வணக்கம் நண்பர்களே
அனைவருக்கும் தேவியர்
இல்லத்தின் இனிய பொங்கல் (2013) திருநாள் மற்றும் தமிழர் திரு நாள் வாழ்த்துகள்.
வலிகளில் இருந்து
பலருக்கும் வழிகள் கிடைக்கின்றது. இந்த பொங்கல் திருநாள் தேவியர் இல்லத்திற்கு மற்றொரு
மகிழ்ச்சியான தைத்திருநாள் ஆகும்.
4
தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) குழுமம் வெளியீட்டில் எனது டாலர் நகரம் என்ற புத்தகம்
ஜனவரி கடைசி வாரத்தில் திருப்பூரில் வெளியாக இருக்கின்றது. 4 தமிழ் மீடியா தளத்தில் வெளியான கடைசி அத்தியாயத்தின் ஆசிரியர் பார்வையை படிக்க இங்கே சொடுக்க
இதன்
விழா ஜனவரி 27 ஞாயிறு அன்று திருப்பூரில் நடக்க இருக்கின்றது.
இந்த புத்தகம் என்பது
வலிகள் சுமந்து கடந்த வந்த எனது திருப்பூர் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களின்
தொகுப்பு. கூடவே திருப்பூர் குறித்த 20 வருடங்களின் மாறுதல்களின் ஆவண பதிவு.
வண்ண புகைப்படங்களுடன்
கூடிய நல்ல தரமான புத்தகமாக வருகின்றது. சர்வதேச காப்புரிமையுடன் 4 தமிழ்மீடியா குழுமம் கொண்டு வருகின்றார்கள்.
இன்று 100 கோடி வணிக வர்த்தக நிறுவனத்தில் பொது மேலாளர் பதவியில் இருந்த போதிலும் அடைந்த உயரத்திற்கு கொடுத்த விலைகளை கடந்த நான்கு வருடங்களாக வேர்ட்ப்ரஸ் ல் எழுத தொடங்கியதில் இருந்த ஒவ்வொன்றையும் பதிவுகளாக எழுதி வந்துள்ளேன்.
என் வலைதளத்தில்
உள்ளதைப் போல மிக நீண்டதாக இருக்காது. இயல்பான வாசிப்பில் இருக்கும் சாதாரண
வாசிப்பாளர்களுக்கு புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகளின் தொகுப்பாக இருக்கும்.
திருப்பூர் வாழ்க்கையைப் பற்றியே தெரியாத சாதாரண மனிதர்களுக்கு இந்த ஏற்றுமதி துறை
குறித்து புரிந்து கொள்ள உதவும். நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பார்வையில் 4 தமிழ் மீடியா தளம் ஆசிரியர் திரு. மலைநாடன் அவர்களின் உழைப்பில், திருப்பூரில் உள்ளவர்கள் மற்றும் திருப்பூருக்கு வெளியே இருப்பவர்களுக்கு இந்த ஊரை புரிந்து கொள்ள வேண்டிய எளிய நடை எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது உழைப்பின் மூலம் என்னோடு பயணித்த திருப்பூர் சேர்தளம் தலைவர், வெயிலான் என்ற தளத்தில் எழுதிக் கொண்டு வரும் என் சக பயணி திரு. ரமேஷ் அவர்களுக்கும் என் நன்றியை வாசிப்பாளர்கள் சார்பாக எழுதி வைக்கின்றேன்.
இரண்டு விரல்களை
காட்டும் போது உங்களுக்கு ஆங்கில வி என்ற எழுத்து நினைவுக்கு வரும். சிலருக்கும்
அதன் அர்த்தமாக விக்டரி என்று தோன்றும்.
வெற்றி என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் இதனை எப்பொழுதும்
இரண்டு எண் என்பதாக நான் எப்போதும் எடுத்துக் கொள்வதுண்டு.
திருமண வாழ்க்கைக்கு
பிறகு என்னை மாற்ற வந்த இரட்டைக் குழந்தைகள் முதல் நடந்த ஒவ்வொன்றுமே இந்த
இரண்டாகவே இருக்கின்றது. வெற்றி தோல்வி என்று மாறி மாறி வந்த போதிலும்
புறக்கணிப்பும் அவமானங்களும் கற்றுத் தந்த பாடங்களை கவனமாக எடுத்து நடந்து
வந்துள்ளேன். கவனமாக சேகரிக்கப்பட்ட என் அனுபவங்களை வலைபதிவுகளில் பதிவு செய்தும்
வந்துள்ளேன்.
திருப்பூரில் வாழ்ந்த
20 வருடத்தின் மொத்த அனுபவங்களை, பார்த்த, பழகிய மனிதர்களை, பணிபுரிந்த நிறுவனங்கள்
தந்த பாடங்களை என் பார்வையில் பதிவு செய்துள்ளேன்.
பணம் மனம் இந்த
இரண்டுக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையை கவனமாக
உள்வாங்கியுள்ளேன். கிடைத்த அனுபவங்களை
என் ஏற்றத்திற்கு பயன்படுத்தி இருக்கின்றேன். எதையும் வெற்றி தோல்வி என்பதாக
கருதிக் கொள்ளாமல் அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு நடந்து வந்துள்ளேன்.
மீதி அடுத்த
பதிவில்.........
(டாலர் நகரம் திருப்பூர் புத்தக கண்காட்சியில் வெளியாகின்றது)
உங்களை அன்போடு
அழைக்கின்றேன்.
ஜோதிஜி