Sunday, March 13, 2022

இரண்டாவது முறையாக உத்திர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி அவர்கள்...

உபி முதல்வராக யோகி அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தமைக்கு பல காரணங்கள் உண்டு.  அவர் செய்த பணிகள் என்பது பத்து சதவிகிதம் தான் என்று ஏற்கனவே எழுதி இருந்தேன்.



எய்ம்ஸ் மருத்துவமனை

2021, டிசம்பர் 7 ஆம் தேதி 1000 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவ மனையைத் திறந்து வைத்தார்.

இது மோடி அவர்கள் திறந்து வைத்த 10 வது எய்ம்ஸ் மருத்துவமனை.  அதேபோல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும்   திறந்து வைத்தார்.

நீர் மேலாண்மை மற்றும் விவசாயப் பாசன வசதி

9800 கோடி ரூபாய் செலவில், சரயு நகர், தேசிய நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். 



இது 43 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திட்டம். இதன் மூலம் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள, 6800 கிராமங்களில் உள்ள,  14 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றது. 

விவசாயக் கடன் தள்ளுபடி

36,000 கோடி ரூபாய், விவசாயக் கடன் தள்ளுபடி.



6 வழிச் சாலை வசதி.      

22,500 கோடி ரூபாய் செலவில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே (340km), போர்க்காலங்களில் விமானங்கள் தரை இறங்குவதற்கு, ஏதுவாக இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் கங்கா எக்ஸ்பிரஸ்வே(590 km)

பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.



30 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்...

மத்திய அரசு 30  புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி. அளித்து இருந்தது. 

இதில், 9 அரசு மருத்துவக் கல்லூரிகளை, மோடிஜி 2021 ஆம் ஆண்டு,ஜூலை மாதம் திறந்து வைத்தார்... 

இன்னும் 21 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான, கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன... 

21 அரசு மருத்துவக் கல்லூரிகள், இன்னும் ஒரு வருடத்திற்குள் திறக்கப்படும்... 

பாஜக ஆட்சிக்கு  வருவதற்கு முன்பு , மொத்தம் 16 மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது (1947- 2017 ).

யோகி ஆட்சியில், 30 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி அரசு அனுமதி அளித்திருந்தது... 

உத்திரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற வகையில், மோடி அரசு செயல்பட்டு வருகிறது.



விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம்...

உபி யில் மட்டும் 2.5 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்குகிறது.

இந்தியா முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

யூரியா உரத் தொழிற்சாலை    

2021 டிசம்பர் மாதத்தில்,மோடி அவர்கள், 6000 கோடி , ரூபாய் மதிப்பிலான , யூரியா உரத் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.

இந்தியாவின் உர உற்பத்தியில், 25% இந்த உரத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதுவே 30 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திட்டம்.



பிரதம மந்திரி , ஏழை மக்களுக்கான வீடு திட்டம்.

வீடு கட்டும் திட்டத்தில், உத்திரப் பிரதேசத்தில் 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 25 லட்சம் வீடுகள் ,பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும், என்று மோடி 2021 ஆம் ஆண்டு அறிவித்தார். 

தமிழகத்திலும், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் அமலில் உள்ளது. 

இந்தியாவில் இதுவரை 2.62 கோடி வீடுகள், கட்டி முடிக்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..



புதிய விமான நிலையம்      

உலகிலேயே 3-ஆவது மிகப்பெரிய, ஆசியாவில் முதலாவது பெரிய விமானநிலையம் ஆக, JEWAR airport, 20,000 கோடி ரூபாய் செலவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில், அமைய உள்ளது.

2024 இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

உத்திரப்பிரதேசத்தின் நொய்டா City , Bangalore நகரைப் போல்,ஒரு IT city ஆகும்... இங்கு நிறைய IT நிறுவனங்கள் உள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தனித் தனியே குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம்.  இத்திட்டம் மோடி, அவர்களால் 2019ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது... உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்பகுதிகளில், 2.67 கோடி வீடுகள் உள்ளன... (2019- 2021) 

இந்த 2 ஆண்டுகளில், இவற்றில், 34 லட்சம் வீடுகளுக்கு, தனித்தனியே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது... 

2022 ஆம் ஆண்டிற்குள் கிராமங்களில் உள்ள, 80 லட்சம் வீடுகளுக்கு,குடிநீர் இணைப்பு வழங்கப்படும்... 



2024 ஆம் ஆண்டுக்குள், உத்திர பிரதேசத்தில், உள்ள, 12 கோடி வீடுகளுக்கும், தனித் தனியே குடிநீர் இணைப்பு வழங்கப்படும்...  

வீடுகளுக்குக் கழிப்பறை கட்டும் திட்டம்..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1.36 கோடி கழிப்பறைகள் கட்டி, முடிக்கப்பட்டு,, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.. 

சாம்சங் மற்றும் இராணுவ  தளவாடத் தொழிற்சாலை... மெட்ரோ ரெயில்...

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சாம்சங் உற்பத்தி தொழிற்சாலை, சீனாவிலிருந்து, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவிற்கு மாற்றப்பட்டது...  

அதேபோல்,இந்திய இராணுவத்திற்குத் தேவையான, பீரங்கிகள், மற்றும் இராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது... 

அதே போல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் நகரில் மோடி அரசு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது... 



இரண்டு ஆண்டுகளில் 13 கிலோ மீட்டர் , நீளத்திற்கு, மெட்ரோ ரயில் போடப்பட்டுள்ளது...

அரசின் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டம்.

வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படும் போது,  மோடி அரசு பயிர் காப்பீடு திட்டத்தின் படி இழப்பீடு வழங்குகிறது.. ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது... உத்தர பிரதேசத்தில் 2 கோடி விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து உள்ளனர்...

முத்ரா கடன்

உத்திரப் பிரதேச மாநிலத்தில், 1.5 கோடி பேர் முத்ரா கடன் பெற்றுள்ளனர்...

நதி நீர் இணைப்புத் திட்டம்...

கென் - பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டம்... 

இத்திட்டத்தின் மூலம் உத்திரப்பிரதேசத்தின், வறட்சி மிகுந்த பகுதிகள் பாசன வசதி பெறும்... மற்றும் உத்திரப்பிரதேசத்தின் வறட்சி பகுதியில் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும்... இத்திட்டம் எட்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்...



இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.. அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது..

உத்தரபிரதேச மாநிலத்தில், பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திட்டங்களை, மோடி அரசு நிறைவேற்றி உள்ளது.

அதனால் தேர்தலில் வெற்றி பெறுகிறது.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

//பந்தல்கண்ட்// - புந்தேல்கண்ட்.