Showing posts with label எழுத்தாளர் கி.ரா அவர்கள் பார்வையில். Show all posts
Showing posts with label எழுத்தாளர் கி.ரா அவர்கள் பார்வையில். Show all posts

Wednesday, May 06, 2020

நூற்றாண்டை நெருங்குபவருமான கி.ராஜநாராயணன் பார்வையில் கொரானா

சுய ஊரடங்கு 3.0 - 36
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


உறவு, சொந்தம் என்று என் வட்டத்தில் என்பது வயது உள்ளவர்கள் ஆறு பேர்கள் உள்ளனர். ஆரோக்கியமாக உள்ளனர் சில வாரங்களுக்கு முன்பே அவர்கள் ஒவ்வொருவருடனும் அழைத்துப் பேசி சமஸ் கிரா அவர்களுடன் பேட்டி எடுத்தது போல பழைய நினைவுகளை கிளறினேன். தோல்விதான். அவர்கள் நினைவில் பலதும் இல்லை. எழுத்தாளர் என்றால் இவர் தான். பெருமையாக கொண்டாட முடியும். உங்களுக்கு சிறந்த வாசிப்பு. 

பொறுமையாக வாசிக்கவும். நன்றி. (நன்றி இந்து தமிழ் திசை)

()()()

நெறைய. ஆங்கில மருத்துவம் வரலைன்னா இன்னைக்கு மனித குலம் சாதாரணமா கடந்துபோற பல நோய்கள் நீங்க குறிப்பிடுற கொள்ளை நோய்களாகத் தான் வந்து போயிருக்கும். நம்ம ஊருல வசவுகள்லகூட அதற்கான தடயங்கள் இருக்கே! ‘நீ கழிச்சல்லபோக!’ன்னு சொன்னா, அது காலரா; ‘நீ காளியாலபோக!’ன்னு சொன்னா அது பெரியம்மை. எனக்குக் காசநோய் வந்தப்போ நான் பொழைக்க மாட்டேன்னுதானே எல்லாரும் நெனைச்சாங்க; ஆங்கில மருத்துவத்துல மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால பொழைச்சேன். சின்னதும் பெரிசுமா நெறைய வந்துபோகும். பெரிசா நடுங்கவெச்சதுன்னா வைசூரிதான்; அதான், பெரியம்மை.