Tuesday, April 02, 2013

தமிழாசிரியை கடிதம்


முனைவர்  சு உஷாராணி,
தமிழாசிரியை
ஸ்ரீ கே.கே. நாயுடு மேனிலைப்பள்ளி
விமானநிலைய அஞ்சல்
கோயம்புத்தூர் 641 014

வணக்கம்

பொதுவாக எந்த நூலை நான் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டாலும் 'அட்டை டூ அட்டை' படிப்பது எனது வழக்கம்.

சமர்ப்பணம் படிக்கும் போதே நூலாசிரியர், சாமான்ய முகம் கொண்ட சராசரி மனிதரல்ல என்பது புரிந்தது.

என் சமகால இளைஞர் ஒருவர் நாலு முழ வேஷ்டியுடன் கையில் துணிக்கடை மஞ்சள் பையோடு, பிழைப்புத் தேடி நகரம் வந்தது......பாலகுமாரன் சுஜாதா என எழுத்துக்களில் தம்மைப் புதைத்துக் கொண்டது.......  எங்கே இந்தக் கிட்டங்கி வேலையிலேயே சோம்பேறியாக மாறிக் காணாமல் போய்விடுவோமோ? எனச் சுதாரிக் கொண்டு வேற வேலை தேடி ஓடியது..... எனத் தொடக்கமே விறுவிறுப்பு.

தன் வரலாறு என்பதைக் காட்டிலும், நாவலைப் போலக் கதை சொல்லும் உத்தி, நூலின் போக்கை சுவராசியமாகக் கொண்டு செல்கிற்து.

ஏற்றுமதி நிறுவனத்தில் நுழைந்து, உண்மையான கடும் உழைப்பால் உயர்ந்து, உடன் பணிபுரிபவரின் ஏமாற்று வித்தையில் சிக்கி, பண இழப்புக்காகக் காரணம் சுமத்தப்பட்டு அந்நிறுவனத்தை விட்டு வெளியே நேர்ந்தது... எனச் சொல்லிச் செல்லும் போதே, ஏற்றுமதி நிறுவன வேலைகள், நடைமுறைகள், ஆட்களின் பங்களிப்பு என அழகிய ஆடையை நெய்வது போல செய்திகளை இழையோட விட்டிருக்கும் பாங்கு ரசிக்க வைக்கின்றது.

நூலாக இருக்கும் நிலையிலிருந்து ஆடையாக வடிவமைக்கப்பட்டுப் பெட்டியில் அடுக்கப்படுவது வரை மிகத் தெளிவாக விவரிக்கும் பாங்கு ... துறை சார்ந்தவர்கள் பயன் பெறப் பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் அமையும். ஏற்றுமதி அரசாங்கம் விதிக்கின்ற கட்டுப்பாடுகள், தரகர்களின் வேலை என்பதெல்லாம் துறை சார்ந்த விஷயங்களாகவே இருப்பதால் நுனரஞ்சக ரசிப்புத் தன்மை ஈர்ப்பிலிருந்து விடுபட்டு விலகியே நிற்கின்றன.

தாய்மொழி மீது கொண்ட நேசம், குழந்தை தொழிலாளர் உருவாக்கப்பபடும் சூழலியல் காரணங்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத மனிதர்கள் மீது, ஒரு சக மனிதனுக்கு ஏற்படும் தார்மீகக் கோபம், அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வை விவரித்தல் என நூலின் பாதை பல தளங்களின் பயணிக்கிறது.

ஒரு பக்கம் அரசின் கொள்கைகள்... மறுபக்கம் சாயக்கழிவு நீர் பிரச்சனைகள் என இரண்டுக்குமிடையே இன்றைக்குத் தடுமாறிக் கொண்டிருக்கும் திருப்பூரின் நிலையை இந்நூல் அப்பட்டமாக வெளிச்சம் போடுக் காட்டுகின்றது.

அரசின் பொருளாதார ஒப்பந்தங்களால், நம் நாட்டு உற்பத்திக்கான மூலப் பொருள் பற்றாக்குறை ஏற்படுதல், உற்பத்தித் திறன்  குறைவு, வெளிநாட்டு ஏற்றுமதி என இவர் விவரித்துள்ள செய்திகளைப் படிக்கும் போது ஒரு சராசரி இந்தியக் குடிமகனாய் நமக்கும் கூடக் கொஞ்சம் கோபமும் இயலாமை குறித்து கழிவிரக்கமும் தோன்றுகிறது.

விரும்பும் துணியின் வடிவத்தை வடிவமைத்துத் தரும் நிட்டிங் இயந்திர அமைப்பை இவ்வளவு அருமையாக விபரிக்க முடியுமா? என்ன!

வலையை விரித்தது யாராடா? தலைப்பில் பகவான கண் விழத்துப் பார்து விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கினார்.   பகவான் சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தார் என் இடைத் தொடர்களை அமைத்திருப்து நகைச்சுவையும் நையாண்டியும் கலந்து மாறுபட்ட உத்தி.

அமெரிக்கர்களின் வெளிப்படையான அணுகுமுறைச் சொல்லி எச்சரித்து வாழ்வில் உயர வழியும் காட்டப்பட்டுள்ளத.

உரம் போடாமல் வளர்த்த பஞ்சிலிருந்து உருவாக்கிய ஆடைகள் குறித்த இன்றைய நிலையைச் சொல்லும் போது இயற்கை வேளாண்மையை விவரிப்பது இவரின் இன்னொரு விவசாயி முகம் தெரிகிறது.

"அடித்தட்டு வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ எவராயிருந்தாலும் தங்களை நம்பி வாழ்பவர்களுக்காகவே தங்களை வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டி கட்டாயத்தில் இருக்கிறார்கள்"

"அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒருவிதம ஒரு விதமான அடிமை"

நச்சென்ற வரிகள்

தொழில் நிலையில் பலமுறை ஏமாற்றங்களை எதிர்கண்ட போதும், நம்பிக்கையும் உழைப்பையும் மட்டுமே துணையாகக் கொண்டு முன்னேறிய ஒரு இளைஞனின் கதை

திருப்பூரின் முதன்மைத் தொழிலை அலசி நன்கு ஆராய்கின்ற நூல்.

வாழ்வில் உயர, தொழிலில் உயர, இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகளை விவரிக்கும் சுய முன்னேற்ற நூல்

தொழில் முனைவோர் கடைபிடிக்க வேண்டிய சூட்சுமங்களைச் சொல்லிச் செல்கின்ற நூல்

டாலர் நகரத்தை எப்படி வேண்டுமானலம் இப்படி பெயரிட்டு அழைக்கலாம்.  

நான் இதுவரையிலும் படித்த புத்தகங்களில் இது போன்ற வடிவமைப்பில், வாசிப்பவனை மனதில் கொண்டு அழகான தாளில் தெளிவான பெரிய எழுத்துக்களில் கொண்டு வந்த 4 தமிழ் மீடியா குழுமத்திற்கு தமிழ் புத்தக உலகமும், புத்தக பிரியர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றார்கள். இது போல இன்னும் பல புத்தகங்களை இது போன்ற நேர்த்தியுடன் கொண்டு என் வாழ்த்துகள்..

ஜோதிஜி உங்களுக்கு நடைமுறை எதார்த்த வாழ்க்கையை வசமாக்கத் தெரிந்ததோடு, வார்த்தைகளையும் வசப்படும் வித்தையும் வாய்த்திருக்கிறது.  

என் வாழ்த்துதுக்ள்.

அன்புடன்
சு உஷாராணி
21.3.2013

டாலர் நகரம் புத்தகம் தற்போது கோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் விமர்சனமும் நச்சென்று தான் இருக்கிறது... வாழ்த்துக்கள்...

/// வார்த்தைகளையும் வசப்படும் வித்தையும் வாய்த்திருக்கிறது. ///

அவரின் கூர்ய பார்வை அப்படி... ஹிஹி...

thiyaa said...

அருமையான நல்ல விமர்சனம் ஜோதிஜி,
அப்புறம் டாலர் நகரத்தில் பஞ்சம் பிழைக்கும் நான் உங்கள் டாலர் நகரத்துக்கு வாழ்த்துகளைச் சொல்கிறேன். தாமதமான வாழ்த்தானாலும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அனைவருக்கும் அன்பு  said...

சிறப்பான விமர்சனம்விஜயா பதிப்பகத்தில் புத்தகம் வாங்கி படித்துவிட்டு வருகிறேன்

ஜோதிஜி said...

அவசியம் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்