Monday, October 12, 2020

Jo Pechu - விலகி நில்லுங்கள் - Stay Away

நாம் ஒரு படைப்பை எளிதாக உருவாக்க முடியும். ஆனால் நம் படைப்பு வெற்றி என்பது அதனை உள்வாங்குபவர்கள் அளிக்கும் விமர்சனம் தான் அதற்கு மகுடம் சூட்டும். நான் எப்போதும் "வலையுலக சுஜாதா" என்று கொண்டாடும் முரளி அளித்த விமர்சனமிது.

***


"நான் ஏற்கனவே பலமுறை சொன்னது போல சமூகத்தை உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். மாற்றங்கள், விளைவுகளை ஆய்வு சிறப்பாக ஆய்வு செய்கிறீர்கள். நிறைவாகச் சொன்ன அறிவுரை நன்று. கவனித்தலுடன் கூடிய விலகி இருத்தல் நன்மை பயக்கும். முந்தைய தலைமுறை பெற்றோருக்கு இந்த அச்ச உணர்வில்லை. கூட்டுக் குடும்பம் ஓரளவுக்குப் பயன் தரும் என்றாலும்  பழைய தாத்தா பாட்டிகள் போல இப்போது இன்றைய பெரியவர்கள் குழந்தைகளுடன் நேரத்தைக் கழிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனெனில் அவர்களுக்குப் பொழுது போக்காக தொலைக்காட்சி சீரியல்கள் உண்டு. ஆனால் நீங்கள் சொன்னது போல இவற்றுக்கெல்லாம் சரியான தீர்வு காலம் தானாகக் கொடுக்கும். அச்சம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.ஒரு காலத்தில் ஒளியும் ஒலியும் விடாது பார்த்த நாம் இப்போது மியூசிக் சேனலை சீண்டுவது கூட இல்லை.  மொபைலும் அத்தகைய  நிலைக்கு வந்து விடும்". 

பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த போது அவரைப் பற்றிய நான் எழுதிய குறிப்புகளைப் பார்த்து என்ன இறப்புக்கு எழுதுவது போல இருக்குதே? என்று நண்பர்கள் சொன்னார்கள். அன்றைய நிலைமை அப்படித்தான் இருந்தது.  சமூகத்தை உற்று நோக்கும் போது நான் வாசித்த கேட்ட அறிந்த செய்திகளை வைத்து தயவு தாட்சண்ணியம் இன்றி அப்படியே எழுதி விடுவது என் குணாதிசயமாக இருப்பதால் ஆதரவும் எதிர்ப்பும் விமர்சனங்களும் சமமாகவே உள்ளது. 

ஆனால் "வலைச்சித்தர்" எஸ்பிபி க்கு உருவாக்கிய சிறப்பு அஞ்சலி பதிவைப் பார்த்து விட்டு மிரண்டு போனேன் என்று சொல்வதை விட இனி வலையுலகத்தில் இவர் செய்த செய்து கொண்டிருக்கும் செய்யப் போகின்ற தொழில் நுட்பச் சமாச்சாரங்கள் இங்கே இனி வேறொருவர் வந்து செய்ய வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகின்றது. அவசியம் இந்தப் பதிவைப் பாருங்கள். கேளுங்கள். 

இப்போது வெளியான விலகி நில்லுங்கள் யூ டியூப் பேச்சுக்குச் சித்தர் ஐந்தாவது நிமிடம் தன் விமர்சனத்தை அனுப்பியிருந்தார். அதனை அப்படியே இணைப்போடு நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன்.  காரணம் என் எண்ணம் 18 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்களின் மன ரீதியாகத் தாக்கத்தை மற்றும் உளைச்சலைப் போக்க, மாற்ற என்பதற்காகவே இன்னமும் இணையத்தில் செயல்படுகின்றேன். நாம் கற்றதை அடுத்தவருக்கு கற்றுக் கொடுக்க வாய்ப்பு இருக்குமேயானால் அதனை யோசிக்காமல் வழங்கி விட வேண்டும் என்பதே என் கொள்கை.

இந்த அளவு நுணுக்கமாக ஓர் உளவியல் மருத்துவர் கூடப் பேசுவாரா என்பது சந்தேகமே...  எதற்குச் சொல்கிறேன் என்றால், இன்றைய "சேவை" செய்யும் சில மருத்துவர்கள், வாங்கும் பணத்தைப் பொறுத்து, ஆட்களைப் பொறுத்து மாறலாம்...  எதிலும் அரசியல் உண்டு என்று, உங்கள் பாணியே நினைவுக்கு வந்ததால்  இப்படித்தான் என்னால் பாராட்ட முடியும்...! நன்றி அண்ணே...

****

இப்போது கதைசொல்லிகள் யாருமே இல்லை என்கிற நிலைக்கு சமூகம் வந்து சேர்ந்துள்ளது. பேரன்கள் பேத்திகளுக்குப் பாட்டி தாத்தா கதைகள் சொன்ன காலம் என்பது மாறிவிட்டது. அம்மாக்களும் வேலைக்குப் போக வேண்டிய சூழல் காரணமாக வளரும் குழந்தைகளின் முதல் ஐந்து வருடம் என்பது மிகவும் சவாலாகவே உள்ளது. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் நம் இந்தியச் சுதந்திரப் போர் அதற்குப் பின்னால் இதுவரையிலும் நம் வரலாற்று ஆசிரியர்கள் எழுதாத, எழுத விரும்பாத, மறைத்த உண்மைகளை இந்தத் தளத்தில் இதுவரையிலும் 19 பகுதிகளாகப் பேசியுள்ளேன். 

வாய்ப்பு இருப்பவர்கள் கேட்கவும். மனம் உள்ளவர்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவும். நன்றி.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

உங்களின் சில காணொளிகள் சிறிய 55" தொல்லைக்காட்சி பெட்டியில் பார்ப்பதும் + கேட்பதும் வழக்கம்... நேற்று ஞாயிறு; வீட்டிலிரு என்று சொன்னதால் கடைக்கு சென்று தப்பிக்க வழியில்லை...!

அன்பும் உயிருமாய் விளங்கும், என்னில் சரிபாதியும் செல்வ செல்லத்திற்கும், உங்களின் காணொளிகளால் கலகம் பிறந்தாலும், முடிவில் மாட்டிக் கொள்வது அடியேன் மற்றும் இருவரிடமும் கதறிச் சொல்வது :

எதையும் வாயில குணமா சொல்லணும்...!

இந்தக் காணொளியும் இரண்டாவது முறையாக ஓடியதையும், வழக்கம் போல் மாமியாருக்கும் அனுப்பப்பட்டது என்பதை தெரிவித்துக் கொண்டு... நன்றி அண்ணே...

ஜோதிஜி said...

அடுத்து இங்கே நான் சந்தித்த குடிகாரர்களின் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றியது. இது பல இடங்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.
இப்படிக்கு
எளிய தமிழ்ப்பிள்ளைகளின் கூட்டமைப்பு
நிரந்தர ஒருங்கிணைப்பாளர்

திண்டுக்கல் தனபாலன் said...

இதற்கு முந்தைய பதிவை இன்னும் நீங்கள் சரி செய்யவில்லை...

இப்படிக்கு
ஏழையாகிப் போன வலைப்பூ
தமிழ்ப்பிள்ளைகளின் கூட்டமைப்பு
உங்களின் ஒரு ஒருங்கிணைப்பாளர்

ஜோதிஜி said...

சங்கத்தில் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளராக மகள் தான் இருக்கின்றார். அவர் எதுவாக இருந்தால் பணத்தை எடுத்து வை அதன் பிறகு நான் சரிசெய்கின்றேன் என்பதால் சங்கம் அதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்த வாரம் ஒரே ஒரு காணொலிக் காட்சி தான் வந்துள்ள காரணமே இது தான். அதற்குப் பதிலாக ஆங்கர் 25 க்கும் மேல் வந்து விட்டது. இதுவரையிலும் 750 க்கும் மேல் கேட்டு விட்டார்கள். இது என்னைப் போன்ற வேகமான ஆட்களுக்கு எளிதாக உள்ளது. மகளிடம் சுதந்திர வரலாற்றை கேட்கச் சொல்லுங்க.