இனத்திற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் விரிந்து நிற்கக் கூடிய தமிழ்ச் சமூகம் தன் இனத்திற்கு நடக்ககூடிய அநீதியை தட்டிக் கேட்க வீதிக்கு  உலகம் முழுவதும் வந்து நிற்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் சர்வதேசச் சமூகத்தில் அவமானத்தை பரிசாக பெற்றுக்கொள்ளும் நிலை இவர்களுக்கு வரும் என்பதை முகத்தில் அறைந்து உரைக்கவேண்டும். 

திரு. பேரறிவாளன் , திரு. முருகன் , திரு. சாந்தன் அவர்களின் விடுதலை பெற்றுத்தரக் கூடிய ஒரு போராட்டத்தை நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழத்தினை விட்டு வெளியேவும் நடக்க வேண்டும். சர்வதேச அரங்கில் இந்த அநீதிக்கான போராட்டம் நடக்கும் பட்சத்தில் இந்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும்.  தமிழர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தன்னையும், சிங்களத்தையும் காக்க நினைக்கும் இந்தியம்,  நமது ஒருங்கினைந்த போராட்டத்தினால் நிலைகுலையும். இந்தியாவின் தன் மரியாதையை உலக அரங்கில் இழக்கும் இந்த சமயத்தில், அதன் நேர்மையும் காந்திய முகமூடியும் கிழிக்கப்படும். இது நமக்கு இந்த சமயத்தில் அவசியமானதும், தேவையானதுமான ஒன்று. உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் இனம் காக்க ஒன்று கூடி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக புலம் பெயர் உறவுகளே உங்களுடைய போராட்டத்தினை பதிவு செய்யங்கள். 

இவர்களின் நியாயங்களை உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளில், ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். நிறைவு பேறாத விசாரணை, பாதியில் முடிக்கப்பட்ட  கமிசன்கள், ஒத்து ஊதும் ஊடகங்கள் ஆகியவற்றால் தவறாக முடிவுற்ற இந்த வழக்கினையும், இந்திய அரசின் நேர்மையின்மையையும் காட்டுங்கள்... 

இந்தப் பஞ்சமா பாதகத்தினை செய்ய முனையும் இந்திய காங்கிரஸ் அரசின் தூதரகத்தின் முன்போ அல்லது முக்கியப் பகுதிகளையோ தேர்ந்தெடுத்து போராடலாம். இந்தப் போராட்டத்தின் அவசியம்  நம் தமிழ் நிரபராதிகளை தூக்கில் போடப்பட கூடாது, இந்த அப்பாவிகள் தமிழர்கல் என்கிற ஒரே காரணத்திற்காகவே தூக்கிலேற்றப்படுகிறார்கள். விசாரனை முடியும் முன்பே,  சந்தேகத்திற்குரிய நபராக சுப்ரமணியன் சாமி (முன்னால் மத்திய சட்ட அமைச்சர்-தமிழீழ விடுதலை எதிர்ப்பாளர், சந்திரசாமி ) மேலும் தமிழர்களாகிய நாம் ஒரே அணியில் நிற்போம் என்பதே.

தமிழனுக்கு உலகில் எம்மூலையில் துன்பமும், அநீதியும் விளைவிக்கப்பட்டால் தமிழர்கள்  நாம் ஒன்றாய் நிற்போம். 


புலம் பெயர் தமிழர்களே களம் காணுங்கள் 

நம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக. அனைத்து அமைப்புகளும், உணர்வாளார்களும் இனைந்து   வரும் ஆகஸ்டு 20 ம் தேதி வரும் ஆகஸ்டு 20 ம் தேதி நாங்கள் சென்னையில் பாரி முனை அருகில், கலெக்டர் ஆட்சியகம் முன்னால்  லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுகிறோம்.   

வரும் 18ம் தேதி வியாழன் 2000 இருசக்கர வாகனங்களில் வேலூரை நோக்கிய பிரச்சாரப் பயண்ம்.  

நீங்களும் கை கோருங்கள்.உங்கள் புலம் பெயர் நாடுகளில் இந்த அப்பாவிகளுக்காய் ஒன்று கூடி உரக்கக் குரல் கொடுங்கள்.. மேற்கத்திய எழுத்தாளர்கள், அறிஞர்கள், போராளிகள், அரசியல் அறிஞர்கள் என அனைவரின் ஆதரவினையும் சேகரித்துக் கொடுங்கள்....  

தமிழராய் ஒன்று கூடுவோம். நாம் வெல்வோம்.

நன்றி. 
மே பதினேழு இயக்கம்.





96007 81111, 98848 77487, 90948 17952.