Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து ஓரளவுக்கு தெரிந்து இருக்கும் பட்சத்தில் உங்களுக்குத் தெரிவிக்க இந்த இரண்டு செய்திகள். 

முதல் செய்தி மருத்துவர் ஷாலினி அவர்கள் சொன்னது.  

மற்றொன்று ஒரு பெண் மற்ற பெண்களுக்கு எழுதியது.

+++++++++++++++++

I request all of you to STOP SHARING the Pollachi Horror video.

கலவியல் வக்கர நோய்க்காக சிகிச்சைக்கு வந்த ஒருவர் அழுதுக்கொண்டே சொன்னார்,”அதை பார்த்து எனக்கு ஆசை வருது, நானும் அப்படி பண்ணீடுவேனோனு பயமா இருக்கு”

கலவியல் வக்கரம் பெரும்பாலும் பார்த்து பழகி கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் பார்ப்பதே ஆபத்து.

ஏற்கனவே அந்த தகவமைப்பு இருக்கும் ஆண்கள் இதையெல்லாம் பார்த்து இன்னும் சீரழிய வாய்ப்புள்ளது. 

அதனால் இது ஒரு Public Health Precaution: STOP SHARING THE VIDEO😡
+++++++++++++++++

Shobana Narayanan

11 March at 21:49

எனக்கு பெண் தோழிகளை விட ஆண் நட்புக்களே அதிகம். எனது இந்தப் பதிவைப் பார்த்து அவர்கள் தான் முதலில் மகிழ்பவர்களாக இருப்பார்கள்.

தோழிகளே.. முகநூல் என்பது அனைத்து பக்கங்களும் கூராக்கப்பட்ட ஆயுதம். இதில் கீறல் விழாது கையாளுவதென்பதே ஒரு கலை. அது அவ்வளவு எளிதில் வசப்பட்டு விடாது. நான் உணர்ந்த சிலவற்றை உங்களுக்காக சொல்கிறேன். கேளுங்கள். இது பாதுகாப்பான முகநூல் பயன்பாட்டிற்கு உதவும்.

1. முதலில் உங்களது தகுதிகளை பரிபூரணமாக உணருங்கள். உங்கள் அழகு திறமை எல்லாவற்றைப்பற்றியும் உங்கள் மீதான உங்களின் பகுப்பாய்வு அவசியம். ஏனெனில் முதலில் கவிழ்வது புகழ்தலில் தான். அழகுங்க நீங்க, சாமி சிலைபோல உள்ளீர்கள் , உங்க வயசே தெரியல என்று வருவார்கள். உங்களைப்பற்றி உங்களுக்கு தெரியும் எனில் சிக்கலே இல்லை. எளிதாக இவர்களை நீக்கலாம்

2. அடுத்தது உங்களிடம் வந்து இன்பாக்சில் மெல்ல பேசத்துவங்கி அவர்கள் பர்சனலைச் சொன்னாலோ உங்களது பர்சனலைச் சொல்லும்படி செய்தாலோ கவனமாக இருங்கள். என் மனைவி மோசம் என இரக்கம் சம்பாரிக்க பார்ப்பார்கள். இல்லை எனில் பாவம்ங ்க நீங்க உங்க கணவருக்கு உங்க அருமை தெரில, உங்கப்பாக்கு உங்க அருமை தெரிலம்பாங்க. யாரிடமும் உங்கள் பலவீனங்களைப் பகிராதீர். கிடைப்பது தற்காலிக நிம்மதி தான். இதுவே பெரிய தலைவலியாய்ப் போகும். 

3. எக்காரணம் கொண்டும் அவசியமற்று எண் தராதீர்கள். தாட்சணியப் படாதீர்கள். எங்கள் வீட்டில் கண்டிப்பு என தெளிவாக சொல்லிவிடுங்கள். 

4. எதுவாகினும் பொது வெளியில் பேசுங்கள். எங்க பெரியப்பா இருக்காரு சித்தப்பா இருக்காரு என உள்டப்பாவில் நீங்கள் ஆரம்பிப்பது உங்களுக்கே யமனாகப் போகும். உங்கள் படத்தைக் கூட போடாமல் பூ வைத்த படம் குழந்தை படமெல்லாம் வைத்து முகநூலில் என்னைத்தை தேடுகிறீர்கள்? இங்கு ஒன்றும் இல்லை. பல வறட்டுக் கூச்சலும் மொக்கை மீமீ க்களும்தான். உங்கள் பொருளை சந்தகப்படுத்தவோ உங்களது எழுத்துக்களை வெளிப்படுத்துவோ 

இது ஒரு களம். நிறைய கற்றுக் கொள்ள பயன்படுத்துங்கள். அதை உணருங்கள். இவையெல்லாம் ஏதுமில்லை சும்மா பொழுது போக்கு எனில் அதை போலி படத்துடன் செய்தால் உங்களுக்கு தான் தலைவலி.

5. குழுக்கள் பாதிக்கு மேல் ஆபத்தானவை. கவனத்துடன் செயல்படுங்கள். அங்குள்ளவர்கள் மற்றவர்களை விட எளிதாக உங்களை அணுக இயலும். 

6. ரத்தமும் சதையுமாக நேரில் கண்ட நபர்களை மட்டுமே உள்டப்பாவில் அனுமதியுங்கள். ஆபாச படங்கள் பேச்சுக்கள் வரும் போது கவனமாகுங்கள். 

7. தவறான நோக்குடன் வருபவர்கள் சுற்றிச்சுற்றி பாலியல் விசயங்களையே பேசுவார்கள். எப்படியும் அந்த டாபிக்கை தொடுவார்கள். அதில் எளிதில் கண்டு கொள்ளலாம். 

8. உங்களுக்கு கமண்டிடுபவர்கள் மற்றவர்களுக்கு எப்படி கமண்டிடுகிறார்கள் என்பதை கவனியுங்கள். உங்களுக்கு வெள்ளை சரி என்றும் மற்றொரு பெண்ணிற்கு கருப்பு சரி யென்றும் வேறொரு ஆணுக்கு பொம்பிளைங்க கேனச்சிங்க என்றும் கமண்டிட்டு இருப்பவர்கள் போலிகள். புரிந்து கொள்ளுங்கள். நேர்மையாளர்கள் எங்கும் ஒரே நிலைப்பாட்டுடன் இருப்பார்கள்.

9. இவர்கள் அனைவரிடமும் திருப்பி திருப்பி சில பேட்டர்ன்களே ரிபீட் ஆகும். அதை டீ கோட் செய்யுங்கள். போட்டோவிற்கு மட்டும் கமண்டிடுவது, உங்களிடம் பேசிய அதே டயலாக்கை மற்ற பெண்களிடம் பேசுவது போன்று.. 

10. இவர்களின் மியூட்சுவல் நட்புகளை கவனியுங்கள். அவர்களுள் நமக்கு மதிப்பானவர்கள் இருப்பின் சிறிது நலம். துணிந்து ஏற்கலாம். 

11. சந்தேகம் தோன்றினால் மியுட்சுவல்லில் உள்ளவர்களிடம் கேட்டு கொள்ளலாம்.

12. எல்லாவற்றிற்கும் மேலாக தயவு தாட்சிணியமின்றி நட்பை கத்திரியுங்கள். நட்பை தொடர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை

13. மீறி நமது வார்த்தைகளோ செய்கைகளோ அவர்கள் மிரட்ட இடம் தருமாயின் போங்கடா என்று தைரியமாக சொல்லுங்கள். ஒருபோதும் பிளாக் மெயிலுக்கு அடிபணியாதீர்கள். அது தீரா சுழல்.

14. துணிச்சலாக ஸ்கிரீன்சாட் போடுங்கள் அது மியுச்சுவலில் உள்ள மற்ற பெண்களுக்கும் உதவும். மற்ற கயவர்களுக்கும் ஒரு பய

15. ஒவ்வொரு பெண்ணையும் எப்படி கவிழ்க்க வேண்டுமென தெளிவான திட்டங்கள் இவர்களிடம் உண்டு. ஒருபோதும் இதை மறவாதீர்கள். நமக்கு நிகழாது என அலட்சியம் வேண்டாம்.

16. குடும்ப உறுப்பினர்களிடம் ஆயிரம் சிக்கல் இருப்பினும் வேறு வழியில்லை. அவர்களை நம் கல்வியால் திறமையால் பணியால் மட்டுமே வெல்ல இயலும். இதுபோன்ற அரைவேக்காட்டு நபர்களிடம் சிக்கினால் மிக மோசமாகத் தான் பாதிக்கப்படுவோம்

17. கடைசி விசயம். கெத்தாக, தன்னம்பக்கையுடன் மிளிருங்கள். உங்கள் ஆளுமை அவர்களைத் தள்ளி நிறுத்தும். அதை விடுத்து கண்டபடி பதிவுகள் போட்டு உங்கள் பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள். சோகங்களை இங்கு பகிராதீர்கள். அதன்மூலம் ஆகப்போவது ஏதுமில்லை.

இது பிற்போக்கு பதிவல்ல. ஆண்களின் திட்டங்களை புரிந்து விலக ஓர் வழிகாட்டல் அவ்வளவே. அறிவுரை இல்லை.

எது நடந்தாலும் தைரியமாக கடந்து செல்லுங்கள். சரி தவறென்று ஒன்றுமில்லை. ஊர் வாழ்ந்தாலும் பேசும் வீழ்ந்தாலும் பேசும். வார்த்தைகளை கடந்து செல்லுங்கள்.

ஒவ்வொரு நொடியும் புதிது. ஒவ்வொரு நாளும் புதிது.

30 comments:

 1. இந்த நாய்களுக்கும் நரிகளுக்கும் சேர்த்து தான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் என்று நான் நினைக்கவில்லை... அதில் உங்களின் கருத்துரையும் இல்லை...

  ஈவு இரக்கம் இல்லாமல் நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பவர்களை, கேவலம் - பணத்திற்காக கொலை செய்பவர்களை, காமக்கொடூரர்களை... சுருக்கமாக நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சக செயல் செய்யும் சில கொடியவர்களை தண்டித்து, அவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் பொறுப்பு... தகுந்த தண்டனை கொடுத்தும் மாறவில்லையெனில், மரண தண்டனையே சரி... அது ஒரு விவசாயி களையைக் களைந்து, பசுமையான பயிரைக் காப்பதற்குச் சமம்...

  தகுந்த தண்டனை சரி தான்... களைகள் முளைக்க ஆரம்பித்தவுடன் கண்டறிந்து வேரோடு எடுக்க வேண்டியது அவசியம் தான்... ஆனா ஒரு அரசாங்கமே களைகளாக மாறி விட்டால்...? மக்களுக்கு நல்லது செய்யலேன்னா எப்படி...? தொடர்ந்து மக்களை துன்புறுத்துற செயல்களை செய்றது, கொலையே தொழிலா செய்ற கொலைகாரனை விட கொடியது... அவர்களுக்கெல்லாம் தண்டனை என்ன...?

  ஒரு ஆட்சியாளனின் தொழில் என்னவென்றால், குற்றம் செய்து விட்டால் அது யாராக இருந்தாலும், அதற்கு சரியான தண்டனை வழங்குவது தான்... அதோடு, குற்றம் இல்லா நாட்டை உருவாக்கி விட்டால் ஆட்சியாளன் மீது குற்றமில்லை...

  யாராக இருந்தாலும்...? ஏம்பா எரிச்சலை கிளப்புறே... நீதிங்கிறது எல்லோருக்கும் சமமாயிருக்கா...? சரி அதை விடு... இப்போ நடக்குற தொழில் வேறே... பல வகையிலே பல விதத்திலே 'வரி'ங்கிற பெயரிலே(யும்), மக்களிடம் பணம் / பொருள் வசூல் செய்யும் தொழில்...! இது எப்படி இருக்கு தெரியுமா, மக்கள் போற வழியிலே, திருடன் கத்தியை காட்டி "எல்லா பணத்தையும் எடு"-ன்னு மிரட்டுற மாதிரி...!

  பதிவின் முடிவில் ஒரு தொழிற்நுட்பத்துடன் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்... அது என்னவென்றால் :

  உங்களுக்கு ஞாபகம் வருகிற அரசியல் நிகழ்வு என்ன...?

  நீங்களாவது பதில் சொல்வீர்களா...?

  ReplyDelete
  Replies
  1. கடைசியில் ஏ1 கிரிமினல் மாதிரி கடைசி காலத்தில் செத்து சுண்ணாம்பாகி எப்போது சாகலாம் என்று அனாதையாக செத்துப் போய்விடுவார்கள். கவலைப்படவேண்டாம்.

   Delete
  2. அதே அதே...

   நீங்களே நடந்து முடிந்த பலவற்றை தொகுத்து தான் என்னால் பதிவு செய்ய முடியும்... ஏனென்றால் என்னுடைய நிலைமை - வியாபாரம்... ஆம் பாரம் தான்...

   ஆனால் ஒன்றே ஒன்று சொல்கிறேன்... இவையாவும் வள்ளுவர் அன்றே சொல்லி வைத்தார் என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும்... நன்றி...

   Delete
 2. இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2019/02/Regime-and-Government-Part-1.html

  ReplyDelete
 3. இப்போதெல்லாம் எல்லாம் தெரிந்தது போல் இருப்பவர்களே அதிகம் முகநூல் நட்பு ஒரு கொலையில் முடிந்ததைக் கதையாக்கி எழுதி இருந்தேன்

  ReplyDelete
 4. நேரம் கிடைப்பின் இன்றைய எங்கள் blog பதிவை - கருத்துரைகளை வாசிக்கவும்...

  http://engalblog.blogspot.com/2019/03/190313.html

  Update...? ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. படித்து விட்டேன் நண்பா

   Delete
 5. 300 பாக்கிஸ்தான் தீவிரவாதிகளும் 200 பொள்ளாச்சி பெண்களும் கோடிக்கணக்கான முட்டாள்களும்!
  கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டு தலைவர்களும், ஊடகங்களும், பெரும்பாலான மாக்களும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை கொஞ்சம்கூட கேள்விகேட்காமல் பொங்கி சம்பந்தப்பட்ட அந்த 4 ஆண்களை எப்படியெல்லாம் தண்டிக்க வேண்டும் என்று நீதி கூறி தாங்கள் என்னவோ ஒழுக்க சீலர்கள் என்பதாக காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.. இருக்கட்டும். 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசாங்கம் புளுகியதில் எவ்வளவு உண்மை உண்டோ அதே அளவு உண்மைதான் இந்த 200 பெண்கள் கதையிலும் இருக்க கூடும். எந்த அடிப்படையில் 200 பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள் என்று மொத்த தமிழகமும் பொங்குகின்றது? தமிழ்நாடு காவல்துறையின் அறிக்கையின்படி அந்த 4 ஆண்களும் "ஒரு பெண்ணை சித்திரவதை செய்தது" என்ற ஒற்றை பிரிவின் மீது மட்டுமே குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. ஒட்டுமொத்த ஊடகங்களும், பெரியார் வழி வந்தோம் என்று பீத்திக்கொள்ளும் திராவிட அரசியல்வாதிகளும் சேர்ந்து இப்படி இல்லாத முழு பூசணிக்காயை இருப்பதாக காட்டுகிறார்கள்.. அதனை கேட்டு இந்த முட்டாள் மந்தைகளும் கொதிக்கின்றன!

  ReplyDelete
  Replies
  1. தலைவரே இவ்வளவு பெரிய நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க. ஏன் உங்க பேர்ல வந்து சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் கெத்தா இருந்துருக்குமே? கொஞ்சம் சுற்றும் முற்றும் பாருங்க பாஸ். வீட்டுக்குள்ள புகுந்துறப் போறானுங்க.

   Delete
 6. கூறும் கருத்து பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருக்கும்போது அதனை யார் கூறினால் என்ன ஜோதிஜி? பொள்ளாச்சி விவகாரத்தில் வரிசையாக சினிமாத்துறையில் உள்ள புத்தர்களும், பத்தினிகளும் கருத்துக்கூறும்போது என்னைப்போன்ற சாமானியர்கள் வெட்கப்படுவது இயற்கைதானே :)

  ReplyDelete
 7. சென்ற வருடம் சென்னையில் ஒரு 11 வயது குழந்தை பாலியல் கொடுமைக்குள்ளானதாக செய்தி வந்து 66 வயது வாட்ச்மேன் உட்பட 17 பேர் கைதுசெய்யப்பட்டார்கள் நியாபகம் இருக்கிறதா? அன்றும் ஊரில் உள்ள அனைத்து ஊடகங்களும், பத்தினிகளும் அந்த 17 பேர் கொட்டையையும் அறுக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார்களே.. அந்த வழக்கு ஏன் கிடப்பில் போடப்பட்டது என்று தெரியுமா? பொங்குவது யாவர்க்கும் எளிதாம்.. பகுத்தறிவோடு சிந்திப்பதே ஆறறிவுள்ள மனிதர்க்கு அழகு!

  ReplyDelete
  Replies
  1. இல்லை தலைவரே? நம்ம பெயரில் எழுதும் போது அது தனியான மரியாதை கிடைக்கும். நான் திறந்தே வைத்துள்ளேன். அனானி பெயரில் கூட எழுதலாம் என்று கருத்து சுதந்திரமும் கொடுத்துள்ளேன். அப்புறமென்ன ஜமாய்ங்க. நீங்க சொன்னதெல்லாம் உண்மை தான். பணம் அதிகாரம் இரண்டும் இருந்தால் ப.சிதம்பரம் போல பேமிலி பேக் ஜாமீன் வாங்க முடியும் இந்த நாட்டில். வேறென்ன சொல்ல?

   Delete
 8. இந்தியாவை விட்டு வந்து பல வருடங்களாகிவிட்டது. இந்தியா மிக மிக வளர்ந்துவிட்டது. நான் அறீயாமையில் வாழ்கிறேன். அதுவும் இந்த செல்ஃபோன் விசயத்தில்.

  எனக்கு பல விசயங்கள் இவர்கள் முன்னேற்றம் புரிவதில்லை. முகநூல் வாட்ஸ் அப் னு பல வகையில் தன்னை தன் அந்தரங்கங்கள் எல்லாத்தையும் உலகுக்கு காட்டிக் கொள்கிறார்கள் பெண்கள். இதை பலவகையில் கெட்டவர்கள் அப்யூஸ் பண்ணூறாங்க.

  எனக்கு பொள்ளாச்சில என்ன நடந்ததுனு சரியாத் தெரியலை. அந்த வீடியோவை பார்க்கவில்லை. இன்னும் ஒரு யூகத்தில்த்தான் இருக்கேன். பார்த்து நான் நாலு பெண்களூக்கு அறீவுரை சொன்னால் நான் ஒரு முட்டாள்ணு தோனுது. யாரும் கேட்கப்போவதில்லை, அப்படிக் கேட்டாலும் அதுபடி நடக்கப் போவதில்லை என்கிற அவநம்பிக்கையில்தான் அதிக நம்பிக்கை இருக்கு.

  நான் இந்த விசயத்தில் கன்சர்வேட்டிவ். எனக்கென்னவோ பெண் சுதந்திரம் னு சொல்லிக்கிட்டு ஆழம் தெரியாமல் காலை விடுறாங்க- பொதுவாக நம்ம ஊர் பெண்கள் னு தோனுது. ஆமா, நான் பின் சுதந்திரத்தை வரவேற்காத காட்டுமிராண்டிதான்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்ன அதே கன்சர்வேட்டிவ் டைப் தான் நானும். ஏற்கனவே இந்த தளத்தில் வந்த வவ்வால்இதை வைத்தே என்னை ஓட்டிக் கொண்டிருப்பார். நீங்க சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஐவரி. வெளியே சொன்னால் நம்மை மிதிக்க வந்துவிடுவார்கள்.

   Delete
 9. Getting carried away a little bit here

  பெண்களூக்கா போராடுறேன் என்பதுபோல் என்ன பண்ணீட்டு இருக்கு இந்த சின்னமயினு ஒரு அரைவேக்காடுனு கவனிச்சுப் பாருங்க.

  வைரமுத்து மட்டமான ஆள் என்பது ஒரு புறமிருக்கட்டும்.

  மொதல்ல ஹோட்டலுக்கு வரச் சொன்னான்னு சொல்லுச்சு. அப்புறம் கல்யாணத்துக்கு அழைபு எல்லாம் விடுத்து இருக்கு.

  இப்போ மறூபடியும் ஹோட்டல் நிகழ்வுபோக என்னை கையப் பிடிச்சான்னு புதுசா ஒரு பிரச்சினை- முன்னால் சொல்லாத புதுசு இது. இப்போ கேஸ்.

  மறூபடியும் நான் வைரமுத்து விசிறீயல்ல!

  இவங்க எல்லாம் பெண்களூக்காக போராடுறாங்களா? இல்லை சும்மா போராடுவதுபோல் ட்விட்டர் ஃபாலோவர்ஸ் அதிகமாக்கி தன்னை ஸ்பாட்லைட்ல வைச்சிர்க்க முயலும் மனநோய் பெற்றவர்களா?? எனக்கென்னவோ இதெல்லாம் ஓரு மாதிரி மனநோய் போலதான் தோனுது. பெண்களூக்காக போராடுவதே தன் சுயந்ல வியாபாரம் ஆகிவிட்டது. இதுபோல் போராடிக்கூட "வேஷித்தனம்" செய்யலாம்னுதான் தோனுது.

  I think she is just an attention-seeking trash! If you watch her carefully you could see that.

  ReplyDelete
  Replies
  1. ஹை கிளாஸ் விபச்சாரம் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம். அந்த அளவுக்கு அந்த துறை குறித்து ஓரளவுக்கு தெரிந்தவன் என்ற முறையில்.

   Delete
 10. இவர்களூக்கு (நம்ம ஊரில் பல்யாகும்) அட்வைஸ் பண்ண எல்லாம் எனக்கு தெரியலை. I feel they are all more advanced than I am, honestly.

  அட்வைஸ் பண்ற ஷாலினி, ஷோபனா சொல்ற அட்வைஸ் எல்லாம் வொர்க் அவ்ட் ஆகுமானு தெரியலை. ஆகாதுனுதான் தோனுது. Those advice are not going to solve anybody's problem

  எனக்கு தோனுவதெல்லாம் ஏன் இப்படி ஆன்லைனல cell phone communication, fb, whatsup or whatever இவர்கள் தங்கள் அந்தரங்கள வெளீயிடுறாங்க? ஏன் இவர்களூக்கு அறீவு இல்லாமல்ப் போயிடுச்சு.

  பெண்கள் சின்ன சின்ன அழகான பறவைகள். ஆண்கள் பருந்துகள். இதுபோல பறவைகள அடித்து சாப்பிடும் இன்னொரு உயிரினம். தினமும் பருந்துக்கு சில பறவைகள் பலியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. கவனமாக, தன்னை பருந்துக்கு அதிகம் காட்டாமல் வாழும் பறவைகள் தப்பிக்கின்றன.

  Today women are INVITING TROUBLE. Obviously they get into trouble and crying and committing suicide and dying and so on and so forth.

  The advice wisely given to women to day is..Have sex but use contraception, if you are careful, you can avoid getting pregnant and getting HIV. (99%) This is the situation today after women earning their fucking freedom!

  There is another option. Do not have premarital or affair-related sex. That can protect you 100%. This out-dated, women do not like this anymore in India, I strongly believe.

  All I am saying is, do not give opportunity to the animals. May be get rid of cell phone- you could do lots of things without it. Why I am asking you to get rid of cell phone?

  Because you are an IDIOT. You dont fucking know how to use that carefully! You get into trouble by not protecting yourself, and crying when you fuck up! YOU JUST dont know how to use it carefully. So, live without it.

  ----------------

  Possessiveness is important in our old culture. Mother and father pay too much attention in their chidren's daily activities in order to protect them. It is also true with husband and wife. This is considered as "ABUSE" or "sickness" in western culture. You should let them be themselves. We are now trying following "western culture" in the name of "freedom" or whatever.

  So, what happens in west when they earn the freedom at the age of 12?

  Result?

  Teen pregnancy is about 70-80% in the middle class. They will have a child at the age of 14-20. I am not exaggerating. There is no husband and only have lover for a short time and enjoy sex. The father always goes away with another younger woman usually. The mom brings up the child as a single mom. This is where the problem is. The teen mother sometimes can not handle the stress. It affects the children- psychologically a lot. How did she get into trouble? THE FREEDOM she earned for having sex got her into trouble. Who is affected because of her freedom? It is her innocent children!

  Freedom is a dangerous thing..Let me stop here

  ReplyDelete
  Replies
  1. இதை அப்படியே முகநூலில் எழுதியிருந்தீங்கன்னா உங்களை கொத்துகறி போட்டுருப்பாங்க. இங்கே வளர்ச்சி சுதந்திரம் உரிமை மூன்றுக்கும் உண்டான சரியான புரிதல் ஆணுக்கும் ஏன் பெண்களுக்கும் புரியவில்லை. கடைசியில் மாட்டிக் கொள்வது பெண்கள் மட்டுமே. தெளிவான புரிதலுக்கு நன்றி வருண்.

   Delete
 11. பொள்ளாச்சியில் நடந்தது பற்றி வெளியே வரக்கூடாது
  என்பதில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது - எதற்காக ?

  வேறு யாரும் இதில் தொடர்பில்லை என போலீஸ் சொல்கிறது .

  கைது செய்யப்பட்ட யாரையும் விசாரணை செய்யவில்லை .
  இனிமேல் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது .

  குண்டர் சட்டம் கோர்ட்டில் நிற்காது .
  பத்து நாளில் பெயில் கிடைத்து விடும் .

  இதை செய்தவர்கள் தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது
  என்ற திமிருடன் மிரட்டி பறிப்பதை ஒரு தொழிலாக செய்து இருக்கிறார்கள் .

  இந்த தைரியம் எப்படி வந்தது ?
  மாட்டிக்கொண்டால் போலீஸை கவனித்து வெளியில் வரலாம் .
  இதற்கென்றே போலீஸ் ப்ரோக்கர்கள் இருக்கின்றார் .

  இரண்டு வருடம் முன்பு இவர்கள் மீது புகார் வந்த போதும்
  ஒரு நடவடிக்கையும் இல்லை .
  அப்போது இருந்த போலீஸ் அதிகாரி யார் ?
  அவர் மேல் ஏன் குற்றம் பதிவு செய்யக் கூடாது ?

  ReplyDelete
  Replies
  1. இப்போது அங்கே இருக்கும் எஸ்பி மேலே மற்றும் டிஎஸ்பி மேலே ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் உண்டு.

   Delete
 12. மருத்துவர் ஷாலினி சொல்லி இருப்பது கவனிக்கப்படவேண்டியது.

  முகநூல் நண்பர் எழுதி இருக்கும் குறிப்புகள் உபயோகமானவை.

  வேலூர் ராமன் அவர்கள் மாலைமலர் தலைப்புச் செய்தி பற்றி எழுதியிருந்தார். அதுவும் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.​

  ReplyDelete
 13. நம்மூரில் இன்னும் இது போன்ற குற்றங்களுக்கு வலுவான தண்டனைகள் வர வேண்டும் அரபு நாடுகளைப் போல் என்றும் தோன்றுகிறது. மிகவும் கொடூரமான நிகழ்வு.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. நீதிமன்றம் சரியாக செயல்பட்டாலே போதுமானது. அங்கேயும் பிரச்சனை தான்.

   Delete
 14. ஜோதிஜி சகோ அன்றே நான் பதிவு வாசித்துவிட்டேன். வருண் சொல்லியிருக்கும் கருத்தில் பெண்கள் எப்படி இரையாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற சில கருத்துகள், அவர்களே வலையில் சிக்கிக் கொள்கிறார்களே என்ற என் ஆதங்கம் ஒரு தாயாக சொல்ல நினைத்து சொன்னால் தவறாகுமோ என்று நினைத்துப் போய்விட்டேன்..இன்னும் நிறைய சொல்ல உண்டு ஒரு தாயாக...

  பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டமும் இன்னும் வலுப்பெற வேண்டும் தண்டனைகள் வலுவாக்கப்பட வேண்டும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் சட்டமும் காவல்துறையும் பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே. இதை வைத்து தான் நாம் நம் குழந்தைகளுக்குரிய பாதுகாப்பையும் அறிவுரையும் சொல்ல வேண்டும். புரியாமல் மோதும் போது பிரச்சனை தான்.

   Delete
 15. உங்கள் புரிதலுக்காக... அரபு நாடுகளில் இத்தகைய குற்றங்கள் உண்டு. அவைகள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும். ஆனால் அபூர்வம். (அரபிக்களில்).

  அங்கு வசிக்கும் பிலிப்பினோ, சில இந்தியர்கள் மற்ற 3ம் உலக நாடுகளில் இந்தமாதிரி (பாலியல்) குற்றங்கள் உண்டு. போலீஸை யாரும் பெரும்பாலும் நாடுவதில்லை.

  ஆனால் பிளாக்மெயில் வகையான குற்றங்களை நான் கேள்விப்பட்டதே இல்லை.

  பொது இடங்களில், அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு மிகுந்த மரியாதையைத்தான் பார்த்துள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. நான் அறிந்த வரையில் முன்பு அரபு நாடுகளில் உள்ளே ஒரு வாழ்க்கை வெளியே ஒரு வாழ்க்கை என்று இருந்தது. இப்போது பெரும்பாலும் பல நாடுகள் எல்லாவற்றையும் அனுமதித்துக் கொண்டு இருக்கின்றது. உதாரணம் துபாய்.

   Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.