Saturday, October 18, 2014

கொள்ளையடிப்பது தனிக்கலை

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. அதற்கு மனதை தயார் படுத்தியிருக்க வேண்டும். சவால்களோ? சங்கடங்களோ எதிர் கொள்ளத் தெரிய வேண்டும்? நாம் அவசரப்பட்டு விட்டோமோ? என்று அங்கலாய்ப்பட்டுக் கொள்ளாமல் புதிய சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். 

இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள். 

வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. நடுத்தரவர்க்கத்தின் மிகப் பெரிய பலவீனமே பற்றாக்குறை பட்ஜெட் தான். இதன் காரணமாகத்தான் இங்கே உரிமைக்கான எந்தப் பெரிய போராட்டமும் நிகழ்வதில்லை. நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள். ஒரு நாள் பொழுது என்பதைத் தங்கள் பொருளாதாரம் சார்ந்து சிந்திப்பதால் வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. 

இதையும் மீறி சிந்தனை ரீதியாக மாற்றம் பெற்றவர்களால் மட்டுமே தனது இலக்கை நோக்கி முன்னேற முடிகின்றது. சாதிக்க விரும்புவர்கள் சங்கடங்களைத் தாண்டித் தானே மேலேறி வர முடியும். அது பண ரீதியோ அல்லது பதவி ரீதியோ எதுவாக இருந்தாலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களில் வாழ்வில் எந்த மாறுதலும் நிகழ்ந்து விடுவதில்லை.
7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

////தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என இனம் பிரிக்கத் தெரியாமல், அனைத்தையும்இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டாடுகிறார்கள்////
எத்துனை எளிமையான வார்த்தைகள், ஆனால் எவ்வளவு பெரிய உண்மை
மிக்க நன்றி ஐயா

Thulasidharan V Thillaiakathu said...

நடுத்தரவர்கம் எதிலும் பட்டும் படாமலும் போவதற்கு காரணமே நீங்கள் சொல்லியிருக்கும் பணப் பற்றாக்குறைதான். பயமும் காரணம்! அதனால்தான் உரிமைகளைக் கூடப் பெறத் தயக்கம்.

இதையும் மீறி சிந்தனை ரீதியாக மாற்றம் பெற்றவர்களால் மட்டுமே தனது இலக்கை நோக்கி முன்னேற முடிகின்றது. சாதிக்க விரும்புவர்கள் சங்கடங்களைத் தாண்டித் தானே மேலேறி வர முடியும். அது பண ரீதியோ அல்லது பதவி ரீதியோ எதுவாக இருந்தாலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களில் வாழ்வில் எந்த மாறுதலும் நிகழ்ந்து விடுவதில்லை//

மிக மிகச் சரியே!
காலை நேரம் சீக்கிரம் அலுவலகம் வருவது ....உண்மை அந்த நாளிற்கான பல நல்ல முடிவுகளை எடுக்க அமைதியான தகுந்த நேரம்....அலுவலகம் மட்டுமல்ல வீடானாலும், பள்ளியானாலும் இது மிக அவசியம்......நல்ல கொள்கை...நண்பரே!

முதலாளியின் வீடு தாஜ்மஹாலைப் போல இழைத்திருப்பது....தொழிலில் பிரச்சினை என்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ....ம்ம்ம் பெரும்பன்மையான முதலாளிகளும் ஏன் இபோதைய அரசியல் தலைவர்களும் அப்படித்தானே இருக்கின்றார்கள்!!

தொடர்கின்றோம்!

மகிழ்நிறை said...

டைமிங்க இருக்கே தலைப்பு:)

மகிழ்நிறை said...

பதிவு படிப்பினையாக இருக்கு அண்ணா!
அதுவும் அதிகாலையில் எழுவதும், இயங்குவது இன்றைய சூழலில் அவசியம் பின்பற்றவேண்டிய ஒழுக்கம் இல்லையா? அருமையை விவரித்திருகிறீர்கள்.

Avargal Unmaigal said...


உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

zoom tami tv said...

very useful full information about Hormonal Imbalance i recommend to everyone read more http://caroeva.com/index.php/2020/03/14/benefits-of-pomegranate-juice/