Sunday, July 28, 2013

இதற்கு தானே ஆசைப்பட்டாய்?

இறுதியாக கேள்வி பதிலாக இந்த கல்வித்தொடர் பகுதியை முடிவுக்கு கொண்டு வருவோம். 

இந்த தொடரில் மாணிக்கம் கந்தசாமி மற்றும் நிரஞ்சன் போன்றவர்கள் சில கோரிக்கை வைத்துள்ளனர். வேறொரு சமயத்தில் அவற்றை என் பார்வையில் அனுபவ பகிர்வாக எழுதுகின்றேன்.

இந்த தொடர் நான் எழுத காரணமாக இருந்தவரும், இதைப் பற்றி அதிக அளவு என்னுடன் பல மணி நேரம் உரையாடி எனக்கு புரிதலை உருவாக்கியதோடு முக்கிய ஆவணங்களை அனுப்பிய பிகேஆர் என்கிற ராமச்சந்திரனுக்கு என் நன்றி.

மொழி என்றால் ?

ஒருவரின் அறிவு நிலைப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்துவதே மொழி தான். குழந்தை  பேசத் தொடங்கும் பொழுது  உறுப்புகள் வளர்வதைப் போல அதன் சிந்தனைகளும் வளர தேடலும் தொடங்கி விடுகின்றது. ஒன்றைத் தேடத் தொடங்கும் போது அறிவும் வளரத் தொடங்கி விடுகின்றது.

அறிவின் அடிப்படை தேடல். தேடலின் அடிப்படை சிந்தனை.  சிந்தனையின் அடிப்படை மொழி. 

மொழியின் முக்கியத்துவம்?

தனி மனிதனின் வளர்ச்சியை அவன் வாழும் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றது. ஒருவன் எந்த இடத்தில் வாழ்கின்றானோ அதற்கு தகுந்தாற் போல அவனது எண்ணம், நோக்கம், செயல்பாடுகள் என்று ஒவ்வொன்றும் படிப்படியாக மாறிவிடுகின்றது.

கடல்புறப் பகுதியில் மலைப்பிரதேசங்களில்,கிராமப்புறங்களில், சிறிய மற்றும் பெரிய நகர்புறங்களில்,வெளிநாடுகளில் உள்ள வாழ்க்கை வெவ்வேறாக இருப்பதால் மொழி தொடர்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது.   

ஒரு இடத்தில் பேசப்படும் மொழி வேறோரு அடுத்த இடத்தில் வேறொரு விதமாக உள்ளது. ஒரே மாநிலத்திற்குள் மாவட்டம் தோறும் வித்தியாசமான வட்டார வழக்கு மொழிகள் இதன் காரணமாகவே உருவாகின்றது.  குறிப்பிட்ட   பழக்கவழக்கங்கள், பண்பாட்டு கலாச்சார முறைகள் என அனைத்தும் புவியியல் அமைப்பின்படியே தோன்றிவிடுகின்றது.

மொழி என்பது வெறுமனே தொடர்பு சாதனம் மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக  ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் தடங்களை கடத்திச் செல்ல உதவுவதும் இந்த மொழியே.

தாய்மொழியின் சிறப்பு?

தாய்மொழியின் முக்கிய சிறப்பே குழந்தைகள் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுக் கொள்ள உதவுகின்றது.  படித்த கல்வியின் மூலம் பார்க்கும் காட்சிகளை ஒன்றாக சேர்த்து பார்க்க உதவுகின்றது.அதன் மூலம் தோன்றும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது அது அறிவை விசாலமாக்குகின்றது. இதனால் எல்லாவற்றையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகின்றது. தாய்மொழியில் கற்கும் போது குழந்தைகள் ஆசிரியர்களுடன் எளிதில் உரையாட முடிகின்றது.  உரையாடும் போது நம்பிக்கை உருவாகின்றது. பயம் நீங்க கல்வி என்பது ஆர்வத்துடன் செய்யப்படும் ஒரு இயல்பான கடமையாக மாறி விடுகின்றது.

தாய்மொழியின் முக்கியத்துவம்?

மொழியென்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது அறிவுக்குரியது என்ற எல்லையோடு மட்டும் நிற்பதல்ல.  தாய்மொழி என்பது நாம் வாழும் சூழ்நிலையில் உள்ள பழக்கவழக்கங்கள்,கலாச்சார நடைமுறைகள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க உதவுகின்றது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கலாச்சாரத்தை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  

அது அங்குள்ள சூழ்நிலையின் அடிப்படையைக் கொண்டே உருவாகின்றது. வாழும் சூழ்நிலை வேறு. கற்பிக்கும் சூழ்நிலை வேறு என்பதாக வளரும் மாணவனின் அறிவு குழப்பத்தில் தொடங்கி குழப்பத்தோடு வாழ வேண்டியதாக உள்ளது. 

மாற்று மொழி சொல்லும் கலாச்சாரத்தை படிக்கும் மாணவனின் பெற்றோர்களின் வாழ்க்கை ஒரு விதமாகவும் மாணவனின் சிந்தனைகள் வேறுவிதமாகவும் மாறத் தொடங்கி விடுகின்றது.

இந்தியாவில் கல்வி?

இங்கே கல்வி என்பதை குழப்பதோடு தான் பார்க்கப்பட்டு வருகின்றது. கற்றுக் கொள்வதற்கும் சிந்திப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பற்றி எவரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை.  அதை முறைப்படி புரியவைக்கவும் எவரும் விரும்பவும் இல்லை .  

கல்வியில் இரண்டு வகைகள் உள்ளது. 

ஒன்று தெரிந்து கொள்வதற்காக கல்வி.  மற்றொன்று சிந்திப்பதற்கான கல்வி.

ஒரு விசயத்தை  படித்து தெரிந்து கொண்டு அதை அப்படியே எழுதி விட்டால் ஆசிரியர் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கிடைத்து விடும். ஆனால் அந்த விசயத்திற்கு முன்னால் பின்னால் உள்ள எந்த புரிதலும் அந்த மாணவனுக்கு தேவையில்லை என்பதான கல்வி தான் இந்தியாவில் உள்ளது.

கல்வி கற்றும் சிந்திக்கத் தெரியாதவர்களை உருவாக்குவதில் தான் நாம் வெற்றியடைந்துள்ளோம்.

இந்தியாவில் ஆங்கில மொழிக்கல்வி வளர முக்கிய காரணமாக உள்ளதன் பட்டியல்.

1. இந்தியாவில் தொடக்கத்தில் இருந்த வறுமை பலரையும் கல்வி கற்க விடாமல் பெரும் தடையாக இருந்தது.

2. கல்வியென்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பது போன்ற காரணங்கள் இந்த தடைகளை மேலும் வளர்த்தது.

3ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நிர்வாக அமைப்பில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற காரணிகள் ஆங்கிலத்தை வளர்க்க முக்கிய காரணமாக இருந்தது.

4. ஆங்கிலத்தினால் வசதியான வாழ்க்கை பெற்றவர்கள் அதுவே சரியென்று சொல்ல ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் இங்கே கல்வி முறையில் எவரும் மாற்றம் கொண்டுவர விரும்பவில்லை.  மேலும் மக்களின் வாழ்க்கை முறை ஒரு விதமாகவும் அந்த மக்களை ஆள்கின்றவர்களின் அலுவல் மொழி வேறொன்றாகவும் இருக்க மக்களுக்கும் ஆட்சியாளர்களும் மிகப் பெரிய இடைவெளி இயல்பாகவே உருவாகத் தொடங்க அதுவே ஊழல் முதல் எதிர்த்து கேள்வி கேட்ட முடியாது என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது.  

காலம் முழுக்க எளியவர்களுக்குண்டான உரிமைகள் மறுக்கப்படுவதென்பது இயல்பானதாகவும் மாறிவிடுகின்றது.  மறுக்கப்பட்டவர்கள் இந்த மொழிப் பிரச்சனையின் காரணமாக மருகிக் கொண்டே வாழ வேண்டியதாகவும் உள்ளது.

5. நாகரிகம் என்ற பெயரில் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அதிகமாக அடையக்கூடிய வசதிகளுக்கு எது உடனடியாக பயன்படுகின்றதோ அதுவே மக்களும் தேவையென கருதத் தொடங்க கல்வி முதல் பழக்கவழக்கங்கள் என ஒவ்வொன்றும் மாறத் தொடங்கியது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றால் தான் வளமான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களின் மனதில் ஆழமாக பதியத் தொடங்கியது.

6. பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளை மக்கள் வாழத் தகுந்த இடம் என்ற நம்பிக்கை உருவாக அந்தந்த நாடுகளின் மொழிகளை தங்கள் குழந்தைகள் கற்றால் எளிதில் அங்கே வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது.

7.இன்று இந்தியாவில் ஒருவனது பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  மொழிக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம் மறைந்து விட்டது. முந்தியவர்களுக்கு முன்னுரிமை என்பது இயல்பானதாக மாறிவிட்டதால் அவரவர் தாய்மொழி எண்ணம் பின்னுக்குப் போய்விட  பிழைக்க ஒரு மொழி என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள்.

8. இன்று வரையிலும் மேலைநாடுகளில் அருகாமைப் பள்ளி என்பது ஒரு முக்கியமான நடைமுறைக் கொள்கையாகவே வைக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவர் வேறொரு இடத்தில் கொண்டு போய் தங்கள் குழந்தைகளை சேர்கக வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணங்கள் இல்லாவிடில் வாய்ப்பு மறுக்கப்படும்.

இதன் காரணமாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமையும், பள்ளியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.  இங்கே அந்த பழக்கம் இல்லை என்பதோடு அப்படியெல்லாம் உண்டா? என்கிற வினோத கேள்வி தான் நம்மை வந்து தாக்கும்?  இதே போல இங்கே உருவாகும் போது அரசாங்கம் கட்டாயம் குறிப்பிட்ட பகுதிகளில் தேவைப்படும் பள்ளிகளை திறந்தே ஆக வேண்டும். 

இங்கே சட்டம் என்பது பட்டம் போல பறந்து கொண்டிருப்பதால் வெறுமனே எழுதி ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். தவறில்லை.

தாய்மொழி வளர அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள்.

1. கிராமத்து பள்ளியில் படிப்பவர்களுக்கு உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் முன்னுரிமை.

இப்போதுள்ள இடஒதுக்கீடு போல ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட சதவிகிதம் இவர்களுக்கே என்கிற சட்ட தீர்மானம் கொண்டு வந்து விட்டாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும்.

2. அரசுப்பணி என்பது அரசுபள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே.

3 அரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வைக்காவிட்டால் அவர்கள் பதவியில் இருக்க முடியாது என்கிற நிலை.

4. ஒருவர் அரசு ஊழியராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் குறைந்தபட்சம் தொடக்க கல்வி வரைக்கும் படிக்க வைக்காவிட்டால் அவர்களின் வேலை பறிபோய்விடும்.

5.நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து புறநகர்களில், கிராமங்களில் அதிக அளவு உருவாக்குதல். நகர்புறங்களுக்கு குடும்பமே இடப்பெயர்வுக்கு இது முடிவு கட்டும். 

6.கல்வி அமைப்பு என்பதை தன்னாட்சி பெற்ற நிர்வாகமாக மாற்ற வேண்டும். இரண்டு வருடத்திற்கொரு முறை உலக மாறுதல்களுக்கேற்ப ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுதல். இந்தியா முழுமைக்கும் பொதுக்கல்வி திட்டம் ஒன்றை உருவாக்குதல். அந்தந்த மாநில கல்விக்குழுக்கள் மூலம் ஒப்பு நோக்குதல். தொடக்க கல்வி என்பது அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம். 

7.பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ள தற்போதையை சூழ்நிலையை முற்றிலும் மாற்றி விட்டு மூன்று வகுப்புகளையும் கல்லூரி போல மூன்றாண்டு கல்வித்திட்டமாக மாற்றுதல். ஒன்பதாம் வகுப்போடு மொத்த பாடங்களையும் கற்பிப்பதை நிறுத்தி விட்டு பத்து முதல்  அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு மாணவன் எந்த துறையில் தனது மேற்கல்வியை படிக்க விரும்புகின்றானோ அந்த துறை சார்ந்ததை மட்டும் கற்பித்தல்.  இந்த மூன்றாண்டு பாடத்திட்டத்தில ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் கற்க வாய்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.

வக்கீல் படிக்க விரும்புவனுக்கு கணக்கு தேவையிருக்காது.  மென்பொருள் துறையில் சேர விரும்புவனுக்கு வரலாறு தேவையிருக்காது. கல்லூரியில் நுழையும் பொழுதே அவனது துறை சார்ந்த கல்வி எளிதாக மாறி விடும். அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவஸ்யமான துறைகளை ஒரு பாடமாக வைக்கப்படும் போது எளிய குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு இந்த துறை வரப்பிரசாதமாக இருக்கும். கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் என்பது நிஜமாகவே சாத்தியமாகும்.

8 ஒவ்வொரு வருடமும் தனியார் அரசாங்க பள்ளிகள் என்று பாரபட்சமில்லாது ஆசிரியர்களின்  தகுதியை தேர்வு வைத்து சோதித்தல். தகுயில்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்து அதிலும் தேர்ச்சியடையவில்லை என்கிற பட்சத்தில் எங்கும் கல்விப்பணி ஆற்ற தடைவிதித்தல். 

தற்போது தமிழ்நாடு அரசாங்கம் அரசுபள்ளியில் கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வி?

உறுதியாக விரைவாக தோற்றுவிடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகமுள்ளது. நமது மக்கள் இலவச மனப்பான்மையை விரும்பும் காரணத்தால் இன்னும் சில ஆண்டுகள் அதனை விரும்புவார்கள்.இதற்கு மேலாக தகுதியற்ற ஆசிரியர்களால் தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியடையாத திறமைகளைக் கண்டு மீண்டும் தனியார் பள்ளி பக்கமே ஒவ்வொரு பெற்றோர்களும் வரத் தொடங்குவர்.

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேவையான மொழிகள்.

இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம்  தமிழோடு ஹிந்தி ஆங்கிலம் அவசியம் தேவை. தமிழ்நாட்டிற்குள் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு தாய்மொழியோடு ஆங்கிலமும் அவசியம் தேவை.

மொழியறிவை வளர்க்கும் காரணிகள்.

சூழ்நிலை தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசு பள்ளியில் படித்தவர்கள் அமெரிக்காவிற்கு தங்கள் கல்வித்தகுதி அடிப்படையில் சென்ற போதிலும் அங்கு சென்றதும் இயல்பான் அமெரிக்க ஆங்கிலமென்பது அவர்களிடம் வந்து விடுவதில்லை. அங்குள்ள சூழ்நிலை நெருக்கிக் தள்ள இதுவொரு இயல்பான பழக்கமாக மாறிவிடுகின்றது.  

ஐந்து பரிச்சை எழுதி ஹிந்தியில் தேர்ச்சியடைந்தவர்கள் எவரும் நல்ல விதமாக ஹிந்தி பேச முடிவதில்லை. அதுவே மும்பையில் ஆறு மாதங்கள் கூலித் தொழிலில் சேர்ந்து ஹிந்தியை வெளுத்து வாங்கியவர்கள் அதிகம். என் பிள்ளை ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது வீட்டுக்குள் குழந்தைகளிடம் எளிய ஆங்கிலத்தில் பேசி பயிற்சியை தொடங் வேண்டும். படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் அதற்கான சூழ்நிலையை தங்கள் குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் உருவாக்க வேண்டும்.

இது செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்றால் மாணவன் கடைசியில் செல்லாக்காசாகி விடுவதை தவிர்க்க முடியாது. இன்று கல்லூரி வரைக்கும் ஆங்கில வழிக்கல்வியில் படித்த போதிலும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் மாணவர்கள் போலத்தான் ஆங்கிலம் என்பது பின்னங்கால் பிடறி தெறிக்க ஓட வைக்கும் பூச்சாண்டியாக இருக்கும். ஆங்கிலக் கல்விக் கூடத்தில் தங்கள் குழந்தைகள் படித்தால் ஆங்கிலத்தை நன்றாக பேச முடியும் என்பது விழலுக்கு இறைத்த நீரே.

என் குழந்தை அலுவலக வேலையில் மட்டுமே அமர வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆங்கில மொழி அவசியம் தேவை. ஆனால் இங்கே பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. பொருளீட்ட பல தொழில்கள் உண்டு என்பதையும் ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்திருக்க வேண்டும்.

தாய்மொழியறிவு?

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மிகப்பழமையான தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக பேச்சு எழுத்து மொழியில் மாறி வந்து கொண்டிருந்த போதிலும் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்திலும் இது அழிந்து போய்விடவில்லை.

ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் அழிந்து போய்விடப் போகின்றது என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்களும்,இன்றுவரையிலும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் இருந்த போதிலும் தமிழ்மொழியின் வளர்ச்சி நின்று போய் உள்ளதே தவிர ஆனால் அது அழிந்தே போய்விடும் என்ற எண்ணத் தேவையில்லை. 

500 வருடங்களில் உருவான ஆங்கில மொழியில் கூட ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமென்பது இன்று இல்லை.ஆனால் மாறுதல்களை கவனமாக ஆவணப்படுத்தி முறைப்படியான மாறுதல்களை ஏற்றுக் கொண்டே தான் ஆங்கிலம் இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.  ஆனால் இங்கே தமிழ் மொழி வளர வேண்டும் என்பவர்கள் தான் தமிழுக்கு எதிரியாகவும் இருப்பதால் அதன் விசால வீச்சு இன்று குறுகிய சந்துக்குள் நிற்கும் அளவிற்கு மாறியுள்ளது.

தாய் மொழியை ஆதரிப்போம் சொல்கின்ற அத்தனை பேர்களும் வசதியான வளமான வாழ்க்கை கொண்டிருப்பவர்கள். கவனமாக இரட்டை முகமூடி அணிந்தவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கை மேலைநாட்டு கலாச்சாரத்திலும் பேசும் வார்த்தைகள் மட்டும் இந்திய கலாச்சாரத்திலும் இருப்பதால் மக்களின் நம்பகத்தன்மை அடியோடு மாறி நாமும் பிழைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் பிழைப்புவாதிகளாக மாறிக் கொண்டேயிருக்கின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் பேசும் மொழியை வைத்தே ஒருவனின் தகுதியை எடை போடும் சூழ்நிலையில் காலச் சக்கரம் நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. பெரும்பான்மையான முட்டாள்களின் மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலையில் அந்த முட்டாள்தனத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் இந்த காலச்சக்கரம் உருவாக்கியிருப்பது வினோத முரண்.

ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மையினர் வறுமையைப் பற்றி அறியாத  தங்கஸ்பூன் கோமகன்களாக இருப்பதால் எளியவர்களின் வாழ்க்கை குறித்தோ, அவர்களின் அடிப்படை வசதிகள் குறித்தோ யோசிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்வதால் எளியவர்களுக்ககான கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது.  அப்படியே உரிமை உருவானாலும் அதை அவர்கள் அடைய முடியாத உயர்த்தில் வைத்து தான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

அடைய முடியாத லட்சியத்திற்கு இடையூறாக இருப்பது இந்த தாய்மொழியே என்று ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் முதலில் பலிகொடுப்பது தமிழ்மொழியே.

நம்மால் செய்யக்கூடியவை?

குழந்தைகள் ஆசிரியரோடு இருக்கும் நேரமென்பது ஏறக்குறைய எழு மணிநேரம் மட்டுமே.

ஒரு நாளின் மற்ற பொழுதுகள் அனைத்தும் பெற்றோர்களுடன் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.  முதல் ஆசிரியரே பெற்றோரே. மொழியறிவு, தாய்மொழியறிவு, பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்துக்கும் காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்களே.  ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நகர்புற கணவன் மனைவியும் இருவரும் பொருள் ஈட்டச் செல்ல மாணவர்கள் கண்டதையும் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். 

இதற்கு மேலாக வாசிப்பு என்பது அது பள்ளிக்கூட பாடங்கள் மட்டுமே என்கிற பெற்றோர்கள் இன்று வரையிலும் அதிகமாக இருப்பதால் குறுகிய புத்தியுள்ள சமூகம் விரைவாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தங்கள் குழந்தைகள் வெளியே வந்தால் பல நாட்டு குழந்தைகளுடன் பழக வேண்டிய சூழ்நிலையில் பத்து சதவிகிதம் கூட தாய்மொழியின் அவசியம் தேவைப்படாது.  தங்கள் மாநிலங்களை விட்டு மற்ற மாநிலங்களிலும் வாழ்பவர்களுக்கு அங்கே உள்ள மாநில மொழி தான் அவசியம் தேவையாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு என்ன குறைச்சல்?

அவரவர் வாழ முடியாத தன்மையை, அடைய முடியாத லட்சியத்தை, அனுபவிக்க முடியாத சந்தோஷத்தை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் அழுத்தங்களை குழந்தைகளின் மேல் காட்டும் போதும் அவர்கள் படித்த மேலைநாட்டு கலாச்சாரக்கல்வியின்படி உங்களை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவது தான் கடைசியாக நடக்கும்.......

தவறு அவர்கள் மேல் இல்லை.  நீங்கள் தொடங்கி வைத்தீர்கள். அவர்கள் முடித்து வைக்கின்றார்கள்.

இது முடிவே இல்லாத சுழற்சி.

-)(-

"நாம் ஆளுகின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட ஒரு வகுப்பினரை நாம் உருவாக்கிட வேண்டும். இந்த வர்க்கத்தினர் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், ரசனையில், கருத்துக்களில், நெறிமுறைகளில், அறிவில் ஆங்கிலேயர்களாகவும் விளங்கவேண்டும்."     

 - 1835 ல் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்கியபோது மெக்காலே எழுதியதில் இருந்து....

இந்த தொடரின் மொத்த பதிவுகள்








45 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆதரவற்றோர் இல்லங்கள் பெருகுவதே ஒரு சாட்சி... முடிவே இல்லாத சுழற்சியும் ஒரு நாள் மாறும்... முடிவுக்கு வரும்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளாக நீங்கள் குறிப்பிட்டவை வரவேற்கத் தக்கவை.
//ஒன்று தெரிந்து கொள்வதற்காக கல்வி. மற்றொன்று சிந்திப்பதற்கான கல்வ//
இவ்விரண்டயும் ஒன்றாகவும் பிழைப்பிற்கான கல்வியை மற்றோன்றாகவும் கொள்ளலாம். பிழைப்பிற்கான கல்வி ஆங்கிலம் இன்றி அமையாது என்று மக்கள் கருதுவதே ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இழுத்து செல்ல காரணமாகிறது.ஏற்கனவே நல்ல முறையில் தொழில் நடத்துபாவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை பொறியாளராகவோ டாக்டராகவோ ஆக்கும் முயற்சி நிறைவேறாத நிலையில் தான் தங்கள் தொழிலைத் தொடர அனுமதிக்கின்றனர் என்றே கருதுகிறேன். ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் தகுதித் தேர்வு வைத்து தகுதியை சோதிப்பது சரியான அணுகுமுறை இல்லை என்றே கருதுகிறேன். அதைவிட ஆசிரியர் பயிற்சிக்கு தகுதியானவர்களை சேர்க்கவேண்டும். ஆசிரியர் பணிக்கு தகுந்த ஆட்கள் கிடைக்க வேண்டுமெனில் அந்தப் பணிக்குரிய அங்கீகாரம் மட்டுமல்லாது ஊதியமும் அதிகமாக இருக்கவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகம் என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர்.ஊதியம் தகுதியானவர்களை கவர்ந்திழுக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.ஒரு காலத்தில் கடும்போட்டி நிலவி வந்த இடைநிலை ஆசிரியர் பயிற்சிஇல இன்று சேர்வோர் இல்லை.இன்றைய தேதிப்படி ஒரு இடைநிலை ஆசிரியரின் ஊதியம் ஏறக்குறைய மொத்த ஊதியம் மாதம் 16000 மட்டுமே அதுவும் சென்னை நகரை சுற்றயுள்ள பகுதிகளில் மட்டுமே. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவே . கல்வி உரிமை சட்டப்படி ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாகப் பெறுவோர் நலிவடைந்த பிரிவினரின் கீழ் வருவார்கள்.
ஒரு காலத்தில் +2 வில் 1100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட ஆசிரியர் பணியை விருபினர் .கடந்த சில ஆண்டுகளாக +2 வில் தட்டுத் தடுமாறி தேர்ச்சி பெற்றவர்கள் கூட ஆசிரியர் பயிற்சியில்சேர்ந்துள்ளனர். ஒருவேளை இவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால் கூட இவர்களால் ஒரு நல்ல ஆசிரியராக தன்னை மாற்றிக் கொள்வது மிகக் கடினமானது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை இன்னும்பல உள்ளன.

viyasan said...

அருமையான கட்டுரை. பொதுவாக தமிழ், ஆங்கில வழிக்கல்வி சம்பந்தமான பல விடயங்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் வெளிநாட்டில் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு பத்து சத வீதம் கூட தாய்மொழியின் தேவை அவசியமில்லையானாலும் கூட அவர்கள் தான் கட்டாயமாக தமிழை கற்க வேண்டியவர்கள். தமிழை இழப்பதால் தமது அடையாளத்தையே இழந்து, கலப்பினமாக மாறக் கூடிய ஆபத்தை புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்க்கால சந்ததியினர் சந்திப்பர் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே காணப்படுகின்றன. அதனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழை எழுதப், பேசக் கற்காது விட்டால் அமெரிக்காவின் கறுப்பர்கள், கரிபியன் தீவுகளின் இந்திய வம்சாவளியினர் போன்ற மொழி அடையாளமிழந்த நிலையை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் அடைவர்.

'பரிவை' சே.குமார் said...

அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாக நீங்க சொல்லியிருப்பது நன்று அண்ணா.... செய்வார்களா?

///கிராமத்து பள்ளியில் படிப்பவர்களுக்கு உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் முன்னுரிமை.///

கண்டிப்பாக நடக்காது அண்ணே...

நல்லதொரு பகிர்வு... அரசாங்க... குறிப்பாக கல்வி அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு,

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

வணக்கம் ஜி....

//.. தாய்மொழி வளர அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள்...//

மொழி என்பது தொடர்ப்புக்கு பயன்படுவது. பயன்பாடு இல்லாத மொழி அழியவே செய்யும். இது தவிர்க்க இயலாத விதி.

தமிழ், தழிழ்ன்னு கூவிகினு இருந்தா பயன்படாது ஜி... யுனிக் கோடு நல்ல படி,
அடுத்த தலைமுறை தமிழை விரும்பி படிக்கவேண்டுமானால் தமிழில் நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் விஷயங்கள் இருக்கவேண்டும்,

அப்படி இருக்கவேண்டும் என்றால் இப்போது இருக்கும் ஆய்வுகள் தமிழில் செய்யபட வேண்டும், ஆய்வுகூடங்களின் மொழியாக தமிழ் மாற வேண்டும்,

இப்போது இருக்கும் அனைத்து ஆய்வுகளையும் தானாக, சரியாக மொழிபெயர்க்கும் மென்பொருள் தமிழுக்கு வேண்டும்.

அப்போது தான் கட்டிங் எட்ஜ் டெக்னாலஜியை தமிழ் அடையமுடியும்.
அப்போது தான் தமிழ் மட்டும் படித்தால் , திறமை இருந்தால் உலகின் எந்த துறையிலும் உச்சபடச உயர்வை அடைய முடியும் என்ற நிலை வரும்.

அப்போது அனைவரும் தானாக தமிழ் படிப்பர். இப்போது ஆங்கில பள்ளியில் சேர்க்க கொட்டும் பனியில் விடியவிடிய காத்திருப்பது போல் தமிழ் படிக்க நினைப்பர்.

இது நடைபெறாமல் இருக்கும் கட்டுரைகளை தமிழ் மொழி பெயர்த்தல், அரசு ஊழியர் தமிழில் கையொப்பம் இடுதல் என்று தமிழ் வளர்ச்சி துறை வைத்து கூத்தடிதார்களே..

அப்படி செய்தால் என்ன ஆகும் ??

.....

==============================================================

//..இடஒதுக்கீடு போல ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட சதவிகிதம் இவர்களுக்கே என்கிற சட்ட தீர்மானம்....//

இட ஒதுக்கீடு என்பது முதலில் தவறான கொள்கை ஜி...
சமத்துவம் என்பதற்கு எதிரானது தானே,

நீங்களும் நானும் ஒரே தகுதியில் ஒரே இடத்துக்கு போட்டியிட்டால் இருப்பதில் மிக திறமையானவர் யார் என கண்டறிந்துதானே வாய்ப்பு கொடுக்கபட வேண்டும்? அதை விடுத்து நான் பிற்படுத்தபட்ட சாதியில் பிறந்ததா, தமிழ் படித்ததால், என்று சாதி மொழி, அடிப்படையில் முன்னுரிமை கொடுத்தல், அப்புரம் சமத்துவம் என்பது காமேடி தானே...


ஆனால் சமூகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைபடுத்தப்பட்டவர்களூக்கு முன்னேற வாய்ப்பு வேண்டும் என்றால்... அது பொருளாதார அடிப்படையில் தான் இருக்கவேண்டும்,

அனைத்து சாதியிலும், சோத்துக்கு வக்கிலாதவர்களும் உண்டு, கோடிஸ்வரகளும் உண்டு,
பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்றால் தான் அடுத்த 3 அல்லது 4 தலைமுறைக்கு பின் இட ஒதுக்கீடு தேவையற்றதாகும். இல்லையெனில், இப்போது அரசுவேலையில் நல்ல வசதியில் உள்ள பிற்படுத்தப்ட்டவரின் வாரிசுள் மேலும் வாய்ப்புகள் பெற்று,

ஐஏஸ் பிற்படுத்தபட்டவர், ஐபிஸ் பிற்படுத்தபட்டவர், டாக்டர் பிற்படுதப்படவர், எஞ்சினியர் பிற்படுத்தபட்டவர் என்று வளர மட்டும் வழி கொடுக்கும்.

இன்னொறு முக்கியமான விஷயம்.. இது கொஞ்சம் விரிவாக எழுத வேண்டியது..

ஒரே கல்விமுறை, இந்தியா முழுவதும் வேண்டும், ஒரே பள்ளி இறுதி தேர்வு மட்டும், ஆனால் அதுவே இறுதியான முடிவல்ல..

மாணவரின் 1ம் வகுப்பு முதல் பள்ளி இறுதிவரையிலான அனைத்து தேர்வு, புராஜெட், மற்றும் தகவல்களை, மையப்படுத்தபட்ட கணினியில் சேமித்து.. 12 வருட படிப்பையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மட்டுமெ மேற்படிப்பு வேலை வாய்ப்பு அனைத்தையும் முடிவ்ய் செய்ய வேண்டும்,

ஒரு தேர்வு ஏதாவது காரணத்தால் எழுத முடியவில்லை என்றால் மொத்த 12 வருட உழைப்பும் பாழ் என்ற முட்டாள் தனமான வழிக்கு இது தான் முடிவு. உண்மையான திறமைசாலிகளை கண்டைய இது சுலபமான வழி.

ஒரே தேர்வு, அதன் அடிப்படிடையிலும் 12 வருட படிப்பின் அடிப்படையில்லும் யார் யார் எந்த எந்த இடத்துக்கு வேலைக்கு பொருந்துவர் என்று கண்டுபிடிப்பது மிக சுலபம்.

அதேபோல் வேலைக்கு ஆள் எடுப்பதற்கும் ஒரே ஒரு தனி நிறுவனம் மட்டும் இயங்கினால் போதும். அரசின் அனைத்து வேலைகட்கும் இது பொறுந்தினால், பல திறமைசாலிகளூக்கு தகுதியான வாய்ப்பு கிடைக்கு.

Unknown said...


அரசின் பல பணியிடங்கள் பற்றிய அறிவு மானவர்க்கும் ஆசிரியக்கும் சுத்தமாக இல்லை.உதாரணமாக இன்சூரன்ஸ் ஆட்சுவேரியன்ஸ். இவர்களுக்கு அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங், மற்றும் கணித ஆறிவுதான் தேவை +2 படிக்புக்கு பின் 3 / ஆண்டு படிப்பு

http://www.actuariesindia.org/index.aspx

சம்பளம் இந்தியாவில் Rs 304,420 - Rs 3,582,711
http://www.payscale.com/research/IN/Job=Actuary/Salary

உலக அளவில் மாதம் 1.5 கோடி சம்பளம் தரும் வாய்ப்பு இது..
http://www.dwsimpson.com/salary.html
http://www.ezrapenland.com/salary/
http://www.payscale.com/research/IN/Job=Actuary/Salary

இப்படி ஒன்று இருப்பதே பலரும் அறியாதது. இதற்கு தேவையான , அல்லது இதை விட அதிக தகுதி படைத்தபலர் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கையில். போன தலைமுறை ஆட்சுவேரியன்களின் வாரிசுகள், இதை பற்றிய தகவல் நன்கு தெரியும் என்பதால் சுலபமாக கைப்பற்றுகின்றனர்.

இப்படி பல வேலைக்கு தகுதியான ஆள் கிடைக்காமலும், தகுதியான ஆட்களுக்கு வேலைகிடைக்காமலும் இருப்பதற்கு, மையப்படுத்தபட்ட கல்வி முறை ஒற்றை சரள வேலை வாய்ப்பு என்பதே தீர்வு.

=========================================================================

//..1. கிராமத்து பள்ளியில் படிப்பவர்களுக்கு உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் முன்னுரிமை..//

அரசு துறைகளையே ஊருக்கொன்றாக வைத்து விடலாம், உதாரணமாக உள்துறை அமைச்சகம் சென்னைனா..

போக்கு வரத்து முழுவது திருச்சி,
கல்வி துறை கோவை,
சுகாதாரம் தஞ்சைன்னு.

இப்படி பிரிச்சுட்டா அனைத்து அமைச்சகமும் சென்னையில் வைத்து மக்கள் தொகை போக்கு வரத்து நெருக்கடி என்று இருப்பதை சமாளித்து விடலாம்.

தகவல் தொடர்பு இன்றைக்கு ஒரு பிரச்சனையே இல்லைதானே ?


மேலும் துறை செயலரில் இருந்து, அனைத்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் அந்ததந்த ஊரில் தான் குடியிருக்க வேண்டும், அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்கவேண்டும்னு அறிவிச்சுட்டா, அரசு பள்ளி தரம் தானான மேலே வரும் ஏன்னா அரசு ஊழியர்களின் நேரடி கண்காணீப்பில் தானே செயல் படும் ?

அனைத்து ஊரிலும் அரசு அமைச்சகம் இருந்தால், கிட்டதட்ட அனைத்து அரசு பள்ளிகளும் அரசு ஊழியர் குழந்தைகளூம் படிக்கும்போது, தானக அனைத்தும் சரியாகும்.

=================================================================================

இன்னொரு விஷயம் , ஆரம்ப பள்ளியில் இருந்து சட்டம் , உணவியல் , மருத்துவம்,கட்டாயப்பாடமக்கபட வேண்டும்,

நமது வாழ்வில் ஏங்கும் நீக்கமற நிறைதுள்ள சட்டம் பற்றி பிறப்பில் இந்து இறப்பு வரை தெரியாமலே வாழ்ந்து முடிப்பது பரிதாபகரமானது.

சட்டம் தெரிந்தால், மக்கள் கோர்டுகளையும் போலிஸ் நிலையங்களையும் இன்னம் தெளிவாக எதிர்கொள்ள முடியும்.

தன் சம்பந்தப்ட்ட வழக்குக்கு எந்த செக்சன் என்பதே தெரியாமல், சரியான் செக்சன் தான என்றும் தெரியாமல் லட்சகணக்கில் செலவிடுவதும், குறையும்.

நீதி மன்றத்தில் வழக்குகள் தேங்கும் நிலையும் மறையும். உடனுக்குடன் நீதி கிடைக்கும்போது, குற்றங்களும் குறையும்.

ஒரு சிறப்பான குடிமக்களாக உருவாக முடியும்.

இன்னம் நிறைய எழுதவேண்டி யுள்ளது ஜி. நேரமின்மை காரணமாக பின்பு எழுதுகிறேன்.

Unknown said...

1. //ஆங்கில மொழி வளரக் காரணம்//
அவைகளல்ல என்பது என் கருத்து. நம் மக்களின் அடிமைத்தனம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற மனபான்மை. அறியாமை. பலவீனமான மன நிலை. மேற் கூறிய காரணங்களைப் போல ஆயிரம் காரணங்கள் மற்ற மொழிகளுக்கும் உள்ளது. ஆனால் தன் மொழியைப் புறக்கணித்து மற்ற மொழிக்கு யாரும் தாவவில்லை.

2. //அரசாங்கம் செய்ய வேண்டியது//
என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவை யாவும் சட்டம் குறித்து தாங்கள் கூறியது போல எழுதுவதற்கு சிறப்பாக இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்பது தான் சிக்கலே. அரசு என்று எதைக் குறிப்பிடலாம்? மக்களுக்காக இயங்கும் அமைப்பையா? அல்லது அரசியல் கட்சியிடம் கொடுக்கப்படும் அதிகாரத்தையா? மக்களுக்காக இயங்கும் அமைப்பிடம் நிதி மற்றும் இதர ஆதாரங்கள் இல்லை/பற்றாக்குறை. அரசியல் கட்சியிடம் கொடுக்கப்படும் அதிகாரம் என்பது .... அரசியல்வாதிகளைப் பற்றி கூறவா வேண்டும்?

3. // தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேவையான மொழிகள்.// கடுமையான கண்டத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மாணவர்களுக்குத் தேவை கல்வி கல்வியோடு எதற்காக மொழியை தொடர்புபடுத்துகிறீர்கள் என்று புரியவில்லை. மொழி மாற்றம் என்று ஒன்று உள்ளதை வசதியாக மறந்து விடுகிறீர்களே. நன்கு கற்றுத் தேர்ந்த மாணவன் எந்த மொழியையும் எளிதில் கற்றுக் கொள்வான். மாணவப் பருவத்தில் "கற்றலே" முதன்மையானது. ஆனால் "சுற்றலை" முதன்மைப் படுத்தி தவறான கருத்தைத் தெரிவிப்பதாகவே பார்க்கிறேன்.

4. //தமிழ்மொழியின் வளர்ச்சி நின்று போய் உள்ளதே தவிர ஆனால் அது அழிந்தே போய்விடும் என்ற எண்ணத் தேவையில்லை. //
ஒருவர் நூறுவயது வரை வாழ்ந்துவிட்டர் அவர் நூறு வருடங்களில் ஒரு முறைகூட இறந்தது கிடையாது எனவே அவர் இறக்கவே மாட்டார் என்பதாக உள்ளது தங்களின் கூற்று. அழிக்க முதலில வளர்ச்சியை தடுக்க வேண்டும் வளராவிட்டால் அது தானாக அழிந்து விடும். இதுதானே இயல்பு பிறகு எப்படி அழியாது என்று உறுது கூறுகின்றீர்கள்?

5. //தாய் மொழியை ஆதரிப்போம் சொல்கின்ற அத்தனை பேர்களும் வசதியான வளமான வாழ்க்கை கொண்டிருப்பவர்கள். கவனமாக இரட்டை முகமூடி அணிந்தவர்கள் // இவர்களுக்கான நம்முடைய குறிக்கோளை திசை திருப்பலாமா? இவர்களைப் புறந்தள்ள வேண்டாமா?

6. மெக்காலே கடிதம் குறித்து கிட்டத்தட்ட அனைவரும் பேசிவிட்டார்கள் அவர்களின் சதியை உடைக்க எந்த அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முயற்சிகளுக்கு எந்த அளவிற்கு ஆதரவுக் கரம் நீட்டப்பட்டுள்ளது என்பதே இந்தச் சிக்கலின் ஆரம்பப்புள்ளி

எனது கடந்த இரு கட்டுரைகளில் http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post.html
என்ற கட்டுரையைப் பாராட்டி தொடர்பு கொண்டு பேசிய நண்பர்கள் இரண்டாம் கட்டுரை http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post_20.html குறித்து எதுவும் கூறவில்லை. 1. தன்னுடை நிலைப்பாட்டை தெரிவிக்கும் "சாதாரண துணிச்சல் கூட இல்லாத" இந்த சமூகத்தில் எப்படி தன்மீதான ஆதிக்கத்தை வெல்ல முடியும்? 2. தன்னுடை கருத்திற்கு மாற்றுக் கருத்து உள்ளது அதை நாம் பரிசீலிக்க வேண்டும் அல்லது மாற்றுக் கருத்தையோ / கண்டனத்தையோ தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை அரசியல் அறிவோ துணிவோ இல்லையே. இவ்வாறான "கருத்துச் சூறாவளி" சூழல் மூலமே ஒன்றிணனைந்து செயல்பட முடியும். அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படாமையே மாற்று மொழியின் ஆதிக்கத்திக்கு தானாக அடிமைப்பட்டுவிட்டது. தும்பை விட்டு வாலையாவது பிடிக்கவேண்டும். ஆனால் தான் பிடித்த முயலுக்கு முன்னூறு கால் என்ற நிலையில் அல்லவா உள்ளனர்.

இரண்டாம் கட்டுரையில் எனது பணியில் தமிழை நடைமுறைப்படுத்தியுள்ளதை குறிப்பிட்டிருந்தேன். அதை என் அளவில் மட்டுமல்லாமல் பரவலாக்க வேண்டியுள்ளது. அப்படி பரவலாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் சிந்தனை அறிக்கை கட்டுரைகள் மட்டும் என்ன செய்துவிடும் என்பது என் வினா? அது மட்டுமல்ல தனிமனித சிந்தனைகள் வெறும் உணர்ச்சிகரமான கதையின்ப் படிப்பது போல படித்து ரசிக்கும் அளவில் மட்டுமே உள்ளது.

இறுதியாக எனது ஆதங்கம் யாதெனில், நம் மொழி வளர்ச்சி குறித்து சிந்திப்பவர்கள் ஒன்றிணைந்து சிந்தித்து விவாதித்து பிறகு வலுவான கட்டுரைகளை ஊடங்களில் வெளிவர செய்ய வேண்டும். இது சிந்தனையாளர்களுக்கு.

தொழிலதிபர்களுக்கு (தமிழார்வமுள்ள) தன்னுடைய தொழிலில் நம் மொழியை நடைமுறையில் கொண்டுவரச் செய்ய வேண்டிய செயல்பாடுகளில் இறங்க வேண்டியுள்ளது. இதனால் தொழில் பாதிக்கும் என்ற அச்சமிருப்பின் மொழியின் மீதான ஆர்வத்தினை விட்டுவிடுவது தொழிலுக்கு நல்லது. (காரணம் தொழில் வேறு மொழி வேறு)

Unknown said...

நணபரே இட ஒதுக்கீடு குறித்து தவறான புரிதல் தங்களிடம் உள்ளதாகக் கருதுகிறேன். இட ஒதுக்கீடு வேறு கல்வி உதவித் தொகை என்பது வேறு நீங்கள் குறிப்பிடுவது கல்வி உதவித் தொகை.

//ஒரே கல்விமுறை, இந்தியா முழுவதும் வேண்டும், ஒரே பள்ளி இறுதி தேர்வு மட்டும், ஆனால் அதுவே இறுதியான முடிவல்ல.//
தவறான கண்ணோட்டமாக காண்கிறேன். கல்வி என்பது வட்டார வழக்கங்களையும் தங்களுடைய வரலாற்றையும் அறியும்படி இருக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி தெரிந்த நம்முள் எத்தனை பேருக்கு தமிழர் வரலாறு தெரியும்? தமிழர் வரலாறு என்றால் அது இந்திய வரலாறாக அல்லவா பார்க்கிறார்கள்

மேலும் தேர்வு என்ற முறையே தேவைதானா என்று விவாதிக்கும் காலத்தில் ஒரே தேர்வு என்பது சரியா ஆய்வாக தெரியவில்லை.

தங்களுடைய ஆய்வானது முழுக்க முழுக்க வேலைக்குத் தேவையானவர்களை உருவாக்க தேவையான கல்வி முறையைச் சுற்றியே உள்ளது. சிந்திக்க வைக்க தேவையான கல்வி பற்றி ஒன்றுகூட இல்லை.

P.S.Narayanan said...

அன்று சமஸ்கிரிதம்; இன்று ஆங்கிலம்; நாளை சீனமா!கல்வி என்பது பிழைப்புக்கு; அடிமைகளை உருவாக்குவதற்கு என்ற நிலை வந்துள்ளது. பெரும்பான்மை மக்களுக்கும் நமது கல்வி முறைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஜப்பான் சீனா கொரியா நாடுகளில் வியாபாரத்துக்கான தொடர்பு மொழியாக மட்டுமே ஆங்கிலம் உள்ளது. படிப்பு, விஞ்ஞானம், கோர்ட் மொழி, அரசுப்பணி, ஆராய்ச்சி எல்லாம் தாய் மொழியிலேயே நடக்கிறது. நாட்டு முன்னேற்றமும் சமத்துவமும் வளர தாய் மொழி ஒன்றே உதவும்.

ஆண்டான் அடிமை முறையில் ஊறிப்போன உளுத்துப்போன நமக்கு தாய்மொழிக் கல்வி விந்தையாக உள்ளது. ஒரு ஐரோப்பிய அறிஞர் இந்தியாவைச் சுற்றிப் பார்த்த பின் கூறியது: ''ஒவ்வொரு இந்தியனும் ஆங்கிலம் என்ற சிலுவையை சுமந்துகொண்டு அலைகிறான்.'' காந்தி அடிகள் 1916ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வி பற்றிக் கூறியது: ''நமது இளைஞர்கள் மக்கள் மொழிகளில் கல்வி கற்றிருந்தால் இந்நேரம் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு சென்று இருப்பார்கள். மக்கள் மொழிக் கல்வி பெற்ற இளைஞர்கள் இந்தியாவின் கிராமங்களில் மக்களோடு மக்களாக உழைப்பார்கள். ஆங்கில வழிக்கல்வி ஒவ்வொரு இந்திய இளைஞனின் வாழ்க்கையில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை வீணடிக்கின்றது''.


ஆங்கிலத்தில் பேசினால் மக்கள் எப்படி மிரண்டுபோய் விடுகிறார்கள் என்பதற்கு சோஷலிஸ்ட் தலைவர் லோஹியா கூறிய கவிதை:''அங்க்ரேஸ் கி போலி பந்தூக் கி கோலி''[English words are like bullets from a gun]. மக்கள் நீதிபதி சந்த்ருவிடம் ஒரு நிருபர் கேட்டார்: ''இன்னும் ஏன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆங்கிலம் வழக்கு மொழியாக உள்ளது?'' சந்துரு: ''நமது கோவில்களில் சமஸ்கிரிதத்தில் அர்ச்சனை செய்கிறார்களே அது மாதிரிதான்''.

தமிழில் படித்தால் வேலை எப்படிக் கிடைக்கும் என்பது சர்வ சாதாரணமான கேள்வி. தமிழ்நாட்டை விட்டு வேறிடத்துக்கு வேலைக்குப் போகிறவர்கள் வெறும் ஐந்து சதவிகிதம் பேரே. இதற்காக ஏன் 95% மக்கள்மீது ஆங்கிலத்தை திணிக்க வேண்டும்?தமிழ்க்கல்வி வேலைகளை உள்ளூரிலேயே உருவாக்கும்.ஆங்கிலக் கல்வி வேலை தேடி அலையும் அடிமைகளை, அகதிகளை உருவாக்கும். தமிழ்க் கல்வி கொடுப்பவர்களை உருவாக்கும். ஆங்கிலக் கல்வி பிச்சை எடுப்பவர்களை தோற்றுவிக்கும்.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மிகப் பெரிய சிந்தனையாளர் குரு கோல்வால்கர் சுதந்திரம் கிடைத்தபோது கூறியது: ''இந்தி தற்போதைக்கு நாட்டின் இணைப்பு மொழியாக இருக்கலாம். ஆனால் இறுதியாக சமஸ்கிருதம் மட்டுமே இணைப்பு மொழியாக இருக்கவேண்டும்''. வெறும் பதினாலாயிரம் பேர் மட்டுமே அறிந்த அந்த பிராமணீய மொழியை ஏன் கோல்வால்கர் திணிக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் இரண்டுமே மக்கள் மொழிகள் அல்ல. பிராமணீய மொழிகள். எனவேதான் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் ஆதிக்க வர்க்கங்களுக்கு அவசியப்படுகின்றன.

மக்கள் மொழி ஜனநாயக மொழி. சிறுபான்மையினர் மட்டுமே அறிந்த/பேசும் அந்நிய மொழிகள் ஆண்டான் அடிமை முறையை நிலைப்படுத்தவே உள்ளன.


P.S.Narayanan said...

நாமக்கல்லிலும் ஈரோட்டிலும் திருப்பூரிலும் சிவகாசியிலும் பல தொழில்களை உருவாக்கி லட்சக் கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியது ஆங்கிலக் கல்வி அல்ல. சென்ற சில ஆண்டுகள்வரை இங்கு ஒரு ஐ ஐ டீயோ M B A vo கிடையாது. கொங்கு மண்ணின் மாபெரும் சாதனையாளர்கள் (சக்தி மசாலா மற்றும் எஸ் கே எம் போன்றோரை) உருவாக்கியது ஆங்கிலக் கல்வி அல்ல. ஆங்கிலம் மட்டும் படித்திருப்பர்கலேயானால் அவர்களும் கூலி வேலை தேடி அமெரிக்காவுக்கு ஓடி இருப்பார்கள்.

அப்பாதுரை said...

கல்வியில் தொடங்கி தாய்மொழிக்குத் தடம் மாறி விட்டதே பதிவும் சிந்தனையும்!
அனைவருக்கும் கல்வி தேவை, கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு - அதைச் செயல்படுத்த வேண்டும். கல்விக்கும் மொழிக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். கல்வியின் பல நோக்கங்களில் ஒரு முக்கியமான நோக்கம் வேலை என்றால் அந்த வேலைக்கேற்றபடி படிப்பதில் தவறில்லை (ஆங்கிலத்தில் படிக்க நேர்ந்தால் கூட).

இன்றைய நிலவரத்தில் ஆங்கிலம் தான் உலக இயக்க மொழியாக இருக்கிறது - ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறில்லை. இந்தியாவின் தெருவுக்கொரு மொழி நிலமையில் ஆங்கிலம் ஒரு பாலமாக இருந்திருக்கலாம் - அதைக் கெடுத்தது அரசியல். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். அந்தக் கோணத்தில் பார்க்க வேண்டுமேயொழிய ஆங்கிலத்தின் மேல் காழ்ப்புடன் உமிழ்வதால் தமிழ் வளரப்போவதில்லை. தமிழ் ஏன் வளரவேண்டும் என்பதும் எனக்குப் பல நேரம் புரியாமலே போகிறது. தமிழ் வழக்கில் இன்றைக்கு 70% சொற்கள் பிறமொழி பாதிப்பில் உருவானவை. சங்க இலக்கியங்களில் ஒன்றைக்கூட ஒரு முறை படித்துப் பொருள் கொள்ள முடியாத நிலையில் மூவாயிரம் ஆண்டுத் தொன்மை பற்றி மாரடிக்கலாம் - மார் தான் வலிக்கும்.

அரசுப் பள்ளிகளில் இந்தி படிக்க வேண்டும் என்று சொன்னாலாவது அது யதார்த்தம் - அதைவிட்டு தமிழ் மட்டுமே படிக்க வேண்டும், தமிழ் படித்தால் அதிக உரிமைகள், சலுகைகள் என்பதெல்லாம் வருந்த வைக்கிற வாதம். தமிழன் தெருவில் நிற்பதற்குக் காரணமே போலி மொழிப்பற்றை நம்பி மோசம் போனது தான் ஐயா! என்று ம்டியும் எங்கள் அறியாமை ரோகம்!

Avargal Unmaigal said...


இந்தியாவில் ஆங்கில மொழி பாதிப்பு என்பது ஆங்கில மொழி அல்லாத மற்ற நாடுகளை(உதாரணமாக பிரான்ஸ், சீனா & etc..) விட மிக அதிகம். இதற்கு முக்கிய காரணம் என்று நாம் கூர்ந்து நோக்கினால் நமக்கு தெரிவது மற்ற நாடுகளில் உள்ளது போல ஒரு தேசிய மொழி இல்லாததுதான் மிக முக்கிய காரணம். பல மொழிகளை கொண்ட நாட்டில் ஒரு இடத்தில் உள்ளவர்கள் மற்றொரு இடத்தில் தொடர்பு கொள்ள ஒரு பொது மொழி தேவைப்பட்டதால் அது உலகெங்கும் மிக பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலம் அந்த இடைவெளியை நிரப்ப பயன்பட்டு கொண்டிருக்கிறது. அது மேலைநாட்டுக்காரனுடைய மொழி அதனால் நாம் தேசப்பற்று காரணமாக நம் நாட்டில் உள்ள ஒரு மொழியை தேசிய (ஹிந்தி) மொழியாக்க முயற்ச்சித்தால் அது நாட்டின் மற்றொரு பக்கம் வேறு மொழியை பேசும் மக்களிடம் திணிப்பது போல ஆகிவிடும் அதனால் நாம் ஆங்கில மொழியையே பொது மொழியாக தேர்தெடுக்க வேண்டும் அதைவிட்டு விட்டி வளர்ச்சியை தடுக்க நினைத்தால் அது அறிவிலித்தனமாகவே இருக்கும்.



ஆங்கில மொழி பாதிப்பு தாய்மொழியை விட அதிகமாக இருப்பதற்கு காரணம் இலக்கியத்தை தவிர மற்ற துறை புத்தகங்கள் எல்லாம் ஆங்கிலத்திலே இருக்கின்றன. இப்படி மற்ற துறைகளை தேர்தெடுத்து படிப்பவர்களுக்கு தாய் மொழியில் புத்தகங்கள் அதிக இல்லை அப்படி இருந்தாலும் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே உள்ளன அதனால் அவர்கள் அறிவை மேலும் வளர்க்க இயலவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை

சரி இப்படியே நாம் பேசிக் கொண்டிருந்தால் நம் தாய் மொழியை வளர்க்க முடியமா என்ன? முடியாதுதானே அப்ப நாம் என்ன செய்ய வேண்டும். நம் மொழி வளர ஆங்கிலக் வழி கல்வியை தடை செய்ய வேண்டுமா? இல்லை அப்ப என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்களா?

இந்தியாவெங்கும் 2 மொழிக் கல்விதான் கட்டாயம் என கொண்டு வர வேண்டும். அது அவ்வளவு எளிது அல்ல காரணம் இப்படி முடிவு எடுக்கும் அதிகாரங்கள் எல்லாம் வட நாட்டுகாரர்களிடையே இருக்கிறது அதை கண்டிப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
தமிழில் மற்ற துறையை சார்ந்த புத்தகங்கள் அதிக அளவு வெளியிட அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் அது வரை ஆங்கில மொழிக் கல்வி இருக்க வேண்டும் அதே நேரத்தில் தமிழ் நாட்டில் படிக்கும் அனைவரும் தமிழ் மொழியில் நன்கு புலமை கொண்டு இருக்க வேண்டும் அது எந்த மாநிலத்துகாரர்கள் அல்லது எந்த வெளிநாட்டுகாரர்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக பின்பற்றபட வேண்டும். தமிழ் மொழியில் அதிக மதிப்பு எடுத்து இருந்தால்தான் மேல்படிப்புக்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டும் இப்படிச் செய்வதால் எல்லோரும் அந்த அந்த மாநில மொழியை நன்கு கற்றுத்தேர முடியும் அதே நேரத்தில் ஆங்கில மொழியையும் விட்டு விடக் கூடாது. இரண்டுக்கும் நல்ல முக்கியத்துவம் கிடைக்கும். இப்படி கற்பதால் மருத்துவர்கள் கூட கிராமங்களில் சென்று பணி புரிய முடியும் (ஆனால் நடப்பது என்ன தமிழ் மொழி படிப்பதற்கு பதிலாக பிரெஞ்ச்சு ஜெர்மன் ஸ்பானிஷ் மொழியை படித்து நல்லா எழுதினாலும் எழுதாவிட்டாலும் அதில் அதிக மார்க் போடப்படுவதால் மேல் கல்வியில் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது அது மிகவும் தவறு இந்த மொழிகளுக்கும் தமிழ்னுக்கும் என்ன சம்பந்தம்)

இப்படி செய்வதால் தமிழ் ஆசிரியர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் பல தமிழ் பள்ளிகள் ஆரம்பிக்கவும் வாய்ப்புக்கள் ஏற்படும் பல நூல்கள் எழுதப்படும். பல தாய் மொழி நூல்கள் அதிகம் பதிப்பிக்கபடும் அதனால் தாய் மொழி வளரும் தாய் மொழி சிந்தனை வெளிப்படும்

அதுபோல தமிழ் மொழி சொல்லிதரும் போது பழைய இலக்கியங்கலை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் காலத்திற்கு ஏற்ப புதிய இலக்கியங்களையும் காலத்திற்கேற்ப கருத்து செறிவு கொண்ட புதிய பாடல்களையும் சொல்லிதர வேண்டும். இப்படி சொல்லிதரும் போது புதிய கண்டுபிடிப்புகளை உபயோகித்து சொல்லி தர வேண்டும், உதாரணமாக பாடங்கள் எலக்டராணிக் சாதனங்களான ஐபேட் போன்ற புதிய சாதனம் மூலம் கற்ற வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்


மேலும் அரசாங்க வேலைவாய்ப்புகளில் தாய் மொழியும் அதே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் பல மொழிகள் அறிந்தவர்களுக்கு அதிக அள்வு வாய்ப்புக்கள் தரப்பட வேண்டும்,காரணம் இது பொதுமக்களுக்கு சேவை செய்யக் கூடிய துறையாகும்


இன்னும் நீறைய சொல்லலாம் ஆனால் நேரமின்மையால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.

இது என் கருத்துதான் ,,,,,,,சாதாரண மனிதனின் கருத்து அறிவாளியின் கருத்து அல்ல



ஜோதிஜி said...

நம்பிக்கை வெளிச்சம் வெகு தொலைவில்

ஜோதிஜி said...

ஆனால் இன்று ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகமாகியுள்ளது. அவர்களின் பொறுப்பு என்னவென்று உணர வைக்காமல்.?

ஜோதிஜி said...

ஆனால் அது குறித்த கவலையேதும் இங்கே எவருக்கும்இல்லை. பிழைக்க ஒரு மொழி. வாழ ஒரு வாழ்க்கை. சின்ன வட்டம்.

ஜோதிஜி said...

கல்வி அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு,

இந்த தொடரில் எழுதிய ஒவ்வொரு பதிவும் சென்று சேர்ந்து விட்டது. மனதளவில் ஒரு குற்ற உணர்ச்சி உருவானால் கூட வெற்றியே.

ஜோதிஜி said...

இட ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே எழுதிய பதிவை படித்து விட்டீர்களா வினோத்.

http://deviyar-illam.blogspot.in/2012/09/blog-post_5.html

ஜோதிஜி said...

கல்வி என்பது வட்டார வழக்கங்களையும் தங்களுடைய வரலாற்றையும் அறியும்படி இருக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி தெரிந்த நம்முள் எத்தனை பேருக்கு தமிழர் வரலாறு தெரியும்? தமிழர் வரலாறு என்றால் அது இந்திய வரலாறாக அல்லவா பார்க்கிறார்கள்

அற்புதமான கருத்து.

ஜோதிஜி said...

சென்னை பெருக்கத்தை குறைக்க தொடக்கததில் எம்ஜீஆர் சில முயற்சிகளை எடுத்தார். ஆனால் தோற்று விட்டது. பாதி அரசு அலுவலகங்களை அங்கிருந்து தூக்கினாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். கடல் சார்ந்த மீனவர் சார்ந்த அலுவலகத்திற்கு சென்னையில் என்ன வேலை? மொழி சார்ந்த அலுலவகம் தஞ்சையில் தானே உருவாகவேண்டும்.

ஜோதிஜி said...

நம் மொழி வளர்ச்சி குறித்து சிந்திப்பவர்கள் ஒன்றிணைந்து சிந்தித்து விவாதித்து பிறகு வலுவான கட்டுரைகளை ஊடங்களில் வெளிவர செய்ய வேண்டும்

பிரச்சனையே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. இப்போது எந்த ஊடகத்திலும் சேர்வதற்கு முதல் தகுதியே ஆங்கிலம் தான். அது தமிழ் ஊடகமாக இருந்தாலும்.

ஜோதிஜி said...

நான் எழுதாமல் இருந்த விசயங்களையும் மனதில் நினைத்தவற்றையும் எழுதி இருக்கீங்க. நன்றி.

ஜோதிஜி said...

சங்க இலக்கியங்களில் ஒன்றைக்கூட ஒரு முறை படித்துப் பொருள் கொள்ள முடியாத நிலையில் மூவாயிரம் ஆண்டுத் தொன்மை பற்றி மாரடிக்கலாம் - மார் தான் வலிக்கும்.

வாசிக்கும் போது வலித்த வரிகள். அதற்கு காரணமும் நம்மவர்களே. மொழியை வைத்து அரசியலில் வளர்ந்தவர்கள் தான் இங்கே அதிகம். ஆனால் மொழி வளராமல் இருந்ததற்கும் காரணமும் இவர்களே.

ஜோதிஜி said...

அறிவாளிகள் சொல்லும் கருத்துக்களை விட பாமரன் சொல்லும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் தான் பல சமயம் சமூகத்தை மாற்ற காரணமாகவும் உள்ளது.

அனைவருக்கும் அன்பு  said...

மிக சிறப்பான இன்றைக்கு தேவையான ஒரு விஷத்தை மையமாக கொண்டு பதிவை வெளியிட்டு பலரின் கருத்தை பெரும் ஒரு விவாத மேடையாக காட்சியளிக்கிறது இந்த பக்கம் .

ஜோதிஜி உங்கள் ஆதங்கமும் அக்கறையும் பாராட்டகூடியது .ஆனால் வெறுமனே ஆதங்கத்தை கொண்டு பயனில்லை கருத்துகளையே பதிவை போல வெளியிட்ட நண்பர்களின் கருத்துக்கள் பல இன்றைய கால சூழலுக்கு ஏற்றுகொள்ள கூடிய ஒன்றுதான் .

பன்மொழி புலமை பெற்றவர்கள்தான் நம் முன்னவர்கள் .அவர்கள் கற்ற மொழியை பயன்படுத்தி நம் நாட்டின் சிறப்பை உலகறிய செய்தார்கள் .

உலகில் உள்ள சிறப்புகளை தமிழர்கள் அறிந்துகொள்ள வகை செய்தார்கள் .

வாணிபத்தை பெருக்கவும் செல்வசெழிப்பான தமிழகத்தை உருவாக்கவும் தான் அவர்கள் அயல்நாட்டுக்கு பயணம் செய்தார்கள் .

அவர்களின் மனதில் சுயநலம் இல்லை பொது நலம் இருந்தது நம் மக்கள் என்ற எண்ணம் இருந்தது .

தான் மட்டுமே மகிழ்வாய் இருக்க வேண்டும் என்று மற்றவர் ( இங்கு மற்றவர் என்பவர்கள் தாய் ,தந்தை உடன்பிறந்தவர்கள் ,மனைவி ,குழந்தை ) எப்படி போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு மேலை நாட்டு கலாசாரத்திற்கு அடிமையாகி கிடக்கிறார்கள் .பிழைக்க போன போன இடத்தில தன்னை அந்நாட்டின் குடிமகனாக ஆக்கி கொண்டு தன் குடியை மறக்கும் ஆபத்தான சமுகத்தை எதிர்நோக்கித்தான் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம் .


இப்படியே போனால் தமிழன் தன் முகவரியை தொலைத்துவிட்டு வருங்கால கண்காட்சி கூடத்தில் காட்சிபொருளாக மட்டுமே இருக்கும் நிலைக்கு வந்துவிடுவான் .

அந்நிலை மாற அனைவரும் சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும் .இடைநிலை பள்ளிகளில் சுய தொழில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் .

மேலை நாடுகளை போல பகுதி நேரம் அறிவை வளர்க்க படிக்க வேண்டும் .பகுதி நேரம் அந்த அறிவை பயன்படுத்தும் தொழில் ரீதியான வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் .

அப்போதுதான் அவன் பள்ளி வகுப்பை முடித்து கல்லூரிக்குள் நுழையும் பொது தனக்கான தொழிலை தேர்ந்தெடுக்க முன்வருவான்.
இதற்கு பெற்றோர்கள் முன்வர வேண்டும் மருத்துவம் ,பொறியியல் துறை மட்டுமே அந்தஸ்தானது என்ற எண்ணப் போக்கை மாற்றி அவனின் விருபத்திற்கு முன்னுரிமை கொடுத்தால் நிச்சயம் அவன் சிறப்பாக செயல்படுவான் .

நீங்கள் சொன்ன கோரிக்கை சிறப்புதான் அவை செயல்பாட்டுக்கு வந்தால் இன்னும் சிறப்புதான் .ஆனால் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்து காத்து கிடப்பதை விடுத்தது நம் காலில் நாம் நிற்க துணிய வேண்டும் .

மேலும் வெளிநாட்டில் படிப்பதை , வேலை பார்ப்பதை சிறப்பாக சொல்லும் அந்த பெற்றோர்களின் இறுதி சடங்கிற்கு கூட அவர்களின் மகன்கள் வராததை நாம் இன்று கண்கூடாக பார்த்தபின்னும் .

நம் பண்பாட்டை கலாசாரத்தை நம் குழந்தைகளுக்கு போதிக்க மறுக்க மாட்டோம் என்று நினைக்கிறேன் .

அறிவியல் ,தொழில் சார்ந்த நூல்களை தமிழில் எழுதவும் மொழி பெயர்க்கவும் முன்வாருங்கள் .அதுவே தமிழுக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த தொண்டாகும்.

மொழி எவ்வளவு ஆண்டு பழமையானது என்பது முக்கியம் இல்லை
அதன் பயன்பாட்டில் தான் அந்த மொழி உயிர்ப்புடன் உலாவுகிறது .
ஆகவே எல்லாவற்றிலும் தமிழை தழைக்க செய்யுங்கள்

நன்றி ஜோதிஜி பதிவின் மூலம் சிந்தனைகளை எண்ணங்களை வெளிக்கொண்டுவந்தமைக்கு

ஜோதிஜி said...

அறிவியல் ,தொழில் சார்ந்த நூல்களை தமிழில் எழுதவும் மொழி பெயர்க்கவும் முன்வாருங்கள் .அதுவே தமிழுக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த தொண்டாகும்.

நன்றி சரளா.

சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்தது.

தமிழ் அகராதி இன்னமும் முழுமையாக பெறாமல் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் கடந்த பத்தாண்டுகளாக இழுபறியாகவே உள்ளது. இதன் காரணமாகவே மொழி வீழ்ச்சிக்கு காரணமானவர்களை எவரும் கண்டு கொள்ள விருப்பம் இல்லாமல் நாம் பிழைத்துக் கிடப்பதே இந்த வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்பதாக இவ்வுலகம் மாறியுள்ளது.

Unknown said...

ஊடகத்தில் சேர்ந்துதான் கட்டுரைகளைக் கொண்டு வர இயலுமா? நண்பர்கள் மூலமாக வெளியிட வாய்பில்லையா?

Ranjani Narayanan said...

நீங்கள் சொல்லியிருந்த 'அருகாமைப் பள்ளி' என்ற விஷயம் ரொம்பவும் தேவையானது. சில குழந்தைகள் தங்களது நாளின் கால்வாசி நேரத்தை பள்ளிப் பேருந்துகளில் பயணம் செய்யவே கழிக்கின்றனர்.

இட ஒதுக்கீடு என்பது நம் நாட்டிற்கு ஒத்து வராத ஒன்று. ஒதுக்கீடு வேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். இன்னொன்று எத்தனை வருடங்களுக்கு ஒதுக்கீடு? தலைமுறை தலைமுறையாக இந்த ஒதுக்கீடு வளரக் கூடாது.

ஆசிரியர்களுக்கு எப்படி திறமையை வளர்ப்பது? தகுதியற்ற ஆசிரியர்களால் கல்வியின் தரம் தாழ்ந்து விடுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியம். அந்த ஊதியத்திற்கு வேலைக்கு வருபவர்கள் எப்படி தகுதி பெற்றவர்களாக இருக்க முடியும்? சாதாரண பட்டதாரிகள் வேறு வேலை கிடைக்கும் வரை செய்யலாமே என்று ஆசிரியராக வருகிறார்கள். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை! அதிக லஞ்சம் கொடுக்க முடிந்தவர்கள் தகுதி இல்லாத நிலையில் ஆசிரியர் ஆகிறார்.

ஆசிரியர் பதவி என்பது வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளும் ஒரு வேலை! அதனால் ஆசிரியருக்கு வேண்டும் என்கிற பொறுமை,குழந்தைகளின் மன நலத்தில் அக்கறை, கற்பிக்க வேண்டும் என்கிற அவா என்பதெல்லாம் இல்லாமல் போய்விட்டது.

நீங்கள் சொல்லியிருக்கும் இன்னொரு கருத்து மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு. பப்ளிக் பள்ளி என்றழைக்கப்படும் பள்ளியில் நிறைய பணம் கொடுத்து சேர்த்துவிட்டால் பின் ஆசிரியர் பொறுப்பு என்று தங்கள் கடமையை கைகழுவி விடும் பெற்றோர்கள்.

ஆசிரியரும் பெற்றோரும் சேர்ந்தே குழந்தைகளின் கல்வியை நிர்வாகிக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்வி நல்ல யோசனை, அதற்காக ஆங்கிலத்தை ஒதுக்கக் கூடாது.

ஜோதிஜி said...

ஆசிரியர் பதவி என்பது வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளும் ஒரு வேலை! அதனால் ஆசிரியருக்கு வேண்டும் என்கிற பொறுமை,குழந்தைகளின் மன நலத்தில் அக்கறை, கற்பிக்க வேண்டும் என்கிற அவா என்பதெல்லாம் இல்லாமல் போய்விட்டது.

இங்கு நடந்து கொண்டிருப்பதும் இஃதே. போராடிக் கொண்டே இருக்கின்றோ(ன்)ம்

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!வணக்கம்.நிமிடங்களின் துளிகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்.தமிழ் அச்சு பார்த்து பெருமூச்சு விடுகிறேன்.நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

கல்வியைப் பற்றிய தங்களின் இந்த தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால் கருத்துரை சொல்லவில்லை. காரணம் பட்டிமன்ற விவாதம் போன்ற தலைப்பு என்பதால். ஒரு முடிவும் ஏற்படாது. இருந்தும் கடந்த தொடர்களின் எனது கருத்தை இன்று இப்பொழுது ஒவ்வொன்றிலும் பதிந்துள்ளேன்..

// இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் தமிழோடு ஹிந்தி ஆங்கிலம் அவசியம் தேவை. தமிழ்நாட்டிற்குள் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு தாய்மொழியோடு ஆங்கிலமும் அவசியம் தேவை.//

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டதால் எல்லா இடத்திலும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது. எனவே ஆங்கிலமும், தாய் மொழியுமே மட்டுமே தொடர்பு மொழியாக இருந்தால் போதும். தமிழ்நாட்டில் பணிபுரியும் பிற மொழிக்காரர்கள் தமிழை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இந்தி படித்தால் இந்தியா எங்கும் வேலை பார்க்கலாம் என்பது ஒரு மாயை. இந்தியைத் தாய்மொழியாகக் கொணட வடநாட்டு இளைஞர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி ஏன் வருகிறார்கள்? ஒரு காலத்தில் சமஸ்கிருதத்தையும் அப்படித்தான் சொன்னார்கள். அதேபோல் டைப்ரைட்டிங்கையும் சொன்னார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று.

மும்மொழித் திட்டம் என்பது மாணவர்களுக்கு சுமை. இந்தியை விருப்பம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ளட்டும். ஆங்கிலேயர் காலத்தில் ஒரு மெக்காலேதான் இருந்தார். இன்று பல இந்தி மெக்காலேக்கள் இருக்கிறார்கள்.

சொல்ல வேண்டிய எனது எல்லா கருத்துக்களையும் சென்ற தொடர்களில் பதிந்துள்ளேன். நன்றி!

ஜோதிஜி said...

இந்தி படித்தால் இந்தியா எங்கும் வேலை பார்க்கலாம் என்பது ஒரு மாயை. இந்தியைத் தாய்மொழியாகக் கொணட வடநாட்டு இளைஞர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி ஏன் வருகிறார்கள்

வடநாட்டில் மக்களின் நலனை விட வெறியாக எதைச் சொன்னால் மக்களிடம் ஓட்டுக்களை எப்படி அறுவடை செய்யமுடியும் என்பதை உணர்ந்தவர்கள். ஆகவே தான் இன்னமும் பாதிக்கும் மேற்பட்ட வட மாநிலங்கள் அடிப்படை வசதியே இல்லாமல் இன்றும் உள்ளது. மக்களுக்கும் அது குறித்த அக்கறையில்லை என்பதால் கடைசியில் பிழைப்பு நடத்த அடிமாடுபோலவே தமிழ்நாட்டுக்கு வருகின்றார்கள்.

வந்த இடத்திலும் அவர்களுக்கு புத்தி வேலைசெய்வதில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜோதிஜி said...

வழிமுறைகளைச் சொல்லுங்க.

அகலிக‌ன் said...

தமிழ் செத்துவிடும் அழிந்துவிடும் என்பது போன்றவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. கனினிக்குள் தமிழ் நுழையாதவரையில் வேண்டுமானால் இந்த அச்சத்திற்கு அர்த்தம் இருந்தது. ஆனால் கனினிக்குள் தமிழை நுழைத்து தமிழ் ஆர்வலர்களின் அச்சம் தீர்த்த அத்தனை தொழில் துட்பவாதிகளுக்கும் மனதாரா நன்றியை ஒவ்வொரு தமிழனும் செலுத்தத்தான் வேண்டும். காசிநகர் புலவர் பேசும் மொழிதனை காஞ்சியிலே கேட்பதற்கோர் கருவி கேட்டான் கவி ஆனால் இன்று அதைவிட பலமடங்கு சிறப்பானதாய் ஒருவர் மனதில் தோன்றும் கருத்தை உலகெங்கும் தெரிவிக்க முடிகிறதே அது எத்தனை பெரிய வரம். அதை தமிழர்கள் சரியாகத்தான் பயன்படுத்திகின்றனர் என கருதுகிறேன்.
தாய் மொழி கல்விதான் புதிய சிந்தனைகளை வளர்க்கும் அனால் எங்கும் தமிழ் என்பது எப்படி சாத்தியம் என்பதையும் கவனிக்கவேண்டும். சுதந்திரம் பெற்ற கையோடு மொழிவாரியாக ஒவ்வொரு மாநிலத்தையும் ஒரு நாடாக அறிவித்திருந்தால் இங்கே தாங்கள் குறிப்பிடும் குறைகளும் வேண்டிய மாற்றங்களும் ஏற்பட்டிருக்கும். நமக்கு மொழி கவலை தெலுங்கான மக்களுக்கு வளர்ச்சி உரிமை பற்றிய பிரச்சனை. அதன் உச்சம் தனி தெலுங்கானா கொரிக்கை. அது போல தமிழின் அழிவும் பிறமொழிகளின் அதிக்கம் சகித்துக்கொள்ள முடியாததாய் போகும்போது இப்படியான தனி நாடு கோரிக்கை எழும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஜோதிஜி said...

கணினிக்குள் தமிழ் நுழையாதவரையில் வேண்டுமானால் இந்த அச்சத்திற்கு அர்த்தம் இருந்தது. ஆனால் கணினிக்குள் தமிழ் நுழைத்து தமிழ் ஆர்வலர்களின் அச்சம் தீர்த்த அத்தனை தொழில் துட்பவாதிகளுக்கும் மனதாரா நன்றியை ஒவ்வொரு தமிழனும் செலுத்தத்தான் வேண்டும்.

முற்றிலும் உண்மை.

Unknown said...

//
வந்த இடத்திலும் அவர்களுக்கு புத்தி வேலைசெய்வதில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
//
தவறான கருத்தாக தெரிகிறது. இங்கு கூலி வேலைக்கு வந்து சொந்தமாக தொழில் செய்யக் கூடியவர்கள் ஏராளம். ஆனால் இங்குள்ளவர்களோ பத்து ஏக்கர் இருபது ஏக்கர் நிலம் இருந்தாலும் காவலாளியாக ஓட்டுநராக வேலைக்குச் செல்வோர் ஏராளம்.

Unknown said...

//நண்பர்கள் மூலமாக வெளியிட வாய்பில்லையா?//

நமது நட்பு வட்டத்தில் யாரேனும் செய்தியாளராக அல்லது ஊடகத் துறையில் தொடர்புடையவர்கள் இருந்தால் அவர்கள் மூலமாக வெளிக் கொணர வழிசெய்யலாம். அதற்கு முன் ஒரு நீண்ட விவாதத்தை மேற்கொண்டு கட்டுரைகளை தயார் செய்யவேண்டும்.

Unknown said...

// இட ஒதுக்கீடு என்பது நம் நாட்டிற்கு ஒத்து வராத ஒன்று. //
ஒத்துவாரத ஒன்று என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் "தேவையான" ஒன்று

லெமூரியன்... said...

இடஒதுக்கிடு பற்றிய தவறான புரிதல் உள்ள பின்னூட்டங்கள் தென்படுகிறது.!

பல நூறு வருடங்கள் அமுக்கி வைக்கபட்டதால் மனதளவில் மந்தமாக்கபட்ட இனம் தாழ்த்தப்பட்ட இனம்..

மற்றைய இனங்கள் பொருளாதார விகிதத்தில் மட்டுமே தான் பிந்தங்குகின்றனர்..

இட ஒதுக்கிடு கொண்டுவந்தது பொருளாதாரத்தில் மட்டும் முன்னேற்ற அல்ல..

மனதளவில் மனிதன் என்று உணர்த்த...

மேலும் ஐம்பது வருட இட ஒதுக்கிட்டு கொள்கையில் எல்லா தலித்துகளும் முன்னேறி உச்சாணிக் கொம்பில் நிற்பது போல ஒரு தோற்றம் இங்கு காட்ட படுகிறது....

உண்மை அதுவல்ல..அந்த குறுகிய சதவிகித முன்னேறிய குடும்பங்கள்தான் இந்த ஐம்பது வருட பலன்.

இன்றும் ஆந்திரா தொடங்கி பீகார் அஸ்ஸாம் மகாராஷ்டிரம் என மத்திய இந்திய தலித்துகள் மிருகங்கள் போலவே நடத்த படுகின்றன...!

ஒரு குறுகிய தலித் மக்களின் வளர்ச்சியே பொறுக்க முடியாத அளவிற்கு பொங்கி வெடிக்கிரதென்றால்

இட ஒதுக்கீட்டின் அவசியம் உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் இட ஒதுக்கீடு என்பது ஏதோ ஒரு இனத்திற்கு மட்டும் என்பது போல பார்ப்பது ஆச்சிரியமாக இருக்கிறது ...

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிங்கங்களும் கூட இடஒதுக்கீட்டின் கீழ் தான் குடை பிடித்து முன்னேறுகின்றன ..அதை சொல்ல மனம் வலிக்கிறது இங்குள்ள நண்பர்களுக்கு ..!

லெமூரியன்... said...

ஆங்கிலம் கற்பதால் தமிழ் அழிந்து போகும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

இங்கு பலரின் கருத்து தமிழ் பொருளீட்டு மொழியாக இருந்தால் மட்டுமே வாழும் என்பதாக உள்ளது...

இப்பொழுது மட்டுமல்ல..சங்க காலத்திலும் எல்லா கவிகளும் மொழி வைத்து பொருளீட்டி வாழ்ந்த சரித்திரம் எல்லாம் நம்மிடம் இல்லை...

தமிழ் என்பது நமது ரத்தத்தில் இருப்பது...அதை கண்டிப்பாக பாடமாக மட்டும் படித்துதான் வாழ வைக்க வேண்டுமென்பதல்ல...

ஆனால் தமிழ் வாசிப்பை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும்..

வாசித்து பழகும் போதே மொழியின் வாசம் புரியும்..

மொழியின் அவசியத்தை மனதளவில் புகுத்துவது கண்டிப்பாக ஆசிரியரின் வேளைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்..!

ஆனால் இப்போதுள்ள தமிழாசிரியர்கள் தங்களை சார் என்று பிள்ளைகள் அழைப்பதே பெருமையாக கொள்கின்றனர் ..!

ஐயா என்பது அசிங்கமாக தெரிகிறது. (சில ஐயாக்கள் உண்மையிலேயே அசிங்கமானவர்கள்.தமிழ் வைத்து பிழைத்து விட்டு பின்பு சிங்களத்தானை கொண்டு பொருளீட்டும் களவாணி தெலுங்கர்கள் அவர்கள்)

நிற்க.

நான் ராணுவ பள்ளியில் பயின்றேன். முழுவதும் ஆங்கில வழியில்தான். பத்தாம் வகுப்பிற்கு பின் பொறியியல் படிப்பிற்கான இ எம் ஆர் படிப்பில் பதினொன்று மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன் .

எனக்கு தமிழ் வாசிப்பு கடினமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் ஆங்கிலம் கற்ற அதே அளவிற்கு தமிழையும் கற்றுக் கொண்டேன்.

இப்போது அமெரிக்காவில் அமெரிக்க ஆங்கிலம் சரளமாக (இங்கே முதுநிலை கல்வி பயின்ற இந்திய மாணவர்களை விட) பேசுகின்றேன்.

மனதில் விதையுங்கள் தமிழ் உங்களுக்கு சொந்தமென...பின்பு எந்த மொழியும் நம்மொழியை அடக்க போகின்றது என்ற பயம் நீங்கும்.

ஆனால் பயம் போக்க வந்த ஆசிரிய பெருமக்கள் தங்களின் தாழ்வுமனப்பான்மையை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

ஜோதிஜி said...

மனதில் விதையுங்கள் தமிழ் உங்களுக்கு சொந்தமென...பின்பு எந்த மொழியும் நம்மொழியை அடக்க போகின்றது என்ற பயம் நீங்கும்.

இதை என் தளத்தில் மேலே கொண்டு வந்து விடுகின்றேன். எளிய எதார்த்தமான உண்மை லெமூரியன்.

ஜோதிஜி said...

எனக்கு ஒரு உண்மை மட்டும் புரியவில்லை. இடஒதுக்கிடு என்று பேசும் போது அதன் சாதக பாதகங்களைப் பற்றி பேச எவரும் தயாராக இல்லை. நீங்கள் சொல்வது தவறு. 200 வருட அடிமைத்தனமல்ல. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் வாழ வைக்கப்பட்ட அராஜக அயோக்கியத்தனம். ஆனால் இன்று உண்மையான உரிமைகள் சேர வேண்டியவர்களுக்கு சேராமல் வசதியாக இருப்பவர்களுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் சேர்ந்து இன்னமும் உயர வேண்டிய மக்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றார்கள். ஒடுக்கப்பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே என் ஆதங்கம். நானும் எழுதும் வரைக்கும் இந்த கருத்தை திரும்ப திரும்ப எழுத்தில் விதைத்துக் கொண்டே தான் இருக்கப் போகின்றேன்.

அப்பாதுரை said...

மறுவாசிப்பிலும் அதே வலி.
சமீபத்தில் தமிழ்த்தொல்லைக்காட்சியில் டாக்டர் க்ருத்திகா என்பவரின் நிகழ்ச்சி பார்க்க நேர்ட்டது. பத்து சொற்களுக்கு ஒரு தமிழ்ச் சொல். அதிலும் "இது" "ஒரு" "தினம்" "இருக்குது" போன்ற சொற்களைத் தவிர வேறு தமிழ்ச் சொல்லே காணோம். என்ன அநியாயம்!
இதற்குக் காரணம் கல்வி முறை மட்டும் தானா?

ஜோதிஜி said...

நன்றி அப்பாதுரை. உங்கள் பதில் ஒரு பதிவாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. எழுதுகின்றேன்.

Yarlpavanan said...

சிறந்த ஆய்வுரை வழிகாட்டல் பதிவு இது.