Monday, January 26, 2015

பேசா பொருளை பேசு

தொழிற்சாலையின் குறிப்புகளில் ஜோதிஜி எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்விகளை பார்ப்போம்.  

1. பஞ்சே ஆதாரம் என்றால் பஞ்சு உற்பத்திக்கும் விவசாயத்திற்கும் அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை

2. திருப்பூருக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. உதவி செய்வதாக கூறி ஆட்டைய போட்டது தான் மிச்சம்

3.திருப்பூர் தொழிற்சாலைகள் ஒழுங்காக அமைப்புரீதியாக செயல்படுவதில்லை. சுரண்டல் ஏமாற்றல் அதிகம். 

4. இங்கே இயந்திரங்கள் பெரிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை, எல்லாமே இறக்குமதி தான்.  

இந்த நான்குமே அவரின் குறிப்புகளின் அடிநாதம். 

இவை ஏன் இருக்கின்றன என நண்பர் ஆராயவில்லை எனவே என்னுடைய கருத்துக்களை வைக்கலாம் என.  

இந்த நான்கிற்கும் அடிப்படையான காரணம் நம்மூரின் கம்யூனிச சோசிலிச சிந்தனை தான். அதுவும் ஒருவன் பணம் சம்பாதிக்கிறான் என்றாலே அவன் யாரையேனும் சுரண்டி ஏமாற்றியே சம்பாதிக்கிறான் எனும் கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கையே காரணம். அவை நம்மூரின் படித்தவர்கள், பல்கலைகழகங்கள், அரசியல்வாதிகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் போது அவர்கள் எப்படி ஒரு தொழில் முனைவோருக்கு உதவுவார்கள்?  

கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே இலக்கு, மக்களை முன்னேற்றுவதோ அல்லது நல்ல விஷயங்களை செய்வதோ அல்ல. அவர்களை பொறுத்தவரை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே எவ்வளவு சீக்கிரம் சண்டை வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. அப்படியிருக்க எப்படி தொழிலை முன்னேற்ற உதவ முடியும். 

மேலை நாடுகளில் கல்லூரிகள், பல்கலைகழங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உண்டு. தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில்நுட்பம், நிர்வாக வசதிகள் போன்றவற்றை கல்லூரிகள் ஆராய்ச்சி செய்து தருவதும் அதற்கு தொழிற்சாலைகளே பணம் கொடுத்து செய்ய சொல்வதும், பேராசிரியர்களை நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் வைத்திருப்பதும் சாதாரணமான விஷயம். 

அவர்கள் பகுதி நேரவேலையாக தொழிற்சாலைகளிலும் கல்லூரிகளிலும் வேலை செய்வார்கள். இப்படி இருப்பவர்களுக்கே மதிப்பு அதிகம் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். இப்போதைய ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்க பல்கலைகழத்தில் இருந்து விடுப்பில் தான் இங்கே பணிபுரிகிறார் என்பதை பாருங்கள்.  

விவசாயத்திற்கும் இதே போல் கண்டுபிடிப்புகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றில் புதுமையை புகுத்துதல் என்பவற்றை பேராசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களிடமே அரசுக்கு நெருக்கடிகளும் புதிய திட்டங்களும் போகும்.  

ஆனால் இங்கே அப்ப்டி ஏதும் உள்ளதா என்றால் கிடையாது. ஆர் ஏ மாஷால்கர் என்பவர் இந்திய விஞ்ஞான ஆராச்சி கழகத்தின் தலைவராக இருந்த பொழுது அவர் இப்படி கொண்டு வரமுயன்றதற்கே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

ஒரு மூத்த விஞ்ஞானி இதை விஞ்ஞானிகளை நடத்தை கெட்ட செயல்களை செய்ய சொல்வதற்கு சமானம் என்றார். 

அடுத்து பல்கலைகழங்களில் அறிவியல்துறைகள் அதிகாரம் ஏதுமில்லாத துறைகளாகவே இருக்கின்றன. இந்த கதை கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் போன்ற துறைகளே அதிகாரம் பெற்றவையாக இருக்கின்றன. அப்புறம் நடிகர்களும் புனவு எழுத்தாளர்களுமே அறிவாளிகளாய் கொண்டாடப்படும் நாட்டில் வேறு எப்படி இருக்கும்?  

இங்கே இயந்திரங்கள் கண்டுபிடிக்க ஆள்கள் இருக்கிறார்கள் ஆனால் அதை நிர்வாகம், அரசு கண்டுகொள்ளுமா என்பது தான் கேள்வி. இங்கே இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களை வடிவமைத்தவர்கள் யாரென தேடுங்கள் கண்டிப்பாக ஒரு இந்தியனாவது அல்லது தமிழனாவது இருப்பார்கள். 

இது அடிப்படை சிந்தனையிலேயே ஆகவேண்டிய மாற்றம்.. சும்மா  அரசை குறை சொல்வது அரசியல்வாதிகளை குறை சொல்வது என்பதெல்லாம் தீர்வை தராது.  

இதை நண்பர் ஜோதிஜி எழுதியிருப்பதே ஒரு முக்கியமான மைல்கல்லாக நாம் பார்க்கவேண்டி உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் இதுவே இப்படி பட்ட விஷயங்களில் முதலாவதாகவும் இருக்கக்கூடும்.  

பேசாப்பொருளை பேசிய நண்பருக்கு பாராட்டுகள். இதன் மூலமாகவேனும் தமிழ்நாட்டில் ஒருமாற்றம் வருமாயின் அதை ஆரம்பித்து வைத்த பெருமை ஜோதிஜியையே சாரும்.  

இதை இன்னும் விரிவாக எழுதினால் குருசரண் தாஸ் எழுதிய India Unbound எனும் புத்தகம் போல் வரும். நண்பர் செய்வாராயின் அதற்கு உதவவும் தயாராக இருக்கிறேன்.


(நண்பர் ராஜா சங்கர் எழுதியுள்ள இந்த விமர்சனத்திற்கு திருப்பூர் நண்பர் விஸ்வநாதன் எழுதிய விமர்சனத்திற்கு விமர்சனத்தை அவர் முகநூலில் நான் சற்று தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது. அடுத்த பதிவில் விஸ்வநாதன் அவர்களின் விமர்சனமும், விமர்சனத்திற்கு விமர்சனமும் வருகின்றது)

13 comments:

மகிழ்நிறை said...

எவ்வளவு ஆழமாக படித்திருக்கிறார் என்பதை விமர்சனம் காட்டுகிறது. எனக்கு இருக்கிற SPARROW brain னை வச்சுகிட்டு மத்த எல்லோரையும் கம்பேர் பண்ணக்கூடாது இல்லையா அண்ணா:) அருமை

iK Way said...

திரு ஜோதிஜி அவர்களுக்கு,

சார், இது விமர்சனம் மாதிரி இல்ல.
வாழப்பழத்துல ஊசி ஏத்துறதுபோல இருக்கு.
ஒடச்சு சொல்லனும்னா, நீங்க எழுதுனது உங்க அனுபவத்தோட ஒரு பக்கம்.
இது ஓரளவுக்கு அலுவலக அரசியல் என்கிற பெயரில் உலகம் முழுக்க இருக்குறதுதான்.

தொழில் அப்படிங்கறதே, இருக்குற ஒரு இடைவெளிய இட்டு நிரப்பும் ஒரு முயற்சிதானே.
அதுனால உங்களோட பழைய முதலாளிகளும் அன்னைக்கி இருந்த சூழல்ல ஒரு இடைவெளிய நிரப்புனாங்க.

அதேபோல, இன்னிக்கு இருக்குற அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் ராமாயண மகாபாரத காலத்துலயே இருந்ததுங்கற போல (புஷ்பக விமானம்!!!) இருக்கு எல்லா கண்டுபிடிப்புலயும் இந்தியர் தமிழர் பங்கு என்பது.

கான்பிடன்சுக்கும் கையாலாகாத்தனதுக்கும் இருக்குற சின்ன இடைவெளிதான் அது. (உதாரணம் : http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2014/05/blog-post.html ) !

நிறைய இறக்குமதி டீ-ஷர்ட் டோட உற்பத்தி எங்கனு பார்த்தா ஈரோடு, திருப்பூர் னு இருக்கும். அதே தரத்துல இங்க விநியோகம் செய்ய வேண்டாம்னு யார் தடுத்தாங்க?

பெருமையோட சேர்த்து பணிவும் வேணும்.
எல்லா ஐ ஐ டி லயும் ஆராய்ச்சி செல் மற்றும் சீட் ஃபண்டிங் ஆப்ஷன் எல்லாம் இருக்கு.

சரி, நீங்க சொல்ற இந்த கல்வி, தொழில், நிறுவன கூட்டு அப்படிங்கரதுக்கும், அப்பரன்டிஸ்ஷிப் மற்றும் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த (குல) கல்வி முறைக்கும் என்ன வேறுபாடு?

இவர் என்னவோ வெளிநாட்டுக்காரன் பண்றது எல்லாமே சிறந்ததுங்கராபோல சொல்லி இருக்கார். - அதை தாங்கள் ஒப்பபோகிறீர்களா என்பது எனது ஐயம். அவர்களைவிட பெரிய சுரண்டல்காரர்கள் யார்?

இந்தியா போன்ற மனிதவளம் அதிகமுள்ள, (தொழிலாளர்) தேவை மற்றும் இருப்புக்கான விகிதம் அதிகமுள்ள ஒரு நாட்டில் கொஞ்சமாவது கம்யூநிசம் பேசாம எப்படி?

தட்டைப்புரிதல்.

எம்.ஞானசேகரன் said...

இப்படி பலதரப்பட்ட விமர்சனப் பார்வைகள் இந்த தொடருக்கு மேலும் வலு சேர்க்கும். தொழிற்சாலை அனுபவங்கள் பலருக்கு இருந்தாலும் அதை எழுத்தில் கொண்டுவந்திருப்பது ஜோதிஜியின் சாதனையே.

ezhil said...

தொடர்ந்து வேலை மற்றும் இணையத் தகராறில் இன்னம் உங்களின் பதிவை புத்தகமாகப் படிக்கவில்லை... உண்மையில் இந்த இளைஞர் இங்கிருக்கும் தொழில் முனைவோரின் ஆதங்கத்தை அழகாய் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் எழுதுபவர்களுக்கு மட்டும் அங்கீகாரம் என்பதும் கூட ஒத்துக் கொள்ள முடியவில்லை....

yathavan64@gmail.com said...

வணக்கம்!

"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!

நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

UmayalGayathri said...

தொழிற்சாலையின் குறிப்புகள்..சிலவற்றை அவ்வப்போது படித்து இருக்கிறேன். வரிசையாக முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் படித்த வற்றில் தங்களின் எழுத்து தெளிவாக சீராக நடை போடுகிறது. நிதர்சனம் சுவாரஸ்யமாக போகிறது. வாழ்த்துக்கள் சகோ.தொழிற்சாலையின் மறைந்திருக்கும் பக்கங்கள் தங்கள் வாயிலாக அறிகிறோம்.

'பரிவை' சே.குமார் said...

ஆழ்ந்து படித்து எழுதிய அற்புதமான விமர்சனம் அண்ணா...
அவருக்கு வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

1) BT Cotton....? ஐயோ...!
2) ஆட்டைய போட்டால் தான் அரசு...
3) சுரண்டல்... சொல்பவர்களுக்கும் பங்கு...!
4) மதியை மதிக்காததால் இறக்குமதி...!

மாற்றம் வர வேண்டும்... வரும்...

Rajasankar said...

//அதேபோல, இன்னிக்கு இருக்குற அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் ராமாயண மகாபாரத காலத்துலயே இருந்ததுங்கற போல (புஷ்பக விமானம்!!!) இருக்கு எல்லா கண்டுபிடிப்புலயும் இந்தியர் தமிழர் பங்கு என்பது.
//

இந்தியர்களால் இங்கே பிழைக்கமுடியாது வெளிநாடு போனால் பிழைக்கலாம் என்பதை சொல்கிறேன்.

இங்கே திறமைக்கு மதிப்பு உண்டா என்பது தான் கேள்வி.

//எல்லா ஐ ஐ டி லயும் ஆராய்ச்சி செல் மற்றும் சீட் ஃபண்டிங் ஆப்ஷன் எல்லாம் இருக்கு.
//

இருக்கட்டுங்க. அதனாலே என்ன பயன் அப்படீன்னு தான் கேள்வி?

முடியும் அப்படீன்றதுக்கும் செஞ்சு காமிக்கறதுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கே.

//சரி, நீங்க சொல்ற இந்த கல்வி, தொழில், நிறுவன கூட்டு அப்படிங்கரதுக்கும், அப்பரன்டிஸ்ஷிப் மற்றும் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த (குல) கல்வி முறைக்கும் என்ன வேறுபாடு?
//

தொழிலை கற்றுக்கொள்ள உதவியாளராக சேருவது என்பது குலக்கல்வி முறையா?

மருத்துவப்படிப்பு முடிச்சு ஹவுஸ் சர்ஜனாக சேரும் மருத்துவர்கள், வழக்கறிஞர்களிடம் சேரும் உதவியாளர்கள் என ஆரம்பித்து பக்கத்து மெக்கானிக் ஷாப்பில் உதவியாளாராக சேரும் ஆள் வரை எல்லோரும் குலக்கல்வி தான் படிக்கிறார்களா?

நிஜமாகவே முடியலங்க. :-)

//இவர் என்னவோ வெளிநாட்டுக்காரன் பண்றது எல்லாமே சிறந்ததுங்கராபோல சொல்லி இருக்கார்.//

சரியா யார் பண்ணினாலும் ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

தங்க ஊசின்னு கண்ணை குத்திக்க முடியாது, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுன்னு நான் சொல்லல. சொன்னது அண்ணாத்துரை.

நீங்களும் நானும் பேசும் இணையம், அதற்கான தொழில்நுட்பம் எல்லாம் கண்டுபிடிச்சது வெளிநாட்டுக்காரன் தானே?

//இந்தியா போன்ற மனிதவளம் அதிகமுள்ள, (தொழிலாளர்) தேவை மற்றும் இருப்புக்கான விகிதம் அதிகமுள்ள ஒரு நாட்டில் கொஞ்சமாவது கம்யூநிசம் பேசாம எப்படி?
//

கம்யூனிசம் இதுவரை கொண்டு வந்தது அழிவை மட்டுமே. ஆக்கத்தை எங்கும் கொண்டு வரவில்லை எனும் போது அதை கேள்வி கேட்பது கடமையாகிறது.

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

ராஜா சங்கர் அவர்கள் எழுதியுள்ள விமர்சனம் மிகவும் சரியே. குறிப்பாக வெளிநாடுகளில், என் உறவினர்கள் பலரும் தொழில்நிறுவனங்கள், கல்லூரி, தொழிற்சாலை இப்படி பணியில் . அவர் சொல்லி இருப்பது போல் தொழிற்சாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுபவை. மாணவர்களும் ஹான்ஸ் ஆன் ப்ராக்டிஸ் தான். ப்ரொஃபசர்ஸ் அவர் சொல்லி இருப்பது போலத்தான். மட்டுமல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ப்ராஜக்ட்ஸ் குறித்து தீர்மானங்கள் எடுக்க ஒரு துறையின் தலைவருக்கே சுதந்திரம் உண்டு. அவர்கள் நிர்வாகத்திற்கு அனுப்பி அதற்கு காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூட அப்படித்தான். முடிவு துறைத் தலைவர் எடுப்பதுதான். இங்கு திறமைக்கு மதிப்பு இல்லை என்பது உண்மை. அவரது பதில்கள் சொல்லுவதும் அனைத்தும் 100% சரியே. தனிப்பட்ட அனுபவம்.

அவருடைய விமர்சனம் ஆழ்ந்த விமர்சனம். பாராட்டுக்கள் அவருக்கு!

-கீதா

Pandiaraj Jebarathinam said...

தொழிற்சாலையின் குறிப்புகளும், விமர்சனங்களும், கற்றுக்கொடுப்பவை ஏராளம்

Online Jobs for Tamil People said...

முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதியாக சம்பாரிக்க மூடியும்! மேலும் விவரங்களுக்கு - http://www.bestaffiliatejobs.blogspot.in/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html