Sunday, February 17, 2013

டாலர் நகரத்தில் (அசாத்தியமான) தாய்த்தமிழ் பள்ளி மாணவ மாணவியர்கள்

திருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திக் கொண்டிருப்பவர் திரு. கு. தங்கராசு அவர்கள்.

வழக்கமான பள்ளிக்கூட பாணியில் இருந்து முற்றிலும் விலகி நமது தாய்மொழியான தமிழ் மொழியில் கல்வி கற்கும் போது உண்டான புரிதலையும், மாணவர்களின் அசாத்தியமான திறமைகளை நான் கண்ட போது இவர்களை டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவின் மூலம் முடிந்தவரைக்கும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன்.

எனது குழந்தைகளை தொடக்கத்தில் தமிழ்வழிக் கல்வியில் கற்க முயற்சிகள் எடுத்த போது நான் பட்டபாடுகளை எனது டாலர் நகரம் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் ஆங்கிலவழிக் கல்வியும் அரைலூசு பெற்றோரும் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை ஒரு பெரிய பள்ளிக்கூட தலைமையாசிரியர் அவர்களிடம் கொடுக்கச் சென்ற போது இந்த ஒரு அத்தியாயத்திற்காக ரொம்பவே பயந்தார்.

ஆனால் சிறிய இடைவெளி விட்டு அவரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்த போது இந்த ஒரு அத்தியாயத்திற்காகவே என்னை கூச்சப்படும் அளவிற்கு பாராட்டித்தள்ளினார்.

இந்த பள்ளி குறித்த விபரங்கள் விழா சிறப்பு மலரில் உள்ளது. ஆனால் இன்னமும் நிதி நிலவரத்தில் மூச்சு வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. பலரும் உதவிக்கரம் நீட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். எனது சார்பாக நண்பருடன் சில முயற்சிகளில் இறங்கியுள்ளேன். 

ஏற்கனவே இவர்கள் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவரும், தற்போது தமிழ்நாடு அரசின் கைத்தறி துறைக்கு தலைமை பொறுப்பில் இருப்பவருமான திரு. சகாயம் திருப்பூரில் கலந்து கொண்ட உறவோடு தளம் நடத்திய விழாவில் தங்கள் திறமைகள் (ஆடல் பாடல் காட்சிகளின்) மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி திகைக்க வைத்தார்கள் 

டாலர் நகரம் விழாவில் ஏறக்குறைய ஆறு பாடல்கள் (ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே) பாடி வந்திருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.  எனது விழா குறித்து பேசியவர்கள் அத்தனை பேர்களும் இந்த மாணவ மாணவியர்களின் திறமைகளை தவறாமல் குறிப்பிட்டு பேசினார்கள்.

இது குறித்த முழுமையான விபரங்களை விரைவில் எழுதுகின்றேன்.  திருப்பூர் தாய்த்தமிழ் மாணவ மாணவியர்களின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு

திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியின் வலைதளம் காண இங்கே சொடுக்கவும்

இந்த பள்ளி குறித்த ஆவணப்படம் காண இங்கே சொடுக்கவும்

காணொளி காட்சி அடங்கிய தொகுப்பு விரைவில் வெளியிடுகின்றேன்.8 comments:

 1. தாய் தமிழ் மழலையர் பள்ளியின் நிர்வாகி அவர்களுக்கும் அந்த பள்ளியை உலகம் அறிய செய்வதில் பெரும் பங்கு எடுக்கும் ஜோதிஜி அவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் டாலர் நகரம் கருத்துகளை படித்துகொண்டிருகிறேன் வாழ்வியல் படப்பிடிப்பாக காட்சிகள் கண்முன் வந்துபோகிறது நல்ல படைப்பு அதற்கும் வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களுக்கு

  ReplyDelete
 2. இன்று காலை புத்தகம் ஒரு வழியாக கைக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. பொறுத்துக் கொண்டமைக்கு நன்றி சிவா.

   Delete
 3. Replies
  1. நன்றி கிருஷ்ணமூர்த்தி

   Delete
 4. Please have a look on this school also.

  http://kalvimani.blogspot.in/2010/05/thai-thamizh-thodakkappalli.html

  ReplyDelete
 5. தங்கராசுFebruary 21, 2013 at 10:55 PM

  http://www.thaitamizhschool.blogspot.in
  தாய்த்தமிழ் பள்ளி வள்ளலார் நகர் திருப்பூர் 641604

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.