Thursday, February 07, 2013

டாலர் நகரம் புத்தகம் வாங்க

கடந்த ஜனவரி 27 2013 அன்று வெளியான எனது முதல் படைப்பான டாலர் நகரம் விழாவின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

இதன் முழு தொகுப்பும் விரைவில் வெளியிடுகின்றேன். சமீப காலமாக நான் பார்த்த தொழில் நுட்ப வசதிகளைப் பார்த்து இது போல நாமும் முயற்சி செய்து பார்த்தால் என்ன? என்று ஏராளமான விசயங்கள் மனதிற்குள்ளே வைத்திருந்தேன்.  இந்த விழாவின் தொடக்கம் முதல் இன்று வரையிலும் பலவற்றை நான் முயற்சி செய்து பார்த்துக் கொண்டே வருகின்றேன்.  இதன் காரணமாக ஒவ்வொன்றும் சிறிது தாமதமாகத்தான் வெளி வரும்.

தற்போதைய  ஊடக போட்டி சூழலில் உடனடியாக அவசரம் என்ற பெயரில் எத்தனையோ விசயங்களை நம்மை தாக்கிக் கொண்டேயிருகின்றது.  ஆனால் டாலர் நகரம் என்ற புத்தகத்திற்கு அது போன்ற எந்த அவசரமும் தேவையில்லை என்பதால் சற்று  நிதானமாக ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டே கூடவே ஒவ்வொரு வித்தியாசமான முயற்சிகளையும் இந்த தருணத்தில் செய்து பார்த்துக் கொண்டு வருகின்றேன்.

இது எனக்கு இப்போது கிடைத்த ஒரே சந்தர்ப்பம்.  

முதல் பதிப்பாக 2000 புத்தகங்களை கொண்டு வந்தோம். கடந்த ஒரு வாரத்திற்குள் ஆயிரம் புத்தகங்களை திருப்பூருக்குள் கொண்டு சேர்த்துள்ளோம். ஆனால் இது வெறுமனே எண்ணிக்கை சார்ந்தது அல்ல. இதற்கு அப்பாலும் இந்த புத்தகம் எங்கெங்கு சென்றால் சரியாக இருக்குமோ அத்தனை வாய்ப்புகளையும் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றேன்.

உழைப்பதற்கு அச்சம் கொள்ளாத எனது வாழ்க்கையில் எப்போதும் எதிர்கொள்ளும் அத்தனை சவால்களும் வெகு சாதாரணமாகத் தெரிகின்றது. 

விழா குறித்து, விழாவில் கலந்து கொண்டவர்களை குறித்து, நான் எழுத காரணமாக இருந்தவர்களைப் பற்றி, இந்த விழாவிற்காக நேரிடையாக, மறைமுகமாக உழைத்தவர்கள் மற்றும் உதவியர்கள் குறித்து, இன்று வரையிலும் இந்த நூல் மூலம் கற்றுக் கொண்ட பல விசயங்கள் குறித்து எழுத என்னிடம் ஏராளமான விசயங்கள் உண்டு.  

நிச்சயம் ஒரு சந்தர்ப்பத்தில் அனைத்தையும் எழுதுவேன்.

இன்று 4 தமிழ்மீடியா இணைய தளத்தில் டாலர் நகரம் குறித்து வந்துள்ள செய்திகள் பார்க்க இங்கே சொடுக்கவும்.

சமீப காலமாக புத்தக சந்தையில் டயல் ஃபார் புக்ஸ் என்ற நோக்கில் சந்தைப்படுத்துதல் உண்டு.  அதைப் போல மெயில் ஃபார் புக்ஸ் என்ற நோக்கில் இந்த டாலர் நகரம் என்ற புத்தகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 190, (இந்தியாவிற்குள் எந்த பகுதிக்குள்ளும் செல்லும் தபால் மற்றும் துரித அஞ்சல் சேவை கட்டணத்தை நீங்கள் கட்டத் தேவையில்லை. என் சார்பாக புத்தக கழிவு விலை என்கிற ரீதியில் நான் ஏற்பாடு செய்து விடுவேன்)

விலை அதிகம் என்று யோசிப்பவர்களின் கவனத்திற்கு மட்டும்.

260 பக்கங்கள், முதன்மையான தரத்தில் உள்ள தாளில் எழுத்து நடைக்கு தேவைப்படும் 30க்கும் மேற்பட்ட வண்ணப் படங்கள் அதில் சில காலத்திற்கு உகந்தாற் போல சில கருப்பு வெள்ளை படங்கள் என்று தமிழ் மீடியா குழுவினர் உருவாக்கிய சிறப்பான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. 

4 தமிழ் மீடியா ஆசிரியர் இந்த புத்தகம் என்பதற்காக உழைத்த உழைப்பும், இதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து இங்கிருந்து செய்த வேலைகளும், அதற்காக செலவழித்த தொகையை ஒப்பிடும் போது இந்த விலை என்பது இரண்டு மடங்காக வர வேண்டும் என்கிற நிலையிலும் முதல் முயற்சி என்பதை முக்கிய கடமையாக வைத்துக் கொண்டு ஆதரவு அளித்துள்ளார்.

முதன் முறையாக ஒரு சாதாரண எளிய புத்தக உலகத்திற்கு அறிமுகம் இல்லாதவனின் புத்தகம் அமேசான்.காம் என்ற இணைய தளத்தின் மூலம்  சந்தைப்படுத்துதலை 4 தமிழ்மீடியா குழுமம் சாத்தியப்படுத்தியுள்ளனர். 

சர்வதேச நண்பர்களுக்கு இந்த தளம்  உதவக் கூடும்.

இந்த புத்தகம் முக்கியமாக திருப்பூர் சந்தையை வைத்தே முதன்மையாக உருவாக்கப்பட்டது.  இதன் காரணமாக முதல் பதிப்பு முழுக்க திருப்பூர் முழுக்க சென்று சேர்க்கும் பணியை உருவாக்கி அது மட்டுமே முக்கிய பணியாக வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கின்றது. தனிப்பட்ட புத்தக நிலையங்கள் மூலம் இன்னமும் வெளிவராமல் இருப்பதற்கு காரணம் இங்குள்ளவர்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ள விசயங்களை கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி அதில் வெற்றியடைந்துள்ளேன்.

இது குறித்த சில ஆச்சரிய தகவல்களை விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடுகின்றேன்.  அப்போது உங்களுக்குப் புரியம்.  

இது வரையிலும் எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை.  மேலும் ஒரு புத்தகத்தை எடுத்து இந்த அளவுக்கு  நாள் முழுக்க உட்காரந்து படித்ததே இல்லை என்றொரு கூட்டத்திற்கு இந்த புத்தகம் போய்ச் சேர்ந்து அவர்கள் நான்கு பேர்களை வாங்க வைக்கும் சந்தைப்படுத்துதல் எனது மற்றும் நண்பர்கள் முயற்சியால் சாத்தியமாகி உள்ளது.

பணம் கட்டி வாங்க விரும்புகின்றேன். அது வரைக்கும் நான் உங்களை தொடர்பு கொள்ள மாட்டேன். என் மூலம் பலருக்கும் குறிப்பாக இந்த டாலர் நகரம் மேலாண்மை கல்லூரி மாணவர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்று என் மீது கோப பார்வையை வீசிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வங்கி வசதி விபரங்களை இங்கே வெளியிட்டு வைக்கின்றேன்.   கூடவே என் அலைபேசி எண் போன்றவற்றையும் இங்கே வெளியிடுகின்றேன்.  

இது விளம்பரத்திற்காக வெளியிடப்படும் விபரங்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.  

தமிழ் இணையத்தின் மூலம் நான் பெற்ற நட்புகள் என்பது எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. பெருமையாக எழுதிக் கொள்ள எத்தனையோ விசயங்கள் உள்ளது. அது வெறுமனே சுயபுராணமாக மாறி மறுபடியும் ஒரு தேக்கத்தைத்தான் உருவாக்கும் என்பதில் மிக மிக கவனமாக உள்ளேன்.

ஒரு கல்லூரியின் முதல்வர் சொன்ன வாசகத்தை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். அவர் வாங்கியுள்ள பட்டஙகளைப் பார்த்து விட்டு
( ஒரு முழ நீளம்) இவர் நம்மிடம் பேசுவரா? என்று அச்சப்பட்டு யோசித்த வேலையில் டாலர் நகரம் புத்தகத்தை நண்பர்கள் மூலம் வாங்கி விட்டு சொன்னது.

"நானும் என் ஊரை விட்டு வெளியே வந்து கல்லூரியில் நுழைந்து ஏறக்குறைய  20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நான் சார்ந்துள்ள துறையைப் பற்றி இத்தனை நுணுக்கமாக, குறிப்பாக திருப்பூரைப் பற்றி இந்த அளவுக்கு ரசித்து எழுத முடியுமா? என்று என்னால் யோசித்து பார்க்கக் கூட முடியவில்லை. நான் பிறந்த தொழில் நகரமும் உங்கள் திருப்பூர் போலத்தான் உள்ளது. ஆனால் உங்கள் எழுத்துக்களை பாராட்ட மனமில்லை. காரணம் எனக்கு ஒரு விதமாக குற்ற உணர்ச்சி மேலிடுகின்றது" என்றார்.

நிச்சயம் இந்த தளத்தின் வாயிலாக இணையத் தொடர்பிற்கு அப்பாற்பட்டு தொழில் வாழ்க்கையில் உள்ள சாதாரண எளிய மனிதர்கள் படித்து விட்டு அவர்கள் எழுதித் தந்துள்ள விமர்சனங்கள், மற்றும் இணைய வெளியில் உள்ள நண்பர்களின் விமர்சனம், நான் பெற்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் படிப்படியாக வெளியிடப்படும்.

உங்களுக்கு தேவைப்படும் புத்தகத்திற்காக இந்த மின் அஞ்சல் வழியே தெரியப்படுத்தினால் உங்களுக்கு புத்தகம் கிடைக்கு ஏற்பாடு செய்யப்படும்.

texlords@gmail.com


11 comments:

வவ்வால் said...

ஜோதிஜி,

அமேசான் சிங்கமே :-))

கலக்குங்க!வாழ்த்துக்கள்!

//4 தமிழ் மீடியா ஆசிரியர் இந்த புத்தகம் என்பதற்காக உழைத்த உழைப்பும், இதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து இங்கிருந்து செய்த வேலைகளும், அதற்காக செலவழித்த தொகையை ஒப்பிடும் போது இந்த விலை என்பது இரண்டு மடங்காக வர வேண்டும் என்கிற நிலையிலும் முதல் முயற்சி என்பதை முக்கிய கடமையாக வைத்துக் கொண்டு ஆதரவு அளித்துள்ளார்.//

நல்ல வேளை பில்கேட்ஸ் உங்க உங்க புக்கை பப்ளிஷ் செய்யவில்லை,தப்பிச்சோம் :-))

சீக்கிரம் வெளியூர் கடைக்கும் அனுப்புங்க ,அப்பத்தான் சிரமம் இல்லாமல் வாங்க முடியும்.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி - 2000 புத்தகங்களும் - குறிப்பாக திருப்பூருக்கு வந்துள்ள 1000 புத்தகங்களும் விரைவினில் விற்றுத் தீர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அகலிக‌ன் said...

எந்த படைப்பும் சமூகத்தின் பயன்பாட்டுக்காகவே இருக்கவேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருந்துவிட முடியாது அதிலும் உங்களின் தொழில்சார்ந்த படைப்பு அது சார்ந்த சமூகத்திற்கு முன்னுறிமை என்று வரையறுத்திருப்பது உண்மையிலேயே சிறப்பானது/அவசியமானதும்கூட. எங்கள் கடைகளிலும் கிடைக்கும்வரை காத்திருப்பதில் தவறில்லை.

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.

ஜீவா புத்தகாலயம் said...

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த புத்தகத்தை வாங்க நூல் உலகம் இணையத்திற்கு வாருங்கள்.

http://www.noolulagam.com/product/?pid=9045

ஜோதிஜி said...

மிக்க நன்றி. அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுதுகின்றேன்.

ஜோதிஜி said...

அகலிகன் சென்னையில் நாளை கிடைக்கும் எண் தருகின்றேன். நீங்கள் முயற்சித்தால் வாங்கிக் கொள்ள முடியும். எனக்கு அவசியம் உங்கள் விமர்சனம் தேவை.

ஜோதிஜி said...

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

உங்கள் இருப்பிடம் சென்னை அல்லது நெய்வேலி என்று யூகித்துள்ளேன். சென்னையில் இருந்தால் நான் எண் தருகின்றேன். உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன் வவ்வு. விமர்சனம் ச்சும்மா ஜிவ்வுன்னு இருக்கோனும்.

கிரி said...

கண்டிப்பாக இது ஒரு நல்ல நிகழ்வு. இந்த புத்தகத்தை படிபதிற்காக ஆவாலாக உள்ள பல நபர்களில் நானும் ஒருவன். உங்களின் இந்த படைப்பு, சமூக மற்றும் உங்கள் நகரத்தின் பல நிஜ முகங்களையும் அணைத்து மக்களிடமும் எடுத்து செல்லும் என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்று கருத்தில்லை. திருப்பூர் போன்ற தொழில் சார்ந்த நகரங்களின் சமூக அவலங்களையும் மற்றும் இயற்கை சீர்கேடுகளையும், உங்களின் இந்த படைப்பின் மூலமாக வெகுஜன மக்களை சென்றடைந்து அதன் மூலமாக ஒரு நல்ல மாறுதல் ஏற்படுமானால் அதுவே உங்களில் எழுதுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

உங்களின் நன்றி தொகுப்பை வாசிக்கும் பொழுது உங்களின் உண்மையான நட்ப்பு வட்டத்தை என்னால் உணர முடிகிறது . வாழ்கையின் உன்னதமே நல்ல மனிதர்களின் நட்பினை பெறுவதுதான், அதை உங்களின் அந்த தொகுப்பில் தெள்ளத்தெளிவாக பதிவு செய்துள்ளீர். மனதார வாழ்த்துகிறேன். எங்களை போன்ற அயல் நாடு வாழும் மக்களுக்கு இது போன்ற அருமையான நீகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை, கண்டிப்பாக இந்தியா வரும்போது உங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துலக பணி.

மேலும் உங்களுடன் உறுதுணையாக இருந்து இந்த புத்தகத்தை வெளியிட உதவி புரிந்த அத்தனை நல்ல நண்பர்களுக்கும் உங்களின் தொடர் வாசகன் என்ற முறையில் என்னுடைய நன்றியையும் இங்கு பதிவு செய்கிறேன்.

கிரி, மொரோக்கோ

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கு நன்றி கிரி