Tuesday, April 05, 2022

இனி என்னவாகும் தமிழகம்?

ஜி.எஸ்.டி வரி மாநிலங்களின் உரிமைகளை குறைக்கிறதா அல்லது அதிகரிக்கச் செய்கிறதா ? 

2017இல் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி, 1990களில் இருந்தே திட்டமிட்டப்பட்ட ஒன்று தான். 20 ஆண்டு கால ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள், ஆய்வுகள், முன்னெடுப்புகள் இறுதியாக 2017இல் தான் செயல்முறைக்கு வந்துள்ளது. 


மத்திய அரசு விதித்த மிக முக்கிய வரிகளான உற்பத்தி வரி (central excise duty), சேவை வரி ஆகிய இரண்டும் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி விகிதங்களை அனைத்து மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்கிறது. இதன் தலைவராக மத்திய நிதியமைச்சர் இருந்தாலும், அவருக்கு முழு அதிகாரம் கிடையாது. உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தான் இறுதி முடிவை எடுக்க முடியும். The union finance minister has no overriding veto powers. 

2017க்கு முன்பு வரை உற்பத்தி வரி, சேவை வரி மற்றும் கூடுதல் சுங்க வரி (Additional customs duty) ஆகிய மூன்றையும் மத்திய அரசு முடிவு செய்து வந்தது. ஜி.எஸ்.டி வந்த பின், இவை மூன்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மாற்றப்பட்டு, ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்பட்டு, ஜி.எஸ்.டி கவுன்சிலின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதாவது மாநிலங்களின் கட்டுப்பாட்டுக்குள். இது மாநிலங்களின் அதிகாரத்தை அதிகரிக்க செய்துள்ளது. 

மேலும் இந்த மூன்று முக்கிய வரிகளில் இருந்து SGST மூலம் மாநிலங்களுக்கு நேரடியாக பங்கு கிடைக்கிறது. 2017க்கு முன்பு இது கிடையாது.

முன்பு மாநிலங்கள் தம் விருப்பப்படி வாட் வரிகளை (VAT / Sales tax) விதிக்க முடிந்தது. 2017க்கு பிறகு இது ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் பற்றி முடிவு செய்ய அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

சில மாதங்களுக்கு முன்பு ஆடைகள்,  ஜவுளிகளுகான ஜி.எஸ்.டி 5% இல் இருந்து 12 % ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜி.எஸ்.டி கவுன்சில் இதை கைவிட்டது.

இதனை திருட்டு மாடல் என்பதா? திருடர்களின் கூட்டணி என்பதா? இனி என்னவாகும் தமிழகம்?

மோடி இருக்கும் இடத்தில் காங்கிரஸ் இன்றைய சூழலில் ஆட்சியில் இருந்துருக்கும் பட்சத்தில் திமுக அல்லது அதிமுக வை வச்சு செய்து இருப்பார்கள்.  கதற அடித்து இருப்பார்கள்.

காரணம் தமிழக நிதி நிலவரம் அந்த அளவுக்கு அதள பாதாளத்தில் உள்ளது.  அரசு ஊழியர்களுக்கு ஓட்டு கணக்கு என்ற பெயரில் கருணா கர்ண மகாராஜா போல வழங்கினார்.  நடைமுறை மாற்றங்களை எதையும் எடுத்துக் கொள்ளாமல் எந்த சீர்திருத்தங்களை கடைசி வரைக்கும் அமுல் செய்யவே இல்லை.

நீ எத்தனை இலவசம் கொடுத்தாய்?  நான் உன்னை விட பத்து கூடுதலாக கொடுப்பேன் என்று தாங்கள் கொள்ளையடிக்க டெண்டர் வழியாக பாதிக்குப் பாதி இருவரும் மாறி மாறி சுருட்டினார்கள்.  வெளியே சமூக நீதி என்று மெச்சிக் கொண்டார்கள்.  

இன்று மத்திய அரசு நிதி இருந்தால் மட்டுமே உள்கட்டமைப்பு சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளது.  இதனை எந்த ஒரு பேட்டியிலும் ஆணவக்காரர் தியாகராஜன் பேட்டி கொடுப்பதே இல்லை.  ஒவ்வொரு முறையும் என் தாத்தா கக்கா போனாரு... என் அப்பா உச்சா போனாரு தெரியுமா? என்று சுய பெருமை பேசுவே அவருக்கு பொழப்பா போச்சு. வாழ்க திராவிட திருட்டு மாடல்.

தமிழக அரசு வசூலிக்கும் மொத்த வரியையும் சம்பளம், ஓய்வூதியம், வட்டி கட்ட செலவு செய்து விட்டு,

மக்கள் நலன், உள்கட்டமைப்பு உருவாக்க மத்திய அரசை நம்பி இருப்பது

வரி வருவாய் - 1,42,800

சம்பளம் - 71,567

ஓய்வூதியம் - 39,508

கடனுக்கு வட்டி - 46,727

மொத்த செலவு - 1,57,802





ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தமிழகத்திற்கு உள்ளது என்றும் மத்திய அரசு வழங்குவதே இல்லை என்று கதறும் திராவிட திருடர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

GST நிலுவைத் தொகை 13,504கோடி ரூபாய் என தமிழக முதலமைச்சர் தெரிவிக்க, தமிழ்நாட்டிற்கு 2021-22ற்கான GST நிலுவைத் தொகை 6733கோடி ரூபாய் மட்டுமே என ராஜ்யசபா கூட்டத்தொடரில் மார்ச் 15ம் தேதி அன்று எழுந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

2021-22 ஆண்டிற்கான GST இழப்பீடு, மத்திய அரசின் கணக்கின் படி - ரூ.6733 கோடி. இந்த நிதி 2022-23ல்தான்  வழங்கபடும், சென்ற வருடம் அனைத்து மாநிலத்துக்கும் அப்படிதான் கொடுக்கப்பட்டது.


தமிழக அரசுக்கு, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும்; டீசல் லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, 2021 ஆக., 13ல், பெட்ரோல் மீதான வரியை, மூன்று ரூபாய் குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைந்தது.மத்திய அரசும், 2021 நவ., 3ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகளவில் குறைந்தது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் குறைந்தது.

கடந் 8 ஆண்டுகளில் பெட்ரோல் வரியாக தமிழ்நாட்டில் குடும்பத்திற்கு ரூ63,459 வசூலிக்கபட்டுள்ளது. ஆண்டுக்கு 8,000 ரூபாய், மாதம் ரூ.667, தினசரி - 34 ரூ.

கோபாலபுர அரசு இந்த வரியின் மூலம் ஒரு குடும்ப தலைவிக்கு ஆண்டுக்கு 8,000 ரூபாய் கொடுக்க முடியும்.


A O H  K K I  5 L Views   Total 32


No comments: