Tuesday, August 14, 2012

டெசோ - வாணவேடிக்கையும் வயதான நடிகரும்

டெசோ என்ற வாணவேடிக்கை விளையாட்டை தடைகள் பல கடந்து கலைஞர் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார்.

திரைப்பட விமர்சனத்தினைப் போலவே மனம் போன போக்கில் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட, கலைஞர் எப்போதும் போல தோல்விகளுடன், விமர்சனங்களுடன் வாழ பழகிவிட்ட காரணத்தினால் அவரை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.  எப்போதும் போல கலைஞருக்குப் பினனால் அமர்ந்து குறிப்பெழுதும் சண்முகநாதன் குறித்து வைத்திருப்பதை ஒரு வேளை கலைஞர் நெஞசுக்கு நீதிக்காக தயார் செய்து கொண்டிருக்கக்கூடும்.  

ஆனால் எனக்கு மட்டும் இந்த கலைஞர் திரைக்கதை தயாரிப்பில் வெளிவந்த டெசோ என்ற வாணவேடிக்கை வைபோகத்தில் சில விசயங்களுக்குப் பினனால் உள்ள உண்மைகள் என்னவாக இருக்கும் தினந்தோறும் ஊடகத்தினை, செய்திதாள்களை பார்த்து குறிப்பெழுத தயாராக இருந்தேன்.

ஆனால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற இருபக்க விசயங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன.  அப்போது தான் ப. சிதம்பரம் என்ற கதாநாயகன் கலைஞரை சந்திக்க மாலையில் கலைஞரிடமிருந்து அந்த அறிக்கையும் வந்தது.  அதாவது வாழ்வுரிமை மாநாடு என்பதாக திடீர் பல்டி அறிக்கை வந்தது. மனதிற்குள் அப்பொழுதே மணியடித்தது.  இதற்குப் பின்னால் மத்திய அரசாங்க்த்தின் ஏதோவொரு விளையாட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேனே தவிர உண்மையான நிலவரங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. 

இதில் உள்ள (May 17 Sivanthan CEPA) இயக்கம் சார்பாக திருமுருகன் பேசிய காணொளியைப் பார்த்த பிறகு தான் நான் சந்தேகப்பட்டது சரிதான் என்பதாக முடிவுக்கு வந்தேன்.

வெறுமனே ஈழம், ஈழத்தமிழர்கள், அவர்களின் அவலங்கள், இந்தியா ஒதுக்கிய நிதியில் இதுவரை கட்டிய 50 வீடுகள், தமிழர்கள் வாழுமிடங்களில் சிங்கள மயமாக்கம் என்பது போன்ற பல செய்திகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டே வந்தாலும் இதற்குப் பினனால் உள்ள உண்மையான நிலவரம் தான் என்ன? ஏன் இந்தியா இலங்கை விசயத்தில் இந்த கள்ள மௌனம் சாதிக்கின்றது?  எந்த ஊடகமும் இதன் உண்மையான நிலவரத்தினை இதுவரை எடுத்துச் சொல்லவே இல்லை என்று தான் முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது. 

ஒரு வகையில் பார்க்கப் போனால் கலைஞரும் பகடைக்காய் தான்.  

ஆட்டுவிப்பவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்?. 

இவரும் தன் பங்குக்கு மத்திய அரசின் ஆதரவு இந்த சமயத்தில் இல்லாவிட்டால் தன் குடும்ப கதி அதோகதி என்பதாக ஆடு ராமா ஆடு என்பதாக வயதான காலத்தில் நடிகர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் எழுதப் போகும் நெஞ்சுக்கு நீதியில் இந்த ஈழ அநீதி குறித்து எழுதுவாரா என்று தெரியவில்லை.?


15 comments:

 1. இதில் இவ்வளவு மொள்ளமாரித்தனம் இருக்கும் என்று சற்று கூட எதிர் பார்க்கவில்லை. மக்கள் மொத்தமாக ஏமாற்ற படுகின்றனர்.

  ReplyDelete
 2. எங்கும் எதிலும் இறைவன் மட்டும்தான் இருப்பானா என்ன!!!!

  இறைவனுக்கு எதிர்ப்பதமும் இருக்க என்ன தடை?

  ஆமாம்..... எனக்கு விளங்காத ஒன்னு ..... தமிழ் தமிழர்ன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே மாநாட்டுக்கு டெசோன்னு இங்கிலிபீஸு சொற்கள் எதுக்கு? தில்லிக்குப் புரியவைக்கணுமுன்னா?

  என்னவோ போங்க.......:(

  ReplyDelete
 3. என் மண்ணாங்கட்டி மண்டைக்கு ஒண்ணும் புரியல.

  ReplyDelete
 4. காலம் செய்த கோலம்..

  ReplyDelete
 5. ஜோதிஜி,

  ரொம்ப லேட்டு :-))

  ReplyDelete
 6. டெசோ - வாணவேடிக்கையும் வயதான நடிகரும் // அதான் தலைப்பே சொல்லுதே!!!!

  ReplyDelete
 7. டெசோ மாநாடு பற்றிக் கூறியது அனைத்தும் உண்மை.
  இதில் கலைஞர் ஒரு கைபொம்மைதான்.அவர் 2G விசயம் காரணமாக கைபொம்மையாக மாற்றப்பட்டார்.அவருக்கும் வேறு வழியில்லை.
  இந்திய அரசாங்கம் இலங்கை விசயத்தில் பாராமுகமாக இருப்பதற்குக் காரணம் அமெரிக்கா பாகிஸ்தான் விசயத்தில் இருக்கும் அதே காரணம்தான் இதற்கும்.
  சீனா,இலங்கை,இந்தியா மூன்றையும் சம்பந்தப்படுத்தி ஒரு கால்குசேன் போடுங்கள்.நிறைய பதில்கள் அனைவருக்குமே தெரியவரும்.

  ReplyDelete
 8. ஜோதிஜி நலமா?பதிவுலகில் கலைஞருக்கு எதிர்மறையான நிலையே இருப்பதை உணர முடிகிறது.ஆனால் டெசோ நேரலை காணும்போது கல்யாண புதுப்பெண் மாதிரித்தான் கூட்டம் அடக்க ஒடுக்கமாக தெரிந்தது.கூட்டம் கூடுவதில் தமிழர்கள் முந்தைய காலத்திலிருந்து முதிர்ச்சியடைந்து விட்டார்களா அல்லது டெசோவுக்கான தடையின் காரணமாக அடக்கி வாசித்தார்களா என்று தெரியவில்லை.

  பெயர்கள் அறிமுகமானதாக இல்லாமல் இருந்தாலும் பலரையும் இணைத்ததற்கு கலைஞருக்கு பாராட்டுக்கள்.குறிப்பாக இலங்கையிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான தடைகள்,கோபங்கள் இருந்து வர இயலாமல் போனாலும் கூட விக்கிரமபாகு இணைந்து கொண்டது வரவேற்புரியதாக இருந்தாலும் கூட அவரை முழுவதுமாக பேச விடாமல் தடை செய்தது வருத்தத்திற்குரியது.

  டெசோ தி.மு.கவிற்கான பூஸ்டாக இருந்தாலும் கூட மேற்கொண்டு எப்படி இயங்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கூடவே கலைஞருக்குப் பின் டெசோவும் மரணித்துப் போகும் என்பதும் கணினி ஜோஸ்யம்.

  ReplyDelete
 9. முக்கியமான ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.பதிவுலக கழக கண்மணிகள் ஏன் டெசோ பற்றி அடக்கி வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.இதுவரை ஒரு சார்பு பதிவும் கூட வரவில்லையென்பது ஆச்சரியமே!

  ReplyDelete
 10. மே 17 இயக்க காணொளியில் சொல்லப்பட்டுள்ளவை உண்மையல்ல வெறும் ஊகம் என்று சொன்னாலும் , கலைஞர் எல்லாம் தெரிந்தே இந்த விளையாட்டில் பங்குகொள்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

  இதில் கலைஞர் பகடைக்காய் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. அவருக்கு எது தேவை எனபதை அவர் முடிவு செய்யும் நிலையில் உள்ளார். இப்போது அவர் செய்திருப்பது தெரிந்தே செய்த ஒன்று.

  ராஜ நடராஜன் said...
  //பெயர்கள் அறிமுகமானதாக இல்லாமல் இருந்தாலும் பலரையும் இணைத்ததற்கு கலைஞருக்கு பாராட்டுக்கள்.//

  ராஜ நடராஜன், ஆம் இப்படி இணைத்ததால்தான் இலங்கையை இந்தியாவின் வர்த்த ஒப்பந்தத்திற்கு அடி பணிய வைக்க முடியும் என்று சொல்லும் காணொளியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

  ReplyDelete
 11. கபட நாடகதாரியின் மற்றுமொரு கபட நாடக அரங்கேற்றம்.

  ReplyDelete
 12. கல்வெட்டுஜி,

  வாங்க,வாங்க ,நீங்க இல்லாமல் ஆட்டம் சூடே பிடிக்கலை :-))

  //இதில் கலைஞர் பகடைக்காய் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. //

  அஃதே..அஃதே, 1987 இல் கலைத்த டெசோவுக்கு எப்போ உயிர்க்கொடுக்கணும் என தெரிந்த சாணக்கியரைப்போய் பகடைக்காய்னு சொன்னால் பகடைக்காய்க்கே அசிங்கமல்லோ :-))

  gateway logistics எனப்படும் ஏற்றுமதி &இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் யார்,அவர்களின் வியாபாரத்தொடர்பு என்ன என தெரிந்தால் ஈழப்புளியமரத்தின் கதையும் தெரியும் :-))

  ஆண்டுக்கு 1,500 கோடி ஏற்றுமதி இறக்குமதி செய்றாங்களாம், சிறந்த ஏற்றுமதியாளர் விருது மட்டும் ஏனோ கொடுக்கவில்லை :-))

  குடும்பமே ஒன்னுக்கூடி கொள்ளை அடிப்பது தமிழகத்தில் தான் :-))

  ReplyDelete
 13. பகிர்ந்து கொண்ட அணைவருக்கும் நன்றி,

  என்னைப் பொறுத்தவரையில் இந்த டெசோ என்ற நாடகத்தில் அணைவரும் பொத்தாம் பொதுவாக கலைஞர் ஒருவரையே குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கின்றேமோ தவிர இன்னமும் இந்த விசயங்களில் ஒற்றுமையற்று செயல்படும் மாநில அளவில் உள்ள மொத்த புல்தடுக்கி பயில்வான்களை எவருமே நாம் கண்டு கொள்வதில்லை.

  சிவசங்கர மேனன் ஒவ்வொரு முறையும் ஈழம் சென்று திரும்பி வரும் போது ராஜபக்ஷே அண் கோவுக்கு ஒரு அசாத்திய தைரியம் வரும். ஆனால் என்ன உரையாடல் நடந்தது என்பது குறித்து எவரும் கேள்வி கேட்டு விட முடியாது.

  அது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு சம்மந்தப்பட்டது என்பதாக சுட்டிக்காட்டப்படும். அதற்கு மேலாக சீனா என்ற பூதத்தை பாகிஸதான் என்றொரு பிசாசு என்பதாக காட்டி இந்தியா தப்பித்துக் கொள்கின்றது. அய்யோ அவர்கள் இலங்கையுடன் ஒன்று சேர்ந்தால் இந்தியாவிற்கு மிகப் பெரிய கேடு என்பதாக செல்வதெல்லாம் சும்மா பம்மாத்து.

  கலைஞர் மட்டுமல்ல ஆண்டு கொண்டிருக்கும் காவியத்தாய் கூட கடிதம் எழுதுவதில் சளைத்தவர் அல்ல என்பதாகத்தான் இது இழுத்துக் கொண்டே செல்கின்றது. காரணம் இங்கே ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் படை, பத்து, சொறி சிரங்கு இருக்க அதற்கு மருந்தும் மருத்துவரும் மத்திய அரசாங்கமாக இருக்க தன்னை காப்பாற்றிக் கொண்டால் போதுமானது என்பதாகத்தான் வயதான நடிகரைப் போல பல துணை கதாபாத்திரங்கள் இந்த ஈழ நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  யாரை குற்றம் சாற்ற முடியும்.

  மிகப் பெரிய வணிக நிறுவனங்களுக்கு இலங்கை என்ற சந்தை என்பது மிக முக்கியமானது. அவர்களுக்காக ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் அவர்கள் சொல்படி நடப்பார்களா? இல்லை அங்கே அரசியல் சுதந்திரம் கேட்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பார்களா?

  ஈழத்தில் முதலீடு செய்த நிறுவனங்களுக்கும் செய்ய காத்திருக்கும் நிறுவனங்களுக்குப் பினனால் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கு பிணத்தை வைத்து கூட சம்பாரிக்க கற்றுக் கொண்டவர்கள்.

  உணர்ச்சி வசப்படுவதை விட திருமுருகன் போன்றவர்கள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு தெரிந்து கொண்டோமே என்கிற ரீதியிலாவது மன உளைச்சல் இல்லாமல் இருப்பது உத்தமம்,

  ReplyDelete
 14. gateway logistics எனப்படும் ஏற்றுமதி &இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் யார்,அவர்களின் வியாபாரத்தொடர்பு என்ன என தெரிந்தால் ஈழப்புளியமரத்தின் கதையும் தெரியும் :-))

  தூங்குற வேளையில்இருவரும் ஒரே விசயத்தை வெவ்வேறு தொனியில் யோசிக்கிறோம் வவ்வால் அவர்களே?

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.