Thursday, March 03, 2022

உள்ளாட்சி தேர்தல் தமிழக பாஜக ஓட்டு சதவிகிதம் என்ன?

படத்தில் CVS என்பது Contested Vote Share ஒரு கட்சி போட்டியிட்ட இடங்களில் கிடைத்த வாக்குகள். OVS என்பது Overall Vote Share - மொத்தம் பதிவான வாக்குகளில் ஒரு கட்சிக்குக் கிடைத்த வாக்குகள். 


1. நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது 915 - டெபாசிட் இழந்தது 914. வெற்றி கண்டது 0.

2. மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது 495 - டெபாசிட் இழந்தது 491. வெற்றி கண்டது 0.

3. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது 374 - டெபாசிட் இழந்தது 350. வெற்றி கண்டது 5.

4. தேமுதிக போட்டியிட்டது 386 - டெபாசிட் இழந்தது 378. வெற்றி கண்டது 0.

5. காங்கிரஸ் 106 வார்டுகளில் போட்டியிட்டு 60 இடங்களில் வென்றுள்ளது. 11 இடங்களில் டெபாசிட் இழந்தது.

6. பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டது 935 - டெபாசிட் இழந்தது 822. வெற்றி 21.

ஒப்பீட்டில் பாமக, நாதக, மய்யம், தேமுதிக ஆகிய நான்கு கட்சிகளைவிட பாரதிய ஜனதா அதிக இடங்களை, அதிக வாக்குகளைப்  பிடித்திருக்கிறது. மேற்சொன்ன நான்கும் பெற்ற வாக்குகளின் மொத்தத்தைவிட அதிகம் பெற்றது.

பாஜக போட்டியிட்ட வார்டுகளில், மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. 

பாஜக போட்டியிடாத வார்டுகளையும் சேர்த்தால், எல்லா வார்டுகளிலும் பதிவான வாக்குகளின்படி, 6.8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் சராசரியாக 9 சதவிகிதம்; சிவகாசி 12.4, நெல்லை 10.7, நாகர்கோவில் 21.6 சதவிகிதம்.


********

தமிழக தேர்தல் ஆணையம் கட்சிவாரியான வாக்கு விகித விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாஜகவின் வாக்குவிகிதம் அதிகரித்துள்ளது.
மாநகராட்சிகள்
திமுக: 43.59%
அதிமுக: 24%
பாஜக: 7.17%
நகராட்சிகள்
DMK: 43.49%
ADMK: 26.86%
பாஜக: 3.31%
பேரூராட்சிகள்
திமுக: 41.91%
அதிமுக: 25.56%
பாஜக: 4.30%
இந்தக்கணக்குப்படிப் பார்த்தால், 43 சதவிகிதத்துக்கும் 4 சதவிகிதத்க்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு என்றாலும்கூட, வாக்கு விகிதத்தின்படி பாஜக மூன்றாவது இடம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த புள்ளி ராஜா விவரங்கள் முகநூலில் வந்தது... அதனுடன் :-

மனித குலத்தை சீரழிக்கும் விசம் தூவப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது... விழித்துக் கொள்வது முக்கியம்...

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

வெங்கோலன் தொண்டர்களின் கெண்டை கால் அறுபடும் போது, இரண்டு குறள்களின் தொடர்பு#

புல்லறிவாண்மை நீங்கினால் மட்டுமே இதன் தொடர்பு புரியும் என்பதால், # புரிய வரும்...