Showing posts with label 2020 வருட டைரிக்குறிப்புகள். Show all posts
Showing posts with label 2020 வருட டைரிக்குறிப்புகள். Show all posts

Thursday, December 31, 2020

2020 - சில வார்த்தைகள்

ங்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பாதீர்கள். அனைவரும் பாராட்டினால், பாராட்டிக் கொண்டேயிருந்தால் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சொந்த வாழ்க்கையில் உங்கள் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தாதீர்கள். மனைவிக்குக்கூட உங்களைப் பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. இணைய வாழ்க்கை அதற்கு வசதி செய்து தந்துள்ளது. வாசிப்பவர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் மனதளவில் இது உண்மை தான் என்று அவர் மனம் எண்ணக்கூடும்.


Friday, December 25, 2020

விதைகள் பழுதில்லை

பெற்றோர்கள் அனைவருக்கும் அவரவர் குழந்தைகள் சிறப்பு தான். எளிய வார்த்தைகளில் குறிப்பிட்டால் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" தான்.

ஆனால் இன்று காலம் குழந்தைகள் பெற்றோர்களுக்கு வில்லனாக மாற்றியுள்ளது. தூக்கிச் சுமக்க வேண்டிய சுமையாகவும் மாற்றியுள்ளது.

Thursday, December 24, 2020

தெய்வங்கள் வேறில்லை மனிதர்களைத் தவிர.

சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் நான் வாசித்த செய்திகளில் சொத்து தகராறு சார்ந்த செய்திகள் மிக அதிகம். அதுவும் ஒரே குடும்பத்திற்குள் நடந்த நிகழ்வுகள் கடைசியில் வெட்டுக் குத்து வரைக்கும் சென்றுள்ளதைக் கவனித்தேன். "என்னை கடைசி வரைக்கும் காப்பாற்றுகிறேன்" என்று சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு என்னை அனாதையாக வெளியே விட்டு விட்டான் என்று மகன் மேல் குற்றச்சாட்டு சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அழுத பெண்மணியைப் பார்த்தேன். 



Tuesday, December 22, 2020

உன்னதமான மனிதர் 2020

உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் என்பது சதவிகித மக்களுக்குத் தொடர்பே இல்லாத துறைகள் அரசியல் மற்றும் தொழில். விவசாயம் மற்றும் முறைசாராத் தொழில்களை இந்தப் பட்டியலில் கொண்டு வர வேண்டாம். வளர்ந்த நிறுவனங்கள். சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்று பல பட்டியல்கள் உண்டு.

இந்த இரண்டு துறைகளில் இருக்கும்  20 சதவிகித மக்கள் காரண காரியமின்றி பேசவே மாட்டார்கள். அனைத்து துறைகளிலும் தொடர்பு வைத்திருப்பார்கள். அனைவருடனும் நல்லுறவு பேணுவார்கள். ஆனால் தொடர்பு இல்லாதவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். பிரிவினை கோடு போட்டு வாழ்வார்கள். தங்களை எதிரியாக மாற்றிக் கொள்வார்கள். வாழ்ந்த சுவடு தெரியாமல் மறைந்தும் விடுவார்கள். 

காலம் காலமாக இப்படித்தான் இந்தப் பூமிப் பந்து சுழன்று வந்து கொண்டேயிருந்தது.