Thursday, April 01, 2021

திமுகவினர் ஏன் பொதுமக்களின் நிலத்தை அபகரிக்கின்றார்கள்? நடந்த சம்பவங்கள்?

 நில அபகரிப்பு புகார்

2006-ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில்தான் அக்கட்சியைக் குறித்த மக்களின் மதிப்பீடு அதலபாதாளத்தில் வீழ்ந்தது. நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்த காலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த பலரும் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலும் எல்லா மாவட்டத்திலும் நில அபகரிப்பு வழக்கில் சிக்காத திமுககாரர்களே இல்லை என்ற அளவுக்கு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் கட்சித் தலைமை அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. திருச்சியில் திமுக அலுவலகம் கட்டப்பட்டிருக்கும் இடமே அபகரிப்பு நிலம்தான் என்ற அளவுக்கு நிலைமை தறிகெட்டுப் போனது. சாலையோரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, அதை விற்று பிள்ளைகளைக் கரையேற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த குடும்பங்கள், ரியல் எஸ்டேட் திமிங்கிலங்களின் வாயில் மாட்டிக் கொண்டார்கள். 

பலர் வலுக்கட்டாயமாக நிலங்களை விற்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த காலகட்டத்தில் திமுகவின் திருச்சி மாநாட்டில் பேசிய கருணாநிதியே, “நேருவின் தம்பி இராமஜெயம் உயிரோடு இல்லாவிட்டாலும், அவர் தன்னுடைய நிலத்தை இந்த மாநாடு நடத்துவதற்கு வழங்கி பங்களிப்பு செய்திருக்கிறார் என்றார். குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்களைத் தவிர எல்லோருமே இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் வரம்பு மீறி, சட்டத்தை மீறி அல்லது வளைத்து, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு குதியாட்டம் போட்டார்கள். தனக்கு விசுவாசமாக இருந்ததால் தலைமையும் அவர்களின் அடாவடிகளைக் கண்டு கொள்ளவில்லை. நில அபகரிப்பு தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமானோர் மீது, அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் 95 ஆயிரம் புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக, 18 ஆயிரம் வழக்குகள் ஏற்கப்பட்டு, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. நில அபகரிப்பு புகாரை விசாரிக்க, தமிழக அரசு அமைத்த காவல் துறை தனிப் பிரிவு மற்றும் சிறப்பு நீதிமன்றங்களை எதிர்த்து, தி.மு.க.,வினர் வழக்குத் தொடர்ந்தனர்.

திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பொன்முடி, கே.என்.நேரு, என்.கே.கே.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள், ஜெ.அன்பழகன், சவுந்திர பாண்டியன், திருச்சி துணை மேயர் அன்பழகன், நெல்லை மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அமைச்சர்கள், பரிதி இளம்வழுதி, சுரேஷ் ராஜன் ஆகியோர் மீதும், நில அபகரிப்பு புகார் செய்யப்பட்ட நிலையில், முன் ஜாமின் பெற்றனர். கலைஞர் மகன் அழகிரியும் முன் ஜாமின் பெற்று இருந்தார். இப்போது தான் திமுகவின் தேர்தல் பாதை மாறத் தொடங்கியது.

திமுகவில் ஒரு புது கலாச்சாரம் தொடங்கியது. தேர்தலில் போட்டியிட முன் வருபவர்களின் செல்வாக்கு என்ன என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தேர்தலில் யார் அதிகம் செலவு செய்வார்கள் என்பதே ஒரு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரி நடத்துபவர்கள், சாராய ஆலை அதிபர்கள், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், பெரும் வியாபாரிகள் என கோடியில் புரள்பவர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டார்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர. இந்த சீரழிவு 2006 தேர்தலில் தொடங்கி கொள்கையாக மாறியிருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, இந்தத் தொகுதியில் இன்னார்தான் நிறுத்தப்படுவார். இன்னார்தான் மந்திரியாவார் என்று முன்னரே யூகித்துவிடும் அளவுக்கு நிலைமை உருவானது. புதிதாக வருபவர்களுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது என்ற நிலைமையில், இளைஞர்கள் பெரும்பாலும் திமுகவிலிருந்து விலகியே நின்றார்கள். புதிய வாக்காளர்களின் வாக்குகளை திமுக பெற முடியவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆண்டிமுத்து ராசா அருளிய வாக்குறுதி

தா. கிருஷ்ணன் படுகொலை- நடந்த நிகழ்வுகள்

5 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் முந்தைய காலத்தில் பாளையக்காரர்கள் (ஜாகிர்தார்) போல சுல்தானுக்கு வசூல் செய்து கொடுத்து, மாவட்டத்து மந்திரியை விட அதிகாரம் மிகுந்தவர்களாக இருந்தது ஒருகாலம்!

காலத்துக்குத் தகுந்த மாதிரி கலீஞர் குடும்பத்துக்கு வசூல் செய்து கொடுக்கும் வேலை கூட இப்போது அதிகத்தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கே என்றாகிக் கொண்டிருக்கிற மாற்றத்தையும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கலாம்!

உதாரணமாக எ வ வேலு, செந்தில் பாலாஜி போன்றவர்கள் எப்படி எடுத்த எடுப்பிலேயே திமுகவின் முதல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானார்கள் என்பதை வைத்துச் சொல்லலாம்

bakki said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

உண்மை

ஜோதிஜி said...

மு.க.ஸ்டாலின் மகள் Sசெந்தாமரையின் நீலாங்கரை வீடு வாடகை வீடு அபார்மெண்டுன்னு வித விதமா கதை விடுறானுங்க ஆனா அந்த அரண்மனையின் மொத்த பரப்பு 16340 சதுரடி! மொத்த இடமும் S.செந்தாமரை பேருல தான் இருக்கு.14 கோடிக்கு வாங்கபட்டது 2017.அதோட பட்டா EC இணையதளத்தில் அனைவரும் பகிர்ந்து உள்ளனர்.
அதெல்லாம் சரி,
நீலாங்கரைல கடற்கரை ஓரமா ஒரு கிரௌண்ட் 11 கோடி, 16340 சதுரஅடினா 7 கிரௌண்ட்.
14 கோடி கணக்குல குடுத்துட்டு மீதி 63 கோடி???????

ஜோதிஜி said...

அவர் மட்டும் இல்லைன்னா தமிழ்நாட்டில் இன்னும் முக்கால்வாசிப் பேர்கள் கக்கா போனாலும் கழுவத் தெரியாத தற்குறிப் பயல்களாகத்தான் இருப்பார்கள் என்று அவர்கள் கூட்டமாக கும்பலாக சிரிக்காமல் சொல்வதை பார்த்து இருப்பீர்கள்? சரியென்று என்றே வைத்துக் கொள்வோம்?
மத்தியில் இருந்து அரசு எதுவாக இருந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் வந்து குவிந்து கொண்டேயிருந்தது என்று சீரியஸ் ஆக சொல்வார்கள். அதையும் சரியென்றே கேட்டுக் கொள்வோம்?
அப்படியே இதையும் கேட்டுச் சொல்லி அவர்களை கண்டா வரச்சொல்லுங்க?
.....
மோடி அவர்களால் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது 2019ல்.
இந்த சூழ்நிலையில் தமிழக அரசினால் மருத்துவமனைக்கான நிலம் அளிக்கப்பட்டும், அது சமபடுத்தும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி என கோடி ரூபாய் மதிப்பினில் மத்திய அரசு முன்னெடுப்பு செய்தே வருகின்றது. அடிக்கல் நாட்டும்பொழுதே இந்த திட்டம் மக்களுக்காக 2022வாக்கினிலே அர்ப்பணிக்கப்படும் என்றே அரசாங்கம் கூறியிருந்தது.
ஆயினும் கொரானா சூழ்நிலையினால் ஜப்பானிலிருந்து வந்து மதிப்பிட்டு பணமளிக்கும் பணி தாமதமாகின்றது, இவ்வளவும் நன்கு தெரிந்த எதிர்கட்சியினர் செங்கல் வைத்து சின்னபுள்ள விளையாட்டு காட்டுகின்றனர்.
மக்களிடையே ஒரு பொய் பிரச்சாரம் மட்டுமின்றி வெறுப்பு பிரச்சாரத்தினை கட்டமைக்கப்படுகின்றது.
உண்மையில் இதனை நான் வரவேற்கவே செய்கின்றேன். ஏனெனில் வளர்ச்சி சார்ந்து பேசும்பொழுதே அவர்களின் பணித்திறன் எந்த அளவில் உள்ளது என்பதை மக்களிடையே எடுத்துச்சொல்ல வசதியாக இருக்கும் அல்லவா?
இங்குதான் அவர்களுக்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டிய வேறோரு தகவல்களூம் உள்ளது.
13 வருடங்களுக்கு முன்பு அவர்களது ஆட்சியின் பட்ஜெட்டில் அறிவித்த பெரும்பாலான இரயில்வே திட்டங்கள், அவர்களுடைய ஆட்சியில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த முன்னேற்றமும் இன்றி இருந்தது.
ஆயினும் பாஜக அரசே அந்த திட்டங்களை இப்போது பாரபட்சமின்றி ஒவ்வொன்றாக முன்னெடுப்பு எடுத்து நிறைவேற்றுகின்றது.
ஏன் அவர்களால் நிறைவேற்றப்படவில்லை இதைப்பற்றியும் அவர்கள் பேசினால் நல்லது... நிறைவேற்றமுடியாத பல்வேறு திட்டங்களை ஏன் பட்ஜெட்டில் கூறவேண்டும்? யார் இதைப்பற்றி அவர்களிடம் பேசுவது..
1996-97 திமுக கூட்டணி அரசில், பெங்களூர்-சத்தியமங்கலம் இருப்புபாதை 225கோடி மதிப்பினில் 260கி.மீ தொலைவு அமைக்கப்படவிருந்த திட்டத்தினை ஏன் அவர்கள் ஆட்சியில் விரைவுப்படுத்தவில்லை. இருபது வருடங்களுக்கு மேல் திமுகதான் ஆட்சியிலிருந்தது.
சான்று: https://www.processregister.com/Bang.../Project/pid14918.htm
காங்கிரசு, திமுக கூட்டணி அரசில் 2006-2007 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்
திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை = 70கி.மீ தொலைவு , 900கோடி திட்டமதிப்பீடு
2. திண்டிவனம்-நகரி = 179.2கி.மீ தொலைவு, 2300கோடி திட்டமதிப்பீடு
சான்று: https://www.projectsmonitor.com/.../madurai-kanyakumari.../
---
காங்கிரசு, திமுக கூட்டணி அரசில் 2008-2009 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்
அத்திப்பட்டு-புதூர் = 88.3கி.மீ தொலைவு, 528கோடி திட்ட மதிப்பீடு
2. ஈரோடு-பழனி = 91.05கி.மீ தொலைவு, 1140கோடி திட்ட மதிப்பீடு
3. சென்னை-கடலூர்-மகாபலிபுரம் = 179.29கி.மீ தொலைவு, 1205 கோடி திட்டமதிப்பீடு
சான்று: http://www.cspm.gov.in/ocmstemp/PROJ_SUMMARY...
--
காங்கிரசு, திமுக கூட்டணி அரசில் 2011-2012 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்
மதுரை-தூத்துக்குடி= 143.5கி.மீ தொலைவு...
---
அவர்கள் ஆட்சியிலேயே போதுமான காலங்கள் இருந்திருந்தன... ஏன் அமைக்கவில்லை..
2013-14 அவர்களது ஆட்சியினில் குறைக்கப்பட்ட பட்ஜெட் தொகையை யாரிடம் கேள்வி கேட்டனரா தமிழ் ஊடகங்கள்.
அவ்வளவு ஏன் 2010ல், தலைவர்.கலைஞர் அவர்கள் ஆட்சியிலிருக்கும்பொழுதே இதற்குமுன்னர் மத்திய அரசு அறிவித்த திட்டங்களை முடிக்கும் வண்ணம் நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்ததை அறிவார்களா இந்த தமிழ் ஊடகங்கள்.
சான்று: https://www.thehindu.com/.../Karunani.../article15600753.ece
https://www.projectsmonitor.com/.../madurai-kanyakumari.../
😔🤪😜
#கண்டாவரச்சொல்லுங்க