நம் நாட்டில் அரசியலில் நீண்ட காலம் கோலோச்சியவர், ஆட்சியில் இருந்த சமயத்தில் இறந்து போனாலும், ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்ட நபருக்குச் செல்வாக்கு இருக்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களும் அவரவர் நிறுவன கொள்கைகளுக்கு ஏற்ப சங்கூதும். சங்கநாதம் முழங்கும். மக்கள், தொண்டர்கள், விசுவாசிகள், பலன் பெற்றவர்களின் உணர்ச்சிகரமான வார்த்தைகளை அஞ்சலியில் கோர்த்து மக்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இறந்தவர் குறித்த மரியாதையை, மகத்துவத்தை வெளிப்படுத்துவார்கள்.
