Saturday, May 02, 2020

சில்லி பக்கோடா


அந்த 42 நாட்கள் -  28
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


சில்லி பக்கோடா

நேற்றைய முன் தினம் தக்காளி கிலோ எட்டு ரூபாய். விலை குறைவு என்பதால் அதிகமாக வாங்கி வந்தால் சபாநாயகரின் சாபத்தைப் பெற வேண்டும் என்று அமைதியாக இரண்டு கிலோ மட்டும் வாங்கி வந்தேன். இன்று கிலோ 14 ரூபாய். காரணம் கேட்டால் கடைக்காரர் "அண்ணே கொரானா வைரஸ்ன்னே. இன்னும் விலை கூடும். சீக்கிரம் வீட்டுக்குப் போங்க. வெளியே சுத்தாதீங்க" என்றார்.
***

Friday, May 01, 2020

இன்முகங்கள் தேடி வந்தால் எப்படியிருக்கும்?


அந்த 42 நாட்கள் -  27
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


நாம் இன்னலுறும் சமயங்களில் இன்முகங்கள் தேடி வந்தால் எப்படியிருக்கும்?


அப்படித்தான் இன்றும் நேற்றும் உணர்ந்தேன்.  வீட்டுக்கு முன் வண்டி வந்து நின்றது.  பைப் எடுத்தார்கள். குழாய் மாட்டினார்கள். வண்டியின் மேல் ஏறி நின்றார்கள்.  காமவுண்ட் சுவர் முதல் வீட்டின் உள்ளே இருபது அடி தொலைவு வரைக்கும் கிருமி நாசினி நீரை ஒவ்வொரு பகுதியிலும் பூப்போல பூ மாரி பொழிந்தார்கள். வெவ்வேறு விதமாக பீய்ச்சியடித்தார்கள். நேற்றும் வந்தார்கள். நாளையும் வருவோம் என்று சொல்லிச் சென்றார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு கவசமும் இல்லை. எப்போதும் போல ஒரு சின்ன முகமூடி. அதுவும் முகத்தில் இல்லை. வேறொரு பக்கம் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடமையில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள்.




கோவிட் 19 முக்கிய செய்திகள் - (ஏப்ரல்- இரண்டாவது வாரம்- 2020)

அந்த 42 நாட்கள் -  26
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


டாஸ்மாக் கடைகள் மூடியிருப்பதால் தினமும் 80 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு.

அமைச்சர் தங்கமணி.

))((

ஒரு நாள் ஊரடங்கின் போது மொத்த இந்தியாவிற்கு 35 000 கோடி நட்டமாகிக் கொண்டு இருக்கின்றது.

மத்திய அரசு.